20ஐ மணந்த 21 வயது மாணவி திருமணம் செல்லாது என பிரிப்பு!


20ஐ மணந்த 21 வயது மாணவி திருமணம் செல்லாது என பிரிப்பு

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=40733

ஆத்தூர்: ஆத்தூர் அருகே திருமண வயதடையாத மாணவனை, கல்லூரி மாணவி திருமணம் செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே கிழக்கு ராஜாபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சகுந்தலா (21, பெயர் மாற்றப்பட்டுள்ளது). அவர் தேவியாக்குறிச்சியிலுள்ள மகளிர் கல்லூரியில் பி.எஸ்சி., படித்து வருகிறார்.தம்மம்பட்டி உலிபுரத்தை சேர்ந்த மாணவர் செந்தில்குமார் (20). அவருடன் பழக்கம் ஏற்பட்டு, காதலித்து வந்தனர்.

கடந்த 11ம் தேதி காதல் ஜோடி சகுந்தலாவும், செந்தில்குமாரும் வீட்டை விட்டு வெளியேறி திருச்சி உச்சிபிள்ளையார் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.பின், காதல்ஜோடி பாதுகாப்பு கேட்டு ஆத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சமடைந்தனர்.காதல் ஜோடி வயது சான்றிதழை போலீஸார் சரிபார்த்து, விசாரணை நடத்தினர். அதில், மாணவி சகுந்தலாவுக்கு திருமண வயதும், மாணவர் செந்தில்குமாருக்கு 20 வயது என்பதும் தெரியவந்தது. திருமண வயதை எட்டாததால் மாணவர் செந்தில்குமாரின் திருமணம் செல்லாது என தெரிவிக்கப்பட்டது.அதை கேட்டு செந்தில்குமாரும், சகுந்தலாவும் அதிர்ச்சிக்குள்ளாகி அழுதனர். இருதரப்பு பெற்றோரிடமும் ஆத்தூர் மகளிர் ஸ்டேஷன் எஸ்.ஐ., வளர்மதி பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின் மாணவி சகுந்தலாவை, அவரது பெற்றோருடன் போலீஸார் அனுப்பி வைத்தனர்.

உசிலம்பட்டி : பதிமூன்று வயதே ஆன சிறுமிக்கு நடக்க இருந்த திருமணத்தை போலீசார் தடுத்து நிறுத்தினர். உடனே பெண் வீட்டார், விழாவை நிச்சயதார்த்தமாக மாற்றினர்.

உசிலம்பட்டி பகுதி கிராமங்களில், சில பிரிவினர் உரிய வயதை எட்டுவதற்கு முன்பு திருமணம் செய்வது வழக்கம். பெண்கள் பூப்பெய்தினால், அடுத்த நடவடிக்கையாக படிப்பை நிறுத்தி விட்டு மாப்பிள்ளை பார்த்து திருமணம் நடத்துகின்றனர். உசிலம்பட்டி அருகே நக்கலப்பட்டியைச் சேர்ந்த மரியராஜ் – காளியம்மாள் தம்பதியரின் மகன்வழி பேரன் தேவராஜ் (27) என்பவருக்கும், மகள்வழி பேத்தி கவுசல்யா (13) என்பவருக்கும் நேற்று திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது. கவுசல்யா எட்டாம் வகுப்பு படிக்கிறார். தேவராஜ் இயந்திர ஆபரேட்டராக பணிபுரிகிறார்.

சிறுமிக்கு திருமண முயற்சி: தடுத்து நிறுத்திய போலீஸ்

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=40187

ஜூலை 15,2010: மணப்பெண்ணிற்கு 18 வயது நிரம்பாத நிலையில் திருமணம் நடக்க உள்ளது குறித்து கிராமத்தைச் சேர்ந்த சிலர், போலீசாருக்கு புகார் அனுப்பினர். உசிலம்பட்டி எஸ்.ஐ., வசந்தி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் திருமண வீட்டிற்கு சென்றனர். மணப்பெண், திருமண வயதை எட்டவில்லை என்பதால் திருமணம் நடத்தக் கூடாது, என, மணமகன், மணமகள் பெற்றோர் மற்றும் திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்களிடம் விளக்கினர். நடக்க இருந்த திருமண விழாவை மாற்றி, நிச்சயதார்த்த விழாவாக நடத்தினர். பெண்ணிற்கு 18 வயது நிரம்பிய பின் திருமணம் நடத்திக்கொள்வதாக உறவினர்கள் உறுதி அளித்தனர்.

குறிச்சொற்கள்: , , , ,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: