Archive for நவம்பர், 2009

நான் அவனில்லை – III

நவம்பர்27, 2009
பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து ரூ.பல கோடி மோசடி செய்ததாக புகார்
நவம்பர் 27,2009,00:00  IST

http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=14325

Important incidents and happenings in and around the worldமதுரை:திருமண “வெப்சைட்’ மூலம் பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக பொன்குமரன் என்பவர் மீது பாதிக்கப்பட்ட பெண் தென்மண்டல ஐ.ஜி., அலுவலகத்தில் புகார் செய்தார்.தேனி மாவட்டம், போடி வரதராஜ் நகரைச் சேர்ந்தவர் நளினி(36). கடந்தாண்டு சென்னையில் வசித்தபோது, திருமண “வெப்சைட்’ நிறுவனத்தின் மூலம் மாப்பிள்ளை தேடினார். பொன்குமரன்(38) என்பவரை தேர்வு செய்தார்.

இவர் லண்டன் நியூபார்க் கம்பெனியில் நிர்வாக மேலாளராக இருப்பதாக கூறியதை நம்பி திருமண ஏற்பாடுகள் நடந்தன. பெண் பார்த்தது முதல் 150 சவரன் நகை, 15 லட்சம் ரூபாய் வரதட்சணை கேட்டது வரை அனைத்தையும் தனி ஒரு ஆளாகவே பொன்குமரன் மேற்கொண்டார்.கடந்த பிப்ரவரியில் நிச்சயதார்த்தம் நடக்கவிருந்தது. அதற்காவது மாப்பிள்ளை வீட்டார் வருவர் என நளினி குடும்பத்தினர் எதிர்ப்பார்த்தனர்.

ஆனால், நிகழ்ச்சிக்கு வரும் வழியில், விபத்தில் பெற்றோர் இறந்துவிட்டதாக கூறி நிச்சயதார்த்தம் செய்யாமல் பொன்குமரன் புறப்பட்டு சென்றார். பின் மார்ச் 21ல், திருப்பதியில் திருமணம் நடந்தது. அப்போதும், உறவினர்கள் வரவில்லை.இந்நிலையில், “அவர் மோசடி பேர்வழி. பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார். என்னிடம் இருந்து 4 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள், பணத்தை பெற்று ஏமாற்றியுள்ளார்’ என்று நளினி, நேற்று தென்மண்டல ஐ.ஜி., அலுவலகத்தில் வக்கீல் சரவணகுமாரிடம் புகார் செய்தார்.

அவர் நிருபர்களிடம் கூறியதாவது:திருப்பதி கோவில் லட்டுக்கு 60 டன் ஏலக்காய் சப்ளை செய்ய அனுமதி வாங்கி தருகிறேன் என்றுகூறி, 40 லட்சம் ரூபாய் வாங்கினார். இதை நம்பி போடிக்கு குடும்பத்துடன் இடம் பெயர்ந்தோம். நண்பர்களுக்கு மருத்துவ சீட் வாங்கித் தருவதாக எங்களிடம் 30 லட்சம் ரூபாய் பெற்றார். ஆனால் எதுவும் நடக்கவில்லை.அவரது குடும்பத்தினர் குறித்து கேட்கும் போதெல்லாம் எதையாவது கூறி சமாளித்தார்.

மும்பை, புனே உட்பட சில இடங்களில் உள்ள வீடுகளை எனது பெயருக்கு போலியாக மாற்றிக் கொடுத்தார். புனேயில் அவர் வசித்த வீட்டிற்கு சென்றேன். பல பெண்களை திருமணம் செய்து ஏமாற்றியவர் என அப்போதுதான் தெரிந்தது. அதற்கு, ஆதாரமாக உள்ள “சிடி”களை உடனே அழித்துவிட்டு, “நான் செய்தது எல்லாம் தவறுதான்’ என்றுக்கூறிவிட்டு தலைமறைவாகிவிட்டார் என்றார்.

‘டிவி’ தொடர் பார்க்க விடாததால் மனைவி விவாகரத்து: தீர்ப்பை எதிர்த்து கணவன் அப்பீல்!

நவம்பர்25, 2009
‘டிவி’ தொடர் பார்க்க விடாததால் மனைவி விவாகரத்து: தீர்ப்பை எதிர்த்து கணவன் அப்பீல்
நவம்பர் 25,2009,00:00  IST

http://www.dinamalar.com/court_detail.asp?news_id=4542

Court news detailமும்பை : “எனக்கு பிடித்த “டிவி’ தொடர்களை பார்க்க அனுமதிக்க மறுக்கிறார்; இதனால், எங்களுக்குள் தினமும் சண்டை ஏற்படுகிறது. இதை மனதில் வைத்து, பலவகையில் என்னை துன்புறுத்துகிறார்!’ – இப்படி சொல்லி, குடும்ப கோர்ட்டில் கணவனிடம் இருந்து விவாகரத்து பெற்றுள்ளார் மனைவி. “திருமணத்தை முறிக்க விரும்பவில்லை; நான் சேர்ந்து வாழவே விரும்புகிறேன்’ என்று கணவன் அப்பீல் செய்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் புனேயில் தனியார் நிறுவனத்தில் இன்ஜினியராக இருக்கிறார் ஹர்ஷத்(34); இவர் மனைவி சீமா (31). சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட்; திருமணம் ஆகி எட்டாண்டு ஆகிறது. இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. “என் கணவர் என்னை பலவகையில் கொடுமைப்படுத்துகிறார். எனக்கு பிடித்தமான “டிவி’ தொடர்களை பார்க்க அனுமதிப்பதில்லை. இது தான் சண்டைகளுக்கு காரணம். அதனால், எனக்கு சரியான பாதுகாப்பு அளிப்பதில்லை. நள்ளிரவில் தனியாக ஆட்டோவில் பயணிக்க வைக்கிறார். இது போன்ற சித்ரவதைகளை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை’ என்று குடும்ப நல கோர்ட்டில் மனு செய்தார் சீமா. வழக்கை விசாரித்த கோர்ட், அவர்களுக்கு விவாகரத்து அளித்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து, மும்பை ஐகோர்ட்டில் கணவன் ஹர்ஷத் அப்பீல் செய்தார்.

“இந்திய சமுதாயத்தின் ஒரு முக்கிய அங்கம் திருமண பந்தம். அதை சாதாரணமாக முறிக்க முடியாது. “எந்த ஆதாரமும் இல்லாமல், என் மனைவி என் மீது சொன்னதை வைத்து விவாகரத்து கொடுத்திருப்பது சரியல்ல; திருமண முறிவு தொடர்பான வழக்குகளில் சுப்ரீம் கோர்ட் பல முறை சுட்டிக்காட்டிய கருத்துக்களை குடும்ப நல கோர்ட் காற்றில் பறக்க விட்டு, இப்படி விவாகரத்து அளித்துள்ளது. “எனக்கு திருமண முறிவுவேண்டாம். அதில் விருப்பமில்லை. என் குழந்தையை நான் வளர்க்க அனுமதிக்க வேண்டும்’ என்று அப்பீல் மனுவில் அவர் கூறியுள்ளார்.

பாதிரியார் கற்பழித்ததாக போலீசில் பெண் புகார்!

நவம்பர்18, 2009
பாதிரியார் கற்பழித்ததாக போலீசில் பெண் புகார்
நவம்பர் 18,2009,00:00  IST

http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=14111

Important incidents and happenings in and around the worldதிருச்சி : பாதிரியார் தன்னை கற்பழித்ததோடு, கொலை மிரட்டலும் விடுப்பதாக, பாதிக்கப்பட்ட பெண், திருச்சி மகளிர் போலீசில் புகார் அளித்தார். திருச்சி கண்டோன்மென்ட் அனைத்து மகளிர் போலீசில், பூங்கோதை நேற்று அளித்த புகார் மனு விவரம்: “சிதம்பரத்தைச் சேர்ந்த தங்கராசுவின் மகளான நான், சில ஆண்டுக்கு முன், சுந்தரவேல் என்பவரை காதலித்து திருமணம் செய்தேன். வரதட்சணை விவகாரம் தொடர்பாக கணவரை பிரிந்து வாழ்ந்தேன். திருச்சி செவன்த் டே கிறிஸ்தவ அமைப்பைச் சேர்ந்த பாதிரியார் சுதாகர், நெய்வேலி மந்தாரக்குப்பத்தில் உள்ள சிறுவர் விடுதியில், காப்பாளராக எனக்கு வேலை வாங்கிக் கொடுத்தார். இதை பயன்படுத்தி, அடிக்கடி அங்கு வந்த பாதிரியார் சுதாகர், கட்டாயப்படுத்தி என்னை கற்பழித்தார். வேறு ஒருவருக்கு என்னை திருமணம் செய்து வைத்த பாதிரியார், அதன்பிறகும் கட்டாய உறவை தொடர்ந்தார்.

பாதிரியாரின் செக்ஸ் டார்ச்சர் தாங்க முடியவில்லை: இதன் விளைவால் கர்ப்பம் தரித்த நிலையில், பெண் குழந்தை ஒன்று இறந்து பிறந்தது. இதன் பிறகும், பாதிரியாரின் செக்ஸ் டார்ச்சர் தாங்க முடியவில்லை. இதனால், கணவருடன் அங்கிருந்து வெளியேறியதோடு, பாதிரியாரின் செயல் குறித்து ஓசூரில் உள்ள தலைமை அலுவலக நிர்வாகியிடம் புகார் கொடுத்தேன். ஆத்திரமடைந்த பாதிரியார், அடியாட்கள் உதவியுடன் என்னை அடித்து துன்புறுத்தினார். கட்டாயப்படுத்தி கற்பழித்ததோடு, கொலை மிரட்டலும் விடுத்து வரும் பாதிரியார் சுதாகர் மற்றும் அவருக்கு உறுதுணையாக உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்“,  இவ்வாறு புகார் மனுவில் கூறியுள்ளார்.பூங்கோதையின் புகார் குறித்து, திருச்சி மகளிர் போலீசார் விசாரிக்கின்றனர்.

———————————————————————————

தொடர்ந்து எப்படி இவ்வளவு பாதிரியார்கள் அதேமாதிரியான குற்றங்களில் ஈடுபட்டு வருகிறார்கள் என்று தெரியவில்லை.

சென்னை அருகே அனாதை காப்பகத்தில் பெண் கற்பழிப்பு, கிறிஸ்தவ பாதிரியார் கைது

மீஞ்சூர், செப்.6- சென்னையை அடுத்த மீஞ்சூர் அருகே அனாதை காப்பகத்தில் பெண் கற்பழிக்கப்பட்டது தொடர்பாக கிறிஸ்தவ பாதிரியார் கைது செய்யப்பட்டார்.

அனாதை காப்பகம்: மீஞ்சூர் அருகே உள்ள வேலூர் கிராமத்தில் `சத்தியம் சாரிட்டபிள் டிரஸ்ட்’ என்ற அனாதை காப்பகத்தை நடத்தி வந்தவர் சாது இம்மானுவேல் என்ற கிறிஸ்தவ பாதிரியார். 1988-ம் ஆண்டு முதல் இந்த அனாதை காப்பகம் செயல்பட்டு வருகிறது. காப்பகத்தில் 8 பெண்களும் 2 சிறுவர்களும் தங்கி இருந்தனர். இந்த காப்பகத்தில் தங்கியவர்களை சாது இம்மானுவேல் படம் பிடித்து அனாதைகள் என கூறி வெளிநாட்டில் இருந்து பணம் பெற்று வந்ததாகவும் இவர்களிடம் உண்டியலை கொடுத்து சென்னையில் உள்ள போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதிகளில் பண வசூலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து இந்த காப்பகத்தில் உள்ள பெண்கள் சென்னையில் காப்பகம் நடத்திவரும் ஜெயராஜ் என்பவரிடம் தெரிவித்தனர். மேலும் காப்பகத்தில் தங்கியிருந்த ரேவதி என்ற பெண் மீஞ்சூர் போலீசில் ஒரு புகார் மனு அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-

கற்பழிப்பு: இந்த காப்பகத்தில் தங்கியிருந்த விஜயாவை (வயது 20) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பாதிரியார் சாது இம்மானுவேல் கற்பழித்ததையடுத்து அவர் கர்ப்பம் அடைந்தார். தன்னால் கற்பழிக்கப்பட்டதை மறைக்க, சாது இம்மானுவேல் விஜயாவுக்கு அரசு அனுமதி பெறாத தனியார் டாக்டர்கள் மூலம் கருகலைப்பு நடத்தி உள்ளார். ஆகவே பாதிரியார் சாது இம்மானுவேல் மீது தக்க நடவடிக்கை எடுத்து எங்களை காப்பற்ற வேண்டும். இவ்வாறு அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.

புகாரை பெற்றுக்கொண்ட சப்இன்ஸ்பெக்டர் அரிகரபுத்ரன் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாரங்கன் உத்தரவின் பேரில் பொன்னேரி துணைசூப்பிரண்டு ரங்கராஜன் மேற்பார்வையில் மீஞ்சூர் இன்ஸ்பெக்டர் மாணிக்கம் முன்னிலையில் போலீசார் வேலூர் அனாதை காப்பகத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

கைது: திருவள்ளூர் கலெக்டர் பழனிகுமார் உத்தரவின் பேரில் பொன்னேரி தாசில்தார் லலிதா திடீர் என வேலூர் காப்பகத்திற்கு சென்று ஆய்வு செய்தார். காவல்துறையினரும் வருவாய்துறையினரும் இணைந்து ஆய்வு செய்த நிலையில் அரசு விதிகளுக்கு புறம்பாக பதிவுசெய்யாமல் காப்பகம் நடத்திவந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் காப்பகத்தில் இருந்த பெண்களை பாலியல் பலாத்காரத்திற்கு ஈடுபடுத்தியதும் குழந்தைகளை சித்ரவதைக்கு உட்படுத்தியதும் தெரியவந்தது. பதிவேடு கணக்கு வழக்குகள் சரியாக இல்லாததையடுத்து காப்பகம் மூடி சீல் வைக்கப்பட்டது.

காப்பகத்தில் இருந்த பெண்கள் மற்றும் சிறுவர்களை மீஞ்சூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துசென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டதையடுத்து பாதிரியார் சாது இம்மானுவேல் கைது செய்யப்பட்டு பொன்னேரி கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டார். நீதிபதி ராஜ் உத்தரவின் பேரில் பாதிரியார் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். காப்பகத்தில் தங்கியிருந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் திருவள்ளூரில் உள்ள சமூக நல காப்பத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதுவரை, எந்த பாதிரியும் தண்டிக்கப்பட்டதாகவும் தெரியவில்லை!

அனைவரையும் ஆண்டவந்தான் காப்பாற்றவேண்டும்!

இளம்பெண்ணை கடத்திய பாதிரியார் பொள்ளாச்சியில் குடும்பத்துடன் கைது
ஜூலை 16,2008,00:00  IST

Important incidents and happenings in and around the world

பொள்ளாச்சி:பொள்ளாச்சியில் இளம்பெண்ணை கடத்திய பாதிரியார், அவரது மனைவி உள்பட நான்கு பேரை மகளிர் போலீசார் கைது செய்தனர்.பொள்ளாச்சி நந்தனார் காலனியைச் சேர்ந்த முருகன் என்பவரின் மகள் ஆனந்தி என்கிற ஆராதனாவை கடத்தியதாக, திப்பம்பட்டியைச் சேர்ந்த பாதிரியார் அன்புநாதன் உட்பட நான்கு பேர் மீது அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது.கடந்த மூன்று மாதங்களாக தேடப்பட்டு வந்த அன்புநாதன்,குடும்பத்துடன் ஊஞ்சவேலாம்பட்டி பஸ் ஸ்டாபில் இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அனைத்து மகளிர் போலீசார் சென்று அவர்களை கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட பாதிரியார் அன்புநாதன் (33), அவரது மனைவி மாலதி (29), அக்கா தெய்வானை (40), அக்கா மகன் வீரமுத்து (28) ஆகியோரை 15 நாள் காவலில் வைக்க பொள்ளாச்சி ஜே.எம்., எண் 1 கோர்ட் மாஜிஸ்திரேட் உத்தர விட்டார்.போலீசார் கூறுகையில், “பொள்ளாச்சி நந்தனார் காலனியைச் சேர்ந்த முருகனின் மகள் ஆனந்தி என் கிற ஆராதனாவை திப்பம்பட்டியைச் சேர்ந்த பாதிரியார் அன்புநாதன் கடந்த ஏப்ரல் மாதம் கடத்தியதாக புகார் கொடுக்கப்பட்டது.

அன்புநாதனின் மனைவி மாலதி, முருகன் வீட்டுக்குச் சென்று ஆனந்தியை கணவனுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்குமாறு கேட்டுள்ளார். அதற்கு அடுத்த நாளில் இருந்து ஆனந்தியை காணவில்லை.அன்புநாதனின் அக்கா தெய்வானை, அவரது மகன் வீரமுத்து என்கிற அகஸ்டின் ஆகியோர் ஆனந்தியை வீட்டில் இருந்து அழைத்து சென்றதாக புகார் செய்துள்ளனர்’ என்றனர்.போலீஸ் விசாரணையில், “ஆனந்தியை நாங்கள் கடத்திச் செல்லவில்லை, அவரைப் பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது’ என்று அன்பு நாதன் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

மகளிர் போலீசாருக்கு கடந்த வாரம் வந்த கடிதத்தில், “என்னை யாரும் கடத்தவில்லை, என்னை கடத்தியதாக அன்புநாதன் மீது பழி போடுவது தவறானது’ என்று ஆனந்தி பெயரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த கடிதத்தை யார் அனுப்பியது, காணாமல் போன ஆனந்தி எங்கிருக்கிறார் என்பது இன்னும் புரியாத புதிராக உள்ளது.

பாதிரியார் மீது கற்பழிப்பு புகார் : திருமணத்திற்கு போலீஸ் தடை
மே 27,2008,00:00  IST

Front page news and headlines today

சீர்காழி: சீர்காழி அருகே இளம் பெண்ணை கற்பழித்து, வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்ய முயற்சித்த பாதிரியாரின் திருமணத்தை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.சீர்காழி அடுத்த சாயாவனம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாதிரியார் பிஷால்லா எஸ்கோல்(32). இவர் மணிக்கிராமம் என்ற இடத்தில் “பெஸ்தில் பெந்தேகொஸ்தே’ என்ற பெயரில் சபை நடத்தி வருகிறார். இவரது சபைக்கு வரும் பெண்களிடம் ஊழியம் என்ற பெயரில் தவறாக நடக்க முயற்சிக்கிறார் என அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக புகார் தெரிவித்து வந்தனர்.

தகாத உறவு: வடமணி கிராமத்தை சேர்ந்த மரியதாஸ் என்பவரது மகள் மரியசெல்வி (21). என்பவரை படிக்க வைப்பதாக கூறி சில ஆண்டுகளாக சபையில் தங்க வைத்து அருகில் திருவெண்காட்டில் உள்ள பள்ளி ஒன்றில் பிளஸ் 2 வரை படிக்க வைத்தார். அவரையே திருமணம் செய்து கொள்ள கடவுள் உத்தரவிட்டுள்ளதாக கூறி மரியசெல்வியிடம் நீண்ட நாட்களாக தகாத உறவு கொண்டுள்ளார்.சில நாட்களுக்கு முன் பிஷால்லா திருமணத்திற்கு பெண் பார்ப்பது தெரிய வந்ததும் மரியசெல்வி பிஷால்லாவிடம் கேட்டுள்ளார். “வாழ்ந்தால் உன்னோடு தான்’ என்று பிஷால்லா தான் தயாராக வைத்திருந்த விஷப்பாட்டிலை மரியசெல்வியிடம் காண்பித்து சந்தேகப்பட்டால் இருவரும் சேர்ந்து தற்கொலை செய்து கொள்வோம் என கூறியுள்ளார்

இதனை நம்பிய மரியசெல்வி கடந்த ஏப்ரல் 13ம்தேதி விஷத்தை அருந்தியுள்ளார். சீர்காழி அரசு மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். சிகிச்சைக்கு பின் மரியசெல்வி தமது குடும்பத்தினரோடு தங்கியுள்ளார். இந்நிலையில் பாதிரியாருக்கும்,கீழமாத்தூரைச் சேர்ந்த தமிழ்மணி(எ) பிளாஸ்டி என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு நேற்று திருமணம் நடக்க இருந்தது.

உணர்ச்சியை தூண்டி : அதிர்ச்சியடைந்த மரியசெல்வி திருவெண்காடு போலீசில் புகார் அளித்தார். ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போதே செக்ஸ் சில்மிஷங்களை செய்வார். வீடியோவில் பலான படத்தை ஓடவிட்டு உணர்ச்சியை தூண்டி கற்பழித்ததாக மரியசெல்வி புகாரில் தெரிவித்துள்ளார். இரு தரப்பையும் அழைத்து விசாரித்த போலீசார் நேற்று நடக்க இருந்த திருமணத்திற்கு தடை விதித்தனர்.இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வில் ஹியூம் – குழந்தைக் கற்ப்பழிப்பாளி, காமுகத் தீவிரவாதி!

நவம்பர்17, 2009

வில் ஹியூம் – குழந்தைக் கற்ப்பழிப்பாளி!

வில் ஹியூம், வில்லியம்ஸ்,“வில்ஹெல்ம்ஸ் வேய்ஜ்டெவல்டு”, என ஏன் ஒருவனே பத்திரிக்கைகளில்க் குறிப்பிடப் படவேண்டும் என்று தெரியவில்லை.

2002ல் கைது செய்யப்பட்டு, மறுபடியும் இப்பொழுது கைது செய்யப்பட்டுள்ளான்! உடனே அவன் நடித்த படம் “அண்ணாமலை” வெளிவந்தது ஆச்சரியம்தான்! இதோ ஒருகாட்சி – ஜனராஜும், நில் ஹெய்யுமும்!!

அத்தகைய குற்றண்ஜ்சாட்டப்பட்டவன், சிறுதும் வருத்தம் இல்லாமல், இன்று,  “என்னை இந்த குற்றங்களில் மாட்டிவிடப் பார்க்கிறார்கள்” என்று சொல்கிறான்!

இதோ மஹாபலிபுரத்தில் “சின்ன வீடு” என்ற பெயரில் நடத்தி வந்த, “அனாதை குழந்தைகள்” இல்லம்! இங்குதான், அவனது லீலைகள் அரங்கேறின என்று போலீஸார் கூறுகின்றனர்.

படோபடமாக “குழந்தைகளைக் காப்ப்போம்” என்ற ரீதியில் சென்னையில் ஒரு நிறுவனம் வேலை செய்து கொந்திருல்லிறது. ஆனால் இதைபற்றி மூச்சுக் கூட விடவில்லை போலும்!

போதகுறைக்கு, ஹியூமின் வக்கீல், விஷயம் நீதிமன்றத்தின் பரிசீலினையில் உள்ளதான், தான் எதையும் கூறவிரும்பவில்லை என்கிறார்!

ஆயிரக்கணக்கான சமூகத் தொண்டு நிறுவனங்கள் மற்ற நேரங்களில் கிளம்பிவிடுவார்கள். ஆனால் இப்பொழுது இருக்கும் இடம் தெரியவில்லை!

சட்டத்தில் ஓட்டைகள் உள்ளன அதனால் தப்பித்துவிடுவான் என்று ஒரு வழகறிஞரே பேசுகிறார்!

பிறகு எதற்கு இத்தகைய காமுகர்களை, காம-அரக்கர்களை நாம் வைத்துக் கொள்ளவேண்டும்?

அமெரிக்காவிலிருந்தி நாடு கடத்தப்பட்ட அத்தகைய காமுக-தீவிரவாதிகள் இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளனராம்! ஏன்?

இந்தியா என்ன அத்தகைய காமுகர்களுக்கு 19 வயது வரையுள்ள பையன்கள், சிறுவர்களை விநியோகிக்க, கடைகளைத் திறந்து வைத்துக் கொந்திருக்கிறார்களா?

குழந்தை விபச்சாரம்: பாலியல் வன்முறைக் கொடுமைகள்

நவம்பர்13, 2009

குழந்தை விபச்சாரம்: பாலியல் வன்முறைக் கொடுமைகள்

மகாபலிபுரம் செக்ஸ் கூடாரமாகி வருகின்றது: சென்னையில் நடக்கிறது, ஆனால் அனைவரும் மௌனம் காக்கின்றனர். இதன் ரகசியம் என்னவென்று புரியவில்லை. இப்பொழுது “வில்ஹெல்ம்ஸ் வேய்ஜ்டெவல்டு” என்ற கிருத்துவர் (அவரே சொல்லிக் கொண்டது) 30 வருடமாக தமிழ்நாட்டில் இருந்து வந்திருக்கிறேன். பல நூறு குழந்தைகளுடன் அவ்வாறு செக்ஸ் விளையாடல்கள் கொண்டுள்ளான். மே 2002ல் அத்தகைய பாலியல் குற்றங்களுக்கு கைது செய்யப் பட்டான். ஆனால் பெயிலில் வெளிவந்தவன் மறைந்து விட்டானாம்! இருப்பினும் அண்ணாமலை படத்தில் ரஜினிகாந்த்துடன் நடித்து இருக்கிறானாம்!

“வில்லியம்ஸ்” கைது: இதோ, 08-11-2009 அன்று நெதர்லாந்த்தைச் சேர்ந்த வில்லியம்ஸ் என்பவர் குழந்தைகளின் நிர்வாண / ஆபாசப் படங்களை இணைதளத்தில் போட்டதாக கைது செய்யப் பட்டுள்ளார்.

* வேடிக்கை என்னவென்றால், இவர் மகாபலிபுரத்தில் பூஞ்சேரி என்ற “லிட்டில் ஹோம்” என்ற பெயரில் ஒரு “அனாதை இல்லத்தை” நடத்தி குழந்தைகளிடம் (எல்லாம் டீன் ஏஜ்தான்) பாலியல் வன்முறையில் ஈடுபட்டார் [விவரங்களுக்கு கீழே பார்க்கவும்].

* 30 வருடங்களாக “சுற்றுலா பயணி” என்ற விசாவிலேயேத் தங்கியிருந்துள்ளார்!

* 2002ல் குழந்தை “பலாத்காரம்”, பாஸ்போர்ட் சட்ட மீறல் என்று கைது செய்யப் பட்டுள்ளார்!!

* பிறகு எப்படி அவர் வெளியே வந்தார், மறுபடி-மறுபடி அத்தகைய குற்றங்களையே செய்து வருகின்றார் என்பதெல்லாம் ஏசுநாதருக்குத் தான் தெரியும் போல உள்ளது!!!

FRAMED? Dutch national Will Heum will be in police custody for three days.

ஆபாச சிடிக்கள்: வில் ஹியூம் ரேபிட்ஷேர்.காம் “ www.rapidshare.com” என்ற தளத்தில் சென்னையிலிருந்து குழந்தைகளின் செக்ஸ் விளயாட்டு நிர்வாணப் படங்களை போட்டிருப்பதாக ஜெர்மனியில் இருந்து சென்னை “ஸைபர் கிரைம்” (Cyber Crime Cell) பிரிவு போலீஸாருக்கு செய்தி அனுப்புகின்றனர்[1]. அவர்கள் சூளைமேட்டில் உள்ள அவனது வீட்டை சோதனை இடுகின்றனர். அங்கு குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் இருக்கும் ஆபாச படங்கள் அடங்கிய CDக்கள், இணைதளத்தில் அவற்றை ஏற்றுவதற்கான எலக்ட்ரானிக் கருவிகள் முதலியன இருப்பது கண்டு பறிமுதல் செய்தனர்[2]. பிறகு அவன் கைது செய்யப்படுகிறான்!

2001-2002: “அண்ணமலை” படத்தில் நடித்தது: தான் “அண்ணாமலை” படத்தில் நடித்ததாக ஒப்புக்கொள்கிறான். சுரேஸ் கிருஷ்ணா இயக்கத்தில் அப்படம் 27-06-2002ல் வெளியிடப் பட்டது[3]. மிகவும் பிரமாதமாக ஓடியதால், அதில் நடித்த அவன் சாதாரணமாக மக்களின் கண்களினின்று தப்பித்து இருக்க முடியாது! மே 2002ல் கைது செய்யப் பட்டிருக்கும்போதே, செய்தி பிரமாதமாக வந்திருக்கவேண்டுமே, ஆனால் இல்லை. ஜூனில் படம் வெளிவந்த பிறகாவது, அவன் அடையாளம் கொண்டிருக்கவேண்டும். அவ்வாறாகவும் தெரியவில்லை!

பதினைந்து வருடங்களுக்கு முன்பு துரத்தியடிக்கப்பட்ட ஆசாமி: 1994ல் குழந்தைகளிடம் தவறாக நடந்து கொள்கிறான் எனத் தெரிந்து அவன் விரட்டியடிக்கப் பட்டானம்! சூளைமேடு பொன்னுசாமி வாத்தியார் தெரு(வரதராஜர்பேட்டை)வைச் சேர்ந்தவர்கள் அவ்வாறு கூறுகிறார்கள், பிறகு அங்கேயே எப்படி 15 ஆண்டுகளாக யார் கண்ணிலும் படாமல் தனது தொழிலை செஉது வஎதான் எனத் தெரியவில்லை! காலை-மாலை அல்லது ஏதாவது ஒரு நேரம் வெளியில் வராமல் இருந்திருக்க முடியாது.

பூஞ்சேரியில்லிட்டில்ஹோம்என்றஅனாதைஇல்லம்: 1980தில் “சுற்றுலா பயணியாக” வந்த இவன் சென்னைதான் தனக்கு சரியான இடம் சென்று இன்கேயேத் தங்கி விட்டானாம்! அப்பொழுது வயது 27! 2002ல் மஹாபலிபுரத்தில் கைதென்றால், 22 வருடங்கள் என்ன செய்து கொண்டிருந்தான்? பாருங்களேன், “அனாதை இல்லத்தின்” பெயர் “லிட்டில் ஹோம்”  அதாவது தமிழில் சொல்வதானால் “சின்ன இல்லம்” / “சின்ன வீடு”! இதற்கு நமது திரை வல்லுனர்களான, பாக்கியராஜ், “பத்மஸ்ரீ” விவேக் முதலியோரிடம் விளக்கம் கேட்டால் சொல்வர்! முன்பு முங்கைக்காய் மாதிரி இப்பொழுது “பலாக்காய்” மகிமை சொன்னாலும் சொல்வார்!

2009: பாட்ரிக் மாத்யூஸ் ஆகஸ்டில் கைது[4]: கடந்த ஜூன் மாதம் 2009 பாட்ரிக் மாத்யூஸ் என்ற மிஷினரி செயின்ட் ஜியார்ஜ் ஆங்கிலோ இந்திய உயர்நிலைப் பள்ளியில் படித்த குறைந்தபட்சம் ஒன்பது குழந்தைகளுடன் (14 வயது வரையுள்ள) பாலியில் ரீதியிலாக தொடர்பு கொண்டிருந்தான். 2003 லிருந்து 2006 வரை ஊழியராகவேலைசெய்து வந்தார். பேடிமான் டிரஸ்ட்[5] என்ற கிருத்துவ அமைப்பு ஆங்கிலோ-இந்திய சிறுவர்-சிறுமியர் அன்னாதைகளுக்காக உருவாக்கப் பட்டது.

மகாபலிபுரத்தில் வீடு: இந்த ஊழியருக்கு மகாபலிபுரத்தில் ஒரு வீடு இருக்கிறது[6]. சென்னை போலிஸாரது பள்ளியில் மற்றும் மகாபலிபுரத்திலுள்ள மக்களிடம் விசாரணையின்போது விழயங்கள் தெரியவந்தன. புகார்கள் சென்ரதால், இங்கிலாந்திலிருந்து கௌஸர்ஷயர் கான்ஸ்டெபுலரி (Gloucestershire Constabulary) என்ற போலீஸார் பிரத்யேகமாக விசாரிக்க சென்னைக்கு வந்தது. இந்த “மகாபலிபுரம்” மர்மத்தையும் ஆராயவேண்டியுள்ளது.

மே-2002: சிறுமிகளிடம்செக்ஸ்: நெதர்லாந்துநாட்டவர்கைது[7] (பழைய கதை): சென்னை சனிக்கிழமை, மே 4, 2002  : சென்னை மகாபலிபுரம் அருகே ஆதரவற்றோர் இல்லத்தைச் சேர்ந்த சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக நெதர்லாந்துநாட்டைச் சேர்ந்தவர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். மகாபலிபுரம் அருகே உள்ளது பூஞ்சேரி கிராமம். இங்கு லிட்டில் ஹோம் என்ற பெயரில் ஒரு ஆதரவற்றோர் இல்லம் உள்ளது. இந்தஇல்லத்தை நிெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த வில் ஹியூம் என்பவர் நடத்தி வருகிறார். மகாபலிபுரத்திலிருந்து 3 கிலோ மீட்டர்தொலைவில் இந்த இல்லம் அமைந்துள்ளது. இந்த லிட்டில் ஹோம் இல்லத்தில் 10 முதல் 20 வயதுக்குட்பட்ட 19 சிறுமிகள், பெண்கள் உள்ளிட்ட 42 பேர் உள்ளனர்.அனைவரும் பள்ளியில் படித்து வருகின்றனர். இந்த இல்லத்திற்கு சமீபத்தில் கிருஷ்ணன் என்ற சிறுவன் வந்து சேர்ந்தான். இல்லத்தில் சேர்ந்த சில நாட்களிலேயே அங்குசிறுமிகள், பெண்கள் பாலியல் ரீதியாக பலாத்காரம் செய்யப்படுவதை உணர்ந்தான். இதையடுத்து இல்லத்திலிருந்து தப்பி வந்துமகாபலிபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தான்.

எங்கே ஹியூமின்மனைவி, தாயார், ராபர்ட்டைட்டன்? அவனது புகாரை ஏற்ற போலீஸார் விரைந்து சென்று இல்லத்தில் திடீர் சோதனை நடத்தினர். சிறுமிகளிடம் விசாரணை நடத்தினர்.அப்போது அவர்கள் மீது பாலியல் பலாத்காரம் நடந்தது உறுதியானது. இதையடுத்து ஹியூம், இல்ல மேலாளர் பெங்களூர் ராஜன், உதவியாளர் செல்வக்குமார், வாட்ச்மேன் பெருமாள் ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். இந்த இல்லத்தில் ஹியூமின் மனைவி, தாயார், நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த ராபர்ட் டைட்டன் ஆகியோரும் வசித்துவருகிறார்கள். இந்த இல்லத்தை சமூக பாதுகாப்புத் துறையின் கீழ் கொண்டு வரவும், இல்லத்தில் இருப்பவர்களை அவர்களது பெற்றோரிடம்ஒப்படைக்கவும் போலீஸார் முயற்சிகள் மேற்கொண்டுள்ளனர்.

வில் ஹியூமைத் தொடர்ந்து மாத்யூஸ்-வக்கிரமான செக்ஸ்! கிருத்துவர்களுக்கு ஏன் தான் இப்படி, சிற்றர்களிடம் அதுவும் 19 வயதிலுள்ள பையன்கள், பெண்களிடம் அத்தகைய குரூரமாக செக்ஸ் விளையாடல்கள், புணர்ச்சிகள், மற்றும் அத்தகைய லீலைகளை படம் எடுப்பது, இணைதளத்தில் போடுவது போன்ற செயல்களை செய்கிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால், நிச்சயமாக, இதற்கு காரணம் இருக்கவே கூடும். ஆராய்ந்தபோது, கிருத்துவ பாதிரிகள் அவ்வாறு உலகம் முழுவது இருப்பது தெரியவருகிறது. சமீபத்தில் போப் கூட அத்தகைய செயல்களுக்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். மனோதத்துவ-உளவியல் அறிஞர்கள் ஆராயும்போது, சிறுவயதிலிருந்தே அத்தகையவற்றை படிப்பது, நினைப்பது முதலியன பார்க்க/ செய்யத் தூண்டும் என்கிறார்கள். மேனாட்டு சமுதாய சீரழைவுகள் தவிர, மதநூல்களும் காரணமாக இருக்கக் கூடும் என்கின்றனர். உதாரணத்திற்கு பைபிளிலேயே அத்தகைய நிகழ்ச்சிகள் விளக்கப் பட்டுள்ளன. அதைப் படித்து, நினைத்துப் பார்க்கும் சிறூவர்களின் நிலை, பெரியவர்களாக மாறும்போது, பாதிப்பு ஏற்படக்கூடும்

சிறார்களிடம் செக்ஸ் விளையாடல்கள்: மாத்யூஸ் அங்கிருக்கும்போது 1361 பேர் பள்ளியில் படுத்து வந்தனர். அதில் 122 பேர் தங்கி-படிக்கும் போர்டிங் பள்ளியில் இருந்தனர். அதில் 71 பையன்கள் மற்றும் 51 பெண்கள் இருந்தனர். அவர்களில் 10 முதல் 14 வரையிலுள்ள பையன்களிடம் செக்ஸ் விளையாடல்கள் கொண்டுள்ளதாக விசாரணையில் தெரிய வந்தது[8]. பாடம் சொல்லித் தருதல் மற்றும் கிரிக்கெட் கற்றுத்தருதல் என்றபோர்வையில் பையன்களை அறைக்கு வரச்சொல்லி அவ்வாறான செக்ஸ் விளையாடல்கள் செய்து வந்ததாக விசாரணையில் தெரிய வந்தது. உள்ளூர் போலிஸ் ஏப்ரல் 3, 2007ல் விசாரித்து உலகக் காவல்படை (CBI, the Indian arm of Interpol) என்ற “இன்டர்போல்” மூலம் அறிக்கை அனுப்பப்பட்டது. ஆகஸ்டு 1, 2009 அன்று அவர் கைது செய்யப்பட்டார்.

இந்நிகழ்ச்சிகளில் பல இல்லை பற்பல கேள்விகளுக்கு பதில் இல்லை.

 • 1980ல் வந்த ஹியூம், வில் ஹியூம், வில்லியம்ஸ், வில்ஹெல்ம்ஸ் வேய்ஜ்டெவல்டு எப்படி சென்னை மற்றும் மற்ற பகுதிகளில் இத்தகைய அடாத செயல்களை செய்து கொண்டு இருக்கமுடியும்?
 • 1980லிருந்து 2001 வரை என்ன செய்து கொண்டிருந்தான்?
 • சுமார் 20 ஆண்டுகள் சென்னயில் / தமிழகத்தில் அவன் எவ்வாறு தனது காலத்தைக் கழித்தான்?
 • எப்படி அவன் செலவுகளுக்கு பணம் கிடைத்து வந்தது?
 • இதே பொல நாம் நெதர்லாந்திற்குச் சென்றால், விசா காலத்தைத் தாண்டி தங்கியிருக்க முடியுமா? சுற்றித் திரிய முடியுமா? நிச்சயமாக முடியாது.
 • பிறகு எப்படி இவன் தங்கியுள்ளான்?
 • எப்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகள், ஊழியகள் முதலியோர் உதவி செய்தனர்?
 • பதிலுக்கு அவன் அவர்ஜ்=களுக்கு என்ன கொடுத்தான்?
 • அவ்வாறு கொடுப்பதற்கு பணம் எங்கிருந்து வந்தது?
 • மே 2002ல் கைது செய்யப்பட்டபோது, இவன் கூட இல்ல மேலாளர் பெங்களூர் ராஜன், உதவியாளர் செல்வக்குமார், வாட்ச்மேன் பெருமாள் ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். அவர்கள் நிலை என்ன?
 • அந்த சின்னவீட்டில் ஹியூமின் மனைவி, தாயார், நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த ராபர்ட் டைட்டன் முதலியோர் வசித்து வந்தனர். அவர்கள் என்னானார்கள்?
 • இவர்கள் எப்படி இந்தியாவிற்கு வந்தார்கள்?
 • தனது கணவன் செய்யும் வேலை, மனைவிற்குத் தெரியும். பிறகு, அவள் எப்படி அமைதியாக இருந்தாள்? அவளது பங்கும் அதிலுள்ளது தெரிகின்றது.
 • “இந்த இல்லத்தை சமூக பாதுகாப்புத் துறையின் கீழ் கொண்டு வரவும், இல்லத்தில் இருப்பவர்களை அவர்களது பெற்றோரிடம்ஒப்படைக்கவும் போலீஸார் முயற்சிகள் மேற்கொண்டுள்ளனர்”, என்பது 2002ன் செய்தி. பிறகு என்னவாயிற்று?
 • 2001-02ல் அண்ணாமலையில் நடித்தது எப்படி?
 • யார் அறிமுகம் செய்தனர்?
 • எப்படி மஹாபலிபுரத்திலிருந்து ஸூட்டிங்கிற்கு சென்று வந்தான்?.
 • இந்த சினிமா-சம்பத்தில்தான் பல மர்மங்கள் இருப்பது தெரிகின்றது.
 • 2002ல் பிணையில் எப்படி வெளி வந்தான்?
 • யார் பிணைப்பத்திரம் கொடுத்தது?
 • வக்கீல் யார்?
 • அவர் காணாதபோது, ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை?
 • “அண்ணாமலை” படம் வந்தபோது, முழித்துக் கொள்ளவேண்டாமா?
 • 2002 முதல் 2009 வரை அவன் என்ன செய்து கொண்டிந்தான்?
 • 1994ல் குழந்தைகளிடம் தவறாக நடந்து கொள்கிறான் எனத் தெரிந்து அவன் விரட்டியடிக்கப் பட்டானம்! சூளைமேடு பொன்னுசாமி வாத்தியார் தெரு(வரதராஜர்பேட்டை)வைச் சேர்ந்தவர்கள் அவ்வாறு கூறுகிறார்கள்,
 • பிறகு அங்கேயே எப்படி 15 ஆண்டுகளாக யார் கண்ணிலும் படாமல் தனது தொழிலை செய்து வஎதான் எனத் தெரியவில்லை! காலை-மாலை அல்லது ஏதாவது ஒரு நேரம் வெளியில் வராமல் இருந்திருக்க முடியாது.
 • 1999ல் தனக்கு இந்தியகுடிமகன் நிலை வேண்டும்[9] என்று விண்ணப்பிக்கிறான்! அப்பொழுது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தூங்கிக் கொண்டிருந்தார்களா?
 • 2003ல் போலீஸ் அவனை நாடு கடத்த[10] முயற்ச்சித்தது!
 • 2009ல் எப்படி திடீரென்று அங்குதான் இருக்கிறான் என்று தெரியவந்தது?
 • ஆகவே 2003லிருந்து 2009வரை, நிச்சயமாக போலிஸுக்கு அவன் இருப்பது தெரிந்தேயிக்கிறது. இருப்பினும் அவன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதேமாதிரியான வினாக்கள் பாட்ரிக் மாத்யூஸ் விஷயத்திலும் எழுப்பலாம்!

ஊடகங்களின் மௌனமா அல்லது மறையடிப்பா? இதே மற்றவர்கள் விஷயத்தில் நடந்திருந்தால் ஊடகங்கள் பிளந்து தள்ளியிருக்கும். படுக்கை அறைவரை சென்று ஏதோ “இன்வஸ்டிகேடிவ் ஜேர்னலிஸத்தில் புலிகள்” மாதிரி மணிக்கு மணி, நாளுக்கு நாள் செய்திகள் வந்து கொண்டேயிருக்கும்! டிவி செனல்கள் போட்டிப்போட்டு காண்பித்துக் கொண்டிருக்கும்! ஏன், புவனேஸ்வரி விஷயத்தை எடுத்து கொள்ளுங்களேன். இன்று வரை விடவில்லையே! அவர் தினமும் கோவிலுக்குச் செல்கிறார், பக்தியில் மூழ்கி விட்டார், பர்தா போடாமலேயே வெளியே வருகிறார்  ..  ..  .. ..  ..  .. என்றெல்லாம் மோப்பம் பிடிக்கிறார்களே? ஆனால், இத்தகைய “விஷயத்தை” எப்படி விட்டு விட்டார்கள்? இவர்கள் எல்லாம் என்ன ஒன்றும் தெரியாத குழந்தைகளா? “அண்ணாமலை படத்தில் நடித்த நடிகர் கைது”, “அண்ணமலை பட நடிகர் ஆபாச படம் எடுத்ததால் கைது” என்றெல்லாம் செய்திகள் வரவில்லையே? “டைம்ஸ் ஆஃப் இந்தியா” மட்டும் ‘அனாதைக் குழந்தை நிறுவனர் கைது” என்ற தலைப்பில் செய்தி[11] வெளியிட்டது!

பண-பலமா, சினிமா-பலமா, ஊடகக்காரர்களின்–உதவியா, அரசியல்-பலமா? எந்த சக்தி இவனைக் காப்பாற்றி வந்துள்ளது? இது மர்மமாக இருக்கிறது! ஒரு அயல்நாட்டவன் இவ்வாறு தனியாக 30 ஆண்டுகளக இருந்து கொண்டு இவ்வாறெல்லாம் செய்து வந்துள்ளான் என்றால் நம்ப முடியவில்லை. எனவே, இவனுக்கு உதவுவது யார்? அல்லது பின்னணியில் இருப்பவர்கள் யார்? புழக்கத்தில் இருக்கும் ஆபாச சிடிக்களுக்கும் இவனுக்கும் சம்பந்தம் உண்டா? இவனால் எல்லொருக்கும் ஆதாயம் என்றதால்தான், இவனை விட்டு வைத்திருக்கின்றனர் போலத் தெரிகிறது. இப்பொழுதுகூட தான் ஒரு “சமூக சேவகன்” என்றுதான்[12] கூறிக்கொள்கிறான்! ஜூன் 16, 2003ல் ஒரு மாமல்லபுரம் இன்ஸ்பெக்டர் பாம்பேயிலுள்ள நெதர்லாந்து கான்ஸுலேட்டிற்குச் சென்று விசாரிக்கிறார். ஆனால், அது வெளித்துறை அமைச்சகத்திலிருந்து[13] ஏதோ “விஷயங்கள் தேவை”யன்று சொல்லியதாகத் தெரிகிறது! இப்பொழுதும் இணைதளத்தில் அவன் போட்டது ஜனவரி 2009ல்[14], ஆனால் கைது செய்வது நவம்பர் 2009ல்! இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸில் வந்துள்ள செய்தியின்படி[15] பார்த்தால் தமிழ்நாடு சமூகத்துறையும் இவ்விஷயத்தில் மெத்தனமாக நடந்து கொள்வதாக உள்ளது. அதேமாதியான செய்தி[16] டைம்ஸ் ஆஃப் இந்தியாவிலும் வெளிவந்துள்ளது.


[1] http://www.thehindu.com/2009/11/08/stories/2009110854840400.htm

[2] http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=13872

[3] http://www.rajinifans.com/movie_database/index.php

[4]Abuser of city school kids held in UK http://timesofindia.indiatimes.com/city/chennai/Abuser-of-city-school-kids-held-in-UK/articleshow/4843819.cms

[5] http://www.batemans.org.uk/

[6]http://www.expressbuzz.com/edition/story.aspx?Title=Mathews+sexually+abused+9+students&artid=NMIqdTdvmew=&SectionID=lifojHIWDUU=&MainSectionID=lifojHIWDUU=&SEO=St+George%E2%80%99s+Anglo+Indian+Higher+Secondary+School&SectionName=rSY|6QYp3kQ=

[7] http://www.rediff.com/news/2002/may/03tn.htm

[8] http://timesofindia.indiatimes.com/Chennai/More-complaints-against-child-abuse-suspect-in-school/articleshow/4664344.cms

[9] http://timesofindia.indiatimes.com/city/chennai/Dutch-child-abuser-found-India-suitable-wanted-citizenship/articleshow/5221039.cms

[10] http://timesofindia.indiatimes.com/city/chennai/Dutch-child-abuser-found-India-suitable-wanted-citizenship/articleshow/5221039.cms

[11] http://timesofindia.indiatimes.com/india/Orphanage-owner-held-for-uploading-child-porn/articleshow/5208213.cms

[12] http://www.deccanchronicle.com/chennai/dutch-man-held-child-porn-149

[13] http://timesofindia.indiatimes.com/city/chennai/Govt-slept-on-Dutch-child-abusers-deportation/articleshow/5217262.cms

[14] http://timesofindia.indiatimes.com/city/chennai/With-arrest-of-Dutchman-cops-keen-to-speed-up-case/articleshow/5224602.cms

[15] http://www.expressbuzz.com/edition/story.aspx?Title=When+innocence+gives+way+to+unending+fears&artid=wL7YhCFYQyk=&SectionID=lifojHIWDUU=&MainSectionID=fyV9T2jIa4A=&SectionName=rSY|6QYp3kQ=&SEO=Child%20Welfare%20Committee

[16] http://timesofindia.indiatimes.com/city/chennai/More-than-one-child-rescued-from-Chennai-streets-every-day/articleshow/5166233.cms

மகளை பலத்காரம் செய்ய முயன்ற தந்தை கைது!

நவம்பர்12, 2009
மகளை பலத்காரம் செய்ய முயன்ற தந்தை கைது
நவம்பர் 12,2009,00:00  IST

http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=13942

Important incidents and happenings in and around the world

// <![CDATA[//
// <![CDATA[//

 

மூணாறு:மூணாறில் மகளை பலாத்காரம் செய்ய முயன்ற தந்தை மற்றும் ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரை போலீசார் கைது செய்தனர். மூணாறு நியூ காலனியை சேர்ந்த ராமலிங்கம் (45), ஜானகியின் மகள் கல்பனா(19) (பெயர் மாற்றப் பட்டுள்ளது). அடிமாலியில் தனியார் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் படிக்கிறார்.

மூணாறு எஸ்.ஐ., அணில்குமாரிடம், “தன் மகளை மூணாறு மகாத்மா காலனியில் வசிக்கும் ஓய்வு பெற்ற மின் வாரிய ஊழியர் முனியாண்டி (60), கணவர் ராமலிங்கம் ஆகியோர் பாலத்காரம் செய்ய முயன்றதாக’ ஜானகி புகார் செய்தார். இது குறித்து கல்பனாவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், கல்பனா கூறியதாவது:

மின்வாரியத்தில் வேலை வாங்கித்தருவதாக கூறி தந்தை ராமலிங்கம், ஓய்வு பெற்ற மின் வாரிய ஊழியர் முனியாண்டி ஆகியோர், என்னை அக்., 27 ல் திருவனந்தபுரத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு லாட்ஜ் அறையில் ராமலிங்கத்தை இருக்க சொல்லிவிட்டு, முனியாண்டி என்னை தம் பானூர் பகுதி லாட் ஜுக்கு அழைத்துச் சென்றார். அங்கு பாலத்காரம் செய்ய முயன்றார். நான் எதிர்ப்பு தெரிவித்ததால், “உன் தந்தையிடம் 10 ஆயிரம் ரூபாய் கொடுத்து அவர் சம்மதத்துடன்தான் உன்னை அழைத்து வந்தேன்,’ என்று முனியாண்டி கூறினார்.

நான் தொடர்ந்து கூச்சலிட்டதால், அறையை காலி செய்து விட்டு திரும்ப அழைத்து வந்து விட்டார். இது குறித்து என் தந்தையிடம் கேட்டபோது, அவர் மவுனமாக இருந்தார். மேலும், என் தந்தையும் என்னை பலமுறை பலாத்காரம் செய்ய முயன்றார், ” என தெரிவித்தார். அடிமாலி அருகே சாற்றுப்பாறையில் பெண்கள் பாது காப்பு மையத்தில் கல்பனா தங்க வைக்கப்பட்டுள்ளார். ராமலிங்கம், முனியாண்டியை போலீசார் கைது செய்தனர்.

சந்நியாசம் துறந்து இல்லறம் ஏற்ற சாமியார்!

நவம்பர்12, 2009
கல்லூரி பிரின்சிபாலை கைப்பிடித்தார் மாயமான துறவி
நவம்பர் 12,2009,00:00  IST

http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=5599

Front page news and headlines todayஷிமோகா : மடத்தின் அதிபதியாக இருந்த துறவி மீது காதல் வதந்தி பரப்பப்பட்டது; வெறுத்துப்போய், மூன்றாண்டுக்கு முன் “மாயமான’ துறவி, இப்போது துறவறத்தை துறந்து, விவசாயியாகி விட்டார். எந்த பெண்ணுடன் தொடர்பு என்று வதந்தி கிளப்பப்பட்டதோ, அந்த பெண்ணை மணந்தார்; இப்போது இவர்களுக்கு இரண்டு வயது குழந்தை உள்ளது.

கர்நாடக மாநிலம், தவங்கரே மாவட்டத்தில் இருக்கிறது வீரசைவ சம்பிரதாயத்தைச் சேர்ந்த நந்திகுடி மடம். இதன் மடாதிபதியாக இருந்தவர் நந்தீஸ்வர சிவாச்சார்ய சுவாமி. மடத்தின் சார்பில் உக்கடகாத்ரி என்ற இடத்தில் “காரிபஸவேஸ்ரா டி.எட்., கல்லூரி’ இயங்கி வருகிறது. கல்லூரி நிர்வாகக் குழுவின் தலைவர் மடாதிபதிதான். ஓய்வுபெற்ற ஆசிரியரான நிங்கப்பா கரதர் என்பவரின் மகள் கீதா கரதர். இவர் கர்நாடக பல்கலையில் முதுகலை முடித்து விட்டு, மடத்துக் கல்லூரியில் ஆசிரியராக சேர்ந்தார். சமூகப் பணியில் விருப்பமிருந்ததால், தனது ஆசிரியப் பணியை சம்பளம் வாங்காமல் செய்துவந்தார். இவரது உழைப்பைக் கண்டு, கல்லூரியின் பிரின்சிபாலாக நிர்வாகம் நியமித்தது.

மடாதிபதி சிவாச்சார்யரும் எம்.ஏ., பட்டம் பெற்றவர். கல்வியில் திறமை கொண்டவர். அதனால், கல்லூரி பணிகள் குறித்து அவ்வப்போது, கீதாவை அழைத்துப் பேசுவதுண்டு. ஆனால், மடத்தில் செல்வாக்கு உள்ள ஒரு கும்பல், இவர்கள் சந்திப்பை தவறான கண்ணோட் டத்துடன் வதந்தி பரப்ப ஆரம்பித்தது. “இதன் பின்னணியில் சுவாமிக்கும் கீதாவுக்கும் தொடர்பிருக்கிறது’ என்ற புரளி கிளப்பியது. இதனால் மனம் நொந்த கீதா, தனது வேலைக்கு முழுக்குப் போட்டுவிட்டு, சொந்த கிராமமான சுடாம்பிக்குத் திரும்பி விட்டார்.

வதந்தியால் பக்தர்களிடம் அன்பை இழந்து பாதிக்கப்பட்ட சுவாமியும் தனது சந்நியாச வாழ்வைத் துறப்பது என்ற முடிவு எடுத்தார். மடத்து பக்தர்களில் ஒரு பிரிவினர், மடத்து நிர்வாகத்தைக் கவனிக்க ஒரு குழுவை அமைத்துவிட்டுச் செல்லும்படி கூறினர். அப்படி அமைத்தால் அது மடத்து சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்ய வசதியாக அமைந்து விடும் என்று சுவாமி மறுத்துவிட்டார். மடத்தை கைப்பற்றி, பணத்தை “லபக்’குவது என்று பக்தர்களில் வலுவான சிலர் திட்டமிட்டனர். ஆனால், அதற்கு துறவி வழி விட தயாரில்லை. பணிந்து செல்லவும் விரும்பவில்லை. அதனால், மடத்தை விட்டு வெளியேறி விடுவது என்று இறுதி முடிவெடுத்தார்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், சுவாமிக்கு ஆறுதலாக இருந்தவர் கீதா தான். ஒரு கட்டத்தில் மடத்தை விட்டு வெளியேற முடிவு செய்தார் துறவி. கீதாவிடம் ஆலோசித்தார். “மடத்தில் இருந்து வெளியே வந்து விடுகிறேன்; இப்படிப் பட்ட பக்தர்களுடன் சேர்ந்து மடத்தை நடத்த முடியாது; எல்லாரும் பணத்துக் காக வீண் பழி சொல்லி, என்னையே அவமதிக்கின்றனர்’ என்று நொந்து கூறினார். எங்காவது சென்று, இருவரும் திருமணம் செய்து கொள்வது என்று முடிவு செய்தனர். திட்டப்படி, அவர்கள் ஹரித்வார் சென்றனர். அங்கு சந்நியாசத்தைத் துறப்பதற்கான சடங்குகளைச் செய்து, கீதாவை சிவாச்சார்யா மணம் புரிந்து கொண்டார். பின் சுவாமி ஏற் கனவே தங்கியிருந்த படடாபைலு என்ற கிராமத்தில் குடியேறினர்.

இதற்கிடையில், மடாதிபதியைக் காணவில்லை என்று பக்தர்கள் போலீசில் புகார் அளித்தனர். போலீசார், சுவாமியின் சிம் கார்டு மூலம் அவரது இருப்பிடத் தைக் கண்டறிந்தனர். ஆனால், அவர் மடத்துக்குத் திரும்ப மறுத்துவிட்டார். இதன் பின் அவரை மடாதிபதி பதவியில் இருந்து நீக்கி புதிய மடாதிபதியை பக்தர்கள் தேர்ந்தெடுத்தனர். இப்போது சிவாச்சார்யா எளிமையான விவசாயியாக தனது வாழ்க்கையை நடத்தி வருகிறார். இவர்களுக்கு இரண்டு வயதில் குருபிரசாத் என்ற மகன் இருக்கிறான்.

இது குறித்து சுவாமி கூறுகையில்,”ஒரு மத நிறுவனத்தில் பணம் சேரும் போது, தங்களது சொந்த ஆதாயங்களுக்காக பக்தர்கள் அதில் நுழைகின்றனர். சீர்கேடு ஆரம்பிக்கிறது. என் மனசாட்சிப்படி, மடத்தை விட்டு வெளியேறுவதற்கு முன், அதன் கணக்குகளை மக்கள் முன் வெளியிட தீர்மானித்தேன். துறவு வாழ்வில் கிடைக்காத அமைதி, நிம்மதி இல்லறத்தில் எனக்குக் கிட்டியது. இனி மடத் துக்குத் திரும்புவதற்கு வாய்ப்பில்லை. சுவாமி பஸவேஸ்வரரின் “காயகதர்ம’த்தை கடைப்பிடிப்பதன் மூலம் இப் போது தான் அவரது உண்மையான சீடனாக நான் வாழ்கிறேன்’ என்று மனம் திறந்து பேசினார். அவர் மனைவி கீதா,”நான் இனி வேறு எந்தப் பணியிலும் ஈடுபடப் போவதில்லை. இல்லத்தரசியாகவே இருக்க விரும்புகிறேன். நானும் என் கணவரும் எதிர்கொண்ட பிரச்னைகளே இந்த உலகுக்கு நாங்கள் கொடுக்க விரும்பும் செய்தி’ என்று கூறுகிறார்.

குள்ளப் பெண்ணை கர்ப்பமாக்கிய அரசியல் பிரமுகர்!

நவம்பர்10, 2009

குள்ளப் பெண்ணை கர்ப்பமாக்கிய அரசியல் பிரமுகர்!

சென்னை: இரண்டரை உயரமே கொண்ட பெண்ணைக் கர்ப்பமாக்கி சீரழித்து விட்டதாக அரசியல் பிரமுகர் மீது போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

சென்னை ராஜாஅண்ணாமலை புரத்தை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (28). இரண்டரை அடி உயரமே கொண்டவர் இப்பெண். தனது பெற்றோருடன் கமிஷனர் அலுவலகம் வந்த அவர் ஆணையரிடம் புகார் மனு ஒன்றைக் கொடுத்தார்.

Politician_rapes_woman

அதில், நான் ஏழை தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவள். எனது பெற்றோர் சாதாரண விவசாய கூலித்தொழில் செய்கிறார்கள். வயதிலேயே இருதய நோயோடும் நான் பிறந்தேன். இருதய நோய்க்காக நான் ஆபரேஷன் செய்துள்ளேன்.

வயிற்று பிழைப்புக்காக சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் வசிக்கும் ஒரு அரசியல் பிரமுகர் வீட்டில் நான் கடந்த இரண்டரை ஆண்டுகளாக வீட்டு வேலை செய்து வந்தேன். மாதம் ரூ.1500 சம்பளம் எனக்கு கிடைத்தது.

இந்த நிலையில் எனது வீட்டு முதலாளி அவரது மனைவி வெளியூர் சென்றிருந்த நேரத்தில் எனது கற்பை சூரையாடி விட்டார். அவரது வயது 55. அவருடைய மகளுக்கு திருமணமாகி பேரக் குழந்தைகள் உள்ளனர். மகனுக்கும் பெண் பார்க்கிறார்.

இந்த சூழலில் அவரது காம பசிக்கு என்னை மிரட்டி பலியாக்கி விட்டார். அதன் விளைவாக நான் கர்ப்பமாகி விட்டேன். விஷயத்தை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவேன் என்று என்னை மிரட்டினார். பின்னர் வெளியில் தெரியாமல் என்னை ஒரு மருத்துவமனையில் சேர்த்து கருவை கலைத்து விட்டார். இந்த விஷயம் அவரது மனைவிக்கு தெரியாது.

இதன் பிறகும் அவரது செக்ஸ் விளையாட்டு நிற்கவில்லை. என்னை ரகசிய திருமணம் செய்து கொண்டு வீட்டோடு வைத்துக் கொள்வதாக ஆசைகாட்டி மீண்டும், மீண்டும் அவரது இச்சையை தீர்த்துக்கொண்டார். இதன் விளைவாக மீண்டும் கர்ப்பமாகி விட்டேன். 6 மாத குழந்தை என் வயிற்றில் உள்ளது. இந்த முறையும் குழந்தையை கலைக்க அவர் முயற்சித்தார். ஆனால் நான் அவரது வீட்டில் இருந்து தப்பி எனது பெற்றோரிடம் வந்து விட்டேன்.

ஏழையான எனக்கும், எனது வயிற்றில் வளரும் குழந்தைக்கும் பாதுகாப்பு இல்லை. எனது பெற்றோர் உயிருக்கும் ஆபத்து உள்ளது. எனது குழந்தைக்கு கண்டிப்பாக தந்தை வேண்டும். என்னை சீரழித்த அரசியல் பிரமுகரை விசாரித்து, அவரை எனது குழந்தைக்கு தந்தையாக்க வேண்டும் என்று பணிவாக கேட்டுக்கொள்கிறேன்.

இருதய நோயாளியான எனது உயிருக்கு எந்த நேரமும் ஆபத்து வரும் நிலையும் உள்ளது என்பதையும் கண்ணீருடன் கூறிக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார் ராஜேஸ்வரி.

இதுகுறித்து விசாரிக்குமாறு மயிலாப்பூர் துணை ஆணையர் மவுரியாவுக்கு ஆணையர் ராஜேந்திரன் உத்தரவிட்டார்.

காதல் திருமணம் செய்த மகளை கொன்ற தந்தை உட்பட மூவர் தலைமறைவு

நவம்பர்5, 2009
காதல் திருமணம் செய்த மகளை கொன்ற தந்தை உட்பட மூவர் தலைமறைவு
நவம்பர் 05,2009,00:00  IST

http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=13811

உடுமலை: காதல் திருமணம் செய்த மகளை, தந்தை, அண்ணன் உட்பட மூன்று பேர் கும்பல், கத்தியால் சரமாரியாக குத்திக் கொலை செய்து தப்பியோடியது. திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகேயுள்ள மடத்துக்குளம் தேவேந்திரர் வீதியில் வசிப்பவர் அம்மாபட்டியான் மகன் பத்ரகாளி (25). பழநி அருகே சண்முகநதி பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் மகள் ஸ்ரீபிரியா (21). இருவரும், தாராபுரத்தில் உள்ள தனியார் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் படித்து, பயிற்சிக்கு சென்றபோது பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் காதலாக மாறியுள்ளது. ஒரு மாதத்திற்கு முன் சேலத்தில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் திருமணம் செய்து கொண்டனர்.

இதற்கு, ஸ்ரீபிரியாவின் வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், இருவரும் மடத்துக்குளம் தேவேந்திரர் வீதியிலுள்ள பத்ரகாளியின் சகோதரியான ராணி வீட்டில் தனியாக வசித்து வந்தனர். இந்நிலையில், நேற்று பகல் 1.45 மணியளவில், ஸ்ரீ பிரியாவின் வீட்டிற்கு அவரது தந்தை சீனிவாசன், இவரது அண்ணன் மகன் ராஜு கண்ணன் மற்றும் அடையாளம் தெரியாத ஒருவர் வந்தனர். ராஜு கண்ணன் மட்டும் வீட்டிற்குள் சென்று ஸ்ரீபிரியாவிடம்,” உறவினர்கள் மத்தியில் அவமானமாக உள்ளது. வந்து விடு. நமது சாதியிலேயே வேறு திருமணம் செய்து வைத்து விடுகிறோம்’ என கூறினார். இதற்கு ஸ்ரீ பிரியா சம்மதிக்காததால், இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

ஒரு கட்டத்தில், ஸ்ரீ பிரியாவின் அலறல் சத்தம் கேட்டு, அதிர்ச்சியடைந்த பக்கத்து வீட்டில் குடியிருக்கும் ஈஸ்வரி, ராணி மற்றும் சில பெண்கள் வீட்டிற்கு ஓடி வந்தனர். அப்போது, காம்பவுண்ட் சுவர் அருகே பாதுகாப்புக்கு நின்ற அடையாளம் தெரியாத நபர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, பெண்களின் கழுத்தில் வைத்து, “யாராவது நெருங்கி வந்தால் கொன்று விடுவேன்’ என மிரட்டினார். வெளியில் இருந்த ஸ்ரீபிரியாவின் தந்தை சீனிவாசன், “அவளை கொன்று விட்டு வாடா’ என கூச்சல் போட்டுள்ளார். ஸ்ரீ பிரியாவை கத்தியால் சரமாரியாக குத்தியதால், ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். இதன் பின், மூன்று பேரும் தப்பி ஓடினர். இத்தகவல் கிடைத்ததும், உடுமலை டி.எஸ்.பி., ராஜா தலைமையில் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். தப்பி ஓடியவர்களை பிடிக்க நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

பெண்ணிடம் சில்மிஷம்: எஸ்.ஐ., டிஸ்மிஸ்

நவம்பர்5, 2009
பெண்ணிடம் சில்மிஷம்: எஸ்.ஐ., டிஸ்மிஸ்
நவம்பர் 05,2009,00:00  IST

http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=13813

தூத்துக்குடி: கன்னியாகுமரி, கோட்டாறு போலீஸ் எஸ்.ஐ., ராஜாராம். இவர் அங்கிருந்த போது ஒரு பெண்ணிடம் சில்மிஷம் செய்ததாக, சம்பந்தப்பட்டவர், நெல்லை டி.ஐ.ஜி., கண்ணப்பனுக்கு புகார் மனு அனுப்பினார். இதையடுத்து எஸ்.ஐ., ராஜாராம், கோட்டாறிலிருந்து தூத்துக்குடி சிப்காட் போலீஸ் ஸ்டேஷனிற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். சிப்காட் ஸ்டேஷனில் மூன்று நாட்களுக்கு முன் பொறுப்பேற்ற ராஜாராமை, டிஸ்மிஸ் செய்து, டி.ஐ.ஜி., கண்ணப்பன் நேற்று உத்தரவிட்டார்.