நித்யானந்தா கைது,ஜெயில் கதவு திறந்தாச்சு: காற்றாக வருவது என்ன – II


நித்யானந்தா கைது,ஜெயில் கதவு திறந்தாச்சு: காற்றாக வருவது என்ன – II

இனி மறுபடியும் நித்யானந்தா வந்து விட்டதால், ஊடகங்கள் இனி எல்லா கதவுகளையும் திறந்தே வைக்கும். 100ற்க்கும் மேலாக வெயில் அடித்தாலும் கவலையில்லை, இனிமேல் தினம் தினம் சூடான செய்திகள் தாம்!

போதாக் குறைக்கு தாந்திரிக முறையிலான செக்ஸ் என்றெல்லாம் கிளம்பி விட்டார்கள்.

நிச்சயமாக, இந்தியா இடைக் காலத்திற்குச் செல்கிறது.

ஆமாம், முகமதியர்கள் / முகலாயர்கள், துருக்கியர்கள் எப்படி காம வேட்டையில் ஈடுபட்டு, இந்தியப் பெண்களை கற்பழித்து செக்ஸ் அனுபவித்தார்களோ, இந்திய பண்டிதர்களை வலுக்கட்டாயமாக அத்தகைய நூல்களை எழுத வைத்தார்களோ, அதன்படியே செக்ஸ் அனுபவித்து குரூரங்களில் ஈடுபட்டார்களோ…………………..அவ்விவகாரங்கள் எல்லாம் வெளிப்படும்!

நித்யானந்தாவிடம் நடந்த விசாரணையில் புது தகவல்கள்
ஏப்ரல் 24,2010,00:00  IST

http://www.dinamalar.com/General_detail.asp?news_id=24389

பெங்களூரு:கர்நாடகா சி.ஐ.டி., போலீசாரின் வசமுள்ள சாமியார் நித்யானந்தாவிடம் நேற்று ரகசியமாக விசாரணை செய்யப்பட்டது. விசாரணையின் போது, அவரிடமிருந்து புதுப் புது தகவல்களைக் கேட்ட சி.ஐ.டி., போலீசார், அதிர்ந்தனர். நேற்று அவரை பிடதி ஆசிரமத்திற்கு அழைத்து வந்த போலீசார், அவர் எதிரிலேயே சோதனையிட்டு, முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றியுள்ளனர். அது குறித்த விவரங்களை வெளியிட முடியாது என்று மறுத்து விட்டனர்.இமாச்சல பிரதேசத்திலிருந்து பெங்களூரு வந்த நித்யானந்தாவையும், அவரது சீடர் நித்ய பக்தானந்தாவையும், நேற்று முன்தினம் இரவு 9.20 மணியளவில், ராம்நகருக்கு அழைத்து வந்தனர். ராம்நகர் அரசு மருத்துவமனையில், மருத்துவ பரிசோதனை செய்வதற்காக நித்யானந்தா அனுமதிக்கப்பட்டார். இரவு 10.25 வரை அவருக்கு மருத்துவ பரிசோதனை நடந்தது.

பின், நீதிபதி புஷ்பாவதி வீட் டிற்கு, இருவரும் காரில் அழைத்து செல்லப்பட்டனர். ராம்நகர் மாவட்ட செஷன்ஸ் கோர்ட் நீதிபதி புஷ்பாவதி வீட்டில் சாமியாரும், அவரது சீடரும், இரவு 10.35 மணிக்கு ஆஜர்படுத்தப்பட்டனர்.பின், வெளியே வந்த அரசு வழக்கறிஞர் வாரப் கூறுகையில், ”நித்யானந்தாவையும், அவரது சீடர் பக்தானந்தாவையும் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என, போலீஸ் தரப்பில் கேட்டுக் கொண்டனர். நாளை மறுதினம் வரை இருவரையும் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க, நீதிபதி அனுமதி அளித்துள்ளார். நித்யானந்தாவுக்கு ஜாமீன் வழங்கக் கோரி, யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. நித்யானந்தாவை, போலீசார் துன்புறுத்தியதாக தகவல்கள் வெளியானது. ஆனால், தன்னை போலீசார் துன்புறுத்தவில்லை என்றும், நல்லபடியாக கவனிப்பதாகவும் நீதிபதி முன்னிலையில் நித்யானந்தா கூறினார்,” என்றார்.நீதிபதி வீட்டிலிருந்து நித்யானந்தாவை போலீசார் வெளியே அழைத்து வந்த போது, யாரோ ஒரு நபர், சாமியாரை தகாத வார்த்தையால் திட்டியவாறு அடிக்க முயற்சித்தார். உடனடியாக அருகிலிருந்த போலீசார், அந்த மர்ம நபரை இழுத்துச் சென்றனர். பின், அந்த நபரை போலீஸ் வேனில் ஏற்றி, போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

பின், சாமியாரையும், அவரது சீடரையும், போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.பெங்களூரு பேலஸ் ரோட்டிலுள்ள சி.ஐ.டி., போலீஸ் அலுவலகத்தில், நித்யானந்தாவிடம் நேற்று காலையிலிருந்து அதிகாரிகள் குழு விசாரணையை துவக்கினர்.விசாரணை நடத்துவதற்காக பெரிய கேள்வி பட்டியலையே தயாரித்து வைத்திருந்தனர். கேள்வி கேட்கக் கேட்க, நித்யானந்தா புதுப் புது தகவலை கூறியதால், போலீசார் அதிர்ந்தனர்.நேற்று பிடதி ஆசிரமத்திற்கு சாமியாரை அழைத்துச் சென்ற போலீசார், அவர் முன்னிலையிலேயே அங்கு சோதனை மேற்கொண்டனர். முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றிய போலீசார், அது குறித்த விவரங்களைத் தெரிவிக்க மறுத்து விட்டனர்.நித்யானந்தா, தன் மீதான வழக்கு களை வாபஸ் பெற வேண்டும் என்று கோரி, கர்நாடகா ஐகோர்ட் டில் தாக்கல் செய்திருந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

கர்நாடக கோர்ட்டில் சாமியார் நித்யானந்தா ஆஜர்
ஏப்ரல் 23,2010,00:00  IST
Front page news and headlines today

பெங்களூரு : இமாச்சலபிரதேசத்தில் கைது செய்யப்பட்ட செக்ஸ் சாமியார் நித்யானந்தா நேற்றிரவு பெங்களூரு அழைத்து வரப்பட்டார். அங்கிருந்து ராம் நகர் நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்புடன் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். நடிகை ரஞ்சிதாவுடன், சாமியார் நித்யானந்தா உல்லாசமாக இருந்த காட்சிகள் வெளியானது. சாமியார் மீது லெனின் என்பவர், சென்னை போலீசில் புகார் கொடுத்தார். இதை வைத்து, சாமியார் நித்யானந்தா மீது மத உணர்வுகளை புண்படுத்துதல், மோசடி, கற்பழிப்பு, கொலை மிரட்டல், சதி செய்தல் உள்ளிட்ட ஆறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப் பட்டது. பின்னர் இந்த வழக்குகள் கர்நாடகாவுக்கு மாற்றப்பட்டது.

இமாச்சல பிரதேச மாநிலம் சோலன் மாவட்டம் அர்கி என்ற இடத்தில் நித்யானந்தாவும், அவருடன் இருந்த சிலரும் கர்நாடகா போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தங்கியிருந்த வீட்டில், லேப்-டாப், கம்ப்யூட்டர்கள், வீடியோ கேமராக்கள், மூன்று லட்சம் ரூபாய் ரொக்கப் பணம், ஏழாயிரம் அமெரிக்க டாலர், டிராவலர் செக்குகள், வெளிநாட்டு கரன்சிகள், சிம் கார்டுகள், மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர், சாமியார் நித்யானந்தாவும், அவருடன் இருந்தவர்களும் சிம்லா சிறையில் அடைக்கப்பட்டனர். நேற்று, அர்கி நீதிமன்ற மாஜிஸ்திரேட் முன்னிலையில், நித்யானந்தா உள்ளிட்டோர் ஆஜர்படுத்த பட்டனர். முறைப்படி வாரன்ட் பெற்று, பெங்களூருவுக்கு அழைத்து வர ஏற்பாடு செய்தனர். நித்யானந்தாவை வேன் மூலம் சண்டிகாருக்கு கொண்டு வந்து, பின்னர் விமானம் மூலம் மும்பைக்கு அழைத்துச் சென்றனர். அங்கிருந்து பெங்களூருவுக்கு இரவு 7 மணிக்கு கொண்டுவந்தனர்.

பெங்களூரு தேவனஹள்ளி சர்வதேச விமான நிலையத்தில், போலீசார் குவிக்கப்பட்டனர். இரவு 7 மணியளவில் சாமியாருடன் விமானம் பெங்களூரு வந்தது. போலீஸ் காரில், நித்யானந்தாவை பாதுகாப்பாக ஏற்றி, ராம் நகருக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப் பட்டார். விமான நிலையத்தில் இருந்து சாமியாரை வெளியே அழைத்து வந்தபோது, கன்னட அமைப்புகளைச் சேர்ந்த சிலர் கேலி, கிண்டல் செய்தனர். ஒரு கட்டத்தில் சாமியாரைத் தாக்கவும் சிலர் முற்பட்டனர். நித்யானந்தாவை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க, இன்று கோர்ட்டில் போலீசார் மனு தாக்கல் செய்ய உள்ளனர். அவரை விசாரிக்கும் போது, பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.

நித்யானந்தாவை தாக்க முயற்சி: பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் சாமியார் நித்யானந்தாவை கன்னட அமைப்பினர் கேலியும், கிண்டலும் செய்து தாக்க முயற்சித்தனர். ஆனால், பலத்த போலீஸ் பாதுகாப்பிற்கிடையில் சாமியார் அழைத்து செல்லப்பட்டார். சாமியார் நித்யானந்தா, மும்பையிலிருந்து விமானம் மூலம் பெங்களூரு சர்வதேச விமான நிலையத்திற்கு, நேற்றிரவு 7 மணியளவில் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார். விமான நிலையத்திலிருந்து போலீஸ் வாகனம் நிறுத்தப்பட்டிருந்த இடத்திற்கு வருவதற்குள், பெரும் நெரிசல் ஏற்பட்டது. போலீஸாரின் பலத்த கெடுபிடிக்கிடையே சாமியார் நித்யானந்தா காருக்கு அழைத்து வரப்பட்டார். பத்திரிகையாளர்களும் அதிகளவில் குழுமியிருந்தனர். சாமியார் நித்யானந்தா விமான நிலைய வாசல் பகுதிக்கு வரும் போது, அங்கு நின்றிருந்த கன்னட அமைப்பினர், அவரை பார்த்து கேலியும், கிண்டலும் செய்தனர். சிலர், அவரை தாக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது. போலீஸாரின் கெடுபிடிக்கு இடையே, சாமியார் சிரித்தவாரே போலீஸ் காரில் ஏறினார்.

நித்யானந்தா பிடிவாரன்ட் நிறுத்தி வைப்பு
ஏப்ரல் 23,2010,00:00  IST

Court news detail

வழக்கை மாற்றிவிட்டு நாடகம் ஆடும் சட்டங்கள்: நித்யானந்தா வக்கீல்கள், ஸ்ரீபெரும்புதூர் கோர்ட்டில் அளித்த உறுதிமொழியை ஏற்று, அவரது பிடிவாரன்ட் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீபெரும்புதூர்  வக்கீல் செல்வமணி, கடந்த மாதம் 11ம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் உள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில், இந்து மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில், காவி உடை அணிந்து தவறுகள் செய்த சாமியார் நித்யானந்தா மீது, 295ஏ சட்டப் பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வழக்கு தொடர்ந்தார். வழக்கு மறுநாள் விசாரணைக்கு வந்தது. நீதிபதி குணசேகர் விசாரித்தார். மனுவில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டிற்கு ஆரம்பக் கட்ட முகாந்திரம் இருப்பதாக ஏற்றுக் கொண்டு, சாமியார் நித்யானந்தா, ஏப்., 2ம் தேதி கோர்ட்டில் ஆஜராக சம்மன் அனுப்பும்படி உத்தரவிட்டார். அன்று புனித வெள்ளியையொட்டி கோர்ட் விடுமுறை. எனவே, ஏப்., 19ல் நித்யானந்தா கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். ஆனால், 19ம் தேதி நித்யானந்தா ஆஜராகவில்லை. இதைத் தொடர்ந்து நித்யானந்தாவுக்கு நீதிபதி பிடிவாரன்ட் பிறப்பித்தார். அவரை கண்டுபிடித்து மே மாதம் 20ம் தேதி கோர்ட்டில் ஆஜர்படுத்தும்படி கர்நாடக மாநிலம் ராம்நகர் மாவட்டம் போலீஸ் எஸ்.பி.,க்கு நீதிபதி குணசேகரன் உத்தரவு பிறப்பித்தார். இமாச்சலப் பிரதேசத்தில் தங்கியிருந்த நித்யானந்தாவை பெங்களூரு போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். இந்நிலையில், நித்யானந்தாவின் வக்கீல்கள் இருவர், ஸ்ரீபெரும்புதூர் கோர்ட்டில் நேற்று ஆஜராயினர். நித்யானந்தாவை வரும் ஜூன்  20ம் தேதி கோர்ட்டில் ஆஜர்படுத்துவதாக உறுதியளித்தனர். அதை ஏற்று நீதிபதி குணசேகரன் வழக்கை ஜூன் 20ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

டில்லி இமாம் முன்பு இம்மாதிரி கைது செய்யப்படவில்லையே ஏன்? சட்டம் இந்தியாவில் சரியாக நிறைவேற்றப் படுவதில்லை, என்பதற்கு நித்யானந்தா விவகாரம் மூலம் வெளிப்படுகிறது. நித்யானந்தா தண்டிக்கப்பட வேண்டியதுதான், ஆனால், ஏன் அதே சட்டம் மற்றவர்கள் விஷயத்தில் அமைதியாக செயல் படுகிறது இல்லை செயல்படாமலேயே இருந்து விடுகிறது என்ற கேல்விகள் தான் செக்யூலரிஸ நாட்டில் எழுகின்றன. அதிலும் குற்றமீறல்களைச் செய்தவர்கள் முஸ்லீம்கள், கிருத்துவர்கள் என்றதும் ஒன்று அமுக்கி வாசிக்கப் படுகிறது, இல்லை ஊடகங்களில் செய்திகளே வராது (குறிப்பாக தமிழில் வராது), குற்றப் பத்திரிக்கைத் தாக்குதல் செய்யப்பட்ட பிறகும் கைதும் செய்யப் பட மாட்டார்கள்.

சங்கராச்சாரி கைது: டில்லி இமாம் விவகாரத்தில் இப்படித் தான் முன்பு மூன்றிற்கும் மேலான உயர்நீதி மன்றங்களினின்று கைது வாரண்ட் பிறப்பிக்கப் பட்டிருந்தது.  “பாரத மாதா ஒரு தெவிடியா”, “நீதிபதிகளின் கை-கால்களை உடைக்க வேண்டும்”, “………………..”, என்றெல்லாம் பேசியதர்காக அவ்வாறான வாரண்ட்டுகள் பிரப்பிக்கப்பட்டன. ஆனால், சாகும் வரை அந்த ஆள் கைது செய்யப் படவில்லை. ஆனால், அந்த இடைக் காலத்தில் இரண்டு சங்கராச்சாரியார்கள் அதே மாதிரியான, ஆனால் மிகவ்ய்ம் நாகரிகமான முறையில், இந்துக்கள் உரிமைகள் காக்கப் படுவதில்லை………….என்று பேசியதர்காக, கைது செய்யப் பட்டிருக்கிறார்கள்.

ஆகவே, நிச்சயமாக, குற்றங்களில் கூட மதரீதியிலாக நீதி மன்றக்கள், காவல் துறை, ஊடகங்கள் முதலியன, பாரபட்ச்சத்துடன் உள்ளன, குறிப்பாக இந்துக்களுக்கு எதிராகச் செயல்படுகின்றன என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

2 பதில்கள் to “நித்யானந்தா கைது,ஜெயில் கதவு திறந்தாச்சு: காற்றாக வருவது என்ன – II”

 1. vedaprakash Says:

  Godman’s followers signed ‘sex contracts’
  Vinay Madhav | TNN
  http://epaper.timesofindia.com/Default/Client.asp?Daily=TOICH&showST=true&login=default&pub=TOI&Enter=true&Skin=TOINEW&GZ=T

  Bangalore: Nudity, sexual activity, and physical intimacy were part of the “learning and practice of ancient tantric secrets” at Dhyanapeetam Ashram of controversial godman Swami Nithyananda in Bidadi. Nithyananda was caught on camera during an alleged sexual romp with an actress last month.
  Bizarrely, those who volunteered for the programmes were made to sign an agreement prohibiting them from disclosing any of these details or taking legal recourse after practising “ancient tantric secrets”. The programme is called ‘Learning from the Master Programme’.
  The “non-disclosure agreements” were part of the documents found by CID sleuths during recent raids on the ashram, where they seized many computer hard disks, laptops and mobiles.
  One clause of the agreement, accessed by TOI, states: “Volunteer understands that the programme may involve the learning and practice of ancient tantric secrets associated with male and female ecstasy, including the use of sexual energy for increased intimacy/spiritual connection, pleasure, harmony and freedom. Volunteer understands that these activities could be physically and mentally challenging, and may involve nudity, access to visual images, graphic visual depictions, and descriptions of nudity and sexual activity, close physical proximity and intimacy, verbal and written descriptions and audio sounds of a sexually oriented, and erotic nature, etc.” Nithyananda jeered at Bangalore airport
  The famous smile refused to fade away amidst the jeering crowd. As the Bangalore police and CID sleuths brought Nithyananda out of the airport, the place echoed with the shouts of the crowd waiting to have a glimpse. Some persons even attempted to assault him, but the heavy police presence thwarted their attempts and cleared a path for Nithyananda. P 13 Godman’s volunteers were mostly women from TN
  Bangalore: Volunteers were made to sign an agreement prohibiting them from disclosing any of these details or taking legal recourse after practising “ancient tantric secrets”.
  The agreement says: “By reading and signing this addendum, a volunteer irrevocably acknowledges that he/she is voluntarily giving his/her unconditional acceptance of such activities, and discharges the leader and the foundation, and anyone else not specifically mentioned here, but directly or indirectly involved in the organization, from any liability, direct or indirect, arising from such activities.” A senior CID official said that mostly women enrolled for this programme, and that more than 90% were from Tamil Nadu. CID sleuths found a CD with more than 35 video clippings of Nithyananda in compromising positions with women. There were more than five women in these clippings, he said.
  CID officials claimed that most women who enrolled were either divorced or had got divorced after undergoing the programme. Many NRIs had also enrolled for the programme, they added. TNN

 2. vedaprakash Says:

  பெண்களை மது அருந்த வைத்து நித்தியானந்தா ரசித்துப்பார்ப்பார்: லெனின் கருப்பன்
  [ வெள்ளிக்கிழமை, 23 ஏப்ரல் 2010, 04:11.35 PM GMT +05:30 ] [ தினகரன் ]
  நித்யானந்தா ஆசிரமம் மட்டும் நடத்தவில்லை. நித்யானந்தா இம்போர்ட் அண்ட் எக்ஸ்போர்ட் கம்பெனி என்ற பெயரில் வர்த்தக நிறுவனமும் நடத்தி வந்துள்ளார் மேலும் பெண்களை மது அருந்தவைத்து ரசித்துப்பார்ப்பார் என்று அவரது சீடர் லெனின் கருப்பர் தெரிவித்துள்ளார்.
  நித்யானந்தாவின் தம்பி ஆத்ம பரமானந்தா, நெருங்கிய சீடர் கோபி(எ) நித்தேஸ்வரானந்தா ஆகியோர்தான் இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்கள். அதன்மூலம் வெளிநாடுகளுக்கு சுவாமி சிலைகளை கொண்டு சென்று பக்தர்களுக்கு கொடுக்கின்றனர். அந்த சிலைகளை இங்கே நன்கொடையாக பெறுகின்றனர். ஆனால், விலைக்கு வாங்கியதாக கணக்கு எழுதுகின்றனர். பெரிய விலைக்கு வெளிநாட்டில் விற்கின்றனர். இதன்மூலம் கோடிகோடியாக சம்பாதிக்கின்றனர். மேலும் வெளிநாடுகளில் கிடைக்கும் கருப்பு பணத்தை இந்நிறுவனம் மூலம் வெள்ளையாக மாற்றி ஆசிரமத்துக்கு கொண்டு வருகின்றனர் என்றார் லெனின்.

  அடுத்த திட்டம் பற்றி லெனின் கூறியதாவது:

  ஒரு தன்னார்வ அமைப்பை தொடங்க உள்ளேன். பாதிக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுக்க உள்ளேன். கடவுள் வழிபாட்டிலும் ஈடுபடுவேன். அதற்காக ஆசிரமம் தொடங்க மாட்டேன். அவர் கைது செய்யப்பட்டவுடன் பலர் என்னிடம் தொடர்பு கொண்டு பேசினர். பல நாட்கள் தூங்காமல் இருந்தேன். இப்போது நிம்மதியாக உள்ளேன். ஆசிரமத்தில் அவருடன் இருந்த ஒரு லட்சம் பேர் எனக்கு ஆதரவாக உள்ளனர்.
  ரஞ்சிதாவிடமும் ஒப்பந்தம்

  நித்யானந்தாவால் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் நடிகை ரஞ்சிதா. அவர் இனிமேலும் ஒளிந்திருக்க தேவையில்லை. தைரியமாக வெளியில் வந்து சாமியாரின் கொடுமைகளை கோர்ட்டில் சொல்ல வேண்டும் என்கிறார் லெனின்.
  அவர் அளித்த பேட்டியில்…

  ரஞ்சிதா எங்கு இருக்கிறார்? அவர் ஏன் இன்னும் புகார் கொடுக்கவில்லை?

  அவரைப் பற்றிய தகவல் இல்லை. ஆனால் அவரிடமும் ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கியுள்ளார். என்னை பொருத்தவரை அவரும் பாதிக்கப்பட்டவர்தான். அவர் தைரியமாக, சாமியார் மீது புகார் கொடுக்க வேண்டும். நடந்த விஷயங்களை எல்லாம் வெளியில் சொல்ல வேண்டும். செய்த தவறுக்கு அது பிராயச்சித்தமாக அமையட்டும். இனிமேல் அப்பாவி பெண்கள் இது போன்ற போலி சாமியார்களால் வாழ்க்கையை தொலைக்காமல் தடுக்க ரஞ்சிதா உதவுவார் என்று எதிர்பார்க்கிறேன்.

  நித்யானந்தாவிடம் 4 ஆண்டுகள் சீடராக இருந்தவர் லெனின் கருப்பன் (எ) ஸ்ரீநித்ய தர்மானந்தா. உலகையே நம்ப வைத்த சாமியாரின் உண்மைத் தோற்றத்தை தோலுரித்துக் காட்டியது இவர் போலீசில் கொடுத்த புகார். ஆதாரத்திற்கு நடிகை ரஞ்சிதாவுடன் சாமியார் நித்யானந்தா இருக்கும் காட்சிகளையும் ‘சிடி’யாக கொடுத்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து மடத்தின் தலைமை பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துவிட்டு காணாமல் போனார் நித்யானந்தா. ஒன்றரை மாதம் தலைமறைவாக இருந்த அவர், இமாச்சலப் பிரதேசத்தில் கைது செய்யப்பட்டார். அதை தொடர்ந்து, லெனின் அளித்த பிரத்யேக பேட்டியில் இருந்து சில பகுதிகள்:

  நித்யானந்தா கைது செய்யப்பட்டுள்ளார். இப்போது என்ன நினைக்கிறீர்கள்?

  உண்மை வென்றுள்ளது. ஆனால், கைது இந்த விவகாரத்துக்கு முடிவல்ல. வழக்கு முழுமையாக விசாரிக்கப்பட்டு, அவர் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு, அதற்கான தண்டனை பெறவேண்டும். என்னைப் போன்று லட்சக்கணக்கான மக்கள் அவரை கடவுளாக நம்பியிருந்தபோது, அவர் செய்த பாவத்திற்கு அந்த கடவுளே கொடுத்த தண்டனையாக அது இருக்கட்டும்.

  நீங்கள் மட்டும்தான் புகார் கொடுத்துள்ளீர்கள். பாதிக்கப்பட்ட வேறு யாரும் புகார் கொடுக்கவில்லையே?

  அவரது பண பலம், அரசியல் தொடர்புகள் மிகவும் வலிமையானது. அதனால் பயத்தில் மற்றவர்கள் புகார் கொடுக்கவில்லை. நிர்ப்பந்தங்களை தாண்டி இப்போது போலீசார் சரியான முடிவை எடுத்துள்ளனர். வழக்கும் சரியான திசை நோக்கி செல்கிறது. இதனால் பயம் குறைந்து நம்பிக்கையுடன் பலர் புகார் கொடுக்க முன்வருவார்கள் என்று நம்புகிறேன். நானும் அவர்களுக்கு உறுதுணையாக இருப்பேன்.

  நடிகை ரஞ்சிதாவுடன் இருக்கும் சிடியை தவிர வேறு என்ன ஆதாரங்கள் உங்களிடம் இருக்கிறது?

  நித்யானந்தா முதலில் எந்த தவறுமே செய்யவில்லை என்று சொன்னார். பிறகு‘சட்டப்படி எந்த தப்பும் செய்யவில்லை’ என்றார். அப்புறம், ‘ஆராய்ச்சிதான் செய்தேன்’ என்று மாற்றிப் போட்டார். எந்த அடிப்படையில் அப்படி சொன்னார் என்பது உலகத்துக்கு தெரியாது. அதை சொன்னால் நம்ப மாட்டீர்கள்..
  இன்னும் என்ன சஸ்பென்ஸ் வேண்டிக் கிடக்கிறது.. விஷயத்தை சொல்லுங்கள்..?

  சொல்கிறேன்.. சீடர்கள், சிஷ்யைகளிடம் அவர் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கி வைத்திருக்கிறார். 10 பக்கம் கொண்டது அந்த ஒப்பந்தம். அதன் கடைசி இரண்டு பக்கங்களில் என்ன சொல்லியிருக்கிறது தெரியுமா.. செக்ஸ் வைத்துக் கொள்வது பற்றி நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. ஆராய்ச்சிக்கு தேவைப்படும் பட்சத்தில் செக்ஸ் வைத்துக் கொள்ளவும் நேரிடும். அதற்கு யாரும் ஆட்சேபம் தெரிவிக்கக்கூடாது. செக்ஸ் உறவில் சம்பந்தப்பட்ட நபர் அதை பற்றி வெளியே யாரிடமும் எந்த சூழ்நிலையிலும் சொல்லக்கூடாது என்று ஒப்பந்த ஷரத்து கூறுகிறது.

  அதிர்ச்சியாக இருக்கிறது. அப்படி ஒரு ஒப்பந்தத்தில் ஏன் கையெழுத்திட்டார்கள்?

  அப்படியொரு விஷயம் ஒப்பந்தத்தில் இருப்பதே யாருக்கும் தெரியாது. பேப்பர்களை நீட்டி கையெழுத்து போட சொல்வார்கள், எதுவும் கேட்காமல் போட்டு கொடுத்தோம். ஆண், பெண் பேதமெல்லாம் கிடையாது. ரஞ்சிதாவும் போட்டிருக்கிறார். படித்துப் பார்க்க முடியாது. ஒப்பந்தம் பற்றி வெளியில் சொல்லவும் கூடாது. அதை வைத்துதான் ‘நான் சட்டப்படி தவறு செய்யவில்லை’ என்று சொல்கிறார்.

  இப்படி ஒரு ஒப்பந்தம் தயாரிக்க முடியும் என்று யாரும் கற்பனை செய்திருக்க முடியாது..?

  உண்மைதான். இப்படி ஒப்பந்தம் போட்டு கையெழுத்து வாங்க எந்த சட்டத்திலும் இடமில்லை. இதுபோல எழுதி வாங்கி செக்ஸ் வைத்துக் கொள்வதும் சட்டப்படி குற்றம். இந்த ஆவணம் எனக்கு தாமதமாக கிடைத்தது. கிடைத்ததும் கர்நாடக போலீசில் கொடுத்தேன். அவர்களும் அதிர்ந்து போனார்கள். அந்த ஆவணம் போலீசுக்கு முக்கியமான ஆதாரமாக பயன்படும் என்று நம்புகிறேன்.

  ஒப்பந்தம் போட்டாலும் ஏமாற்றி செக்ஸ் வைத்துக் கொள்வதை சட்டம் ஏற்காது என்பது சாமியாருக்கு தெரியாதா?

  தெரியாமல் இருக்காது. ஆனால், அவர் இந்த மாதிரி விஷயங்கள் அந்தக் காலத்தில் இருந்தே & பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே & நமது நாட்டில் நடைமுறையில் இருந்து வருவது போலவும், நமது கலாசாரத்தில் அவை அங்கீகரிக்கப்பட்டவை போலவும் பேசி மூளைச்சலவை செய்துவிடுவார். வாழ்க்கைக்கு தேவையான 64 தந்திரங்கள் உள்ளதாகவும், அதில் 6 வகையான தந்திரங்கள் செக்ஸ் தொடர்பானது என்றும் கூறுவார். தன்னையே கடவுளாக சொல்லிக் கொள்வார். தான் இருக்கும் இடத்தை கடவுளின் வீடு என்பார். மேலும், செக்ஸ் படம் பார்ப்பது, காம உணர்வுகளை தூண்டும் இசை கேட்பது, நிர்வாணமாக நடமாடுவது ஆகியவையும் உடலுறவும் ஆத்மாவின் விடுதலைக்கு அவசியம் என்பார். யாரும் யாருடனும் உறவு வைத்துக்கொள்ளலாம்; இதனால் சிலருக்கு உடல் அளவிலோ, மனதளவிலோ கஷ்டமாக இருந்தால் அதை தாங்கிக்கொள்ள வேண்டும் என்று ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது. அவரது தொல்லைகளை சகித்துக் கொள்ள முடியாத பெண்களிடம் இந்த ஷரத்துக்களை கூறி வாயை அடைத்துவிடுவார்கள்.

  எத்தனை பேர் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டிருப்பார்கள்?

  ஆசிரமத்தில் இருந்த 200 பேரிடம் கையெழுத்து வாங்கியிருப்பார். பலர் புகார் கொடுக்காமல் பயந்திருக்க அதுவும் காரணம்.

  இப்போது உங்களுக்கு மிரட்டல் வருவது நின்றுவிட்டதா?

  இல்லை. வெளிநாட்டில் இருந்துகூட மிரட்டல் வருகிறது. இத்தனைக்கும் பிறகும் அவரை மகான் என்று நம்புகிறவர்கள் இருக்கிறார்கள். அவர்களில் பலர் விஐபிக்களாக சமுதாயத்தில் பொறுப்பான பதவிகளில் இருக்கிறார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும். அதனால் ஏதாவது ஒரு வகையில் எனக்கு அச்சுறுத்தல் இருக்கத்தான் செய்யும்.

  பெண்கள் எப்படி அவரது வலையில் விழுகின்றனர்?

  அவரிடம் ஒரு நிமிடம் தனியாக பேச, கோடி ரூபாய் கொடுக்க தயாராக இருக்கிறார்கள். கடவுள் போன்று மதிக்கப்படும் ஒருவர் தன்னை தனியே அழைத்து பேசுவதை பெண்கள் பாக்கியமாக கருதுகின்றனர். அவர் அதை வாய்ப்பாக்கிக் கொள்கிறார். மேலும், கடவுளுடன் சந்தோஷமாக இருந்தால் ஞானம் கிடைக்கும் என்று கூறியதால் அவர்களும் அவரது பேச்சில் மயங்கி விடுகின்றனர்.

  இதுவரை எத்தனை பெண்கள் அவரால் பாதிக்கப்பட்டிருப்பார்கள்?
  எனக்குத் தெரிந்து 40 பெண்கள் இருப்பார்கள். அது தவிர ஓரின சேர்க்கை புகாரும் உண்டு. பெண்களை மது அருந்த வைத்து பார்த்து ரசிப்பார். மாடர்ன் உடைகளை அணிய வைத்து அழகு பார்ப்பார்.

  இவ்வாறு லெனின் கூறினார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: