Archive for ஒக்ரோபர், 2009

குழந்தை விபசாரம்: தமிழக நடிகைகள் என்ன செய்வர்?

ஒக்ரோபர்28, 2009
இங்கு அல்ல அமெரிக்காவில்.., கொடி கட்டிப்பறக்குது குழந்தை விபசாரம் : 690 பேர் கைது ; 52 குழந்தைகள் மீட்பு
அக்டோபர் 27,2009,11:41  IST

http://www.dinamalar.com/topnewsdetail.asp?News_id=1542

இந்தியாவில் குழந்தை விபச்சாரம் உள்ளது – கோவா, மும்பை, ஒரிஸ்ஸா, ஆந்திரா, புதுச்சேரி, கன்யாகுமரி முதலிய இடங்களில் அதிகமாக இருக்கின்றன. இதில் ஈடுபடுவது அயல்நாட்டவர்தாம். அனாதை ஆஸ்ரமங்கள் (NGOக்கள்)அவர்களுக்கு விநியோகம் செய்கின்றன. சிலர் கைது செய்யப் பட்டு உச்சநீதிமன்றம் வரை சென்றாலும், தன்னாட்டு அதிகாரம் வரவழைத்துத் தப்பித்து விடுகின்றன. மேலும் விவரங்களுக்கு:http://www.pucl.org/from-archives/Child/prostitution.htm* இதோ, இன்று (08-11-2009) நெதர்லாந்த்தைச் சேர்ந்த வில்லியம்ஸ் என்பவர் குழந்தைகளின் நிர்வணப் படங்களை இணைதளத்தில் போட்டதாக கைது செய்யப் பட்டுள்ளார்.

* வேடிக்கை என்னவென்றால், இவர் மகாபலிபுரத்தில் பூஞ்சேரி என்ற “லிட்டில் ஹோம்” என்ற பெயரில் ஒரு “அனாதை இல்லத்தை” நடத்தி குழந்தைகளிடம் பாலியல் வன்முரையில் ஈடுபட்டார்.

* 30 வருடங்களாக “சுற்றுலா பயணி” என்ற விசாவில் தங்கியிருந்துள்ளார்!

* 2002ல் குழந்தை “பலாத்காரம்”, பாஸ்போர்ட் சட்ட மீறல் என்று கைது செய்யப் பட்டுள்ளார்!!

* பிறகு எப்படி அவர் வெலியே வந்தார், மறுபடி-மறுபடி அத்தகைய குற்றங்களையே செய்து வருகின்றார் என்பதெல்லாம் ஏசுநாதருக்குத் தான் தெரியும் போல உள்ளது!!!

Netherlands national held for uploading child porn pictures Special Correspondent

http://www.thehindu.com/2009/11/08/stories/2009110854840400.htm


Bail plea moved

Wilhelmus Weijdeveld, who has been booked under Section 67 (b) of the IT Act, 2008 (digital portrayal of children in obscene manner ), moved the XI metropolitan magistrate court, Saidapet, for bail on Wednesday. The court posted the application for November 16. We opposed the bail application saying that the accused, if let out, could continue with the offences, M Sudhakar, assistant commissioner, cyber cell, said.

W. Williams CHENNAI: Officials of the Cyber Crime Cell apprehended a Netherlands national here on Saturday on charges of uploading pornographic pictures of children on the Internet.

Acting on information passed on by the Interpol, investigators raided the premises of the suspect at Choolaimedu and arrested him late on Friday. Pornographic CDs containing obscene clips and pictures of children/adults and electronic gadgets used to upload them on a site “ www.rapidshare.com” were seized, the police said.

Top world news stories and headlines detail

வாஷிங்டன்: அமெரிக்காவில் விபசாரத்தில் ஈடுபடுட்ட 52 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர் . விபசாரத்தில் ஈடுபட்டவர்கள் மற்றும் இதற்கு காரணமான புரோக்கர்கள் 60 பேர் உள்பட 690 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் சமீப காலமாக இந்த பிரச்சனை சற்று கொடி கட்டி பறக்க துவங்கியதுடன் அமெரிக்க போலீசாருக்கு பெரும் தலைவலியையும் ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் குழந்தைகளை விபசாரத்தில் ஈடுபடுத்தும் முயற்சி , கெடு செயல் அங்குள்ள கலாச்சாரத்தை சீரழிப்பதோடு மட்டுமல்லாமல் அவ்வப்போது கூடுதல் குற்றச்செயல்களையும் அதிகரித்து வருகிறது. இதனை ஓடுக்கவும், தடுக்கவும் அமெரிக்க உளவு படை போலீசார் ( எப். பி. ஐ., ) கடும் நடவடிக்கைளை எடுத்து வருகின்றனர். இதனை தடுக்க கடந்த 3 நாட்களாக அமெரிக்காவில் நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் போலீசார் கடும் சோதனை மேற்கொண்டனர். இதில் பல பகுதிகளில் விபசார தொழில் ஈடுபடுத்தப்பட்ட குழந்தைகள் 52 பேரை போலீசார் மீட்டனர். உடந்தையாக இருந்த 60 புரோக்கர்கள் சிக்கினர். மேலும் மொத்தத்தில் இது தொடர்பாக நாடு முழுவதும் நடந்த வேட்டையில் 690 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புலனாய்வு அதிகாரி பேட்டி : இது குறித்து அமெரிக்க எப்.பி. ஐ., (குற்றப்புலனாய்வு ) துறை உதவி இயக்குனர் கெவின் பெர்க்கின்ஸ் கூறியிருப்பதாவது: அமெரிக்காவில் தொடர்ந்து நடந்து வரும் இந்த குழந்தை விபசாரம் மூலம் குழந்தைகளுக்கு எதிரான குற்றம் அதிகரிக்க ஏதுவாக அமைந்து விட்டது. இக்குழந்தைகளை மீட்டு பாதுகாப்பு வழங்குவதை விட வேறு ஏதும் முக்கிய பணியாக இருக்க முடியாது. இதன் காரணமாக நாடு முழுவதும் எப்.பி.ஐ., மற்றும் லோக்கல் போலீசார் மூலம் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. இதன்படி நாட்டில் 36 நகரங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது. கடும் நடவடிக்கை காரணமாக கடந்த காலங்களை விட இந்த சம்பவம் குறைக்கப்பட்டு வருவதாகவும் கெவின் தெரிவித்தார்.

மேலும் அமெரிக்காவில் உள்ள தேசிய குழந்தைகள் மீட்பு அமைப்பினர் மூலமாகவும் இது வரை 900 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இது போன்ற செயலுக்கு காரணமானவர்கள் 500 பேருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

வேதனை தரும் விஷயம்: நம் நாட்டில் வறுமை காரணமாக தொழிற்சாலைகளில் தான் குழந்தை தொழிலாளர் மீட்கப்படுவது வழக்கம். ஆனால் அமெரிக்காவில் விபசாரத்தில் ஈடுபடும் குழந்தைகள் என்பது மனதிற்கு வேதனை தரும் விஷயம்.

‘சின்ன வீடு’களுக்கும் ஜீவனாம்சம் தர சட்டம் வருமா? தேசிய மகளிர் கமிஷன் பரிந்துரை!

ஒக்ரோபர்26, 2009
‘சின்ன வீடு’களுக்கும் ஜீவனாம்சம் தர சட்டம் வருமா? தேசிய மகளிர் கமிஷன் பரிந்துரை
அக்டோபர் 26,2009,00:00  IST

http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=5414

தவறு செய்வதைப் பற்றிக் கவலைப் படாமல், தவற்றிற்கு பரிகாரம் தேடும் முறையில், இவ்வாறு மகளிர் கமிஷன் போன்ற நிறுவனங்கள் செயல் பட்டால் ஆண்கள் திருந்துவார்களா?

Front page news and headlines today

புதுடில்லி : சட்டப்படி திருமணம் செய்து குடும்பம் நடத்திய மனைவிக்கு மட்டுமல்ல, பிரச்னை என்று வந்தால், “கள்ளத்தொடர்பு’ கொண்டிருந்த இரண்டாவது, மூன்றாவது மனைவிக்கும், அவர்கள் மூலம் பிறந்த குழந்தைகளுக்கும் கூட ஜீவனாம்சம் தர வேண்டும். இதுதொடர்பாக சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும்.- தேசிய மகளிர் கமிஷன், இப்படி ஒரு அதிரடி பரிந்துரையை செய்துள்ளது. ஜீவனாம்ச விஷயத்தில் இது புதிய சர்ச்சையை கிளப்பும் என்று தெரிகிறது.

கணவன் – மனைவி என்ற தம்பதிக்கு உரிய சட்டப்பூர்வ விளக்கம், அரசின் பல சட்டத்திருத்தங்களில் வகை செய்யப்பட்டுள்ளது. பிரச்னை ஏற்படும் போது, தம்பதிகளில் பிரிவு ஏற்பட்டால், வாழ்வாதாரத்துக்குரிய ஜீவனாம்ச தொகை தருவது தொடர்பாகவும் சட்டத்தில் விளக்கம் தரப்பட்டுள்ளது.சட்டப்படி திருமணம் செய்து வாழ்ந்த மனைவி தொடர்பாக மட்டும் தான் சட்டத்தில் ஜீவனாம்சம் தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், மனைவியை தவிர, குடும்பத்தலைவர் கள்ளத்தொடர்பு வைத்திருக்கும் பெண் அல்லது பெண்கள், அவர்கள் மூலம் பிறந்த குழந்தைகளுக்கு பிரச்னை வந்தால், அவர்களுக்கு சட்டப்படி எந்த வழியும் கூறப்படவில்லை.சட்டப்படியான மனைவியை தவிர, கள்ளத்தொடர்பில் வந்த பெண் அல்லது பெண்களை குற்றவாளியாகவே சட்டப்படி பார்க்கப்பட்டு வருகிறது.

அவர்களுக்கு ஜீவனாம்ச உரிமை கிடையாது. இந்திய குற்ற நடைமுறை சட்டம் 125 (5)ன் கீழ், சட்டப்பூர்வமில்லா, இரண்டாவது, மூன்றாவது மனைவிகளுக்கு உரிமை இல்லை என்று வரையறுக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக தேசிய மகளிர் கமிஷன் சமீபத்தில் முழுமையாக ஆலோசித்தது. சட்டப்படியில்லாமல், ஒருவருடன் குடும்பம் நடத்தி வந்த பெண், அவர் மூலம் பிறந்த குழந்தைக்கு, அவர்களுக்கு வாழ்வதற்கு பாதுகாப்பு தர வேண்டியது சட்டப்படி கடமையாகிறது. பிரச்னையால் இவர்கள் பாதிக் கப்பட்டால், சம்பந்தப்பட்ட ஆண், கண்டிப்பாக ஜீவனாம்சம் தர வேண்டும் என்று கமிஷன் பரிந்துரை செய்துள்ளது.சட்டப்படி திருமணம் செய்த மனைவிக்கு மட்டுமல்ல, அனாதரவாக விடப்பட்ட தாத்தா, பாட்டிகள், வளர்ப்பு தாய், வளர்ப்பு மகன், மகள்கள் ஆகியோருக்கும் வாழ்வாதாரம் அடிப்படையில் குறிப்பிட்ட தொகையை அளிக்க வேண்டும் என்றும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

“குற்ற நடைமுறை சட்டத்தில்,”சட்டப்பூர்வமில்லாத உறவு…’ என்று கூறப்பட்டுள்ளதையே நீக்க வேண்டும். இப்போதுள்ள சூழ்நிலைக்கு ஏற்ப இதில் திருத்தம் கொண்டு வர வேண்டும். சட்டப்பூர்வ மனைவி மட்டுமின்றி, தொடர் புள்ள மற்ற பெண்கள் விஷயத்திலும் சட்டப்பூர்வ அணுகுமுறையை கொண்டு வர வேண் டும். அவர்கள் நிராதரவாக விடப் படாமல், வாழ வழி செய்ய வேண்டும்’ என்றும் பரிந்துரையில் கூறப்ப ட்டுள்ளது.டில்லியில் உள்ள சில அமைப்புகள், இந்த பரிந்துரையை மறைமுகமாக எதிர்த்து வருகின்றன. “இதை ஏற்றுக்கொண்டால், எங்கள் சம்பளத்தையும் தாண்டி ஜீவனாம்சம் தர வேண்டியிருக்கும்’ என்று ஒரு ஆண்கள் சங்கம் கருத்து தெரிவித்துள்ளது.இருப்பினும், மத்திய அரசு இது தொடர்பாக இன்னும் ஆலோசனை செய்யவில்லை. எனினும், சட்ட அமைச்சகத்தின் கருத்தும் கோரப்பட்டுள்ளது.

சவுதி பெண் பத்திரிகையாளருக்கு 60 கசையடி

ஒக்ரோபர்26, 2009
சவுதி பெண் பத்திரிகையாளருக்கு 60 கசையடி
அக்டோபர் 26,2009,00:00  IST
http://www.dinamalar.com/world_detail.asp?news_id=4050

 

துபாய் : “டிவி’யில் செக்ஸ் பற்றிய நிகழ்ச்சி தயாரித்த பெண் பத்திரிகையாளருக்கு சவுதி அரேபியாவில் 60 கசையடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. லெபனான் நாட்டு “டிவி’ சேனல் கடந்த ஜூலை மாதம் ஒரு நிகழ்ச்சியை ஒளிபரப்பியது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அப்துல் ஜவாத் என்பவர் திருமணத்துக்கு முந்தைய தனது செக்ஸ் வாழ்க்கை பற்றி பெருமையாக பேசினார்.

இந்த நிகழ்ச்சி சவுதி அரேபியாவில் ஒளிபரப்பானது. இதற்காக ஜவாத்துக்கு ஐந்தாண்டு சிறையும், ஆயிரம் கசையடியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியை தயாரித்த பெண் பத்திரிகையாளர் ரோசனா அல் யாமி என்பவருக்கு 60 கசையடி அறிவிக்கப்பட்டுள்ளது. செக்ஸ் பற்றி பகிரங்கமாக “டிவி’ மற்றும் ரேடியோவில் பேசுவது சவுதியில் சட்ட விரோதமாக கருதப்படுகிறது. “போல்டு ரெட் லைன்’ என்ற பெயரில் லெபனான் “டிவி’ யில் இந்த நிகழ்ச்சி தொடர்ந்து ஒளிபரப்பப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில், சவுதியை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு தங்கள் செக்ஸ் வாழ்க்கை பற்றி பெருமையாக பேசியது குற்றமாக கருதப்பட்டு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. “பத்திரிகையாளர் என்ற முறையில் தனது தொழிலை ரோசனா செய்துள்ளார். ஒரு பெண் பத்திரிகையாளருக்கு 60 கசையடி அறிவித்துள்ளதை எதிர்த்து மேல் முறையீடு செய்ய உள்ளோம்’ என, ரோசனாவின் வக்கீல் தெரிவித்துள்ளார்.

பெண் பத்திரிகையாளருக்கு கசையடி தண்டனை ரத்து

 

அக்டோபர் 28,2009,00:00  IST

http://www.dinamalar.com/world_detail.asp?news_id=4068

துபாய் : சவுதி அரேபியாவில், “டிவி’ சேனலில் செக்ஸ் நிகழ்ச்சி தயாரித்த பெண் பத்திரிகையாளருக்கு விதிக்கப்பட்ட கசையடி தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது.

லெபனான் நாட்டு “டிவி’ சேனல், கடந்த ஜூலை மாதம் ஒரு நிகழ்ச்சியை ஒளிபரப்பியது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அப்துல் ஜவாத் என்பவர் திருமணத்துக்கு முந்தைய தனது செக்ஸ் வாழ்க்கை பற்றி பெருமையாக பேசினார். இந்த நிகழ்ச்சி சவுதி அரேபிய தலைநகர் ஜெட்டாவில் தயாரிக்கப்பட்டு ஒளிபரப்பானது. இதற்காக ஜவாத்துக்கு ஐந்தாண்டு சிறையும், ஆயிரம் கசையடியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியை தயாரித்த பெண் பத்திரிகையாளர் ரோசனா அல் யாமி என்பவருக்கு 60 கசையடி அறிவிக்கப்பட்டது. செக்ஸ் பற்றி பகிரங்கமாக “டிவி’ மற்றும் ரேடியோவில் பேசுவது சவுதியில் சட்ட விரோதமாக கருதப்படுகிறது.

“போல்டு ரெட் லைன்’ என்ற பெயரில் லெபனான் “டிவி’ யில் இந்த நிகழ்ச்சி தொடர்ந்து ஒளிபரப்பப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில், சவுதியை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு தங்கள் செக்ஸ் வாழ்க்கை பற்றி பெருமையாக பேசியது குற்றமாக கருதப்பட்டு இந்த தண்டனை வழங்கப்பட்டது. பத்திரிகையாளர் என்ற முறையில், தனது தொழிலை ரோசனா செய்துள்ளார். ஒரு பெண் பத்திரிகையாளருக்கு இது போன்ற கொடுமையான தண்டனை அளிக்கக்கூடாது, என பல்வேறு பத்திரிகைகள் சார்பில் சவுதி அரேபிய அரசிடம் வற்புறுத்தப்பட்டது.இதையடுத்து, இது குறித்து விசாரிக்கும் படி சவுதி மன்னர் அப்துல்லா, தகவல் தொடர்பு அமைச்சகத்துக்கு உத்தரவிட்டார். மன்னரின் உத்தரவை ஏற்று, சவுதி தகவல் தொடர்பு அமைச்சகம் ரோசனா மீதான தண்டனையை ரத்து செய்துள்ளது.

நகைக்காக இளம்பெண் கழுத்தை நெரித்து கொலை

ஒக்ரோபர்26, 2009
நகைக்காக இளம்பெண் கழுத்தை நெரித்து கொலை
அக்டோபர் 26,2009,00:00  IST
http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=13601
தமிழர்கள் எப்படி இவ்வாறு கொலையில் இறங்கி விட்டார்கள்?

பெண்கள் மீது ஏன் இரக்கம் இல்லை?

ஒருவேளை ஊடகங்கள், முக்கியமாக சினிமா பெண்மையை அந்த அளவிற்கு கேவலமாக மதிப்பதால், தமிழர்கள் மாறி விட்டனரா?

தாலியை / தாலிக் கொடியையும் அறுப்பவர்கள் தமிழர்களாக இருக்க முடியுமா?

அத்தகைய கலாச்சாரத்தை யார் சொல்லிக் கொடுத்தது?

திருநெல்வேலி : நெல்லை அருகே, நகைக்காக இளம்பெண் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டார். நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள கோதைசேரியை சேர்ந்தவர் சுப்பையா; ஆடு மேய்க்கும் தொழிலாளி. இவரது மனைவி பாலசரஸ்வதி(25). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் மாலையில் பாலசரஸ்வதி, பெற்றோர் வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டுச்சென்றார். ஆனால், நேற்று காலையில் கோதைசேரி அருகே ஓடைப்பகுதியில் இறந்துகிடந்தார்.

போலீசார் சென்றுபார்த்தபோது அவரது கழுத்தில் காயம் இருந்தது. சேலையால் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளது தெரியவந்தது. அவர் அணிந்திருந்த ஐந்து சவரன் நகையை காணவில்லை. விசாரணையில், அவர் ஒரு ஆட்டோவில் சென்றதை பார்த்ததாக, கடைக்காரர் ஒருவர் தெரிவித்தார். ஏர்வாடி போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

இளம் பெண் எரித்து கொலை
அக்டோபர் 26,2009,00:00  IST

http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=13605

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை – விருதுநகர் ரோட்டில் உள்ள புது கண்மாய் கரையோரம் 25 வயது மதிக்கத்தக்க பெண், எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார். பெண் இறந்து ஒரு வாரத்திற்கு மேல் இருக்கும். அழுகிய நிலையில் உடல் இருந்ததால் அடையாளம் தெரியவில்லை. நகைக்காக கொல்லப்பட்டாரா அல்லது வேறு காரணமா என்று டவுண் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

மொட்டை அடித்து பெண் சித்ரவதை – கணவர், மாமியார் உட்பட 3 பேர் கைது

ஒக்ரோபர்26, 2009
மொட்டை அடித்து பெண் சித்ரவதை – கணவர், மாமியார் உட்பட 3 பேர் கைது
அக்டோபர் 26,2009,00:00  IST

http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=13598

Important incidents and happenings in and around the world

கோவை : கோவையில், குடும்பத் தகராறில் மனைவியை சித்ரவதை செய்து, மொட்டை அடித்து அவமானப்படுத்திய கணவர், உடந்தையாக இருந்த மாமியார் உட்பட மூவர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவான நாத்தனாரை போலீசார் தேடுகின்றனர். கோவை, கோட்டைமேடு, சாமராவ் வீதியில் வசிப்பவர் இப்ராகிம்ஷா(35); ரெடிமேடு ஆடை விற்பனை மையம் வைத்துள்ளார். இவரது மனைவி நதீரா பானு(26). இரண்டு ஆண், ஒரு பெண் குழந்தை உள்ளனர். கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்படுவது வழக்கம்.

சில நாட்களுக்கு முன், இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதில், நதீராபானு கோபித்துக் கொண்டு, உக்கடம் சுப்ரமணியசுவாமி கோவில் வீதியில் வசிக்கும் பெற்றோரிடம் சென்று விட்டார். ஜமாத்தில் நடந்த சமரசத்துக்குப் பின் நதீராபானு, மீண்டும் கணவர் வீட்டுக்கு வந்தார்.

நேற்று முன்தினம் இரவு, இவர்களது குழந்தைகள் மூவரும் சுப்பிரமணியசுவாமி கோவில் வீதியில் உள்ள பாட்டி வீட்டுக்கு சென்றனர். அம்மா எங்கே இரண்டு நாட்களாக வெளியில் வரவில்லை என கேட்டதற்கு, பதிலளித்த குழந்தைகள், அப்பா, சித்தப்பா, அத்தை மற்றும் பாட்டி ஆகியோர் அம்மாவுக்கு மொட்டை அடித்து விட்டனர். அதனால் வெளியில் வரவில்லை என சோகத்துடன் தெரிவித்தனர்.

குழந்தைகள் கூறியதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த நதிராபானுவின் பெற்றோர், உக்கடம் போலீசில் புகார் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் ஸ்ரீராமச்சந்திரன் விசாரித்ததில், “இப்ராகிம்ஷாவின் தங்கை ஆமீனாவின் பேச்சை கேட்டு, நதிராபானுவின், நீளமான தலைமுடியை வெட்டிக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார். இதற்கு நதீரா மறுப்பு தெரிவித்துள்ளார்.

ஆமினா வற்புறுத்தியதைத் தொடர்ந்து, கடந்த வெள்ளிக்கிழமையன்று, வலுக்கட்டாயமாக நதீராபானு மொட்டை அடிக்கப்பட்டார். இதற்கு இப்ராகிம்ஷாவின் தம்பி பைரோஷ், மாமியார் சரீபா(55) ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளது தெரிந்தது.

இதைத் தொடர்ந்து, நதீராபானுவுக்கு வலுக்கட்டாயமாக மொட்டையடித்த, கணவர் இப்ராகிம்ஷா, இவரது தம்பி பைரோஷ், மாமியார் சரீபா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இக்கொடுமைக்கு தூபம் போட்ட நாத்தனார் ஆமினா தலைமறைவாகி விட்டார்.

கைது செய்யப்பட்ட மூவர் மீதும், குடும்பப் பெண்கள் வன்கொடுமை சட்டம், மானபங்கப்படுத்துதல் மற்றும் கொலை மிரட்டல் பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மூவரும் மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு, மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

கணவரும், அவரது குடும்பத்தினரும் சேர்ந்து மனைவியை மொட்டை அடித்து, சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியள்ளது.

வக்கீல் மனைவியை விட்டுவிட்டு 2வது திருமணம் செய்த போலி வக்கீல் கைது

ஒக்ரோபர்25, 2009
வக்கீல் மனைவியை விட்டுவிட்டு 2வது திருமணம் செய்த போலி வக்கீல் கைது
அக்டோபர் 25,2009,00:00  IST
http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=13589
பாதிக்கப் பட்டுள்ளது, ஒரு படித்த பெண், அதுவும் வக்கீல் எனத் தெரிகிறது! பிறகெப்படி அந்த பெண் அந்த அளவிற்கு ஏமாளியாக இருந்திருக்கிறார்?

திருமணத்திற்கு முன்பே அவன் “போலி வக்கீலா, உண்மையான வக்கீலா” என்று அந்த பெண்மணி சோதித்தி இருக்கவேண்டாமோ?

அதற்கு பிறகு கணவன் “போலி வக்கீல்” என்று புகார் கொடுத்தால், இல்லறம் நல்லறம் ஆகுமோ?

இத்தகைய “லியாகத் அலி கான்களை” விட்டு வைக்கக் கூடாது.

Important incidents and happenings in and around the world

// <![CDATA[//
// <![CDATA[//

சென்னை: வக்கீல் மனைவியை விட்டுவிட்டு, உறவுக்காரப் பெண்ணை இரண்டாவது திருமணம் செய்த போலி வக்கீல், பெண்கள் வன்கொடுமை சட்டத்தில் கைது செய்யப்பட்டார். சென்னை, கொத்தவால்சாவடி வரத முத்தையா தெருவைச் சேர்ந்தவர் உஷாமோசஸ் (39); வக்கீல். இவர் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீராமுலுவை (33) திருமணம் செய்து கொண்டார். இதனிடையே ஸ்ரீராமுலு, உஷாமோசசை ஏமாற்றிவிட்டு, திருத்தணியில் உள்ள உறவுக்காரப் பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

இதுபற்றி கேட்டபோது, மேலும் வரதட்சணை வேண்டும் எனவும், பிரச்னை செய்தால் கொலை செய்து விடுவேன் என்றும் ஸ்ரீராமுலு மிரட்டியதாக தெரிகிறது. இதுகுறித்து உஷாமோசஸ், சென்னை மாநகர கமிஷனர் ராஜேந்திரனிடம் புகார் செய்தார். வக்கீல் படிப்பை இன்னும் முடிக்காத நிலையில், தான் ஒரு வக்கீல் என ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதாகவும் புகாரில் தெரிவித்திருந்தார். கமிஷனர் உத்தரவையடுத்து, போலீசார் விசாரணை நடத்தினர். வக்கீல் படிப்பை முடிக்காததும், இரண்டாவது திருமணம் செய்து கொண்டதும் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, பெண்கள் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் ஸ்ரீராமுலுவை போலீசார் கைது செய்து,  கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தமிழக அரசு கல்லூரி மாணவி கற்பழிப்பு : மாணவர் இருவர் கைது

ஒக்ரோபர்24, 2009
அரசு கல்லூரி மாணவி கற்பழிப்பு : மாணவர் இருவர் கைது
அக்டோபர் 24,2009,00:00  IST

http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=13565

கரூர் : கரூர் அருகே அரசு கல்லூரி மாணவி, நான்கு பேர் தன்னை கடத்திச் சென்று, கற்பழித்தாக கூறிய புகாரையடுத்து, மாணவர் இருவரை போலீசார் கைது செய்தனர்; மருத்துவ பரிசோதனைக்காக மாணவி, அனுப்பி வைக்கப்பட்டார். கரூர் மாவட்டம், வடக்கு காந்தி கிராமம் முத்துநகரைச் சேர்ந்த வீரமணி மகள் நிரோஷா(19) (பெயர் மாற்றப்பட்டுள்ளது), கரூர் அரசு கல்லூரியில், தாவரவியல் முதலாண்டு படித்து வருகிறார்.

கடந்த 20ம் தேதி, பகல் 1.30 மணிக்கு, கரூர் அரசு கலைக் கல்லூரி புவியியல் மூன்றாமாண்டு மாணவர்கள் யுவராஜ்(22), ரகுமான்(22), சதீஷ்(22) மற்றும் ஆங்கில இலக்கிய மூன்றாண்டு மாணவன் ம.சதீஷ்(23) ஆகியோர், மாருதி ஆம்னி வேனில், செல்லாண்டிப்பட்டி தென்னந்தோப்பிற்கு கடத்திச் சென்று, யுவராஜ் தன்னை கற்பழித்ததாக, பசுபதி போலீஸ் ஸ்டேஷனில், 21ம் தேதி மாலை புகார் அளித்துள்ளார்.

சம்பவம் நடந்த அன்று மாலை 7.30 மணிக்கு, வீடு திரும்பிய நிரோஷா, அடுத்த நாள் காலை தான், இதுகுறித்து பெற்றோரிடம் கூறியுள்ளார். ஆத்திரமடைந்த அவரின் தந்தை மற்றும் நான்கு பேர், கரூர் கலைக் கல்லூரி சென்று, யுவராஜ் மற்றும் ரகுமானை தாக்கியுள்ளனர்.

கல்லூரி நிர்வாகத்திடமிருந்து வந்த தகவலையடுத்து, போலீஸ் விசாரித்த போது தான், தான் கற்பழிக்கப்பட்டதாக நிரோஷா புகார் அளித்துள்ளார். இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு, சதீஷ் மற்றும் ரகுமானை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், “கரூர் பஸ் ஸ்டாண்டிலிருந்து டூவீலரை ரகுமான் ஓட்ட, யுவராஜ் மற்றும் நிரோஷா அமர்ந்து, செல்லாண்டிப்பட்டி தென்னந்தோப்புக்கு சென்றதாகவும், அப்போது, டூவீலர் உரிமையாளர் சதீஷ் மற்றும் அவர் நண்பர் மற்றொரு சதீஷ் அங்கு வந்ததால், நிரோஷா, பயந்து ஓடிவிட்டார்’ என கூறியுள்ளனர்.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது: மாணவி நிரோஷாவுக்கு, இரண்டு ஆண்டாக வெங்கடேஷ் என்பவருடன் தொடர்பு உள்ளது. அவர், மொபைல்போன் வாங்கித் தந்ததை அறிந்த யுவராஜ், இதுகுறித்து நிரோஷாவின் பெற்றோருக்கு தெரிவிப்பதாக மிரட்டியுள்ளார். கடந்த 19ம் தேதி, நிரோஷாவிடமிருந்து பறித்துக்கொண்ட மொபைலை திரும்பத் தருவதாக கூறி, செல்லாண்டிப்பட்டிக்கு அழைத்துச் சென்றுள்ளார். இவ்வாறு போலீசார் கூறினர்.

இதையடுத்து மாணவி நிரோஷா, கரூர் அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தலைமறைவான யுவராஜ் மற்றும் மற்றொரு சதீஷை போலீசார் தேடி வருகின்றனர்.

‘தொட்டில் குழந்தைகள்’ குளறுபடி

ஒக்ரோபர்24, 2009
‘தொட்டில் குழந்தைகள்’ குளறுபடி : ஆர்.டி.ஐ., தகவலில் முரண்பாடு
அக்டோபர் 24,2009,00:00  IST

http://www.dinamalar.com/General_detail.asp?news_id=18154

சென்னை : தொட்டில் குழந்தைகள் தொடர்பாக, தகவல் பெறும் உரிமைச் சட்டப்படி பெறப்பட்ட தகவல்கள் முன்னுக்குப் பின் முரணாக உள்ளன. இந்த தகவல்களால் இந்த திட்டத்தில் குளறுபடியா, முறைகேடா எனும் சந்தேகம் எழுந்துள்ளது. பெண் சிசுக்கொலைக்கு எதிரான “பிரசாரம்’ எனும் அமைப்பை நடத்தி வரும் மதுரையைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் கடந்தாண்டு, தகவல் பெறும் உரிமைச் சட்டப்படி, மாவட்ட சமூக நல அலுவலருக்கு மனு செய்தது. அரசு நடத்தி வரும் தொட்டில் குழந்தைகள் திட்டம் குறித்து விவரம் கேட்டது.

இதுதொடர்பாக, மாவட்ட சமூகநல அலுவலர் தகவல் தந்துள்ளார். 2001 முதல் 2007ம் ஆண்டு வரையிலான தொட்டில் குழந்தைகள் திட்டம் பற்றிய விவரத்தை அட்டவணையிட்டு தகவல் தரப்பட்டுள்ளது.

அதில், தொட்டில் குழந்தை திட்டத்திற்கு தத்து குழந்தை பெறப்பட்டது, ஆண், பெண் உட்பட 2001- 46, 2002 – 104, 2003 – 81, 2004 -102, 2005 – 48, 2006 – 3, 2007 – 2 குழந்தைகள் எனக் கூறப்பட்டுள்ளது. இதன்படி 2001 முதல் 2007 வரை மதுரை மாவட்டத்தில் 391 குழந்தைகள் பெறப்பட்டுள்ளன.

தத்து குழந்தை வழங்கப்பட்டது குறித்த தகவலில், 2001- 19, 2002- 18, 2003 – 53, 2004 – 55, 2005 – 33, 2006 – 25, 2007 – 3 குழந்தைகள் எனக் கூறப்பட்டுள்ளது. இதே காலகட்டத்தில் 2001 முதல் 2007ம் ஆண்டு வரையில் உடல் நலக்குறைவால் மொத்தம் 82 குழந்தைகள் இறந்துவிட்டதாக கூறப்பட்டுள்ளது. மேலும், திரும்பவும் பெற்றோர் வசம் 14 குழந்தைகள் ஒப்படைக்கப்பட்டு விட்டதாகவும் தகவலில் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், சென்னையைச் சேர்ந்த நாராயணன் என்பவர் சென்னையில் உள்ள சமூக நல இயக்கக சமூக நல கமிஷனரிடம் தகவல் பெறும் உரிமைச் சட்டப்படி, தொட்டில் குழந்தைகள் திட்டம் குறித்து கடந்த மார்ச் மாதம் தகவல் கேட்டிருந்தார். அந்த தகவல் முன்னுக்குப் பின் முரணாக இருக்கிறது.

அதில், “கடந்த 2001ம் ஆண்டு மே மாதம் முதல் 2009 மார்ச் மாதம் வரை மதுரையில் மொத்தம் 177 தொட்டில் குழந்தைகள் பெறப்பட்டுள்ளன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் இறந்து போன குழந்தைகள் ஒன்று கூட இல்லை, “பூஜ்ஜியம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த முன்னுக்குப் பின் முரணான தகவல் குறித்து நாராயணன் கூறியதாவது: மதுரையில் 2001 முதல் 2007ம் ஆண்டு வரையில் 391 குழந்தைகள் பெறப்பட்டுள்ளன; 82 குழந்தைகள் இறந்து போயுள்ளன; பெற்றோர் வசம் 14 குழந்தைகள் திரும்ப பெறப்பட்டு விட்டதாக தகவல் கூறப்பட்டுள்ளது. ஆனால், சமீபத்தில் நான் கேட்ட தகவலில், மதுரையில் 177 குழந்தைகள் மட்டுமே பெறப்பட்டுள்ளதாக தகவல் தந்துள்ளனர்.

தகவல் தருவதில் குளறுபடி நடந்துள்ளதா, முறையான பதிவேட்டைப் பின்பற்றவில்லையா என்ற கேள்வி எழுகிறது. ஏற்கனவே குழந்தைகளை தத்துக் கொடுப்பதில் பல்வேறு முறைகேடுகள் வெளிவந்துள்ள நிலையில், இந்த தகவல்கள் குழப்பத்தையும், ஊழலையும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளன. இதுகுறித்து சமூக நலத்துறை அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும். என்.ஜி.ஓ.,க்களை கண்காணிக்க வேண்டும். இவ்வாறு நாராயணன் தெரிவித்தார்.

18 பெண்களை கற்பழித்து கொலை செய்த ஆசிரியர்!

ஒக்ரோபர்22, 2009

18 பெண்களை கற்பழித்து கொலை செய்த ஆசிரியர்! -`சயனைட்’ கொடுத்து கொன்ற பயங்கரம்!!

http://www.dailythanthi.com/article.asp?NewsID=521827&disdate=10/22/2009

மங்களூர்: திருமணம் செய்து கொள்வதாகக் கூறி 18 பெண்களை கற்பழித்து அவர்களுக்கு சயனைடு மாத்திரை தந்து கொலை செய்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். கர்நாடக மாநிலம் மங்களூரைச் சேர்ந்த அனிதா (22) கடந்த ஜூன் மாதம் காணாமல் போனார். அவரைக் கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

காணாமல் போன அனிதாவின் செல்போனில் இருந்து சென்ற தொலைபேசி அழைப்புகள் குறித்து போலீசார் ஆய்வு செய்தபோது, கர்நாடகத்தில் ஏற்கனவே காணாமல் போயிருந்த சில பெண்களுக்கு அதிலிருந்து அழைப்புகள் சென்றது தெரியவந்தது.

மேலும் அனிதா மற்றும் அந்தப் அந்த பெண்களின் செல்போன்களை ஒரு நபர் தொடர்பு கொண்டிருந்ததும் தெரியவந்தது.  இதை வைத்து மோகன்குமார் என்பவனை போலீசார் மடக்கினர். அவன் தந்த வாக்குமூலம் போலீசாரையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

கடந்த 5 ஆண்டுகளில் 18 பெண்களை கற்பழித்து கொலை செய்துள்ளதாக அவர் தெரிவித்தான். 30 வயதுக்கு மேல் ஆன திருமணம் ஆகாத படிப்பறிவு குறைந்த பெண்களை அணுகி வரதட்சணை இல்லாமல் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றி, மயக்கி, வெளியூர்களுக்கு அழைத்துச் சென்று, ஹோட்டல்களில் தங்க வைத்து இவன் கற்பழித்துள்ளான்.  பின்னர் செக்ஸ் வைத்துக் கொண்டதால், திருமணத்திற்கு முன் கர்ப்பம் ஆகிவிடக்கூடாது என்று கூறி கருத்தடை மாத்திரைகளை தந்துள்ளான். ஆனால், அவன் தந்தது கருத்தடை மாத்திரைகள் அல்ல. அவை சயனைட் மாத்திரைகள். இதனால் அதை உண்ட பெண்கள் அனைவருமே அடுத்த சில நிமிடங்களிலேயே இறந்துள்ளனர்.

மோகன்குமார், 23 ஆண்டுகளாக பல இடங்களில் பள்ளி ஆசிரியராக பணிபுரிந்துள்ளான். முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு இந்த ஏமாற்றல்- கற்பழிப்பு- கொலைகளில் ஈடுபட்டு வந்துள்ளான். மோகன்குமாரிடம் இருந்து 8 சயனைடு பொட்டலங்கள், 4 செல்போன்கள் மற்றும் கொலை செய்யப்பட்ட அனிதா உள்ளிட்ட பெண்களிடம் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ஆட்டோவில் சென்ற நர்ஸ் கற்பழிப்பு வண்டலூர் பூங்கா ஊழியர்கள் இருவர் கைது

ஒக்ரோபர்22, 2009
ஆட்டோவில் சென்ற நர்ஸ் கற்பழிப்பு வண்டலூர் பூங்கா ஊழியர்கள் இருவர் கைது
அக்டோபர் 22,2009,00:00  IST

http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=13518

செங்கல்பட்டு:ஆட்டோவில் சென்ற நர்சை, போலீஸ் எனக் கூறி அழைத்துச் சென்று கற்பழித்த, வண்டலூர் உயிரியல் பூங்கா ஊழியர்கள் இருவரை, போலீசார் கைது செய்தனர்.கும்பகோணத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர்(47);உயிரியல் நிபுணர்; வண்டலூர் உயிரியல் பூங்கா ஊழியர் குடியிருப்பில் தங்கிபணிபுரிந்து வருகிறார்.

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் வெள்ளைச்சாமி(49); உயிரியல் பூங்காவில் டிரைவராகப் பணிபுரிந்து வருகிறார். சென்னையை ச் சேர்ந்தவர் குமார்; இவரது மனைவி அனிதா(32); நர்ஸ் பயிற்சி பெற்றுள்ளார். விருகம்பாக்கம் இளங்கோ நகரில் தனது சகோதரி வீட்டில் தங்கியிருந்தார்.கடந்த 18ம் தேதி குரோம்பேட்டையில் வசிக்கும் மற்றொரு அக்காவின் கணவர் செல்வம் அங்கு வந்தார்.

இரவு, தாம்பரத்தில் உள்ள நண்பர் வீட்டிற்கு ஆட்டோவில் புறப்பட்டார் அனிதா. செல்வம் உடன் சென்றார். அவர் குரோம்பேட்டையில் இறங்கிக் கொண்டார்.ஆட்டோ தாம்பரம் நோக்கிச் சென்றது. சரவணன் என்பவர் ஆட்டோவை ஓட்டிச் சென்றார். அவர், தாம்பரத்தில் ஆட்டோவை நிறுத்தாமல் வண்டலூரை கடந்து ஊரப்பாக்கம் சென்றார். அதிர்ச்சியடைந்த அனிதா, “தாம்பரத்தில் ஏன் நிறுத்தாமல் வந்தாய்’ எனக் கேட்டு தகராறு செய்தார்.

அதன்பின் டிரைவர் மீண்டும் தாம்பரம் நோக்கி ஆட்டோவை ஓட்டினார். இரவு 9.30 மணிக்கு வண்டலூர் உயிரியல் பூங்கா அருகே சென்ற போது உயிரியல் பூங்கா ஊழியர்கள் பாஸ்கர்,வெள்ளைச்சாமி ஆகியோர், ஆட்டோவை வழி மறித்தனர். அவர்கள், தங்களை போலீசார் எனக் கூறினர்.உடனே அனிதா இருவரிடமும் “ஆட்டோவை தாம்பரத்தில் நிறுத்தாமல் இங்கு அழைத்து வந்துவிட்டார்’ எனக் கூறியுள்ளார்.

இருவரும் டிரைவரை திட்டி அனுப்பினர். பின் அனிதாவிடம் நாங்கள் தாம்பரம் அழைத்துச் செல்கிறோம் எனக் கூறி தங்கள் மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டனர். அவர்களும் தாம்பரம் செல்லாமல் வண்டலூர் உயிரியல் பூங்கா சுற்றுச்சுவர் அருகில் உள்ள இடைவெளி வழியாக பூங்கா உள்ளே அழைத்துச் சென்றனர். அங்கு சைக்கிள் நிறுத்தம் அருகே அனிதாவை வெள்ளைச்சாமி பிடித்துக் கொள்ள பாஸ்கர் கற்பழித்ததாகக் கூறப்படுகிறது.

அனிதா உதவி கேட்டு அலறினார். அதிர்ச்சியடைந்த இருவரும் மீண்டும் அனிதாவை மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்று தாம்பரத்தில் விட்டனர். “போலீசில் புகார் தெரிவித்தால் கொலை செய்து விடுவோம். நாங்கள் மீண்டும் கூப்பிடும்போது வர வேண்டும்’ என மிரட்டி அவரது மொபைல் எண்ணை வாங்கிக் கொண்டு ஆட்டோவில் அனுப்பி வைத்தனர்.

அக்கா வீட்டிற்கு சென்ற அனிதா நடந்த கொடூரத்தை யாரிடமும்தெரிவிக்க வில்லை. மறுநாள் பூங்கா ஊழியர்கள் அனிதாவை போனில் அழைத்தனர்.அதிர்ச்சியடைந்த அனிதா, சென்னை புறநகர் போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்தார். அவர், ஓட்டேரி போலீசில் புகார் செய்யும்படி கூறினார். அதன்படி புகார் செய்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து பாஸ்கர், வெள்ளைச்சாமி ஆகியோரை கைது செய்து விசாரிக்கின்றனர். மேலும் ஆட்டோ டிரைவர் சரவணனையும் தேடி வருகின்றனர்.