Archive for மே, 2010

கார் விபச்சாரம், கார் கற்பழிப்பு: தமிழனின் களவின் அபாரம்!

மே26, 2010

கார் விபச்சாரம், கார் கற்பழிப்பு: தமிழனின் களவின் அபாரம்!

முன்பெல்லாம் கார் விபச்சாரம் என்று செய்திகள் வந்து கொண்டிருந்தன.பிறகு விமானம் மூலம் சென்று வந்து செய்யும் விபச்சாரத்தை, ஒரு விபச்சாரியே சொல்லிப் பிரச்சினையாகி விட்டது. இப்பொழுதோ, கார் கர்பழிப்பில் இறங்கிவிட்டார்கள்!

வாழ்க தமிழகம்,

வாழ்க கற்பு.

பெண்ணை காரில் கடத்தி கற்பழித்த மூவருக்கு வலை

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=6667

தஞ்சாவூர் : தஞ்சையில், கல்லூரி பெண் ஊழியரை காரில் கடத்திச் சென்று கற்பழித்த மூன்று பேரை, போலீசார் தேடுகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை தாலுகா மட்டங்காலைச் சேர்ந்தவர் பழனிவேல் மகள் கவுரி (30). இவர், தஞ்சை புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள, பாரத் கல்லூரி நூலகத்தில் பணி புரிகிறார். நேற்று முன்தினம் காலை 9 மணியளவில், இவர் கல்லூரிக்கு செல்வதற்காக, பஸ்சில் வந்து ஸ்பின்னிங் மில் பஸ் ஸ்டாப்பில் இறங்கினார். அப்போது, மட்டங்காலைச் சேர்ந்த காளிமுத்து மகன் செந்தில் உட்பட மூன்று பேர், ஒரு டாடா சுமோவில், கவுரியை வலுக்கட்டாயமாக ஏற்றிச் சென்றனர். டாடா சுமோவில் வைத்து அவரை கற்பழித்தனர். பின், கவுரியை செங்கிப்பட்டியில் இறக்கிவிட்டு விட்டு, மூவரும் டாடா சுமோவில் தலைமறைவாகினர். கவுரி கொடுத்த புகாரின் பேரில், போலீசார் விசாரிக்கின்றனர்.

ஸ்டாலின், சுய-உதவி குழு, பெண்கள் படும்பாடு!

மே21, 2010

ஸ்டாலின், சுய-உதவி குழு, பெண்கள் படும்பாடு!

பெண்கள் சுய உதவிகுழு என்று பலர் கிளம்பி விட்டனர். உண்மை சில மகளிர்/பெண்குழுக்கள் நன்றாக செயல்பட்டாலும், திமுகவினரின் அதிகமான ஆதிக்கத்தினால், ஊழல் பெருக ஆரம்பித்தது.

  • பணத்தைப் பெறுவதற்காகவே பல நூற்றுக்கணக்கான பெண்கள் சுய உதவி குழுக்கள் முளைத்தன,
  • இவ்வளவு பணம் கொடுத்தால், இவ்வளவு கமிஷன் கொடுக்கவேண்டும் என்ற ரீதியில் செயல்பட்டனர்.
  • உள்ளூர் வட்டச் செயலாளர், மேயர், எம்.எல்.ஏ…………முதலியோர் சொல்லியே பல குழுக்கள் ஆரம்பிக்கப் பட்டன.
  • உள்ளூர் வட்டச் செயலாளர், மேயர், எம்.எல்.ஏ………………….என்று அக்குழுக்கள் செயல்பட்டு கொள்ளை அடித்தன, இன்னும் அடிக்கின்றன.
  • அரசியல் ரீதியில், இது ஒரு விளம்பர சேவையாக இருக்கிறது, ஏனெனில் பணம் கொடுப்பது வங்கிகள், புகழைப் பெறுவது, அரசியல்வாதிகள்.
சுயஉதவி குழுவினரிடம் மோசடி “வசூல்’ பெண்கள் இருவர் சிக்கினர்

கோவை : மகளிர் சுயஉதவி குழுவினருக்கு, கடன் பெற்று தருவதாகக்கூறி, பல ஆயிரம் வசூலித்த பெண்கள் இருவர் பிடிபட்டனர்.  மகளிர் சுயஉதவி குழுவினருக்கு, அந்தந்த பகுதியை சேர்ந்த அரசுடமையாக்கப்பட்ட வங்கிகள், சுழல் நிதி வழங்குகின்றன. இந்த நிலையில் ஒருசில தனியார் நிறுவனங்களும், கிராம பகுதியிலுள்ள சுயஉதவி குழுவினரை சந்தித்து, எவ்வித நிபந்தனையும் விதிக்காமல், கடன் கொடுத்து, வாரந்தோறும் கடன் தொகையை வட்டியோடு வசூலித்து வருகின்றன.

சில தன்னார்வ நிறுவனங்களும், தனி நபர்களும் வங்கிக்கடன் பெற்று தருவதாகக்கூறி, கடன் தொகைக்கேற்ப கமிஷன் வசூலித்து ஏமாற்றுகின்றனர். ஒத்தக்கால் மண்டபம், ஈச்சனாரி, கவுண்டம் பாளையம், பொள்ளாச்சி, நரசிம்மநாயக்கன் பாளையம், செல்வபுரம் பகுதிகளில் இக்கும்பலை சேர்ந்தவர்கள், சுயஉதவி குழுவினரை சந்தித்து, கடன் பெற்று தருவதாக கூறி வசூலில் இறங்கினர். அவர்களை பொதுமக்கள் முற்றுகையிட்டு, போலீசில் ஒப்படைத்தனர்.

நேற்று ரத்தினபுரியை சேர்ந்த மகளிர் சுயஉதவி குழுவினர், காட்டூர் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு, “கடன் பெற்று தருவதாகக்கூறி, எங்களிடம் ஆயிரக்கணக்கில் வசூலித்து ஏமாற்றியவர்களை, கைது செய்ய வேண்டும். அவர்களிடமிருந்து பணத்தை மீட்டுத் தர வேண்டும்’ என வலியுறுத்தினர். இது தொடர்பாக, ரத்தினபுரியை சேர்ந்த இந்திராணி, சாந்தி ஆகியோரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதன் பிறகே, போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்ட பெண்கள் கலைந்து சென்றனர்.

சுயஉதவி குழு உறுப்பினர் பெயரில் ரூ. 2 லட்சம் கடன் மோசடி: சேவா சங்க தலைவி கைது செப்டம்பர் 25,2009,00:00  IST

http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=13028

விருதுநகர்: மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் பெயரில், பாங்கில், இரண்டு லட்ச ரூபாய் கடன் வாங்கி மோசடி செய்த, சேவா சங்க தலைவி கைது செய்யப்பட்டார். மகளிர் சுய உதவிக்குழுவை சேர்ந்த உறுப்பினர்களை, சமீப காலமாக, தலைவர்களாக இருப்பவர்கள் ஏமாற்றி பண மோசடி செய்வது அதிகரித்து வருகிறது. இதற்கு காரணம், மகளிர் சங்க தலைவவிகளாக இருப்பவர்கள் மட்டுமே, வங்கியுடன் தொடர்பு வைத்திருக்கின்றனர். சங்க கணக்கு வழக்குகள் அனைத்தும், தலைவிகள் கைவசம் மட்டுமே உள்ளது. மேலும், உறுப்பினர்களாக இருப்பவர்கள் அனைவரும் கல்வி அறிவு பெற்றவர்களில்லை. பாங்குகள் கடன் மட்டுமே வழங்குகின்றன. கடன் தொகையை சம்பந்தப்பட்ட நபர்கள் வந்தால் மட்டுமே வழங்க வேண்டும். கடன் தொகைக்கான தீர்மானம் போடும் போது தலைவர், செயலர், பொருளாளர் கையெழுத்திட வேண்டும். பாங்கில் இவர்கள் இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. மகளிர் சுய உதவிக்குழுக்களின் தீர்மானம் போட்டு கொடுத்தால் மட்டும் போதுமானது. இதனால், ஆள் மாறாட்டம் செய்து மற்றவர்கள் கடன்தொகையை பெற்று விடுகின்றனர். பெரும்பான்மையான மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் கடன் வாங்காமலே கடனாளி ஆகின்றனர். விருதுநகர், திருச்சுழி பள்ளிவாசல் அருகே வசிப்பவர் தனசேகரன். இவர் மனைவி பாக்கியலட்சுமி சேவா சங்க தலைவராக உள்ளார். ஆணைக்குளம் மகளிர் சுய உதவிக்குழு, அன்னை ரோஜா மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களிடம், கடன் வாங்கி தருவதாக, திருச்சுழி ஸ்டேட் வங்கிக்கு அழைத்து சென்றார். இவர்களது பெயரில், இரண்டு லட்ச ரூபாய் வரை கடன் பெற்று, உறுப்பினர்களுக்கு வழங்காமல் மோசடி செய்தார். இதுகுறித்து, ஆணைக்குளத்தை சேர்ந்த முத்துமாணிக்கம் மனைவி பேச்சியம்மாள் மற்றும் ஒன்பது பேர், போலீசில் புகார் செய்தனர். விருதுநகர் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், பாக்கியலட்சுமியை கைது செய்து விசாரிக்கின்றனர்.

நிர்வாணமான பெண்கள், தயங்கிய போலீஸார், தப்பிவிட்ட விபச்சாரிகள்!

மே14, 2010

நிர்வாணமான பெண்கள், தயங்கிய போலீஸார், தப்பிவிட்ட விபச்சாரிகள்!

உடம்பு விற்று விபச்சாரத் தொழில் நடப்பதாக போலீஸாருக்கு செய்தி வருகிறது.

அதுவும் அவ்வாறான பலான தொழிலில் ஈடுபடுத்திய பெண்கள் மொட்டுவிட்டு, விரியத் துடித்துக் கொண்டிருக்கும் வயதுள்ள “டீ-ஏஜ்” பெண்களாம்!

காப்பாற்றி, அவர்களை மீட்கலாம், என்று போலீஸார் சென்றபோது, அலமாரிகள், கப்போர்டுகள் என்ற இடங்களில் எல்லாம் ஒளிந்த் கொண்டு வெளிவராமல் சதாய்த்தனராம்.

வலுக்கட்டாயமாக, வெளியே இழுத்தபோது, அப்பெண்கள் தங்களுடைய உடைகளை எல்லாம் அவித்துப் போட்டுவிட்டனராம்.

அதுமட்டுமல்லாது, நிர்வாணமாக நின்று கொண்டு, “எங்கே, இப்பொழுது, என்னை பிடி பார்ப்போம்”, என்று கிண்டல் வேறு செய்தனராம்.

என்ன செய்வது என்று மலைத்து, தயங்கி நின்றபோது, அவர்கள் தப்பித்து ஓடியே விட்டனராம்!

இந்திய பெண்களின் வீரம் அலாதியாகத்தான் உள்ளது.

குஷ்பு, சுதா, புவனேஸ்வரி……………………முதலியோர் இவர்களின் பிச்சை வாங்கவேண்டும்.

ரஞ்சிதாவுக்காக வீதியில் இறங்கிப் போராடுவோம்! – கிளம்பி விட்டனர் வீராங்கனைகள்!

மே12, 2010
ரஞ்சிதாவுக்காக வீதியில் இறங்கிப் போராடுவோம்! – பெண் வழக்கறிஞர்
புதன்கிழமை, மே 12, 2010, 12:23[IST]
http://thatstamil.oneindia.in/news/2010/05/12/woman-activist-protest-ranjitha.html
கம்யூனிஸவாதிகளைப் பொறுத்த வரைக்கும் நடக்கமுடியாதவற்றையெல்லாம், நடப்பதுபோல பிரமிப்பை ஏற்படுத்துவார்கள், அறிக்கை விடுவார்கள்!

உதாரணத்திற்கு, கம்யூனிசத்திலேயே சமத்துவம் கிடையாது. ஏசியில் ஜாலியாக தூங்கும் காம்ரேடுகள், பிளாட்ஃபாரத்தில் தூங்கும் காம்ரேடுகள் என்றுதான் உள்ளார்கள்!

இதே நிலை மற்ற எல்லாவிஷயங்களிலும் உள்ளன. இருப்பினும், ஏதோ எல்லோரும் சமம் என்பது பொல வாய்சவடால் விடூக்கொண்டிருப்பார்கள்!

சுதா ராமலிங்கம் வீராவேசம்:  சுதா என்ற கம்யூனிஸ சித்தாந்திக்கு இப்படி கோபம் வருகிறது, “நடிகை ரஞ்சிதாவை போலீசார் அசிங்கப்படுத்துகிறார்கள். அவர் பாதிக்கப்பட்ட பெண். பக்குவமாகக் கையாள வேண்டும்“, என்ன இதெல்லாம், இப்படியொரு அக்கரை? அது மட்டுமா, “இல்லையேல் பெண்களைத் திரட்டி போராட்டம் நடத்துவேன் “, என்று பெண் வழக்கறிஞர் சுதா ராமலிங்கம் அறிவித்துள்ளார். இவரின் பெயர் கம்யூனிஸ்ட் தலைவர் வரதராஜன் சாவிலும் அடிபட்டது. இவர் இப்பொழுது திடீரென்று, ரஞ்சிதாவிற்காக கிலம்பி விட்டது ஆச்சரியமாக உள்ளது.

Sudha Ramalingam

Sudha Ramalingam

சுதா போலீஸாரை மிரட்டினாரா? சுதா ராமலிங்கம் மகளிர் அமைப்புகளில் தீவிரமாக உள்ளவர். நடிகை ரஞ்சிதா இவரது பாதுகாப்பில் சென்னையில் பதுங்கி இருப்பதாகக் கூறப்பட்டது. இதனால் போலீசார் சுதா ராமலிங்கத்திடம் விசாரணை நடத்தியதாகவும், இதில் ஆத்திரமடைந்த அவர் போலீசாரை மிரட்டியதாகவும் புகார் எழுந்துள்ளது. இதுபற்றி சுதா ராமலிங்கத்திடம் கேட்டபோது, “நடிகை ரஞ்சிதா பற்றி போலீசார் என்னிடம் எந்த விசாரணையும் நடத்தவில்லை. என்னிடம் தொடர்பு கொண்டு பேசவும் இல்லை. ஆனால் ரஞ்சிதா மீது எனக்கு அனுதாபம் உள்ளது. அவரைப் பொறுத்தவரை பாதிக்கப்பட்ட பெண்ணாக இருக்கிறார். அவரை மேலும் அசிங்கப்படுத்தக் கூடாது என்பதே என் விருப்பம்.

ரஞ்சிதாவிற்காக பரிதாபப் படும் சுதா: ரஞ்சிதா தப்பி ஓடப் பார்க்கிறார் என்று செய்திகள் வந்துள்ளன. அவர் தப்பி ஓட முயற்சிக்கவில்லை. பாதிக்கப்பட்டு இருக்கிறார். அவரை முறைப்படி கையாள வேண்டும். அநாவசியமான கருத்துக்களைப் பரப்பக்கூடாது. ரஞ்சிதா குற்றம் செய்தாரா? இல்லையா? என்பதை நீதிமன்றம்தான் நிரூபிக்க வேண்டும். என்னைப் பொருத்தவரை அவர் குற்றம் எதுவும் செய்யவில்லை. ரஞ்சிதா பற்றி அவதூறுகள் வெளி வருகின்றன. நடிகை என்றால் எது வேண்டுமானாலும் பேசலாம் என்பது சரியல்ல. ரஞ்சிதா விஷயத்தில் பெண் உரிமை அமைப்புகளை திரட்டி போராட்டம் நடத்தத்திட்டமிட்டுள்ளோம். பெண்களை போதைப் பொருளாக பயன்படுத்துவதை எதிர்த்து இப் போராட்டம் நடைபெறும் என்றார்.

ரஞ்சிதா குறித்து நடிகர்களிடம் போலீஸ் விசாரணை!

புதன்கிழமை, மே 12, 2010, 10:07[IST]

http://thatstamil.oneindia.in/news/2010/05/12/ranjitha-nithyananda-sex-scandal-enquiry-advocate.html

இழுத்தடிக்கும் ரஞ்சிதா, தேடியலையும் போலீஸ்: விசாரணைக்கு வராமல் இழுத்தடிக்கும் ரஞ்சிதா இருப்பிடம் குறித்து தமிழ், தெலுங்கு நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்களிடம் கர்நாடக போலீசார் விசாரித்து வருகின்றனர். இன்னொரு பக்கம், உடனே விசாரணை க்கு வரவேண்டும். இல்லையேல் கடும் நடிவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து, மூன்றாவது நோட்டீஸையும் ரஞ்சிதாவுக்கு அனுப்பியுள்ளது கர்நாடக போலீஸ். இந்த பலமுனை நெருக்கடி காரணமாக அடுத்த இரு தினங்களில் பெங்களூருக்கு ரஞ்சிதா வருவார் என அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். செக்ஸ் மோசடி. ஆன்மீக மோசடி, நில மோசடி, பொதுமக்கள் பணத்தை கையாண்டதில் முறைகேடு, செக்ஸ் ஒப்பந்தம் போட்டு பெண்களுடன் உறவு என பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு, 8 நாள் போலீஸ் விசாரணைக்குப் பின் ராம் நகர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் நித்யானந்தா.இவருடன் செக்ஸ் காட்சிகளுடன் தோன்றிய நடிகை ரஞ்சிதாவிடமும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்து, ரஞ்சிதாவுக்கு தொடர்ந்து சம்மன் அனுப்பி வருகின்றனர். ஆனால் ரஞ்சிதாவோ இதோ அதோ என்று இழுத்தடித்து வருகிறார்.பெங்களூர் சிஐடி அலுவலகத்துக்கு நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்குமாறு ஏற்கனவே 2 தடவை நடிகை ரஞ்சிதாவுக்கு போலீசார் நோட்டீஸ் அனுப்பி இருந்தனர். இதையடுத்து, விசாரணைக்கு வருமாறு ரஞ்சிதாவுக்கு கர்நாடக சி.ஐ.டி. போலீசார் மூன்றாவது நோட்டீஸை நேற்று அனுப்பினர்.இதையடுத்து, இன்னும் இரு நாட்களில் நடிகை ரஞ்சிதா பெங்களூர்  வந்து சி.ஐ.டி. போலீசார் முன்பு ஆஜர் ஆவார் என்று ரஞ்சிதாவின் வழக்கறிஞர் தெரிவித்ததாக கர்நாடக போலீஸார் கூறினர்.

நடிகர்கள், இயக்குநர்களிடம் விசாரணை: இதற்கிடையே, ரஞ்சிதாவின் வாக்குறுதியை இனி நம்ப முடியாது என முடிவு செய்த கர்நாக போலீஸ் அவர் மறைந்திருக்கும் இடத்தை தீவிரமாகத் தேடத் துவங்கிவிட்டனர். ரஞ்சிதா கிடைத்துவிட்டால், நித்யானந்தாவுக்கு எதிராக பல முக்கிய தகவல்களைப் பெற முடியும் என்பதில் போலீசார் உறுதியாக உள்ளனர்.எனவே ரஞ்சிதாவுக்கு நெருக்கமான நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ரஞ்சிதா எங்கே பதுங்கி இருக்கிறார் என்று அவர்களிடம் கேட்டு வருகின்றனர்.இதையெல்லாம் அறிந்த ரஞ்சிதா, இன்னும் ஒரிரு நாளில் ரஞ்சிதா போலீசில் ஆஜராகி சாட்சியம் அளிக்க ஒப்புக் கொண்டுள்ளாராம்.

நித்யானந்தாவின் சிறைக்காவல் நீடிப்பு: இந் நிலையில் நித்யானந்தாவின் நீதிமன்றக் காவல் இன்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து ராம்நகர் நீதிமன்றத்தில் நித்யானந்தாவிற்கு எதிராக கூடுதல் ஆவனங்கள் தாக்கல் செய்த சிஐடி போலீசார், நித்யானந்தாவின் சிறைக் காவலை நீட்டிக்க வலியுறுத்தினர்.இந்த வேண்டுகோளை ஏற்ற ராம்நகர் நீதிமன்றம், வரும் 26ம் தேதி வரை நித்யானந்தாவை சிறையில் வைக்க உத்தரவிட்டது.

பாலியல் வழக்கில் ஆசிரியருக்கு 30 ஆண்டுகள் கடுங்காவல், ஆனால் தமிழகத்திலோ ஜாலிதான்!

மே2, 2010
பாலியல் வழக்கில் ஆசிரியருக்கு 30 ஆண்டுகள் கடுங்காவல், ஆனால் தமிழகத்திலோ ஜாலிதான்!
மே 02,2010,00:00  IST
http://www.dinamalar.com/court_detail.asp?news_id=5759

தமிழகத்தில் ஆயிரக்கணக்கான வழக்குகளைப் பார்த்து விட்டோம்.

படங்களுடன் செய்திகள் கூட வந்துவிட்டன.

ஆசிரியர் மாணவியைக் கட்டிப் பிடித்தது, முத்தமிட்டது, ஓட்டலுக்கு அழைத்துச் சென்று ஜாலியாக இருந்தது, ……………………….என அசிங்கங்கள், ……….ஆபாசங்களும் நிறையெவே வந்துள்ளன.

அதுமட்டுமா, இந்திய – தமிழக பாதிரிகள், பிஷப்புகள்……..அமெரிக்கா, இத்தாலி…..என்று சென்று பல பெண்களை, சிறுமிகளை கர்பழித்து விட்டு, மற்ற பாலியல் குற்றவாளிகளைப் போல  தமிழகத்தில் வந்து ஒளிந்து கொண்டு விட்டார்கள். கிருத்துவ சபைகள், பிஷப்புகள், மற்ற கிருத்துவர்கல் தாம் அவர்களுக்கு இடம் கொடுத்தது. கன்னியாகுமரியில் ஒருத்தன், ஊட்டியில் ஒருத்தன்……….என்ரு ஒளிந்துள்ளார்கள்.

  • தமிழ் ஊடகங்கள்,
  • செம்மொழி செய்தியாளர்கள்,
  • கன்னித்தமிழ் காவலர்கள்,
  • கற்ப்புக்கரசி கண்ணகி வழி வந்தவர்கள்,
  • இனமான போராளிகள்,
  • மொழிப்போர் மறவர்கள்
  • இணைத்தள சூரப்புலிகள்
  • கணினி தமிழ் கணக்காளர்கள்……….

இவற்றைப் பற்றியெல்லாம் மூச்சுக்குட விடுவதில்லை, சொல்வது-எழுதுவது கிடையாது!

ஏன்?

ஆனால், அந்த கொடிய-குரூர-காமுகர்கள் என்னவானார்கள்?

சொல்லமுடியுமா?

அவர்களுக்கு இத்தகைய தண்டனைக் கொடுத்தார்களா?

கேரளாவிற்கு ஒரு சட்டம், தமிழகத்திற்கு ஒரு சட்டமா?

கோழிக்கோடு :   மார்ச் 2007ல், ஏ. கே. ஹரிதாஸ் என்ற ஆசிரியர் கைது செய்யப்பட்டார். நான்காம் வகுப்பு மாணவிகளிடம் பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில், ஆசிரியர் ஒருவருக்கு 30 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை அளித்து,  கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம், புலியாவு என்ற இடத்தில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் படித்த நான்காம் வகுப்பு மாணவிகளுக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, ஆசிரியர் ஏ. கே. ஹரிதாஸ் என்பவர் மீது ஆறு வழக்குகள் தொடுக்கப்பட்டிருந்தன. இந்த வழக்குகளை விசாரித்த கோர்ட் நேற்று அளித்த தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளதாவது: “ஆசிரியர் சமுதாயத்தில் வகித்த நிலையையும், பாதிக்கப்பட்டவர்களுக்கும், அவர்களது பெற்றோருக்கும்  ஏற்பட்ட மனஉளைச்சலையும்  கருத்தில் கொண்டு, அவருக்குக் கடுமையான தண்டனை அளிக்க வேண்டும் என்ற அரசுத் தரப்பு வாதம் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.


அதன்படி, முதல் வழக்கில் ஆறு ஆண்டுகள், இரண்டு மற்றும் மூன்றாம் வழக்குகளில் தலா ஐந்து ஆண்டுகள், நான்காம் மற்றும் ஐந்தாம் வழக்குகளில் தலா ஆறு ஆண்டுகள், ஆறாவது வழக்கில் இரண்டு ஆண்டுகள் என்று அவருக்குக் கடுங்காவல் தண்டனை விதிக்கப்படுகிறது.முதல் மூன்று வழக்குகளுக்கான தண்டனையை தொடர்ந்து அனுபவித்த பின், அடுத்த மூன்று வழக்குகளுக்கான தண்டனையைத் தொடர்ந்து அனுபவிக்க வேண்டும்.இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட ஐந்து மாணவிகளுக்கு, தலா நான்காயிரம் ரூபாய் வழங்கும்படியும்“,  கோர்ட் உத்தரவிட்டது.

அந்தாசிரியர் இந்திய குற்றாவியல் சட்டப் பிரிவுகள் –

IPC sections 354 (assault or criminal force to woman with intent to outrage her modesty = பெண்ணின் கற்ப்பைச் சூரையாட பலாத்காரம் செய்யும் வகையில் தாக்குவது அல்லது அத்தகைய பலாத்காரம் செய்வது),

377 (unnatural offences = இயற்கைக்கு மாறான குற்றங்கள்), and

506 (1) (Punishment for criminal intimidation = குற்ற உணர்வோடு தாக்கும் மனப்பாங்கு மற்றும் முறை).