நடிக-நடிகையர் ஆபாசப் பேச்சுகள்!


நடிக-நடிகையர் தங்களுக்குள் இருக்கும் பிரச்சினையை சரிசெய்து கொள்ளாமல், கலாச்சார சீரழிவை தடுக்காமல் போய்கொண்டிருக்கும் நேரத்தில், அவர்களே மற்றவர்களைப் பற்றி குறிப்பாக பத்திரிக்கையாளர்கள், அவர்களது குடும்பத்தினரைப் பற்றி அவதூறாகப் பேச்சியிருப்பது கண்டு விசித்திரமாக உள்ளது.
நடிகர், நடிகையரின் மிரட்டல் பேச்சு : பத்திரிகையாளர்கள் வழக்கு
அக்டோபர் 13,2009,00:00  IST

http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=5275

Front page news and headlines today

சென்னை : நடிகர், நடிகையரின் மிரட்டல் பேச்சுக்கு, வழக்கு பதிவு செய்து விசாரிக்கக் கோரி, சென்னை ஐகோர்ட்டில், பத்திரிகையாளர்கள் அமைப்புகள் மனுக்கள் தாக்கல் செய்துள்ளன. சென்னை யூனியன் ஆப் ஜர்னலிஸ்ட்ஸ் தலைவர் அன்பழகன் தாக்கல் செய்த மனு: போலீசாரால் கைது செய்யப்பட்ட ஒரு நடிகை தெரிவித்த தகவலின்படி, “தினமலர்’ நாளிதழில் செய்தி வெளியானது. இது குறித்து, தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயலர் கொடுத்த புகாரின் பேரில், செய்தி ஆசிரியர் கைது செய்யப்பட்டார். கடந்த 7ம் தேதி, தென்னிந்திய நடிகர் சங்க அலுவலகத்தில், கண்டனக் கூட்டம் நடந்தது.

அந்தக் கூட்டத்தில், பத்திரிகையாளர்களையும் அவர்களின் குடும்பத்தினரையும் அவதூறு செய்யும் விதத்தில், நடிகர், நடிகைகள் பேசினர். ஆபாசமாக, மோசமான வார்த்தைகளை பயன்படுத்தினர். இத்தகவல்களை எங்கள் கவனத்துக்கு உறுப்பினர்கள் கொண்டு வந்தனர். இதையடுத்து, எங்கள் சங்கத்தின் அவசர பொதுக்குழுக் கூடி, சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன்படி, கடந்த 8ம் தேதி சென்னை மாநகர போலீஸ் கமிஷனரை, பத்திரிகையாளர்கள் 100 பேர் சந்தித்து புகார் கொடுக்கப்பட்டது. இது குறித்து, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க கோரினோம். சம்பந்தப்பட்ட பத்திரிகையில் வருத்தம் தெரிவித்த பின்னும், தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் கண்டனக் கூட்டம் நடத்தப்பட்டது. அதில், குறிப்பாக நடிகை ஸ்ரீப்ரியா, நடிகர்கள் விஜயகுமார், விவேக், சத்யராஜ், அருண்குமார், சூர்யா ஆகியோர் பத்திரிகையாளர்களை அவதூறு செய்யும் விதத்தில் பேசியுள்ளனர். அவர்களது பேச்சு, பத்திரிகையாளர்களுக்கும் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு நாளிதழின் செய்தி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க அதிக ஆர்வம் காட்டிய போலீசார், நாங்கள் அளித்த புகாரை பொருட்படுத்தவில்லை. நாங்கள் சமர்ப்பித்த ஆதாரங்களின்படி, சம்பந்தப்பட்டவர் களை அழைத்து விசாரிக்கவில்லை. எங்கள் புகாரின்படி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, தகுந்த நடவடிக்கை எடுக்க, போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இதேபோன்று, இந்திய உழைக்கும் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பின் தென்மண்டல செயலர் அசதுல்லாவும் மனு தாக்கல் செய்துள்ளார்.
nadigarsangam081009_86

“மஞ்சள் பத்திரிக்கை தினமலர்” என்று குறிப்பிட்டு அதற்க்கு எதிராக கண்டன கூட்டம் என்று போட்டிருப்பதே நடிக-நடிகையர், ஒரு தீர்மானமான நிலையில் உள்ளார்கள் என்று தெரிகின்றது.

விஜய்காந்த்:

நடிகர் – நடிகைகளை அவதூறாக எழுதும்போக்கு பல ஆண்டுகளாகத் தொடர்கிறது. பத்திரிகைகளுக்கு சமூகப் பொறுப்பு அதிகம் உள்ளது. அதை உணர்ந்து செயல்பட வேண்டும். இத்தகைய அவதூறுகளைத் தவிர்க்க வேண்டும்.

காவல் துறை கட்டுப்பாடுகளுடன் செய்திகளை கொடுக்க வேண்டும். நான் நடிகர் சங்க உறுப்பினர். நடிகர் சங்கத்துக்கு கட்டுப்பட்டவன். நடிகர் சங்கம் சாதாரண அமைப்பு கிடையாது. கட்டுக்கோப்பானது.

நடிகர் சங்கத்தால் எதை வேண்டுமானாலும் சாதிக்க முடியும்.

விவேக்:

எனக்கு கோபத்தில் என்ன பேசுவதென்றே தெரியவில்லை. அந்த செய்தியை நினைத்தால் உடம்பு கொதிக்கிறது. எவன்டா… அவன் எங்களைப் பத்தி தப்பா எழுதறவன்… டேய்… உங்க அம்மா, அக்கா, தங்கை படத்தை நிர்வாணமா போடுங்கடா பேப்பர்ல.  எங்களைப் பத்தியா மேட்டர் போடுறீங்க… இப்ப நான் போடறேன் மேட்டர்… உங்க ஆயா, அம்மா, மனைவி, அக்கா – தங்கச்சிகளை அனுப்புங்கடா… அவங்களை மார்ப்பிங்ல (Morphing) ஜட்டியோட நான் மாத்தி  சென்னை முழுக்க போஸ்டர் அடிச்சி ஒட்டறேன். அதைப் பார்த்து நீ துடிக்கிறதை பார்த்து ரசிக்கணும்டா டேய்.

த்ரிஷா குளிக்கிறதை படம் பிடிச்சிப் போடறீங்களே… உங்க ஆயா, அக்கா, தங்கை குளிக்கும்போது படம் பிடிச்சி பேப்பர்ல போட வேண்டியதுதானே… குளிக்கும்போது நிர்வாணமாகத்தானேடா இருப்பாங்க… உங்க ஆயா மட்டும் பிகினி போட்டுக்கிட்டா குளிப்பா…

fefsi-1

மஞ்சுளா என்பவர் எத்தனை பெருமைக்குரிய நடிகை தெரியுமா உங்களுக்கு… கலைக்காக அந்தக் குடும்பம் செய்துள்ள சேவை கொஞ்சமல்ல. எம்ஜிஆர் – சிவாஜியுடன் நடித்த பெருமைக்கு சொந்தக்காரர் மஞ்சுளா. அவங்க குடும்ப பின்னணி தெரியுமா உங்களுக்கு… அவங்க சொந்தக்காரங்களுக்கு தெரிஞ்சா உங்களை பீஸ் பீஸாக்கிடுவாங்கடா… அவங்க மாப்பிள்ளை எவ்வளவு பெரிய டைரக்டர் தெரியுமா… இந்த செய்தி அவருக்கு எவ்வளவு தலைகுனிவை ஏற்படுத்தியிருக்கும்… இப்ப சொல்றேன்… இனி எனக்கு  எந்த பத்திரிகைக்காரன் தயவும் தேவையில்லை. அதிலும் இந்த ….. பய தினமலர் வேண்டவே வேண்டாம்….

(அதற்கு மேல் டைப் பண்ண முடியாத வார்த்தைகள் நிறைய இடம்பெற்றிருந்தன அவரது பேச்சில்… வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரது பேச்சுக்கு, வந்திருந்த நடிகர், துணை நடிக – நடிகையரிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது.)

ஸ்ரீபிரியா:

என்னால சரியா பேச முடியல. அழுகைதான் வருது. அதனால் எழுதிக் கொண்டு வந்ததைப் படித்து விடுகிறேன்.

‘ரஜினி வருவதாக பொய் சொல்லிவிட்டு என் கல்யாணத்துக்கு வரவில்லை என்ற கோபம் இருந்தது. ஆனால் இன்று எங்களுக்கு ஒரு அவமானம் என்றவுடன் அவர் வந்திருப்பது பெருமையாக இருக்கிறது. 35 ஆண்டுகள் சினிமாவில் இருக்கிறேன். என்னை பற்றி தவறாக எழுதியவர்கள் நல்ல குடும்பத்தில் பிறந்தவர்களாக இருக்க மாட்டார்கள்.

நாங்களும் சாதாரண பெண்கள்தான்.  எங்களுக்கும் குடும்பம் இருக்கிறது.  குழந்தைகள் இருக்கிறார்கள்.   எங்களின் பெயரை வெளியிட்டு அசிங்கப்படுத்துகிறார்கள்.  எங்கள் வயிற்றெரிச்சல் அவர்களை சும்மா விடாது.  எங்கள் உணர்வுகளை அவர்கள் புரிந்துகொள்ளவேயில்லை. திரைக்குப் பின்னால் நாங்களும் எவ்வளவோ கஷ்டப்படுகிறோம்.  ஏன்… உங்க வீட்ல… உங்களைச் சுத்தி இதெல்லாம் நடக்கிறதேயில்லையா?

fefsi-4-2
விபச்சாரத்தில் ஈடுபடுவதாக என் பெயரை வெளியிட்டிருக்கிறார்கள்.   நான் இதற்கு பிறகும் மவுனமாக இருந்துவிட்டால் அது என் கனவருக்கும், பிள்ளைகளுக்கும் நான் செய்யும் துரோகம் ஆகிவிடும்.  நான் கலங்கிப்போவதை பார்த்து நீ ரொம்ப தைரியமான பொண்ணு….எதுக்கு இப்படி கலங்குற என்று கேட்கிறார்கள்.  நான் தைரியமான பொண்ணுதான்.  ஆனால் நானும் மனுஷிதானே.

இது போன்று எங்களை அவமானப்படுத்தும் உங்களையெல்லாம்…’’ என்று சொல்லி பாஸ்டர்ட்ஸ் என்ற ஆங்கில வார்த்தை அடிக்கடி இடம்பெறும் விதத்தில் மோசமாகத்  திட்டி முடித்தார்.

சத்யராஜ்:

எங்க ஊர்ல அந்த பத்திரிகைக்குப் பேரே இழவுப் பத்திரைகைதான். நான் சொல்லாததையெல்லாம் சொன்னதா செய்தி போட்டு வீணா சண்டை மூட்டி விட்டுட்டானுங்க. இப்ப ஸ்ரீபிரியா இங்கிலீஷ்ள சொன்ன பாஸ்டர்ட்ஸ் என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்று உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும். அதை ஆதரிப்பவர்கள் எல்லோரும் கையத் தூக்குங்க… (எல்லோரும் ஆரவாரத்துடன் கையைத் தூக்கினார்கள்) இதையே நம்ம தீர்மானமா போட்டு அந்தப் பத்திரிகைக்கும் அனுப்பி வைய்ங்க!

நளினி:

“ரெண்டு பிள்ளைகளுக்கு அம்மா நான். என்னைப்பற்றி இப்படியெல்லாம் எழுதுறாங்களே… என் பிள்ளைகள் மனசு என்ன பாடுபடும்.
கணவனை பிரிந்தும் தனியாக வாழ முடியும் என்று என் பிள்ளைகளை காப்பாற்றிக்கொண்டிருக்கிறேன்.  இப்படியெல்லாம் செய்வது நியாமா?

fefsi-3-2இது இத்தோடு நிற்கிற பிரச்சனையில்லை.  இந்த பிரச்சனையை நாங்க சும்மா விடப்போவதில்லை. நான் தைரியமான பொண்ணு. அதனாலதான் இவ்வளவு வேதனையிலும் தாங்கிக்கொண்டு போராடுகிறேன்… இந்த செய்தி எழுதினவன் மட்டும் கிடைச்சான்….’’என்று பேசினார்.

நடிகை சீதா பேசும் போது,  “நெனச்சு நெனச்சு ரொம்ப வேதனையாருக்கு.  என்னால தாங்க முடியல.   எங்களுக்கும் குடும்பம் இருக்கு.  பொறுப்பு இருக்கு என்பது ஏன் புரியமாட்டேங்குது.  எங்க மனச ஏன் புரிஞ்சுக்கல.   என்னால பேச முடியல…’’ என்றுசொல்லி  கண்ணீர் விட்டார்.

செல்வமணி:

“ஆந்திராவில் இப்படியெல்லாம் ஒரு கிசுகிசு செய்தி, அவதூறு செய்தி கூடப் பார்க்க முடியாது. அப்படி யாராவது எழுதினால் மீண்டும் பேனா பிடிக்கவே முடியாது… என் மனைவி இந்த பத்திரிகைக்கார …..களால் எவ்வளவு இம்சைக்கு உள்ளானார் தெரியுமா (?!)” என்றார் இயக்குநர் செல்வமணி.

சரத்குமார்:

fefsi-2

” செல்வமணி ஒரு விஷயத்தை மறந்துவிட்டார். ரோஜாவுக்கு எய்ட்ஸ், எனக்கு எய்ட்ஸ் என்றெல்லாம் செய்தி போட்டார்கள். அதனால் எத்தனை பாதிப்பு எங்களுக்கு தெரியுமா? தினமலர் அவதூறு செய்தி வெளியானதும் நடிகை ஸ்ரீபிரியாவும் சீதாவும் தற்கொலைக்கு முயன்றார்கள் என்பது உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்… ஒருவேளை இந்தப் பட்டியலில் என் மனைவி ராதிகா பெயர் இடம்பெற்றிருந்தால்… அய்யோ… நினைக்கவே முடியவில்லை. அவரை இந்நேரம் உயிரோடே பார்த்திருக்க முடியாது (சொல்லிவிட்டு அழுதார்).

இந்தப் பிரச்சினைகள் வராமல் தடுக்க விரைவில் நாங்களே ஒரு புதிய பத்திரிகை ஆரம்பிக்கப் போகிறோம். இதுதவிர, இம்மாதிரி அவதூறுகளைச் சந்திக்கவென்றே ஒரு வக்கீலை சங்கத்தில் நியமிக்கவும் முடிவு செய்துள்ளோம்…!, என்றார்.

சூர்யா:

‘சமுதாயத்துக்கு வழிகாட்டியாக பத்திரிக்கைகள் இருக்க வேண்டும். வயிற்றை கழுவுவதற்காக இப்படி அவதூறு எழுதுகிறார்கள். இவர்களை சும்மா விடக்கூடாது. நடிகர் சங்கம் சார்பில் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க குழு அமைக்க வேண்டும். அதற்கான செலவை நான் ஏற்கிறேன். அந்த குழுவைக்கொண்டு அவதூறு எழுதுபவர்களை நசுக்க வேண்டும். எதிர்காலத்தில் இப்படியொரு கூட்டம் நடக்கக் கூடாது. அந்த அளவுக்கு நடவடிக்கை இருக்க வேண்டும்…’ என்றார் நடிகர் சூர்யா.

அருண் விஜய்:

“எனக்கு வந்த ஆத்திரத்துக்கு அந்த செய்தியை எழுதிய ரிப்போர்ட்டர் மற்றும் அலுவலகத்தில் உள்ள நான்கு பேரையாவது அடித்து துவம்சம் செய்து இழுத்து வந்து எங்கம்மா (மஞ்சுளா) காலடியில் போட்டிருப்பேன். ஆனால் சங்கம் என்னைத் தடுத்துவிட்டது…”

தாமு:

நண்பர்களே… ஆவேசம் வேண்டாம். பத்திரிகைகள் தயவு நமக்குத் தேவை. நான் இன்றைக்கு இந்த நிலைமைக்கு வரக் காரணம் பத்திரிகைகள்தான். நான் மட்டுமல்ல… இன்னும் பல கலைஞர்களை பத்திரிகைகள்தான் உயிரோடு வைத்திருக்கின்றன. அவர்களைத் திட்ட வேண்டிய அவசியமில்லை. எனது கருத்தில் உங்களுக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். ஆனால் உண்மை அதுதான். பத்திரிகை நண்பர்களுக்கும் சினிமாவின் தயவு தேவையாக இருக்கிறது. எனவே முடிந்தவரை இணக்கமாகப் போக வேண்டும். ஆதாரமில்லாத அவதூறுகளைத் தவிர்க்கலாமே, என்றார்.

fefsi-4

இன்னும் சூர்யா, இயக்குநர் விக்ரமன், லதா, விஜயகுமார் என நிறையப் பேர் பேசினார்கள். கவுண்டமணி, ஷர்மிளி, ஷகிலா போன்றோரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

வராமல் தவிர்த்த கமல்:

இந்த கண்டனக் கூட்டத்துக்கு வருவது குறித்துப் பின்னர் சொல்கிறேன் என்று செவ்வாய்க்கிழமை தன் அலுவலகத்துக்கு வந்த சரத்குமாரிடம் சொல்லியிருந்தார் கமல்ஹாஸன்.

புதன்கிழமை ஆர்ப்பாட்டம் துவங்கும் முன் நேராக ரஜினி வீட்டுக்கே போய், அவரை கையோடு அழைத்து வந்துவிட்டார் சரத். கமல்ஹாஸனைக் கூப்பிட ராதாரவி போயிருந்தார். ஆனால் ‘நான் எதற்கு வரவேண்டும்?’ என்று கேட்ட கமல், கடைசி நிமிடம் வரை வரவில்லை.

விஜய், அஜீத், நமீதா போன்ற முன்னணி நடிகர் – நடிகைகளும் இந்த நிகழ்ச்சிக்கு வரவில்லை.

கூட்டத்தின் முடிவில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் முக்கியமானது, தினமலருக்கு இனி எப்போதும் ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என்பது.

தினமலர் குடும்ப நிகழ்ச்சிகள், அவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் எதிலும் சினிமாக்காரர்கள் பங்கேற்பதில்லை, தவறாக விமர்சிக்கப்பட்ட உறுப்பினர்கள் அனைவரும் தனித்தனியாக மானநஷ்ட ஈடு வழக்கு தொடர்வது, பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியாவிடம் புகார் செய்து அந்த நாளிதழையே தடுப்பது போன்ற தீர்மானங்களை நிறைவேற்றினர். தடை என்ற வார்த்தையை இம்முறை பயன்படுத்தவில்லை.

4 பதில்கள் to “நடிக-நடிகையர் ஆபாசப் பேச்சுகள்!”

 1. N. Nachiappan Says:

  Since the blabbering, vulgar utterances and nasty filth of these creatures have come out openly, they do not have any morality to face the public.

  Ironically, it is not known how these people even want to rule by contesting elections, getting “Padmasri” awards etc.?

  How the younsters would take their words when they come to know the vulgaity of their mindset came out openly.

  When the secularists and other used to give sermon that one wrong cannot be corrected by another wriong, how these guys are doing the same?

  Tamilians should hang their heads down, when these guys talked such nonsense in front of so many living things. Ironically, they do not feel ashamed about their utterances. Actually, what would their wives think when they uttered such vulgar words about the females of the counterparts of the press?

  Definitely, some of them might be honoured with “Dr” one day or the other by some “deemed” University, as Sathyabhama has done. Then, the “doom” would come to Tamilnadu with all glory of “analytical wisdom” etc.

  Of course, all Tamilians could get degreees, that too, MAs in EVR, Karunanidhi, Namita, Kanimozhi, Rajaththi, and host of otheir mothers, daughters etc.

  Of course, PhDs are offered free!

 2. vedaprakash Says:

  நடிகர்கள் மீது வழக்கு பதிந்து டிச., 15க்குள் அறிக்கை தர உத்தரவு : உடுமலை கோர்ட் அதிரடி
  நவம்பர் 25,2009,00:00 IST
  http://www.dinamalar.com/court_detail.asp?news_id=4550

  உடுமலை : பத்திரிகையாளர்களை தரக்குறைவாக பேசிய நடிகர்கள் மீது, குற்ற வழக்கு பதிவு செய்து, விசாரணை அறிக்கையை டிச., 15க்குள் சமர்ப் பிக்குமாறு, குமரலிங்கம் போலீசாருக்கு உடுமலை ஜே.எம்.,1, மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

  “தினமலர்’ நாளிதழில், நடிகைகள் குறித்து வெளியான செய்திக்கு, வருத்தம் தெரிவித்த நிலையிலும், தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில், அக்., 7ல், கண்டனக் கூட்டம் நடந்தது. இதில், பத்திரிகையாளர்கள் குறித்தும், அவர்கள் குடும்பத்தினர் குறித்தும் நடிகை, நடிகர்கள் தரக்குறைவாக பேசினர். இது குறித்து, மாநிலம் முழுவதும் பத்திரிகையாளர்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தினர். நடிகை, நடிகர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்காததால், சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க, பத்திரிகையாளர்கள் சார்பில், பல்வேறு நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டது.

  உடுமலையில், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் சார்பில், அதன் தேசிய கவுன்சில் உறுப்பினர் கொழுமம் தாமோதரன் சார்பாக, வழக்கறிஞர் சிங்காரவடிவேல், உடுமலை ஜே.எம்., 1 நீதிமன்றத்தில், அக்., 26ல், வழக்கு தாக்கல் செய்தார். அதில், விவேக்(35), ஸ்ரீபிரியா(45), விஜயகுமார்(55), சூர்யா(25), மஞ்சுளா(52), நளினி(35), சத்யராஜ்(55), சேரன்(35), கவுண்டமணி(55), அருண்விஜய்(22), சத்யப்பிரியா(35) ஆகியோர், அக்., 7ல் நடந்த கண்டன கூட்டத்தின் போது பத்திரிகையாளர்கள் குறித்து தரக்குறைவாகவும், கெட்ட வார்த்தைகளாலும், கொலை மிரட்டல் விடுத்தும் பேசினர். எனவே, இவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம், 294 (பி) (கெட்ட வார்த்தைகளால் பேசுவது); 504 (பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல்); 506 (2), (கொலை மிரட்டல்); 503, (குற்றமுறு மிரட்டல், தொந்தரவு செய்தல், வேறு நபர்களுக்கு கேடு விளைவித்தல்); 34 (ஒரே எண்ணத்துடன், ஒன்று கூடி குற்றச்செயலில் ஈடுபட திட்டமிடல்) ஆகிய பிரிவுகளின் கீழ், போலீசார் வழக்கு பதிவு செய்து, எதிரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என, மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட, உடுமலை ஜே.எம்., 1 மாஜிஸ்திரேட் சுஜாதா, நவ., 23ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தார். நேற்று முன்தினம் மனு விசாரணைக்கு வந்தது.

  “மனு மீது விசாரணை நடத்திய மாஜிஸ்திரேட் சுஜாதா, ” நடிகர்கள் மீது வழக்கு பதிவு செய்து, வழக்கு விசாரணை குறித்த அறிக்கையை, டிச.,15 க்குள் கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும்’ என, குமரலிங்கம் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு உத்தரவிட்டார்.

 3. vedaprakash Says:

  அவதூறு பேச்சு : நடிகர்கள் மீது ஊட்டியில் வழக்கு
  நவம்பர் 25,2009,00:00 IST
  http://www.dinamalar.com/court_detail.asp?news_id=4551

  ஊட்டி : பத்திரிகையாளர்களை அவதூறாக பேசிய நடிகை, நடிகர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, ஊட்டி பத்திரிகையாளர் சார்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஊட்டி பத்திரிகையாளர் சங்க உறுப்பினர் ரொசாரியோ சார்பாக, மக்கள் சட்ட மையத்தின் தமிழ் மாநில இயக்குனர் வக்கீல் விஜயன், வக்கீல்கள் செந்தில்குமார், சசிகுமார் ஆகியோர் இணைந்து, ஊட்டி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சுப்ரமணியம் முன்னிலையில் மனு தாக்கல் செய்தனர்.

  மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: விபசார வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்ட ஒரு நடிகை தெரிவித்த தகவலின்படி, அனைத்து நாளிதழிலும் செய்தி வெளியானது. இச்செய்தி வெளியானதற்கு மறு நாளே நடிகர், நடிகைகளின் மனம் புண்படக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில், தினமலரில் வருத்தம் தெரிவிக்கப்பட்டது. இதற்கு பிறகு, தென்னிந்திய நடிகர் சங்கத்தினர் கூட்டம் நடத்தி, “தினமலர்’ நாளிதழை குறிவைத்தும், ஒட்டுமொத்த பத்திரிகையாளர்களை மிகவும் ஆபாசமாகவும், கேவலமாகவும், அருவருக்கத்தக்க வகையிலும், பேசி உள்ளனர்.

  கண்டனக் கூட்டத்தில் பேசிய, நடிகை ஸ்ரீபிரியா, நடிகர்கள் விஜயகுமார், விவேக், சத்யராஜ், அருண் விஜய், சூர்யா, சரத்குமார், சேரன் ஆகியோர் பத்திரிகையாளர்களின் தொழிலையும், அவர்களது குடும்பத்தையும், அவர்களின் சமூக தகுதியையும், மிக மோசமாக பேசி உள்ளனர். தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நடிகை, நடிகர்களின் பேச்சு கேட்டு, பலரும் எனது மனுதாரரை தொடர்புகொண்டு விசாரித்து உள்ளனர். நடிகர்களின் பேச்சு பத்திரிகையாளர்களுக்கும் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. ஈடு செய்ய முடியாத இழப்பையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே, குற்றம் சாட்டப்பட்டுள்ள எதிரிகளை அழைப்பாணை அனுப்பி, அழைத்து விசாரித்து தக்க தண்டனை வழங்க வேண்டும், என்று கூறப்பட்டுள்ளது. இந்த மனு, நாளை விசாரணைக்கு வருகிறது.

 4. vedaprakash Says:

  பத்திரிகையாளர்களை அவதூறாக பேசிய வழக்கு:ஊட்டியில் டிச.,19ல் ஆஜராக நடிகர்களுக்கு சம்மன்

  பதிவு செய்த நாள் : நவம்பர் 23,2011,00:22 IST
  http://www.dinamalar.com/News_Detail.asp?Id=354198

  ஊட்டி:பத்திரிகையாளர்களை, அவதூறாக பேசிய வழக்கில், நடிகர்கள் சூர்யா, சரத்குமார், சத்யராஜ், விவேக், அருண் விஜய், விஜயகுமார், நடிகை ஸ்ரீ பிரியா இயக்குனர் சேரன் ஆகியோர், ஊட்டி குற்றவியல் நீதிமன்றத்தில், டிச., 12ம் தேதி, நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.கடந்த, 2009ம் ஆண்டு நடந்த, நடிகர்கள் சங்கக் கூட்டத்தில், “தினமலர்’ இதழுக்கு எதிராகவும், பத்திரிகையாளர்களின் சமூக தகுதியை குறைக்கும் வகையிலும், பத்திரிகையாளர்கள் குடும்பத்தாரை கேவலப்படுத்தும் வகையிலும், பத்திரிகை ஆர்வலர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் வகையிலும் பேசியதாக, ஊட்டியைச் சேர்ந்த பத்திரிகையாளர் ரொசாரியோ, ஊட்டி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.இந்த மனு, விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டு, சமூக ஆர்வலர்கள் வீரமதிவாணன் மற்றும் தவ முதல்வன் ஆகியோரிடம் விசாரணை நடந்தது. இந்நிலையில், “இவ்வழக்கின் எதிரிகள் நடிகர்கள் சூர்யா, சரத்குமார், சத்யராஜ், விவேக், அருண் விஜய், விஜயகுமார், நடிகை ஸ்ரீ பிரியா, இயக்குனர் சேரன் ஆகியோர், டிச., 19ம் தேதி, ஊட்டி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும்’ என சம்மன் அனுப்ப, குற்றவியல் நடுவர் சுப்ரமணியம் உத்தரவிட்டார்.இந்த வழக்கில் ரொசாரியோ தரப்பில் வழக்கறிஞர்கள் விஜயன் மற்றும் செந்தில்குமார் ஆஜராகினர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: