குள்ளப் பெண்ணை கர்ப்பமாக்கிய அரசியல் பிரமுகர்!


குள்ளப் பெண்ணை கர்ப்பமாக்கிய அரசியல் பிரமுகர்!

சென்னை: இரண்டரை உயரமே கொண்ட பெண்ணைக் கர்ப்பமாக்கி சீரழித்து விட்டதாக அரசியல் பிரமுகர் மீது போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

சென்னை ராஜாஅண்ணாமலை புரத்தை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (28). இரண்டரை அடி உயரமே கொண்டவர் இப்பெண். தனது பெற்றோருடன் கமிஷனர் அலுவலகம் வந்த அவர் ஆணையரிடம் புகார் மனு ஒன்றைக் கொடுத்தார்.

Politician_rapes_woman

அதில், நான் ஏழை தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவள். எனது பெற்றோர் சாதாரண விவசாய கூலித்தொழில் செய்கிறார்கள். வயதிலேயே இருதய நோயோடும் நான் பிறந்தேன். இருதய நோய்க்காக நான் ஆபரேஷன் செய்துள்ளேன்.

வயிற்று பிழைப்புக்காக சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் வசிக்கும் ஒரு அரசியல் பிரமுகர் வீட்டில் நான் கடந்த இரண்டரை ஆண்டுகளாக வீட்டு வேலை செய்து வந்தேன். மாதம் ரூ.1500 சம்பளம் எனக்கு கிடைத்தது.

இந்த நிலையில் எனது வீட்டு முதலாளி அவரது மனைவி வெளியூர் சென்றிருந்த நேரத்தில் எனது கற்பை சூரையாடி விட்டார். அவரது வயது 55. அவருடைய மகளுக்கு திருமணமாகி பேரக் குழந்தைகள் உள்ளனர். மகனுக்கும் பெண் பார்க்கிறார்.

இந்த சூழலில் அவரது காம பசிக்கு என்னை மிரட்டி பலியாக்கி விட்டார். அதன் விளைவாக நான் கர்ப்பமாகி விட்டேன். விஷயத்தை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவேன் என்று என்னை மிரட்டினார். பின்னர் வெளியில் தெரியாமல் என்னை ஒரு மருத்துவமனையில் சேர்த்து கருவை கலைத்து விட்டார். இந்த விஷயம் அவரது மனைவிக்கு தெரியாது.

இதன் பிறகும் அவரது செக்ஸ் விளையாட்டு நிற்கவில்லை. என்னை ரகசிய திருமணம் செய்து கொண்டு வீட்டோடு வைத்துக் கொள்வதாக ஆசைகாட்டி மீண்டும், மீண்டும் அவரது இச்சையை தீர்த்துக்கொண்டார். இதன் விளைவாக மீண்டும் கர்ப்பமாகி விட்டேன். 6 மாத குழந்தை என் வயிற்றில் உள்ளது. இந்த முறையும் குழந்தையை கலைக்க அவர் முயற்சித்தார். ஆனால் நான் அவரது வீட்டில் இருந்து தப்பி எனது பெற்றோரிடம் வந்து விட்டேன்.

ஏழையான எனக்கும், எனது வயிற்றில் வளரும் குழந்தைக்கும் பாதுகாப்பு இல்லை. எனது பெற்றோர் உயிருக்கும் ஆபத்து உள்ளது. எனது குழந்தைக்கு கண்டிப்பாக தந்தை வேண்டும். என்னை சீரழித்த அரசியல் பிரமுகரை விசாரித்து, அவரை எனது குழந்தைக்கு தந்தையாக்க வேண்டும் என்று பணிவாக கேட்டுக்கொள்கிறேன்.

இருதய நோயாளியான எனது உயிருக்கு எந்த நேரமும் ஆபத்து வரும் நிலையும் உள்ளது என்பதையும் கண்ணீருடன் கூறிக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார் ராஜேஸ்வரி.

இதுகுறித்து விசாரிக்குமாறு மயிலாப்பூர் துணை ஆணையர் மவுரியாவுக்கு ஆணையர் ராஜேந்திரன் உத்தரவிட்டார்.

குறிச்சொற்கள்: , , , ,

2 பதில்கள் to “குள்ளப் பெண்ணை கர்ப்பமாக்கிய அரசியல் பிரமுகர்!”

 1. M. Nachiappan Says:

  திராவிடம் பேசி விபச்சாரத்தை வளர்க்கும் இந்த காமுகர்கள் தாம் பதில் சொல்லவேண்டும்.

  அண்ணயிஸம், பெரியாரிஸம் அல்லது கருணாநிதியிஸம் தான் இதற்குக் காரணம் என்றால் அவற்றைத் தூக்கி எறியவேண்டும்.

  மாறாக அவையெல்லாம் பொன்ன்முலாம் பூசி பல்கலஒக்கழகங்களில் பட்டப்படிப்புகளுக்கு பாடமாக்க முயல்கிறார்கள்!

  திராவிட-நாத்திக சித்தாந்தம் வளர்ந்ததிலிருந்து இத்தகைய சீரழிவுகள் தமிழகத்த்ஜில் வளர்ந்து, பெருகி கட்டுக்கு அடச்ங்காமல் இருக்கிறது, மேன்மேலும் வளர்கிறது என்றால் அதற்கு அவர்கள்தாம் காரணம்.

  இனாரைய நிலையில் அவை தோல்விதான் அல்லது சமுதாயத்திற்கு எந்தவிதத்த்ஜிலும் உபயஓகப்படாது என்று அறிந்தால்க் மக்கள் அவற்றைத் தீக்கி எறியவேண்டும்.

  அரசியல்வாதிகள் தமச்து பிழைப்பிற்காக அவ்வறு பேசிக்கொண்டே இருப்பார்கள்.

  மக்களஒ பொரித்துவைக்க சித்தாந்தகளை பேசிக் கொண்டே இருப்பார்கள் அன்னல் அதனால் அவர்களுக்கு லாபமேடத் தவிர மக்களுக்கு இல்லை,

  இதனை மக்கள் அறிந்து கொண்டால், மக்கள் எதற்கு அவற்றை வைத்துக் கொண்டு மாரச்டிக்கவேண்டும்?

  மக்களுக்கு வேண்டியது நல்லது.

  அவர்களால் அவர்களது சித்தாந்தத்தினால் அதை அளிக்கமுடியாது என்றால் அவற்றை தூக்கித்தான் எறியவேண்டும்.

 2. K. Chitra Rao Says:

  That in a country, where womanhood is honoured, respected and deified, now women are treated like this, is simply cannot be acceptable.

  Even the unscrupulous politicians want to maintain his family.

  How then they indulge in such activities of demeaning women?

  They talk so much about Tamil culture and so on, but when practice comes, their behavior has been worst than any other barbaric society.

  Therefore, if they do not change their hypocritic practices, people have to change them.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: