Archive for ஜூன், 2010

கேரளாவில் கிருத்துவ செக்ஸ் தொல்லைத் தாங்க முடியாமல் அபயகேந்திரங்கள் மூடல்!

ஜூன்30, 2010

கேரளாவில் கிருத்துவ செக்ஸ் தொல்லைத் தாங்க முடியாமல் அபயகேந்திரங்கள் மூடல்!

அஸிஸி காருண்ய ஆஸ்ரம்: அபயகேந்திரம் என்பது அஸிஸி காருண்ய ஆஸ்ரமத்தின் பகுதியாக இருக்கிறது. கேரளா மட்டுமல்லாது, இந்தியா முழுவதும் ஆஸ்ரமங்களை வைத்துக் கொண்டு, இந்துக்களைப் போலவே காவி உடைகள் தரித்துக் கொண்டு, கிருத்துவர்கள் ஏன் முஸ்லீம்கள் கூட உலா வந்து க்ஒண்டு இருக்கிறார்கள். பொதுவாக ஜனங்கள் இவர்கள் எல்லோருமே இந்து சாமியார்கள் என்று நினைத்துக் கொள்வார்கள். கிருத்துவர்களுக்கும், முஸ்லீம்களுக்கும் இதில் லாபம் என்னவென்றால், இதுமாதிரி பிரச்சினை வந்து விட்டால் ஏதோ, ஆஸிரமம், காவிக்கட்டிய சாமியார்கள் என்றுதான் ஊடகங்கள் காண்பிப்பர்.முழுவிவரம் அறிந்த பின்னர் தான் தெரியும், செய்தது கிருத்துவ சாமியார் அல்லது முஸ்லீம் சாமியார் என்று!

உதாரணத்திர்காக, கேராளவில் அத்தகைய ஆஸ்ரமம், “கருணாஸ்ரமம்” எப்படியிருக்கும், என்பதர்கு, சில புகைப்படங்கள் சேர்க்கப் படுகின்றன. இவை, பிரச்சினையுடன் தொடர்பு கொந்தவை இல்லை, ஆனால், கிருத்துவர்கள், எப்படி அத்தகைய பெயர்களை வைத்துக் கொண்டு, தங்கலது நிருவனங்களை நடத்தி வருகிறார்கள் என்பதனை எடுத்துக் காட்டப்படுகிறது.

KARUNYAashram_6

KARUNYAashram_6
KARUNYASRAM_1

KARUNYASRAM_1
KARUNYASRAMAM_3

KARUNYASRAMAM_3
Kerala-nuns-enloying-life

Kerala-nuns-enloying-life

அஸிஸி என்றால், ஒரு கிருத்துவத் துறவி. பிறகு எப்படி, எல்லாவர்ரையும் துரப்பது விட்டுவிட்டு, “அபயகேந்திரம்” என்ற பெயரையும் வைத்துக் கொண்டு “அஸிஸி காருண்ய ஆஸ்ரமத்தின்” பகுதியாக இருக்கிறது, என்ற நிலையில் கிருத்துவ சஅமியார்கள், இத்தகைய காமக் கொடூர களியாட்டங்களில் ஈடுபடுவர்?  பேட்ரிக் ஜார்ஜ் (38) மற்றும்ஜோசி ஜார்ஜ் (34), இருவரும் அபயகேந்திரங்களுக்கு வரும் மனநிலை பாதித்த மற்றும் இதர பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தல், கற்பழித்தல் முதலிய குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Abhayakendras-closed-down-Christian-sex-scam[/caption]

1993லிருந்து “ரக்ஸா வில்லா” என்ற பெயரில், இந்த கிருத்துவர்கள் பெண்களுக்கு ஆலோசனை கூறல் என்ற பெயரில் “அபய கேந்திரங்களை” நடத்தி வருகின்றனராம். இதில் 15 முதல் 25 வயது வரையில் இளம் பெண்கள் வருகின்றனராம். இவர்களுக்கு மனரீதியாக ஆலோசனை கூறுகிறேன் என்று கூறி செக்ஸ் விளையாட்டுகள் செய்ததோடலல்லாமல், கற்பழித்துவிட்டதாக புகார்கள் எழுந்தன.

வெளிநாட்டுக்கு அனுப்புவதாகக் கூறி பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தி வந்த கும்பல் கைது

ஜூன்29, 2010

வெளிநாட்டுக்கு அனுப்புவதாகக் கூறி பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தி வந்த கும்பல் கைது

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=28410

கொடுங்கையூர் கொடுமைகளின், தீவிரவாத்தத்தின் மையாமாகிறது: சென்னை : வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்புவதாகக் கூறி, பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தி வந்த கும்பலை போலீசார் கைது செய்தனர். மத்திய குற்றப்பிரிவு போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த அன்பழகன்(35), புதுக்கோட்டை மாவட்டம் அரசம்பட்டியைச் சேர்ந்த முருகன்(35), லோகம்பாள்புரத்தைச் சேர்ந்த தர்மராஜ்(28) மற்றும் ஆந்திராவின் கோதாவரி மாவட்டம், தேவதள்ள பாளத்தைச் சேர்ந்த புஜ்ஜிபாபு(26) ஆகியோர், சென்னையிலிருந்து பெண்களை வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்புவதாகக் கூறி, அவர்களை சுற்றுலா விசாவில் மலேசியா, சிங்கப்பூருக்கு அனுப்பி விபசாரத்தில் ஈடுபடுத்தி வந்துள்ளனர்.

சுற்றுலா விசாவில் மலேசியா, சிங்கப்பூருக்கு அனுப்பி விபசாரம்: இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் சென்னை போலீஸ் கமிஷனரிடம் நேற்று புகார் அளித்தார். புகாரின்படி, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், சென்னை பெரியமேடு பகுதியில் உள்ள லாட்ஜில் தங்கியிருந்த மோசடி கும்பலை கைது செய்தனர். அவர்களிடமிருந்து வெளிநாட்டுக்கு அனுப்ப இருந்த பெண்களின் பாஸ்போர்ட் மற்றும் மொபைல்கள் கைப்பற்றப்பட்டன. பெருநகர குற்றவியல் கோர்ட் உத்தரவுப்படி, குற்றவாளிகள் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இம்மோசடியில் ஈடுபடும் கும்பல்களை தேடும்பணி தொடரும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

பெண்களை-விபச்சாரத்தில்-தள்ளுவது-2010

பெண்களை-விபச்சாரத்தில்-தள்ளுவது-2010

சுற்றுலா விசா, மலேசியா-சிங்கப்பூர் விபச்சாரம்: இவையெல்லாமே நன்றாக ஏற்படுத்தப் பட்ட தொழிலாக, வியாபாரமாக நடப்பதாகத் தெரிகிறது. இவர்களுக்கும், மற்ற சினிமாத்துறை ஆட்கள் செய்வதற்கும் ஒன்றும் வித்தியாசம் இல்லை. விமானத்தில் பறந்து சென்று நடிகைகள் விபச்சாரம் செய்து வருவதாக, முன்பு புவனேஸ்வரியே குற்றஞ்சாட்டியது நினைவில் கொள்ளவேண்டும். துபாய் மற்றும் மற்ற ஆசிய நாடுகளிலும் இது வேறு வடிவங்களில், சேய்க்குகளின் வீட்டு வேலைக்காரிகள் முதலிய போர்வைகளில் நடைபெறுகின்றது.

பெண்ணிடம் சில்மிஷம் செய்த சாமியார், மற்றும் செக்ஸ் விளையாட்டில் ஈடுபட்ட இளைஞர்கள்!

ஜூன்24, 2010

பெண்ணிடம் சில்மிஷம் செய்த சாமியாருக்கு 5 ஆண்டு சிறை!

பெண்ணிடம் சில்மிஷம் என்றல், அதைப் பார்க்கின்றனர்.

கஷ்டப்பட்டு மற்ற விஷயங்களை எழுதினால் கண்டு கொள்வதில்லை.

தினம்-தினம் சின்னத்திரையில் கை-கால்களை இழுத்துக் கொண்டு நடிகைகள் ஆடுகின்றனரே அதுவும் சில்மிஷம் தான்!

நேற்று வயதான கவிக்களுக்கு, குரங்குகளுக்கு காமம் அதிகமாகி வார்த்தைகளினாலே சில்மிஷம் செய்ய ஆரம்பித்து விட்டனர், செம்மொழி மாநாட்டிலே!

நமிதாவை ஏன் செம்மொழி இலச்சினையில் கருணாநிதி போடவில்லை? கேட்பது ரஞ்சிதா புகழ் நக்கீரன் கோபால்!

சமீபத்தில் பூ ஒன்று இலையை விட்டு இங்கு வந்திருக்கிறது, சொல்வது விவஸ்தை கெட்ட குரங்கு வாலி!

இதற்கெல்லாம் ஒரு பொருளா, இரட்டைப்பொருளா, பரிபாஷை தேவையா?

திருவள்ளூர் : பெண்ணிடம் சில்மிஷம் செய்த  சாமியாருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. திருவள்ளூர் கீழ்நல்லாத்தூரைச் சேர்ந்தவர் சாமியார் பாலய்யா நாயுடு (60). இவர் கடந்த 2007ம் ஆண்டு பார்வதி (50) என்ற பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது தொடர்பாக பார்வதி கொடுத்த புகாரின் பேரில் அவர் மீது பெண்கள் வண்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை திருவள்ளூர் ஜெ.எம்., கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சாமியார் பாலய்யா நாயுடுவுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்.

இதே மாதிரி மற்ற சாமியார்களுக்கும் தண்டனை கொடுத்தால் நன்றாக இருக்கும்.

சிறுமியிடம் சில்மிஷம் வாலிபர் கைது

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=27290

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த பனையபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தீபா(17, பெயர் மாற்றப்பட்டுள்ளது). பிளஸ் 2 படித்து வரும் இவர், கடந்த 16ம் தேதி மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு திரும்பினார். அதே பகுதியைச் சேர்ந்த சிலம்பரசன்(23), தீபாவை அழைத்துச் சென்று பலாத்காரம் செய்துள்ளார். விக்கிரவாண்டி போலீசார், சிலம்பரசனை கைது செய்து விழுப்புரம் ஜுடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். சிலம்பரசனை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி ஸ்ரீதர் உத்தரவிட்டார்.

சிறுமிகளைக் கற்பழித்த ஐந்து பேர் கைது

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=26573

திருச்சி : திருச்சியில் வறுமையைக் காரணம் காட்டி, இரண்டு ஏழை சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்துவந்த 14 வயது பள்ளி மாணவர் முதல் 42 வயது லோடுமேன் வரையிலான ஐந்து பேரை, போலீசார் கைது செய்துள்ளனர். திருச்சி, அரியமங்கலம் அடுத்துள்ள காமராஜ் நகரைச் சேர்ந்தவர் ராணி (35). இவருடைய கணவர் சுகுமார், ஏழாண்டுக்கு முன் இறந்துவிட்டார். ராணிக்கு கவிதா (12), கீதா (10) (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது) என்ற மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

கணவர் இறந்தபின் வறுமை காரணமாக, ராணி கூலி வேலை செய்து, தன் பிள்ளைகளை காப்பாற்றி வருகிறார். படிக்க வசதியில்லாததால், இரண்டு சிறுமிகளும் பள்ளி செல்வதை நிறுத்தினர். இவர்கள் வீடருகே, கொத்தனார் வேலை பார்க்கும் மன்சூர் அலி (18) என்ற வாலிபர் உள்ளார். அவர், சிறுமிகளுக்கு அவ்வப்போது சாக்லேட், இனிப்பு வாங்கிக் கொடுத்து அவர்களை தொடுவது, முத்தமிடுவது உள்ளிட்ட “செக்ஸ்’ விளையாட்டில் ஈடுபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

தான் அனுபவித்ததை, நண்பர்கள் நடராஜன் (14), ஒன்பதாம் வகுப்பு படிக்கும் செல்வா (14) ஆகியோரிடம் கூறினார். அவர்கள், தங்களுக்கும் அந்த சிறுமிகளை அறிமுகப்படுத்த வேண்டும் என்று கேட்டனர். சம்மதம் தெரிவித்த மன்சூர் அலி இரு சிறுமிகளிடமும் நைசாக பேசி, நண்பர்களிடமும் இணக்கமாக இருக்க சம்மதம் வாங்கினார். இதையடுத்து அந்த மூவரும் சில நாட்களாக அவர்கள் வசித்த பகுதியில், புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடத்தில் கூடி, சிறுமிகளிடம் சிற்றின்பம் அனுபவித்து வந்தனர்.

இரண்டு நாட்களுக்கு முன், காய்கறி கடை வைத்திருக்கும் குமார் (34) என்பவரும், காந்தி மார்க்கெட்டில் லோடுமேனாக பணியாற்றும் ராதா பீட்டர் (42) என்பவரும் அதை பார்த்து விட்டனர். அவர்கள் அந்த மூன்று பேரையும் மிரட்டினர். அதற்கு அவர்கள், “வேண்டும் என்றால் நீங்களும் அனுபவித்துக் கொள்ளுங்கள்’ என்று கூறினர்.

இதையடுத்து, அந்த சிறுமிகள் இருவரையும் மூன்று நாட்களாக தினமும் மாலைநேரத்தில் புதிய கட்டடத்திற்கு வரச் சொல்லி, ஐந்து பேரும் ஒன்றாக செக்ஸ் சித்ரவதை செய்துள்ளனர். மூன்று நாட்களாக நடந்த சம்பவம் குறித்து, அந்த பகுதி மக்களுக்கு அரசல்புரசலாக தெரிந்தது. அவர்கள் சிறுமிகளின் தாயிடம் தெரிவித்தனர். ராணி இதுகுறித்து, அரியமங்கலம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில், நேற்று முன்தினம் இரவு, ராதா பீட்டர், குமார், பள்ளி மாணவன் செல்வா, கொத்தனார்கள் மன்சூர் அலி, நடராஜன் ஆகியோரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட ஐந்து பேரும், ஜுடிஷியல் மாஜிஸ்திரேட் 1 நீதிபதி நாகவள்ளி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

திருமணத்துக்கு முன் பெண்கள் “செக்ஸ்’ உறவு? மலேசிய அறிஞர் கண்டனம்

ஜூன்23, 2010

திருமணத்துக்கு முன் பெண்கள் “செக்ஸ்’ உறவு? மலேசிய அறிஞர் கண்டனம்

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=24580

திருச்சி: திருமணத்துக்கு முன் பெண்களின் உறவு குறித்து நடிகை குஷ்பு தெரிவித்தக் கருத்துக்கு, உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில், “திருமண முந்தைய உறவு’ குறித்து ஆய்வுக் கட்டுரை சமர்பிக்க வந்துள்ள மலேசியன் இந்தியன் காங்கிரஸ் கட்சியின் சமூக வியூக அறவாரிய பிரிவுத் தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கோவையில் இன்று துவங்கும் உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில் பங்கேற்பதற்காக பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் வருகை புரிந்துள்ளனர். இதில், பலர் மலேசியாவில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்து, அங்கிருந்து பஸ் மூலம் கோவை மாநாட்டுக்கு சென்றனர். நேற்று காலை 8.55 மணிக்கு ஏர் ஏசியா விமானம் மூலம், மலேசியா நாட்டின் பேராக் மாநில சட்டசபை சபாநாயகர் டத்தோ கணேசன், முதல்வரின் ஆலோகர் வீரசிங்கம், எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் மோகன், பெருமாள், அசோகன் உள்பட 51 பேர் திருச்சி விமான நிலையம் வந்தனர்.அவர்களை சட்டசபைத் துணை சபாநாயகர் துரைசாமி, திருச்சி கலெக்டர் (பொ) தட்சிணாமூர்த்தி, மேயர் சுஜாதா, கமிஷனர் பால்சாமி உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

தொடர்ந்து, அவர்கள் திருச்சியிலுள்ள ஃபெமினா ஹோட்டலில் காலை உணவு அளிக்கப்பட்டு, அரசு சார்பில் ஏற்பாடு செய்த நான்கு சொகுசு பஸ்கள் மூலம் கோவை மாநாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். போலீஸ் பாதுகாப்புடன் ஒவ்வொரு பஸ்ஸிலும் தனி அலுவலர் ஒருவரும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுதப்பட்டார்.அதேபோல், நேற்று மாலை 4.05 மணிக்கு மலேசியாவிலிருந்து திருச்சி வந்த ஏர் ஏசியா விமானத்தில், உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு பெண்கள் உள்பட 40 பங்கேற்பாளர்கள், ஆய்வுக்கட்டுரை சமர்பிக்க அறிஞர் ஒருவரும் வந்தனர்.அவர்களை சட்டசபைத் துணை சபாநாயகர் துரைசாமி தலைமையிலான குழுவினர் வரவேற்று, தேனீர் விருந்தளித்து, ஏற்பாடு செய்த சிறப்பு பஸ்களில் கோவை மாநாட்டுக்கு போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர்.

உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில், “தமிழில் திருமணத்துக்கு முந்தைய பயிற்சி ஒரு மலேசிய அனுபவம்’ எனும் தலைப்பில் ஆய்வுக்கட்டுரை சமர்பிக்க வந்துள்ள, மலேசியன் இந்தியன் காங்கிரஸ் கட்சியின், சமூக வியூக அறவாரியப் பிரிவுத் தலைவர் குணபதி ஆறுமுகம் கூறியதாவது:உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில் பங்கேற்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இதுபோன்ற சிறப்புமிக்க மாநாட்டை ஏற்பாடு செய்த முதல்வர் கருணாநிதிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். எங்களுக்கு இங்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி.திருமணத்துக்கு முந்தைய பயிற்சி குறித்து மலேசிய அரசு பாடத்திட்டத்தை உருவாக்கி தமிழில் பயிற்சியளிக்கிறது.

திருமணம் செய்துகொள்பவர்கள் முன்னதாக இந்த பயிற்சியை பெறுவர். மலேசிய மாணவர்களுக்கு குடும்ப உறவு முறை, திருமணத்துக்கு முந்தைய உறவு குறித்து அடிப்படை பயிற்சி, விவகாரத்து தொடர்பான பிரச்னை களைவது போன்றவற்றை தடுக்க அரசு பயிற்சியளிக்கிறது. திருமண வாழ்வில் கசப்பு ஏற்படுவதற்கான பல்வேறு சூழல், விவகாரத்து ஏன் நிகழ்கிறது?. மலேசிய நாட்டு பயிற்சி போன்று தமிழகத்திலும் உருவாக்க வேண்டும் போன்ற கருத்துக்களை வைத்து ஆய்வுக்கட்டுரை சமர்பிக்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.

திருமணத்துக்கு முந்தைய பெண்களின் “செக்ஸ்’ உறவு குறித்து நடிகை குஷ்பு தெரிவித்த கருத்து பற்றி, குணபதி ஆறுமுகம் கூறுகையில், “”பெண்களின் திருமணத்துக்கு முந்தைய செக்ஸ் உறவு பற்றி குஷ்பு கூறிய கருத்தை கடுமையாகக் கண்டிக்கிறோம். அதில், எங்களுக்கு உடன்பாடில்லை. திருமணத்துக்கு முன் பெண்கள் உடலுறவு வைத்துக் கொள்ளக் கூடாது,” என்றார்.

பலதார போலீஸிடம் சிக்கும் பெண்கள்: விந்தையிலும் விந்தைதான்!

ஜூன்1, 2010

பலதார போலீஸிடம் சிக்கும் பெண்கள்: விந்தையிலும் விந்தைதான்!

போலீஸ் ஏட்டு கணவர் மீது பெண் போலீஸ் ஏட்டு புகார்

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=10069

பட்டுக்கோட்டை : போலீஸ் ஏட்டு கணவர் மீது, மூன்றாவது மனைவியான போலீஸ் பெண் ஏட்டு நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் மனு வழங்கியதுடன், பட்டுக்கோட்டை மகளிர் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் கிரேடு ஒன் ஏட்டாக பணி புரிபவர் இளங்கோவன் (39). இவர் மன்னார்குடி அந்தோணியார் கோவில் தெருவைச் சேர்ந்தவர். இவர் ஏற்கனவே பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் வேலை செய்யும் மஞ்சுளா (39) என்ற நர்சை திருமணம் செய்து அவருக்கு வஸ்திகரோலின் (6) என்ற பெண் குழந்தை உள்ளது. வக்கீல் முன்னிலையில் எழுதி வாங்கிக் கொண்டு அவரை விவாகரத்து செய்து விட்டார். பின், திருவாருர் மாவட்டம் வேல்குடியைச் சேர்ந்த சுதா (25) என்ற பெண்ணை இளங்கோவன் திருமணம் செய்தார். அவருக்கும் கார்த்திகா (4) என்ற பெண் குழந்தை உள்ளது. தற்போது அவரிடம் விவாகரத்து கேட்டு தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது.

திருமணமாகி விவாகரத்தில் முடிந்து தனியாக இருக்கும் பெண்: இதற்கிடையில், சுதாவை திருமணம் செய்ததை மறைத்து தன்னோடு போலீஸ் பயிற்சியின் போது பழகிய தொழுதூர் புதுத்தெருவைச் சேர்ந்த தெட்சணாமூர்த்தி மகள் வனிதாவை (32) (திருச்சியில் ஏட்டாக பணிபுரிபவர்), மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார். வனிதாவுக்கும் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தில் முடிந்து தனியாளாய் இருந்ததால் அவரும் விசாரிக்காமல் இளங்கோவனை திருமணம் செய்துள்ளார்.

ஏட்டு வனிதா கூறியதாவது: கடந்த 2007 ஜன., 29ம் தேதி எங்கள் திருமணம் நடந்தது. அதன் பின் சண்முகப்பிரியா (3) இளமதி (10 மாதம்) ஆகிய இரண்டு குழந்தைகள் பிறந்தனர். நாளடைவில் எங்களை சந்திக்க இளங்கோவன் வராததால் அவர் மீது சந்தேகப்பட்டு விசாரித்த போது, சுதாவுடன் மீண்டும் தொடர்பு ஏற்பட்டுள்ளது தெரிந்தது. என்னுடன் வாழ மறுத்து, தன் முதல் குழந்தை மட்டும் அவருக்கு பிறந்ததாகவும், இரண்டாவது குழந்தை என் உயர் அதிகாரிக்கு பிறந்ததாகவும் கூறுகிறார். அதனால், டி.என்.ஏ., சோதனை செய்து உண்மை கண்டறிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து, சோதனை செய்யவும், இளங்கோவன் மற்றும் தன்னை மிரட்டும் இளங்கோவனின் இரண்டாவது மனைவி சுதா மீது நடவடிக்கை எடுக்கவும் புகார் அளித்துள்ளேன்.

பலதார விஷயம் போலீஸ் விஷயமாகி விட்டது: திருவாரூர் மாவட்டத்தில் இளங்கோவன் வேலை செய்கிறார். திருச்சியில் வனிதா வேலை செய்கிறார். இளங்கோவனின் இரண்டாவது மனைவி சுதா, பட்டுக்கோட்டையில் வசிப்பதால், அவர் அங்கிருந்து வனிதாவுக்கு மொபைல்போனில் எஸ்.எம்.எஸ்., அனுப்பி மிரட்டி வந்துள்ளார். இதுபற்றி தஞ்சாவூர் எஸ்.பி., செந்தில்வேலனிடம் வனிதா புகார் தெரிவித்துள்ளார். இதில், தான் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்றும், பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் போலீசாரை விசாரிக்க சொல்லியுள்ளதாக, எஸ்.பி., கூறியுள்ளார். இதனால், பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்புராணியிடம் இளங்கோவன் மற்றும் அவரது இரண்டாவது மனைவி சுதா மீது வனிதா புகார் செய்தார். ஆனால், புகார் குறித்து விசாரணை செய்த இன்ஸ்பெக்டர் அன்புராணி, வனிதாவிடம் சாதாரணமாக எழுதி வாங்கிக் கொண்டு வழக்கு ஏதும் பதிவு செய்ய மறுத்துவிட்டார். ஆத்திரம் அடைந்த வனிதா மற்றும் அவரது உறவினர்கள் நேற்று பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் வந்தனர். உரிய நடவடிக்கை எடுக்காததால், போலீஸ் ஸ்டேஷனை வனிதா மற்றும் உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

துறை ரீதியாக உரிய நடவடிக்கை: தகவலறிந்த பட்டுக்கோட்டை டி.எஸ்.பி., நாராயணசாமி, வனிதா மற்றும் இளங்கோவனை நேரில் அழைத்து விசாரணை செய்தார். இளங்கோவன் மீது துறை ரீதியாக உரிய நடவடிக்கை எடுக்க பரிந்துரைப்பதாக அவர் உறுதி கூறினார். நேற்று காலை முதல் இவ்வழக்கை விசாரிக்க மறுத்த இன்ஸ்பெக்டர் அன்புராணி, “”இது தங்கள் துறையில் பணி புரிபவர்களின் வாழ்க்கை சம்பந்தப்பட்ட விஷயமாக இருப்பதால், பத்திரிகையாளர்கள் இது பற்றி எழுதக் கூடாது,” என, எச்சரித்தது மட்டுமின்றி, போலீஸ் ஏட்டு இளங்கோவனை போட்டோ எடுக்கவிடாமல் பல மணி நேரம் போலீஸ் ஸ்டேஷனுக்குள் மறைத்து வைத்து, மக்கள் நடமாட்டம் குறைந்த பின் அவரை வெளியே அனுப்பி வைத்தார்.

இது தங்கள் துறையில் பணி புரிபவர்களின் வாழ்க்கை சம்பந்தப்பட்ட விஷயமாக இருப்பதால், பத்திரிகையாளர்கள் இது பற்றி எழுதக் கூடாது: இதுதான் இருப்பதிலேயே கவலைக்குரிய விஷயமாக உள்ளது. உன்மைகள் இப்படி, பல நிலைகளில், பல காரணங்களுக்காக மறைக்கப் பட்டால், குற்றவாளிகளும், தொடர்ந்து அதே குற்றங்களை செய்வதற்கு ஏதுவாகிறது. பொது மக்கள், சாதாரண ஜனங்கள், குடிமகன்கள்………..என்ற நிலையிலுள்ளவர்கள் அறிந்து கொண்டால்தான், அத்தகைய குற்றங்களை செய்யாமல் இருப்பார்கள். மேலும் தாக்கம் ஏற்படுத்தும் ஊடகங்கள், சினிமா முதலியவைகளும் இத்தகைய பிறழ்ச்சிகளை தவிர்க்கவேண்டும்.

Women-duped-by-cheat

Women-duped-by-cheat

பெண்களை ஏமாற்றும் பேர்வழிகள் அதிகமாகவும் இது காரணமாகிறது.

பெற்ற மகளை கற்பழித்து கர்ப்பமாக்கிய கொடூரன் : கர்ப்பம் கலையாததால் கொலை செய்த கொடுமை

ஜூன்1, 2010

பெற்ற மகளை கற்பழித்து கர்ப்பமாக்கிய கொடூரன் : கர்ப்பம் கலையாததால் கொலை செய்த கொடுமை

ஏதோ அமெரிக்கா, ஆஸ்திரேலியா மாதிரி, இந்தியாவிலேயே இத்தகைய அசிங்கமான குரூரங்கள், கொடுமையான ஆபாசங்கள், வக்கிர கலவைகள் முதலியன நடப்பது, அத்தகைய மனப்பாங்கை இந்தியர்கள் பெறுவது, முதலியன மனோதத்துவ ரீதியில் ஆய்வுக்குறியதாகிறது.

மேலும், குற்றங்களில் ஈடுபடுகிரவர்கள், மிகவும் அதி நவீன யுக்திகளைக் கைப்பிடிப்பது நோக்கத்தக்கது.

அதாவது, அவர்களின் குற்றமனத்தை, தீவிரவாதத்தை, வன்முறையை தீர்மானமாகவே கடைப்பிடிப்பது உறுதியாகிறது.

அந்நிலையில், அதன் பின்னணி என்ன?

அதாவது அத்தகைய மனப்பாங்கை ஏற்படுத்துகின்ற ஊக்குவிக்கி, கிரியாயூக்கி, செயல்படுத்தி எது என்று அடையாளங்காண வேண்டிய நிலை உள்ளது.

பெண்கள் நிச்சயமாக இதைப் பற்றி ஆராய்ச்சி நடத்த வேண்டும்.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=10068

நாகர்கோவில் : பெற்ற மகளை கற்பழித்ததுடன், அதனால் உருவான கர்ப்பத்தை மறைக்க கொலை செய்த கொடூர தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம், அருமனை பகுதியை சேர்ந்தவர் புரூஸ்லெட். இவர் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி. இவரது மகள் ஷெர்லிஜாஸ்மின் (18). பிளஸ்டூ படித்து வந்தார். ஷெர்லியின் தாயார் கேன்சர் நோயில் இறந்து விட்டார். இதை தொடர்ந்து ஐடா என்ற பெண்ணை புரூஸ்லெட் இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் , கடந்த 29ம் தேதி காலை புரூஸ்லெட்டும், ஐடாவும் மகளை வீட்டில் விட்டுவிட்டு உறவினர் வீட்டுக்கு சென்றனர். மாலையில் திரும்பி வந்த போது, வீட்டின் பின்பக்க தண்ணீர் தொட்டியில் ஜாஸ்மின் இறந்து கிடந்தார். அவரது கழுத்து மற்றும் காதில் கிடந்த நகைகள், பீரோவில் இருந்த நகைகள் என 14 சவரன் நகைகள் திருட்டு போனது. இது பற்றி அருமனை போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். சம்பவம் நடந்த வீட்டில் மிளகாய்பொடி தூவப்பட்டிருந்தது. இதனால் கொள்ளையர்கள் பக்கம் போலீசாரை திசை திருப்ப முயற்சி நடைபெற்றது. கைரேகை அடிப்படையில் போலீசார், புரூஸ்லெட்டை கைது செய்தனர். “முறைப்படி’ விசாரித்த போது அவர் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

மகளைக் கற்பழித்த தந்தை - நாகர்கோவில்

மகளைக் கற்பழித்த தந்தை - நாகர்கோவில்

திசை திருப்ப முயற்சி: மகளுடன் உடல் உறவு கொள்ள முயன்று நடக்காததால், மயக்கமடைய செய்து உடல் உறவு கொண்டதால், அவர் கர்ப்பம் ஆகியுள்ளார். மாத்திரை கொடுத்தும் கர்ப்பம் கலையாததால் கொலை செய்ய முடிவு செய்ததையும் அவர் ஒப்புக்கொண்டார். சம்பவத்தன்று 2வது மனைவியை நாகர்கோவிலுக்கு அனுப்பி விட்டு, வீட்டுக்கு வந்த புரூஸ்லெட், மகளை கொலை செய்து தண்ணீர் தொட்டியில் போட்டுள்ளார். போலீசார் கவனத்தை திசை திருப்ப மிளகாய் பொடியை தூவி விட்டு நகைகளையும் எடுத்து சென்றுள்ளார். அவர் கொடுத்த தகவலின் பேரில் வீட்டில் ஒரு இடத்தில் ஷூவில் மறைத்து வைத்திருந்த நகைகளை போலீசார் கைப்பற்றினர். புரூஸ்லெட் மீது அப்பகுதி மக்கள் ஆத்திரத்தில் உள்ளனர். அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுக்க அப்பகுதியில், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பேத்தியை கற்பழித்து கொலை செய்த மகனை தூக்கில் போடும்படி தாய் ஆவேசம்

கன்னியாகுமரி மாவட்டம், அருமனை பகுதியை சேர்ந்தவர் ரூஸ்வெல்ட்; ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி. இவரது மகள் ஷெர்லி ஜாஸ்மின் (18); பிளஸ் 2 படித்து வந்தார். ஷெர்லியின் தாய், நோய்வாய் பட்டு இறந்து விட்டார். இரண்டாவதாக ஐடா என்ற பெண்ணை திருமணம் செய்தான் ரூஸ்வெல்ட்.  பல பெண்களுடன் இவனுக்கு தொடர்பு உண்டு. பெற்ற மகள் என்றும் பாராமல், ஷெர்லியையும் தன் இச்சைக்கு இரையாக்கினான். மகள் கர்ப்பம் தரித்ததால், அவரை கொலை செய்த ரூஸ்வெல்ட், தண்ணீர் தொட்டியில் மகளின் உடலைப் போட்டான். பின், தன் மகள் தற்கொலை செய்து கொண்டதாக நாடகம் ஆடினான். போலீசார் விசாரணையில், ரூஸ்வெல்ட் கொலை செய்தது தெரியவந்து,  தற்போது ரூஸ்வெல்ட், பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.

இந்த சம்பவத்தால், ரூஸ்வெல்டின் தாய் ராஜம் மனம் நொந்து உள்ளார். அவர் கூறியதாவது: என் மகன், சிறு வயதில் இருந்த பெண் பித்தனாக இருந்து வந்தான். எத்தனையோ முறை கண்டித்தும், அவன் திருந்தவில்லை. திருமணம் செய்து வைத்தால் திருந்தி விடுவான் என நினைத்து, திருமணம் செய்து வைத்தோம். மனைவியையும் அடித்து உதைத்தான்.  பெண் குழந்தை பிறந்த பின், இவன் கொடுமை தாங்காமல் மருமகள், நோய்வாய்பட்டு இறந்து போனார். இவன் வருவதற்காக, மூன்று நாட்கள் அவள் உடலை வைத்திருந்தோம். மூன்றாவது நாள்,  “நான் இறுதிச் சடங்குக்கு வரமுடியாது’ என, போனில் தகவல் கூறிவிட்டான்.

மூன்று மாதம் கழித்து வந்து, “எனக்கு மறுமணம் செய்து வைய்யுங்கள்’ என்று கூறினான். வேறு வழியில்லாமல், ஐடா என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்தோம். ஆனால், அவனது பெண் பித்து விடவில்லை. இதை கண்டித்த எனது கணவரை, தந்தை என்றும் பாராமல் கல்லால் தாக்கினான். இதில் படுக்கையான அவர், 90வது நாள் இறந்து விட்டார். இவனது மோசமான போக்கால், சொத்துக்களை ஷெர்லின் ஜாஸ்மின் பெயருக்கு எழுதி வைத்து விட்டோம்.  அடிக்கடி பேத்தியை மட்டும் பார்த்து விட்டு வருவேன்.

கதறிக் கொண்டிருந்த பேத்தி: ஒரு நாள், ஜாஸ்மினைப் பார்க்க நான் சென்றபோது, கதறி அழுது கொண்டிருந்தார். அப்பா கொடுமைப்படுத்துவதாக என்னிடம் கூறினார். நான், “கடவுள் காப்பாற்றுவார்’ என, ஆறுதல் கூறினேன். இப்படி செய்வான் என்று எதிர்பார்க்கவில்லை. பெற்ற மகளை இப்படி கொடூரமாக கொலை செய்து விட்டு, தற்கொலை செய்து கொண்டது  போல் நாடகமாடிய பாவியை, சும்மா விடக்கூடாது. அவனை தூக்கில் போட வேண்டும். அவனை என் வயிற்றில் சுமந்ததற்காக வெட்கப்படுகிறேன். அவனுக்கு அதிக பட்ச தண்டனை வழங்க வேண்டும். இவ்வாறு ராஜம் கூறினார்.

பேத்தியும், பாட்டியும்
நாகர்கோவில் (02-06-2010): மகளை கற்பழித்து கொலை செய்த, முன்னாள் ராணுவ அதிகாரியான தனது மகனை தூக்கில் போட வேண்டும் என, அவரது தாய் ராஜம் தெரிவித்துள்ளார்.