நிர்வாணதேசத்தில் கோமணம் கட்டியவன் தான் நான்!


நிர்வாணதேசத்தில் கோமணம் கட்டியவன் தான் நான்!

தமிழச்சிக் கலக்குகிறாள் அங்கே, தமிழச்சி கலங்குகிறாள் இங்கே

தமிழனும் கலங்குகிறான், தமிழன் பதறுகிறான் இப்பாரதத்தில்.

நாகரிகத்தின் அநாகரிகமா, அப்பண்பாட்டுச் செருக்கின் சீரழிவா

நிர்வாணம் அகோரமா, விகாரமா, அசிங்கமா, ஆபாசமா? [1]

புத்தரை வெல்லும் நிர்வாணமா ஜைனத்தை வெல்லும் நிர்வாணமா

இல்லை, கிரேக்க-ரோமானிய நிர்வாணத்தையும் வெல்லும் அவமானமா

நிர்வாணத்திலும் சமதர்மம் பார்க்கும் அம்மணமான பெண்மையே

உன்னை மூட முடியாதலால் மூடுகிறேன் எனது கண்களை. [2]

பத்மா லட்சுமி, அம்மா தாயே, தெய்வமே பயமாக இருக்கிறது!

பத்மஸ்ரீக்கள், கலைமாமணிகள் நோக்க நோகடிக்கவே

சுபாஷினி அலி, பார்வதி கான், என்று கேள்விப்பட்டிருக்கிறோம்

சல்மான் ருஸ்டியின் பத்தினி நீ, கண்ணகியையும் வென்றுவிடாய். [3]

தமிழன் பாடினான் ஓரக்கண்ணால் பார்த்தாலே “பிள்ளத்தாச்சி”

தமிழச்சி நீயோ கண்களைக் கட்டுகிறாய், நீயும் ஒரு “பிள்ளத்தாச்சி”

அச்சம், நாணம், மடம், கற்பு, பயிர்ப்பு என்ற ஐங்குணங்கள்

அச்சம்கொண்டு நாணிமடத்துடன் கற்பைவிட்டு பயிர்ப்போடு பெயர்ந்தன. [4]

பத்மஸ்ரீக்களின் கலக்கல்களின்று மீள்வதற்குள், நீ மீறிவிட்டாய்.

“தமிழச்சி”களின் “முலைகள்” கவிதைக் கொடுமைகள் தீருவதற்குள்

தமிழச்சி நீ குனிந்து விட்டாய், நாங்கள் தலை குனிந்துவிட்டோம்.

கைகால்களை சேர்த்து குவித்துவிட்டாய், நாங்களும் கூனிக்குருகிவிட்டோம். [5]

கற்பாம், மானமாம், கண்ணகியாம், சீதையாம் பாடப்பட்டது அன்று

அதெல்லாம் பார்க்கமுடியாது என்ற குஷ்புவிற்கு காட்டுகிறாய் நீ இன்று

மனம் மாறினால் மணம் மாறுகிறது, மணம் மாறினால் மனம் மாறுகிறது.

இருமனம்-திருமணம், பலமனம்-பலமணம் குஷ்பு மாறுகிறது, நாறுகிறது. [6]

அம்மணத்தில் எம்மணம் பொதுமையானதென ஆயும் கம்யூனிஸ தந்தைல்லை

நிர்வாணத்தில் பகுத்தறிவோடு புகுந்து பார்க்க பெரியாரின் சகோதரனுமில்லை

அம்மணியின் அந்தரங்கங்களைப் பேச நான் மோஹனரங்க புருஷனுமில்லை

இம்மாநிலத்தில் பிறந்து வளர்ந்து தமிழ் கற்றுக்கொண்ட அந்நியன் நான். [7]

பெண்ணின் உடல் என்பது யாருக்குச் சொந்தம் என்பதிலில்லைப் பிரச்சினை

அவ்வுடலின் நிர்வாணம் யாருக்குச் சொந்தம் என்பதில்தான் சர்ச்சை

ஒழுங்கு-ஒழுங்கீனம் என்று நிர்வாணத்தின் சாரம்-ஆசாரம் கண்டு

பகுத்தறிவோடு தரச்சான்றிதழ் கொடுக்கும் பன்னாட்டு நிருவனங்களுமில்லை [8]

நங்காசாதுக்களுடன் நங்கைசென்றால் தடுப்பது பாரதமில்லை இந்தியா

நங்கைகளையும் மறுத்து, நிர்வாணங்களை அரங்கேற்றுவது இவ்விந்தியா

ஜைன நங்காக்களையும் மறுப்பதும் பெரியாரியம் பேசி கல்லடிப்பதும் தமிழகம்

பாரதத்திற்கு சமாளிக்கவேண்டிய நிலையில்லை, நாரிகளுக்குத்தான் உள்ளது. [9]

காமத்தைக்காதலாக்கி இச்சைகளைக்கொச்சைப்படுத்தி நடத்துவது புனிதப்போர்!

நிர்வாணத்தை நிருவானமாக்கி சித்தாந்தம் பேசி மயக்குவது உலகத்துவப்போர்.

பாற்சமன்பாடுசெய்ய பால்சமத்துவம் பேசும் பால்கார சண்டைகள் வேண்டாம்

பாற்கடலைக்கடைந்தால் மகனெப்படி பிறப்பானென்ற பகுத்தறிவும் வேண்டாம். [10]

நிர்வாணத்தில் நிர்மலமில்லாவிடில் மலமிகும் அம்மணவாழ்க்கையில்

அம்மணத்தை படமிட்டு சமத்துவம் பேசினால் தாயும் வேசியாகுவாள்

நிருவானத்தில் பொதுவுடமை கொண்டால், கொண்டவள் பங்கு போடப்படுவாள்

இப்பெண்மை நிர்வாணத்தில் வேண்டாம் எனக்கு சமத்துவம், சகோதரத்துவம் [11]

அம்மனை அம்மத்தை மறைத்தது தொழில்நுட்பமாவென ஆயும் தகுதியில்லை

நிர்வாணம் அடையத்துடிக்கும் புத்தனாகி போதிமரத்திடியில் தங்க நேரமில்லை

நிரியானம் அடைய வடக்கிருக்க நிருவாண தீட்சையும் பெறவில்லை

நிருவானம் பார்க்க அருகனுமில்லை, அந்த அருகதையும் எனக்கில்லை.[12]

பாசநேசமுள்ள மகளின் தந்தை நான் அன்பு-பண்புடைய அக்காளின் தம்பி நான்

ஆசாபாசமுள்ள கொண்ட தங்கையின் அண்ணன் நான்; பாரததேசத்தவன் நான்

மனைவியின் நிர்வாணம் எனக்குத்தானெண்ணும் பொறாமைக் கணவன் நான்

அவை தவறென்றால் நிர்வாணதேசத்தில் கோமணம் கட்டியவன் தான் நான்! [13]

வேதபிரகாஷ்

05-12-2009

குறிச்சொற்கள்: , , , , , ,

2 பதில்கள் to “நிர்வாணதேசத்தில் கோமணம் கட்டியவன் தான் நான்!”

  1. kavirimainthan Says:

    கவலை வேண்டாம் நண்பரே !

    உங்களுக்குத் துணையாக இன்னும் நிறைய கோவணாண்டிகள்
    இங்கே இருக்கிறோம்.

    அங்கே தோற்றத்தில் நிர்வாணம் காட்டும் பத்மா லட்சுமி –
    இங்கே பேச்சில், தோரணையில் நிர்வாணம் காட்டும்
    குஷ்பு, நமீதா, புவனேஸ்வரி …..

    ஏழைப்பெண்கள் வயிற்றுUபிழைப்பிற்காக செய்யும் போது அந்தக்காலத்தில் தினத்தந்தி -யில் “இரவு ராணிகள் ”
    என்று போடுவார்கள்.

    இன்று பணக்காரப் பெண்மணி (?)கள் அதே செயலில்
    ஈடுபடுமபோது அவர்களைக் குறிக்க ஒரு பொருத்தமான
    வார்த்தையை கண்டுபிடிக்க வேண்டும்.

    தொடரட்டும் உங்கள் பணி – உணர்ச்சி கொட்டும்
    வார்த்தை அமைப்புக்கு பாராட்டுகள் .

    காவிரி மைந்தன்
    http://www.vimarisanam.wordpress.com

பின்னூட்டமொன்றை இடுக