கார் விபச்சாரம், கார் கற்பழிப்பு: தமிழனின் களவின் அபாரம்!


கார் விபச்சாரம், கார் கற்பழிப்பு: தமிழனின் களவின் அபாரம்!

முன்பெல்லாம் கார் விபச்சாரம் என்று செய்திகள் வந்து கொண்டிருந்தன.பிறகு விமானம் மூலம் சென்று வந்து செய்யும் விபச்சாரத்தை, ஒரு விபச்சாரியே சொல்லிப் பிரச்சினையாகி விட்டது. இப்பொழுதோ, கார் கர்பழிப்பில் இறங்கிவிட்டார்கள்!

வாழ்க தமிழகம்,

வாழ்க கற்பு.

பெண்ணை காரில் கடத்தி கற்பழித்த மூவருக்கு வலை

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=6667

தஞ்சாவூர் : தஞ்சையில், கல்லூரி பெண் ஊழியரை காரில் கடத்திச் சென்று கற்பழித்த மூன்று பேரை, போலீசார் தேடுகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை தாலுகா மட்டங்காலைச் சேர்ந்தவர் பழனிவேல் மகள் கவுரி (30). இவர், தஞ்சை புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள, பாரத் கல்லூரி நூலகத்தில் பணி புரிகிறார். நேற்று முன்தினம் காலை 9 மணியளவில், இவர் கல்லூரிக்கு செல்வதற்காக, பஸ்சில் வந்து ஸ்பின்னிங் மில் பஸ் ஸ்டாப்பில் இறங்கினார். அப்போது, மட்டங்காலைச் சேர்ந்த காளிமுத்து மகன் செந்தில் உட்பட மூன்று பேர், ஒரு டாடா சுமோவில், கவுரியை வலுக்கட்டாயமாக ஏற்றிச் சென்றனர். டாடா சுமோவில் வைத்து அவரை கற்பழித்தனர். பின், கவுரியை செங்கிப்பட்டியில் இறக்கிவிட்டு விட்டு, மூவரும் டாடா சுமோவில் தலைமறைவாகினர். கவுரி கொடுத்த புகாரின் பேரில், போலீசார் விசாரிக்கின்றனர்.

குறிச்சொற்கள்: , , , , , , , , , ,

2 பதில்கள் to “கார் விபச்சாரம், கார் கற்பழிப்பு: தமிழனின் களவின் அபாரம்!”

  1. Jobs Online Says:

    Pengalin sundandhiram paadhakkaakkapadavendum

    • vedaprakash Says:

      “பெண்களின் சுதந்திரம் பாதுகாக்கப்படவேண்டும்”, என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள்!
      நன்றி.
      You have said, “The rights / freedom of women shold be protected”.
      Thank you for your comments.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: