பெண் குண்டாக இருந்தால் ஏன் ஒதுக்கப் படவேண்டும்?
சோயப் மாலிக் விஷயத்தில் முக்கியமான ஒரு பிரச்சினை வெளிப்பட்டுள்ளது.
ஆயிஸா சித்திக் குண்டாக இருந்ததினால், சோயப் ஒதிக்கியதாக புகார் எழுந்துள்ளது.
பெண்கள் குண்டாக இருப்பது குறை என்றால், ஆண்கள் குண்டாக இருப்பதும் குறைதான்.
பாரம்பரிய-ரீதியில் (hereditary) சில குடும்பங்களில் பெண்கள் குண்டாக இருப்பார்ட்கள்.
திருமணத்திற்குப் பிறகு, சில பெண்கள் குண்டாகி விடுகிறார்கள்.
குழந்தைப் பெற்றபின் சிலர் குண்டாகி விடுகின்றனர்.
இதயெல்லாம் சாக்காக வைத்துக் கொண்டு, ஆண்கள் பெண்களை ஒதுக்குவது, வெறுப்பது, விவாக ரத்து செய்வது……………………..என்றெல்லா இறங்கி விட்டால் உலகம் என்னாவது?
குறிச்சொற்கள்: குண்டு ஆண்கள், குண்டு பெண்கள், பெண்கள் குண்டாக இருப்பது
2:25 முப இல் ஏப்ரல்5, 2010 |
சானியாமாலிக் விவகாரம் நீதிமன்றில்
http://www.thinakkural.com/publication_west/content.php?contid=2477&catid=3
சொயிப் மாலிக் முதலாவது திருமணம் செய்ததாகக் கூறப்படுவதால் பெரும் பிரச்சினை எழுந்துள்ள நிலையில், சொயிப் மாலிக்கை நம்புவதாக சானியா மிர்சா தெரிவித்துள்ளார்.
சானியா மிர்சாவுக்கும் சொயிப் மாலிக்குக்கும் திருமணம் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், ஹைதராபாத்தைச்
சேர்ந்த ஆயிஷா என்ற பெண் சொயிப் மாலிக்குடன் ஏற்கனவே எனக்குத் திருமணம் நடந்துவிட்டது. அவர் 2 ஆவது திருமணம் செய்ய விரும்பினால் என்னை விவாகரத்துச் செய்த பிறகு செய்து கொள்ளட்டும் என்றார்.
சொயிப் மாலிக் தன்னை திருமணம் செய்து கொண்டதற்கான ஆதாரங்களையும் அவர் நேற்று முன்தினம் வெளியிட்டார். இதை சொயிப் மாலிக் மறுத்துள்ளார்.
ஆயிஷா என்ற பெயரில் வேறு ஒரு பெண்ணின் போட்டோவை காட்டித்தன்னை ஏமாற்றி விட்டனர் என்று
சொயிப் மாலிக் சொல்கிறார். ஆனால் தான் குண்டாக இருப்பதால் தன்னை சொயிப் மாலிக்கும் அவர் குடும்பத்தினரும் ஒதுக்கிவிட்டனர் என்று ஆயிஷா கூறுகிறார்.
சொயிப் மாலிக் பற்றி அடுத்தடுத்து வெளியான தகவல்களால் சானியா மிர்சாவும் அவர் குடும்பத்தினரும் நிலைகுலைந்துபோயுள்ளனர். திருமண ஏற்பாடுகள் நடந்துவரும் நிலையில், சொயிப் மாலிக்ஆயிஷா விவகாரம் அவர்களுக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது.
சானியா மிர்சாவிடம் இது குறித்துக் கருத்து கேட்க நிருபர்கள் முயன்றனர். ஆனால், அவர் பதில் சொல்ல மறுத்துவிட்டார். இந்த நிலையில், நேற்று முன்தினம் அவர் டுவிட்டர் இணையத்தளத்திலுள்ள தன் பக்கத்தில் எழுதியிருப்பதாவது;
எனக்கும் என் குடும்பத்தினருக்கும் எல்லா உண்மைகளும் தெரியும். என் வாழ்க்கையில் நினைத்துப் பார்க்காதது எல்லாம் நடக்கிறது. அவரை (சொயிப்) நான் முழுமையாக நம்புகிறேன். நடந்த சம்பவங்கள் குறித்து அவர் என்னிடம் பல தடவை கூறியுள்ளார். எனவே, இப்போது வெளியாகும் தகவல்கள் கவலையளிக்கின்றன. எனக்கு தூக்கமே வரவில்லை.
இதற்காக நான் சோர்ந்துவிடவில்லை. திட்டமிட்டபடி என் திருமணம் நடைபெறுமென நம்புவதாக சானியா மிர்சா அதில் குறிப்பிட்டுள்ளார்.
சானியா மிர்சா உறுதியாக இருக்கும் தகவல் அறிந்ததும் ஆயிஷா குடும்பத்தினர் நீதிமன்றத்தை அணுகத் தீர்மானித்துள்ளதாகத் தெரிகிறது. இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் டில்லி சட்டத்தரணி ஒருவரின் உதவியை சொயிப் மாலிக் நாடியுள்ளார். இதனால், சொயிப் மாலிக், சானியா மிர்சா, ஆயிஷா விவகாரத்தில் அடுத்து என்ன நடக்கும் என்ற பரபரப்பான எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.