காதல் திருமணம் செய்த மகளை கொன்ற தந்தை உட்பட மூவர் தலைமறைவு


காதல் திருமணம் செய்த மகளை கொன்ற தந்தை உட்பட மூவர் தலைமறைவு
நவம்பர் 05,2009,00:00  IST

http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=13811

உடுமலை: காதல் திருமணம் செய்த மகளை, தந்தை, அண்ணன் உட்பட மூன்று பேர் கும்பல், கத்தியால் சரமாரியாக குத்திக் கொலை செய்து தப்பியோடியது. திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகேயுள்ள மடத்துக்குளம் தேவேந்திரர் வீதியில் வசிப்பவர் அம்மாபட்டியான் மகன் பத்ரகாளி (25). பழநி அருகே சண்முகநதி பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் மகள் ஸ்ரீபிரியா (21). இருவரும், தாராபுரத்தில் உள்ள தனியார் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் படித்து, பயிற்சிக்கு சென்றபோது பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் காதலாக மாறியுள்ளது. ஒரு மாதத்திற்கு முன் சேலத்தில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் திருமணம் செய்து கொண்டனர்.

இதற்கு, ஸ்ரீபிரியாவின் வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், இருவரும் மடத்துக்குளம் தேவேந்திரர் வீதியிலுள்ள பத்ரகாளியின் சகோதரியான ராணி வீட்டில் தனியாக வசித்து வந்தனர். இந்நிலையில், நேற்று பகல் 1.45 மணியளவில், ஸ்ரீ பிரியாவின் வீட்டிற்கு அவரது தந்தை சீனிவாசன், இவரது அண்ணன் மகன் ராஜு கண்ணன் மற்றும் அடையாளம் தெரியாத ஒருவர் வந்தனர். ராஜு கண்ணன் மட்டும் வீட்டிற்குள் சென்று ஸ்ரீபிரியாவிடம்,” உறவினர்கள் மத்தியில் அவமானமாக உள்ளது. வந்து விடு. நமது சாதியிலேயே வேறு திருமணம் செய்து வைத்து விடுகிறோம்’ என கூறினார். இதற்கு ஸ்ரீ பிரியா சம்மதிக்காததால், இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

ஒரு கட்டத்தில், ஸ்ரீ பிரியாவின் அலறல் சத்தம் கேட்டு, அதிர்ச்சியடைந்த பக்கத்து வீட்டில் குடியிருக்கும் ஈஸ்வரி, ராணி மற்றும் சில பெண்கள் வீட்டிற்கு ஓடி வந்தனர். அப்போது, காம்பவுண்ட் சுவர் அருகே பாதுகாப்புக்கு நின்ற அடையாளம் தெரியாத நபர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, பெண்களின் கழுத்தில் வைத்து, “யாராவது நெருங்கி வந்தால் கொன்று விடுவேன்’ என மிரட்டினார். வெளியில் இருந்த ஸ்ரீபிரியாவின் தந்தை சீனிவாசன், “அவளை கொன்று விட்டு வாடா’ என கூச்சல் போட்டுள்ளார். ஸ்ரீ பிரியாவை கத்தியால் சரமாரியாக குத்தியதால், ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். இதன் பின், மூன்று பேரும் தப்பி ஓடினர். இத்தகவல் கிடைத்ததும், உடுமலை டி.எஸ்.பி., ராஜா தலைமையில் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். தப்பி ஓடியவர்களை பிடிக்க நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

ஒரு பதில் to “காதல் திருமணம் செய்த மகளை கொன்ற தந்தை உட்பட மூவர் தலைமறைவு”

  1. K. Chitra Rao Says:

    These men cannot be considered father, brother of the killed daughter – sister, as they have been inhuman creatures roaming in a nation like cruel animals.

    What has made them such condition has to be analyzed, and they should be punished accordingly.

    The facts should be frevealed tlo others, so that such type of psychpathic crimes are not repeated or recurred.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: