தமிழகத்தில் திருமணப் பதிவு சட்டம் கட்டாயமாக்கப்பட்ட நிலை, போலி திருமணங்கள் அதிகமாக நடப்பது, பின்னணி என்ன? அவை பதிவான திருமணங்களா – இல்லையா? (2)

செப்ரெம்பர்29, 2022

தமிழகத்தில் திருமணப்பதிவு சட்டம் கட்டாயமாக்கப்பட்ட நிலை, போலி திருமணங்கள் அதிகமாக நடப்பது, பின்னணி என்ன? அவை பதிவான திருமணங்களா – இல்லையா? (2)

ஒரு ஆண் பல திருமணங்கள் செய்தது: சென்னையில் பெண் மருத்துவ அதிகாரி கொடுத்த புகாரின் அடிப்படையில் திருவண்ணாமலையைச் சேர்ந்த வித்யூத் என்ற சக்கரவர்த்தியை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்[1]. பெண் கொடுத்த புகாரில், திருமண தகவல் இணையதளம் மூலமாக அறிமுகமாகி பழகியதாகவும், வாஷிங்டனில் மருத்துவராக இருப்பதாகக் கூறி மோசடி செய்ததாக, திருவண்ணாமலையில் ரியல் எஸ்டேட் தொழில் செய்யப் போவதாகவும் அதற்காக பண உதவி வேண்டும் எனக் கேட்டு சுமார் 7 கோடி ரூபாய் அளவிற்கு பணத்தை ஏமாற்றியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது[2]. பாதிக்கப்பட்ட பெண்கள் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்றையும் தொடர்ந்திருந்தனர்[3]. உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் தனிப்படை அமைத்து சக்கரவர்த்தியை போலீசார் தேடி வந்தநிலையில், லால்குடியில் வைத்து கைது செய்தனர்[4]. தமிழகம் முழுவதும் 9-க்கும் மேற்பட்ட பெண்களை திருமண தகவல் இணையதளம் மூலமாக ஏமாற்றி சுமார் 9 கோடி ரூபாய் அளவில் மோசடி செய்திருப்பதும் தெரிய வந்துள்ளது. மேலும்  திருமணமாகாத மருத்துவம், பொறியியல் பட்டதாரி பெண்களையும் பணக்கார விதவை பெண்களையும் குறிவைத்து பண மோசடி செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

கோடீஸ்வரர் போல நடித்து 9 பெண்களை ஏமாற்றிய நபர் கைது: கோவையில் 9 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து, அவர்களிடமிருந்து பண மோசடி செய்த பலே நபர் கைது செய்யப்பட்டார்[5]. இவருக்கு உடந்தையாக இருந்த திருமண தகவல் மையத்தை சேர்ந்த இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்[6]. திருமண தகவல் மையம் உதவியோடு நடைபெற்ற இந்த மோசடி கோவை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதிய நடைமுறைகளையும் பயன்படுத்தி இவ்வாறு ஏமாற்று வேலைகள் நடப்பது இதனால் அம்பலமாகியுள்ளது. கோவை வெள்ளலூர் பகுதியை சேர்ந்தவர் புருஷோத்தமன். தன்னை தொழிலதிபர் என கூறி ஒருவருக்கு தெரியாமல் மற்றொருவர் என சுமார் 9 பெண்களை மணந்து அவர்களிடம் இருந்து பணம் பறித்து பிறகு எஸ்கேப் ஆகியுள்ளார்.  கோவையில் உள்ள திருமண தகவல் மையத்தில்தான் இவர் தனது பெயரை பதிவு செய்திருந்தார். அதன் வழியாகவே பெண் தேடி வந்துள்ளார். இதேபோலத்தான், கோவை பாப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த வசதி வாய்ப்புள்ள ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார் புருஷோத்தமன். பல தொழில்கள் இருப்பதாக ஏமாற்றியதன் விளைவாக அந்த பெண்ணை அவரது பெற்றோர் இவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். ஆனால் திருமணமாகி சில மாதங்களில், தொழிலில் நஷ்டம் என்று கூறி 3 கோடி ருபாயை மாமனார் வீட்டிலிருந்து பெற்ற புருஷோத்தமன் பிறகு தலைமறைவாகிவிட்டாராம்.

ஓரு பெண் பல திருமணங்கள் செய்தது  கோர்ட்டுக்குச் சென்ற மோசடி திருமண வழக்கு: ஹைகோர்ட்டை நாடிய பெண் பாதிக்கப்பட்ட அந்த பெண், புருஷோத்தமன் மீதும் திருமண தகவல் மையத்தை சேர்ந்த இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் கோவை போத்தனூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த ஹைகோர்ட் உத்தரவிட்டது. சிக்கினர் புருஷோத்தமன் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. திருமண தகவல் மையம் மீது கூட்டுசதி வழக்கு பதிவு செய்யப்பட்டது. மொத்தம் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கோவை, ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு வழக்கு மாற்றப்பட்ட நிலையில், புருஷோத்தமன் மற்றும் திருமண தகவல் மையத்தை சேர்ந்த கணவன் மற்றும் மனைவி ஆகிய மூவரையும் போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.

ஆறு திருமணங்கள் செய்து வைத்த திருமண புரோகர்[7]: ஏற்கெனவே கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சௌமியா என்கிற சபரி, மூன்று ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்துவிட்டு, நான்காவதாக ஓர் ஆட்டோ டிரைவரைத் திருமணம் செய்ய முயன்றபோது கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாரால் கைதுசெய்யப்பட்டார். அந்தப் பரபர சம்பவத்தின் சூடு தணிவதற்குள், அதே பாணியில் பலரைத் திருமணம் செய்து, அவர்களிடம் பணம் பறித்த சந்தியா என்ற பெண் ஒருவர் கைதுசெய்யப் பட்டிருக்கிறார்[8]. சந்தியா தனபாலை கல்யாணம் செய்து கொண்டார்[9]. திருமணத்தை முடித்துவிட்டு சந்தியாவுடன் வந்தவர்கள், பெண் புரோக்கர் பாலமுருகன் ஆகியோர் திருமண கமிஷன் தொகையாக ரூ.1,50,000-ஐ வாங்கிக்கொண்டு சென்றுவிட்டனர்[10].  ஆனால், முதல் இரவிலேயே அப்பெண் மாயமாகி விட்டாள். இன்னொரு திருமணத்திற்கு தயாரானாள், விசயம் அறிந்த, அந்த நபர் மூலமாக திருமணம் செய்துகொள்ள விருப்பம் தெரிவிக்க வைத்து, மதுரையைச் சேர்ந்த பெண் புரோக்கர் தனலட்சுமியிடம் (45) பேசி, மணமகனின் போட்டோவை புரோக்கரிடம் கொடுத்திருக்கின்றனர்[11]. அதற்கு மணமகளுக்கு மாப்பிள்ளையைப் பிடித்திருக்கிறது எனப் பேசி, போன் மூலமே முடிவு செய்திருக்கிறார் அந்தப் பெண் புரோக்கர். விசாரணையில், மதுரையைச் சேர்ந்த இவர்கள் இதுவரை சந்தியாவுக்கு ஆறு திருமணம் செய்துவைத்திருக்கின்றனர்[12].

போலி கல்யாணமா, புதுவித விபச்சாரமா, செக்ஸ் ரீதியிலான கொள்ளையா?: கைதான சந்தியா போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது[13]:- எனக்கு 5 வயதில் ஒரு மகளும், 4 வயதில் ஒரு மகனும் உள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த திருமண புரோக்கர் பாலமுருகன்தான் என்னை அடித்து மிரட்டி திருமணம் செய்து வைக்க அழைத்து வந்தார்[14]. 6-க்கும் மேற்பட்ட திருமணம் செய்துள்ளேன். திருமணம் முடிந்ததும் என்னை அங்கிருந்து தப்பித்து வருமாறு கூறி காரில் அழைத்து வந்துவிடுவார்[15]. பின்னர் கொண்டு வந்த பொருட்களை பிடுங்கி கொண்டு சிறிய‌ தொகையை மட்டும் தருவார். பின்னர் அதையும் மிரட்டி வாங்கி கொள்வார்[16]. அவரது கூட்டாளிகளான ரோஷினி, மாரிமுத்து ஆகியோர் என்னை நிர்வாணப்படுத்தி போட்டோ, ஆபாச வீடியோக்களை எடுத்து வைத்து கொண்டு மோசடி திருமணங்களுக்கு சம்மதிக்காவிட்டால், அவற்றை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன் என மிரட்டினர்[17]. அதனால்தான் நான் இந்த மோசடி திருமணங்களுக்கு சம்மதித்தேன். என்னை போல, மேலும் 4 பெண்கள் இவர்களிடம் சிக்கி உள்ளனர். மோசடி திருமணத்தில் எவ்வளவு பணம் கிடைத்தாலும் அந்த பணம் முழுவதையும், அவர்களே எடுத்து கொள்வார்கள். எங்களுக்கு கொஞ்சம் பணம் மட்டுமே தருவார்கள்.

ஏமாற்ற, கொள்ளையடிக்க பின்பற்றப் பட்டு வரும் செயல்முறை: மதுரை சுற்றுவட்டார பகுதிகளில் ஏதாவது ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தருவார்கள். என்னுடைய அக்காள், மாமாவாக ரோஷினி, மாரிமுத்து 2 பேரும் நடிப்பார்கள். ஒரு கல்யாணம் பேசி முடிப்பதற்கு முன்பே அக்காள், மாமாவாக நடிக்க, என்னுடைய வீட்டிற்கு வந்துவிடுவார்கள். பெண் பார்க்க திருமண ஆசையில் வரும் இளைஞர்களிடம் நான் நெருங்கி பழக வேண்டும். அப்படி பேசும்போது செல்போன், பட்டுசேலை, பணம், நகை என ஆசையாக கேட்டு, சாமர்த்தியமாக அவர்களிடம் வாங்கி கொள்ள வேண்டும். திருமணம் முடிந்ததும், இந்த வீட்டை காலி செய்து விட வேண்டும். முதல் இரவு முடிந்ததுமே தப்பி செல்வதற்கான வாய்ப்பு கிடைத்தால், கிளம்பி விட வேண்டும். ஒருவேளை மாப்பிள்ளையை அறையில் விட்டுவிட்டு அங்கிருந்து கிளம்ப முடியாத சூழல் ஏற்பட்டால், பாலில் தூக்க மாத்திரை கொடுத்து விட்டு, பொருட்களை வாரி சுருட்டிக்கொண்டு கிளம்ப வேண்டும். இதுவரை ஏமாந்த மாப்பிள்ளை வீட்டார் அவமானங்களுக்கு பயந்து பெரும்பாலும் புகார் கொடுக்கவில்லை. இதை புரோக்கர்கள் சாதகமாக பயன்படுத்தி கொண்டனர். நாமக்கல், கரூர், திருப்பூர், காங்கேயம் பகுதிகளில் நாங்கள் திருமண மோசடிகளை செய்துள்ளோம். இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

இப்பிரச்சினைகளில், விவகாரங்களில், வழக்குகளில் எழும் விசயங்கள்:

 1. தமிழகத்தில் திருமணப்பதிவு சட்டம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது 2009ஆம் வருடம் நவம்பர் மாதம் 24ஆம் தேதி கொண்டு வரப்பட் டது.
 • திராவிடத்துவ அரசு இந்து திருமண சட்டம் இருந்தாலும், இந்த சட்டம் உருவாக்கப் பட்டு, தமிழக இந்துக்களைக் கட்டுக்குள் கொண்டு வந்தது.
 • சார்பதிவாளர்களை திருமணப் பதிவாளர்களாகவும் நியமிக்கப்பட்டு, திமணம் ஆன தம்பதியர் அங்கு செல்ல வேண்டிய நிலையை ஏற்படுத்தியுள்ளது.
 • ஆனால், இந்துத்துவவாதிகள் வழக்கம் போல, ஈவேரா, பெரியார், அண்ணா, தம்பி என்று அவர்களது தாம்பத்தியத்தைப் பற்றி ஆராய்ச்சியை ஆரம்பித்துள்ளனர்!
 • திராவிடத்துவத்தில், சுயமரியாதை திருமணத்தில் அதெல்லாம் சகஜமாக இருந்தது. பிறகு, அது சட்டப் படி செல்லாது என்றாகியது!
 • அப்பொழுது தான், இந்து திருமண சட்டததில் அந்த சுயமரியாதை திருமண ஐக்கியம் ஆகி, சட்டப் படி மரியாதைப் பெற்றது.
 • அதுவரை, ஈவேரா பாடை, பெரியாரிச பாசை, ராசாவின் பாஷையாகத் தான் இருந்தது. எந்த மனுவும், சோழனும் கண்டுகொள்ளவில்லை.
 • இப்பொழுது, தாலுகா ஆபிசுக்குச் சென்றவுடன், ஆன்-லைன் பதிவு இருந்தாலும், ஆப்-லைனில் தரகர்களின் கொண்டாட்டம் உள்ளது!
 • வழக்கறிஞர்கள் இன்றைக்கு, திருமணப் பதிவில் இறங்கி நன்றாக சம்பாதிக்க ஆரம்பித்துள்ளனர். அவர்களைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை.
 1. தினமும், குறிப்பிட்டப் பகுதிகளில் திருமணங்கள் நடக்கின்றன, என்பதனை வைத்துக் கொண்டு, அது வியாபாரமயமாக்கப் பட்டு விட்டது.

 © வேதபிரகாஷ்

29-09-2022


[1] NEWS18, திருமண தகவல் இணையதளம் மூலம் பல பெண்களை ஏமாற்றிய மோசடி மன்னன் கைது!, LAST UPDATED : JUNE 22, 2019, 10:45 IST

[2] https://tamil.news18.com/news/tamil-nadu/man-arrested-for-defrauding-women-through-marriage-information-website-in-chennai-vaij-171055.html

[3] தமிழ்.இந்து, பெண் மருத்துவரிடம் ரூ.7 கோடி மோசடி செய்தவர் கைது, செய்திப்பிரிவு, Published : 22 Jun 2019 07:52 AM; Last Updated : 22 Jun 2019 07:52 AM

[4] https://www.hindutamil.in/news/tamilnadu/172084-7.html

[5] தமிழ்.ஒன்.இந்தியா, திருமண தகவல் மையம் உடந்தை.. கோடீஸ்வரர் போல நடித்து 9 பெண்களை திருமணம் செய்த கோவை நபர் கைது!, By Veera Kumar Updated: Monday, January 8, 2018, 14:22 [IST]

[6] https://tamil.oneindia.com/news/tamilnadu/man-arrested-coimbatore-cheating-9-women-getting-money-from/articlecontent-pf287243-307803.html

[7] பாலிமர் செய்தி, 7வதாக திருமணம் செய்யவிருந்த மோசடி, பெண், தரகர் உள்ளிட்ட 4 பேருடன் கைது, செப்டம்பர் 23, 2022, 01:57:33 PM.

[8] https://www.polimernews.com/dnews/188110

[9] விகடன், 6-வது திருமணம் ஓவர்… 7-வது திருமணத்துக்கு ரெடி!- சந்தியா போலீஸில் சிக்கியது எப்படி?, துரை.வேம்பையன், Published:24 Sep 2022 10 AM; Updated: 24 Sep 2022 10 AM

[10] https://www.vikatan.com/news/tamilnadu/police-arrested-a-woman-who-defrauded-6-men-in-the-name-of-marriage-and-getting-ready-for-7th-marriage

[11] தினத்தந்தி, திருமணம் செய்து பண மோசடியில் ஈடுபட்ட மனைவி, உறவினர்கள் மீது நடவடிக்கை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தொழிலாளி மனு, ஏப்ரல் 21, 2:25 am (Updated: ஏப்ரல் 21, 2:25 am).

[12] https://www.dailythanthi.com/News/Districts/2021/04/21022506/panam.vpf

[13] தினத்தந்தி, மோசடி திருமணங்களுக்கு சம்மதிக்காவிட்டால் எனது ஆபாச வீடியோக்களை வெளியிடுவேன் என மிரட்டினர் கைதானகல்யாண ராணிபரபரப்பு வாக்குமூலம், Sep 27, 12:15 am (Updated: Sep 27, 12:16 am)

[14] https://www.dailythanthi.com/News/State/raani-801720

[15] தினமலர், 8வது திருமணத்துக்கு தயாரானகல்யாண அழகிசந்தியா, Added : செப் 25, 2022  04:05

https://www.dinamalar.com/news_detail.asp?id=3130710

[16] காமதேனு, 6 பேருடன் கல்யாணம்; இரவோடு இரவாக நகையுடன் எஸ்கேப்: 7-வது நபரை திருமணம் செய்ய முயன்ற மனைவியை பிடித்த கணவர், Updated on : 23 Sep, 2022, 10:19 am

[17] https://kamadenu.hindutamil.in/national/the-young-woman-who-cheated-and-married-six-men-and-her-immediate-family-were-arrested

தமிழகத்தில் திருமணப் பதிவு சட்டம் கட்டாயமாக்கப் பட்ட நிலை, போலி திருமணங்கள் அதிகமாக நடப்பது, பின்னணி என்ன? (1)

செப்ரெம்பர்29, 2022

தமிழகத்தில் திருமணப்பதிவு சட்டம் கட்டாயமாக்கப்பட்ட நிலை, போலி திருமணங்கள் அதிகமாக நடப்பது, பின்னணி என்ன? (1)

தமிழகத்தில் திருமணப்பதிவு சட்டம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது: 2009ஆம் வருடம் நவம்பர் மாதம் 24ஆம் தேதி கொண்டு வரப்பட் டது. அந்தத் தேதிக்குப் பிறகு, மாநிலத் தில் நடக்கிற அனைத்து திருமணங்களும், திருமணத் தேதியிலிருந்து 90 நாட்களுக்குள் கட்டாயமாகப் பதிவு செய்யப்பட வேண்டும், என இந்தச் சட் டம் சொல்கிறது. அதன்படி திருமணம் நடந்த 90 நாட்களுக்குள் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும். இல்லாவிட்டால் குற்ற வழக்கு தொடரப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு தமிழ்நாடு திருமணங்கள் பதிவுச்சட்டம் 2009ன்படி பல மதங்களைச் சார்ந்த இந்திய குடிமக்களின், 24.11.2009 முதல் தமிழகத்தில் நடைபெறும் அனைத்து திருமணங்களையும் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும்.இந்திய இந்து திருமணங்கள் சட்டம் 1955, இந்திய கிறிஸ்துவ திருமணச் சட்டம் 1872, சிறப்புத் திருமணச் சட்டம் 1954, முகம்மதியர்கள் ஷரியத் திருமணச் சட்டம் மற்றும் வேறு எந்த தனிப்பட்ட சட்டங்களின் கீழ் திருமணம் பதிவு செய்திருந்தாலும் இச்சட்டத்தின் பிரிவு 3ன் கீழும் கட்டாயமாக பதிவு செய்யப்படவேண்டும்.

திருமணம் ஆன 90 நாட்கள் முதல் 150 நாட்களுக்குள் தங்கள் திருமணத்தை பதிவுசெய்ய வேண்டும்: “தமிழ்நாடு திருமணப் பதிவுச் சட்டம் 2009-ன் படி திருமணப்பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இச்சட்டத்தின்படி திருமணம் முடிந்த தம்பதிகள் 90 நாட்கள் முதல் 150 நாட்களுக்குள் தங்கள் திருமணத்தை பதிவுசெய்ய வேண்டும். திருமணத்தைப் பதிவு செய்யாதவர்கள் அரசின் திருமண உதவித் திட்டங்களுக்கு விண்ணப்பிக்கமுடியாது. 150 நாட்களுக்குள் பதிவு செய்யாதவர்கள் பின் எப்போதுமே தங்கள் திருமணத்தைப் பதிவுசெய்ய இயலாது. திருமணத்தை பதிவு செய்யாதவர்கள் மீது சட்டப்படி நடிவடிக்கை எடுக்கவும் இந்த சட்டம் வழிவகுத்துள்ளது. 90 நாள்களுக்குள் பதிவு செய்தால் 100 ரூபாய் கட்டணமாகச் செலுத்தவேண்டும். 91 முதல் 150 நாள்களுக்குள் பதிவு செய்தால் அபராதக் கட்டணம் 50 ரூபாயுடன் 150 ரூபாய் செலுத்தவேண்டும். திருமணத்தைப் பதிவு செய்து தருவதாக உங்களை அணுகும் இடைத்தரகர்களை நம்பாதீர்கள். ஆயிரக்கணக்கான ரூபாய்களை பறித்துவிடுவார்கள். இப்படி குறிப்பிட்டாலும் தரகர்களின் ராஜ்ஜியம் தான் வழக்கம் போல கொடிக் கட்டிப் பறக்கிறது.

சார்பதிவாளர்கள் திருமண பதிவாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளது: இச்சட்டத்தின்படி,

 1. பதிவுத் துறைத் தலைவர்,
 2. மாவட்டப் பதிவாளர்கள் அனைவரும் மற்றும்
 3. சார் பதிவாளர்கள் அனைவரும்

திருமணப் பதிவாளர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இத்தகு திருமணப் பதிவிற்கான குறிப்பாணை படிவம் ‘ஒ’ மற்றும் இதனுடன் இணைக்கப்படவேண்டிய விண்ணப்பபடிவம் ஆகியவை இலவசமாக அனைத்து பதிவு அலுவலகங்களிலும் வழங்கப்படும். கட்டாய திருமணப்பதிவிற்கான விவரங்கள் மற்றும் படிவங்கள் துறையின் இணையதளத்தில் http://www.tnreginet.net வெளியிடப்பட்டுள்ளன. இதிலிருந்தும் படிவங்களை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். திருமணப்பதிவிற்கான குறிப்பாணை படிவம் மற்றும் விண்ணப்பத்தினை எவ்வித விடல்களோ அல்லது பிழைகளோ இன்றி பூர்த்தி செய்து, மணமக்கள், திருமணம் நடத்தி வைத்தவர் மற்றும் இரு சாட்சிகளின் கையொப்பத்துடன், திருமணம் நடைபெற்றதற்கான ஆதாரம், இருப்பிட மற்றும் வயது தொடர்பான ஆதார ஆவணங்களுடன், திருமணம் நடைபெற்ற 90 நாட்களுக்குள் ரூ.100/ கட்டணத்துடன் (90 நாட்களுக்கு மேற்படின், ரூ.150/-) திருமணம் நடைபெற்ற இடம் அமைந்துள்ள எல்லைக்குட்பட்ட திருமணப் பதிவாளரிடம் (சார் பதிவாளர்) அளிக்கப்பட அல்லது அஞ்சல் வழி அனுப்பப்பட வேண்டும். மேலும், திருமணத்திற்கான சாட்சிகளின் முகவரி மற்றும் ஆளறியும் அடையாள சான்று நகல்கள் இணைக்கவேண்டும். இந்த விண்ணப்பம் மற்றும் இணைக்கப்பட்ட ஆதாரங்கள் முறையாக இருப்பின், சம்பந்தப்பட்ட திருமணப்பதிவாளர் மனுதாரருக்கு ஒப்புதல் அளிப்பார். எந்த சாதி மற்றும் மதமாயிருப்பினும், மேற்குறிப்பிட்டவாறு உரிய நாளில் பதிவு செய்யாவிடில் அல்லது தவறான தகவல் அளிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்தால் அல்லது விதி மீறல் இருப்பதாகத் தெரிந்தால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது குற்றவழக்கு தொடரப்பட்டு, நிரூபிக்கப்படின், அபராதம் விதிக்கப்படும்.

உண்மையான மணமக்கள் தொல்லைக்குள்ளாகிறார்கள்: உண்மையாக திருமணம் செய்து கொண்டு, பதிவு செய்ய வருபவர்களிடம் ஆதார் கார்டு, வீட்டு முகவரிக்காக ரேஷன் கார்ட், டிரைவிங் லைசென்ஸ், பாஸ்போர்ட் என்று பலவித ஆவணங்கள் கேட்கிறார்கள். இவை மணப்பெண், மாப்பிள்ளை, மற்றும் இவர்களின் பெற்றோர் என்று அனைவரின் ஆவணங்களையும் கேட்டுப் பெற்று, சரிபார்க்கிறார்கள். நேரில் வரசொல்கிறார்கள். மணமகன், மணமகள், அவர்களின் பெற்றோர்கள் சகிதம் தாலுகா ஆபிசில் ஆஜராகி, மணிக்கணக்கில் உட்கார வேண்டும். கூப்பிடும் போது, இரண்டு-மூன்று முறை உள்ளே செல்ல வேண்டும், கேட்ட கேள்விகலுக்கு பதில் சொல்லி கையெழுத்துப் போட வேண்டும். அத்தகைய செயல்களில் கமா, புள்ளி, பெயர்கள் இடைவெளி இருந்தால் கூட தப்பு கண்டு பிடிப்பார்கள், கேள்வி கேட்பார்கள். ஆனால், கடைசியில், எல்லாம் சரியாக இருந்தால் கூட காசு வாங்காமல் வேலை செய்வதில்லை. தரகர் மூலமாக கவனிக்கப் படுகிறது. பீஸ் என்று தாகர் பல-ஆயிரங்களை வாங்கிக் கொள்வது தான் நிதர்சனம். பிறகு இவையெல்லாம் மற்றவர்களுக்கும் அமூல் படுத்த வேண்டும் இல்லையா?

வழக்கறிஞர்கள் மற்றும் தரகர்களின் வேலை என்ன?: வழக்கறிஞர்கள் இன்றைக்கு, திருமணப் பதிவில் இறங்கி நன்றாக சம்பாதிக்க ஆரம்பித்துள்ளனர். தினமும், குறிப்பிட்டப் பகுதிகளில் திருமணங்கள் நடக்கின்றன, என்பதனை வைத்துக் கொண்டு, அது வியாபாரமயமாக்கப் பட்டு விட்டது. சாதி, மதம் மறுப்பு திருமணம் என்று கூட்டங்கள் வேலை செய்து கொண்டிருக்கின்றன. தாலிக்குத் தங்கம், உதவித் தொகை, என திட்டங்கள்…..எஸ்.சி சான்றிதழ் வைத்துக் கொண்டு சலுகை, சர்ச்சில் திருமணம்….., ஜாதி மறுப்பு எனல், அதற்கும் சலுகை-பணம் பெறல்…..இப்படி அரசியல், அரசாங்கம் என்றால், கல்யாண மன்னன்கள், ராணிகள் தனிப்பட்ட முறையில் கொள்ளையடிக்க கிளம்பி விட்டார்கள்[1]. பலதார திருமணங்கள் எப்படி நடக்கின்றன என்பதும் திகைப்பாக இருக்கிறது. இத்தகைய பாலியல் சட்டமீறல்கள், உண்மையில், குற்றங்கள் என்றே கொள்ளலாம். ஏனெனில், இவற்றில் ஆயிரக்கணக்கான பெண்கள் பாதிக்கப் படுகின்றனர். ஒரு  பெண் தானாகவே செய்கிறாள் அல்லது, யாறரோ வற்புருத்தி செய்ய வைக்கிறார்கள், கும்பலாக சேர்ந்து அத்தகைய மோசடிகளை செய்கிறார்கள் என்று கொண்டால், அத்தகைய கும்பல்கள் ஊக்குவிக்கப் படக் கூடாது.

விபச்சாரம் போல நடப்பதை தடுக்கவேண்டும்: ஒருவிதத்தில் விபச்சாரம் என்றாலும், அதனை திருமணம் செய்து கொண்டு செய்கிறார்கள்[2]. விபச்சாரம் என்று செய்தால் அது சட்டவிரோதம்[3]. இப்படி செய்தால், அதுவும் கிடைக்கும், இதுவும் கிடைக்கும்[4]. திருமண சான்றிதழ் வேறு! இதனால் தான், வகை-வகையாக செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன[5]. அவற்றில் உண்மை எது, பொய் செய்து, திட்டம் போட்டு செய்தது எது என்றெல்லாம் ஆராய்ச்சியும் செய்ய முடியாது. ஆக, திருமண தரகர்கள், கல்யாண புரோகர்கள், தாம்பத்திய இடைதரகர்கள் என்ன செய்கிறார்கள் என்று தெரியவில்லை. ஒரு வேளை வழக்கறிஞர்கள் மற்றும் இவர்களுக்கு தொடர்புகள் இருக்குமோ என்றும் யோசிக்க வேண்டியுள்ளது. உண்மையான பதிவுக்குச் செல்லும் போது, ஆதார் கார்டு, வீட்டு முகவரிக்காக ரேஷன் கார்ட், டிரைவிங் லைசென்ஸ், பாஸ்போர்ட் என்று பலவித ஆவணங்கள் கேட்கிறார்கள். சரிபார்க்கிறார்கள். கமா, புள்ளி, பெயர்கள் இடைவெளி இருந்தால் கூட தப்பு கண்டு பிடிக்கிறார்கள். பிறகு, இப்படி ஒரே ஆணுக்கு, அல்லது பெண்ணுக்கு எப்படி பலமுறை திருமணம் செய்ய முடியும், சான்றிதழ் கொடுக்க முடியும்?

© வேதபிரகாஷ்

29-09-2022


[1] இ.டிவி.பாரத், பண மோசடியில் ஈடுபட்ட மனைவி: நடவடிக்கை எடுக்க கோரி கணவர் புகார், Published on April 22, 2021, 1;55 AM IST.

[2] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/erode/erode-sp-office-wage-worker-complains-seeking-action-against-to-wife/tamil-nadu20210422015545648

[3] செய்திபுனல், திருமண புரோக்கரில் இருந்து, அந்த புரோக்கராக மாறி கொள்ளை சம்பாத்தியம் பார்க்கும் கும்பல்……திருமணம் ஆகாதவர்கள் உஷார்…!, Sriramkannan.P, 21-04-2021 02;22;43 AM.

[4] https://www.seithipunal.com/tamilnadu/erode-marriage-brokers-promote-prostitution-brokers-tra

[5] தினமலர், திருமண ஆசைகாட்டி பணம் பறிப்பு; எஸ்.பி.,யிடம் வாலிபர் புகார் , பதிவு செய்த நாள்: ஏப் 21,2021 13:46; https://m.dinamalar.com/district_detail.php?id=2754059

திராவிடத் தாய், கன்னித் தாய், தமிழ்த்தாய், சொந்தத்தாய் முதல் வாடகைத் தாய் வரை! தாய்மை வளர்கிறதா, தேய்கிறதா, தூஷிக்கப் படுகிறதா? (3)

ஏப்ரல்23, 2022

திராவிடத் தாய், கன்னித் தாய், தமிழ்த்தாய், சொந்தத்தாய் முதல் வாடகைத் தாய் வரை! தாய்மை வளர்கிறதா, தேய்கிறதா, தூஷிக்கப் படுகிறதா? (3)

வாடகைத் தாய்தாய் அல்ல: யார் யாரெல்லாம் வாடகைத் தாயாக இருக்க முடியும்? பேறு காலத்தில் வாடகைத்தாய் இறந்தால் அவரது குடும்பத்துக்கு யார் இழப்பீடு கொடுப்பது? குழந்தையை ஏற்கத் தம்பதி மறுத்தால் குழந்தையை யார் ஏற்றுக்கொள்வது? இவற்றையெல்லாம் நெறிமுறைப்படுத்த வேண்டும். எனவே சகல அம்சங்களையும் உள்ளடக்கிய சட்டம் உருவாக்கப்பட வேண்டும். எந்த ஒரு கண்டுபிடிப்பும் யார் கையில் போய்ச் சேருகிறதோ, அதைப் பொறுத்தே அதன் நன்மை தீமைகள் அமைகின்றன. அந்த வகையில் குழந்தையைப் பெற்றுக் கொள்ள வாய்ப்பில்லாத தம்பதியினருக்கு ஒரு நல்வரமாக அமைந்திருக்கும் இந்த மருத்துவ கண்டுபிடிப்பிலும் நன்மைகளும் தீமைகளும் சேர்ந்தே உள்ளன. தீமைகளை மனதில் கொண்டு இதை முற்றிலுமாகத் தடுக்க வேண்டும் என முயல்வதை விட, நன்மைகளை கருத்தில் கொண்டு வாடகைத் தாய் முறையினை சரியான சட்ட திட்டங்களுடன் முறைப்படுத்துவதே சரியான அணுகுமுறையாக இருக்கும். இந்த உலகத்தில் விலை கொடுத்து வாங்கவே முடியாதது ‘அம்மா’ என்ற உறவுதான் என்றுதான் நினைத்திருந்தோம். ஆனால் அம்மா என்ற தொப்புள் கொடி பந்தத்தைக் கூட வாங்கிவிடலாம் என்றநிலைக்கு காலம் மாறிவிட்டது.

வாடகைத் தாய் குழந்தை பெற்றெடுத்தல் சேவை ஆகுமா?: வாடகைத் தாய் விஷயம் ஒரு மருத்துவ முன்னேற்றம் என்றாலும் கூட ஆழமாக வேரூன்றி நிற்கும் கலாச்சார பண்பாட்டின் காரணமாக இம்முறைஇன்னும் அனைவராலும் முழுமையாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை. ரத்ததானம், உறுப்புதானம் செய்வதுபோல் வாடகைத் தாயாக செயல்படுவதும் ஒரு சேவைதான். குழந்தை பாக்கியம் இல்லாமல் பாதிக்கப்படும் லட்சக்கணக்கான தம்பதியரின் ஏக்கத்தை தீர்த்து, பாதிப்புடைய ஒரு பெண்ணுக்கு வாழ்வளக்கும் புனிதமான காரியத்தைத்தான் வாடகைத் தாய்மார்கள் செய்கிறார்கள் என்று எண்ண வேண்டும். ஆனால், நிச்சயமாக அது அத்தகைய காரியம் அல்ல. மருத்துவ ரீதியில், ஒரு கன்னிப்பெண்ணும், திருமணம் ஆகாத பெண்ணும் அவ்வாறு குழந்தையைப் பெற்றெடுத்தால், அது காட்டி விடும். பிறகு, எந்த ஆணும் அவளை திருமணம் செய்து கொள்ள யோசிப்பான், தயங்குவான், ஒரு வேளை செய்து கொண்டாலும், பிறகு பிரச்சினைகள் ஏற்படும்.

வாடகைத் தாய் ஒப்பந்தம் (Surrogacy Agreement): வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற விரும்புகிறவர்கள் அதற்கான ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்வது இன்று நடைமுறையில் உள்ளது. குழந்தை வேண்டுபவரின் பெயர் மற்றும் விவரங்கள், வாடகைத் தாயின் பெயர் மற்றும் விவரங்கள், எந்தக் காரணத்துக்காக இந்த முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புகிறார்கள், எந்த வகையில் வாடகைத் தாய் பராமரிக்கப்படுவார், அதற்கான ஈட்டு ஊதியம், கருச்சிதைவு உள்பட ஏதேனும்  அசம்பாவிதம் சம்பவித்தால் அந்நிலையை சமாளிக்கும் விதம், ஏதேனும் சட்டப் பிரச்னை ஏற்படும் எனில் எந்த நீதிமன்றத்தை (Jurisdiction)  அணுகுவது போன்ற பல விஷயங்கள் குறித்து தெளிவான ஒப்பந்தம் இயற்றுவது அவசியம். பொதுவாக 18 வயது நிரம்பியவரே ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்த முடியும். இதிலும் அப்படியே. ஒப்பந்தத்தில் கையொப்பம்  இடுபவர்கள் சுயமான முடிவு எடுத்திருக்க வேண்டும். எந்தவித கட்டாயமும் இருக்கக் கூடாது. வாடகைத் தாயின் கணவரின் கையொப்பமும் தேவை. இதன் அடிப்படையிலேயே இன்று வாடகைத் தாய் முறை அமலில் உள்ளது. இதற்கான சட்டப் பரிந்துரையில், இன்றைய தேதியில் இருப்பது போல வெளிநாட்டவர்களின் அனுமதி தடை செய்யப்பட வாய்ப்புள்ளது.

பேபி மன்ஜி வழக்கு: (Manji Yamada Vs Union India) 2008 13 Scc 518 (Sc) – இந்த வழக்கு, வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற யத்தனிக்கும் வெளிநாட்டு தம்பதி, குழந்தைப்பேறு காலத்தில் பிரிந்துவிடும் ஒரு நிலையில், குழந்தைக் காப்பாளர் உரிமை யாருக்கு என்ற வினா எழுந்தது. பெரும் போராட்டத்துக்குப் பிறகு குழந்தையின் தந்தையிடம் காப்பாளர் உரிமை கொடுக்கப்பட்டது. அந்நாளில் ஊடகங்களில் பெரும் செய்தியாக இடம் பிடித்த வழக்கு இது. இது போல சில வழக்குகளில் குழந்தையின் குடியுரிமை பிரச்னை நீதிமன்ற கதவுகளைத் தட்டி தீர்வு பெற்றதை பார்த்துள்ளோம். குஜராத் உயர் நீதிமன்றத்தில், ஒரு ஜெர்மன் தம்பதியின் தாய்க்கு கருமுட்டை உற்பத்தியாகாததால், வேறொருவரின் கருமுட்டையுடன் தந்தையின் விந்தணுவுடன் இந்திய வாடகைத் தாய் மூலம் பிறக்கும் குழந்தையின் குடியுரிமை குறித்து வழக்கு வந்தது. தீவிர முயற்சிக்குப் பிறகு இந்திய பாஸ்போர்ட் பெறப்பட்டது.

புதிய சட்டம்: புதிய சட்ட பரிந்துரையில் வெளிநாட்டவர், தனிநபர், ஓரினச் சேர்க்கையாளர் ஆகியோர் வாடகைத் தாய் அமர்த்துவது தடை செய்யப்படலாம். இன்றைய நிலையில் 40 சதவிகிதம் வெளிநாட்டவரும் 30 சதவிகிதம் தனிநபர்களும் இந்தியாவில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறுகிறார்கள் என்பது Centre for Social Research (CSR)  அமைப்பின் ஆய்வு முடிவு. புதிய சட்ட மசோதாவின் பரிந்துரையில் வாடகைத் தாயாக இருக்க விரும்பும் பெண் கணவரின் ஒப்புதல் பெற வேண்டும்  என்றுள்ளது. இந்தியாவில் பெரும்பாலும் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள பெண் – கணவனால் கைவிடப்பட்ட பெண் போன்றோர் தான் வறுமையின் காரணமாக வாடகைத் தாயாக செயலாற்ற ஒப்புக்கொள்கிறார்கள்.

வாடகைத் தாயும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்[1]: இதில் பலர் கணவரிடமிருந்து சட்டப்படி  விவாகரத்து பெறாமல் இருப்பவர்கள். இப்படி யிருக்கும் நிலையில் என்ன செய்வது என்கிற பதில் சொல்லப்படாத நிலை. வாடகைத் தாயாக செயல்பட சம்மதிக்கும் பெண்ணே அதற்கான ஊதியம் நிர்ணயிக்க வழிவகை செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கல்வி அறிவு இல்லாத அல்லது குறைந்த அளவே உலக அறிவுள்ள பெரும்பாலான பெண்கள் எவ்வாறு இதை சரிவர நிறைவேற்ற இயலும்? அதோடு, வாடகைத் தாயாகச் செயல்படும் பெண்ணின் உடல்நலம் பேண எவ்வித பரிந்துரையும் இல்லை. குழந்தை ஈன்றவுடன் பிரியும்   சூழலில் ஏற்படும் மன உளைச்சலுக்கான ஆலோசனை அல்லது கருச்சிதைவின்   மூலம் ஏற்படும் உடல், மனரீதியான விளைவுகள் குறித்தும் சரிவர விளக்கவில்லை. இவை தவிர, நிறைய பெண்கள் கருமுட்டை தானத்தில் ஈடுபடுவது குறித்தும் விளக்கப்பட வேண்டும். நம் நாட்டில் பெண்களுக்காக பல பாதுகாப்புச் சட்டங்கள் இயற்றப்பட்டு நடை முறையில் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. எனினும், இச்சட்டங்களால் பயன்பெறும் பெண்களின் பார்வையில் அவை இயற்றப்படாமல் போவதே பல்வேறு சிக்கல்களுக்குக் காரணமாகிறது. தாய்மையைப் போற்றும் இந்த தேசம், வாடகைத் தாய், சேய், குழந்தைக்காக ஏங்கும் அனைவருக்கும் ஒரு தெளிவான சட்டப்பாதுகாப்பு அளிப்பது அவசியம். அதுவரை  வாடகைத் தாய்களை பாதுகாப்பதில் கோட்டை விடாமல் இருந்தால் நலம்[2].

ஆண்-பெண் குழந்தைகள் வளர்ப்பு, இளமை காத்தல் முதலியன:

 1. குழந்தை பிறந்தது முதல் முறையாக வளர்க்கப் படாமல் இருத்தல், சம்ஸ்காரங்கள் போன்ற கிரியைகள் / சடங்குகள் செய்யாமல் இருத்தல் (சீமந்தநயனம், பும்ஸவனம், கர்ப்பதானம், சூடாகர்மம், கர்ணவேதம் முதலியன).
 2. முறையான உணவு உட்கொள்ளாமல் இருத்தல்
 3. வயது வந்த பிறகு, முறையாக பிராச்சரியத்தைக் காப்பாமல் இருப்பது.
 4. மனம்-உடல் இரண்டுமே இயைந்து சீராக வளர வேண்டும். திருமணத்திற்கு தயாராக வேண்டும்.
 5. ஆண்-பெண் ஒப்பீடு, முறைபார்த்தல், என பொருத்தம் பார்த்து கல்யாணம் செய்தல்  முதலியனவும் கவனிக்கப் படவேண்டிய விசயங்கள்.
 6. மனம்-உடல் ரீதியிலான மனோதத்துவ பாவங்களில் ஆயும் போது, இச்சடங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. அதனை, ஆராய்ச்சியாளர்கள் ஏற்றுள்ளனர். ஆனால், இன்று அவை, மூடநம்பிக்கை என்றெல்லாம் சொல்லி செய்யப் படாமல் இருக்கின்றன.
 7. குழந்தை இல்லாத தம்பதியர் ஆலோசனைக்குச் சென்றல், இவையே வேறு விதமாக வற்புருத்தப் படுகின்றன. கட்டடிலை மாற்றிப் போடுவது, கணவன் – மனைவி நன்றான புஷ்டியான உணவு உண்பது, புரிந்து கொண்டு நடப்பது-சேர்வது என்ற இத்யாதிகள் சொல்லிக் கொடுக்கப் படுகின்றன.
 8. எனவே உண்மை அறிய வேண்டும், செயல்படவேண்டும், எல்லாவற்றையும் வியாபாரமாக்க முடியாது.

© வேதபிரகாஷ்

03-04-2022


[1] விகாஷ் பிடியா, வாடகைத் தாய், ஆதாரம் : டாக்டர். மனோகரன்.

[2] https://ta.vikaspedia.in/health/bb5bbebb4bcdb95bcdb95bc8b95bcdb95bc1ba4bcd-ba4bc7bb5bc8bafbbeba9-b95bc1bb1bbfbaabcdbaabc1b95bb3bcd/bb5bbeb9fb95bc8ba4bcd-ba4bbebafbcd

திராவிடத் தாய், கன்னித் தாய், தமிழ்த்தாய், சொந்தத்தாய் முதல் வாடகைத் தாய் வரை! தாய்மை வளர்கிறதா, தேய்கிறதா, தூஷிக்கப் படுகிறதா? (2)

ஏப்ரல்23, 2022

திராவிடத் தாய், கன்னித் தாய், தமிழ்த்தாய், சொந்தத்தாய் முதல் வாடகைத் தாய் வரை! தாய்மை வளர்கிறதா, தேய்கிறதா, தூஷிக்கப் படுகிறதா? (2)

குழந்தையின்மை: தெருவோரம் வசித்தாலும் அரண்மனையில் வாழ்ந்தாலும் குடும்பத்திற்கு அழகு பிள்ளைச் செல்வம். மருத்துவத் தொழில்நுட்பம் வளராத காலத்தில் பிள்ளைப்பேறு இல்லாத தம்பதியினர் கோயில் குளங்களையும், அரச மரத்தையும் சுற்றி வந்து சாமியிடம் பிள்ளை வரம் கேட்டனர். இன்று நிலைமை மாறிவிட்டது. இவ்வாறு நினைப்பது, எழுதுவது தவறு, காலம் தாழ்ந்து குழந்தை பிறப்பதும் நிதர்சனமாகத் தான் உள்ளது. இன்றைக்கு, பணம் சம்பாதிக்க வேண்டும் என்றும் குழந்தைப் பெறுவதை தள்ளிப் போடுகிறார்கள். தத்து எடுப்பு என்ற சாதாரணமான முறையும் இருந்தது. முன்பெல்லாம் குடும்பத்தில், உறவினர்களில் அப்பழக்கம் இருந்தது. பிறகு மற்றவர்களிடமிருந்து தத்து எடுக்கும் போது பிரச்சினைகள் ஏற்பட்டது. உண்மை பெற்றோர் வந்து சொந்தம் கொண்டாடுவது பணம் கேட்பது போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டன. அனாதை இல்லங்கள்போன்றவை,, இதனை ஒரு வியாபாரமாக்கியது. அடிக்கடி மிரட்டி பணம் பறிக்க ஆரம்பித்தன. அதனால், படிப்படியாக தத்து எடுக்கும் முறை குறைந்த்து. குழந்தை இல்லை என்றால் உடனடியாக மகப்பேறு மருத்துவரை நாடுகின்றனர்.

விஞ்ஞான முறையில் கருத்தரித்தல், குழந்தை பெற்றல்: குழந்தைப் பேறு இல்லாமல் போவதற்கு பல காரணங்கள் உண்டு. கணவனுக்கோ அல்லது மனைவிக்கோ அல்லது இருவருக்குமோ உள்ள குறைகள் காரணமாக குழந்தைப் பேறு இல்லாத நிலை இருக்கலாம். மருத்துவ முன்னேற்றத்தின் காரணமாக அத்தகைய குறைகளைச் சரி செய்ய வியக்கத்தகு நவீன சிகிச்சை முறைகள் ஏற்பட்டுள்ளன. குழந்தை இல்லாத எண்ணற்ற தம்பதியரின் தலையெழுத்தை மாற்றும் விஞ்ஞான முயற்சியின் காரணமாக விளைந்ததுதான் ‘செயற்கை முறைகருத்தரித்தல்’ என்றழைக்கப்படும் ‘டெஸ்ட் டியூப் பேபி’ சிகிச்சை முறை. இந்த முறையில் கணவனின் விந்துவில் உள்ள வீரியமான உயிரணுவைத் தேர்ந்தெடுத்து மனைவியின் சினைமுட்டையோடு செயற்கையாக டெஸ்ட் டியூபில் சேர்த்துப் பின்னர் மனைவியின் கருப்பையில் வைக்கப்படும். ஆக மனைவியின் கருப்பை நன்றாக இருந்தால் மட்டுமே இந்த முறைசாத்தியப்படும். ஒருவேளை மனைவியின் கருப்பை கருவைத் தாங்கக் கூடிய அளவுக்கு வ|மையானதாக இல்லை என்கிறபட்சத்தில் என்ன செய்வது? இந்தக் கேள்விக்கு விடையாக வந்திருப்பதுதான் ‘வாடகைத்தாய்’ எனும் முறை. ஒரு பெண்ணுக்கு மகப்பேறை அளப்பதில் முக்கியப் பங்கு வகிப்பது கர்ப்பப் பை. கருவைத் தாங்கக்கூடிய அளவுக்கு கர்ப்பப் பை வ|மையானதாக இருத்தல் அவசியம். கர்ப்பப் பை பலவீனமாக இருந்தால் இயல்பான மகப்பேறுக்கு வாய்ப்பில்லாமல் போய் விடும். மேலும் கர்ப்பப் பையில் கட்டி, புற்றுநோய் தாக்கம், அதிக ரத்தப் போக்கு போன்றபல்வேறு காரணங்களால் கர்ப்பப் பை அகற்றப்படுவதாலும் பிள்ளைப்பேறு இல்லாத நிலை ஏற்படும்.

வாடகைத் தாய்: இத்தகைய பிரச்சனைகளுக்குத் தீர்வாக தோன்றியிருப்பதுதான் ‘வாடகைத் தாய்’ என்றபுதிய முறை, கருவைச் சுமக்க முடியாத அளவுக்கு கருப்பை பலவீனமாக உள்ள பெண்ணின் சினை முட்டையையும், அவரது கணவரின் விந்தணுவையும் சோதனைக் கூடத்தில் சேர்த்து, கருவை உருவாக்கி வேறொரு பெண்ணின் கர்ப்பப் பையில் வைத்து கருவை வளர்த்து குழந்தைப் பேறு அளக்க முடியும். இந்த முறையில் கருவை வளர்த்து குழந்தையாக பெற்றுத் தரும் பெண்மணியைத்தான் ‘வாடகைத் தாய்’ என்று அழைக்கிறார்கள். வாடகைத்தாய் விஷயத்தில் இரண்டு முறைகள் உள்ளன. ஒன்று ஜஸ்டேஷனல் வாடகைத்தாய். அதாவது தனக்கு சம்பந்தமில்லாத ஒரு கணவனின் உயிரணு மற்றும் அவரது மனைவியின் சினைமுட்டையோடு சேர்ந்த கருவை தன் கர்ப்பப் பையில் சுமக்கிறார் வாடகைத்தாய்.

இரண்டாவது டிரெடிஷனல் வாடகைத்தாய்: இந்த முறையில் வாடகைத் தாயாக வரும் பெண் ஏதாவது ஒரு விதத்தில் குழந்தைக்கு தொடர்பு உடையவராக இருப்பார். இந்த முறையில் ஆணின் விந்தணு வாடகைத்தாயின் கர்ப்பப் பைக்குள் செலுத்தப்படும். அதாவது தம்பதியரில் அந்த மனைவியின் கருமுட்டையைப் பயன்படுத்த முடியாமல் இருக்கும் சூழ|ல் வாடகைத் தாயாக இருக்கும் பெண்ணின் கருமுட்டையே குழந்தை உருவாக பயன்படுகிறது. மேலை நாடுகளல் மகளுக்காக குழந்தை பெற்றுத் தந்த அம்மாக்களும் உண்டு. அக்கா தங்கைகள் கூட தன் சகோதரிக்காக இந்த முறையில் குழந்தை பெற்றுத் தருவதுண்டு. நம் நாட்டில் இத்தகைய முறையினை ஏற்றுக் கொள்வது சற்று கடினம். வேறுவிதமாகச் சொல்வதாக இருந்தால் முதலாவது முறையில் வாடகைத்தாய் தன் கருப்பையை மட்டுமே கொடுக்கிறாள். உயிரணுவும் சினைமுட்டையும் தம்பதியினருடையது. இரண்டாவது முறையில் வாடகைத்தாய் கருப்பையோடு தன் சினைமுட்டையையும் கொடுக்கிறாள். அதாவது தம்பதியினரில் ஒருவரான கணவனின் உயிரணுவும், வாடகைத்தாயின் சினை முட்டையையும் கொண்டு கரு உண்டாகி குழந்தை பெறுவது.

இந்தியாவில் வாடகைத் தாய் தொழில் நடைபெறுகிறது: பிரபல இந்தி நடிகர் அமீர் கானுக்கு 48 வயது. இவரது மனைவி கிரண் ராவுக்கு 38 வயது. திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. இதையடுத்து செயற்கை முறையில் கருவூட்டம் செய்து வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறமுடிவு செய்தனர். அதன்படி அந்த தம்பதியருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இது குறித்து அமீர்கான் அளத்துள்ள பேட்டியில் ‘கடவுளன் அருள், அறிவியன் அற்புதம், நண்பர்களன் அன்பு, ஆதரவு ஆகியவற்றுக்கு தலை வணங்குகிறோம்’ என்று கூறியுள்ளார். பிள்ளையைப் பெற்ற இளம் பெண்களே வாடகைத் தாயாக இருக்கத் தகுதியானவர்கள். பெரும்பாலும் 35 வயதுக்குள்ளாக இருப்பவர்களே விரும்பி ஏற்கப்படுகின்றனர். அவர்களன் உடல் மற்றும் மன ஆரோக்கியம் பரிசோதிக்கப்பட்டு, ரத்தசோகை, புற்றுநோய், காசநோய், பால்வினை நோய் மற்றும் தொற்று நோய் உள்ளட்ட பாதிப்பு இல்லாதவர்களே வாடகைத் தாயாக இருக்க முடியும். வாடகைத் தாய்களாக இருந்து பிள்ளை பெற்றுக் கொடுக்க சம்மதிக்கும் பெண்களும் அதிகரித்து வருகின்றனர். இந்தியாவுக்கு மருத்துவ உலா வருவோரில் பலர் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

இந்தியாவில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறுவது மலிவானது: இங்கிலாந்து, அமெரிக்கா போன்றநாடுகளல் இந்த முறையில் வாடகைத் தாய்களை அமர்த்த அதிகளவு பணம் தேவைப்படுகிறது. குறைந்த பட்சம் சுமார் எட்டு லட்சம் ரூபாய் செலவிட்டாக வேண்டும். இந்தியாவில் இத்தொகையில் பாதி செலவிட்டாலே போதும் அவர்கள் இந்தியாவுக்கு வந்து, வாடகைத் தாய்க்குப் பணம் கொடுத்து மருத்துவமனைக்கும் கட்டணம் செலுத்திவிட முடியும். தமிழகத்தில் வாடகைத் தாய்மார்களுக்கு ஒரு குழந்தைக்கு 3 லட்சம் வரை கொடுக்கப்படுகிறது. இந்தியாவின் மருத்துவச் சுற்றுலா நகரமாகக் கருதப்படும் பெங்களூரில் கடந்த இரண்டாண்டுகளல் 75 பெண்கள் வாடகைத் தாயார்களாக செயற்பட்டுள்ளனராம். குழந்தையை விரும்பும் தம்பதியினரே, கர்ப்பம் முதல் பிரசவம் வரை வாடகைத்தாயின் பராமரிப்புச் செலவுகளை ஏற்றுக் கொள்வர். பிறக்கப்போகும் குழந்தைககு மனநலப் பிரச்சினை மற்றும் உடல் ஊன பிரச்சினை எதுவாக இருந்தாலும் வாடகைத்தாய் பொறுப்பாக மாட்டார். அதற்கும் குழந்தையை விரும்பும் தம்பதியினரே பொறுப்பேற்றுக் கொள்வார்கள்.

வாடகைத் தாய் உருவாகும் புதிய பிரச்சினைகள்: வாடகைத் தாய்மார்கள் கர்ப்பத்தை சுமக்கும் காலத்தில் அவர்களன் வாழ்வில் நிகழும் பல்வேறு சூழல்கள் அவர்கள் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தலாம். தவறான முடிவெடுத்து குழந்தையை சுமந்து கொண்டிருக்கிறோமோ என்ற மனசஞ்சலம் ஏற்படலாம். அதன் பொருட்டு அவ்வப்போது வாடகைத் தாய்மார்களுக்கு கவுன்ச|ங் அளக்கப்படுகிறது. வாடகைத் தாய் முறையிலும் பல சிக்கல்கள் உள்ளன. சில வருடங்களுக்கு முன்பு ஜப்பானிய தம்பதியர் ஒரு இந்தியப் பெண்ணை வாடகைத் தாயாக்கினர். வாடகைத் தாயின் வயிற்றில் கரு வளர்ந்து கொண்டிருக்கும்போதே ஜப்பானிய தம்பதியர் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். அதன் பிறகு அவர்கள் அந்த குழந்தையை வாங்கிக் கொள்ள இந்தியாவுக்கு வரவில்லை. அது ஒரு பெரிய பிரச்சினையாக உருவெடுத்தது.

வாடகைத் தாய் சட்டச் சிக்கல்கள்: தற்போது வாடகைத்தாய் விவகாரங்கள் வெறும் புரிந்துணர்வு அடிப்படையில்தான் நடக்கிறது. பெரும்பாலோர் உறவினர்கள் மற்றும் தெரிந்தவர்களையே வாடகைத் தாயாக ஏற்றுக்கொள்ளத் துணிகிறார்கள். இந்திய மருத்துவத்தில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறுவது அனுமதிக்கப் பட்டுள்ளதே தவிர இதற்கான சட்டங்கள் இன்னும் உருவாக்கப்படவில்லை.திருமணம் புரியும் தம்பதிகளல் நூற்றுக்குப் பத்து பேர் கருவுறல் பிரச்சனைகளைச் சந்திக்கும் நிலைமை இருந்தும் கூட இன்னமும் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறுவது குறித்த தெளிவான சட்டமும் நெறிமுறையும் உருவாக்கப்படவில்லை. எதிர்காலத்தில் வாடகைத்தாய் விவகாரம் பல குழப்பங்களை ஏற்படுத்தும். உதாரணமாக ‘நான் தான் குழந்தையைப் பெற்றுக்கொடுத்தேன். எனவே உங்கள் சொத்தில் பங்கு வேண்டும்’ என்று வாடகைத் தாய் வழக்கு தொடரக் கூடும்.

© வேதபிரகாஷ்

03-04-2022

திராவிடத் தாய், கன்னித் தாய், தமிழ்த்தாய், சொந்தத்தாய் முதல் வாடகைத் தாய் வரை! தாய்மை வளர்கிறதா, தேய்கிறதா, தூஷிக்கப் படுகிறதா? (1)

ஏப்ரல்23, 2022

திராவிடத் தாய், கன்னித் தாய், தமிழ்த்தாய், சொந்தத்தாய் முதல் வாடகைத் தாய் வரை! தாய்மை வளர்கிறதா, தேய்கிறதா, தூஷிக்கப் படுகிறதா? (1)

தாய்மை நீர்த்து, ஆபாசமான நிலை: முதலில் 1970களில் தாய்மை போற்றப் பட்டது, 1980களில் கவர்ச்சிப் படுத்தப் பட்டது; 1990களில் நீர்க்கப் பட்டது; 2000களில் மறுக்க-மறக்க-மறைக்கப் பட்டது; 2010களில் தூஷிக்கப் பட்டது, இப்பொழுது 2020களில் விற்கப் படுகிறது. சினிமாக்களில், வசனங்களில், கதைகளில் தாய்மை கேள்விக்குறியானது. மொழி வெறியாகி, வியாபாரமாகியபோது, தாய்மையும் அவ்வாறே விற்பனைக்குத் தயாரானது. திருமண பந்தங்கள் உடைந்து, சேர்ந்து கூட வாழலாம் இல்லையென்றால் பிரிந்து விடலாம் போன்ற விவகாரங்கள் நீதிமன்றங்களினால் தூய்மைப் படுத்தப் படுத்தப் பட்டன. விபச்சாரம் தொழிலாக ஏற்ற்ய்க் கொள்ளப் பட்ட பிறகு, இதெல்லாம் சகஜமாகி விட்டது. நடிகைகள், குடும்பப் பெண்களுக்கு அறிவுரை கூற ஆரம்பித்தனர். கற்பு என்றெல்லாம் இருக்க வேண்டிய அவசியம்ம் இல்லை என்று புது இலக்கணம் வகுத்தனர்.

கவர்ச்சி அரசியல், வாடகைத் தாய்: திமுக ஆட்சிக்கு வந்தவுடன், மக்களுக்கு வேண்டிய இருக்கின்ற, திட்டங்களை ஒழுங்காக செயல்படுத்த முடியாமல் இருக்கிறது. “திராவிடத்துவம்” என்ற கொள்கையினை வைத்துக் கொண்டு, பிரிவினை அரசியல், மத்திய அரசுடன் தகராறு, இனவெறி, மொழி துவேசம் போன்ற தேவையற்ற உணர்ச்சிகளைத் தூண்டும், கலவரக் கொள்கைகளில் கவனத்தைச் செல்லுத்தி வருகிறது. முக்கியமாக உணவு, வீடு, குடிநீர், உடை போன்ற அடிப்படை, அத்தியாவசியமான விசயங்களை விடுத்து, கவர்ச்சி அரசியலில் ஈடுபட்டு, விளம்பாங்கள் மூலம், அறிக்கைகள் விட்டு, ஆணைகளைப் பிறப்பித்து, பிரச்சார ஆட்சி செய்து வருகிறது, அந்நிலையில், வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறும் அரசு பெண் ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கு 270 நாள்களுக்கு விடுப்பு வழங்கப்படும் என்று சமூக நலத்துறை அமைச்சா் கீதா ஜீவன் அறிவித்தார்.

சட்டப்பேரவையில் வியாழக்கிழமை (22-04-2022) சமூக நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சா் கீதா ஜீவன் வெளியிட்ட அறிவிப்புகள்[1]: புரட்சித் தலைவா் எம்ஜிஆா் சத்துணவுத் திட்டத்தின் கீழ் 43,190 சத்துணவு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் 29,002 மையங்களுக்கு வைப்பறையுடன் கூடிய சமையலறைகள் உள்ளன. 2021-22-ஆம் ஆண்டில் ரூ.69 கோடி செலவினத்தில் 1,291 வைப்பறையுடன் கூடிய சமையலறைகள் கட்டுவதற்கு ஆணைகள் வெளியிடப்பட்டு, கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் தொடா்ச்சியாக 2,100 பள்ளி சத்துணவு மையங்களுக்கு ரூ.113 கோடி மதிப்பீட்டில் வைப்பறையுடன் கூடிய சமையலறைகள் ஊரக வளா்ச்சித் துறையின் மூலம் நடப்பு நிதியாண்டில் கட்டப்படும்.

தமிழகத்தில் தற்போது 75 லட்சமாக உள்ள மூத்த குடிமக்களின் எண்ணிக்கை 2031-ஆம் ஆண்டு 1.42 கோடியாக உயரும் என்று எதிர்நோக்கப்படுவதால் பெருகி வரும் மூத்தக் குடிமக்களின் நலன், பாதுகாப்பு, சுகாதாரம், ஊட்டச்சத்து போன்ற சேவைகளை வழங்குவதற்கும் அவா்களுக்காகச் செயல்படுத்தும் திட்டங்களை சிறப்பாக நிர்வகிக்கும் பொருட்டு சமூக நல இயக்ககத்தில் தனி அலகு ஒன்று உருவாக்கப்படும். சமூக நலன், சமூக பாதுகாப்பு மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டம் ஆகியவற்றின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் உலக வங்கி உதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்களை ஒருங்கிணைத்து கண்காணிப்பதற்காக தலைமைச் செயலகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் திட்ட மேலாண்மை அலகு ஒன்று ஏற்படுத்தப்படும்.

பாலியல் குற்றங்கள்[2]: காஞ்சிபுரம் மாவட்டம் துண்டல்கழனி கிராமத்தில் 4 ஹெக்டோ் நிலப்பரப்பில் அமைக்கப்பட இருக்கும் மூத்த குடிமக்களுக்கான ஒருங்கிணைந்த வளாகம் அமைப்பதற்கான வடிவமைப்பு செலவின மதிப்பீடுகளுடன் உகந்த கருத்து வடிவமைப்பினை உருவாக்கும் பொருட்டு விரிவான சாத்தியக்கூறாய்வு ரூ.1 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும். சமூகத்தில் நிலவும் பாலின பாகுபாடு பொருளாதார பின்னடைவு காரணமாக குழந்தைகள் விற்பனை, குழந்தை திருமணங்கள், குடும்பத்தில் கடன் சுமை காரணமாக தம்பதியினா் தற்கொலை, குழந்தைகளையும் சோ்த்து கொலை செய்தல், வரதட்சிணை கொலைகள், பாலின ரீதியில் குழந்தைகளும் பெண்களும் வன்கொடுமைக்கு ஆளாவது, இணையதள குற்றங்கள் போன்ற குற்றங்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இத்தகைய குற்றங்களை தவிர்ப்பதற்கு குடும்பங்களுக்கு மனநல ஆலோசனை, வன்முறையால் பாதிக்கப்பட்டவருக்கு தேவையான மருத்துவ வசதி, ஆற்றுப்படுத்துவதற்கான ஆலோசனைகள், சட்டரீதியான பாதுகாப்பு மற்றும் நிவாரணம் பெற்றும் தருதல் ஆகியவற்றை ஓரிடத்தில் வழங்குவதற்காக மதுரை, கோயம்புத்தூா், திருச்சி, சேலம், திருநெல்வேலி, திருப்பூா், தூத்துக்குடி, ஆவடி, ஓசூா், திண்டுக்கல் ஆகிய 10 மாநகராட்சிகளில் ஒரு சேவை மையத்துக்கு ரூ.1.10 கோடி வீதம் 10 ஒருங்கிணைந்த சேவை மையங்கள் ரூ.11 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

குழந்தை பெற்றல், சலுகைகள்[3]: பாலின வரவு, செலவு திட்டம்: 2022-23-ஆம் நிதியாண்டு முதல் பாலின நிதி நிலை அறிக்கையை உறுதிப்படுத்துவதற்காகவும், பாலினம் சார்ந்த கொள்கைகளை உருவாக்கி அதன் செயல்பாடுகள் மற்றும் திட்டங்களில் முன்னுரிமை அளிப்பதற்காகவும் அனைத்துத் துறைகளிலும் பாலின வரவு செலவு திட்டம் உருவாக்கப்படும். மகப்பேறு மருத்துவமனைகள் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சி திட்ட மையங்களில் குழந்தைகளின் முதல் 1,000 நாள்கள் குறித்த விழிப்புணா்வு ரூ.1.74 கோடி செலவினத்தில் ஏற்படுத்தப்படும். செங்கல்பட்டு மாவட்டத்தில் குழந்தைகளுக்கான பாதுகாப்பு இல்லத்துக்கான புதிய கட்டடம் ரூ.16 கோடியில் கட்டப்படும். வாடகைத் தாய் மூலம் குழந்தைகள் பெறுவது தற்போது அதிகரித்து வருகிறது. அவ்வாறு குழந்தைகள் பெறும் அரசுப் பெண் பணியாளா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கு பச்சிளம் குழந்தைகளை மிகுந்த கவனத்துடன் பராமரிப்பதுடன் அவா்களின் உடனடி தேவைகளை நிறைவேற்றுவதற்காக 270 நாள்கள் குழந்தை பராமரிப்பு விடுப்பு வழங்கப்படும் என்றார்[4].

தாய்மை படும் பாடு: திராவிட பாரம்பரியங்களில் சட்டசபைகளே தாய்மையினை, பெண்மையினை, பேச்சுகளினால், செய்கைகளினால் கேவலப் படுத்தப் பட்டன. நாடாவை அவிழ்த்துப் பார்த்தல், என்ற பெண்மணிக்கும் எனக்கும் பிறந்த மகள், அடியேய் போன்ற ஏக வசனங்கள், கைப் பிடித்து இழுத்தல், சேலைக் கிழிப்பு, …..என்று பல அரங்கேறியுள்ளன. 1970களிலிருந்து நடந்ததை இப்பொழுது மக்கள் மறந்திருக்கலாம், பிறகு பிறந்தவர்கள் அறியாமல் இருக்கலாம், அறிந்தாலும், நம்பி பெரிதாக எடுத்துக் கொண்டு தங்களது தலைவர்களை மறு ஆய்வு செய்ய மாட்டார்கள், மாறாக பெண்மை போற்றும் காவலர் என்று விருதுகளும் கொடுப்பார்கள், கண்ணகிக்கு சிலை வைப்பார்கள், மாலைகள் போடுவார்கள், கால்களிலும் விழுவார்கள். இப்படித்தான், திராவிடத்தில், திராவிட சித்தாந்தத்தில், திராவிட தத்துவங்களில் தாய்மை உழன்றுக் கொண்டிருக்கிறது.

© வேதபிரகாஷ்

23-04-2022


[1]  தினமணி, வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறும் அரசு பெண் ஊழியா்களுக்கு 270 நாள்கள் விடுப்பு: அமைச்சா் கீதா ஜீவன், By DIN  |   Published On : 22nd April 2022 02:22 AM  |   Last Updated : 22nd April 2022 02:22 AM

[2]https://www.dinamani.com/tamilnadu/2022/apr/22/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-270-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-3831404.html

[3] நியூஸ்.18.தமிழ், வாடகைத் தாய் மூலம் குழந்தை.. பெண் ஊழியா்களுக்கு 270 நாள்கள் விடுப்பு: அரசு அறிவிப்பு, By WebDesk WebDesk Fri, 22 Apr 2022.

[4] https://newstm.in/amp/tamilnadu/Child-by-surrogate-mother-270-days-leave-for-female-employe/cid7217147.htm

மதுரைப் பள்ளியில்  நடந்த பாலியல் தொல்லை வழக்கு ஏன் கிடப்பில் கிடக்கிறது? மார்ச் முதல் மே வரை அமைதி காக்கும் மர்மம் என்ன?

மே30, 2021

மதுரைப் பள்ளியில்  நடந்த பாலியல் தொல்லை வழக்கு ஏன் கிடப்பில் கிடக்கிறது? மார்ச் முதல் மே வரை அமைதி காக்கும் மர்மம் என்ன?

யார் அந்த மதுரை பள்ளி ஆசிரியர்? என்ன நடந்தது?[1] (மார்ச் 2021): நக்கீரன் இதழில் மார்ச் மாதம் வந்த விவரங்கள், “சில குற்றங்கள், சட்டத்தின் பார்வையில் அது பெரிய குற்றமாகவே இருந்தாலும், சமூகச் சூழல்களால் வெளிப்படாமல் மறைக்கப்படுகிறது. அப்படி ஒரு குற்றச்செயலில் மதுரை மாநகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ஒருவர் ஈடுபட்டு, போக்சோ சட்டத்தில் சிக்காமல், சஸ்பென்ட் நடவடிக்கைக்கு மட்டும் ஆளாகியிருக்கிறார். மதுரை, கே.கே.நகர் பகுதியில் உள்ள மகரிஷி வித்யா மந்திர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியை நடத்துபவரின் மகனான விஜய், ஆரப்பாளையத்தில் உள்ள வெள்ளிவீதியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார்[2]. கரோனா லாக்டவுன் நேரத்தில் இவர், அந்தப் பள்ளியில் 12-வது வகுப்பு படிக்கும் மாணவியைப் பள்ளிக்கு வரவழைத்து, காரில் கடத்திச் சென்று, பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார்.

வெள்ளிவீதியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியரின் மீது புகார் அளித்தது: நக்கீரன் தொடர்கிறது, “அந்த மாணவிக்கு ஆபாசப் படங்களை வாட்ஸ்அப்பில் அனுப்பி வந்ததை, அவருடைய அக்கா தனது கணினியில் உள்ள செயலி மூலமாக பதிவுசெய்து பெற்றோரிடம் தெரிவிக்க, மாணவி சம்பந்தப்பட்ட ஆபாசப் புகைப்படங்களை ஆதாரமாக இணைத்து, கடந்த 28-7-2020 அன்று பள்ளியின் தலைமை ஆசிரியர் அய்யரிடம் புகார் அளித்தனர்பாதிக்கப்பட்ட மாணவி தரப்பினருக்கு ஆசிரியர் விஜய்யிடமிருந்து நஷ்ட ஈடு பெற்றுத் தருவதாக பேசி முடிக்கப்பட்ட நிலையில், 29-7-2020 அன்று மாநகராட்சி கல்வி அலுவலர் விஜயா மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர் ஆகியோரால் விசாரணை செய்யப்பட்டுள்ளது. கட்டப்பஞ்சாயத்து போல நடத்தப்பட்ட அந்த விசாரணையின்போது, மாணவி தரப்பிடம் உள்ள ஆதாரங்கள் பறிக்கப்பட்டு, பெயரளவுக்கு ஆசிரியர் மீதான நடவடிக்கையாக, 30-7-2020 அன்று விஜய்யிடம், செனாய் நகர் இளங்கோ மாநகராட்சி இருபாலர் மேல்நிலைப்பள்ளிக்குப் பணியிடமாறுதல் உத்தரவு (..எண் 4/015663/18) வழங்கினர்”.

 புகாரை மறைக்கமாற்ற முயன்ற நிலை: நக்கீரன் தொடர்கிறது, “ஆசிரியர் விஜய்யை சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தாமல், கண்துடைப்பாக பணியிட மாறுதல் உத்தரவு வழங்கியதற்கு, மனித உரிமை ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில்… 4-8-2020 அன்று விஜய் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார். அந்த உத்தரவை (தர்ஸ்ரீ.சர்.4/009179/2020) தயாரித்தபோது, முதலில்மாணவியை துஷ்பிரயோகம் செய்வதன் மூலம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டவர்என்று உறுதிபடக் கூறிவிட்டு, பிறகு அதை அழித்துவிட்டுபாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படுபவர்,’ எனத் திருத்தியுள்ளனர். மாணவி தரப்பிடம் வெற்றுத்தாள்களில் கையொப்பம் பெற்றும், கல்வி அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளிடம் பேரம் நடத்தியும், ரூ.5 லட்சம் மற்றும் ரூ.8 லட்சம் வாங்கிக் கொடுத்தும், மீடியேட்டராக இருந்து விவகாரத்தைக் கச்சிதமாக முடித்துக்கொடுத்தாராம், ஒரு கம்ப்யூட்டர் ஆசிரியர். மூன்று வாட்ஸ்ஆப் குழுக்களை ஆரம்பித்து, அதில் பள்ளி மாணவிகளை இணைத்து, ஆன்லைன் வகுப்பு என்ற பெயரில், ஆபாசப் புகைப்படங்கள், குறுஞ்செய்திகள் மற்றும் பாலியல் வீடியோக்களை அனுப்பி வந்திருக்கிறார் விஜய். அவருடைய 10 வருட ஆசிரியர் பணியில், எத்தனை மாணவிகள் சீரழிக்கப்பட்டனரோ?

விஜய் சஸ்பென்ட் செய்யப் பட்டது: நக்கீரன் தொடர்கிறது, “தன் மீதான பாலியல் குற்றச்சாட்டை நம்மிடம் மறுத்துப் பேசினார் ஆசிரியர் விஜய், “மூன்று தடவை விசாரணை நடத்தியிருக்காங்க. அஃபிசியலா எல்லாம் முடிஞ்சிருச்சு. ஏதாவது ரிப்போர்ட் வேணும்னா.. சி... ஆஃபீஸில் கேட்டுக்கங்க. நான் அந்த மாதிரி எதுவும் பண்ணல. உள்ளூர் ஸ்கூல்ல கரோனா நிவாரணத்துக்கு நான் அதிக நிதி கலெக்ட் பண்ணுனதுனால, பொறாமைல இருக்கவங்க பண்ணுன கம்ப்ளைண்ட்என்றார் படபடப்புடன். மதுரை, பொன்னகரத்தில் உள்ள வெள்ளி வீதியார் மாநகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அய்யரை சந்தித்தோம். “போன மார்ச்ல எக்ஸாம் முடிஞ்ச பிறகுதான் கம்ப்ளைண்ட் பண்ணுனாங்க. பேரண்ட் கம்ப்ளைண்ட் கைக்கு வந்ததும், விஜய்க்கு ஃபோன் பண்ணுனோம். அவர் அட்டெண்ட் பண்ணல. மறுநாளே அந்தப் புகாரை சி...க்கு அனுப்பிட்டேன். பெற்றோர் தரப்பில், நடந்த குற்றங்களுக்கான ஆதாரங்களைக் கொடுத்து, விஜய்யை டிரான்ஸ்பர் பண்ணனும்னு சொன்னாங்க. மொதல்ல டிரான்ஸ்பர் ஆகி.. இப்ப சஸ்பெண்ட்ல இருக்காரு. ஸ்கூலுக்கு உள்ளே தப்பு எதுவும் நடக்கல. எல்லாமே ஆன்லைன்ல நடந்திருக்குஎன்றார்”.

மதுரை மாநகராட்சி கல்வி அலுவலர் விஜயா:நக்கீரன் தொடர்கிறது, “மதுரை, செனாய் நகர் இளங்கோ மாநகராட்சி இருபாலர் மேல் நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜேந்திரனிடம் பேசினோம். “எங்க ஸ்கூல்ல விஜய் சேர்ந்து ரெண்டு நாள்கூட இருக்காது. ஏதோ பிளான் பண்ணி சஸ்பெண்ட் ஆர்டர் கொடுத்துட்டாங்க. அந்த ஆர்டர்ல விபரம் எதுவும் குறிப்பிடலஎன்றார். மதுரை மாநகராட்சி கல்வி அலுவலர் விஜயாவை தொடர்புகொண்டோம். “எந்த விஷயத்தையும் மூடி மறைக்கல. ஒரு கமிட்டி போட்டு விசாரணை நடந்துக்கிட்டிருக்கு. கோவிட் பீரியட்ங்கிறதால உடனே ஆக்ஷன் எடுக்க முடியல. அதனால, மொதல்ல டிரான்ஸ்பர் கொடுத்திட்டு, அப்புறம் சஸ்பெண்ட் பண்ணிருக்கோம். இன்னும் முழுமையா விசாரணை நடந்து முடியல. அதிகாரிகளுக்குப் பணம் கொடுத்ததா சொல்லுறது பொய். பணம் வாங்கியிருந்தால் சஸ்பெண்ட் பண்ணியிருப்போமா?” என்று கேட்டார்”.

மார்ச் 2021ல் இந்தியன் எக்ஸ்பிரசும் விவரமாக செய்தி வெளியிட்டிருந்தது[3]: குற்றஞ்சாட்டப் பட்ட நபர் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப் படவில்லை, அச்சட்டப் பிரிவுகளின் படி கைதும் செய்யப் படவில்லை. விசாரனைக் குழு கூட்டத்திற்கு அந்த பெண்ணோ, பெற்றோரோ ஆஜராகவில்லை என்றுதான், அரசு அதிகாரிகளின் தரப்பில் சொன்னதாக செய்தியில் உள்ளது. எஸ்.கே. பொன்னுத்தாய், விசாரணை மட்டும் போதாது, போக்ஸோ சட்டத்தின் கீழ் புகார் செய்யப் பட்டு நடவடிக்கை எடுக்கப் பட வேண்டும் என்று எடுத்துக் காட்டினார்[4]. வழக்கறிஞர் ஷாஜி செல்லன் என்பவரும், இது போன்ற புகார் வரும் பொழுது, பள்ளி நேரிடையாக போலீஸிடம் புகார் கொடுக்க வேண்டும். விசாரணை எல்லாம் தேவையில்லை என்றார். எது எப்படியாகிலும், இப்பொழுது, மறுபடியும் இப்பிரச்சினை எழுந்துள்ளது.

 விஜயபிரபாகரன் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது (மே 2021): மார்ச் மாதத்தில் நக்கீரன் செய்தியை வெளியிட்டப் பிறகு, மற்ற ஊடகங்கள் வெளியிட்டனவா என்று தெரியவில்லை. ஆனால், மே 2021ல் திடீரென்று அதைப் பற்றி செய்திகள் வர ஆரம்பித்துள்ளன. வெள்ளிவீதியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலை, “பள்ளியின் மாணவிகளையும் ஆசிரியைகளையும் தனித்தனியே சந்தித்து, ரகசிய விசாரணை செய்தால், அதிர்ச்சிகரமான பல உண்மைகள் வெளி வரும்” என்கிறார்கள், நேர்மையான சட்ட நடவடிக்கையை வலியுறுத்துபவர்கள். மதுரையில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாநகராட்சி பள்ளி ஆசிரியர் விஜயபிரபாகரன் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. புகார் மீது நடவடிக்கை எடுக்காத 2 டி.இ.ஓ.,க்களும் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர்[5]. ஆரப்பாளையம் வெள்ளிவீதியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலை பள்ளி ஆங்கில ஆசிரியர் விஜயபிரபாகரன் 2020 ஜூலையில் பிளஸ் 2 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மாணவி தந்தை மாநகராட்சி, மாவட்டகல்வி அதிகாரியிடம் புகார் அளித்தார். நடவடிக்கை இல்லை. மேலகோபுரத்தெரு கோதண்டம் ‘போக்சோ’ வழக்குக்கான சிறப்பு நீதிமன்றத்தில் இதுகுறித்து புகார் அளித்தார்[6].

சஸ்பென்ட் செய்யப் பட்ட விஜயபிரபாகரன்: நீதிமன்ற உத்தரவின்படி விஜயபிரபாகரன் மீது கரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இவ்வழக்கில் புகார் மீது நடவடிக்கை எடுக்காத மாநகராட்சி மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்(டி.இ.ஓ.,க்கள்) சேர்க்கப்பட்டு நகர் தெற்கு அனைத்துமகளிர் போலீசார் விசாரணை நடத்துகின்றனர். விஜயபிரபாகரனை மாநகராட்சி கல்வி அலுவலர் விஜயா ‘சஸ்பெண்ட்’ செய்தார். அவர் கூறுகையில் “புகார் அளித்தவுடன் பெண்கள் பள்ளியில் இருந்து ஆண்கள் பள்ளிக்கு அவர் மாற்றப்பட்டார். மாநகராட்சி கமிஷனர் உத்தரவின்படி சஸ்பெண்ட் செய்துள்ளோம். வழக்கில் கல்வி அதிகாரிகளை சேர்த்துள்ள தகவல் எனக்கு தெரியாது,” என்றார். மே 25 2021லிருந்து, சிறியதாக, இச்செய்தி வெளியிடப் பட்டு வருகிறது.

© வேதபிரகாஷ்

30-05-2021


[1] நக்கீரன், ஆன்லைன் வகுப்புகளில் பாலியல் அத்துமீறல்மதுரை பள்ளி பயங்கரம்!, அதிதேஜா, Published on 02/03/2021 (10:51) | Edited on 02/03/2021 (11:09)

[2] https://www.nakkheeran.in/special-articles/special-article/online-classes-incident-madurai-school-terror

[3] Indian Exppress, ‘Eight Months On, Minor Awaits Justice For Abuse, Published: 04th March 2021 03:49 AM  |   Last Updated: 04th March 2021 03:49 AM.

[4] https://www.newindianexpress.com/states/tamil-nadu/2021/mar/04/eight-months-on-sexually-abused-minor-girl-awaiting-justice-2271910.html

[5] தினமலர், மாணவிக்கு பாலியல் தொல்லை ஆசிரியர் மீதுபோக்சோவழக்கு; 2 டி...,க்கள் மீதும் நடவடிக்கை, Added : மே 25, 2021  05:58.

[6] https://www.dinamalar.com/news_detail.asp?id=2773488

ஆபாச வீடியோவா, கொக்கோக காணொலியா, வார்த்தையில் நீலப் படம் எடுக்கத் தயாராகும் பெண்ணியப் புரட்சியா? பெண்ணியம் மற்றும் உரிமைகள் சமூக சீரழிவுக்கு துணையாகாது! (2)

ஜனவரி16, 2021

ஆபாச வீடியோவா, கொக்கோக காணொலியா, வார்த்தையில் நீலப் படம் எடுக்கத் தயாராகும் பெண்ணியப் புரட்சியா? பெண்ணியம் மற்றும் உரிமைகள் சமூக சீரழிவுக்கு துணையாகாது! (2)

ரூ 1500/- வாங்கிக் கொண்டு கொக்கோக பேச்சுப் பேசிய பெண் கொடுத்த புகார்: இந்த நிலையில்தான், சம்பந்தப்பட்ட அந்தப் பெண் சாஸ்திரி நகர் காவல்நிலையத்தில் ஒரு பகீர் புகாரினைக் கொடுத்தார். 1500 ரூபாய் கொடுத்து தன்னை அப்படி பேசச் சொன்னதாகவும்… கமென்ட் செக்‌ஷனை ஆஃப் செய்துவிட வேண்டும் என்ற நிபந்தனையோடு தான் பேசியதாகவும் கூறியிருந்த அந்தப் பெண்…, “என்னிடம் சொன்னபடி அவர்கள் கமென்ட் செக்ஷனை ஆஃப் செய்யவில்லை. ஆகையால், நான் கடுமையான விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளேன். நான் பேசிய பல விஷயங்களை கட் செய்துவிட்டு ஆபாசமான வார்த்தைகளை மட்டுமே வெளியிட்டுள்ளனர். என்னைப் போல நிறைய பெண்களிடம் இப்படிச் செய்துள்ளனர்,” எனப் புகார் தெரிவித்தார். ஆனால், பேசும் போது, அவற்றிற்கு எல்லாம், அர்த்தம் தெரியாமல் பேசினால் என்று சொல்ல முடியாது. அழுத்தம் கொடுத்துப் பேசுதல், நக்கலாக சிரித்துக் கொண்டே பதில் அளிப்பது, முகத்தை ஏதோ வெட்கம் வந்து திருப்பிக் கொள்வது போல நடிப்பது முதலியன, அப்பட்டமாக செய்தவை என்று உறுதியாகின்றன. கற்பழிப்பு காட்சியில், உண்மையாக கற்பழித்தால், பெண் என்ன செய்வாள் போன்றது தான், இத்தகைய முறையற்ற வீடியோக்கள். அப்பெண் பேசியதாக, ஒரு வீடியோவில், அப்பெண் தான் செய்ததை நியாயப் படுத்தும் வகையில் தான் பேசியிருப்பது திகைப்பாக இருக்கிறது. புகாரின் அடிப்படையில் சாஸ்திரிநகர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

பெண் கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுத்தது: போலீசார் தொடர்ந்து விசாரணை செய்ததில் சென்னை டாக்ஸ் என்ற யூடியூப் சேனல் இதுபோன்று 200-க்கும் மேற்பட்ட வீடியோக்கள் வெளியிட்டு 7 கோடி பேர் பார்த்திருப்பதாக தெரிவித்துள்ளனர். அதாவது, அத்தனை பேர், இத்தகைய கேவலமான வீடியோவைப் பார்க்கின்றனர் என்றால், அவர்களது, வக்கிர மனநிலையினையும் எடுத்துக் காட்டுகிறது, இது தொடர்பாக விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டார். கூடுதல் கமிஷனர் தினகரன், இணை கமிஷனர் ஏ.ஜி.பாபு, துணை கமிஷனர் விக்ரமன், உதவி கமிஷனர் கவுதமன் ஆகியோர் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் பலவேசம், சப்-இன்ஸ்பெக்டர் முருகன், ஏட்டு சண்முகசுந்தரம் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் பெசன்ட்நகர் கடற்கரை பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

 மூன்று பேர் கைது, சிறையில் அடைப்பு: `சென்னை டாக்ஸ்’ யூடியூப் சேனலின் உரிமையாளர் தினேஷ் மற்றும் தொகுப்பாளர் ஆசான் பாட்சா, ஒளிப்பதிவாளர் அஜய் பாபு ஆகிய மூவர் மீது, பெண் வன்கொடுமைச் சட்டம் மற்றும் பெண்களை மானபங்கப்படுத்துதல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் [ Sections 354(b), 294(b), 509, 506(ii) of IPC and Section 4 of Tamil Nadu Prohibition of Women Harassment Act] வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.  இத்துடன் செய்திகள் நின்று விடும். பிறகு, என்னவாயிற்று என்று ஊடங்கங்கள் விவரங்களைக் கொடுப்பதில்லை. வாசகர்கர்களும், ஏதோ டிவி-சீரியல், சினிமா, பட்டி மன்றம் பார்த்தது போன்று, மறந்து விடுவார்கள். இதே போன்று, இன்னொரு செய்து வந்தால், ரசித்து அதனை பார்ப்பார்கள். 

போலீஸாரின் நடவடிக்கை, யூடியூப் முடக்கப் பட்டது: அவர்களிடமிருந்து எல்லா உபகரணங்களையும் பறிமுதல் செய்துள்ளனர். அவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட மொபைல்களை போலீசார் ஆய்வு செய்த போது, அதில் இணையத்தில் பதியப்படாத நூற்றுக்கணக்கான வீடியோக்கள் இருப்பது தெரியவந்துள்ளது[1]. இவர்கள் தனியாக பீச்ச்சில் அமர்ந்திருக்கும் பெண்களிடம் ஆபாச கேள்விகள் கேட்டு அதை மொபைலில் பத்திரபடுத்தி வைத்திருப்பதும் தெரியவந்துள்ளது[2]. இதனை வைத்து பெண்களுக்கு இவர்கள் மிரட்டல் விடுத்துள்ளனரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையில் இறங்கியுள்ளனர். இதுபோன்று பெண்களிடம் ஆபாசமாக பேட்டி எடுத்து வீடியோக்கள் வெளியிட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் எச்சரித்துள்ளனர்[3]. இதுபோன்ற செயல்களில் யாராவது ஈடுபட்டால், அது பற்றி 8754401111 என்ற செல்போன் எண்ணில் தகவல் தெரிவிக்கலாம் என்றும் அவர் அறிவித்துள்ளார்[4]. இதையடுத்து அந்த சேனலை முடக்க வேண்டும் என்று சென்னை நகர துணை ஆணையர் யுடியூப் நிறுவனத்துக்கு கோரிக்கை வைத்தார்[5]. அதைவைத்து இப்போது சென்னை டாக்ஸ் என்ற சேனல் முடக்கப்பட்டுள்ளதாக யுடியுப் நிர்வாகம் அறிவித்துள்ளது[6].

கமல ஹாசன் யோசித்துப் பார்க்க வேண்டியது: “மன்மதன் அம்பு,னென்ற படதத்தில், இதைவிட கேவலமாக, கொக்கோமாக, ஒரு பாடல் எழுதி, சேர்த்திருப்பதை நினைவு கொள்ள வேண்டும். தனிமனித ஒழுக்கம் தேவையில்லை, கற்பு தேவையில்லை, பெண்கள் வெறும் காம-இச்சைக்கு உபயோகப்படும் சதைப் பிண்டங்கள், காசு கொடுத்தால், படுக்க வரவேண்டும், ……………………வேண்டும்………………ஆணைத் திருப்தி படுத்த வேண்டும்………இத்தகைய எண்ணங்கள் தாம் அப்பாட்டில் வெளிப்பட்டன. இதற்கு நாத்திகம் தேவையில்லை. அம்மாளுக்குப் பிறந்து, அம்மாளை மறந்து அல்லது துறந்து, மகள்களை அந்நிலைக்கு போகும்போது, மனைவியை நடத்திய நிலை, மகள்களுக்கு வந்தால், அப்பொழுதும், நாத்திகத்தில் பிதற்றலாம், இல்லை, அவர்களையும் “சேர்ந்து வாழும்” நிலைக்குப் பரிந்துரைக்கலாம். அப்பொழுது அக்காள் மூதேவி கூட வரமாட்டாள், அந்நிலையில் சக்காளத்தி வந்தால், அரோகராதான். ஒன்பது நாள் இல்லை, நாற்பது நாள் உண்ணா நோன்பு இருந்து கஞ்சி குடித்தால் கூட, பருப்பு வேகாது. இப்படி பதினொன்று ஆண்டுகளுக்கு முன்னர் குறிப்பிட்டிருந்தேன்[7]. இப்பொழுது, 2021 தேர்தலுக்காக, ஏதோ ஒழுக்கமான ஆள் போன்று பிரச்சாரம் செய்து வருவது தமாஷாக இருக்கிறது.

மின்னணு சாதனங்களின் வளர்ச்சி, இத்தகைய சீரழுகளை அதிகமாக்குகிறது: இன்றைக்கு காசுக்கு என்ன வேண்டுமானாலும் செய்யத் துணிந்து விட்ட மனிதர்களைத் தான், பலரை, பல நேரங்களில், தொழில்களில், வேலைகளில் ஈடுபட்டிருப்பதைப் பார்க் நேரிடுகிறது. பல சமயங்களில், “துஷ்டரைக் கண்டால் தூர விலகு,” போன்ற கொள்கையில், பலர் கண்டுகொள்ளாமல் சென்று விடுகின்றனர். 1960-70களில் எப்படி “சரோஜா தேவி“ புத்தகங்கள் எப்படி காம வக்கிர மனங்களுக்குத் தீனி போட்டதோ, அது போல, 2000களில் “புளு பிலிம்” போன்றவை அத்தகைய கள்ளத்தனங்களுக்கு உதவின. வீடியோ கேசட், சிடி-டிவிடி-பென் டிரைவ் என்று வந்து விட்டப் பிறகு, அவற்றின் மூலம் விற்றல்-வாங்கல் பறிமாற்றங்கள் நடந்து கொண்டிருந்தன. டெஸ்க்-டாப் என்று ஆரம்பித்து, லாப்-டாப் என்று மாறிய போதும், அவ்வாறே, மனங்களை உடல்களை பாதித்தன. இப்பொழுது, செல்போன், கைபேசி, என்று பலவித வசதிகளுடன் வரும் நிலையில், இவையெல்லாம், யார் வேண்டுமானாலும், பார்க்கலாம், சுவைக்கலாம் என்ற நிலை வந்து விட்டது.

இன்டெர்நெட் மாயவலை கோடிகள் புரளும் வியாமாரமாகிய நிலை: இன்டர்நெட், வலைதளம், சர்வர், மாயவலை, மின்னாக்கம் செய்யப் பட்ட விவரங்கள்-தகவல்கள் சேமிப்பு, பரப்பு என்றெல்லாம் வியாபாரம் தொழிற்நுட்ப ரீதிகளில் விரிந்த போது, சம்பந்தப் பட்டவர்களுக்கு கோடிகளில் வருவாய் வர ஆரம்பித்தது. அவை, தொடர்ந்து நுகரும் நிலைகளில், நிரந்த வருமானமாகி, பெருக ஆரம்பித்தது.  இடங்களை விற்கும் ரியல் எஸ்டேட் தொழில் போல, இன்டெர்நெட்-மாயவலை இடம் விற்பனை, டொமைன் பெயருக்கு காசு என்றெல்லாம் தொழில்கள் விஸ்தாரமாகியது. செல்போன் மூலம், தனிநபர், தனியாக, தன்னிச்சைக்கேற்றவாறு, நல்லதோ-கெட்டதோ, எந்த விசயங்களையும் தேடலாம், அணுகலாம், பெறலாம் என்ற போது, அத்தகைய மனிதர்களும் அதிகமாக ஆரம்பித்தனர்.

© வேதபிரகாஷ்

15-01-2021


[1] நியூஸ்.18.தமிழ், கைதான யூடியூப் சேனல் நபர்களின் செல்பேசியில், வெளியிடப்படாத ஏராளமான பெண்களின் வீடியோக்கள் கண்டுபிடிப்பு, NEWS18 TAMIL, LAST UPDATED: JANUARY 12, 2021, 1:21 PM IST.

[2] https://tamil.news18.com/news/tamil-nadu/youtube-channel-caught-more-women-videos-in-mobile-vjr-393051.html

[3] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ்,பெண்ணிடம் ஆபாச பேட்டி.. யூடியூப் சேனலுக்கு சென்னை மாநகர போலீஸ் ஆப்பு.., Ezhilarasan Babu, Chennai, First Published Jan 15, 2021, 10:57 AM IST

[4] https://tamil.asianetnews.com/politics/porn-interview-with-a-girl-chennai-metropolitan-police-wedge-for-youtube-channel–qmyn5b

[5] தமிழ்.வெப்துனியா, சென்னை டாக்ஸ் சேனல் முடக்கம்! யுடியூப் அறிவிப்பு!, Last Updated: வெள்ளி, 15 ஜனவரி 2021 (11:24 IST).

[6] https://tamil.webdunia.com/article/regional-tamil-news/chennai-talks-youtube-channel-blocked-121011500023_1.html

[7]  வேதபிரகாஷ், வார்த்தையில் நீலப்படம் எடுத்து, மனத்தில் கலவிக்கொண்டு, உருப்புகளை வதைத்து, உடலைவாட்டும் உத்தமர்கள்!, நவம்பர் 19, 2010.

https://evilsofcinema.wordpress.com/2010/11/19/309-kamalahasan-lust-life-atheism/

ஆபாச வீடியோவா, கொக்கோக காணொலியா, வார்த்தையில் நீலப் படம் எடுக்கத் தயாராகும் பெண்ணியப் புரட்சியா? (1)

ஜனவரி15, 2021

ஆபாச வீடியோவா, கொக்கோக காணொலியா, வார்த்தையில் நீலப் படம் எடுக்கத் தயாராகும் பெண்ணியப் புரட்சியா? (1)

யூடியூப் மோகம் கொக்கோகத்தை நெருங்கிய விதம்: இணையதளங்களில் புற்றீசல்கள் போல இப்போது யூடியூப் சேனல்கள் பெருகிவிட்டன. இந்த சேனல்களில் பொதுமக்களுக்கு பயன்படும் நல்ல விசயங்களும் ஒளிபரப்பப்படுகிறது. அதே நேரத்தில் இளைஞர்கள், இளம்பெண்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்லும் நிகழ்ச்சிகளும் வெளியிடப்படுகிறது[1]. அதிகமான பேர் இந்த நிகழ்ச்சிகளை பார்க்கும் போது, குறிப்பிட்ட யூடியூப் சேனல்களை நடத்துவோருக்கு அதிக அளவில் பணம் கொட்டும்[2]. இதனால்தான் நல்ல நிகழ்ச்சிகளின் இடையே, பாலியல் உணர்வை தூண்டும் நிகழ்ச்சிகளை இடையிடையே புகுத்தி விடுவார்கள்.  “மக்களிடம் கருத்து கேட்கிறோம்,” என்ற பெயரில் ஆபாச அத்துமீறலில் ஈடுபடும் சில யூடியூப் சேனல்களுக்கு எச்சரிக்கை மணி அடித்திருக்கிறது `சென்னை டாக்ஸ்’ யூ-டியூப் சேனல் விவகாரம்[3]. தங்கள் வீடியோ வைரலாக வேண்டும் என்பதற்காக பணம் கொடுத்து ஆபாசமாகப் பேச வைத்ததாக ஒரு பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் `சென்னை டாக்ஸ்’ யூடியூப் சேனலின் உரிமையாளர் உட்பட மூன்று பேர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது[4].

ஆபாச பேச்சு வீடியோ: அரசியல் போக்குகள், சமூகப் பிரச்னைகள், பெண் உரிமைகள் என பொதுவெளியில் பேசுவதற்கும் விவாதிப்பதற்கும் எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. ஆனால், எளிதில் அதிக வியூஸ் பெறவேண்டும் என்ற வெறியில் சில யூடியூப் சேனல்கள் வக்கிரமாகச் செயல்பட்டு வருகின்றன. காமத்தையும், அந்தரங்க விஷயங்களையும் மையப்படுத்தி தவறான உள்நோக்கத்துடன் கேள்வி கேட்டு, அதற்கு மக்கள் சொல்லும் கருத்துகளில் எந்த இடத்தில் ஆபாசமான சர்ச்சைக்குரிய வார்த்தைகள் இருக்கின்றனவோ அந்த இடத்தை மட்டும் வெட்டி ஒட்டி வெளியிடுகின்றன. அதன் அடுத்தகட்டமாக பெண்களுக்கு பணம் கொடுத்து ஆபாசமாகப் பேச வைக்கும் கொடுமையும் நடக்கிறது என்பது இந்தச் சம்பவத்தின் மூலம் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. இத்தகைய பேச்சுகளை ஆதரிக்கும் விதத்தில் தான், இன்றும் ஊடகங்களில் பேட்டிகள் வந்து கொண்டிருக்கின்றன. அப்பெண் பேசிய விதம் தவறுதான், ஆனால், ஆண்கள் எப்படி தனக்கு மூன்று-நான்கு மனைவியர் உள்ளனர், பலருடன் உடலுறவு வைத்துக் கொண்டேன் என்றேல்லாம் பேசுகிறானோ, அதேபோல, பெண்களுக்கும் உரிமைகள் இருக்கின்றன. இப்படியும், ஒரு ஆங்கில செனலில் பேட்டி ஒளிபரப்பப் பட்டது.

“2020 எப்படி போனது?” போர்வையில் ஆபாச கேள்விபதில் நிகழ்ச்சி: சில தினங்களுக்கு முன்பு சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் இருந்த இளம் ஆண்கள் மற்றும் பெண்களிடம் “2020 எப்படி போனது?” என்ற டாபிக்கில் கருத்து கேட்டு தங்களது யூடியூப் சேனலில் வெளியிட்டிருந்தனர் `சென்னை டாக்ஸ்’ குழுவினர்[5]. அந்த வீடியோவில் ஒரு பெண் மிகவும் ஆபாசமாகப் பேசியிருந்ததால் பார்வையாளர்கள் அந்தப் பெண்ணை ஏகத்துக்கும் தாக்கி கமென்ட் செய்தனர்[6]. கேட்ட கேள்விகள், கொடுத்த பதில்கள், வார்த்தை விபச்சாரம் போலிருந்தது. அம்மண், இம்மண் என்றெல்லாம் அரற்றினாலும், பெண்மை போகும் பாதையை மாற்ற முடியவில்லை, வார்த்தை விபச்சாரமும் பெருகுகிறது! கவர்ச்சி அரசியலில் மூழ்கி இந்துத்துவம் மயங்கும் போது, வார்த்தையில் நீலப்படம் எடுக்கும் தருணமும் வந்து சேர்கிறது பெண்மை மறக்கிறது! வார்த்தையில் நீலப்படம் எடுத்து, மனத்தில் கலவிக்கொண்டு, உருப்புகளை வதைத்து, உடலைவாட்டும் உத்தமர்கள், உலா வரும் வேளையில் எல்லாமே பறக்கின்றன. நிலைமை மோசமாகி விட்டது என்றறிந்த, அப்பெண் உஷாராகி, புகார் கொடுத்தாள்.

யார் அந்த பெண்? வீடியூவில் பேசிய பெண்: புகார் அளித்த ஜோதி கிரிதர்சிங் என்கிற அந்த பெண், 21 மணி நேரம் 2900 நபர்களுக்கு மேல் மெஹந்தி போட்டு கின்னஸ் ரெக்கார்டு செய்தவர்[7]. சிறந்த தொழில் முனைவோராக பெயர் எடுத்தவர். டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் முதல் பக்கத்தில் பெஸ்ட் டிரெய்னர் என கட்டுரை வெளியாகியிருக்கிறது[8]. வடைபோச்சு போன்ற ஷோக்களுக்கு நிகழ்ச்சித் தொகுப்பு செய்திருக்கிறார். நடிப்புத் துறையிலும் இருந்து வந்துள்ளார். அப்பெண் கூறியதன்படி, “அந்த பேட்டி வீடியோ கிறிஸ்துமஸ்க்கு முன்பாக பேசிய, 1500 ரூபாய் பணம் பெற்றுக்கொண்டு ஸ்கிரிப்ட் செய்யப்பட்டு எடுக்கப்பட்ட வீடியோ.  அந்த சேனல்காரர்கள் 2020 உங்களை என்னவெல்லாம் செஞ்சது? 2021 எப்படி போகப் போகிறது என்பதை பற்றி கேட்பதாக முதலில் கூறினார்கள். சென்னை டாக்ஸ் சேனலில் மட்டும் தான் போடுவோம் என்று கூறினார்கள். இதற்கு முன்பாக பல பெண்களை இப்படி பணம் கொடுத்து பேச வைத்ததாகவும் கூறி அவர்களின் பட்டியலை கொடுத்தார்கள். அந்த பெண்களும் இதுபோன்ற விஷயங்களால் பாதிக்கப்பட்டதாக தங்கள் மனக்குமுறலை என்னிடம் பகிர்ந்தார்கள். இதை வெளிக்கொண்டு வரவே, நான் இதை செய்தேன். அந்த பணமும் அவர்களாக கொடுத்ததுதான். ஒரு பெண் எப்படியெல்லாம் பேசக்கூடாது? பேசலாம் என்கிற பேச்சு சுதந்திரத்தை தான் வெளிப்படுத்தினேன். இந்த சேனலை பார்த்துவிட்டு, இதில் அந்த வீடியோவை பகிர வேண்டாம் என கூறியும் அவர்கள் பகிர்ந்துவிட்டார்கள்.” என தெரிவித்துள்ளார். 

தானே புகார் கொடுத்தது ஏன்?: இந்த புகாரையும் அப்பெண்ணே கொடுத்துள்ளார். அதற்கு காரணமாக அவரே கூறியதாவது:- “முதலில் அந்த சேனல் தரப்பில் கமெண்ட் செக்ஷனை ஆஃப் செய்து வைத்திருப்பதாக தான் உறுதி அளித்தார்கள். ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை. இந்த வீடியோ வைரலான 15 நிமிடங்களில் கமெண்ட் செக்ஷனில் மோசமான கமெண்டுகள் குவிந்தன. என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவர்களிடம் கேட்டபோது சேனலின் தலைமை அதை கேட்டுக் கொள்ளவில்லை என கூறினார்கள். இதனால் என் பெயரை மீட்டெடுக்க அந்த சேனலைச் சேர்ந்தவரிடம் கேட்டேன். அப்போது என் பெயருடன் சேர்த்து இந்த வீடியோவை வைரல் செய்தார்கள். ஆனால் அது தான் இன்னும் மன உளைச்சலாக்கியது. உண்மையில் என்னடா இப்படிலாம் பேச வைக்குறீங்க என்று தான் அந்த வீடியோவில் நான் பேசியிருக்கிறேன். இவை நடந்த அடுத்த ஒரு மணி நேரத்திலேயே இந்த விவகாரம் பற்றி நான் போலீஸ் ஸ்டேஷனில் தெரிவித்தேன். இந்த புகாரை நானாகவே கொடுத்தேன். காவல்துறை இந்த வீடியோவை நீக்குவதாக தெரிவித்துள்ளார்கள். இப்படி எதிர்மறையாக பேசி நான் பிரபலமாகிவிட்டேன். இதை வைத்து இதுபோன்ற விஷயங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க என் பங்களிப்பை தர நினைக்கிறேன்.” என கூறியுள்ளார். இறுதியாக, “நான் யாருக்கும் இதை சொல்லி புரியவைக்க முடியாது. என் பதில்களில் யாரும் திருப்தி அடையவும் வாய்ப்பில்லை. நான் யாருக்கும் தெரியாத எந்த விஷயமும் பேசவில்லை. அத்துடன் இந்த பேட்டியில் நான் பேசியவற்றை இதயத்தில் இருந்து பேசுகிறேன். நான் 5 நிறுவனங்களில் பொறுப்புகளில் இருக்கிறேன். யாருக்கேனும் வேலைவாய்ப்புகள் தேவைப்பட்டால் அணுகுங்கள்.” என அந்த பேட்டியில் ஜோதி தெரிவித்துள்ளார்.

ஊழல் அரசியல்வாதிகளும், சமுக சீர்பழிப்பாளர்களும் ஒன்றே: “நான் 5 நிறுவனங்களில் பொறுப்புகளில் இருக்கிறேன். யாருக்கேனும் வேலைவாய்ப்புகள் தேவைப்பட்டால் அணுகுங்கள்,”  என்ற நிலையில் அந்த பெண்மணி இருக்கும் போது, ரூ.1,500/- அத்தகைய கொக்கோக பதில்களைச் சொல்லி, பெண்ணுரிமை பேசி, பிறகு ஜகா வாகியிருப்பது, தமாஷாக இருக்கிறது. ஊழல் அரசியல்வாத்களுக்கும், இத்தகைய, கொக்கோக பெண்ணியப் போராளிகளுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. காசுக்கு இவர்களிடம் பஞ்சமில்லை என்றால், அதையும் மீறி ஆட்டிப் படைக்கும் காரணிதான், இவர்களை சீரழிக்கும் வேலைகளில் ஈடுபட செய்கின்றன. சமூக பிரக்னை இல்லாமல், யாரும், சமூக பிரச்சினைகள் அணுக முடியாது. ஆனால், போலித் தனமாக, ஆசியல்வாதிகள் செய்வார்கள். இதுப்போலத்தான் இக்கூட்டமும்.

© வேதபிரகாஷ்

15-01-2021


[1] தினத்தந்தி, சென்னை கடற்கரையில் பெண்களிடம் ஆபாச பேட்டி எடுத்து யூடியூப் சேனலில் ஒளிபரப்பு 3 பேர் அதிரடி கைது, பதிவு: ஜனவரி 13,  2021 06:39 AM

[2] https://www.dailythanthi.com/News/Districts/2021/01/13063945/3-arrested-for-taking-pornographic-interview-with.vpf

[3] விகடன், ஆபாச கேள்விகள்எல்லை மீறும் யூடியூப் சேனல்கள்யார் பொறுப்பு?, எம்.புண்ணியமூர்த்தி,  Published: Today at 8 AM; Updated:Today at 8 AM

[4] https://www.vikatan.com/social-affairs/controversy/controversy-over-chennai-talks-youtube-channels-viral-video-and-police-action

[5] புதியதலைமுறை, பெண்ணிடம் ஆபாச கேள்வி கேட்டு பேட்டி‘ – யூடியூப் சேனலைச் சேர்ந்த 3 பேர் கைது, Web Team, Published :12, Jan 2021 10:24 AM.

[6] http://www.puthiyathalaimurai.com/newsview/90846/3-YouTuber-arrested-in-chennai

[7] தமிழ்.பிஹைன்ட்.த,வுட்ஸ், அப்படி பேசுன நானே ஏன் புகார் கொடுத்தேன்னா”.. “என்ன மாரி நிறைய பொண்ணுங்க குமுறிட்டு இருக்காங்க.. பெரிய லிஸ்டே இருக்கு!”.. ‘YOUTUBE’ வைரல் பெண்கண்ணீர்பேட்டி! வீடியோ!, By Behindwoods News Bureau | Jan 13, 2021 04:47 PM.

[8] https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/chennai-talks-viral-girl-opens-up-reason-for-complaint-interview.html

டிக்டாக் காதலி, மின்னணு காதலன், மோசடியில் முடிந்த சமூக வலைதளக் காதல், தப்பித்த ஆண், மாட்டிக் கொண்ட பெண்!

ஜூன்11, 2020

டிக்டாக் காதலி, மின்னணு காதலன், மோசடியில் முடிந்த சமூக வலைதளக் காதல், தப்பித்த ஆண், மாட்டிக் கொண்ட பெண்!

கொரோனா காலத்தில் சமூக ஊடக குற்றங்கள்: தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் வந்தாலும் டிக்டாக் ஏமாற்று அலைகள் இன்னும் ஓயாமல் அடித்து வருகின்றன. கொரோனவை விட டிக்டாக் நோய் மிக கொடுமையானது என்பதற்கு தமிழகத்தில் நடந்துள்ள பல்வேறு குற்ற சம்பவங்கள் சாட்சி, இப்படி பீடிகை போட்ட ஊடகங்கள் அந்த காசியை மறந்து விட்டனர் போலும். நல்லது நடப்பதெல்லாம் இத ஊடகக் காரர்களுக்குத் தெரியாது போலும். லட்சக் கணக்கில் உணவு இல்லாதோருக்கு, உணவு சமைத்து விநியோகித்திருக்கிறர்கள். ஐடி மட்டுமல்ல மற்ற துறை இளைஞர்கள் பலர் அத்தகைய உணவு விநியோகம் செய்துள்ளனர். அதில் சிறப்பு என்னவென்றால், கஷ்டப்படுபவர்களை கண்டு கொடுத்து வருகிறார்கள். எனவே, வேலை-வெட்டி இல்லாமல் சும்மா இருப்பதை விட அல்லது நன்றாக சம்பாதித்து பொழுது போகவில்லை என்றால், நற்பணி செய்யாமல், இப்படி பெண்ணை நோக்கிச் செல்வது போன்ற காரியங்களில் ஈடுபடுவது, படித்த இளைஞர்களுக்கு அழகல்லவே!

டிக்டாக் போதையில் ஐடி எஞ்சினியர், காதலித்த மின்னணு அறிவிஜீவி: மதுரை மாவட்டம் எல்லீஸ் நகரைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர் ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். கல்லூரியில் எஞ்சினியரிங் படிப்பதாக சில ஊடகங்கள் கூறுகின்றன. இந்நிலையில், ராமச்சந்திரனுக்கு டிக்டாக்கில் அம்முக்குட்டி என்கிற சுசி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது[1]. அந்த பெண் ராமச்சந்திரனுக்கு தனது செல்போன் என்னை பகிர்ந்து கொண்டதையடுத்து இருவரும் போனில் பேச ஆரம்பித்துள்ளனர்[2]. புகைப்படத்தில் சீரியல் நடிகையை போல இருக்கும் அவர், கல்லூரி மாணவி என்று கூறி ராமச்சந்திரனுடன் பழகியிருக்கிறார். பெண் அழகாக இருந்தால் போதும், டிக்டக் அடிமைகள் அவர்கள் என்ன செய்தாலும் லைக்குகள் அள்ளி வீசுவார்கள், அதோடு பைசாக்களையும் வீசி வீதிக்கு வந்து புகார் கொடுப்பார்கள்[3], இப்படி “பாலிமர் செய்தி” வர்ணிக்கிறது. அந்த பழக்கம் நாளடைவில் காதலாகி, சுசியிடம் செல்போனிலும், கனவிலும் குடும்பம் நடத்தி வந்துள்ளார் ராமச்சந்திரன். இந்நிலையில் தனக்கு எப்போது எல்லாம் பணம் வேண்டுமோ அப்போதெல்லாம் கூகுள்பிளே மூலம் 95 ஆயிரம் ருபாய் வரை ராமச்சந்திரனிடம் பெற்றுள்ளார் சுசி[4]. பார்க்காமலேயே காதல், பிறகு பணம் கொடுத்தார் என்றால், அது சரியில்லை. இவருக்கும் ஏதோ உள்நோக்கம் இருந்திருக்கிறது, மாட்டிக் கொண்டார், என்றாகிறது.

டிக்டாக் காதலி வராதலால் சந்தேகம்: இந்நிலையில் டிக்டாக்-வாசிகளுக்கென்று திருப்பூரில் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் பங்கேற்க சென்ற ராமச்சந்திரன், தனது காதலியையும் அங்கு அழைத்துள்ளார்[5].  ஆனால் சுசி அதற்கு மறுத்ததால், ராமச்சந்திரனுக்கு சந்தேகம் ஏறட்டுள்ளது. தான் காதலிப்பது உண்மையில் பெண்தானா? அந்த புகைப்படம் உண்மைதானா என்ற அதிர்ச்சி தொற்றிக்கொண்டதால், மதுரை எஸ்எஸ் காலனி காவல் நிலையத்தில் ராமச்சந்திரன் புகார் கொடுத்துள்ளார்[6]. புகாரின் அடிப்படையில் விசாரணை செய்த போலீசார் திருப்பூர் ஆலங்காடு பகுதியில் வசித்து வந்த / திருப்பூர் ஆலங்காடு , வீரபாண்டி பிரிவு அருகில் உள்ள வீட்டில் பதுங்கியிருந்த[7] அந்த இளம்பெண்ணை கைது செய்தனர்[8]. முகம் வேறு புகைப்படம் வேறாக இருந்த அவரிடம் விசாரித்தபோது, டிக்டாக் மட்டுமில்லாமல் முகநூலிலும் போலி கணக்குகளை தொடங்கி, அதில் வேறு பெண்ணின் புகைப்படங்களை பதிவிட்டு, லைக்ஸ் கொடுக்கும் ஆண்களை காதல் வலையில் சிக்க வைத்து பணம் சம்பாதித்து வருவது தெரிய வந்தது[9]. மேலும் அவர் இதுபோல பல பேரை ஏமாற்றியுள்ளதை கண்டறிந்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்[10]. இதேபோன்று மதுரை எஸ்.எஸ்.காலனியில் கடந்த வாரம் முகநூல் மூலம் நண்பராக அறிமுகமாகி முதியவரிடம் ரூ. 2.70 லட்சம் மோசடி செய்தது குறிப்பிடத்தக்கது[11]. ஆடம்பரமாக வாழவேண்டும் என்ற ஆசையில், இத்தகைய மோசடி வேலையில், இப்பெண் இறங்கியுள்ளாள்[12].

பெண்களும் மோசடிகளில் ஈடுபடுவது: இப்பெண் ஏமாற்றி பணம் பறிப்பதோடு நிறுத்தியுள்ளாள். மற்றவர்களைப் போல, திருமணம் செய்து கொண்டு குடும்பங்களைக் கெடுக்கவில்லை. அதுமட்டுமல்லாது, கொள்ளை, கொலை என்ற ரீதியில் எல்லாம் குற்றங்கள் நீண்டுள்ளன. காசியைப் போன்று, நூற்றுக் கணக்கான பெண்களை கற்பழிக்கவில்லை [இங்கு பெண் சம்பந்தப் பட்டுள்ளாள்]. இப்பொழுதுள்ள போலியான சமுதாய ஆடம்பர வாழ்க்கை எப்படி பெண்களை பாதிக்கின்றன என்பதை கவனிக்க வேண்டும். இயற்கையில், பெண்களுக்கு நகை, புடவை, ஆடைகள். ஆடம்பர வாழ்க்கை முதலியவற்றில் ஆசை உண்டு. வசதி இல்லாதவர்கள், நிலைமை அறிந்து அமைதியாக இருப்பர். சிலர் புழுங்கிக் கொண்டிருப்பர். சிலர் இத்தகைய மோசடிகளிலும் ஈடுபடுகிறார்கள் என்று தெரிகிறது. இவர்களைமுறைப்படி ஏதாவது வேலை கொடுத்தால், இத்தகைய மோசைகளில் ஈடுபட மாட்டார்கள். மேலும், இளைஞர்களும், சமூக ஊடகங்களில், இளம்பெண்களை கவர வேண்டும், பேச வேண்டும், காதலிக்க வேண்டும் போன்ற எண்ணங்களுடன் செயல்பட கூடாது. இருக்கின்ற சமூகப் பிரச்சினைகளில், இவற்றை கொண்டுவராமல் இருந்தால் சரி.

© வேதபிரகாஷ்

11-06-2020


[1] Samayam Tamil, டிக்டாக் அம்முக்குட்டியால் வீதிக்கு வந்த மதுரை வாலிபர்… ‘மேகலை அம்மா மேகலை‘…, Divakar M ; Updated: 09 Jun 2020, 05:59:00 PM

[2] https://tamil.samayam.com/latest-news/crime/tirupur-girl-cheated-a-techie-by-showing-fake-photos-in-tiktok-in-madurai/articleshow/76284079.cms

[3] பாலிமர் செய்தி, காதல் அடிமைகளின் பாக்கெட்டை பதம் பார்த்த டிக்டாக் அழகி! திருப்பூரில் கைது, ஜூன்.9, 2020. 02.47.00

[4]https://www.polimernews.com/dnews/111754/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BF-..!%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81

[5] நியூஸ்.டிஎம், டிக்டாக் மூலம் இளைஞரிடம் மோசடி.. போலி ஐடியில் வலம்வந்த இளம்பெண்.. !, By Muthu NewsTM | Wed, 10 Jun 2020.

[6] https://newstm.in/tamilnadu/techtalk-fraud-on-young-man-with-fake-id/c77058-w2931-cid693882-s11189.htm

[7] தினமலர், மதுரை இளைஞர் உட்பட பல்வேறு நபர்களிடம்டிக்டாக்மூலம் பணம் மோசடி செய்தபெண்கைது.!!!, பதிவு செய்த நாள் : 09 ஜூன் 2020 17:03

[8] http://www.dinamalarnellai.com/web/districtnews/30143

[9] தமிழ்.இந்து, இளைஞர்களிடம் பண மோசடி: திருப்பூர் டிக்டாக் பெண் மதுரையில் கைது, என்.சன்னாசி, Published : 09 Jun 2020 15:28 pm; Updated : 09 Jun 2020 15:28 pm.

[10] https://www.hindutamil.in/news/crime/558602-tirupur-tiktok-lady-arrested.html

[11] மாலைமலர், டிக்டாக்கில் பழகி ரூ.1 லட்சத்தை இழந்த வாலிபர்: திருப்பூர் பெண் கைது, பதிவு: ஜூன் 09, 2020 13:59 IST

[12] https://www.maalaimalar.com/news/district/2020/06/09135929/1596693/Tirupur-Woman-Arrested-Rs-1-lakh-loss-for-TikTok-Cheating.vpf

சின்மயியை தரக்குறைவாக மெத்தப் படித்த இளைஞர்கள் விமர்சிக்கும் போக்கு, பின்னணி மற்றும் மனப்பாங்கு என்ன?

ஜூன்2, 2020

சின்மயியை தரக்குறைவாக மெத்தப் படித்த இளைஞர்கள் விமர்சிக்கும் போக்கு, பின்னணி மற்றும் மனப்பாங்கு என்ன?

Chinmayi trolled as prostitute-2

சின்மயியை தரக்குறைவாக விமர்சிக்கும் போக்கு, பின்னணி மற்றும் மனப்பாங்கு என்ன?: பாரத ஊடகங்களில் குறிப்பிட்ட சின்னம், அடையாளம், தனிநபர், மதம், மொழி, என்று தேர்ந்தெடுத்து, குறிவைத்து, திட்டத்துடன் தாக்கும் போக்கு வெளிப்படையாகிறது. அதிலும், இந்து மதம், இந்து நம்பிக்கைகள், பிராமணர், பிராமண ஜாதி என்று வரும் போது, அத்தகைய தாகுதல்கள் பன்முனை தாக்குதல்களாகவே இருக்கின்றன. பிரதான ஊடகங்கள் கண்டு கொண்டது போல தெரியாவிட்டாலும், இணைதள ஊடகங்கள், ஒரே செய்தியை அப்படியே, வேறு-வேறு தளங்களில் வெளியிட்டுள்ளதை காணல்லம். தலைப்புகள் இவ்வாறு உள்ளன:

 1. சினிமா.பேட்டை.காம், என்னை எப்போதுமே விப***ரின்னு தான் சொல்றாங்க.. வருத்தத்தில் சின்மயி, By சௌந்தர், Published on June 1, 202
 2. தமிழ்.பிளிமி.பீட், என்னை விபச்சாரி என்று அழைக்கிறார்கள்.. போட்டோவை போட்டு டாக்டரின் முகத்திரையை கிழித்த பிரபல பாடகி!, By Bahanya| Updated: Monday, June 1, 2020, 11:57 [IST].
 3. தமிழ்.வெப்.துனியா, இந்த 4 பேரு என்னை வி**** சொல்றாங்க…. சந்தி சிரிக்கும் சின்மயி விவகாரம்!, Papiksha Joseph| Last Updated: திங்கள், 1 ஜூன் 2020 (18:04 IST).
 4. அப்.டேட்.நியூஸ், என்னை இவர்கள் வி* என்று அழைக்கிறார்கள்” – பரபரப்பை உண்டாக்கிய சின்மயி !, 1 June 2020, 2:59 pm.
 5. சினி.போர்டர்ஸ், எனக்கு விபச்சாரி பட்டம் கட்டுறாங்கவேதனையில் சின்மயி, By Cinereporters, CTN Mon, 1 Jun 2020..

இந்த தலைப்புகளிலிருந்தே, அவை, சின்மயியை ஆதரிக்கின்றவா அல்லது எதிர்க்கின்றனவா என்று தெரிஎது கொள்ளலாம்.

Chinmayi trolled as prostitute-3

வைரமுத்து மீது பாலியல் புகார், சின்மயி மீது தாக்குதல் அதிகரிப்பு: நடிகை சின்மயி இணையதளங்களில் எப்போதுமே சர்ச்சையான கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். அதுமட்டுமல்லாமல் ரசிகர்களும் அவரை எப்போதுமே வம்புக்கிழுத்து கொண்டுதான் இருக்கிறார்கள். கீழ்த்தரமான வார்த்தைகளை பயன்படுத்தி சின்மயியை திட்டுவதை பொழுதுபோக்காக நினைத்துக் கொண்டிருக்கும் ரசிகர்களை அவ்வப்போது பொது மக்களுக்கு அடையாளம் காட்டி வருகிறார். இருந்தாலும் சின்மயி என்ன சொன்னாலும் அதை மக்கள் கண்டு கொள்வதாக இல்லை. அதற்கு காரணம் பாடலாசிரியர் வைரமுத்து தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக இவர் கூறியது தான். வைரமுத்து தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி கடந்த 2018 ஆண்டு மீடூவில் புகார் கூறினார். சின்மயின் புகார் தமிழ் திரைத்துறையில் பெரும் பரபரப்பை கிளப்பியது. சின்மயின் இந்த புகாருக்கு எதிர்ப்பும் ஆதரவும் ஒருசேர எழுந்தது. தொடர்ந்து தனது சமூக வலைதளபக்கத்தில் வைரமுத்துவை விளாசி வருகிறார் சின்மயி. வைரமுத்துவுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதையும் கடுமையாக விமர்சித்தார். மேலும் பாலச்சந்தர் சிலை திறப்பு விழாவுக்கு நடிகர் கமல்ஹாசன் வைரமுத்துவை அழைத்ததை கூட கடுமையாக விமர்சித்தார். ஆனால் டிவிட்டரில் சின்மயிக்கு ஆதரவாக சிலர் பேசினாலும் பெரும்பாலனோர் வைரமுத்துவுக்கு ஆதரவாகவே பேசி வருகின்றனர்.

Chinmayi - vairamuthu issue

சின்மயி தமிழ் மட்டுமின்றி மற்ற இந்தி, தெலுங்கு, மலையாள சினிமாத்துறையில் பாலியல் தொல்லைகளை சந்தித்து வருபவர்களுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். இதனால் சின்மயியை கடுமையான வார்த்தைகளால் விமர்சித்து வருவது தொடர் கதையாகி வருகிறது. சமூக வலைதளங்களில் குறிப்பாக அவரது சாதியை வைத்தும் இழிவான சொற்களாலும் அவரை விமர்சித்து வருகின்றனர் நெட்டிசன்கள். அந்த பிரச்சனையிலிருந்து எந்த ஒரு பாடல் வாய்ப்புகள் அவரைத் தேடி வரவில்லை. இதனால் சமூக வலைதளங்களில் அரசியல் சார்ந்த கருத்துக்களையும், பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு அதிரடி கருத்துக்களை கொடுத்து வருகிறார்.

Chinmayi - vairamuthu -press meet

சின்மயியை, விபச்சாரி என்று விமர்சிக்கும் படித்த வாலிபர்கள்: இந்நிலையில் சின்மயியை செல்ல பேர் வைத்து கூப்பிடுவதை போல ரசிகர்கள் அவரை விபச்சாரி என்று அழைக்கிறார்களாம்[1]. அப்படி யார் யார் தன்னை விபச்சாரி என்று அழைக்கிறார்கள் என்பதை புகைப்படத்துடன் வெளியிட்டு உள்ளார்[2]. வழக்கம்போல உனக்கு வேற வேலையே இல்லையா என்பதை போல ரசிகர்கள் கண்டும் காணாததுமாக இருக்கின்றனர். இதனால் பெரிதும் வருத்தத்தில் உள்ளாராம் சின்மயி. இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில் கருத்து வேறுபாட்டின் ஒரு வடிவமாக துஷ்பிரயோகம் செய்வது என்பது ‘படிக்காதவர்கள்’ செய்யும் ஒன்று என்று பலர் நம்புகிறார்கள்; இந்த ‘படிக்காத’ கருத்து நம்மில் பலரிடமிருந்து வந்திருக்கிறதா என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது, ஏனென்றால் நாம் சலுகை பெற்றவர்கள்; கல்வி ஒருவரின் நடத்தையை முற்றிலும் மாற்றுவது போல என பதிவிட்டுள்ளார். இதேபோல் மற்றொரு டிவிட்டில், நான் ஒரு விபச்சாரி என்று அழைக்கப்படுவது பழக்கமாகிவிட்டது; சமூக ஊடக தொடர்புகள் மற்றும் தனிப்பட்ட முறையில் என்னை ஒரு சேரி என்று அழைத்தவர்கள் ஆண்கள். பல இழிவான கருத்துகளும் ஆண்களிடமிருந்து வந்தவை[3].

Youth dubbing Chinmayi as prostitute June 2020

மெத்தப் படித்த இளைஞர்கள் அவ்வாறான கேவலமான பதிவுகள் செய்திருப்பது திகைக்க வைக்கிறது: ‘எல்லா ஆண்களும் குப்பை’ அல்லது ‘ஆண்கள் குப்பை’ என்று நான் ஒருபோதும் சொல்லவில்லை. ” என பதிவிட்டுள்ளார்[4]. மேலும் தன்னை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டியதையும் தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் சின்மயி[5]. தெலுங்கு படிக்க தெரிந்தால் உங்களுக்கு புரியும் என்று குறிப்பிட்டு தன்னை திட்டியவர்களின் போட்டோக்களோடு ஸ்க்ரீன் ஷாட் எடுத்து ஷேர் செய்துள்ளார்[6]. அவர்களில் ஒருவர் விஸ்வபாரதி மருத்துவக் கல்லூரியில் மருத்துவர்[7]; மற்ற அனைவரும் பட்டதாரிகள் அல்லது பட்டதாரி மாணவர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்[8].  மேலும் அவர்கள் அனைவரும் நான் துஷ்பிரயோகம் செய்ய தகுதியானவர் என்று நம்புகிறார்கள்[9], அவர்கள் சொல்வது சரிதான் என்றும் பதிவிட்டுள்ளார்[10]. ஆக இவ்வாறு மெத்தப் படித்த இளைஞர்கள் அவ்வாறான கேவலமான பதிவுகள் செய்திருப்பது திகைக்க வைக்கிறது.

Chinmayi - called as prostitute in twitters

ஆங்கில நாளிதழில் வந்ததை மொழிபெயர்த்து, ஒரே செய்தியை தமிழ் ஊடகங்கள் செய்தி போட்டுள்ளன: ஆங்கில நாளிதழில் வந்ததை மொழிபெயர்த்து, ஒரே செய்தியை, ஏதோ PTI செய்தி போல, பல இணைதளங்கள் தலைப்பிட்டு செய்தியாக வெளியிட்டிருப்பதை கவனிக்கலாம். “டைம்ஸ் ஆப் இந்தியா”வில் இந்த விவரம் வந்துள்ளது, இதை வைத்துக் கொண்டு, மொழிபெயர்த்து, தமிழ் ஊடகங்கள் செய்தி போட்டுள்ளன.

Singer Chinmayi who often calls out misogynistic, regressive and abusive posts from various Twitter accounts, is at it again. She openly put out some of the abusive comments she received from different people on her social media accounts. One among such comments was made by a doctor and others were graduate students[11]. She opined that the reality is different from the general assumption that it is always the uneducated who indulge in abusive behaviour[12]. She tweeted, “Many believe that abuse as a form of disagreement is something only the ‘uneducated’ do; I wonder if this ‘uneducated’ comment comes from many of us because we are privileged; as if education completely changes one’s behaviour.” Chinmayi added, “I am used to being called a prostitute; based on social media interactions and the abuse that I personally get, those that have called me a slut have been men. Casteist slut shaming comments have also been from men. I have also never said ‘All Men are trash’ or ‘Men are Trash’.”

Chinmayi - called as prostitute in twitters-8

தாக்கப் படுவது என்னபெண்மையா, தனிப்பட்ட நடிகையா, அல்லது நடிகையின் ஜாதியா, மதமா எது?: உண்மையிலேயே பெண்மையை, பெண்களை மதிக்கும் இளைஞர்கள், நிருபர்கள், ஊடகங்கள் என்றால், தலைப்புகள் அவ்வாறு இருக்காது. இப்பொழுது, தேவையில்லாத விவகாரங்கள் உச்சநீதி மன்ற அளவில் அலசப் படுகின்றன. சினிமாக் காரர்களைப் பற்றி சொல்லவே வேண்டாம். அதிலும், சமீபத்தில் அரசியலை விபாரமாகக் கொண்டு, தங்கள் தொழிலுக்கு விளம்பரம் மற்றும் வியாபார விருத்தி செய்யும் யுக்திகள் அதிகமாகவே உள்ளன. ஏனெனில், அவர்களுக்கு ஆள்பலம், பணபலம் முதலியவை உள்ளன. அரசியல், மேலும் அவர்களது சட்டமீறல்களிலிருந்து பாதுகாப்பு கொடுக்கும். இங்கு, ஜாதிய கோணத்தில் தாக்குதல் இருக்கக் கூடுமா என்று அலசினால், அத்த்கைய பதிவுகள் காணப்படுகின்றன. முன்பு, காயத்ரி தாக்கப் பட்டதும் கவனிக்கலாம். எஸ்.வி.சேகர் தாக்கப் பட்டாலும், சமாளித்துக் கொள்வார், ஏனெனில், அவருக்கு அரசியல் பின்புலம் உள்ளது. ஆக திறமை மட்டும் இருந்தால், பாதுகாப்பும் கிடைக்காது, கெட்ட பெயர் உண்டாக்க தயாராக இருக்கும் கூட்டத்தினர், எல்லோரும் சேர்ந்து தான் தாக்குவர். யாரும் துணைக்கு வர மாட்டார்கள். ஆகவே, பிராமண எதிர்ப்பு பார்ப்பன எதிர்ப்பில் தோன்றி, ஜாதி துவேசத்தில் வளர்ந்து, ஆண்-பெண் பார்க்காமல், தூஷணங்கள் வளர்கின்றன.

© வேதபிரகாஷ்

02-06-2020

Chinmayi - called as prostitute in twitters-9

[1] சினிமா.பேட்டை.காம், என்னை எப்போதுமே விப***ரின்னு தான் சொல்றாங்க.. வருத்தத்தில் சின்மயி, By சௌந்தர், Published on June 1, 2020.

[2] https://www.cinemapettai.com/chinmayi-harassment-news/

[3] தமிழ்.பிளிமி.பீட், என்னை விபச்சாரி என்று அழைக்கிறார்கள்.. போட்டோவை போட்டு டாக்டரின் முகத்திரையை கிழித்த பிரபல பாடகி!, By Bahanya| Updated: Monday, June 1, 2020, 11:57 [IST].

[4] https://tamil.filmibeat.com/news/i-am-used-to-being-called-a-prostitute-chinmayi-071457.html

[5] தமிழ்.வெப்.துனியா, இந்த 4 பேரு என்னை வி**** சொல்றாங்க…. சந்தி சிரிக்கும் சின்மயி விவகாரம்!, Papiksha Joseph| Last Updated: திங்கள், 1 ஜூன் 2020 (18:04 IST)

[6] https://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/chinmayi-shares-screenshot-120060100061_1.html

[7] சினி.போர்டர்ஸ், எனக்கு விபச்சாரி பட்டம் கட்டுறாங்கவேதனையில் சின்மயி, By Cinereporters, CTN Mon, 1 Jun 2020.

[8] https://cinereporters.com/latest-news/i-am-a-prostitute-i-have-a-laughing-matter/c76339-w2906-cid596150-s11039.htm

[9] அப்.டேட்.நியூஸ், என்னை இவர்கள் வி* என்று அழைக்கிறார்கள்” – பரபரப்பை உண்டாக்கிய சின்மயி !, 1 June 2020, 2:59 pm

[10] https://www.updatenews360.com/cinema-tv/singer-chinmayi-twitter-010620/

[11] Times of India, ‘It is not the ‘uneducated’ who often abuse as a form of disagreement’, By – Created: May 31, 2020, 15:58 IST

[12] https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/it-is-not-the-uneducated-who-often-abuse-as-a-form-of-disagreement/articleshow/76119350.cms