Archive for ஜனவரி, 2010

கிருத்துவம், பெரியாரியம்: இவற்றைக் குறைகூறும் பெண் எழுத்தாளர்கள்!

ஜனவரி25, 2010

கிருத்துவம், பெரியாரியம்: இவற்றைக் குறைகூறும் பெண் எழுத்தாளர்கள்!

முந்தைய கன்னியாஸ்திரி ஜெஸ்மி (Sister Jesme)

கன்னியாஸ்திரிகளாக இருக்கும் பெண்களுக்கு நான்கு சுவர்களுக்கிடையேயும் பாதுகாப்பு இல்லை. ஆண் பாதிரிகள், பாஸ்டர்கள் ஆண்டவனை நம்பி வந்துள்ள பெண்களிடம் பாலியல் ரீதியில் தான் நடந்து கொண்டார்கள். அதர்கு இறையியல் ரீதியில் நியாயப்படுத்தினார்கள்.

Dr. Sr. Jesme (formerly Dr. Sr. Meamy Raphael C.) has a teaching experience of 27 years & has been the principal of St. Mary’s College, Thrissur, Kerala. She has won a number of awards such as Fr. T. A. Mathias Award 2007, Award for Education in Excellence 2006, Sevana Ratna Award 2005.

Sister Jesme’s published works include a number of Papers, Poems & Books such as A Cascade (1999), Rhapsody (2003), At the Foot of the Cross (2005), Narrative Aesthetics: A Case Study (2004), Amen: The Autobiography of a Nun (Autobiography in English & Malyalam, 2009), amongst many others.

முந்தைய அரசு அதிகாரி (P. Sivakami)

தனது எழுத்துகளில் படைக்கப்பட்ட பத்திரங்களுக்கு தான் ஜாதிகளைக் குறிப்பிடுவதில்லை என்றார். பெரியார் கூட பிற்பட்ட ஜாதியினரின் முன்னேற்றத்தின் மீது தான் கவனத்தைச் செல்லுத்தினார். உலகத்தில் எந்த சமூகத்திலும் புரட்சி ஏற்படவேண்டுமானால், அது அடியிலிருந்து ஆரம்பிக்கப்படவேந்துமே தவிர, பெரியாரைப்ப் போல நடுவிலிருந்து ஆரம்பிக்கக் கூடாது.

In 1989, P Sivakami became the first Tamil dalit woman to write a novel—Pazhaiyana Kazhidalum. A literary and commercial success, the novel created a stir by taking on patriarchy in the dalit movement. Translated by the author, it was published in English as The Grip of Change (Orient Longman) 2006. Sivakami has written four novels, numerous short stories and poems. She is founder-editor of the literary magazine Pudiya Kodangi. The English translation of her acclaimed second novel Anandayi is being published by Penguin in 2010. Sivakami was secretary-ranked bureaucrat in Tamil Nadu till 2008, when she quit the administrative service, joined the Bahujan Samaj Party, contested the Lok Sabha poll from Kanyakumari and lost. In December 2009, she founded her own political party, Samuga Samathuva Padai (Forum for Social Equality).

— Photo: Rohit Jain

சகோதரி ஜெஸ்மி தனது புத்தகத்திலிருந்து சில பத்திகளை ஜெய்பூரில் நடந்த இலக்கிய விழாவில் படித்துக் காண்பித்தார் (24-01-2010).
image

இவ்வாறு, இவ்விருவரின் பணிகள், சமூகப் பின்னணி முதலியவை வேறுபட்டிருப்பினும், குரல் ஒன்றாகவே இருந்தது.

பெண்ணின் கற்பு: குஷ்பு

ஜனவரி20, 2010

நடிகை குஷ்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் கண்டிப்பு

புது தில்லி, ஜன. 19, 2009: திருமணத்துக்கு முன்பாக பாலுறவு கொள்வது பற்றி நடிகை குஷ்பு கடந்த 2005ல் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டி தொடர்பாக உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் அந்த பேட்டி தொடர்பான முழு விவரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும்படி குஷ்புவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருமணத்திற்கு முந்தைய செக்ஸ் உறவு தொடர்பாக, நடிகை குஷ்பூ அளித்த பேட்டி ஒன்று, 2005ம் ஆண்டு, “இந்தியா டுடே’ பத்திரிகையில் வெளியானது. இந்தப் பேட்டி பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பியது. தமிழகத்தில் 23 இடங்களில் அவருக்கு எதிராக அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன.”இந்த வழக்குகள் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து விசாரிக்க வேண்டும். ஆறு மாதங்களில் வழக்கு விசாரணையை முடித்து தீர்ப்பு வழங்க வேண்டும்’ என, 2008ம் ஆண்டு ஏப்ரலில் சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.இதை எதிர்த்து குஷ்பூ சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் மனு / மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் மேட்டூரை சேர்ந்த முருகன் என்ற வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.

மனுவில் குஷ்பூ கூறியிருந்ததாவது:பத்திரிகை ஒன்றுக்கு நான் அளித்த பேட்டியின் அடிப்படையில், என்னை பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்தோடு எனக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அரசியல் சார்புடைய சில அமைப்புகள், அரசியல் ஆதாயம் மற்றும் விளம்பரம் தேடும் நோக்கத்தோடும், 2005ம் ஆண்டில் நடந்த இடைத்தேர்தல்களை கருத்தில் கொண்டும் எனக்கு எதிராக அவதூறு பிரசாரத்திலும் ஈடுபட்டன.அதனால், அனைத்து வழக்குகளையும் ஒன்றாக சேர்த்து விசாரிக்க வேண்டும் என்ற சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பை தள்ளுபடி செய்ய வேண்டும்.இவ்வாறு மனுவில் குஷ்பூ கூறியிருந்தார். மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், சென்னை ஐகோர்ட்டின் உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்தது. இந்நிலையில், அவரின் மனு நேற்று மீண்டும் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதிகள் பாஞ்சால் மற்றும் சவுகான் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன், விசாரணைக்கு வந்தது.

கடந்த 2005ம் ஆண்டு எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்து ஒரு பத்திரிக்கைக்கு குஷ்பு அளித்த பேட்டியில், பெண்கள் திருமணத்துக்கு முன் செக்ஸ் உறவு வைத்துக் கொள்கிறார்கள். அது தவறில்லை. ஆனால் உறவு கொள்ளும்போது உரிய பாதுகாப்பு முறைகளைக் கையாள வேண்டும். நோயோ, அநாவசியமான கர்ப்பமோ ஏற்படாமல் தவிர்க்க பாதுகாப்பு முறைகள் மிக அவசியம். ஒரு படித்த ஆண் தனது மனைவி கற்புடன் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு என்று கூறியிருந்தா். பெண்கள் திருமணம் ஆகும் போது கன்னிதன்மை கலையாமல் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்து விடுதலை பெற வேண்டும் என்றும் திருமணத்திற்கு முன்பு செக்ஸ் வைத்து கொள்ளாத ஆண், பெண் எத்தனை பேர் இருக்கிறார்கள், என்றும் கேட்டார். குஷ்பு அளித்த அந்த பேட்டிக்கு தமிழகம் முழுவதும் பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

குஷ்பு, “சென்னையிலுள்ள பெண்கள் செக்ஸ் பற்றிய மனத்தடைகளைக் கடந்து வருகிறார்கள். பப்களிலும் டிஸ்கோதேக்களிலும் ஏராளமான பெண்களைப் பார்க்க முடிகிறது. ஒரு பெண் தனது பாய்பிரெண்ட் பற்றி உறுதியாக இருக்கும் போது அவள் தனது பெற்றோரிடம் சொல்லிக் கொண்டே அவனுடன் வெளியே போகலாம். பெண்கள் திருமணமாகும் போது கன்னித்தன்மை கலையாமல் இருக்க வேண்டும் என்பது போன்ற எண்ணங்களிலிருந்து நமது சமூகம் விடுதலையாக வேண்டும். கல்வி பெற்ற எந்த ஆண்மகனும் தான் திருமணம் செய்யப் போகிறவள் கன்னித்தன்மையோடு இருக்க வேண்டும் என்று எதிர்பாக்க மாட்டான். ஆனால் திருமணத்திற்கு முன்பு செக்ஸ் வைத்துக் கொள்ளும் போது கர்ப்பமாகாமலும் பால்வினை நோய்கள் வராமலும் பெண் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டும்” .

இதைத் தொடர்ந்து இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன், நீதிபதிகள் பஞ்சால் மற்றும் சவுகான் ஆகியோர் முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

மணப்பெண் ஒரு கன்னியாக இருக்கவேண்டும் என்று பிடிவாதம் பிடிக்க மாட்டார்கள்: குஷ்பூ தரப்பில் வழக்கறிஞர் பிங்கி ஆனந்த் வாதாடினார். குஷ்பு திருமணத்திற்கு முந்தைய பாலுறவு மற்றும் எய்ட்ஸ் பற்றி கேள்விகள் கேட்டதாக வாதிட்டார். அவ்வாறு கூறுவது, ஒருவருடைய கருத்து சுதந்திரம் ஆகும் என்று, குஷ்புவினுடைய நேர்காணலின் ஒரு பகுதியை படித்துக் காண்பித்தார், “படித்த இவர்கள் எல்லோருமே, தம்முடைய மணப்பெண் ஒரு கன்னியாக இருக்கவேண்டும் என்று பிடிவாதம் பிடிக்க மாட்டார்கள்” [Khusboo had only asked questions about pre-marital sex and AIDS. Terming these as part of her right to freedom of speech and expression, she read out a part of the interview — “none of the educated people will insist that their bride be a virgin”]. “திருமணத்திற்கு முந்தைய செக்ஸ் உறவு தொடர்பாக, “இந்தியா டுடே’ பத்திரிகை, 2005 செப்டம்பரில் ஆய்வு ஒன்றை நடத்தியது. இந்தியாவில் உள்ள அனைத்து பெரிய நகரங்களிலும் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது, இளம் தலைமுறையினருக்கு செக்ஸ் கல்வி போதிக்க வேண்டியதன் அவசியம் பற்றி குஷ்பூ தெரிவித்தார். அவரின் அறிக்கையில் எவ்விதமான ஆபாசமும் இல்லை,” என்றார்.

உடன் நீதிபதிகள், “குஷ்பூவின் அறிக்கை வரம்பிற்கு அப்பாற்பட்டது. அதை எளிதில் ஏற்க முடியாது. அதனால், அவர் ஏதும் தவறாக கூறவில்லை என்று நீங்கள் எப்படிச் சொல்கிறீர்கள்? குஷ்பூவிடம் கேட்ட கேள்வி என்ன, அதற்கு அவர் அளித்த பதில் என்ன என்பதை எல்லாம் நாங்கள் பார்க்க வேண்டும். அதனால், குஷ்பூவின் பேட்டி தொடர்பான முழு விவரங்களையும் நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும். அதை நாங்கள் பார்க்க வேண்டும். இரண்டு வாரத்திற்குள் இதைச் செய்ய வேண்டும்’ என்றனர்.

ஊட்டி மாணவியர் காணாமல் போன வழக்கில் திருப்பம்: போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

ஜனவரி12, 2010

ஊட்டி மாணவியர் காணாமல் போன வழக்கில் திருப்பம்: போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
ஜனவரி 12,2010,00:00 IST
http://www.dinamalar.com/court_detail.asp?news_id=4915
ஊட்டி:ஊட்டி பள்ளி மாணவியர் காணாமல் போன வழக்கில், திடீர் திருப்பமாக நான்கு வாரங்களுக்குள் இன்ஸ்பெக்டர் விளக்கமளிக்க வேண்டும் என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.ஊட்டியில் ஸ்ரீ சாந்தி விஜய் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், சவுமியா (15), நந்தினி (15) ஆகியோர் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தனர். கடந்தாண்டு மார்ச் 13ம் தேதி, பள்ளிக்கு சென்ற இம்மாணவியர், வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த பெற்றோர், ஊட்டியின் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. விசாரணையில், விக்னேஷ், பிரதீப், தின்னன்குட்டன், இரு பெண்களை அழைத்துச் சென்றது தெரியவந்தது.காணாமல் போன சவுமியாவின் தந்தை உண்ணிகிருஷ்ணன் உட்பட சிலர், மார்ச் 17ம் தேதி போலீசில் புகார் அளித்துள்ளனர். புகார் மனு, ஊட்டி பி1 மற்றும் மகளிர் போலீசாரிடம் கொடுக்கப்பட்டு விசாரணை நடக்கிறது; இருப்பினும், எவ்வித தகவலும் கிடைக்கவில்லை.

கடந்தாண்டு அக்டோபர் 10ம் தேதி, தனது மகள் நந்தினி காணவில்லை என்பதால் சென்னை ஐகோர்டில் அவரது தந்தை புட்டுசாமி “ஆட்கொணர்வு’ மனு தாக்கல் செய்தார். இதனடிப்படையில், நீலகிரி எஸ்.பி., சென்னை ஐகோர்ட்க்கு அழைக்கப்பட்டு நேரில் விசாரிக்கப்பட்டார். எஸ்.பி., சார்பில், சென்னை ஐகோர்டில் பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்யப்பட்டது. இதன் பேரில் வழக்கு முடிக்கப்பட்டது. இதன் பின்னர், போலீஸ் விசாரணையில் தேக்கம் ஏற்பட்டது.

காணாமல் போன நந்தினி விவகாரம் தொடர்பாக, சட்டபூர்வ நடவடிக்கைக்காக நந்தினியின் தந்தை புட்டுசாமி மக்கள் சட்ட மையத்தை அணுகியுள்ளார்.மக்கள் சட்ட மைய அறக்கட்டளை சார்பில், இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட் சிறப்பு அனுமதி மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனு மீதான விசாரணை கடந்த 4ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பள்ளி மாணவியரை கடத்திச் சென்றதாக கூறப்படும் குற்றவாளிகள் பிரதீப், தின்னன் குட்டன், விக்னேஷ் ஆகியோர் குறித்து, ஊட்டி பி1 இன்ஸ்பெக்டர் நான்கு வாரங்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணை, மீண்டும் பிப்ரவரி 8ம் தேதி வரும்போது நேரிலோ அல்லது வக்கீல் மூலம் விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.நந்தினியின் தந்தை புட்டுசாமி கூறுகையில், “குழந்தை கடத்தல் சம்பவங்களுக்கு முடிவு கட்ட வேண்டும் என்ற பொது நோக்கத்தில் போலீசார் இந்த வழக்கை அணுகி, விரைந்து செயல்பட்டு எனது மகளை மீட்டு தர வேண்டும்’ என்றார்.

கற்பழிப்பு வழக்கில்; இன்ஸ்பெக்டர்கள் சம்பளத்தில் பிடிக்க உத்தரவு

ஜனவரி10, 2010
கற்பழிப்பு வழக்கில் ரூ. 1 லட்சம் நஷ்டஈடு; இன்ஸ்பெக்டர்கள் சம்பளத்தில் பிடிக்க உத்தரவு
ஜனவரி 08,2010,09:00  IST

http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=6207

Front page news and headlines todayமதுரை: நெல்லை மாவட்டம் வள்ளியூரில் பாலியல் பலாத்காரத்திற்குள்ளான பெண்ணுக்கு, ஒரு லட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்கவும், அதை இரு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சம்பளத்தில் பிடித்தம் செய்யவும் மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. வள்ளியூரைச் சேர்ந்தவர் பூங்கோதை(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரை திருமணம் செய்வதாகக் கூறி அதே ஊரை சேர்ந்த வாலிபர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்தார். பிறகு திருமணம் செய்ய மறுத்து விட்டார். ஒரு லட்சம் ரூபாய், 100 சவரன் நகைகள் கொண்டு வந்தால் திருமணம் செய்வதாகவும் அந்த நபர் மிரட்டினார்.

பூங்கோதையின் தந்தை மகேசன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வள்ளியூர் இன்ஸ்பெக்டர் கந்தசாமியிடம் புகார் செய்தார். புகாரை விசாரிக்காத இன்ஸ்பெக்டர், அதை அனைத்து பெண்கள் போலீஸ் ஸ்டேஷனுக்கு அனுப்பினார். அங்கு இன்ஸ்பெக்டர் மரியகிரேஸ் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை. பத்து நாட்கள் கழித்து புகார் மீது வழக்கு பதிவு செய்தார். இதனால் தனக்கு ஒரு லட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்க உத்தரவிட கோரி பூங்கோதை ஐகோர்ட் கிளையில் மனு செய்தார். அதை விசாரித்த நீதிபதி ரகுபதி, சுப்பையா அடங்கிய பெஞ்ச், “”பாலியல் தொந்தரவும், கற்பழிப்பும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களை போன்றவை. இரண்டுமே பெண்கள் மீது ஆண்கள், தங்கள் சுதந்திரத்தை திணிப்பதாகும். இக்குற்றங்களை சாதாரணமாக எடுத்து கொள்ளக் கூடாது.

“”கண்ணுக்கு புலப்படும் குற்றமாக இருந்தால் உடனடியாக வழக்கு பதிய வேண்டும். தனியாக புகார் கொடுக்க வேண்டியதில்லை. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அரசு, ஒரு லட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும். “”அத்தொகையை வள்ளியூர் இன்ஸ்பெக்டர், அனைத்து பெண்கள் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோரது சம்பளத்தில் பிடித்தம் செய்ய வேண்டும். அவர்கள் மீது துறை ரீதியாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என உத்தரவிட்டது

தமிழகத்தில் பெண்கள் படும் பாடு!

ஜனவரி9, 2010

பெற்ற மகளை கற்பழித்த தந்தை கைது
http://www.dinamalar.com/district_main.asp?ncat=Chennai#286194

சென்னை : ராயப்பேட்டையைச் சேர்ந்தவர் தசரதன்(40). அப்பகுதியில் செருப்புக் கடை வைத்துள்ளார். இவரது மனைவி முருகேஸ்வரி(35). இத்தம்பதியினருக்கு நான்காம் வகுப்பு படிக்கும் துளசி(9) என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர். (பெயர் கள் மாற்றப்பட்டுள்ளன). கர்ப்பப்பை அறுவை சிகிச்சை மேற்கொண்ட முருகேஸ்வரி, ஓய்விற் காக தனது மகன் மற்றும் மகளுடன் வியாசர்பாடியில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றிருந்தார்.இரு தினங்களுக்கு முன் வியாசர்பாடி வீட்டிற்கு வந்த தசரதன், பொங்கலுக்கு புதுத் துணி வாங்கித் தருவதாகக் கூறி, தனது மகளை ராயப்பேட்டையில் உள்ள வீட்டிற்கு அழைத்து வந்தார். அங்கு, மது அருந்தி விட்டு, தனது சொந்த மகளையே தசரதன் கற்பழித்தார். தகவலறிந்த முருகேஸ் வரி, சொந்த மகளை கற் பழித்த தசரதன் மீது அண்ணா சாலை போலீசில் புகார் செய்தார்.வழக்கு பதிந்த போலீசார், தசரதனை கைது செய்தனர்.

தாய் கொலை: தேடப்பட்ட மகன் கைது

சென்னை : சென்னை கே.கே. நகரில், தாயைக் கொன்று விட்டு தலைமறைவான மகனை, போலீசார் மைசூரில் கைது செய் தனர்.சென்னை நங்கநல் லூரைச் சேர்ந்த லலிதா(59), தனது கணவர் சீனிவாசன்(62) மற்றும் மகள் நிவேதிதா (25) ஆகியோருடன், வாடகை வீட்டில் வசித்து வந்தார். லலிதாவின் மகன் பாலாஜிகுமார்(23), கே.கே.நகர் நான் காவது குறுக்குத்தெரு முதல் செக்டரில் உள்ள சொந்த வீட்டில், தனியாக வசித்து வந்தார்.கடந்த 5ம் தேதி, லலிதா தனது மகனை பார்க்க, கே.கே.நகர் வீட்டிற்குச் சென்றார். அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், பாலாஜிகுமார் தனது தாய் லலிதாவை கத்தியால் குத்திவிட்டு தலைமறைவானார். இதுகுறித்து, கே.கே.நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

பாலாஜிகுமாரின் மொபைல் எண்ணை, போலீசார் கண்காணித்து வந்தனர். அப்போது, பாலாஜிகுமார் சேலத்தைச் சேர்ந்த தனது நண்பருடன் பேசியது தெரிந்தது. உடனே, சேலம் நண்பருடன் பேசிய போலீசார், அவரை பாலாஜிகுமாரிடம் பேச வைத்து ஓர் ரகசிய இடத்திற்கு வரவழைத் தனர். அதன்படி, மைசூரில் மறைந் திருந்த பாலாஜிகுமார், ரகசிய இடத்திற்கு தனது சேலம் நண்பரைப் பார்க்க வந்தார். அப்போது, மறைந்திருந்த போலீசார், பாலாஜிகுமாரை கைது செய்தனர். செலவிற்காக நண்பரிடம் பணம் வாங்க வந்த பாலாஜிகுமார், போலீஸ் வலையில் சிக்கினார். இதையடுத்து, பாலாஜிகுமார் சென்னை கொண்டு வரப்பட்டார்.

இக்கொலை குறித்து போலீஸ் தரப்பில் கூறப் படுவதாவது:கைது செய்யப்பட்ட பாலாஜிகுமார், தனக்கு அம்மா, அப்பா இருவரது ஆதரவும் இல்லை என்ற விரக்தியில் இருந்துள்ளான். அவனது அக்கா நிவேதிதாவிற்கு திருமணம் செய்ய, கே.கே.நகர் வீட்டை விற்க லலிதா திட்டமிட்டுள்ளார். இதுதொடர்பாக, பாலாஜிகுமாரிடம் பேசிய போது தான் தகராறு ஏற்பட்டுள்ளது. பத்து ஆண்டுகளாக தன்னை ஒதுக்கி வைத்த பெற்றோர் கள், தற்போது வீட்டையும் விற்க முயற்சிக்கின் றனர் என நினைத்து, தாய் லலிதாவை கத்தியால் குத்தி யுள்ளார். பின், நிதானமாக 20 நிமிடங்கள் அதே வீட்டிலேயே ரத்தக் கறை படிந்த தனது ஆடைகளை கழற்றி விட்டு குளித்து, வேறு ஆடைகளை உடுத்திக் கொண்டு வெளியே வந்துள்ளார்.வீட்டை விட்டு வெளியே வரும் போது, “ஓம் நமச்சிவாய’ என கூறிக் கொண்டு சென்றுள்ளார். பாலாஜிகுமார் வீட்டிலிருந்து,”காம்போஸ்’, “ஆக்டிபெட்’ ஆகிய மாத்திரைகள் கைப்பற்றப் பட்டன. அவருக்கு மனநிலை பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.இவ்வாறு போலீசார் தெரிவித் தனர்.

பெண் தீக்குளித்து தற்கொலை

ஸ்ரீரங்கம்: திருவானைக்கோவிலில் மூட்டுவலி அவதியினால் பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். திருவானைக்கோவில் மல்லிகைபுரத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் மனைவி சிறைச்செல்வி(46). கடந்த சில மாதங்களாக மூட்டுவலியினால் அவதிப்பட்டார். மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் பலன் அளிக்கவில்லை. வாழ்வில் வெறுப்படைந்த சிறைச்செல்வி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். இதுபற்றி ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மது போதையில் பெண் பலி போலீஸார் விசாரணை

முசிறி: தொட்டியம் அருகே மது போதையில் பெண் உயிரிழந்தது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.நாமக்கல் கூலிப்பட்டியைச் சேர்ந்த பழனியம்மாள்(35). இவரது கணவர் ஜெகந்நாதன். இவர்களுக்கு ஐந்து ஆண், நான்கு பெண் குழந்தைகள் உள்ளனர். கணவன், மனைவி இருவரும் குழந்தைகளுடன் ஊர், ஊராக சென்று அம்மி, குழவி கொத்தியும், புதிதாக செய்தும் தருவது வழக்கம். தொட்டியம் அருகே பாப்பாபட்டியில் தங்கி சில நாட்களாக தொழில் செய்து வந்தனர். இரவு நேரத்தில் களைப்பு தீர கணவன், மனைவி இருவரும் சேர்ந்து மதுகுடிக்கும் பழக்கம் இருந்துள்ளது.

நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் இருவரும் மது குடித்துவிட்டு தூங்கச் சென்றனர். நேற்று காலை எழுந்த ஜெகந்நாதன் மனைவி தூங்குவதாக கருதி எழுப்பியுள்ளார். அளவுக்கதிகமாக மது குடித்ததில் பழனியம்மாள் தூக்கத்திலேயே இறந்துள்ளார். வி.ஏ.ஓ., முத்துச்செல்வன், தொட்டியம் போலீஸில் கொடுத்த புகாரின் பேரில், சிறப்பு எஸ்.ஐ., கந்தன் மற்றும் போலீஸார், பெண்ணின் சாவு குறித்து விசாரிக்கின்றனர்.

தனக்குத் தானே பிரசவம் பார்த்த ‘எய்ட்ஸ்’ பெண் : மதுரை அரசு மருத்துவமனையில் அவலம்
http://www.dinamalar.com/district_main.asp?ncat=Madurai

மதுரை : மதுரை அரசு மருத்துவமனை ஆப்பரேஷன் தியேட்டரில், எச்.ஐ.வி., பாதித்த பெண்ணுக்கு, பிரசவம் பார்க்க டாக்டர்கள், நர்சுகள் இல்லாததால், தனக்குத் தானே பிரசவம் பார்த்து, ஆண் குழந்தை பெற்றெடுத்தார் அந்த பெண். இதுகுறித்து விசாரிக்க டீன் சிவக்குமார் உத்தரவிட்டுள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் முத்து, விஜயா (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது) தம்பதி. எய்ட்ஸ் நோயாளிகளான இவர்கள், மதுரையில் கட்டட தொழிலாளர்களாக உள்ளனர். பெண் குழந்தை உள்ள நிலையில், விஜயா மீண்டும் கர்ப்பமானார். அரசு மருத்துவமனையில் அவ்வப்போது பரிசோதனை செய்து கொண்டார்.
ஜன.,5 இரவு 1 மணிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. ஆப்பரேஷன் தியேட்டருக்கு கொண்டு செ ல்லப்பட்டார். அங்கு டாக்டர்கள், நர்சுகள் இல்லாத நிலையில், ஆண் குழந்தை வெளியே வர ஆரம்பித்தது. விஜயாவின் அலறல் சத்தம் கேட்டு யாரும் வரவில்லை. ஆப்பரேஷன் டேபிளில் இருந்து கீழே விழுந்துவிடக்கூடாது என்பதற்காக குழந்தையை தானே வெளியே எடுத்தார். பதினைந்து நிமிடங்களுக்கு பின், அங்கு வந்த மருத்துவ மாணவி, தொப்புள் கொடியை “கட்’ செய்துவிட்டு, மருந்து கொடுத்துவிட்டு சென்றார்.
“ஆண் குழந்தை பிறந்துள்ளதால், 1500 ரூபாய் தரவேண்டும்’ என்று பெண் ஊழியர் லஞ்சம் கேட்டதற்கு, விஜயா தர மறுத்தார். இதனால், தொற்றுநோயாளிகளுக்கென உள்ள பிரத்யேக அறையில், அவருக்கு படுக்கை ஒதுக்கப்படவில்லை. ஜன.,6 மதியம் 12 மணி முதல் நேற்று முன் தினம் வரை மகப்பேறு வராண்டாவில், கொட்டும் பனியில் பச்சிளம் குழந்தையுடன் விஜயா தங்கினார்.
நமது நிருபரிடம் அவர் கூறியதாவது : மருத்துவமனையில் பணம் கொடுத்தால்தான் எல்லா வேலையும் நடக்கிறது. “உனக்கெல்லாம் எதற்கு குழந்தை. “பெட்’ கொடுக்க முடியாது. வெளியேறு’ என, என்னை ஊழியர்கள் துரத்தினர். இங்கு பிறந்ததற்கு ரிக்கார்டு வேண்டும் என்பதற்காக, வெளியே செல்லாமல் வராண்டாவில் தங்கினேன். எந்த ஆவணமும் இன்றி வெளியேறினால், “திருட்டுக் குழந்தை’ என்று சொல்லிவிடுவர், என பயந்துதான் அங்கேயே இருந்தேன். ஆனால், நான் தலைமறைவாகி விட்டதாக, வார்டு பதிவேட்டில் குறித்துள்ளனர், என்றார்.
எய்ட்ஸ் நோயாளிகளுக்கான மதுரை நெட்வொர்க் ஆப் பாசிட்டிவ் பீப்பிள் வெல்ப்பேர் சொஸைட்டி அமைப்பு தலைவர் பாபு கூறியதாவது :  கடந்த 2006ல் எனது மனைவிக்கும் இதே நிலைதான் ஏற்பட்டது. இன்று வரை நிலைமை மாறவில்லை. காயம்பட்ட மருத்துவமனை ஊழியரைக்கூட ஸ்டிரெச்சரில் அழைத்துச் செல்ல, சக பணியாளர்கள் லஞ்சம் கேட்கும் நிலையில் மருத்துவமனை உள்ளது. எய்ட்ஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க, அரசு அதிக நிதி ஒதுக்கியுள்ள நிலையில், விஜயாவுக்கு பிரசவம் பார்க்க டாக்டர்கள், நர்சுகள் தயங்கியுள்ளனர். இப்பிரச்னை குறித்து மதியம் நிலைய மருத்துவ அதிகாரியிடம் புகார் கூறச்சென்றோம். ஆனால், அவர் மருத்துவமனை வளாகத்தில் உள்ள வீட்டில் தங்காமல், வெளியே தங்கியிருந்ததால் புகார் செய்ய முடியவில்லை. டீனும் அறையில் இல்லை.  எய்ட்ஸ் நோயாளிகள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறார்கள். இப்பிரச்னைக்கு தீர்வு காணாவிட்டால், மருத்துவமனை முன்பு எய்ட்ஸ் நோயாளிகள் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்போம், என்றார்.
இதுகுறித்து டீன் சிவக்குமார் கவனத்திற்கு நமது நிருபர் கொண்டு சென்றார். உடனடியாக விஜயாவிடம் விசாரித்த அவர், “”சம்பந்தப்பட்ட டாக்டர்கள், நர்சுகளிடம் இன்று விசாரணை நடத்தப்படும்”, என்றார்.
மருத்துவமனையில் பிறப்பு முதல் இறப்பு வரை லஞ்சம் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், சம்பந்தப்பட்டவர்கள் மீது நிர்வாகம் கடும் நடவடிக்கைகள் எடுக்காதவரை, இதுபோன்ற மனிதாபிமானற்ற செயல்கள் தொடரும் என்பது உண்மை.

இளம்பெண் தற்கொலை
http://www.dinamalar.com/district_main.asp?ncat=Pudukkottai#285898

அன்னவாசல்:அன்னவாசல் அருகே இளம்பெண் வயிற்றுவலி காரணமாக எலி மருந்தை குடித்து இறந்தார்.புல்வயல் கிராமத்தை சேர்ந்தவர் சேகர் மகள் மணிபாரதி (17). இவருக்கு நீண்ட நாட்களாக வயிற்றுவலி இருந்து வந்ததாம்.

சம்பவத்தன்று வயிற்றுவலி அதிகமானதால் வலி தாங்கமுடியாமல் வீட்டிலிருந்த எலி மருந்தை குடித்து மயங்கி கிடந்துள்ளார். அவரை புதுகை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சைபலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்து அன்னவாசல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் புகழேந்தி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

பெண்ணிடம் செயின் பறிப்பு
http://www.dinamalar.com/district_main.asp?ncat=Coimbatore#285948

கோவை : தனியாக நடந்து சென்ற இளம் பெண்ணிடம் மர்ம நபர்கள் தங்கச்செயினை பறித்து சென்றனர்.கோவை நகரிலுள்ள மரக்கார நஞ்சப்ப கவுடர் வீதியைச் சேர்ந்த நடராஜன் மகள் ரேகா(21). கோவைப்புதூரில் நேற்று தனியாக நடந்து சென்றார். பைக்கில் வந்த மர்ம நபர்கள் ரேகா அணிந்திருந்த இரண்டு பவுன் தங்கச்செயினை பறித்துச் சென்றனர். குனியமுத்தூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

காதலியை கர்ப்பமாக்கியதிருமணமான வாலிபர் கைது
http://www.dinamalar.com/district_main.asp?ncat=Tirunelveli#286147

தென்காசி : காதலியை கர்ப்பமாக்கி விட்டு ஏமாற்றிய திருமணமான வாலிபரை போலீசார் கைது செய்தனர்.குற்றாலம் அருகே குடியிருப்பு காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மகள் கிருஷ்ணம்மாள் (26). இவரும் அதே பகுதியை சேர்ந்த ராமையா மகன் வேல்முருகன் (28) என்பவரும் காதலித்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வேல்முருகன் கிருஷ்ணம்மாளை விட்டு விட்டு வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இருப்பினும் கிருஷ்ணம்மாளை வேல்முருகனால் மறக்க முடியவில்லை. இருவரின் காதலும் தொடர்ந்துள்ளது.

காதலின் நெருக்கத்தினால் கிருஷ்ணம்மாள் கர்ப்பமானார். இது வெளியே தெரிந்தால் அவமானமாகி விடும். எனவே தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கிருஷ்ணம்மாள் வேல்முருகனிடம் வற்புறுத்தியுள்ளார். ஆனால் வேல்முருகனோ திருமணம் செய்து கொள்ள முடியாது. காதலர்களாக தொடர்ந்து இருப்போம் என கூறிவிட்டாராம்.இதனால் ஏமாற்றப்பட்ட கிருஷ்ணம்மாள் குற்றாலம் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் சிவன் வழக்கு பதிவு செய்து வேல்முருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.