கூர்நோக்கு இல்லங்களில் பாலியல் கொடுமை!


கூர்நோக்கு இல்லங்களில் பாலியல் கொடுமை:அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு
பிப்ரவரி 17,2010,00:00 IST
http://www.dinamalar.com/court_detail.asp?news_id=5205
குற்றஞ்சாட்டப் பட்ட ஷகிலா பானுவே விசாரிக்க நியமிக்கப் பட்டாராம்: மதுரை:அரசு கூர்நோக்கு இல்லங்களில் பெண்கள் மீதான பாலியல் பலாத்காரம் குறித்து, விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.மதுரையை சேர்ந்த முகமது அனீபா தாக்கல் செய்த பொது நல மனு: “என் மனைவி சபீனா யாஸ்மின் திருமணத்தின் போது மைனராக இருந்ததால், அவரது பெற்றோர் புகாரின்படி, சேலம் அஸ்தம்பட்டி கூர்நோக்கு இல்லத்தில் ஒராண்டு தங்க வைக்கப்பட்டார். அங்கு மைனர் பெண்கள், ஊழியர்களால் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாவது தெரிந்தது. அங்கு கண்காணிப்பாளராக இருந்த ஷகீலா பானு, மைனர் பெண்களை கொத்தடிமைகளாக நடத்தினார். துப்பரவு ஊழியர் சாந்தா, ஆசிரியர் தாமரைசெல்வனும் கொடுமை செய்தனர்”, என்றெல்லாம் புகர் செய்தார். அங்கிருந்த பெண்கள், குழந்தைகள் நல வாரிய சேர்மனுக்கு புகார் செய்தனர். புகாரை விசாரிக்க ஷகீலா பானுவே நியமிக்கப்பட்டார். “எந்த கொடுமையும் இல்லை’ என சாந்தா அறிக்கை தாக்கல் செய்தார்.

மைனர் பெண்ணை எப்படி திருமணம் செய்தார் என்று தெரியவில்லை: பிறகு புகார் அடிப்படையில் சாந்தா, தாமரைசெல்வன் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். ஷகீலா பானு மேலப்பாளையத்திற்கு மாற்றப்பட்டார். அங்கும் மைனர் பெண்களை அவர் கொத்தடிமையாக நடத்துகிறார். சேலம், மேலப்பாளையம் கூர் நோக்கு இல்லங்களில் பாலியல் பலாத்காரம், கொத்தடிமைத்தனம் குறித்து விசாரிக்க உத்தரவிட வேண்டும், என தெரிவிக்கப்பட்டது. மனுதாரர் சார்பில் வக்கீல் கார்த்திக் கண்ணன் ஆஜரானார்.நீதிபதிகள் பிரபா ஸ்ரீ தேவன், ராஜேந்திரன் கொண்ட பெஞ்ச், “”சேலம், மேலப்பாளையம் கூர்நோக்கு இல்லங்களை ஆய்வு செய்து துளிர் இயக்க நிர்வாகி வித்யாராவ், அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இதுகுறித்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா? என சமூக நல பாதுகாப்பு கமிஷனர், துறை செயலாளர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்,” என உத்தரவிட்டது.

சென்னை அருகே அனாதை காப்பகத்தில் பெண் கற்பழிப்பு கிறிஸ்தவ பாதிரியார் கைது

மீஞ்சூர், செப்.6, 2009- சென்னையை அடுத்த மீஞ்சூர் அருகே அனாதை காப்பகத்தில் பெண் கற்பழிக்கப்பட்டது தொடர்பாக கிறிஸ்தவ பாதிரியார் கைது செய்யப்பட்டார்.

அனாதை காப்பகம்: மீஞ்சூர் அருகே உள்ள வேலூர் கிராமத்தில் `சத்தியம் சாரிட்டபிள் டிரஸ்ட்’ என்ற அனாதை காப்பகத்தை நடத்தி வந்தவர் சாது இம்மானுவேல் என்ற கிறிஸ்தவ பாதிரியார். 1988-ம் ஆண்டு முதல் இந்த அனாதை காப்பகம் செயல்பட்டு வருகிறது. காப்பகத்தில் 8 பெண்களும் 2 சிறுவர்களும் தங்கி இருந்தனர். இந்த காப்பகத்தில் தங்கியவர்களை சாது இம்மானுவேல் படம் பிடித்து அனாதைகள் என கூறி வெளிநாட்டில் இருந்து பணம் பெற்று வந்ததாகவும் இவர்களிடம் உண்டியலை கொடுத்து சென்னையில் உள்ள போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதிகளில் பண வசூலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து இந்த காப்பகத்தில் உள்ள பெண்கள் சென்னையில் காப்பகம் நடத்திவரும் ஜெயராஜ் என்பவரிடம் தெரிவித்தனர். மேலும் காப்பகத்தில் தங்கியிருந்த ரேவதி என்ற பெண் மீஞ்சூர் போலீசில் ஒரு புகார் மனு அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-

கற்பழிப்பு: இந்த காப்பகத்தில் தங்கியிருந்த விஜயாவை (வயது 20) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பாதிரியார் சாது இம்மானுவேல் கற்பழித்ததையடுத்து அவர் கர்ப்பம் அடைந்தார். தன்னால் கற்பழிக்கப்பட்டதை மறைக்க, சாது இம்மானுவேல் விஜயாவுக்கு அரசு அனுமதி பெறாத தனியார் டாக்டர்கள் மூலம் கருகலைப்பு நடத்தி உள்ளார். ஆகவே பாதிரியார் சாது இம்மானுவேல் மீது தக்க நடவடிக்கை எடுத்து எங்களை காப்பற்ற வேண்டும். இவ்வாறு அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.  புகாரை பெற்றுக்கொண்ட சப்இன்ஸ்பெக்டர் அரிகரபுத்ரன் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாரங்கன் உத்தரவின் பேரில் பொன்னேரி துணைசூப்பிரண்டு ரங்கராஜன் மேற்பார்வையில் மீஞ்சூர் இன்ஸ்பெக்டர் மாணிக்கம் முன்னிலையில் போலீசார் வேலூர் அனாதை காப்பகத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

கைது:  திருவள்ளூர் கலெக்டர் பழனிகுமார் உத்தரவின் பேரில் பொன்னேரி தாசில்தார் லலிதா திடீர் என வேலூர் காப்பகத்திற்கு சென்று ஆய்வு செய்தார். காவல்துறையினரும் வருவாய்துறையினரும் இணைந்து ஆய்வு செய்த நிலையில் அரசு விதிகளுக்கு புறம்பாக பதிவுசெய்யாமல் காப்பகம் நடத்திவந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் காப்பகத்தில் இருந்த பெண்களை பாலியல் பலாத்காரத்திற்கு ஈடுபடுத்தியதும் குழந்தைகளை சித்ரவதைக்கு உட்படுத்தியதும் தெரியவந்தது. பதிவேடு கணக்கு வழக்குகள் சரியாக இல்லாததையடுத்து காப்பகம் மூடி சீல் வைக்கப்பட்டது. காப்பகத்தில் இருந்த பெண்கள் மற்றும் சிறுவர்களை மீஞ்சூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துசென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டதையடுத்து பாதிரியார் சாது இம்மானுவேல் கைது செய்யப்பட்டு பொன்னேரி கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டார். நீதிபதி ராஜ் உத்தரவின் பேரில் பாதிரியார் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். காப்பகத்தில் தங்கியிருந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் திருவள்ளூரில் உள்ள சமூக நல காப்பத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

கூர்நோக்கு இல்ல சிறுவர்களுக்கு கல்வி அனைவருக்கும் கல்வி இயக்கம் தீவிரம்
மே 31,2009,00:00  IST

http://www.dinamalar.com/General_detail.asp?news_id=13559

General India news in detailமதுரை: தமிழகத்தில் சிறு குற்றங்களில் ஈடுபட்டு சமூக பாதுகாப்பு துறையின் கூர்நோக்கு இல்லங்களில் உள்ள சிறுவர்களுக்கு கல்வி வழங்க அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

சமூக நலத்துறை சார்பில் 23 கூர்நோக்கு இல்லங்கள் மற்றும் சிறப்பு பாலர் இல்லங்கள் அனைத்து மாவட்டங்களிலும் உள்ளன. சிறு குற்றங்களில் ஈடுபடும் சிறார்கள் இங்கு அடைக்கப்படுகின்றனர். அவர்களில் பெரும்பாலோர் பள்ளி யில் படிக்கும் போது அறியாமை, சந்தர்ப்ப சூழ்நிலைகளால் தவறுபுரிகின்றனர். கூர்நோக்கு இல்லங்களில் அடைக்கப்படும் அவர்கள் கல்வியை தொடர நடவடிக்கை எடுக்கும்படி சமூக நல பாதுகாப்பு துறை கமிஷனர், அனைவருக்கும் கல்வி இயக்கத்தை கேட்டு கொண்டார். அதனையடுத்து மாவட்டங்களிலுள்ள கூர்நோக்கு இல்லங்களில் உள்ள சிறுவர்களை கணக்கெடுக்கவும், அவர்கள் பயில நடவடிக்கை எடுக்கும்படி அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குநர் வெங்கடேசன் உத்தரவிட்டுள்ளார். திட்ட இயக்குநர் அனைத்து மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது:

மாவட்டங்களிலுள்ள கூர்நோக்கு இல்லங்களை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களை பார்வையிட செய்து மாணவர்கள் விவரங்களை அறிந்து கொள்ள வேண்டும். பிறகு 20 மாணவர்களுக்கு ஒரு தன்னார்வலர் வீதம் நியமித்து தேவைக்கு ஏற்பசிறப்பு பள்ளி மையங்கள் தொடங்கப்பட வேண்டும். மையங்களை துவங்கும் போது அதில் சேர்க்கும் மாணவர்கள் 6 முதல் 14 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். பள்ளி மையங்கள் உடனடியாக செயல்பாட்டிற்குவர ஏற்பாடு செய்து அந்த விவரங்களை திட்ட இயக்குநர் அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். “அனைவரும் கல்வியறிவு பெறும் நோக்கத்தின்படி இந்த திட்டம் நிறைவேற்றப்படுகிறது. மதுரையிலுள்ள இரு கூர்நோக்கு பள்ளிகளிலுள்ள சிறுவர்களுக்கு கல்வி வழங்க தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள் ளதாக’ அனைவருக்கும் கல்வி திட்ட முதன்மை கல்வி அலுவலர் நடராஜன் தெரிவித்தார்.

Advertisements

குறிச்சொற்கள்: , , , , , , ,

4 பதில்கள் to “கூர்நோக்கு இல்லங்களில் பாலியல் கொடுமை!”

 1. vedaprakash Says:

  மயிலாப்பூர் காப்பகத்தில் இருந்து கதவை உடைத்து 6 பெண்கள் ஓட்டம்
  [ சனிக்கிழமை, 03 அக்ரோபர் 2009, 01:36.51 PM GMT +05:30 ]
  விபசார வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பெண்கள் காப்பகத்தின் கதவை உடைத்து தப்பி சென்றனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
  விபசாரத்தில் ஈடுபடும் பெண்களை மீட்கும் போலீசார், மயிலாப்பூர் கச்சேரி சாலையில் உள்ள பெண்கள் காப்பகத்தில் அவர்களை தங்க வைக்கின்றனர். பின்பு நீதிமன்ற உத்தரவுப்படி, அவர்கள் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டு பெற்றோர் அல்லது உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகின்றனர். இவர்கள் சாட்சிகளாகவும் சேர்க்கப்படுவார்கள்.

  மயிலாப்பூரில் உள்ள பெண்கள் காப்பகத்தில் சூப்பிரண்டாக இருப்பவர் சரஸ்வதி. 2 ஆயாக்கள், ஒரு வாட்ச்மேன் மட்டுமே உள்ளனர். இவர்கள் அதே வளாகத்தில் தங்கியுள்ளனர். காப்பகத்தில் 60 பெண்கள் உள்ளனர். அனைவருமே விபசார வழக்கில் பிடிபட்டவர்கள்.

  இதில் வங்கதேசத்தை சேர்ந்த மேக்னா சர்மா, அஞ்சலி சர்மா, பாக்ஷி, திருமங்கலம் போலீசாரால் கைது செய்யப்பட்ட ஷோபா, பள்ளிக்கரணை போலீசாரால் கைது செய்யப்பட்ட ரேஷ்மா மற்றும் மாங்காடு போலீசாரால் கைது செய்யப்பட்ட கொல்கத்தாவை சேர்ந்த சோனா ஆகிய 6 பெண்களும் ஒரே அறையில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

  நேற்று மாலை 4.30 மணிக்கு அவர்கள், மேல் மாடியில் கதவை உடைத்துக் கொண்டு வெளியில் வந்துள்ளனர். பின் மெயின் கேட் பூட்டை உடைத்து தப்பிச் சென்றுள்ளனர். வழக்கமாக காலை 10 மணிக்கு அவர்கள் தங்கியிருக்கும் அறைக் கதவு திறக்கப்படும். பின் மாலை 6 மணிக்கு அவர்களுக்கான அறையில் போட்டு பூட்டி வைக்கப்படுவார்கள். மாலையில் அடைக்க முயன்றபோதுதான் அவர்கள் தப்பிச் சென்றது தெரியவந்தது.

  இது குறித்து மயிலாப்பூர் போலீசில் கண்காணிப்பாளர் சரஸ்வதி புகார் செய்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த காப்பகத்தில் பெண் போலீசாரை பாதுகாப்புக்கு நிறுத்த வேண்டும். கூடுதல் ஊழியர்களை நியமிக்க வேண்டும் என்று சூப்பிரண்ட் சரஸ்வதி அரசுக்கு பல முறை கடிதம் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது.

  ஆனால் போதுமான ஊழியர்கள் இல்லாததால்தான் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதாகவும் கூறப்படுகிறது. வங்கதேசத்தை சேர்ந்த பெண்கள் 2008-ம் ஆண்டு கைது செய்யப்பட்டவர்கள். அவர்களைத் தேடி யாரும் வரவில்லை. சொந்த ஊர் பற்றி அவர்கள் தெரிவிக்காததாலும், வெளிநாடு என்பதாலும் அவர்களை இங்கேயே தங்கவைத்திருந் தனர். இந்தநிலையில்தான் அவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

  இது குறித்து மயிலாப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 2. vedaprakash Says:

  விபச்சாரம்: சென்னையில் மும்பை பெண்கள் மீட்பு
  திங்கள்கிழமை, மே 4, 2009: சென்னை விருகம்பாக்கத்தில் விபச்சாரத்தில் ஈடுபட்ட புரோக்கர் உள்ளிட்ட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து இரண்டு மும்பை அழகிகளை மீட்டனர்.

  சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள சாய்நகரில் விபச்சாரம் நடப்பதாக சென்னை மாநகர போலீஸ் கமிஷ்னர் ராதாகிருஷ்ணனுக்கு தொடருந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.

  இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் போலீசார் அப்பகுதியில் ரகசிய தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் இருந்த பங்களா ஒன்றுக்குள் அடிக்கடி ஆண்கள் சென்று வருவதை போலீசார் தெரிந்து கொண்டனர். மேலும், அங்கிருந்து பெண்கள் அடிக்கடி கார்களில் வெளியே அழைத்து செல்லப்படுவதையும் கண்டுபிடித்தனர்.

  இதையடுத்து அந்த பங்களாவுக்குள் அதிரடியாக நுழைந்து போலீசார் சோதனையிட்டனர். அப்போது அங்கு மும்பையில் இருந்து அழைத்து வரப்பட்ட சில அழகிகளை வைத்து அங்கு விபச்சாரம் செய்யப்படுவது உறுதியானது. அங்கு ஏசி அறையில் உல்லாசம் அனுபவிக்க அனைத்து சொகுசு வசதிகளும் இருந்துள்ளன.

  இதையடுத்து போலீசார் பெண்கள் சோனியா காயத்திரி பிரசாத் (21), சாந்தினி பீவி (29) ஆகிய இரண்டு பேரையும் மீட்டு, பெண்கள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

  அங்கிருந்த விபச்சார புரோக்கர்கள் ஸ்டீபன் அலெக்ஸ் மற்றும் பாபு ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 கார்கள், 4 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் இதில் சென்னையை சேர்ந்த பல பிரமுகர்களுக்கும் தொடர்பு இருப்பதாக தெரியவந்துள்ளது.

  மேலும், அழகிகளை அவர்களின் வீட்டுக்கே காரில் அழைத்து சென்று ரூ. 10 ஆயிரம் முதல் ரூ. 25 ஆயிரம் வசூல் செய்துள்ளதும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து அந்த வாகனங்களை ஓட்டிச் சென்ற திருச்சியை சேர்ந்த மணிமாறன் என்பவரையும், திருவனந்தபுரத்தை சேர்ந்த சுனில் என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

 3. vedaprakash Says:

  மாமல்லபுரத்தில் தவித்த 20 வயது இளம்பெண் மீட்பு
  பெண்கள் காப்பகத்தில் ஒப்படைப்பு

  மாமல்லபுரம், ஜன.3, 2010-

  மாமல்லபுரத்தில் உள்ள லலிதா திருமண மண்டபம் அருகில் சுமார் 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தார். அவளிடம், அந்த வழியாக சென்ற மனித நேய மக்கள் கட்சி நகர தலைவர் பாரூக்அலி விசாரித்தும் சரியாக பதில் தரவில்லை. இதனால் அவர் இளம்பெண்ணை அழைத்து சென்று மாமல்லபுரம் மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.

  பின்னர் சப்-இன்ஸ்பெக்டர் மல்லிகா அப்பெண்ணிடம் விசாரித்த போது தனது பெயர் நிஷா(20) என்றும், தந்தை பெயர் சுப்பிரமணி, தாயார் பெயர் கனகசுப்புலட்சுமி, சொந்த ஊர் திருச்செங்கோடு என்றும் கூறினார். மேலும் முன்னுக்கு பின் முரணாக அந்த பெண் பேசுவதால் மனநிலை பாதிக்கப்பட்டவரா? அல்லது சினிமாவில் நடிக்கும் ஆசையால் வீட்டை விட்டு ஒடிவந்தாரா? என பல கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதையடுத்து அவர் மாமல்லபுரம் சைல்டு லைன் தொண்டு நிறுவனத்தின் மூலம் சென்னை மணப்பாக்கத்தில் உள்ள பெண்கள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

 4. vedaprakash Says:

  குழந்தைகள் காப்பகம் பெயரில் விபசாரம்: கும்பலிடம் தப்பிய பெண் பகீர் புகார்
  ஏப்ரல் 05,2009,00:00 IST
  http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=9536

  Important incidents and happenings in and around the world

  சென்னை: திருச்சியில் குழந்தைகள் காப்பகம் என்ற பெயரில் 30 பெண்களை வைத்து விபசாரம் நடப்பதாக, விபசார கும்பலிடம் இருந்து தப்பிய இளம்பெண், தமிழக டி.ஜி.பி.,யிடம் பரபரப்பு புகார் கொடுத்தார்.கடலூர் மாவட்டம் வடலூர் கருங்குழியைச் சேர்ந்த வைத்தியலிங்கம் மகள் வினோதினி (17). கடந்த 18ம் தேதி விழுப்புரம் பஸ் நிலையத்தில் விபசார கும்பலிடம் இருந்து மீட்கப்பட்டார். தற்போது, தமிழ்நாடு மனித உரிமை இயக்கம் வக்கீல் லூசியாவின் பாதுகாப்பில், விழுப்புரத்தில் இருக்கிறார். நேற்று சென்னை வந்த வினோதினி, “தமிழகம் முழுவதும் பரந்த “நெட்வொர்க்’ உடைய விபசார கும்பலை தனிப்படை அமைத்து பிடிக்கவேண்டும்; தனது உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்’ என்று தமிழக டி.ஜி.பி., ஜெயினிடம் புகார் கொடுத்தார்.

  இதன்பிறகு, வினோதினி நிருபர்களிடம் கூறியதாவது: சிறுவயதிலேயே எனது தந்தை இறந்துவிட்டார். சித்தாள் வேலைக்கு சென்ற தாய் இளவரசி, வேறொருவருடன் ஓடிப் போய்விட்டார். ஏழு மாதத்திற்கு முன், எனக்கு வீட்டு வேலை வாங்கித் தருவதாக, சத்யா, ஸ்டீபன்ராஜ் ஆகியோர் புதுச்சேரிக்கு அழைத்துச் சென்றனர். சித்ரா என்பவரின் வீட்டில் விட்டனர். அவர் என்னை விபசாரத்தில் ஈடுபடுத்த முயன்றார். அவரிடம் இருந்து பல முறை தப்ப முயன்றபோது, சித்ராவின் தம்பி மணிகண்டன், கலை, லோகு, ஸ்டீபன்ராஜ், பூங்காவனம் உட்பட 10 பேர் அடித்து உதைத்தனர். மார்பு, கால் உட்பட பல்வேறு பகுதிகளில் சூடு போட்டனர்.பின், வளவனூர், வில்லியனூர், மூலக்குளம், புதுச்சேரி, திருச்சி, சென்னை கோயம்பேடு, சேலம் ஆகிய இடங்களுக்கு அழைத்துச் சென்று விபசாரத்தில் ஈடுபடுத்தினர்.

  விழுப்புரத்தில் இருந்து திருச்சிக்கு விபசாரத்திற்காக அழைத்து செல்லும்போது மீட்கப்பட்டேன். நான் கொடுத்த புகாரில், நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.முக்கிய குற்றவாளிகளான சித்ரா, திருச்சி சேகர், மஞ்சுளா ஆகியோர் கைது செய்யப்படவில்லை. அவர்கள் தமிழகம் முழுவதும் பெரிய “நெட்வொர்க்’ அமைத்துள்ளனர். திருச்சியில் குழந்தைகள் காப்பகம் என்ற பெயரில் சிறுமிகள் உட்பட 30 பெண்களை வைத்து விபசாரம் நடத்துகின்றனர். அவர்களால் எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.எனது உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்; என்னை போல அவர்களிடம் சிக்கியுள்ள ஏராளமான பெண்களை மீட்கவேண்டும். அவர்களை தனிப்படை அமைத்து உடனடியாக கைது செய்யவேண்டும்.இவ்வாறு வினோதினி கூறினார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: