Archive for ஜூலை, 2010

எறும்புகள் மொய்க்க, பெண் சிசு ரோட்டில் வீசப்பட்ட பரிதாபம்! இன்ப திராவிட நாட்டில் அவலம்!!

ஜூலை30, 2010

எறும்புகள் மொய்க்க, பெண் சிசு ரோட்டில் வீசப்பட்ட பரிதாபம்! இன்ப திராவிட நாட்டில் அவலம்!!

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=50161

கூட்ரோடில் கிடந்த குழந்தை: மேலூர் : பிறந்து ஒருவாரமே ஆன பெண் குழந்தை, மதுரை – மேலூர் நான்கு வழிச்சாலை ஓரத்தில் வீசப்பட்டது. ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட அந்தக்குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. நான்கு வழிச்சாலையில் மேலூருக்கு திரும்பும் இடத்தில் உள்ள வாழை தோட்டத்தில் கிணறு தோண்டியபோது எடுக்கப்பட்ட கற்கள் குவிக்கப்பட்டுள்ளன. நேற்று அதிகாலை அதற்குள் இருந்து பச்சிளம் குழந்தையின் அழுகுரல் கேட்டது. அருகில் இருந்தவர்கள் சென்று பார்த்தனர். இரு புறமும் பாறாங்கற்கள் வைக்கப் பட்டு, அதன் நடுவில் குழந்தை பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. அதை அகற்றி பார்த்த போது, எறும்புகள் மொய்த்த நிலையில் காயங்களுடன், ஒல்லியான பெண் சிசு இருந்தது. அரசின் “108′ இலவச ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சுரேஷ், விமல், சரவணன் மேலூர் அரசு ஆஸ்பத்திரியில் குழந்தையை சேர்த்தனர்.

சிகிச்சையளித்த டாக்டர்கள் கூறியதாவது: இக்குழந்தை பிறந்து ஒரு வாரமே ஆகி உள்ளது. மேற்புறமாக கல் அழுத்தி உள்ளதால் முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. வலது கால் உடைந்துள்ளதாக தெரிகிறது. முதலுதவி சிகிச்சைக்கு பின், மதுரை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக குழந்தை அனுப்பப் பட்டுள்ளது, என்றனர்.

மனிதாபிமானமற்ற பெற்றோர் யார்?: நான்கு வழிச்சாலையில் வழியாக பயணம் செய்த யாரோ தான் இப்படி குழந்தையை போட்டு விட்டு சென்றிருக்க வேண்டும். குழந்தையின் கை மற்றும் காலில் கண்மை இடப்பட்டு உள்ளது. ஆசையுடன் கொஞ்சிய பச்சிளம் குழந்தையை இப்படி வீசியதற்கு பதில் அரசு தொட்டிலில் சேர்த்து இருக்கலாமே.

ஏன் வேண்டும் இந்த இன்ப திராவிடம்? இது முரசொலி மாறன் “திராவிட நாடு” கேட்டு எழுதிய புத்தகம்! திராவிட நாடு கிடைக்கவிட்டாலும், திராவிட நாட்டில் என்ன கிடைக்குமோ, அது கிடைத்துக் கொண்டிருக்கிறது. என்ன நடக்குமோ நடந்து கொண்டிருக்கிறது. இந்த திராவிட நாட்டை யாரும் காப்பாற்ற முடியாது! “ஆண்டவனால்” என்றும் சொல்லமுடியாது, ஏனெனில் “ஆண்டவனிடம்” நம்பிக்கையில்லை, இந்த “ஆள்பவர்களிடமும்” மக்களுக்கு நம்பிக்கை இல்லை! வாழ்க திராவிடம், இன்ப திராவிடம்!!

“நரபலி சிறுவனின்’ தாய்க்கு அடுத்தடுத்து சோகம்: பெண்கள் படும்பாடு

ஜூலை29, 2010

“நரபலி சிறுவனின்’ தாய்க்கு அடுத்தடுத்து சோகம்: பெண்கள் படும்பாடு
பதிவு செய்த நாள் : ஜூலை 28,2010,23:19 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=49427

ஒரு பெண் படும் துக்கங்களுக்கு அளவேயில்லை: மதுரை :இரண்டு வயதில் மாயமான தந்தை; திருமணமான இரண்டு ஆண்டில் விபத்தில் கணவர் மரணம்; “தாயின் கண்ணீர் துடைப்பான்,’ என நினைத்த மகனும் “நரபலி’ கொடூரத்திற்கு பலி. இப்படியொரு துயர சம்பவம் அபலை பெண்ணிற்கு அடுத்தடுத்து நேர்ந்துள்ளது.

15 சவரன், 40 ஆயிரம் ரூபாய் மற்றும் பொருட்கள் கொடுத்து நடத்திய திருமணம்: மதுரை முனிச்சாலை பத்தாவது தெருவை சேர்ந்த சமையல் மாஸ்டர் மாபுபாட்ஷா. இவரது மனைவி சுல்தான் பீவி. இவர்களுக்கு செரின் பாத்திமா (24) என்ற மகளும், அசன் (22) என்ற மகனும் உள்ளனர். செரின் பாத்திமாவிற்கு இரண்டு வயது இருக்கும்போது, தந்தை மாபுபாட்ஷா மாயமானார். அவரை பல இடங்களில் தேடியும் பயனில்லை. பிழைப்புக்கு வழியின்றி தவித்த சுல்தான்பீவிக்கு, அவரது தம்பி அக்பர்அலி ஆதரவு தந்தார். செரின் பாத்திமா, ஐந்தாம் வகுப்பு வரை படித்தார். பின், தாய்க்கு உதவியாக இருந்தார்.செரின் பாத்திமாவிற்கும், எஸ்.குலமங்கலத்தை சேர்ந்த கொத்தனார் கவுகர்பாட்ஷாவிற்கும் இரண்டரை ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. பெண்ணிற்கு 15 சவரன், 40 ஆயிரம் ரூபாய் மற்றும் பொருட்கள் வழங்கப்பட்டன. தாய்மாமன் கடமையை முடித்த திருப்தியில் அக்பர்அலி இருந்தார். இரண்டு வயதில் தவிக்கவிட்டு விட்டு தந்தை பிரிந்து சென்றதால், சிறு வயதில் மனதில் ஏற்பட்ட காயத்திற்கு கணவரின் அன்பு ஆறுதலாக இருந்தது.

நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக குழந்தையுடன் வந்த தாயிற்கு எமன் காத்திருந்தான் போலும்: செரின்பாத்திமாவிற்கு ஆண் குழந்தை பிறந்ததால் குடும்பத்தில் இரட்டிப்பு மகிழ்ச்சி. குழந்தைக்கு காதர்யூசப் என பெயர் சூட்டினர்.மூன்று மாதத்திற்கு முன் நடந்த விபத்தில் கணவரும் பலியானார். ஆதரவற்ற நிலையில் மீண்டும் தாய் மாமன் வீட்டில் குழந்தையுடன் தஞ்சம் புகுந்தார் செரின்பாத்திமா. காதர்யூசப்பிற்கு ஒரு வயதானது. அவனுக்கு கோரிப்பாளையம் பள்ளிவாசல் தர்காவில் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக கடந்த 1ம் தேதி குழந்தையுடன், செரின்பாத்திமா வந்தார். அவருக்கு துணையாக தாயார் சுல்தான்பீவியும் வந்தார். அங்கு காதர்யூசப் கடத்தப்பட்டு “நரபலி’ கொடூரன் அப்துல்கபூரால் கொலை செய்யப்பட்டான்.

கருணை அடிப்படையில் அரசு தரப்பில் உதவிகள் மேற்கொள்ள வேண்டும்: நிச்சயமாக, அரசு இந்த பொறுப்பிலிருந்து தப்பிக்கமுடியாது. பெண்கள் இவ்வாறு அவதில் பட்டால், அது வீட்டிற்கும், நாட்டிற்கும், ஏன் உலகத்திற்கே நல்லதல்ல. இரண்டு வயதில் மாயமான தந்தை; திருமணமான இரண்டு ஆண்டில் விபத்தில் கணவர் மரணம்; மகனும் “நரபலி’ கொடூரத்திற்கு பலி. இப்படியொரு துயர சம்பவம் செரின் பாத்திமாவிற்கு அடுத்தடுத்து நேர்ந்துள்ளது. திக்குத்தெரியாமல் தவிக்கும் செரின் பாத்திமாவின் துயரம் துடைக்க, கருணை அடிப்படையில் அரசு தரப்பில் உதவிகள் மேற்கொள்ள வேண்டும்.

சத்தியராஜ் கனகவல்லியைத் தாக்கிக் கொலை செய்தது பொருளாதாரக்குற்றமா, சமூகக்குரூரமா, மனிதபயங்கரவாதமா?

ஜூலை26, 2010

சத்தியராஜ் கனகவல்லியைத் தாக்கிக் கொலை செய்தது பொருளாதாரக்குற்றமா, சமூகக்குரூரமா, மனித பயங்கரவாதமா?

வழக்கம் போல, ஊடகங்களில் தரப்படும் விவரங்களில் சில வேறுபாடுகள் காணப்படுகிண்றன. அவை சரி பார்க்கவேண்டியுள்ளது.

Murder-at-Jeer-Mutt-2010

Murder-at-Jeer-Mutt-2010

சேலையூர் அருகே பரபரப்பு[1]

மாலைச்சுடர், Sunday, 25 July, 2010   02:48 PM

சென்னை, ஜூலை 25:சென்னையை அடுத்த சேலையூரில் அகோபிலமடத்தில் திருட வந்த திருடன் ஒருவன், அங்கிருந்த மூதாட்டியை கிணற்றில் தள்ளி கொலை செய்தான்.தண்ணீரில் மூழ்கியதால் அவனும் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தா‌ம்பர‌த்தை அடு‌த்த சேலையூ‌‌ர் பிருந்தாவன் தெருவில் புக‌ழ்பெ‌ற்ற அகோபிலமடம் உ‌ள்ளது. இது 600 ஆ‌ண்டு பழையானது. மு‌ன்னா‌ள் ‌பிரதம‌ர் தேவகவுடா உ‌ள்‌ளி‌ட்ட மு‌க்‌கிய ‌‌பிரமுக‌ர்க‌ள் இ‌ந்த ம‌ட‌த்திற்கு வருவது‌ண்டு.  இந்த மடத்தினை 44வது ஜீயர் நிர்வகித்து வருகிறார். இங்கு பாடசாலை, கல்யாண மண்டபம், தியான மடம் ஆகியன உள்ளது. இந்த மடத்தின் 44வது அழகிய சிங்கர் ஜீயரின் பிறந்த நாள் விழா நடைபெற்று வருகிறது.

இந்த மடத்தின் 44வது அழகிய சிங்கர் ஜீயரின் பிறந்த நாள் விழா நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் கலந்து கொள்வதற்காக சின்ன காஞ்சிபுரத்தைச் சேர்ந்த கனகவள்ளி (வயது 60) மடத்தில் தங்கி இருந்தார். இவரது கணவர் வாசுதேவன் இங்குள்ள பாடசாலையில் வார்டனாக வேலைபார்த்து வருகிறார். இன்று அதிகாலை (25-07-2010) நான்கு மணி அளவில் கனகவள்ளி எழுந்து மடத்தின் முற்றத்தை சுத்தம் செய்து கொண்டிருந்துள்ளார். அப்போது, மர்ம வாலிபர்   ஒருவன் மடத்தின் காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்துள்ளார்.  இதை கண்டதும் கனகவள்ளி திருடன், திருடன் என கூச்சலிட்டுள்ளார்.

உடனே, அந்த மர்ம நபர் கனகவள்ளியை மிரட்டி தூக்கிச் சென்று அருகில் இருந்த கிணற்றுக்குள் வீசியுள்ளார். பின்னர் அந்த வாலிபரும் கிணற்றுக்குள் குதித்து அப்பெண்ணை கத்தியால் குத்தி தண்ணீருக்குள் மூழ்கடித்து கொலை செய்துள்ளார்.இப்பெண்ணின் அலறல் சத்தத்தைக் கேட்டு மடத்தில் தங்கியிருந்தவர்கள் ஓடிச் சென்று கிணற்றுக்குள் எட்டிப்பார்த்துள்ளனர்.

கிணற்றுக்குள் அந்த வாலிபர்  வெளியேற முடியாமல் தண்ணீருக்குள் சிக்கி தவித்துக் கொண்டிருந்தார்.இதை பார்த்தவர்கள் கிணற்றுக்குள் இறங்கி அந்த நபரை மீட்டுள்ளனர். அப்போது கிணற்றுக்குள் கனகவள்ளி  இறந்த நிலையில் பிணமாக கிடந்துள்ளார்.

மர்ம நபரை மீட்ட பொதுமக்கள் அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே அந்த நபர் உயிரிழந்துள்ளார்.இது குறித்து சேலையூர் போலீசுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைவில் வந்து இறந்த கனகவள்ளியின் உடலை பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்த வாலிபரின் பெயர் சத்தியராஜ் (வயது 35) என தெரிய வந்துள்ளது. இவர் எதற்காக மடத்திற்குள் ஏறி குதித்தார்? என்பது குறித்து சேலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இறந்த வாலிபருடன் மேலும் ஒரு நபர் வந்ததாக கூறப்படுகிறது. அவரை பற்றியும் போலீசார் விசாரித்து வருகின்றனர்

ஆனா‌ல் மட‌த்‌தி‌ன் அருகே உ‌ள்ள குடி‌யிரு‌ப்புவா‌சிக‌ள் கூறு‌ம்போது, மட‌த்த‌ி‌ல் ஏராளமான நகை, பண‌‌ம் உ‌ள்ளது. இதனை கொ‌ள்ளையடி‌க்கு‌ம் நோ‌க்‌கி‌ல் ஐ‌ந்‌தி‌ற்கு‌ம் மே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ள் வ‌ந்தாக கூ‌றின‌ர். ஆனா‌ல் இதனை காவ‌ல்துறை‌யின‌ர் உறு‌தி செ‌ய்ய‌வி‌ல்லை[2].

சமீபத்தில் இந்த மடத்திற்கு பக்தர் ஒருவர் தங்கத்தேர் ஒன்றை காணிக்கையாக அளித்துள்ளார். மேலும் மடத்தில் ஏராளமான ஆபரணங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.  ஜீயரின் பிறந்தநாள் விழாவின் போது, இந்த ஆபரணங்கள் வெளியே எடுத்து பூஜைக்கு பயன்படுத்தப்படும் என கூறப்படுகிறது. இதனை கொள்ளையடிக்கும் நோக்கதிலேயே அந்த மர்ம நபர் மடத்திற்குள் ஏறி குதித்து வந்திருக்க வேண்டும் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

சென்னையில் பயங்கரம்-அகோபில மட ஊழியை படுகொலை-கொள்ளையனை அடித்துக் கொன்ற ஊழியர்கள்[3]

Mutt-well-where-the-body-found

Mutt-well-where-the-body-found

ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 25, 2010, சென்னைக்கு அருகே சேலையூரில், அகோபில மடத்திற்குள் புகுந்த கொள்ளையர்கள், அங்கிருந்த பெண் ஊழியர் கனகவல்லியை கத்தியால் குத்திக் கொலை செய்து கிணற்றுக்குள் வீசினர். இதனால் ஆத்திரமடைந்த மட ஊழியர்கள் ஒன்று சேர்ந்து கொள்ளையன் ஒருவனைப் பிடித்து சரமாரியாக தாக்கியதில் அவனும் உயிரிழந்தான்.

சேலையூரில் அகோபில மடம் உள்ளது. பிரபலமான இந்த மடத்தில் 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தங்கியுள்ளனர். இவர்கள் அதிகாலை 3 மணிக்கெல்லாம் எழுந்து தங்களது பணிகளைப் பார்க்க ஆரம்பிப்பார்கள்.

இன்று காலையும் ஊழியர்கள் வழக்கம் போல எழுந்து தத்தமது வேலைகளில் மூழ்கியிருந்தனர். அப்போது கனகவல்லி என்ற ஊழியை, மடத்திற்குப் பின்புறம் கோலம் போட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு திடீரென ஐந்துக்கும் மேற்பட்ட கொள்ளையர்கள் புகுந்தனர்.

இதைப் பார்த்த கனகவல்லி திருடன் திருடன் என கத்தியுள்ளார். இதைப் பார்த்த கொள்ளையர்கள் கனகவல்லியை சூழ்ந்து கத்தியால் சரமாரியாக குத்தினர். இதில் அவர் படுகாயமடைந்தார். பின்னர் கனகவல்லியை தூக்கி அங்கிருந்த கிணற்றில் வீசினர்.

அப்போதும் வெறி அடங்காத கொள்ளையர்களில் சத்தியராஜ் என்பவன் உள்ளே குதித்து கனகவல்லியை நீரில் மூழ்கடித்துக் கொடூரமாக கொன்றான். இந்த சமயத்தில், கனகவல்லி போட்ட சப்தம் கேட்டு மட ஊழியர்கள் ஓடி வந்தனர்.

இதைப் பார்த்த கொள்ளையர்கள் அங்கிருந்து ஓடினர். ஆனால் கிணற்றுக்குள் குதித்த சத்யராஜ் மட்டும் தப்ப முடியாமல் மட ஊழியர்களிடம் மாட்டிக் கொண்டான். கனகவல்லி கொலை செய்யப்பட்டதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள், ஆவேசத்துடன் சத்தியராஜை கடுமையாக தாக்கினர். இதில் அவன் படுகாயமடைந்தான்.

பின்னர் போலீஸாருக்குத் தகவல் தெரியவரவே அவர்கள் விரைந்து வந்து சத்தியராஜை மீட்டு குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சத்தியராஜ் உயிரிழந்தான்.

இந்த சம்பவத்தால் சேலையூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அகோபில மடத்தில் உள்ள பல கோடி மதிப்புள்ள தங்கம், பணம் உள்ளிட்டவற்றை கொள்ளையடிக்கும் நோக்கில் அங்கு கொள்ளையர்கள் புகுந்துள்ளனர்.

கொள்ளைக் கும்பலில் ஐந்து பேர் இருந்ததாக தெரிகிறது. தப்பி ஓடிய கும்பலைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

தேவெ கெளடா வரவிருந்த சமயத்தில் அசம்பாவிதம்

இன்று காலை 7 மணிக்கு இந்த மடத்திற்கு முன்னாள் பிரதமர் தேவெ கெளடா வருவதாக இருந்தது. பிற்பகல் 12 மணியளவில் திரும்பிச் செல்ல அவர் திட்டமிட்டிருந்தார். ஆனால் இந்த அசம்பாவிதம் நடந்து விட்டதால் அவரது பயணம் ரத்து செய்யப்பட்டது.

Mutt-well-where-body-found-NIE

Mutt-well-where-body-found-NIE

சென்னை மடத்தில் பெண் கொலை

சென்னை : சென்னை அருகே உள்ள சேலையூரில் உள்ள அகோபில மடத்தில் பணிபெண் ஒருவர் கொள்ளையர்களால் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது[4]. அகோபில மடத்தில் இன்று அதிகாலை மர்ம நபர்கள் சிலர் கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர். அப்போது மடத்தில் பணியாற்றும் கனகவள்ளி என்ற பெண்ணிடம் கொள்ளையர்களில் ஒருவன் நகையை பறிக்க முயற்சி செய்துள்ளான். கனகவள்ளி சத்தமிட்டதால், அவரை கொலை செய்து அருகில் இருந்த கிணற்றில் வீசி உள்ளான். கொள்ளை கும்பலைச் சேர்ந்த சத்தியராஜ் என்பவனை மட்டும் பொதுமக்கள் விரட்டிப் பிடித்துள்ளனர்.பொதுமக்கள் தாக்கியதில் சத்தியராஜ் .யிரிழந்துள்ளான். இந்த கொள்ளை மற்றும் கொலை சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது. இதனால் அகோபில மடத்திற்கு இன்று வருவதாக இருந்த முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Jeer-mutt-murder-for-gain-NIE

Jeer-mutt-murder-for-gain-NIE


[1] http://www.maalaisudar.com/newsindex.php?id=34982%20&%20section=1

[2] http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/1007/25/1100725025_1.htm

[3] http://thatstamil.oneindia.in/news/2010/07/25/chennai-salaiyur-ahobilam-mutt-burglary-murder.html

[4] தினமலர், சென்னை மடத்தில் பெண் கொலை, ஜூலை 25,2010,

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=46991

நித்யானந்தாவுடன் செக்ஸ் தொடர்பில்லை, டிவியில் காட்டப்பட்டுள்ள காட்சிகள் கம்ப்யூட்டர் மூலம் சித்தரிக்கப்பட்டவை, அந்த பெண் நான் அல்ல: நடிகை ரஞ்சிதா வாக்குமூலம்!

ஜூலை24, 2010

நித்யானந்தாவுடன் செக்ஸ் தொடர்பில்லை, டிவியில் காட்டப்பட்டுள்ள காட்சிகள் கம்ப்யூட்டர் மூலம் சித்தரிக்கப்பட்டவை, அந்த பெண் நான் அல்ல: நடிகை ரஞ்சிதா வாக்குமூலம்!

நித்யானந்தாவின் பக்தை என்ற அடிப்படையில் அவரது படுக்கை அறைக்கு ஒரு முறையோ அல்லது 2 முறையோ மட்டும் சென்றிருப்பேன்.

அவருடன் உடல் ரீதியில் எந்த வகையான உறவும் நான் வைத்துக்கொண்டதில்லை.

நித்யானந்தாவுடன் என்னை இணைத்து வெளியிடப்பட்ட விடியோ டேப்  போலியானது.

அதில் இருப்பது நான் அல்ல என்று அந்த வாக்குமூலத்தில்  கூறப்பட்டுள்ளது.

படுக்கை அறையில் இருக்கும் காட்சிகள் ஒளிபரப்பப்பட்டன: பெங்களூரூ (17-07-2010): நித்யானந்தாவுடன் எனக்கு எந்தவிதமான செக்ஸ் தொடர்பும் இல்லை, என நடிகை ரஞ்சிதா தெரிவித்துள்ளார்[1]. கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே பிடதி என்ற இடத்தில் ஆசிரமம் அமைத்து யோகா கலையை போதித்து வருபவர் நித்யானந்தா. கடந்த மார்ச் மாதம் சில “டிவி’ சேனல்களில், இவரும் நடிகை ரஞ்சிதாவும் படுக்கை அறையில் இருக்கும் காட்சிகள் ஒளிபரப்பப்பட்டன. தமிழகத்தில் இவர் மீது கற்பழிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின், இந்த வழக்கு கர்நாடகாவுக்கு மாற்றப்பட்டு விட்டது.தலைமறைவாக இருந்த நித்யானந்தா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டார். தற்போது அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டு, தனது ஆசிரமத்தில் பக்தர்கள் மத்தியில் சொற்பொழிவாற்றி வருகிறார்.

ரஞ்சிதாவின் வாக்குமூலம்: இதற்கிடையே, தலைமறைவாக இருந்த நடிகை ரஞ்சிதா, கர்நாடகா சி.ஐ.டி.,போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் குறிப்பிடுகையில், “நித்யானந்தாவின் அறைக்கு ஓரிரு முறை சென்றுள்ளேன். அவருக்கும் எனக்கும் எந்த விதமான செக்ஸ் தொடர்பும் கிடையாது. “டிவியில் காட்டப் பட்டுள்ள காட்சிகள் கம்ப்யூட்டர் மூலம் சித்தரிக்கப்பட்டவை. “டிவியில் காட்டப்பட்ட பெண் நான் அல்ல. நித்யானந்தா எனக்கு எந்த செக்ஸ் தொல்லையும் கொடுக்கவில்லை”, என்றார். ரஞ்சிதாவின் வாக்குமூலத்தை சி.ஐ.டி., போலீசார் கர்நாடகா ஐகோர்ட்டில் நேற்று பதிவு செய்தனர்[2]. தடய அறிவியல் நிபுணர்கள் வீடியோ உண்மை என்று சொல்லியுள்ள நிலையில் ரஞ்சிதா இப்படி கூறியிருப்பது, போலீஸாருக்குப் பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது[3]. நக்கீரன் சொல்வது[4], “……………….நித்யானந்தா வழக்கை விசாரித்து வந்த கர்நாடகா சிஐடி போலீசார் பெங்களூர் உயர்நீதிமன்றத்தில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்தனர். அதில், நித்யானந்தா பற்றி நடிகை ரஞ்சிதாவும் வாக்குமூலம் அளித்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளனர்.”! அவர் நித்யானந்தாவிற்கு எதிராக எந்த புகாரையும் கூறவில்லை[5]. அமெரிக்க ஆசிரமத்தில் உள்ள நித்யானந்தரின் சீடர்கள் விமலானந்தாவையும், நித்ய கோபிகாவையும் கைது செய்து பெங்களூரு அழைத்து வர, அவர்கள் மத்திய அரசின் அனுமதியை கோரியுள்ளனர்.

நித்தி வழக்கு:  90 சதவிகித விசாரணை[6]: நக்கீரன் குறிப்பிடுவது, “பெங்களூர் அருகே பிடதியில் ஆசிரமம் நடத்தி வந்த நித்யானந்தா, நடிகை ரஞ்சிதாவுடன் நெருக்கமாக இருந்த காட்சிகள் வெளியானது. இதனால் கைது செய்யப்பட்ட அவர், பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.நித்யானந்தாவின் வழக்கு பற்றி கர்நாடகா சிஐடி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.இன்று பெங்களூர் உயர்நீதிமன்றத்தில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தனர்.  அந்த அறிக்கையில்,  ‘நித்யானந்தா வழக்கில் சாட்சிகளிடம் 90 சதவிகித விசாரணை முடிந்துவிட்டது’’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.சிஐடி போலீசாரின் அறிக்கையை படித்த நீதிபதி,   வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 20ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.   நித்யானந்தா வழக்கில் ஆகஸ்ட் 20ம் தேதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவும் அறிவுறுத்தப்பட்டது”.

சென்னை :””நடிகை ரஞ்சிதா நல்ல பக்தை; அவர் பிடதி ஆசிரமத்திற்கு வந்தால் அனுமதிப்போம்,” என்று அகில இந்திய தியான முகாம்களின் மகா ஆச்சாரியார் நித்யஞானானந்தா கூறினார்.

தமிழ்நாடு நித்யானந்த தியான பீடத்தின் சார்பில் சென்னையில் நேற்று நடத்தப்பட்ட நிருபர்கள் சந்திப்பில் நித்யஞானானந்தா கூறியதாவது:கடந்த நான்கு மாதங்களாக பலரால் பல வகைகளில் எங்கள் நித்யானந்த தியான பீடமும், நித்யானந்தாவும் உண்மைக்குப் புறம்பான முறையில் விமர்சிக்கப்பட்டுள்ளனர். நேற்று தனியார் “டிவி’யில் பக்தர்கள் புண்படும் படியாக எங்கள் குருநாதரை போலிச் சாமியார் என்று வர்ணித்து செய்தி வெளியிடப்பட்டது. இது எங்களது ஆன்மிக உணர்வை நேரடியாக புண்படுத்தியது. பெங்களூரில் நடிகை மாளவிகா அவரது கணவர் அவிநாஷுடன் கலந்து கொண்ட குருபூர்ணிமா நிகழ்ச்சியை கொச்சைப் படுத்தியதையும் வன்மையாகக் கண்டிக்கிறோம். எங்களின் சமூக சுதந்திரத்தையும், தனிமனித சுதந்திரத்தையும் பாதிக்கிற வகையில் செயல்படுபவர்கள் மீது தமிழ்நாடு நித்யானந்த தியான பீடத்தின் சார்பில் சட்டப்படி வழக்கு தொடர்வோம். இவ்வாறு நித்யஞானானந்தா கூறினார்.

“நித்யானந்தாவும் நடிகையும் இடம் பெறும் வீடியோ பதிவு குறித்தும், ஆண்மையற்றவர் என்று போலீஸ் விசாரணையில் நித்யானந்தா பதில் சொன்னதாகவும் செய்திகள் வந்ததே உண்மையா?’ என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை நிருபர்கள் கேட்டனர்.

இதற்கு நித்யஞானானந்தா அளித்த பதில்: நித்யானந்தாவும், நடிகையும் இடம் பெற்றதாக வந்த வீடியோ போலியானது. போலீஸ் விசாரணையில் நித்யானந்தா ஆண்மையற்றவர் என்று கூறவில்லை. யாரோ தவறாக இப்படி  சொல்லியுள்ளனர். நடிகை ரஞ்சிதா நல்ல பக்தை. அவர் தற்போது ஆசிரமத்தில் இல்லை. வெளியே எங்கு இருக்கிறார் என்று எங்களுக்கு தெரியாது. ரஞ்சிதா ஆசிரமத்திற்கு வந்தால், நான் வாயில் காவலனாக இருந்தால் உள்ளே அனுமதிப்பேன். ரஞ்சிதாவை நித்யானந்தா அனுமதிப்பாரா என்பதை அவரிடம் தான் கேட்க வேண்டும். நித்யானந்தா பிரச்னைக்கு காரணமானவர்கள் யார் என்றும், யார், யார் மீது வழக்கு தொடரப் போகிறோம் என்றும் விரைவில் தெரிவிப்போம். இவ்வாறு நித்யஞானானந்தா கூறினார்.

நடிகை ரஞ்சிதா வந்தால் அனுமதிப்போம் : நித்யானந்தாவின் சீடர்

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=48659

சென்னை – ஜூலை 27,2010 :””நடிகை ரஞ்சிதா நல்ல பக்தை; அவர் பிடதி ஆசிரமத்திற்கு வந்தால் அனுமதிப்போம்,” என்று அகில இந்திய தியான முகாம்களின் மகா ஆச்சாரியார் நித்யஞானானந்தா கூறினார்.

தமிழ்நாடு நித்யானந்த தியான பீடத்தின் சார்பில் சென்னையில் நேற்று நடத்தப்பட்ட நிருபர்கள் சந்திப்பில் நித்யஞானானந்தா கூறியதாவது:கடந்த நான்கு மாதங்களாக பலரால் பல வகைகளில் எங்கள் நித்யானந்த தியான பீடமும், நித்யானந்தாவும் உண்மைக்குப் புறம்பான முறையில் விமர்சிக்கப்பட்டுள்ளனர். நேற்று தனியார் “டிவி’யில் பக்தர்கள் புண்படும் படியாக எங்கள் குருநாதரை போலிச் சாமியார் என்று வர்ணித்து செய்தி வெளியிடப்பட்டது. இது எங்களது ஆன்மிக உணர்வை நேரடியாக புண்படுத்தியது. பெங்களூரில் நடிகை மாளவிகா அவரது கணவர் அவிநாஷுடன் கலந்து கொண்ட குருபூர்ணிமா நிகழ்ச்சியை கொச்சைப் படுத்தியதையும் வன்மையாகக் கண்டிக்கிறோம். எங்களின் சமூக சுதந்திரத்தையும், தனிமனித சுதந்திரத்தையும் பாதிக்கிற வகையில் செயல்படுபவர்கள் மீது தமிழ்நாடு நித்யானந்த தியான பீடத்தின் சார்பில் சட்டப்படி வழக்கு தொடர்வோம். இவ்வாறு நித்யஞானானந்தா கூறினார்.

“நித்யானந்தாவும் நடிகையும் இடம் பெறும் வீடியோ பதிவு குறித்தும், ஆண்மையற்றவர் என்று போலீஸ் விசாரணையில் நித்யானந்தா பதில் சொன்னதாகவும் செய்திகள் வந்ததே உண்மையா?’ என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை நிருபர்கள் கேட்டனர்.

இதற்கு நித்யஞானானந்தா அளித்த பதில்: நித்யானந்தாவும், நடிகையும் இடம் பெற்றதாக வந்த வீடியோ போலியானது. போலீஸ் விசாரணையில் நித்யானந்தா ஆண்மையற்றவர் என்று கூறவில்லை. யாரோ தவறாக இப்படி  சொல்லியுள்ளனர். நடிகை ரஞ்சிதா நல்ல பக்தை. அவர் தற்போது ஆசிரமத்தில் இல்லை. வெளியே எங்கு இருக்கிறார் என்று எங்களுக்கு தெரியாது. ரஞ்சிதா ஆசிரமத்திற்கு வந்தால், நான் வாயில் காவலனாக இருந்தால் உள்ளே அனுமதிப்பேன். ரஞ்சிதாவை நித்யானந்தா அனுமதிப்பாரா என்பதை அவரிடம் தான் கேட்க வேண்டும். நித்யானந்தா பிரச்னைக்கு காரணமானவர்கள் யார் என்றும், யார், யார் மீது வழக்கு தொடரப் போகிறோம் என்றும் விரைவில் தெரிவிப்போம். இவ்வாறு நித்யஞானானந்தா கூறினார்.


[1] தினமலர், நித்யானந்தாவுடன் செக்ஸ் தொடர்பில்லை : நடிகை ரஞ்சிதா வாக்குமூலம், ஜூலை 23,2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=45896

[2] தினமணி, நித்யானந்தா விவகாரம்: டி.வி.யில் ஒளிபரப்பான டேப் போலியானது: ரஞ்சிதா, http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=India&artid=276843&SectionID=130&MainSectionID……….E%BE

[3] தினத்தந்தி, Œ†VÖ]‹RÖ°PÁ ÙS£eLUÖL ÚRÖÁ¿• ÙNeÍ ®zÚVÖ LÖypL· EÛUV¥X SzÛL WtpRÖ WLpV YÖeh™X•,  மேலும் விவரங்களிக்கு, http://www.dailythanthi.com/article.asp?NewsID=582357&disdate=7/24/2010&advt=1

[4] நக்கீரன், நித்தி பற்றி ரஞ்சிதா-ரஞ்சிதா பற்றி நித்தி, http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=36307

[5] தினகரன், முக்கிய சாட்சி நடிகை ரஞ்சிதா வாக்குமூலம் அளித்து விட்டார், மேலும் விவரங்களிக்கு, http://www.dinakaran.com/indiadetail.aspx?id=11189&id1=1

[6] http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=36321

ரஞ்சிதா பட்ட வேதனை : நித்யானந்தா மன உருக்கம்!

ஜூலை23, 2010

ரஞ்சிதா பட்ட வேதனை : நித்யானந்தா மன உருக்கம்!

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=45158

நடிகை ரஞ்சிதா நேர்மையான அடக்கமான பெண்: பெங்களூரு ஜூலை 22,2010: நடிகை ரஞ்சிதா நேர்மையான அடக்கமான பெண் என, சாமியார் நித்யானந்தா தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் பெங்களூரு அருகே பிடதியில் ஆசிரமம் அமைத்து யோகக் கலையை போதித்து வருகிறார் நித்யானந்தா, சர்ச்சைக்குரிய வீடியோ காட்சியில் சிக்கி, சிறை சென்றார் இவரது சீடர் ரஞ்சிதா தலைமறைவானார். ஜாமீனில் வெளிவந்துள்ள நித்யானந்தா, ஆன்மிக போதனைகளை செய்ய கோர்ட் அனுமதியளித்துள்ளது.

தவறான பிரசாரத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்: பிடதி ஆசிரமத்தில் நேற்று நித்யானந்தா குறிப்பிடுகையில், “என் மீது செக்ஸ் புகார்கள் கூறப்பட்ட போது, அதைப் பற்றி நான் கவலைப்படவேயில்லை. ஆனால், எனது சீடர்கள் இதனால் பாதிக்கப்பட்டது குறித்து தான் வேதனைப்பட்டேன். குறிப்பாக, ரஞ்சிதா போன்றவர்கள் இந்த புகாரினால் வெகுவாக பாதிக்கப்பட்டார்கள். ரஞ்சிதா நேர்மையானவர், அடக்கமானவர். ஆசிரமத்தில் தலைசிறந்த சேவகியாக இருந்தவர். என்னை தாக்க நினைப்பவர்கள், என்னை பழிதீர்க்க நினைப்பவர்கள் நேரடியாக மோதட்டும். ரஞ்சிதாவுடன் நான் சல்லாபம் செய்வதாக “டிவி’யில் பல மணி நேரம் படம் போட்டு காட்டினார்கள். என் மீது சுமத்தப்பட்டுள்ள கற்பழிப்பு புகார் காரணமாக, 50 நாட்கள் சிறையில் இருந்தேன். அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்து விட்டு போகட்டும். ஆனால், எனது பக்தர்களின் வாழ்வை, தவறான பிரசாரத்தால் பாழாக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். ரஞ்சிதா எனது ஆசிரமத்துக்கு நிறைய பொதுத் தொண்டுகளை செய்துள்ளார். தவறான பிரசாரத்தால் அவரும், அவரது குடும்பத்தாரும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்காக நான் எனது பிராத்தனையையும், வாழ்த்தையும் வழங்குகிறேன். இவ்வாறு நித்யானந்தா கூறினார்.

புலன்களை அடக்குபவர்கள் தவறு செய்யமாட்டார்கள்: புலன்களை அடக்க நினைப்பவர்கள், ஆமைப் போலக் குறுகிவிடுவார்கள். மனத்தை அடக்குபவர்கள், உடலை அடக்கிக் கட்டிப் போட்டுவிடுவார்கள். வயதானாலும், மனத்தில் நல்லெண்ணங்களே இருக்கும். வாழ்நாள் நீட்டிக்க, உடலை நன்றாகக் காத்துவரவேண்டும் என்ற நிலையில், உடலை தன்னிச்சைக்கேற்றபடி விடமாட்டார்கள் துறந்தவர்கள். ஆன்மீகம் என்ற போர்வையில் நாத்திகர்களும், தவறிய ஆத்திகர்களும், எந்த காரணங்களுக்காகவும், தவறன செய்கைகளை நியாயப்படுத்தமுடியாது. பிறகு இந்த நித்யானந்தாவிற்கும், கருணநிதிக்கும் என்ன வித்தியாசம்?

ஆபாச படம் எடுத்து மிரட்டினாரா? சாமியார் மீது பெண் பரபரப்பு புகார்

ஜூலை17, 2010
ஆபாச படம் எடுத்து மிரட்டினாரா? சாமியார் மீது பெண் பரபரப்பு புகார்
டிசம்பர் 15,2009,00:00  IST

http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=14703

இதுவும் விடுபட்ட பதிவு. இப்பொழுது பதிவு செய்யப் படுகிறது. தாமதத்திற்கு மன்னிக்கவும்!

சென்னை : ஆபாச படம் எடுத்து சாமியார் ஒருவர், தன்னை செக்ஸ் கொடுமை செய்து வருகிறார் என, பெண் ஒருவர் சென்னை போலீஸ் கமிஷனரை சந்தித்து புகார் கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்தவர் ஹேமலதா. இவர் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனைச் சந்தித்து, சாமியார் மீது பரபரப்பு புகார் செய்தார்.

புகாரில் ஹேமலதா கூறியிருப்பதாவது: அடையாறில் உள்ள மிஷன் ஒன்றில் உள்ள ஈஸ்வர ஸ்ரீகுமார் என்ற சாமியார் தனது நிறுவனத்தில் வேலைக்கு ஆள் தேவைப்படுவதாக அறிந்து விண்ணப்பித்தேன். நேர்முகத்தேர்வு நடத்திய அவர், தற்போது மேற்பார்வையாளர் வேலை தருவதாகவும், பின் சிங்கப்பூரில் உள்ள நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் உயர்பதவி தருவதாகவும் ஆசை காட்டினார்.

தனி அறையில் வைத்து காபியில் மயக்க மருத்து கொடுத்து, என்னை பலாத்காரம் செய்துவிட்டார். இதுபற்றி கேட்டபோது, வெளியில் சொன்னால், கொலை செய்துவிடுவேன் என மிரட்டினார். உல்லாசம் இருந்ததை வீடியோ எடுத்து வைத்திருப்பதாக மிரட்டி, வீட்டிற்கு வரவைத்து கற்பழித்தார். அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். வீடியோவை அழித்து எனக்கு பாதுகாப்பு கொடுங்கள். இவ்வாறு, புகாரில் தெரிவித்திருந்தார். இதுகுறித்து, மாம்பலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதனிடையே, நேற்று மாலை நிருபர்களை சந்தித்த ஹேமலதா, தனக்கு நேர்ந்த கொடுமைகளை விவரித்தார். இதுபோன்ற கொடுமை வேறு பெண்ணுக்கு வரக்கூடாது என, கதறி அழுதார்.

செக்ஸ் புகாரை மறுத்துள்ள ஈஸ்வர ஸ்ரீகுமார்,” நிலம் தொடர்பாக, வழக்கு நடந்து வருகிறது. எதிராளிகள் என்னை பணிய வைக்க ஹேமலதாவை கருவியாக பயன்படுத்துகின்றனர்’ என்றார். காஞ்சிபுரம் அர்ச்சகர் தேவநாதன் விவகாரம் சற்று ஓய்ந்துள்ள நிலையில், அடுத்ததாக ஹேமலதாவின் செக்ஸ் புகார், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செக்ஸ் வலையில் வீழ்ந்த வின்சென்ட்!

ஜூலை17, 2010
செக்ஸ் வலையில் வீழ்ந்த வின்சென்ட்!
முன்பு பதிவு செய்யாமல் விடுபட்டது
கும்பகோணம், பிப்.13, 2010-
பெங்களூர் எம்.வி.நகர் 8-வது மெயின்ரோடு, 8-வது தெருவை சேர்ந்தவர் விசார் மகன் வின்சென்ட் (வயது 33). இவர் கும்பகோணத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கண்காணிப்பாளராக வேலை பார்த்தார்.
அதே ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து வந்தவர் கண் டாக்டர் சாந்தி (44). இவர் அடிக்கடி வின்சென்டை தனது அறைக்கு அழைத்து பேசுவாராம். இதனால் இருவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இந்நிலையில் ஆஸ்பத்திரி நிர்வாகம் 2 பேரையும் வேலையில் இருந்து நீக்கியது.
இந்த சூழ்நிலையில் வின்சென்ட் கும்பகோணம் கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில், டாக்டர் சாந்தி தன்னை மோசடியாக செக்ஸ் வலையில் சிக்க வைத்து ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் பணத்தையும் மற்றும் 26 பவுன் தங்க நகையும் பறித்து கொண்டார் என்றும், அத்துடன் தன்னை அடியாட்களை வைத்து சித்ரவதை செய்தார் என்றும் கூறப்பட்டிருந்தது.
புகாரின் பேரில் கும்பகோணம் போலீசார் வழக்கு பதிவு செய்து டாக்டர் சாந்தியை நேற்று கைது செய்தனர்.
இந்த சம்பவம் பற்றி வின்சென்ட் நிருபர்களிடம் கூறியதாவது:-
கும்பகோணத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் பணிபுரிந்தபோது டாக்டர் சாந்தி இரட்டை அர்த்தங்கள் கொண்ட பேச்சால் என்னை மயக்கினார். நானும் அவரது வலையில் விழுந்து அவரது வீட்டிற்கு சென்றேன். அங்கு நாங்கள் 2 பேரும் மது அருந்திவிட்டு உல்லாசமாக இருப்போம். பின்னர் பல்வேறு காரணங்களை கூறி நகை, பணத்தையும் பறித்துக்கொண்டார். எங்களது உறவை அறிந்த தனியார் ஆஸ்பத்திரி நிர்வாகம் எங்களை வெளியேற்றியதால் வேலூருக்கு சென்று அங்கு என்னை ஒரு வீட்டில் வைத்து என்னை இஷ்டப்படி சாந்தி நடத்தினார். வேலூரில் படிக்கும் ஒரு மாணவரோடு தொடர்பு எற்பட்டதால் என்னை ஒதுக்கிவிட முடிவு செய்து என்னை அடித்து துன்புறுத்தினார்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
போலீசார் நேற்று டாக்டர் சாந்தியிடம் விசாரித்த போது அவரை பற்றி பல அதிர்ச்சிகரமான தகவல் கிடைத்தது.
திருச்சி கே.கே.நகரைச் சேர்ந்தவர் தியாகராஜன் பிரபல டாக்டர். அவரது மகள் தான் சாந்தி. இவர் தஞ்சாவூரில் மருத்துவ கல்லூரியில் படித்தபோது மலேசியாவை சேர்ந்தவரும், அதே கல்லூரியில் படித்தவருமான குணசேகரனுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
அவர்களுக்கு 14 வயதில் ஒரு மகன் உள்ளான். டாக்டர் சாந்தி திருச்சி கே.கே.நகரில் கண் மருத்துவமனை நடத்தி வந்தார். இந்நிலையில் டாக்டர் குணசேகரனுக்கும், சாந்திக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதன் காரணமாக குணசேகரன் மலேசியாவிற்கு சென்று விட்டார்.
பின்னர் திருச்சியை சேர்ந்த டாக்டர் சுபாஷ் சந்திரபோசுடன் சாந்திக்கு காதல் ஏற்பட்டது. அந்த காதல் 2001 முதல் 2005 வரை நீடித்தது. பின்னர் அவரையும் கழற்றிவிட்டு, தன்னுடன் மருத்துவ கல்லூரியில் படித்த கும்பகோணத்தை சேர்ந்த டாக்டர் பாலமுருகனை காதலித்து கணவன்- மனைவியாக வாழ்ந்தார்.
அப்போது கும்பகோணம் ஸ்டேட் பாங்க் காலனியில் வீடு எடுத்து டாக்டர் சாந்தி தங்கினார். சில நாட்களில் பாலமுருகனுக்கும், சாந்திக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு பிரிந்துவிட்டனர்.
இந்த பிரச்சினைக்கு பிறகு பெங்களூரை சேர்ந்த ஆனி என்ற டாக்டருடன் பழக்கம் ஏற்பட்டு இருந்த நிலையில் வின்சென்ட்டை 5-வது காதலராக வலையில் சிக்கவைத்துள்ளார். மேற்கண்ட விவரங்கள் விசாரணையில் தெரியவந்தன.
கும்பகோணத்திற்கு நேற்று வந்த டாக்டர் சாந்தியின் 2-வது கணவர் டாக்டர் சுபாஷ் சந்திரபோஸ் கூறுகையில், என்னுடன் டாக்டர் சாந்தி, சுமார் 5 ஆண்டுகள் பழகி என்னிடம் பணத்தை ஏமாற்றியதோடு என்னையும் போலீசில் சிக்க வைத்துவிட்டார். இவர் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு பிரச்சினையை உண்டாக்குவது தான் டாக்டர் சாந்தியின் வேலை. இவரால் வேறு யாரும் பாதிக்கக் கூடாது என்பதற்காகவே கும்பகோணத்திற்கு வந்துள்ளேன். அவரின் செக்ஸ் டார்ச்சர் வெளி உலகிற்கு தெரிந்தால் தான் அப்பாவிகளுக்கு நல்லது.
இவ்வாறு அவர் கூறினார். டாக்டர் சாந்தியின் லீலைகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

20ஐ மணந்த 21 வயது மாணவி திருமணம் செல்லாது என பிரிப்பு!

ஜூலை16, 2010

20ஐ மணந்த 21 வயது மாணவி திருமணம் செல்லாது என பிரிப்பு

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=40733

ஆத்தூர்: ஆத்தூர் அருகே திருமண வயதடையாத மாணவனை, கல்லூரி மாணவி திருமணம் செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே கிழக்கு ராஜாபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சகுந்தலா (21, பெயர் மாற்றப்பட்டுள்ளது). அவர் தேவியாக்குறிச்சியிலுள்ள மகளிர் கல்லூரியில் பி.எஸ்சி., படித்து வருகிறார்.தம்மம்பட்டி உலிபுரத்தை சேர்ந்த மாணவர் செந்தில்குமார் (20). அவருடன் பழக்கம் ஏற்பட்டு, காதலித்து வந்தனர்.

கடந்த 11ம் தேதி காதல் ஜோடி சகுந்தலாவும், செந்தில்குமாரும் வீட்டை விட்டு வெளியேறி திருச்சி உச்சிபிள்ளையார் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.பின், காதல்ஜோடி பாதுகாப்பு கேட்டு ஆத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சமடைந்தனர்.காதல் ஜோடி வயது சான்றிதழை போலீஸார் சரிபார்த்து, விசாரணை நடத்தினர். அதில், மாணவி சகுந்தலாவுக்கு திருமண வயதும், மாணவர் செந்தில்குமாருக்கு 20 வயது என்பதும் தெரியவந்தது. திருமண வயதை எட்டாததால் மாணவர் செந்தில்குமாரின் திருமணம் செல்லாது என தெரிவிக்கப்பட்டது.அதை கேட்டு செந்தில்குமாரும், சகுந்தலாவும் அதிர்ச்சிக்குள்ளாகி அழுதனர். இருதரப்பு பெற்றோரிடமும் ஆத்தூர் மகளிர் ஸ்டேஷன் எஸ்.ஐ., வளர்மதி பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின் மாணவி சகுந்தலாவை, அவரது பெற்றோருடன் போலீஸார் அனுப்பி வைத்தனர்.

உசிலம்பட்டி : பதிமூன்று வயதே ஆன சிறுமிக்கு நடக்க இருந்த திருமணத்தை போலீசார் தடுத்து நிறுத்தினர். உடனே பெண் வீட்டார், விழாவை நிச்சயதார்த்தமாக மாற்றினர்.

உசிலம்பட்டி பகுதி கிராமங்களில், சில பிரிவினர் உரிய வயதை எட்டுவதற்கு முன்பு திருமணம் செய்வது வழக்கம். பெண்கள் பூப்பெய்தினால், அடுத்த நடவடிக்கையாக படிப்பை நிறுத்தி விட்டு மாப்பிள்ளை பார்த்து திருமணம் நடத்துகின்றனர். உசிலம்பட்டி அருகே நக்கலப்பட்டியைச் சேர்ந்த மரியராஜ் – காளியம்மாள் தம்பதியரின் மகன்வழி பேரன் தேவராஜ் (27) என்பவருக்கும், மகள்வழி பேத்தி கவுசல்யா (13) என்பவருக்கும் நேற்று திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது. கவுசல்யா எட்டாம் வகுப்பு படிக்கிறார். தேவராஜ் இயந்திர ஆபரேட்டராக பணிபுரிகிறார்.

சிறுமிக்கு திருமண முயற்சி: தடுத்து நிறுத்திய போலீஸ்

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=40187

ஜூலை 15,2010: மணப்பெண்ணிற்கு 18 வயது நிரம்பாத நிலையில் திருமணம் நடக்க உள்ளது குறித்து கிராமத்தைச் சேர்ந்த சிலர், போலீசாருக்கு புகார் அனுப்பினர். உசிலம்பட்டி எஸ்.ஐ., வசந்தி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் திருமண வீட்டிற்கு சென்றனர். மணப்பெண், திருமண வயதை எட்டவில்லை என்பதால் திருமணம் நடத்தக் கூடாது, என, மணமகன், மணமகள் பெற்றோர் மற்றும் திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்களிடம் விளக்கினர். நடக்க இருந்த திருமண விழாவை மாற்றி, நிச்சயதார்த்த விழாவாக நடத்தினர். பெண்ணிற்கு 18 வயது நிரம்பிய பின் திருமணம் நடத்திக்கொள்வதாக உறவினர்கள் உறுதி அளித்தனர்.

பைக்கில் சில்மிஷம், ஆட்டோவில் காதல், காரில் விபச்சாரம்: செம்மொழித் தமிழனின் களவு கற்பை வெல்கிறது!

ஜூலை15, 2010

பைக்கில் சில்மிஷம், ஆட்டோவில் காதல், காரில் விபச்சாரம்: தமிழனின் களவு அபாரம்தான்!

பள்ளி மாணவியை கடத்திய ஆட்டோ டிரைவருக்கு வலை:

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=39989

திண்டிவனம் (14-07-3010): பள்ளி மாணவியை கடத்திச்சென்ற ஆட்டோ டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த சாரம் கிராமம் சாஸ்திரி நகரைச் சேர்ந்தவர் இந்திரா(48). இவரது மகள் ஹெலன் (17), அதே பகுதியில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். பக்கத்து வீட்டில் வசித்த ஜெயராஜ் மகன் சுதாகர், இந்திராவிற்குச் சொந்தமான ஒரு ஆட்டோவை வாடகைக்கு ஓட்டி வந்துள்ளார். அவர் தினந்தோறும் ஹெலனை ஆட்டோவில் பள்ளிக்கு அழைத்துச் சென்று வந்தார். கோடை விடுமுறை முடிந்து பிளஸ் 2 வகுப்பு படித்த ஹெலன் பள்ளிக்கு சென்று வந்தார். கடந்த மாதம் 3ம் தேதி காலை ஆட்டோ டிரைவர் சுதாகர் வழக்கம்போல் ஹெலனை பள்ளிக்கு அழைத்துச் சென்றுள்ளார். மாலையில் பள்ளி முடிந்து இருவருமே வீடு திரும்பவில்லை. இந்திரா கொடுத்த புகாரின் பேரில் ஒலக்கூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப் பதிந்து விசாரித்ததில் காதலர்களான சுதாகர்- ஹெலன் இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி  வேலூரில் திருமணம்  செய்து கொண்டதாக தெரிய வந்தது. தலைமறைவாக உள்ள சுதாகர், ஹெலன் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

இரண்டாம் திருமணத்துக்காக இளம்பெண் கோவைக்கு கடத்தல்?

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=40022

கோவை :இரண்டாம் திருமணம் செய்துகொள்ளும் திட்டத்துடன் இளம்பெண்ணை கடத்திய வாலிபரைத் தேடி கர்நாடகா போலீசார் கோவை வந்துள்ளனர்.தர்மபுரியைச் சேர்ந்தவர் சிவா (33); கடந்த மூன்றாண்டுகளாக பெங்களூரு கே.ஆர்.புரத்திலுள்ள டி.வி.எஸ்., ÷ஷாரூமில் மெக்கானிக்காக பணிபுரிந்து வந்தார். அப்போது, ÷ஷாரூம் அருகே சேகர் என்பவர் நடத்தி வரும் ஓட்டலுக்கு சென்று சாப்பிட்டு வந்தார்.  அதில், சேகரின் மகள் சந்தியாவுடன்  பழக்கம் ஏற்பட்டது; சேகர், தனது மகளை கண்டித்தார். இந்நிலையில், கடந்த மே 10ல் காய்கறி வாங்க மார்க்கெட்டுக்கு சென்ற சந்தியா வீடு திரும்பவில்லை; சிவாவையும் காணவில்லை. கே.ஆர்.புரம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்த சேகர், தனது மகள் சந்தியாவை, சிவா கடத்திச் சென்றுவிட்டதாக புகார் கொடுத்தார். போலீசார் நடத்திய விசாரணையில், சிவாவுக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தை இருப்பதும், அவர்கள் தர்மபுரியில் வசிப்பதும் தெரிந்தது. சிவா மட்டும் பெங்களூருவில் தங்கி வேலை பார்த் துள்ளார். சந்தியாவை காரில் அழைத் துக்கொண்டு ஒசூர் சென்ற சிவா, பஸ்சில் தர்மபுரி, சேலம் வந்து கடைசியாக கோவைக்கு வந்துள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. கடத்தலுக்கு உதவியதாக பால்ராஜ் என்ப வரை கைது செய்த கர்நாடக போலீசார், சிவாவை கைது செய்ய கோவையில் முகாமிட்டுள்ளனர்.

காதலித்து கர்ப்பமாக்கி ஏமாற்றிய வாலிபர் கைது

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=39994

செஞ்சி: செஞ்சி அருகே காதலியை திருமணம் செய்ய மறுத்த வாலிபரை  போலீசார் கைது செய்தனர். செஞ்சி அடுத்த சின்னபொன்னம்பூண்டி கிராமத்தை சேர்ந்த ஜெயராமன் மகன் அய்யப்பன் (27). இவருக்கு திருமணாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் அய்யப்பன் அதே கிராமத்தை சேர்ந்த அண்ணாமலை மகள் ஜோதியை காதலித்து  வந்துள்ளார். இருவரும் நெருங்கி பழகியதால் தற்போது ஜோதி ஏழு மாத கர்ப்பமாக உள் ளார். தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ஜோதி கேட்டபோது அய்யப்பன் மறுத்துள்ளார்.இது தொடர்பாக ஜோதி கடந்த வாரம் விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்தில் மனு கொடுத்ததுடன்,  உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட்டார். அதன் பேரில் செஞ்சி  மகளிர் போலீசார் வழக்குப் பதிந்து அய்யப்பனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்

மாணவியை பைக்கில் வைத்து சில்மிஷம் செய்த கல்மிஷம் கொண்ட தலைமை ஆசிரியர்!

ஜூலை13, 2010

மாணவியை பைக்கில் வைத்து சில்மிஷம் செய்த கல்மிஷம் கொண்ட தலைமை ஆசிரியர்!

இப்படி தொடர்ச்சியாக நடக்கும் பாலியல் வன்முறைகள், மீறல்கள், பலாத்காரங்கள் இவற்றில் காணப்படுபவை:

  1. 1. ஆண்களின் வக்கிரபுத்தி, சபலம், செக்ஸ்-மனப்பாங்கு.
  2. 2. பெண்களின் அறியாமை, சபலம், ஆண்களை நம்புகின்ற சுபாவம்.
  3. 3. பெண்கள் உரிமைகள் என்ற போர்வையில் / நிலையில் எல்லைகளை மீறி செயல்படுதல்.
  4. 4. பெண்கள், நாகரிகம் என்ற பெயரில் – ஆபாசமாக ஆடைகள் அணிதல்,
  5. 5. பெண்கள் நட்பு என்ற முறையில் பல ஆண்களுடன் பேசுதல்-பழகுதல் முதலியன.
  6. 6. ஆண்-பெண் கலந்து பேசும் நிலை, நெருக்கம், விரல்கள், கைகள் படுவது, தொடுவது முதலியன.
  7. 7. சினிமா, தமிழ் சினிமாவில் வருகின்ற அசிங்கமான, ஆபாசமான, காமச்த்தைத் தூண்டும் ஜோக்குகள் / நகைச்சுவை அக்கிரமங்கள், கோமாளித்தனமான கொக்கோகங்கள், விரசங்கள்.
  8. 8. பெண்கள் தமது இயல்பான குணங்களினின்று விலகுதல், மாறுதல், அல்லது சமரசம் செய்துகொள்ளுதல்.
  9. 9. அதனை ஆண்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளுதல்.

10. ஆக இவற்றையெல்லாம் தவிர்க்க பெண்கள் கட்டுப்பாட்டைக் கடைபிடிக்கவேண்டும்.

சில்மிஷ தலைமை ஆசிரியர் கைது : கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=38139

மாணவியிடம் சில்மிஷம் செய்த தலைமை ஆசிரியர் கைது :காரிமங்கலம் : தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் ஒன்றியம் மல்லுப்பட்டி அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர், மாணவியிடம் சில்மிஷம் செய்த பிரச்னை தொடர்பாக கைது செய்யப்பட்டார். இதை கண்டித்து மாணவர்கள், பொது மக்கள் சார்பில், மூன்று இடங்களில் சாலை மறியல் நடந்தது. இதில், இரு இடங்களில் மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். தர்மபுரி அருகே உள்ள மல்லுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பன்னீர்செல்வம் பணிபுரிகிறார். இவர், கடந்த 9ம் தேதி பள்ளிக்கு வரும் போது, அதே பள்ளியில் படிக்கும் மாணவியை பைக்கில் அழைத்து வந்தார். அப்போது, மாணவியிடம் தலைமையாசிரியர் பன்னீர்செல்வம் சில்மிஷம் செய்ததாக மாணவியின் பெற்றோர், போலீசில் புகார் செய்தனர். மகேந்திரமங்கலம் போலீசார், தலைமையாசிரியரை விசாரணைக்காக அழைத்துச் செல்ல பள்ளிக்கு வந்தனர். அப்போது, போலீசாருடன் சென்ற மாணவியின் குடும்பத்தினர் பள்ளி வளாகத்தில் போலீசார் முன் பன்னீர்செல்வத்தை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. சில்மிஷ புகார் தொடர்பாக பன்னீர்செல்வத்தை போலீசார் கைது செய்தனர்.

தலைமையாசிரியர் தாக்கப்பட்டதால் சாலை மறியல்: “பள்ளி வளாகத்தில் நுழைந்து தலைமையாசிரியரை தாக்கியதை தடுத்து நிறுத்தாமல் வேடிக்கை பார்த்த மகேந்திரமங்கலம் எஸ்.ஐ., நாகராஜ், போலீசார் சுந்தரராஜன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி தலைமை ஆசிரியரை விடுதலை செய்ய வேண்டும்’ என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள், பெற்றோர், பொதுமக்கள் ஆகியோர் மல்லுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே நேற்று காலை 9 மணிக்கு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியல் குறித்து தகவல் அறிந்த ஜக்கசமுத்திரம், ஜிட்டாண்டஅள்ளி ஆகிய பகுதிகளிலும் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் தலைமையாசிரியருக்கு ஆதரவாக சாலை மறியலில் ஈடுபட்டனர். ஒரே நேரத்தில் மூன்று இடங்களில் சாலைமறியலில் ஈடுபட்டதால், பாலக்கோடு – பெங்களூரு சாலையில் நேற்று காலையில் இருந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பொதுமக்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும், மறியலில் ஈடுபட்டவர்கள், “தலைமை ஆசிரியரை தாக்கியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும்’ என, கூறி மறியலை தொடர்ந்தனர். தலைமை ஆசிரியரை தாக்கியவர்கள் மீது வழக்கு பதிவு செய்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதை ஏற்க மறுத்த பொதுமக்கள், தாக்கியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றனர். பல மணிநேரம் பேச்சுவார்த்தை நடந்த நிலையில் ஜக்கசமுத்திரம் பகுதியில் சாலைமறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

சாலை மறியல், கல்வீச்சு, தடியடி: மல்லுப்பட்டி, ஜிட்டாண்டஅள்ளி ஆகிய பகுதியில் மதியம் 3.30 மணிக்கு மேலும் மறியல் தொடர்ந்தது. மறியலில் போது சிலர் பாதுகாப்புக்கு நிறுத்தியிருந்த போலீசார் மீது கல்வீசினர். போலீசார் வழியில்லாமல் மறியலில் ஈடுபட்டவர்களை தடியடி நடத்தி கலைத்தனர். மாலை 4 மணிக்கு ஜிட்டாண்டஅள்ளி பஸ் ஸ்டாண்டில் சாலைமறியல் செய்தவர்கள் மீதும் போலீசார் தடியடி நடத்தி விரட்டி அடித்தனர். இதில், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சிலர் காயம் அடைந்தனர். இரு இடங்களில் நடந்த தடியடியால் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

ஜாதி பிரச்னையாக உருவெடுக்கும் நிலை: மாணவியை சில்மிஷம் செய்த தலைமையாசிரியர் கைது செய்யப்பட்ட பிரச்னை, இரு சமூகத்தினருக்கான பிரச்னையாக உருவெடுத்துள்ளது. பாதிக்கப்பட்டதாக சொல்லப்படும் மாணவிக்கு ஆதரவாக தலித் அமைப்புகளும், சில அரசியல் கட்சியினரும், தலைமையாசிரியருக்கு ஆதரவாக ஆளுங்கட்சியினரும் களத்தில் குதித்ததால், இப்பிரச்னை நேற்று பெரிய அளவில் உருவெடுத்தது. அரசியல் கட்சியினர் தலையீடு காரணமாக மறியல் நடந்த இடங்களில் போலீசார் நடத்திய பேச்சு வார்த்தை பலன் அளிக்காமல் போனது. இறுதியில் தடியடி நடத்திய பின்னரே மறியல் வைவிடப்பட்டது. இப்பிரச்னை ஜாதிய பிரச்னையாக உருவெடுத்திருப்பதால், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.