நான் அவனில்லை – III


பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து ரூ.பல கோடி மோசடி செய்ததாக புகார்
நவம்பர் 27,2009,00:00  IST

http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=14325

Important incidents and happenings in and around the worldமதுரை:திருமண “வெப்சைட்’ மூலம் பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக பொன்குமரன் என்பவர் மீது பாதிக்கப்பட்ட பெண் தென்மண்டல ஐ.ஜி., அலுவலகத்தில் புகார் செய்தார்.தேனி மாவட்டம், போடி வரதராஜ் நகரைச் சேர்ந்தவர் நளினி(36). கடந்தாண்டு சென்னையில் வசித்தபோது, திருமண “வெப்சைட்’ நிறுவனத்தின் மூலம் மாப்பிள்ளை தேடினார். பொன்குமரன்(38) என்பவரை தேர்வு செய்தார்.

இவர் லண்டன் நியூபார்க் கம்பெனியில் நிர்வாக மேலாளராக இருப்பதாக கூறியதை நம்பி திருமண ஏற்பாடுகள் நடந்தன. பெண் பார்த்தது முதல் 150 சவரன் நகை, 15 லட்சம் ரூபாய் வரதட்சணை கேட்டது வரை அனைத்தையும் தனி ஒரு ஆளாகவே பொன்குமரன் மேற்கொண்டார்.கடந்த பிப்ரவரியில் நிச்சயதார்த்தம் நடக்கவிருந்தது. அதற்காவது மாப்பிள்ளை வீட்டார் வருவர் என நளினி குடும்பத்தினர் எதிர்ப்பார்த்தனர்.

ஆனால், நிகழ்ச்சிக்கு வரும் வழியில், விபத்தில் பெற்றோர் இறந்துவிட்டதாக கூறி நிச்சயதார்த்தம் செய்யாமல் பொன்குமரன் புறப்பட்டு சென்றார். பின் மார்ச் 21ல், திருப்பதியில் திருமணம் நடந்தது. அப்போதும், உறவினர்கள் வரவில்லை.இந்நிலையில், “அவர் மோசடி பேர்வழி. பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார். என்னிடம் இருந்து 4 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள், பணத்தை பெற்று ஏமாற்றியுள்ளார்’ என்று நளினி, நேற்று தென்மண்டல ஐ.ஜி., அலுவலகத்தில் வக்கீல் சரவணகுமாரிடம் புகார் செய்தார்.

அவர் நிருபர்களிடம் கூறியதாவது:திருப்பதி கோவில் லட்டுக்கு 60 டன் ஏலக்காய் சப்ளை செய்ய அனுமதி வாங்கி தருகிறேன் என்றுகூறி, 40 லட்சம் ரூபாய் வாங்கினார். இதை நம்பி போடிக்கு குடும்பத்துடன் இடம் பெயர்ந்தோம். நண்பர்களுக்கு மருத்துவ சீட் வாங்கித் தருவதாக எங்களிடம் 30 லட்சம் ரூபாய் பெற்றார். ஆனால் எதுவும் நடக்கவில்லை.அவரது குடும்பத்தினர் குறித்து கேட்கும் போதெல்லாம் எதையாவது கூறி சமாளித்தார்.

மும்பை, புனே உட்பட சில இடங்களில் உள்ள வீடுகளை எனது பெயருக்கு போலியாக மாற்றிக் கொடுத்தார். புனேயில் அவர் வசித்த வீட்டிற்கு சென்றேன். பல பெண்களை திருமணம் செய்து ஏமாற்றியவர் என அப்போதுதான் தெரிந்தது. அதற்கு, ஆதாரமாக உள்ள “சிடி”களை உடனே அழித்துவிட்டு, “நான் செய்தது எல்லாம் தவறுதான்’ என்றுக்கூறிவிட்டு தலைமறைவாகிவிட்டார் என்றார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: