Archive for செப்ரெம்பர், 2009

ஓரினச் சேர்க்கையும், இந்தியாவும், அரசியலும்!

செப்ரெம்பர்18, 2009

இந்திய அரசியல்வாதிகளின் தந்திரமே அலாதிதான்.

விலைவாசி உயர்வு – அரிசி ரூ.32/-, எண்ணை ரூ.100/-, சர்க்கரை ரூ.34/-, பால் – ரூ.24/-, காய்கறிகள் இரண்டு-மூன்று மடங்களில் விற்கின்றன.

ஆனால், யாருக்கும் கவலை இல்லை!

விமானபயணச்சீட்டின் விலை குறைந்தது அல்லது குறைக்க அரசு மான்யம் அளிப்பது என்பது பற்றி பெருமளவில் பேச்சு!

ஓரினச் சேர்க்கை குறித்து மத்திய அமைச்சரவை முடிவு ஏதும் எடுக்கவில்லை. மாறாக, இவ்விஷயத்தில் சுப்ரீம் கோர்ட் எடுக்கும் முடிவைப் பொறுத்து மத்திய அரசு முடிவெடுக்கும்.பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இம் முடிவு எடுக்கப் பட்டது.

இதுவே எத்தகைய போலித்தனம் என்பதனைப் பார்க்கவேண்டும்.

இமாதிரி, ஏகப்பட்ட உயர்நீத்மன்றதீர்ப்புகள் கிடப்பில் போடப்பட்டுக் கிடக்கின்றன.

இது குறித்து மத்திய அமைச்சர் அம்பிகா சோனி கூறியதாவது:ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவாக டில்லி ஐகோர்ட் அளித்த ஆதரவு குறித்து சுப்ரீம் கோர்ட் முடிவுக்காக வழக்கு உள்ளது.

ஓரினச் சேர்க்கை வரன்முறை மீறியதல்ல; அதற்கு அங்கீகாரம் தரலாம் என்ற இப் பிரச்னை குறித்து மூன்று அமைச்சர்கள் அடங்கிய குழு, மத்திய அரசுக்கு அறிக்கை தந்திருக்கிறது. அந்த அடிப்படையில், மத்திய அரசு இந்த வழக் கில் சுப்ரீம் கோர்ட்டில் தன் நிலையை தெளிவுபடுத்தும்.அரசு நிலைப்பாட்டை சுப்ரீம் கோர்ட்டில் கூற, அட்டர்னி ஜெனரல் வாகன்வதி விளக்க கேட்டுக் கொள்ளப் பட்டிருக்கிறார்.இவ்வாறு அம்பிகா சோனி கூறினார்.சுப்ரீம் கோர்ட் எடுக்கும் முடிவைப் பொறுத்து, அரசு தன் நிலையை விளக்க வசதியாக இருக் கும் என்று மத்திய அரசு கருதுவதாக அமைச்சர் ஒருவர் கூறினார். ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவு தெரிவிப்பதில் அதிக எதிர்ப்புகள் இருப்பதால், இம்முடிவை அரசு எடுத்ததாகத் தெரிகிறது.

நாகரிகமும், கட்டுப்பாடும், பெண்களும்

செப்ரெம்பர்18, 2009

கடந்த ஆண்டு, இளம்பெண்கள் மங்களூர், இந்தியாவில் ஒரு “பப்” – மது அருந்து கூடத்திற்கு சென்றபோது, ஸ்ரீராம சேனை என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் அதட்டிக் கேட்டனர். “எங்களுடைய பணம், நாங்கள் வாங்குகிறோம், குடிக்கிறோம். நீங்கள் யார் எங்களைக் கேட்பதற்கு?” என்று கேட்டபோது, அடித்தனர். அவர்களை அங்கிருந்து விரட்டி அடித்தனர்.

உடனே, எல்லொரும் ராம்சேனையை எதிர்த்து, குறிப்பாக இந்துக்கள் எல்லாம் ஏதோ “தாலிபான்களை”ப் போன்று சித்தரித்துக் காட்டப் பட்டனர். டிவி-செனல்கள் அப்பாட்டையே பல நாட்கள் பாடின.

ரேணுகா சௌத்ரி, என்ற அம்மையார் (மத்திய அமைச்சர்) இளம்பெண்கள் அவ்வாறு குடிப்பதற்கு சென்றதை ஆதரித்ததுடன், “பப் பரோ அந்தோலன்” ஆரம்பிக்கவும் ஆணையிட்டார். அதாவது இளம்பெண்கள் அத்தகைய மதுபான விடுதிகளை நிரப்பி போராட்டம் செய்ய விழைத்தார்.

பல பெண்கள் “பிங்க்” நிற ஜெட்டிகள் / உள்ளாடைகள் வாங்கி ராம்சேனை தலைவருக்கு குரியர் மூலம் அனுப்பிவைத்தனர்.

அந்நிலையில், கீழ்காணும் இன்றைய தினமலர் செய்தி, வியப்பாக இருந்தது:

பீர் குடித்த பெண்ணுக்கு பிரம்படி தண்டனையை நிறைவேற்ற தீவிரம்
http://www.dinamalar.com/new/world_detail.asp?news_id=3804

செப்டம்பர் 18,2009,00:00 IST

கார்த்திகா சாரி தேவி சுகர்னோ

கோலாலம்பூர்: “ஓட்டலில் பீர் குடித்த பெண் ணுக்கு விதிக்கப்பட்ட பிரம்படி தண்டனையை, விரைவில் நிறைவேற்ற வேண்டும்’ என, மலேசியாவில் வசிக்கும் பெரும்பான்மை மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மலேசியாவைச் சேர்ந்தவர் கார்த்திகா சாரி தேவி சுகர்னோ என்ற மலேசிய பெண். ஓட்டல் ஒன்றில் பீர் குடித்ததாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. மலேசிய கோர்ட்டில் நடந்த விசாரணையின் முடிவில், பீர் குடித்ததற்காக இவருக்கு ஆறு பிரம்படிகள் கொடுக்கும்படி தீர்ப்பு வழங்கப்பட்டது.மலேசியாவில் முதல் முறையாக பெண் ஒருவருக்கு பிரம்படி தண்டனை வழங்கும்படி தீர்ப்பு அளிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சர்வதேச மனித உரிமை அமைப்புகள் இதற்கு கண்டனம் தெரிவித்தன. ரம்ஜான் புனித மாதம் துவங்கியதை ஒட்டி, கார்த்திகாவுக்கு தண்டனை வழங்கப்படுவது ஒத்தி வைக்கப்பட்டது.இந்த வழக்கு தற்போது மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இன்னும் சில தினங்களில் ரம்ஜான் மாதம் முடிவுக்கு வரவுள்ளதை அடுத்து, கார்த்திகாவுக்கு பிரம்படி வழங்க வேண்டும் என, மலேசியாவில் வசிக்கும் பழமைவாத கொள்கை யை பின்பற்றுவோர் வலியுறுத்தி வருகின்றனர்.

குறிப்பாக, கெலந்தன் மாகாணத்தில் வசிக்கும் பெரும்பாலானோர் இதை வரவேற்றுள்ளனர். அப்துல் ஹமீத் என்பவர் கூறுகையில், “கார்த்திகாவுக்கு வழங்கப்பட்ட தண்டனை மிக கடுமையானது அல்ல. பாடம் கற்பிக்க வேண்டும் என்ற காரணத்துக்காகவே இந்த தண்டனை விதிக்கப்பட் டுள்ளது. ரம்ஜான் மாதம் முடிந்ததும், அவருக்கான தண்டனை நிறைவேற்ற வேண்டும்’ என்றார்.

வணக்கம் தமிழா!

செப்ரெம்பர்18, 2009

Welcome to WordPress.com. This is your first post. Edit or delete it and start blogging!