ஆபாச படம் எடுத்து மிரட்டினாரா? சாமியார் மீது பெண் பரபரப்பு புகார்


ஆபாச படம் எடுத்து மிரட்டினாரா? சாமியார் மீது பெண் பரபரப்பு புகார்
டிசம்பர் 15,2009,00:00  IST

http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=14703

சென்னை : ஆபாச படம் எடுத்து சாமியார் ஒருவர், தன்னை செக்ஸ் கொடுமை செய்து வருகிறார் என, பெண் ஒருவர் சென்னை போலீஸ் கமிஷனரை சந்தித்து புகார் கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்தவர் ஹேமலதா. இவர் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனைச் சந்தித்து, சாமியார் மீது பரபரப்பு புகார் செய்தார்.

புகாரில் ஹேமலதா கூறியிருப்பதாவது: அடையாறில் உள்ள மிஷன் ஒன்றில் உள்ள ஈஸ்வர ஸ்ரீகுமார் என்ற சாமியார் தனது நிறுவனத்தில் வேலைக்கு ஆள் தேவைப்படுவதாக அறிந்து விண்ணப்பித்தேன். நேர்முகத்தேர்வு நடத்திய அவர், தற்போது மேற்பார்வையாளர் வேலை தருவதாகவும், பின் சிங்கப்பூரில் உள்ள நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் உயர்பதவி தருவதாகவும் ஆசை காட்டினார்.

* தனி அறையில் வைத்து காபியில் மயக்க மருத்து கொடுத்து, என்னை பலாத்காரம் செய்துவிட்டார். அதை குடித்த சிறிது நேரத்தில் மயங்கிவிட்டேன்.

* கண்விழித்துப் பார்த்த போது என் ஆடைகள் கலைந்த நிலையில் அலங்கோலமாகக் கிடந்தேன். என்னை சாமியார் பலாத்காரம் செய்துவிட்டதை உணர்ந்தேன். இதுபற்றி கேட்டபோது, வெளியில் சொன்னால், கொலை செய்துவிடுவேன் என மிரட்டினார். உல்லாசம் இருந்ததை வீடியோ எடுத்து வைத்திருப்பதாக மிரட்டி, வீட்டிற்கு வரவைத்து கற்பழித்தார். அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். வீடியோவை அழித்து எனக்கு பாதுகாப்பு கொடுங்கள். இவ்வாறு, புகாரில் தெரிவித்திருந்தார். இதுகுறித்து, மாம்பலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதனிடையே, நேற்று மாலை நிருபர்களை சந்தித்த ஹேமலதா, தனக்கு நேர்ந்த கொடுமைகளை விவரித்தார். இதுபோன்ற கொடுமை வேறு பெண்ணுக்கு வரக்கூடாது என, கதறி அழுதார்.

செக்ஸ் புகாரை மறுத்துள்ள ஈஸ்வர ஸ்ரீகுமார்,” நிலம் தொடர்பாக, வழக்கு நடந்து வருகிறது. எதிராளிகள் என்னை பணிய வைக்க ஹேமலதாவை கருவியாக பயன்படுத்துகின்றனர்’ என்றார். காஞ்சிபுரம் அர்ச்சகர் தேவநாதன் விவகாரம் சற்று ஓய்ந்துள்ள நிலையில், அடுத்ததாக ஹேமலதாவின் செக்ஸ் புகார், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Eswarakumar Swamiji

மறுக்கிறார் ஸ்வாமிஜி:

http://thatstamil.oneindia.in/news/2009/12/14/rape-case-against-chennai-swamiji.html

புகார் குறித்து சாமியார் ஈஸ்வர ஸ்ரீகுமார் கூறுகையில்,

“ஹேமலதா என் மனைவிக்கு பிசியோதெரபி மசாஜ் செய்வதற்காக என் வீட்டுக்கு வந்து செல்வார். அந்த பெண்ணுக்கும் எனக்கும் சம்பந்தமு இல்லை. நான் பெண்கள் விவகாரத்தில் எல்லாம் சிக்ககூடிய ஆள் இல்லை. எனது மந்தைவெளி நிலம் தொடர்பாக வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. எதிர்தரப்பு என்னை பணியவைக்க ஹேமலதாவை கருவியாக பயன்படுத்த பார்க்கிறது. அவர்கள் நானும் ஹேமலதாவும் சேர்ந்திருக்கும் படம் வைத்திருப்பதாக ஆரம்பத்தில் மிரட்டினர். இப்போது நான் ஆபாச படம் எடுத்து மிரட்டுவதாக சொல்கிறார்கள்”, என்றார்.

case-registered-against-samiyar-for-alleged-rape

swarakumar Swamiji and Hemalatha

சென்னை சாமியார் ஈஸ்வர ஸ்ரீகுமாரால் கற்பழிக்கப்பட்டு ஆபாசப் படம் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் பெண் ஹேமலதாவுக்கு மருத்துவ பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தலைமறைவாகிவிட்ட ஈஸ்வர ஸ்ரீகுமாரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

?

5 பதில்கள் to “ஆபாச படம் எடுத்து மிரட்டினாரா? சாமியார் மீது பெண் பரபரப்பு புகார்”

 1. vedaprakash Says:

  சாமியாருக்கு போலீஸ் இறுதி ‘கெடு’
  டிசம்பர் 20,2009,00:00 IST
  http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=14810

  சென்னை: சென்னை சாமியார் மீதான கற்பழிப்பு புகாரில், போலீசார் இதுவரை 50 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணைக்கு வருமாறு சாமியார் ஈஸ்வர ஸ்ரீகுமாரை போலீசார் பலமுறை அழைத்தபோதும், “இதோ வருகிறேன்; அதோ வருகிறேன்’ என, சாமியார் “டிமிக்கி’ கொடுத்து வருகிறார். அவருக்கு போலீசார் இறுதி கெடு வழங்கியுள்ளனர்.

  சென்னை, தேனாம்பேட்டையைச் சேர்ந்த ஹேமலதா(35), தி.நகரைச் சேர்ந்த ஈஸ்வர ஸ்ரீகுமார் தன்னை கற்பழித்து விட்டதாக போலீசில் புகார் செய்தார். மாம்பலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில், ஹேமலதாவிடம் போலீசார் ஒரு மணி நேரத்திற்கும் மேல் விசாரணை நடத்தினர். அப்போது, ஈஸ்வர ஸ்ரீகுமாரிடம் வேலைக்கு சென்றது முதல் நடந்த சம்பவங்கள் அனைத்தையும் ஹேமலதா போலீசாரிடம் விளக்கினார். நேற்று முன்தினம் கோர்ட் அனுமதி பெற்று, ஹேமலதாவிற்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பொதுவாக பெண்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளும் போது, அதற்கான அறிக்கை கிடைக்க ஒரு மாதம் ஆகும் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. வழக்கின் தன்மை கருதி, பரிசோதனை அறிக்கையை விரைவாக வழங்குமாறு போலீசார் அவசரப்படுத்தினால், பத்து நாட்களில் பரிசோதனை அறிக்கை கிடைக்க வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.

  இந்த வழக்கில், இதுவரை 50 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அதில், ஹேமலதாவின் நண்பர் ஆனந்தன், ஈஸ்வர ஸ்ரீகுமார் வீட்டு செக்யூரிட்டி, அவரது வீட்டிற்கு அருகில் வசிப்பவர்கள் என பலர் உள்ளனர். இவர்கள் கொடுத்த வாக்குமூலங்களில் வழக்கிற்கு தேவையான விஷயங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர். வழக்கு விசாரணைக்காக வருமாறு, ஈஸ்வர ஸ்ரீகுமாருக்கு நேற்று போலீசார் பலமுறை அழைப்பு விடுத்தனர். அவரது தரப்பில், “இதோ வருகிறோம்; அதோ வருகிறோம்’ எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால், நேற்று மாலை வரை ஈஸ்வர ஸ்ரீகுமார் போலீஸ் விசாரணைக்கு ஆஜராகவில்லை என, தெரிகிறது. இதையடுத்து, போலீஸ் விசாரணைக்கு ஈஸ்வர ஸ்ரீகுமார் இன்று கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என, இறுதி கெடு விதிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

 2. vedaprakash Says:

  http://socialterrorism.wordpress.com/2009/12/19/ஹேமலதா-பின்னணியில்-நிலமோ/

  https://womanissues.wordpress.com/2009/12/15/ஆபாச-படம்-எடுத்து-மிரட்ட/

 3. IQBAL SELVAN Says:

  கலிகாலம்….. என்ன செய்வது….

 4. vedaprakash Says:

  கற்பழிப்பு புகார்: தலைமறைவான சாமியார் பெங்களூரில் தஞ்சம்
  வெள்ளிக்கிழமை, டிசம்பர் 25, 2009, 16:40[IST]

  http://thatstamil.oneindia.in/news/2009/12/25/absconded-priest-hiding-bangalore.html

  சென்னை: கற்பழிப்பு புகாரில் சிக்கியதால், தலைமறைவான சாமியார் ஈஸ்வர ஸ்ரீகுமார் போலீசுக்கு பயந்து பெங்களூரில் பதுங்கி இருப்பதாக தெரியவந்துள்ளது.

  அடுத்ததாக சாமியார் ஸ்ரீகுமாரிடம் போலீசார் விசாரணை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஒரு வாரத்துக்கு மேலாகியும் இதுவரை சாமியார் விசாரணைக்காக போலீஸ் நிலையத்தில் ஆஜராகவில்லை.

  இந்நிலையில், கடந்த 4 நாட்களுக்கு முன் திடீரென சாமியார் ஸ்ரீகுமார் சென்னையை விட்டு தப்பி ஓடி தலைமறைவானார். திருப்பதி, மும்பை, டெல்லி என பல்வேறு இடங்களில் சுற்றித்திரிந்த சாமியார் நேற்று முன்தினம் பெங்களூரை அடைந்துள்ளார்.

  அவரது செல்போன் சேவையின் சிக்னல் டவரை வைத்து போலீசார் இதனை உறுதி செய்தனர். அதன் பிறகு கடந்த 2 நாட்களாக அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

  இதன் காரணமாக அவரை தொடர்பு கொள்ள முடியாமல் போலீசார் திணறி வருகிறார்கள். இதனை தொடர்ந்து சாமியார் ஸ்ரீகுமாரை பிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

  இது தொடர்பாக சாமியார் மனைவி லலிதாவிடம் கேட்டபோது, போலீசுக்கு என்னென்ன விவரங்கள் தேவையோ அவை அனைத்தையும் தேனாம்பேட்டையில் வைத்து விசாரிக்கும் போதே கொடுத்து விட்டோம். இதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றும் இல்லை என்றார்.

 5. vedaprakash Says:

  சாமியாரால் பாதிக்கப்பட்ட பெண் கோர்ட்டில் வழக்கு தொடர முடிவு
  டிசம்பர் 27,2009,00:00 IST
  http://www.dinamalar.com/court_detail.asp?news_id=4810

  சென்னை:சாமியார் மீதான கற்பழிப்பு புகாரில் போலீசார் விரைவாக நடவடிக்கை எடுக்காவிட்டால், வழக்கை சி.பி.சி. ஐ.டி.,க்கு மாற்றக் கோரி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளதாக, அவர் மீது போலீசில் புகார் அளித்துள்ள ஹேமலதா தெரிவித்துள்ளார்.சென்னை, தேனாம்பேட்டையைச் சேர்ந்த ஹேமலதா(35), தி.நகரைச் சேர்ந்த ஈஸ்வர ஸ்ரீகுமார் தன்னை கற்பழித்து விட்டதாக போலீசில் புகார் செய்தார். மாம்பலம் போலீசார் ஹேமலதாவிடம் விசாரணை நடத்தியபோது, ஈஸ்வர ஸ்ரீகுமாரிடம் வேலை கேட்டு சென்றது முதல் நடந்த அனைத்து விஷயங்களை ஹேமலதா, போலீசில் தெரிவித்தார்.

  கோர்ட் அனுமதியுடன் ஹேமலதாவிற்கு மருத்துவ பரிசோதனை மேற் கொள்ளப்பட்டது. ஹேமலதாவின் நண்பர் ஆனந்தன் உட்பட 50 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு வருமாறு, ஈஸ்வர ஸ்ரீகுமாருக்கும் போலீசார் அழைப்பு விடுத்தனர். ஆனால், இதே வருகிறேன்; அதோ வருகிறேன் என, ஈஸ்வர ஸ்ரீகுமார் இழுத்தடித்து வருகிறார்.சாமியார் ஈஸ்வர ஸ்ரீகுமார் மீது புகார் அளித்துள்ள ஹேமலதா, நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்தார்.

  அங்கு நிருபர்களிடம் ஹேமலதா கூறியதாவது:இப்புகாரில் போலீசார் என்னிடம் விசாரணை நடத்தி முடித்து விட்டனர். சாமியாரிடம் போலீசார் இதுவரை விசாரணை நடத்தவில்லை. சாமியார் எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை. அவரை கைது செய்து விசாரிக்க போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இந்த வழக்கை மெதுவாகத் தான் விசாரிக்க முடியும் என கமிஷனர் கூறுகிறார். சாமியார் மீது போலீசார் விரைவாக நடவடிக்கை எடுக்காவிட்டால், இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றக் கோரி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளேன்.இவ்வாறு ஹேமலதா கூறினார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: