“தமிழச்சிகளின் கற்பு”: சூடு பிடித்துவிட்டது!


தமிழச்சிகளின் கற்பு:ரஜினி,விஜயகாந்த்திற்கு கண்டனம்

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?T=259

முகசாயம் பூசிய நடிகைகளின் கற்பை விட தமிழ்ச்சிகளின் கற்பு எந்தவிதத்தில் குறைந்து போய்விட்டது என நடிகர்கள் ரஜினிகாந்த், விஜயகாந்த், சரத்குமார், சத்தியராஜ் போன்ற முன்னணி நடிகர்களுக்கு வழக்கறிஞர்கள் சமூகநீதி பேரவை கேள்வி எழுப்பியுள்ளது.

இதுகுறித்து வழக்கறிஞர்கள் சமூகநீதி பேரவையின் தலைவர் வழக்கறிஞர் கே.பாலு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஒரு நடிகை சில நடிகைகளின் கற்பு குறித்து தெரிவித்த கருத்து தொடர்பாக ஒட்டு மொத்த தமிழ் நடிகர்களும் கலந்து கொண்டு கண்டன கூட்டம் நடத்தியுள்ளனர். செய்தி வெளியிட்ட தினமலர் நாளிதழின் செய்தி ஆசிரியர் திடீரென கைது செய்யப்பட்டுள்ளார்.

நடிகைகள் கற்போடு வாழவேண்டும் என்று நினைப்பதில் தவறில்லை. அதை நாம் மறுக்கவும் இல்லை.

அதே வேளையில் வெளி மாநிலத்தில் பிறந்து தமிழ்நாட்டிற்கு நடிப்பதற்காக வந்த நடிகை குஷ்பு ‘தமிழ் நாட்டில் திருமணத்திற்கு முன்பு உறவு வைத்துக் கொள்ளாத பெண்கள் எத்தனை பேர் உள்ளார்கள்’ என்று கால்மேல் கால்போட்டு சவால் விட்டார். அதனை இந்தியா டுடே என்ற பத்திரிகை செய்தி வெளியிட்டது.

அப்போது இந்த நடிகர்கள், நடிகைகள் எங்கே போனார்கள். தமிழ் உணர்வு, தமிழர் என்று சொல்லிக் கொள்ளும் எந்த நடிகராவது அப்போது அதைக் கண்டிக்க முன்வந்தார்களா?

போராட்டம் நடத்தினார்களா? நடிகை குஷ்பு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று  சொன்னார்களா? அல்லது செய்தி வெளியிட்ட இந்தியா டுடே ஆசிரியர் கைது செய்யப்பட்டாரா? நடிகை குஷ்பு கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்போது தமிழ் பெண்கள் மட்டுமே வீதிக்கு வந்து போராட்டம் நடத்தினார்கள்.

பல அவதூறு வழக்குகள் தாக்கல் செய்தார்கள். நடிகை குஷ்பு மீது வழக்கு தொடர்ந்தது சரிதான் என்று உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. தற்போது வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

நடிகைகளின் கற்பை விட தமிழ் பெண்களின் கற்பு எந்த விதத்தில் குறைந்து போய்விட்டது. நடிகர்கள் வீதிக்கு வந்து போராடுகிறார்கள் என்பதற்காக ஒரு அப்பாவி ”செய்தி ஆசிரியர்” கைது செய்யப்பட்டுள்ளார். தேவைப்பட்டால் சம்மந்தப்பட்ட நடிகைகள் அவதூறு வழக்கு போடட்டும்.

காவல்துறை ஏன் இதில் இத்தனை அக்கறை காட்டுகிறது. பத்திரிக்கைகள் உண்மைக்கு புறம்பாக செய்தி வெளியிடக்கூடாது என்ற கருத்துக்கு எதிரானவர்கள் அல்லர் நாங்கள்.

தமிழ் பெண்களின் கற்பை கொச்சைப்படுத்தி செய்தி வெளியிட்ட இந்தியா டுடே ஆசிரியர் அப்போது கைது செய்யப்படவில்லையே?

முகசாயம் பூசிய நடிகைகளின் கற்பை விட தமிழ்ச்சிகளின் கற்பு எந்தவிதத்தில் குறைந்து போய்விட்டது என நடிகர்கள் ரஜினிகாந்த், விஜயகாந்த், சரத்குமார், சத்தியராஜ் போன்ற முன்னணி நடிகர்களை கேட்க விரும்புகிறோம்.

தமிழ்நாட்டில் நடிகர்களுக்கு இருக்கும் மதிப்பு கூட தமிழருக்கு இல்லையே. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சத்யராஜ்,சூர்யா,விவேக்கிற்கு கடும் கண்டனம்

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?T=258

பத்திரிக்கையாளர்களை பொது மேடையில் இழிவுபடுத்தி பேசிய நடிகர் சங்கத்துக்கு சினிமா பிரஸ் கிளப் கண்டனம் தெரிவித்துள்ளது.


இதுகுறித்து சினிமா பிரஸ் கிளப் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சமீபத்தில் ஒரு நடிகை பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது.

அந்த செய்தியை விமர்சிக்கவும், கண்டன கூட்டம் நடத்தவும், அந்த செய்தி தவறு என்று வாதிடவும், செய்தி வெளியிட்ட பத்திரிக்கை மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பதும் அவர் அவர்களின் ஜனநாயக உரிமை. அந்த ஜனநாயக உரிமையை நாங்கள் மதிக்கிறோம்.

அதற்காக இதையே ஒரு காரணமாகக் கொண்டு ஒட்டு மொத்த பத்திரிக்கையாளர்களையும் பொது மேடையில் கேவலமாக பேசுவதும், இழிவுபடுத்தி பேசியதையும் சினிமா பிரஸ் கிளப் வன்மையாக கண்டிக்கிறது.

குறிப்பாக கடந்த 7.10.09 அன்று தென்னிந்திய நடிகர் சங்கம் நடத்திய கண்டன கூட்டத்தில் நடிகர் விவேக், சத்தியராஜ், சூர்யா உள்ளிட்ட பலர் பத்திரிக்கையாளர்களை அவமானப்படுத்தி பேசியது கடும் கண்டனத்திற்குரியது.

செய்தி வெளியிட்டதற்காக பத்திரிக்கை மீது அவதூறு வழக்கு தொடர்வது, அந்த வழக்கின் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பதும் காலம் காலமாக நடந்து வருகிற ஒன்றுதான்.

ஆனால், முதல் முறையாக ஒரு செய்தி வெளியிட்டதற்காக பெண் கொடுமை சட்டத்தில் செய்தி ஆசிரியர் ஒருவரை கைது செய்திருப்பது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி இருப்பதாக சினிமா பிரஸ் கிளப் கருதுகிறது என்று தெரிவித்துள்ளது.

-வடபழனிவாலு

குறிச்சொற்கள்:

8 பதில்கள் to ““தமிழச்சிகளின் கற்பு”: சூடு பிடித்துவிட்டது!”

 1. vedaprakash Says:

  நடிகர், நடிகையர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மேலும் 8 பேர் வழக்கு
  அக்டோபர் 16,2009,00:00 IST

  http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=5301

  சென்னை : பத்திரிகையாளர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் இழிவுபடுத்தி பேசிய நடிகர், நடிகையர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் தனித்தனியே எட்டு பேர் நேற்று வழக்கு தொடர்ந்தனர்.

  நடிகைகள் குறித்து வெளியான செய்தி தொடர்பாக, கடந்த 7ம் தேதி, “தினமலர்’ செய்தி ஆசிரியர் லெனினை போலீசார் கைது செய்தனர். பின், நிபந்தனையற்ற ஜாமீனில் அவர் விடுவிக்கப்பட்டார். முன்னதாக செய்திக்கு எதிர்ப்பு தெரிவித்து, 7ம் தேதி நடிகர் சங்கத்தில் கூட்டப்பட்ட கண்டனக் கூட்டத்தில், பத்திரிகையாளர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் பல நடிகர், நடிகையர் இழித்தும், பழித்தும் பேசியது வீடியோ ஆதாரம் மூலம் தெரியவந்தது. பத்திரிகையாளர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் இழிவாக பேசிய நடிகர், நடிகையர் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, ஏற்கனவே பல்வேறு பத்திரிகையாளர் சங்கங்கள் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளன. இந்நிலையில், நடிகர்களுக்கு எதிராக, சைதாப்பேட்டை 18வது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நேற்று எட்டு பேர் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர்.

  பத்திரிகையாளர் அன்பழகனின் மனைவி கிருஷ்ணவேணி தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: “தினமலர்’ நாளிதழில் வந்த செய்திக்கு எதிர்ப்பு தெரிவித்து, நடிகர் சங்கத்தின் சார்பில், சங்க வளாகத்தில், கடந்த 7ம் தேதி கண்டனக் கூட்டம் நடத்தப் பட்டது. அதில், நடிகர்கள் சரத்குமார், ராதாரவி, விஜயகுமார், விவேக், சத்யராஜ், சூர்யா, அருண்குமார் மற்றும் நடிகை ஸ்ரீபிரியா ஆகியோர், பத்திரிகையாளர்களுக்கு எதிராகவும், அவர்களின் குடும்பத் தினருக்கு எதிராகவும், மிகவும் அருவருப்பான முறையிலும், கீழ்த்தரமாகவும், மிரட்டும் வகையிலும் பேசியுள்ளனர். நடிகர் விஜயகுமார், “தினமலர் அலுவலகத்திற்குச் சென்று நான்கு பேரை வெட்டி கூறு போடுவேன்’ என பேசியிருக்கிறார். பத்திரிகையாளர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் இழிவுபடுத்தி பேசிய நடிகர்களை சட்டத்தின் முன் நிறுத்தவும், அவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்கவும் தேவையான உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

  இதேபோல், அசதுல்லாவின் மனைவி நூர்ஜான், முருகநாதன், நிலாவேந்தன், வேலாயுதம், சென்மான், ஜெயவீரன், சரவணன் ஆகியோரும், தனித்தனியே வழக்கு தொடர்ந்துள்ளனர். ஏற்கனவே, சென்னை பத்திரிகையாளர் சங்கம் சார்பில், அன்பழகன், இந்திய உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் சார்பில் அசதுல்லா, அனைத்து ஊடக பத்திரிகையாளர் சங்கம் சார்பில், சத்யாலயா ராமகிருஷ்ணன் ஆகியோர், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

 2. vedaprakash Says:

  ‘தினமலர்’ செய்தி ஆசிரியர் கைது விவகாரம் : விசாரணைக்கு எடுத்தது பிரஸ் கவுன்சில்
  அக்டோபர் 13,2009,00:00 IST

  http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=5273

  சென்னை : “தினமலர்’ செய்தி ஆசிரியர் லெனின் கைது செய்யப்பட்ட விவகாரம் குறித்து பத்திரிகை செய்திகளின் அடிப்படையில், இந்திய பிரஸ் கவுன்சில் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. இதுபற்றி இந்திய பிரஸ் கவுன்சில் செயலர் விபா பார்கவா தன் அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தினமலர் செய்தி ஆசிரியர் கைதுக்கு பத்திரிகையாளர் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

  லெனினை உடனே விடுதலை செய்ய எடிட்டர் கில்டு கோரியுள்ளது’ என்பது போன்ற தலைப்புகளில் கடந்த 9ம் தேதியிட்ட, “தி இந்து, நவபாரத் டைம்ஸ், இந்துஸ்தான் டைம்ஸ்’ நாளிதழ் களின் டில்லி பதிப்புகளில் வெளிவந்த செய்திகள், இந்திய பிரஸ் கவுன்சில் கவனத்துக்கு வந்தது. “தினமலர்’ செய்தி ஆசிரியர், போலீசாரால் 7ம் தேதி கைது செய்யப் பட்டதாக செய்திகள் வந்துள்ளன. இந்த விவகாரத்தில், பத்திரிகையின் சுதந்திர செயல்பாட்டின் மீது தாக்குதல் இருப்பதற்கு ஆரம்ப முகாந்திரங்கள் உள்ளன. பத்திரிகைகளின் சுதந்திரத்தை காக்க வேண்டியது பிரஸ் கவுன்சிலின் கடமை என்பதால், பிரஸ் கவுன்சில் விசாரணை வரையறை 1979, பிரிவு 13ன் கீழ், பிரஸ் கவுன்சில் தலைவர் இப்பிரச்னையை தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத் துள்ளார். இப்பிரச்னையில் உள்ள முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, வழக்கு பற்றிய விவரங்கள் கொண்ட அறிக்கையை இரண்டு வாரத்துக்குள், “தினமலர்’ அளித்தால் நன்றாக இருக்கும். இதன்படி, இப்பிரச்னையில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து பிரஸ் கவுன்சில் முடிவெடுக்கும். இவ்வாறு விபா பார்கவா தெரிவித்துள்ளார்.

 3. vedaprakash Says:

  பத்திரிகையாளர்களை அவதூறாக பேசிய வழக்கு:ஊட்டியில் டிச.,19ல் ஆஜராக நடிகர்களுக்கு சம்மன்

  பதிவு செய்த நாள் : நவம்பர் 23,2011,00:22 IST
  http://www.dinamalar.com/News_Detail.asp?Id=354198

  ஊட்டி:பத்திரிகையாளர்களை, அவதூறாக பேசிய வழக்கில், நடிகர்கள் சூர்யா, சரத்குமார், சத்யராஜ், விவேக், அருண் விஜய், விஜயகுமார், நடிகை ஸ்ரீ பிரியா இயக்குனர் சேரன் ஆகியோர், ஊட்டி குற்றவியல் நீதிமன்றத்தில், டிச., 12ம் தேதி, நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.கடந்த, 2009ம் ஆண்டு நடந்த, நடிகர்கள் சங்கக் கூட்டத்தில், “தினமலர்’ இதழுக்கு எதிராகவும், பத்திரிகையாளர்களின் சமூக தகுதியை குறைக்கும் வகையிலும், பத்திரிகையாளர்கள் குடும்பத்தாரை கேவலப்படுத்தும் வகையிலும், பத்திரிகை ஆர்வலர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் வகையிலும் பேசியதாக, ஊட்டியைச் சேர்ந்த பத்திரிகையாளர் ரொசாரியோ, ஊட்டி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.இந்த மனு, விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டு, சமூக ஆர்வலர்கள் வீரமதிவாணன் மற்றும் தவ முதல்வன் ஆகியோரிடம் விசாரணை நடந்தது. இந்நிலையில், “இவ்வழக்கின் எதிரிகள் நடிகர்கள் சூர்யா, சரத்குமார், சத்யராஜ், விவேக், அருண் விஜய், விஜயகுமார், நடிகை ஸ்ரீ பிரியா, இயக்குனர் சேரன் ஆகியோர், டிச., 19ம் தேதி, ஊட்டி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும்’ என சம்மன் அனுப்ப, குற்றவியல் நடுவர் சுப்ரமணியம் உத்தரவிட்டார்.இந்த வழக்கில் ரொசாரியோ தரப்பில் வழக்கறிஞர்கள் விஜயன் மற்றும் செந்தில்குமார் ஆஜராகினர்.

 4. சென்னை விபச்சாரத்தில் பிரபலமாகிறது – மேனாட்டு கலாச்சாரத்தின் தாக்கம், உள்நாட்டு சினிமா மோகம Says:

  […] https://womanissues.wordpress.com/2009/10/14/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%9A%E0%AF%8D%E… […]

 5. சென்னை விபச்சாரத்தில் பிரபலமாகிறது – மேனாட்டு கலாச்சாரத்தின் தாக்கம், உள்நாட்டு சினிமா மோகம Says:

  […] https://womanissues.wordpress.com/2009/10/14/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%9A%E0%AF%8D%E… […]

 6. சென்னை விபச்சாரத்தில் பிரபலமாகிறது – மேனாட்டு கலாச்சாரத்தின் தாக்கம், உள்நாட்டு சினிமா மோகம Says:

  […] https://womanissues.wordpress.com/2009/10/14/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%9A%E0%AF%8D%E… […]

 7. சென்னை விபச்சாரத்தில் பிரபலமாகிறது – மேனாட்டு கலாச்சாரத்தின் தாக்கம், உள்நாட்டு சினிமா மோகம Says:

  […] https://womanissues.wordpress.com/2009/10/14/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%9A%E0%AF%8D%E… […]

 8. சென்னை விபச்சாரத்தில் பிரபலமாகிறது – மேனாட்டு கலாச்சாரத்தின் தாக்கம், உள்நாட்டு சினிமா மோகம Says:

  […] https://womanissues.wordpress.com/2009/10/14/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%9A%E0%AF%8D%E… […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: