மகளை பலத்காரம் செய்ய முயன்ற தந்தை கைது!


மகளை பலத்காரம் செய்ய முயன்ற தந்தை கைது
நவம்பர் 12,2009,00:00  IST

http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=13942

Important incidents and happenings in and around the world

// <![CDATA[//
// <![CDATA[//

 

மூணாறு:மூணாறில் மகளை பலாத்காரம் செய்ய முயன்ற தந்தை மற்றும் ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரை போலீசார் கைது செய்தனர். மூணாறு நியூ காலனியை சேர்ந்த ராமலிங்கம் (45), ஜானகியின் மகள் கல்பனா(19) (பெயர் மாற்றப் பட்டுள்ளது). அடிமாலியில் தனியார் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் படிக்கிறார்.

மூணாறு எஸ்.ஐ., அணில்குமாரிடம், “தன் மகளை மூணாறு மகாத்மா காலனியில் வசிக்கும் ஓய்வு பெற்ற மின் வாரிய ஊழியர் முனியாண்டி (60), கணவர் ராமலிங்கம் ஆகியோர் பாலத்காரம் செய்ய முயன்றதாக’ ஜானகி புகார் செய்தார். இது குறித்து கல்பனாவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், கல்பனா கூறியதாவது:

மின்வாரியத்தில் வேலை வாங்கித்தருவதாக கூறி தந்தை ராமலிங்கம், ஓய்வு பெற்ற மின் வாரிய ஊழியர் முனியாண்டி ஆகியோர், என்னை அக்., 27 ல் திருவனந்தபுரத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு லாட்ஜ் அறையில் ராமலிங்கத்தை இருக்க சொல்லிவிட்டு, முனியாண்டி என்னை தம் பானூர் பகுதி லாட் ஜுக்கு அழைத்துச் சென்றார். அங்கு பாலத்காரம் செய்ய முயன்றார். நான் எதிர்ப்பு தெரிவித்ததால், “உன் தந்தையிடம் 10 ஆயிரம் ரூபாய் கொடுத்து அவர் சம்மதத்துடன்தான் உன்னை அழைத்து வந்தேன்,’ என்று முனியாண்டி கூறினார்.

நான் தொடர்ந்து கூச்சலிட்டதால், அறையை காலி செய்து விட்டு திரும்ப அழைத்து வந்து விட்டார். இது குறித்து என் தந்தையிடம் கேட்டபோது, அவர் மவுனமாக இருந்தார். மேலும், என் தந்தையும் என்னை பலமுறை பலாத்காரம் செய்ய முயன்றார், ” என தெரிவித்தார். அடிமாலி அருகே சாற்றுப்பாறையில் பெண்கள் பாது காப்பு மையத்தில் கல்பனா தங்க வைக்கப்பட்டுள்ளார். ராமலிங்கம், முனியாண்டியை போலீசார் கைது செய்தனர்.

ஒரு பதில் to “மகளை பலத்காரம் செய்ய முயன்ற தந்தை கைது!”

  1. M. Nachiappan Says:

    மேனாட்டு மதப் புராணங்களில்தான் இத்தகைய முன்னோடிக் கதைகளைப் பார்க்கலாம்.

    ஆகவே மேனேட்டு கலாச்சார தாகுதல்கள், சினிமாவில் அப்படியே சொல்லித்தரும் வழிமுறைகள், கேவலமான வசனங்கள், ஆபாசாமன் பாடல்கள், அத்ற்கேற்றாற்போல உடைகளைக் குறைத்து அல்லது முழுவதும் நீக்கிவிட்டு ஆடத்தயாராக இருக்கும் மத்திப்புக்குரொய “பெரிய்ய” நடிகைகள், கற்பைப் பற்றி கேவலமான விளக்கம் அளிக்கும் அதிமேதாவி நடிகைகள், ….என இந்த கும்பலே மேனாட்டுக் கம்பெனிக:ளின் ஏஜென்டுககளாக வேலை செய்வதனால் இந்திய சமூகத்தை பற்றிக் கொண்ஹ்சம் கூட கவலைப் படாமல் தமது தாக்குதல்களை தொடுத்துள்ளார்கள்.

    இந்தியர்கள் இதை உணர்ந்து கொண்டால் ஒழியா யாஸ்ரீஉம் இத்தகைய சீரழிவுகளைத் தடுக்கமுடியாது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: