பெண்ணின் கற்பு: குஷ்பு


நடிகை குஷ்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் கண்டிப்பு

புது தில்லி, ஜன. 19, 2009: திருமணத்துக்கு முன்பாக பாலுறவு கொள்வது பற்றி நடிகை குஷ்பு கடந்த 2005ல் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டி தொடர்பாக உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் அந்த பேட்டி தொடர்பான முழு விவரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும்படி குஷ்புவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருமணத்திற்கு முந்தைய செக்ஸ் உறவு தொடர்பாக, நடிகை குஷ்பூ அளித்த பேட்டி ஒன்று, 2005ம் ஆண்டு, “இந்தியா டுடே’ பத்திரிகையில் வெளியானது. இந்தப் பேட்டி பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பியது. தமிழகத்தில் 23 இடங்களில் அவருக்கு எதிராக அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன.”இந்த வழக்குகள் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து விசாரிக்க வேண்டும். ஆறு மாதங்களில் வழக்கு விசாரணையை முடித்து தீர்ப்பு வழங்க வேண்டும்’ என, 2008ம் ஆண்டு ஏப்ரலில் சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.இதை எதிர்த்து குஷ்பூ சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் மனு / மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் மேட்டூரை சேர்ந்த முருகன் என்ற வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.

மனுவில் குஷ்பூ கூறியிருந்ததாவது:பத்திரிகை ஒன்றுக்கு நான் அளித்த பேட்டியின் அடிப்படையில், என்னை பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்தோடு எனக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அரசியல் சார்புடைய சில அமைப்புகள், அரசியல் ஆதாயம் மற்றும் விளம்பரம் தேடும் நோக்கத்தோடும், 2005ம் ஆண்டில் நடந்த இடைத்தேர்தல்களை கருத்தில் கொண்டும் எனக்கு எதிராக அவதூறு பிரசாரத்திலும் ஈடுபட்டன.அதனால், அனைத்து வழக்குகளையும் ஒன்றாக சேர்த்து விசாரிக்க வேண்டும் என்ற சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பை தள்ளுபடி செய்ய வேண்டும்.இவ்வாறு மனுவில் குஷ்பூ கூறியிருந்தார். மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், சென்னை ஐகோர்ட்டின் உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்தது. இந்நிலையில், அவரின் மனு நேற்று மீண்டும் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதிகள் பாஞ்சால் மற்றும் சவுகான் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன், விசாரணைக்கு வந்தது.

கடந்த 2005ம் ஆண்டு எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்து ஒரு பத்திரிக்கைக்கு குஷ்பு அளித்த பேட்டியில், பெண்கள் திருமணத்துக்கு முன் செக்ஸ் உறவு வைத்துக் கொள்கிறார்கள். அது தவறில்லை. ஆனால் உறவு கொள்ளும்போது உரிய பாதுகாப்பு முறைகளைக் கையாள வேண்டும். நோயோ, அநாவசியமான கர்ப்பமோ ஏற்படாமல் தவிர்க்க பாதுகாப்பு முறைகள் மிக அவசியம். ஒரு படித்த ஆண் தனது மனைவி கற்புடன் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு என்று கூறியிருந்தா். பெண்கள் திருமணம் ஆகும் போது கன்னிதன்மை கலையாமல் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்து விடுதலை பெற வேண்டும் என்றும் திருமணத்திற்கு முன்பு செக்ஸ் வைத்து கொள்ளாத ஆண், பெண் எத்தனை பேர் இருக்கிறார்கள், என்றும் கேட்டார். குஷ்பு அளித்த அந்த பேட்டிக்கு தமிழகம் முழுவதும் பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

குஷ்பு, “சென்னையிலுள்ள பெண்கள் செக்ஸ் பற்றிய மனத்தடைகளைக் கடந்து வருகிறார்கள். பப்களிலும் டிஸ்கோதேக்களிலும் ஏராளமான பெண்களைப் பார்க்க முடிகிறது. ஒரு பெண் தனது பாய்பிரெண்ட் பற்றி உறுதியாக இருக்கும் போது அவள் தனது பெற்றோரிடம் சொல்லிக் கொண்டே அவனுடன் வெளியே போகலாம். பெண்கள் திருமணமாகும் போது கன்னித்தன்மை கலையாமல் இருக்க வேண்டும் என்பது போன்ற எண்ணங்களிலிருந்து நமது சமூகம் விடுதலையாக வேண்டும். கல்வி பெற்ற எந்த ஆண்மகனும் தான் திருமணம் செய்யப் போகிறவள் கன்னித்தன்மையோடு இருக்க வேண்டும் என்று எதிர்பாக்க மாட்டான். ஆனால் திருமணத்திற்கு முன்பு செக்ஸ் வைத்துக் கொள்ளும் போது கர்ப்பமாகாமலும் பால்வினை நோய்கள் வராமலும் பெண் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டும்” .

இதைத் தொடர்ந்து இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன், நீதிபதிகள் பஞ்சால் மற்றும் சவுகான் ஆகியோர் முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

மணப்பெண் ஒரு கன்னியாக இருக்கவேண்டும் என்று பிடிவாதம் பிடிக்க மாட்டார்கள்: குஷ்பூ தரப்பில் வழக்கறிஞர் பிங்கி ஆனந்த் வாதாடினார். குஷ்பு திருமணத்திற்கு முந்தைய பாலுறவு மற்றும் எய்ட்ஸ் பற்றி கேள்விகள் கேட்டதாக வாதிட்டார். அவ்வாறு கூறுவது, ஒருவருடைய கருத்து சுதந்திரம் ஆகும் என்று, குஷ்புவினுடைய நேர்காணலின் ஒரு பகுதியை படித்துக் காண்பித்தார், “படித்த இவர்கள் எல்லோருமே, தம்முடைய மணப்பெண் ஒரு கன்னியாக இருக்கவேண்டும் என்று பிடிவாதம் பிடிக்க மாட்டார்கள்” [Khusboo had only asked questions about pre-marital sex and AIDS. Terming these as part of her right to freedom of speech and expression, she read out a part of the interview — “none of the educated people will insist that their bride be a virgin”]. “திருமணத்திற்கு முந்தைய செக்ஸ் உறவு தொடர்பாக, “இந்தியா டுடே’ பத்திரிகை, 2005 செப்டம்பரில் ஆய்வு ஒன்றை நடத்தியது. இந்தியாவில் உள்ள அனைத்து பெரிய நகரங்களிலும் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது, இளம் தலைமுறையினருக்கு செக்ஸ் கல்வி போதிக்க வேண்டியதன் அவசியம் பற்றி குஷ்பூ தெரிவித்தார். அவரின் அறிக்கையில் எவ்விதமான ஆபாசமும் இல்லை,” என்றார்.

உடன் நீதிபதிகள், “குஷ்பூவின் அறிக்கை வரம்பிற்கு அப்பாற்பட்டது. அதை எளிதில் ஏற்க முடியாது. அதனால், அவர் ஏதும் தவறாக கூறவில்லை என்று நீங்கள் எப்படிச் சொல்கிறீர்கள்? குஷ்பூவிடம் கேட்ட கேள்வி என்ன, அதற்கு அவர் அளித்த பதில் என்ன என்பதை எல்லாம் நாங்கள் பார்க்க வேண்டும். அதனால், குஷ்பூவின் பேட்டி தொடர்பான முழு விவரங்களையும் நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும். அதை நாங்கள் பார்க்க வேண்டும். இரண்டு வாரத்திற்குள் இதைச் செய்ய வேண்டும்’ என்றனர்.

குறிச்சொற்கள்: , , , ,

ஒரு பதில் to “பெண்ணின் கற்பு: குஷ்பு”

 1. devapriyaji Says:

  திருமணத்திற்கு முன்பான செக்ஸ் உறவு:
  நடிகை குஷ்புவின் கருத்துக்கு கருணாநிதி மகள் கனிமொழி
  ஆதரவு!
  மதுரை, நவ19_

  திருமணத்திற்கு முன்பான செக்ஸ் உறவு பற்றி நடிகை குஷ்பு கூறிய கருத்துக்கு ஆதரவாக தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழியும் கருத்து தெரிவித்துள்ளார். குறுந்தொகையில் திருமணத்திற்கு முன்பான செக்ஸ் பற்றி பல கவிதைகள் இருக்கின்றன என்றும் இவற்றையெல்லாம் என்ன செய்ய வேண்டும்? என்றும் கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.

  திருமணத்திற்கு முன்பான செக்ஸ் உறவு பற்றி நடிகை குஷ்பு ஒரு ஏட்டிற்கு தன்னுடைய கருத்தை தெரிவித்திருந்தார். அதாவது திருமணத்திற்கு முன்பாக பாதுகாப்பான செக்ஸ் உறவை வைத்துக் கொள்ளலாம் என்று நடிகை குஷ்பு கூறியிருந்தார். அவரின் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாட்டாளி மக்கள் கட்சியினரும், விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பைச் சேர்ந்தவர்களும் கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டம் பற்றி சில தொலைக்காட்சிகள் மிகவும் பெரிதுபடுத்தி அன்றாடம் செய்திகளை வெளியிட்டவண்ணம் உள்ளன.

  இந்நிலையில் குஷ்புவின் கருத்துக்கு நடிகை சுகாசினியும் ஆதரவாக ஏதோ சொல்ல அவரும் இந்த பிரச்சனையில் சிக்கிக் கொண்டார். தற்போது அவர் மீதும் வழக்குகளைப் போட ஆரம்பித்துவிட்டார்கள். இந்த பரபரப்பான சூழ்நிலையில் குஷ்புவின் கருத்துக்கு பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியாமிர்சாவும் ஆதரவு தெரிவித்ததாக செய்திகள் வெளிவந்தன. ஆனால் அவற்றை சானியாமிர்சா மறுத்துள்ளார். இவையெல்லாம் ஒருபுறம் இருக்க தி.மு.க. தலைவர் கருணாநிதி மகள் கனிமொழி திருமணத்திற்கு முன்பான செக்ஸ் உறவு பற்றி தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார். இவருடைய இந்த கருத்து நடிகை குஷ்புவின் கருத்தை ஆமோதிப்பது போல இருக்கிறது. `அவுட்லுக்’ பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் கருணாநிதி மகள் கனிமொழி தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார். கருணாநிதி மகள் கனிமொழி கூறியதாக துக்ளக் பத்திரிகை கீழ்க்கண்டவாறு வெளியிட்டுள்ளது. “பெண்கள் பற்றியும், தமிழ் கலாச்சாரம் பற்றியும் மீடியாவினால் (தொலைக்காட்சி) தூண்டப்பட்டிருக்கிற சர்ச்சை வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது. தமிழ் கலாச்சாரம் என்பது என்ன? சங்ககால இலக்கியமான அகநானூறில் பல கவிதைகள் பெண்களின் செக்ஸ் உணர்வு பற்றி விவரிக்கின்றன. குறுந்தொகையில் திருமணத்திற்கு முன்பான செக்ஸ் பற்றி பல கவிதைகள் இருக்கின்றன. இவற்றையெல்லாம் என்ன செய்ய வேண்டும்? இவையெல்லாம் தமிழ் கலாச்சாரத்திற்கு அன்னியமானவை என்று முத்திரை குத்த வேண்டுமா?”

  இவ்வாறு கனிமொழி அவுட்லுக் பத்திரிகையில் கூறியிருந்தார். பிறகு சுகாசினி பிரச்சனை எழுந்தபின் நக்கீரன் மூலமாக மீண்டும் அவர் கருத்து தெரிவித்தார். கனிமொழியின் கருத்து வருமாறு:

  குஷ்புவுக்கும் சுகாசினிக்குமான பிரச்சனையாக இதை பார்க்காமல் பொதுவான பெண்ணினத்திற்கான பிரச்சனையாக பார்ப்போம். இங்கே சிலர் தாங்கள்தான் எதையும் தீர்மானிக்க வேண்டும் என்ற முடிவில் இருக்கிறார்கள். அவர்கள் கருத்துக்கு எதிர்கருத்தோ, புதிய கருத்தோ சொல்லும் பெண்களை கற்பு என்பதை காட்டி பயமுறுத்துகிறார்கள். ஒழுக்கம், கட்டுப்பாடு என்பதையெல்லாம் அவரவர்தான் நிர்ணயித்துக் கொள்ள வேண்டும். பொதுவான ஒழுக்கம் எல்லாவற்றிலும் சாத்தியம் இல்லை.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: