ரஞ்சிதா பட்ட வேதனை : நித்யானந்தா மன உருக்கம்!


ரஞ்சிதா பட்ட வேதனை : நித்யானந்தா மன உருக்கம்!

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=45158

நடிகை ரஞ்சிதா நேர்மையான அடக்கமான பெண்: பெங்களூரு ஜூலை 22,2010: நடிகை ரஞ்சிதா நேர்மையான அடக்கமான பெண் என, சாமியார் நித்யானந்தா தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் பெங்களூரு அருகே பிடதியில் ஆசிரமம் அமைத்து யோகக் கலையை போதித்து வருகிறார் நித்யானந்தா, சர்ச்சைக்குரிய வீடியோ காட்சியில் சிக்கி, சிறை சென்றார் இவரது சீடர் ரஞ்சிதா தலைமறைவானார். ஜாமீனில் வெளிவந்துள்ள நித்யானந்தா, ஆன்மிக போதனைகளை செய்ய கோர்ட் அனுமதியளித்துள்ளது.

தவறான பிரசாரத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்: பிடதி ஆசிரமத்தில் நேற்று நித்யானந்தா குறிப்பிடுகையில், “என் மீது செக்ஸ் புகார்கள் கூறப்பட்ட போது, அதைப் பற்றி நான் கவலைப்படவேயில்லை. ஆனால், எனது சீடர்கள் இதனால் பாதிக்கப்பட்டது குறித்து தான் வேதனைப்பட்டேன். குறிப்பாக, ரஞ்சிதா போன்றவர்கள் இந்த புகாரினால் வெகுவாக பாதிக்கப்பட்டார்கள். ரஞ்சிதா நேர்மையானவர், அடக்கமானவர். ஆசிரமத்தில் தலைசிறந்த சேவகியாக இருந்தவர். என்னை தாக்க நினைப்பவர்கள், என்னை பழிதீர்க்க நினைப்பவர்கள் நேரடியாக மோதட்டும். ரஞ்சிதாவுடன் நான் சல்லாபம் செய்வதாக “டிவி’யில் பல மணி நேரம் படம் போட்டு காட்டினார்கள். என் மீது சுமத்தப்பட்டுள்ள கற்பழிப்பு புகார் காரணமாக, 50 நாட்கள் சிறையில் இருந்தேன். அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்து விட்டு போகட்டும். ஆனால், எனது பக்தர்களின் வாழ்வை, தவறான பிரசாரத்தால் பாழாக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். ரஞ்சிதா எனது ஆசிரமத்துக்கு நிறைய பொதுத் தொண்டுகளை செய்துள்ளார். தவறான பிரசாரத்தால் அவரும், அவரது குடும்பத்தாரும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்காக நான் எனது பிராத்தனையையும், வாழ்த்தையும் வழங்குகிறேன். இவ்வாறு நித்யானந்தா கூறினார்.

புலன்களை அடக்குபவர்கள் தவறு செய்யமாட்டார்கள்: புலன்களை அடக்க நினைப்பவர்கள், ஆமைப் போலக் குறுகிவிடுவார்கள். மனத்தை அடக்குபவர்கள், உடலை அடக்கிக் கட்டிப் போட்டுவிடுவார்கள். வயதானாலும், மனத்தில் நல்லெண்ணங்களே இருக்கும். வாழ்நாள் நீட்டிக்க, உடலை நன்றாகக் காத்துவரவேண்டும் என்ற நிலையில், உடலை தன்னிச்சைக்கேற்றபடி விடமாட்டார்கள் துறந்தவர்கள். ஆன்மீகம் என்ற போர்வையில் நாத்திகர்களும், தவறிய ஆத்திகர்களும், எந்த காரணங்களுக்காகவும், தவறன செய்கைகளை நியாயப்படுத்தமுடியாது. பிறகு இந்த நித்யானந்தாவிற்கும், கருணநிதிக்கும் என்ன வித்தியாசம்?

குறிச்சொற்கள்: , , , , , , , ,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: