பலதார போலீஸிடம் சிக்கும் பெண்கள்: விந்தையிலும் விந்தைதான்!


பலதார போலீஸிடம் சிக்கும் பெண்கள்: விந்தையிலும் விந்தைதான்!

போலீஸ் ஏட்டு கணவர் மீது பெண் போலீஸ் ஏட்டு புகார்

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=10069

பட்டுக்கோட்டை : போலீஸ் ஏட்டு கணவர் மீது, மூன்றாவது மனைவியான போலீஸ் பெண் ஏட்டு நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் மனு வழங்கியதுடன், பட்டுக்கோட்டை மகளிர் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் கிரேடு ஒன் ஏட்டாக பணி புரிபவர் இளங்கோவன் (39). இவர் மன்னார்குடி அந்தோணியார் கோவில் தெருவைச் சேர்ந்தவர். இவர் ஏற்கனவே பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் வேலை செய்யும் மஞ்சுளா (39) என்ற நர்சை திருமணம் செய்து அவருக்கு வஸ்திகரோலின் (6) என்ற பெண் குழந்தை உள்ளது. வக்கீல் முன்னிலையில் எழுதி வாங்கிக் கொண்டு அவரை விவாகரத்து செய்து விட்டார். பின், திருவாருர் மாவட்டம் வேல்குடியைச் சேர்ந்த சுதா (25) என்ற பெண்ணை இளங்கோவன் திருமணம் செய்தார். அவருக்கும் கார்த்திகா (4) என்ற பெண் குழந்தை உள்ளது. தற்போது அவரிடம் விவாகரத்து கேட்டு தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது.

திருமணமாகி விவாகரத்தில் முடிந்து தனியாக இருக்கும் பெண்: இதற்கிடையில், சுதாவை திருமணம் செய்ததை மறைத்து தன்னோடு போலீஸ் பயிற்சியின் போது பழகிய தொழுதூர் புதுத்தெருவைச் சேர்ந்த தெட்சணாமூர்த்தி மகள் வனிதாவை (32) (திருச்சியில் ஏட்டாக பணிபுரிபவர்), மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார். வனிதாவுக்கும் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தில் முடிந்து தனியாளாய் இருந்ததால் அவரும் விசாரிக்காமல் இளங்கோவனை திருமணம் செய்துள்ளார்.

ஏட்டு வனிதா கூறியதாவது: கடந்த 2007 ஜன., 29ம் தேதி எங்கள் திருமணம் நடந்தது. அதன் பின் சண்முகப்பிரியா (3) இளமதி (10 மாதம்) ஆகிய இரண்டு குழந்தைகள் பிறந்தனர். நாளடைவில் எங்களை சந்திக்க இளங்கோவன் வராததால் அவர் மீது சந்தேகப்பட்டு விசாரித்த போது, சுதாவுடன் மீண்டும் தொடர்பு ஏற்பட்டுள்ளது தெரிந்தது. என்னுடன் வாழ மறுத்து, தன் முதல் குழந்தை மட்டும் அவருக்கு பிறந்ததாகவும், இரண்டாவது குழந்தை என் உயர் அதிகாரிக்கு பிறந்ததாகவும் கூறுகிறார். அதனால், டி.என்.ஏ., சோதனை செய்து உண்மை கண்டறிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து, சோதனை செய்யவும், இளங்கோவன் மற்றும் தன்னை மிரட்டும் இளங்கோவனின் இரண்டாவது மனைவி சுதா மீது நடவடிக்கை எடுக்கவும் புகார் அளித்துள்ளேன்.

பலதார விஷயம் போலீஸ் விஷயமாகி விட்டது: திருவாரூர் மாவட்டத்தில் இளங்கோவன் வேலை செய்கிறார். திருச்சியில் வனிதா வேலை செய்கிறார். இளங்கோவனின் இரண்டாவது மனைவி சுதா, பட்டுக்கோட்டையில் வசிப்பதால், அவர் அங்கிருந்து வனிதாவுக்கு மொபைல்போனில் எஸ்.எம்.எஸ்., அனுப்பி மிரட்டி வந்துள்ளார். இதுபற்றி தஞ்சாவூர் எஸ்.பி., செந்தில்வேலனிடம் வனிதா புகார் தெரிவித்துள்ளார். இதில், தான் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்றும், பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் போலீசாரை விசாரிக்க சொல்லியுள்ளதாக, எஸ்.பி., கூறியுள்ளார். இதனால், பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்புராணியிடம் இளங்கோவன் மற்றும் அவரது இரண்டாவது மனைவி சுதா மீது வனிதா புகார் செய்தார். ஆனால், புகார் குறித்து விசாரணை செய்த இன்ஸ்பெக்டர் அன்புராணி, வனிதாவிடம் சாதாரணமாக எழுதி வாங்கிக் கொண்டு வழக்கு ஏதும் பதிவு செய்ய மறுத்துவிட்டார். ஆத்திரம் அடைந்த வனிதா மற்றும் அவரது உறவினர்கள் நேற்று பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் வந்தனர். உரிய நடவடிக்கை எடுக்காததால், போலீஸ் ஸ்டேஷனை வனிதா மற்றும் உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

துறை ரீதியாக உரிய நடவடிக்கை: தகவலறிந்த பட்டுக்கோட்டை டி.எஸ்.பி., நாராயணசாமி, வனிதா மற்றும் இளங்கோவனை நேரில் அழைத்து விசாரணை செய்தார். இளங்கோவன் மீது துறை ரீதியாக உரிய நடவடிக்கை எடுக்க பரிந்துரைப்பதாக அவர் உறுதி கூறினார். நேற்று காலை முதல் இவ்வழக்கை விசாரிக்க மறுத்த இன்ஸ்பெக்டர் அன்புராணி, “”இது தங்கள் துறையில் பணி புரிபவர்களின் வாழ்க்கை சம்பந்தப்பட்ட விஷயமாக இருப்பதால், பத்திரிகையாளர்கள் இது பற்றி எழுதக் கூடாது,” என, எச்சரித்தது மட்டுமின்றி, போலீஸ் ஏட்டு இளங்கோவனை போட்டோ எடுக்கவிடாமல் பல மணி நேரம் போலீஸ் ஸ்டேஷனுக்குள் மறைத்து வைத்து, மக்கள் நடமாட்டம் குறைந்த பின் அவரை வெளியே அனுப்பி வைத்தார்.

இது தங்கள் துறையில் பணி புரிபவர்களின் வாழ்க்கை சம்பந்தப்பட்ட விஷயமாக இருப்பதால், பத்திரிகையாளர்கள் இது பற்றி எழுதக் கூடாது: இதுதான் இருப்பதிலேயே கவலைக்குரிய விஷயமாக உள்ளது. உன்மைகள் இப்படி, பல நிலைகளில், பல காரணங்களுக்காக மறைக்கப் பட்டால், குற்றவாளிகளும், தொடர்ந்து அதே குற்றங்களை செய்வதற்கு ஏதுவாகிறது. பொது மக்கள், சாதாரண ஜனங்கள், குடிமகன்கள்………..என்ற நிலையிலுள்ளவர்கள் அறிந்து கொண்டால்தான், அத்தகைய குற்றங்களை செய்யாமல் இருப்பார்கள். மேலும் தாக்கம் ஏற்படுத்தும் ஊடகங்கள், சினிமா முதலியவைகளும் இத்தகைய பிறழ்ச்சிகளை தவிர்க்கவேண்டும்.

Women-duped-by-cheat

Women-duped-by-cheat

பெண்களை ஏமாற்றும் பேர்வழிகள் அதிகமாகவும் இது காரணமாகிறது.

Advertisements

குறிச்சொற்கள்: , , , , ,

2 பதில்கள் to “பலதார போலீஸிடம் சிக்கும் பெண்கள்: விந்தையிலும் விந்தைதான்!”

  1. kannan Says:

    nalla itugai.

  2. kannan Says:

    nall karuthu.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: