மாணவியை பைக்கில் வைத்து சில்மிஷம் செய்த கல்மிஷம் கொண்ட தலைமை ஆசிரியர்!


மாணவியை பைக்கில் வைத்து சில்மிஷம் செய்த கல்மிஷம் கொண்ட தலைமை ஆசிரியர்!

இப்படி தொடர்ச்சியாக நடக்கும் பாலியல் வன்முறைகள், மீறல்கள், பலாத்காரங்கள் இவற்றில் காணப்படுபவை:

 1. 1. ஆண்களின் வக்கிரபுத்தி, சபலம், செக்ஸ்-மனப்பாங்கு.
 2. 2. பெண்களின் அறியாமை, சபலம், ஆண்களை நம்புகின்ற சுபாவம்.
 3. 3. பெண்கள் உரிமைகள் என்ற போர்வையில் / நிலையில் எல்லைகளை மீறி செயல்படுதல்.
 4. 4. பெண்கள், நாகரிகம் என்ற பெயரில் – ஆபாசமாக ஆடைகள் அணிதல்,
 5. 5. பெண்கள் நட்பு என்ற முறையில் பல ஆண்களுடன் பேசுதல்-பழகுதல் முதலியன.
 6. 6. ஆண்-பெண் கலந்து பேசும் நிலை, நெருக்கம், விரல்கள், கைகள் படுவது, தொடுவது முதலியன.
 7. 7. சினிமா, தமிழ் சினிமாவில் வருகின்ற அசிங்கமான, ஆபாசமான, காமச்த்தைத் தூண்டும் ஜோக்குகள் / நகைச்சுவை அக்கிரமங்கள், கோமாளித்தனமான கொக்கோகங்கள், விரசங்கள்.
 8. 8. பெண்கள் தமது இயல்பான குணங்களினின்று விலகுதல், மாறுதல், அல்லது சமரசம் செய்துகொள்ளுதல்.
 9. 9. அதனை ஆண்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளுதல்.

10. ஆக இவற்றையெல்லாம் தவிர்க்க பெண்கள் கட்டுப்பாட்டைக் கடைபிடிக்கவேண்டும்.

சில்மிஷ தலைமை ஆசிரியர் கைது : கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=38139

மாணவியிடம் சில்மிஷம் செய்த தலைமை ஆசிரியர் கைது :காரிமங்கலம் : தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் ஒன்றியம் மல்லுப்பட்டி அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர், மாணவியிடம் சில்மிஷம் செய்த பிரச்னை தொடர்பாக கைது செய்யப்பட்டார். இதை கண்டித்து மாணவர்கள், பொது மக்கள் சார்பில், மூன்று இடங்களில் சாலை மறியல் நடந்தது. இதில், இரு இடங்களில் மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். தர்மபுரி அருகே உள்ள மல்லுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பன்னீர்செல்வம் பணிபுரிகிறார். இவர், கடந்த 9ம் தேதி பள்ளிக்கு வரும் போது, அதே பள்ளியில் படிக்கும் மாணவியை பைக்கில் அழைத்து வந்தார். அப்போது, மாணவியிடம் தலைமையாசிரியர் பன்னீர்செல்வம் சில்மிஷம் செய்ததாக மாணவியின் பெற்றோர், போலீசில் புகார் செய்தனர். மகேந்திரமங்கலம் போலீசார், தலைமையாசிரியரை விசாரணைக்காக அழைத்துச் செல்ல பள்ளிக்கு வந்தனர். அப்போது, போலீசாருடன் சென்ற மாணவியின் குடும்பத்தினர் பள்ளி வளாகத்தில் போலீசார் முன் பன்னீர்செல்வத்தை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. சில்மிஷ புகார் தொடர்பாக பன்னீர்செல்வத்தை போலீசார் கைது செய்தனர்.

தலைமையாசிரியர் தாக்கப்பட்டதால் சாலை மறியல்: “பள்ளி வளாகத்தில் நுழைந்து தலைமையாசிரியரை தாக்கியதை தடுத்து நிறுத்தாமல் வேடிக்கை பார்த்த மகேந்திரமங்கலம் எஸ்.ஐ., நாகராஜ், போலீசார் சுந்தரராஜன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி தலைமை ஆசிரியரை விடுதலை செய்ய வேண்டும்’ என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள், பெற்றோர், பொதுமக்கள் ஆகியோர் மல்லுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே நேற்று காலை 9 மணிக்கு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியல் குறித்து தகவல் அறிந்த ஜக்கசமுத்திரம், ஜிட்டாண்டஅள்ளி ஆகிய பகுதிகளிலும் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் தலைமையாசிரியருக்கு ஆதரவாக சாலை மறியலில் ஈடுபட்டனர். ஒரே நேரத்தில் மூன்று இடங்களில் சாலைமறியலில் ஈடுபட்டதால், பாலக்கோடு – பெங்களூரு சாலையில் நேற்று காலையில் இருந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பொதுமக்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும், மறியலில் ஈடுபட்டவர்கள், “தலைமை ஆசிரியரை தாக்கியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும்’ என, கூறி மறியலை தொடர்ந்தனர். தலைமை ஆசிரியரை தாக்கியவர்கள் மீது வழக்கு பதிவு செய்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதை ஏற்க மறுத்த பொதுமக்கள், தாக்கியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றனர். பல மணிநேரம் பேச்சுவார்த்தை நடந்த நிலையில் ஜக்கசமுத்திரம் பகுதியில் சாலைமறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

சாலை மறியல், கல்வீச்சு, தடியடி: மல்லுப்பட்டி, ஜிட்டாண்டஅள்ளி ஆகிய பகுதியில் மதியம் 3.30 மணிக்கு மேலும் மறியல் தொடர்ந்தது. மறியலில் போது சிலர் பாதுகாப்புக்கு நிறுத்தியிருந்த போலீசார் மீது கல்வீசினர். போலீசார் வழியில்லாமல் மறியலில் ஈடுபட்டவர்களை தடியடி நடத்தி கலைத்தனர். மாலை 4 மணிக்கு ஜிட்டாண்டஅள்ளி பஸ் ஸ்டாண்டில் சாலைமறியல் செய்தவர்கள் மீதும் போலீசார் தடியடி நடத்தி விரட்டி அடித்தனர். இதில், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சிலர் காயம் அடைந்தனர். இரு இடங்களில் நடந்த தடியடியால் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

ஜாதி பிரச்னையாக உருவெடுக்கும் நிலை: மாணவியை சில்மிஷம் செய்த தலைமையாசிரியர் கைது செய்யப்பட்ட பிரச்னை, இரு சமூகத்தினருக்கான பிரச்னையாக உருவெடுத்துள்ளது. பாதிக்கப்பட்டதாக சொல்லப்படும் மாணவிக்கு ஆதரவாக தலித் அமைப்புகளும், சில அரசியல் கட்சியினரும், தலைமையாசிரியருக்கு ஆதரவாக ஆளுங்கட்சியினரும் களத்தில் குதித்ததால், இப்பிரச்னை நேற்று பெரிய அளவில் உருவெடுத்தது. அரசியல் கட்சியினர் தலையீடு காரணமாக மறியல் நடந்த இடங்களில் போலீசார் நடத்திய பேச்சு வார்த்தை பலன் அளிக்காமல் போனது. இறுதியில் தடியடி நடத்திய பின்னரே மறியல் வைவிடப்பட்டது. இப்பிரச்னை ஜாதிய பிரச்னையாக உருவெடுத்திருப்பதால், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

குறிச்சொற்கள்: , , , , , ,

5 பதில்கள் to “மாணவியை பைக்கில் வைத்து சில்மிஷம் செய்த கல்மிஷம் கொண்ட தலைமை ஆசிரியர்!”

 1. vedaprakash Says:

  சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு போலீஸ் வலை
  பதிவு செய்த நாள் : ஜூலை 13,2010,04:05 IST
  http://www.dinamalar.com/News_Detail.asp?Id=38658

  திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் அருகே சிறுமியை பலாத் காரம் செய்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். திருக்கோவிலூரை அடுத்த எடுத்தனூர் காலனியைச் சேர்ந்தவர் ஆதிமூலம். இவரது மகள் நிவேதா(15), (பெயர் மாற்றப் பட்டுள்ளது). பத்தாம் வகுப்பு முடித்து விட்டு வீட்டில் உள்ளார். கடந்த 6ம் தேதி காலை 9 மணிக்கு வீட்டின் பின்புறம் சென்ற நிவேதாவை அதே ஊரைச் சேர்ந்த பெரியசாமி மகன் திருநாவுக்கரசு (20) திடீரென தாக்கினார். தடுமாறி விழுந்த அவரது கைகளை திருநாவுக்கரசு பின்புறமாக கட்டி வாயில் துணியை வைத்து அடைந்து அருகில் ள்ள கரும்பு தோட்டத்திற்கு தூக்கிச் சென்று பலாத்காரம் செய்துள்ளார்.

  இதனை வெளியில் கூறினால் கொலைசெய்து விடுவதாக மிரட்டிவிட்டுச் சென்றார்.நிவேதா நடந்த சம்பவம் பற்றி பெற்றோர்களிடம் கூறி அழுதார். இது குறித்து நியாயம் கேட்க சென்ற போது நிவேதா குடும்பத்தினரை திருநாவுக்கரசு, அவரது தந்தை பெரியசாமி (42), தாய் காந்தி (39) ஆகியோர் திட்டி தாக்கியதுடன், கொலை மிரட்டல் விடுத்தனர். புகாரின்பேரில் திருக்கோவிலூர் இன்ஸ் பெக்டர் இளங்கோவன், சப்-இன்ஸ்பெக்டர் காமராஜ் ஆகியோர் வழக்குப் பதிந்து பெரியசாமி அவரது மனைவி காந்தி இருவரையும் கைது செய்தனர். தலைமறைவான திருநாவுக்கரசை தேடி வருகின்றனர்.

 2. vedaprakash Says:

  இளம்பெண்ணை கடத்தியவர் கைது
  பதிவு செய்த நாள் : ஜூலை 13,2010,03:15 IST
  http://www.dinamalar.com/News_Detail.asp?Id=38596

  கடலூர்: இளம் பெண்ணை கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.விருத்தாசலம் அடுத்த ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி மகள் மதியழகி (20). இவர் திருப்பூரில் தங்கி பனியன் கம்பெனியில் வேலை செய்து வந்தார். அப்போது அங்கு வேலை செய்த திருவாரூர் மாவட்டம் அன்னவாசல் கிராமத்தைச் சேர்ந்த ரமணி மகன் மோகன் (22) என்பவருக்கும் பழக்கம் ஏற் பட்டது. இதனை அறிந்த சுந்தரமூர்த்தி இரு மாதங் களுக்கு முன் திருப்பூர் சென்று தனது மகள் மதியழகியை அழைத்து வந்து விட்டார். இந்நிலையில் கடந்த மே மாதம் 20ம் தேதி ராமநாதபுரத்தில் வீட்டில் இருந்த மதியழகியை, மோகன் கடத்திச் சென்று விட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் ஆலடி போலீசார் வழக்குப் பதிந்து மோகனை கைது செய்தனர்.

 3. vedaprakash Says:

  ஆசிரியையிடம் ஆபாச பேச்சு: வாலிபர் கைது
  பதிவு செய்த நாள் : ஜூலை 13,2010,03:12 IST
  http://www.dinamalar.com/News_Detail.asp?Id=38592

  சேத்தியாத்தோப்பு: ஆசிரியையிடம் செல்போனில் ஆபாசமாக பேசிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். சேத்தியாத்தோப்பை அடுத்த துறிஞ்சிக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் ஆரோக்கியராஜ். இவரது மனைவி சார்லஸ் மேரி (33). இவர் மஞ்சக்கொல்லை பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவரது மொபைல் போனுக்கு மிராளூரைச் சேர்ந்த சண்முகம் மகன் பழனிச்சாமி (25) என்பவர் ஆபாசமாக பேசினார். இதுகுறித்து ஆசிரியை சார்லஸ் மேரி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து பழனிச்சாமியை கைது செய்தனர்.

 4. vedaprakash Says:

  மனைவியை கொடுமைப்படுத்திய கணவர் கைது; 2 பேருக்கு வலை
  பதிவு செய்த நாள் : ஜூலை 13,2010,03:13 IST
  http://www.dinamalar.com/News_Detail.asp?Id=38594

  சிதம்பரம்: மனைவியை கொடுமைப்படுத்திய கணவரை போலீசார் கைது செய்தனர்.சிதம்பரம் அருகே உத்தமசோழமங்கலத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன் (32). டைலர். இவரது மனைவி மாரிமுத்து. திருமணமாகி ஆறு ஆண்டு ஆகிறது. இந்நிலையில் மனைவி மாரிமுத்துவை அவரது கணவர் லட்சுமணன், மாமனார் பாலசுப்ரமணியன், மாமியார் ராஜலட்சுமி ஆகியோர் துன்புறுத்தினர். இதுகுறித்து மாரிமுத்து கொடுத்த புகாரின் பேரில் சிதம்பரம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிந்து லட்சுமணனை கைது செய்து பாலசுப்ரமணியன், ராஜலட்சுமியை தேடி வருகின்றனர்.

 5. vedaprakash Says:

  கனடா விசாவுக்காக தந்தையையும் மகனையும் மணந்த பெண்
  பதிவு செய்த நாள் : ஜூலை 12,2010,23:07 IST
  http://www.dinamalar.com/News_Detail.asp?Id=38107

  சண்டிகார் : கனடாவில் குடியேறுவதற்காக, தந்தையையும் மகனையும் திருமணம் செய்து ஒரு இளம்பெண் மோசடி செய்துள்ளார். அவர் மீது, மோசடி மற்றும் போலி ஆவணங்கள் கொடுத்து பாஸ்போர்ட் பெற்றது உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

  கனடா வாழ் இந்தியரான ராஜேந்தர் சிங் மான் (60), கடந்த 2001 ம் ஆண்டு கனடாவிலிருந்து, இந்தியா சண்டிகாரில் நிரந்தரமாக குடியேறினார். மேல்தட்டு மக்கள் வசிக்கும் பகுதியில், மிகப்பெரிய வீட்டில் ராஜேந்தர் தனியாக வசித்து வந்தார். கனடா நாட்டைச் சேர்ந்த அவரது மனைவியை அவர் ஏற்கனவே விவாகரத்து செய்துவிட்டார். இந்நிலையில், பிரியா இந்தர் கவுர் என்ற இளம்பெண், அவரது வீட்டில் உள்ள ஒரு போர்ஷனில் வாடகைக்கு குடிவந்தார். ராஜேந்தர் சிங், அவளைப் பற்றிய விவரங்களை வெளியில் விசாரித்தார். எனினும், பிரியா குறித்த முழுமையான தகவல்கள் எதுவும் அவருக்கு கிடைக்கவில்லை. எனவே, அவளை வீட்டை காலி செய்து அனுப்பிவிட்டார். சில மாதங்கள் கழித்து, பிரியா மீண்டும் ராஜேந்தர் சிங்கிடம் வந்து, தனக்கு ஏதாவது வேலை வாங்கித் தருமாறு கேட்டாள். அவள்மீது இரக்கம் கொண்ட ராஜேந்தர் தனக்கு உதவியாளராக வேலைக்கு வைத்துக்கொண்டார்.

  பின்னர், அவர்களுக்குள் நெருக்கம் ஏற்பட, இருவரும் 2001 ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் திருமணம் செய்து கொண்டனர். இதைத்தொடர்ந்து, தன்னை கனடாவுக்கு அழைத்துப் போகுமாறும், அங்கேயே குடியேறிவிடலாம் என்றும் நச்சரிக்கத் தொடங்கினாள். ஆனால், தான் இனிமேல் ஒருபோதும் கனடாவுக்கு திரும்பிச் செல்லப்போவதில்லை என, ராஜேந்தர் உறுதியாக தெரிவித்து விட்டார். கெஞ்சியும், கொஞ்சியும் பார்த்த பிரியா, அவரை கடந்த 2002ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் விவாகரத்து செய்துவிட்டாள். அதன் பிறகு, பிரியாவைப் பற்றி எந்த தகவலும் ராஜேந்தரின் காதுக்கு வரவில்லை. மாற்றம் விரும்பி, ராஜேந்தர் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள தனது மற்றொரு வீட்டில் தங்கியிருந்தார்.

  இந்நிலையில், கடந்த 2004ம் ஆண்டு சண்டிகாரில் உள்ள பழைய வீட்டிற்கு மீண்டும் பிரியா வந்தார். அங்கு ராஜேந்தரின் மகன் ராஜன் மான் இருந்தார். அவர், ராஜேந்தருக்கும், அவரின் கனடா மனைவிக்கும் பிறந்தவராவார். அவர் கனடாவிலேயே படித்து வளர்ந்தவர். அவருக்கு கனடா குடியுரிமை உள்ளது. ராஜனுடன் நட்பை வளர்த்துக் கொண்டு, சில வாரங்களில் அவரை திருமணமும் செய்து கொண்டார் பிரியா. பின்னர், அவரிடமும் தன்னை கனடா அழைத்துப்போக வேண்டும் என்ற வற்புறுத்தினார். இதனிடையே, தனது மகனைப் பார்க்க வந்த ராஜேந்தர், தனது முன்னாள் மனைவி, தனது மகனுக்கு மனைவியாக இருப்பதை கண்டு அதிர்ந்து, எல்லா உண்மைகளையும் ராஜனிடம் கூறினார். இதைத் தொடர்ந்து, ராஜன் தங்களை திருமணம் செய்து ஏமாற்றியதாக போலீசில் புகார் அளித்தார்.

  மேலும், டில்லியில் உள்ள கனடா தூதரகத்தின் மூலம், பிரியா தன்னை ராஜன் மனைவி என்று கூறிக்கொண்டு அந்நாட்டு விசாவுக்காக, போலி ஆவணங்களைக் கொண்டு விண்ணப்பித்துள்ளார். இதுதொடர்பாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், மத்திய பிரதேசத்தில் ஒரு கொலை வழக்கிலும் சம்பந்தப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது. கனடாவுக்குச் செல்ல பிரியா காட்டிய அதீத ஆர்வத்திற்கு என்ன காரணம் என்றும், அவர் தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவளாக இருக்கலாம் என்ற கோணத்திலும், போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: