சத்தியராஜ் கனகவல்லியைத் தாக்கிக் கொலை செய்தது பொருளாதாரக்குற்றமா, சமூகக்குரூரமா, மனிதபயங்கரவாதமா?


சத்தியராஜ் கனகவல்லியைத் தாக்கிக் கொலை செய்தது பொருளாதாரக்குற்றமா, சமூகக்குரூரமா, மனித பயங்கரவாதமா?

வழக்கம் போல, ஊடகங்களில் தரப்படும் விவரங்களில் சில வேறுபாடுகள் காணப்படுகிண்றன. அவை சரி பார்க்கவேண்டியுள்ளது.

Murder-at-Jeer-Mutt-2010

Murder-at-Jeer-Mutt-2010

சேலையூர் அருகே பரபரப்பு[1]

மாலைச்சுடர், Sunday, 25 July, 2010   02:48 PM

சென்னை, ஜூலை 25:சென்னையை அடுத்த சேலையூரில் அகோபிலமடத்தில் திருட வந்த திருடன் ஒருவன், அங்கிருந்த மூதாட்டியை கிணற்றில் தள்ளி கொலை செய்தான்.தண்ணீரில் மூழ்கியதால் அவனும் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தா‌ம்பர‌த்தை அடு‌த்த சேலையூ‌‌ர் பிருந்தாவன் தெருவில் புக‌ழ்பெ‌ற்ற அகோபிலமடம் உ‌ள்ளது. இது 600 ஆ‌ண்டு பழையானது. மு‌ன்னா‌ள் ‌பிரதம‌ர் தேவகவுடா உ‌ள்‌ளி‌ட்ட மு‌க்‌கிய ‌‌பிரமுக‌ர்க‌ள் இ‌ந்த ம‌ட‌த்திற்கு வருவது‌ண்டு.  இந்த மடத்தினை 44வது ஜீயர் நிர்வகித்து வருகிறார். இங்கு பாடசாலை, கல்யாண மண்டபம், தியான மடம் ஆகியன உள்ளது. இந்த மடத்தின் 44வது அழகிய சிங்கர் ஜீயரின் பிறந்த நாள் விழா நடைபெற்று வருகிறது.

இந்த மடத்தின் 44வது அழகிய சிங்கர் ஜீயரின் பிறந்த நாள் விழா நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் கலந்து கொள்வதற்காக சின்ன காஞ்சிபுரத்தைச் சேர்ந்த கனகவள்ளி (வயது 60) மடத்தில் தங்கி இருந்தார். இவரது கணவர் வாசுதேவன் இங்குள்ள பாடசாலையில் வார்டனாக வேலைபார்த்து வருகிறார். இன்று அதிகாலை (25-07-2010) நான்கு மணி அளவில் கனகவள்ளி எழுந்து மடத்தின் முற்றத்தை சுத்தம் செய்து கொண்டிருந்துள்ளார். அப்போது, மர்ம வாலிபர்   ஒருவன் மடத்தின் காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்துள்ளார்.  இதை கண்டதும் கனகவள்ளி திருடன், திருடன் என கூச்சலிட்டுள்ளார்.

உடனே, அந்த மர்ம நபர் கனகவள்ளியை மிரட்டி தூக்கிச் சென்று அருகில் இருந்த கிணற்றுக்குள் வீசியுள்ளார். பின்னர் அந்த வாலிபரும் கிணற்றுக்குள் குதித்து அப்பெண்ணை கத்தியால் குத்தி தண்ணீருக்குள் மூழ்கடித்து கொலை செய்துள்ளார்.இப்பெண்ணின் அலறல் சத்தத்தைக் கேட்டு மடத்தில் தங்கியிருந்தவர்கள் ஓடிச் சென்று கிணற்றுக்குள் எட்டிப்பார்த்துள்ளனர்.

கிணற்றுக்குள் அந்த வாலிபர்  வெளியேற முடியாமல் தண்ணீருக்குள் சிக்கி தவித்துக் கொண்டிருந்தார்.இதை பார்த்தவர்கள் கிணற்றுக்குள் இறங்கி அந்த நபரை மீட்டுள்ளனர். அப்போது கிணற்றுக்குள் கனகவள்ளி  இறந்த நிலையில் பிணமாக கிடந்துள்ளார்.

மர்ம நபரை மீட்ட பொதுமக்கள் அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே அந்த நபர் உயிரிழந்துள்ளார்.இது குறித்து சேலையூர் போலீசுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைவில் வந்து இறந்த கனகவள்ளியின் உடலை பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்த வாலிபரின் பெயர் சத்தியராஜ் (வயது 35) என தெரிய வந்துள்ளது. இவர் எதற்காக மடத்திற்குள் ஏறி குதித்தார்? என்பது குறித்து சேலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இறந்த வாலிபருடன் மேலும் ஒரு நபர் வந்ததாக கூறப்படுகிறது. அவரை பற்றியும் போலீசார் விசாரித்து வருகின்றனர்

ஆனா‌ல் மட‌த்‌தி‌ன் அருகே உ‌ள்ள குடி‌யிரு‌ப்புவா‌சிக‌ள் கூறு‌ம்போது, மட‌த்த‌ி‌ல் ஏராளமான நகை, பண‌‌ம் உ‌ள்ளது. இதனை கொ‌ள்ளையடி‌க்கு‌ம் நோ‌க்‌கி‌ல் ஐ‌ந்‌தி‌ற்கு‌ம் மே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ள் வ‌ந்தாக கூ‌றின‌ர். ஆனா‌ல் இதனை காவ‌ல்துறை‌யின‌ர் உறு‌தி செ‌ய்ய‌வி‌ல்லை[2].

சமீபத்தில் இந்த மடத்திற்கு பக்தர் ஒருவர் தங்கத்தேர் ஒன்றை காணிக்கையாக அளித்துள்ளார். மேலும் மடத்தில் ஏராளமான ஆபரணங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.  ஜீயரின் பிறந்தநாள் விழாவின் போது, இந்த ஆபரணங்கள் வெளியே எடுத்து பூஜைக்கு பயன்படுத்தப்படும் என கூறப்படுகிறது. இதனை கொள்ளையடிக்கும் நோக்கதிலேயே அந்த மர்ம நபர் மடத்திற்குள் ஏறி குதித்து வந்திருக்க வேண்டும் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

சென்னையில் பயங்கரம்-அகோபில மட ஊழியை படுகொலை-கொள்ளையனை அடித்துக் கொன்ற ஊழியர்கள்[3]

Mutt-well-where-the-body-found

Mutt-well-where-the-body-found

ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 25, 2010, சென்னைக்கு அருகே சேலையூரில், அகோபில மடத்திற்குள் புகுந்த கொள்ளையர்கள், அங்கிருந்த பெண் ஊழியர் கனகவல்லியை கத்தியால் குத்திக் கொலை செய்து கிணற்றுக்குள் வீசினர். இதனால் ஆத்திரமடைந்த மட ஊழியர்கள் ஒன்று சேர்ந்து கொள்ளையன் ஒருவனைப் பிடித்து சரமாரியாக தாக்கியதில் அவனும் உயிரிழந்தான்.

சேலையூரில் அகோபில மடம் உள்ளது. பிரபலமான இந்த மடத்தில் 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தங்கியுள்ளனர். இவர்கள் அதிகாலை 3 மணிக்கெல்லாம் எழுந்து தங்களது பணிகளைப் பார்க்க ஆரம்பிப்பார்கள்.

இன்று காலையும் ஊழியர்கள் வழக்கம் போல எழுந்து தத்தமது வேலைகளில் மூழ்கியிருந்தனர். அப்போது கனகவல்லி என்ற ஊழியை, மடத்திற்குப் பின்புறம் கோலம் போட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு திடீரென ஐந்துக்கும் மேற்பட்ட கொள்ளையர்கள் புகுந்தனர்.

இதைப் பார்த்த கனகவல்லி திருடன் திருடன் என கத்தியுள்ளார். இதைப் பார்த்த கொள்ளையர்கள் கனகவல்லியை சூழ்ந்து கத்தியால் சரமாரியாக குத்தினர். இதில் அவர் படுகாயமடைந்தார். பின்னர் கனகவல்லியை தூக்கி அங்கிருந்த கிணற்றில் வீசினர்.

அப்போதும் வெறி அடங்காத கொள்ளையர்களில் சத்தியராஜ் என்பவன் உள்ளே குதித்து கனகவல்லியை நீரில் மூழ்கடித்துக் கொடூரமாக கொன்றான். இந்த சமயத்தில், கனகவல்லி போட்ட சப்தம் கேட்டு மட ஊழியர்கள் ஓடி வந்தனர்.

இதைப் பார்த்த கொள்ளையர்கள் அங்கிருந்து ஓடினர். ஆனால் கிணற்றுக்குள் குதித்த சத்யராஜ் மட்டும் தப்ப முடியாமல் மட ஊழியர்களிடம் மாட்டிக் கொண்டான். கனகவல்லி கொலை செய்யப்பட்டதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள், ஆவேசத்துடன் சத்தியராஜை கடுமையாக தாக்கினர். இதில் அவன் படுகாயமடைந்தான்.

பின்னர் போலீஸாருக்குத் தகவல் தெரியவரவே அவர்கள் விரைந்து வந்து சத்தியராஜை மீட்டு குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சத்தியராஜ் உயிரிழந்தான்.

இந்த சம்பவத்தால் சேலையூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அகோபில மடத்தில் உள்ள பல கோடி மதிப்புள்ள தங்கம், பணம் உள்ளிட்டவற்றை கொள்ளையடிக்கும் நோக்கில் அங்கு கொள்ளையர்கள் புகுந்துள்ளனர்.

கொள்ளைக் கும்பலில் ஐந்து பேர் இருந்ததாக தெரிகிறது. தப்பி ஓடிய கும்பலைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

தேவெ கெளடா வரவிருந்த சமயத்தில் அசம்பாவிதம்

இன்று காலை 7 மணிக்கு இந்த மடத்திற்கு முன்னாள் பிரதமர் தேவெ கெளடா வருவதாக இருந்தது. பிற்பகல் 12 மணியளவில் திரும்பிச் செல்ல அவர் திட்டமிட்டிருந்தார். ஆனால் இந்த அசம்பாவிதம் நடந்து விட்டதால் அவரது பயணம் ரத்து செய்யப்பட்டது.

Mutt-well-where-body-found-NIE

Mutt-well-where-body-found-NIE

சென்னை மடத்தில் பெண் கொலை

சென்னை : சென்னை அருகே உள்ள சேலையூரில் உள்ள அகோபில மடத்தில் பணிபெண் ஒருவர் கொள்ளையர்களால் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது[4]. அகோபில மடத்தில் இன்று அதிகாலை மர்ம நபர்கள் சிலர் கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர். அப்போது மடத்தில் பணியாற்றும் கனகவள்ளி என்ற பெண்ணிடம் கொள்ளையர்களில் ஒருவன் நகையை பறிக்க முயற்சி செய்துள்ளான். கனகவள்ளி சத்தமிட்டதால், அவரை கொலை செய்து அருகில் இருந்த கிணற்றில் வீசி உள்ளான். கொள்ளை கும்பலைச் சேர்ந்த சத்தியராஜ் என்பவனை மட்டும் பொதுமக்கள் விரட்டிப் பிடித்துள்ளனர்.பொதுமக்கள் தாக்கியதில் சத்தியராஜ் .யிரிழந்துள்ளான். இந்த கொள்ளை மற்றும் கொலை சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது. இதனால் அகோபில மடத்திற்கு இன்று வருவதாக இருந்த முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Jeer-mutt-murder-for-gain-NIE

Jeer-mutt-murder-for-gain-NIE


[1] http://www.maalaisudar.com/newsindex.php?id=34982%20&%20section=1

[2] http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/1007/25/1100725025_1.htm

[3] http://thatstamil.oneindia.in/news/2010/07/25/chennai-salaiyur-ahobilam-mutt-burglary-murder.html

[4] தினமலர், சென்னை மடத்தில் பெண் கொலை, ஜூலை 25,2010,

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=46991

குறிச்சொற்கள்: , , , , , , , ,

6 பதில்கள் to “சத்தியராஜ் கனகவல்லியைத் தாக்கிக் கொலை செய்தது பொருளாதாரக்குற்றமா, சமூகக்குரூரமா, மனிதபயங்கரவாதமா?”

 1. vedaprakash Says:

  Robber kills woman at Sri Ahobila Mutt

  Special Correspondent, The Hindu dated Monday, Jul 26, 2010

  http://www.hindu.com/2010/07/26/stories/2010072658990200.htm

  TAMBARAM: An elderly woman died after a robber stabbed and pushed her into a well inside the Sri Ahobila Mutt in East Tambaram early on Sunday morning.

  The robber, who also fell into the well, died after he sustained injuries and when he was beaten up by angry staff of the Mutt.

  The incident sent shockwaves in East Tambaram, especially among the hundreds of devotees who had gathered at the Mutt for taking part in the on-going festivities.

  Kanagavalli (69), was from Kancheepuram and her husband, Vasudevan (72) was the warden of the hostel for students pursuing Vedic education at the patasala run by the Mutt. Kanagavalli would visit the Mutt in East Tambaram, whenever the pontiff (jeer) would camp.

  Mutt authorities said Kanagavalli would volunteer to clean the jeer’s quarters, draw ‘kolams’ and also help in preparing food.

  On Saturday night, she slept at the mandapam and woke up at 3 a.m on Sunday. She had swept the jeer’s quarters and was mopping it, when at around 4.30 a.m., a man scaled over the compound wall from the rear side of the Mutt.

  Noticing the robber, she raised an alarm. He pulled out a knife and stabbed her. Police said the robber snatched ear rings, nose studs and other jewellery worn by Kanagavalli.

  Cries for help

  Listening to the cries for help, Bashyam, secretary to the jeer, rushed to the quarters and noticed the robber attacking Kanagavalli.

  Mohammed Ghori, Assistant Commissioner of Police, Selaiyur Range, told reporters that the robber caught hold of Kanagavalli and jumped into the well along with her. The well measured around four feet in diameter.

  He is reported to have pushed Kanagavalli’s face into the water, when she drowned.

  Bashyam called out for help and a group of Mutt staff and devotees rushed to the well. They first managed to pull out the robber out of the well. The robber threatened them with a knife. However, he was overpowered and tied up with a rope and was beaten up. Meanwhile, one of the temple staff jumped into the well and pulled out Kanagavalli’s corpse..

  Information reached Selaiyur police station and when they reached the spot, the robber was struggling for life. He was taken to a local clinic and later shifted to a private hospital in Pallikaranai, where he died.

  Police refuted reports that the robber was first brought to the Selaiyur police station on a motorcycle for questioning. He was taken straight for medical attention, they added. Kanagavalli’s body was taken to Tambaram Taluk Government Hospital at Chromepet, where the robber’s body too was shifted from the private hospital.

  The exact cause of the robber’s death could be ascertained only after post-mortem, police said, adding they were yet to establish his identity. However, the robber is reported to have told policemen while being shifted to the hospital that his name was K. Sathyaraj, that he was 35 years old and hailed from Madurantakam in Kancheepuram district. They were yet to confirm it.

  The jeer, Sri Narayana Yathindra Mahadesikan, has been camping at the Mutt to take part in festivities organised every year during the Tamil month of ‘aadi.’ This is a branch of the famed, centuries-old Ahobila Mutt.

 2. vedaprakash Says:

  சேலையூர் அகோபில மடத்தில் பெண்ணை கிணற்றுக்குள் தள்ளி கொலை – விடுதலை – 26-07-2010
  http://www.viduthalai.periyar.org.in/20100726/news32.html

  தாம்பரம், ஜூலை 26 சென்னையை அடுத்த சேலையூரில் உள்ள அகோ பில மடத்தில் புகுந்த கொள்ளையன் அங்கி ருந்த பெண்ணிடம் நகையை பறிக்க முயன்ற போது அவர் தர மறுத்த தால் அந்த பெண்ணை கத்தியால் குத்தி கிணற் றில் தள்ளி கொலை செய்தான்.

  பின்னர் கிணற்றில் விழுந்ததால் காயம டைந்த கொள்ளையனும் இறந்தான்.

  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:

  ஆந்திர மாநிலம் அகோ பிலத்தில் அகோபிலமடம் தலைமையகம் உள்ளது. இந்த மடத்தின் 45 ஆவது ஜீயராக சிறீ நாராயண யதிந்தா மகா தேசிகர் உள்ளார்.

  தமிழகத்தில் 25க்கும் மேற்பட்ட இடங்களில் அகோபில மடங்கள் உள் ளன.

  தாம்பரம் அருகே சேலையூர் காவல் நிலை யம் பின்புறம் ஆர்த்தி நகரில் அகோபில மடத் தின் கிளை உள்ளது. இங்கு வேதபாடசாலை உள்ளது. வேதம் கற்பவர் கள் இங்கு தங்கியுள்ள னர். அகோபில மடத்தின் 44 ஆவது ஜீயரின் பிறந்தநாள் நினைவுவிழா 2 நாள்கள் நடைபெறு கிறது. இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக 45 ஆவது ஜீயர் சேலை யூரில் உள்ள அகோபில மடத்திற்கு வந்து தங்கி யுள்ளார்.

  அகோபில மடத்தில் உள்ள வேதபாடசாலை யில் சின்ன காஞ்சீபுரம் பிருந்தாவன் தெருவைச் சேர்ந்த வாசுதேவன் கடந்த 7 வருடமாக வார் டனாக வேலை பார்த்து வந்தார்.

  ஜீயர் சேலையூர் மடத் திற்கு வந்து தங்கும் பொழுது வாசுதேவனின் மனைவி கனகவல்லி மடத்தில் தங்கி ஜீயருக்கு சமையல் செய்வது, மற் றும் பணிவிடை செய் வது வழக்கம். ஜீயர் தற் போது சேலையூர் மடத் திற்கு வந்துள்ளதால் கன கவல்லி அங்கு தங்கி பணி களை செய்து வந்தார்.

  நேற்று அதிகாலை 5 மணிக்கு மடத்தில் ஜீயர் தங்கியிருந்த அறை அருகே கனகவல்லி, தரையை சுத்தம் செய்து கோலம் போடும் பணியில் ஈடு பட்டிருந்தார். அப்போது ஓர் ஆசாமி, உடல் முழு வதும் எண்ணெயைத் தடவிக்கொண்டு, ஜட்டி மட்டும் அணிந்த நிலை யில் மடத்தின் பின்புறம் உள்ள 7 அடி உயர மதில் சுவரை தாண்டி மடத் தின் வளாகத்துக்குள் குதித்தான்.

  பின்னர் அவன், தரையை பெருக்கிக் கொண்டிருந்த கனகவல்லியின் பின்னால் வந்து அவரது கழுத்தை நெரித்தான். அவன், கன கவல்லி கழுத்தை நெரித்த படி அவரது நகைகளை கழற்றச் சொல்லி மிரட்டி னான்.

  இதனால் கனகவல்லி பயந்து போய், திருடன், திருடன் என்று கத்தி னார். உடனே அந்த மனிதன் கனகவல்லியை கத்தியால் குத்தினான்.

  கனகவல்லி தொடர்ந்து சத்தம் போட்டதால், அந்த மனிதன் கனகவல் லியை, அருகில் ஜீயர் மட்டும் குளிக்க பயன் படுத்தும் கிணற்றுக்குள் தூக்கிப்போட்டான்.

  கிணற்றில் விழுந்த கனகவல்லியின் அலறல் சத்தம் கேட்டு ஜீயரின் உதவியாளர் பாஷ்யம் ஜீயருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டு விட்டதோ என பதறியபடி, அவர் அறைக்குச் சென்று பார்த்தார்.

  அங்கு ஜீயர் தூங்கிக் கொண்டிருந்ததால் வெளியே வந்து சத்தம் கேட்ட கிணற்றுப் பகு திக்கு ஓடி வந்தார்.

  கிணற்றில் தூக்கி வீசப் பட்ட கனகவல்லி, உயி ருக்கு போராடியபடி கிணற்றில் தண்ணீரில் மிதந்தவாறு “காப்பாற் றுங்கள், காப்பாற்றுங் கள்” என அபயக்குரல் எழுப்பினார்.

  அவரது அலறல் சத் தம் கேட்டு மடத்தில் ஜீயருக்கு பாதுகாப்பிற்கு இருந்த காவலர், மற்றும் மடத்தின் முன்பகுதியில் இருந்த காவலாளிகள், மடத்தில் இருந்த மாண வர்கள் ஆகியோர் கிணற் றுப் பகுதிக்கு ஓடி வந்த னர்.

  அவர்கள் வருவதைப் பார்த்ததும், கொள் ளையன், திடீர் என்று அதே கிணற்றில் குதித் தான்.

  கிணற்றில் விழுந்த அவன், அங்கு கயிற்றைப் பிடித்துக்கொண்டு சத்தம் போட்டுக் கொண்டு இருந்த கனக வல்லியால் பிடிபட்டு விடுவோம் என நினைத்து, கனகவல்லியின் தோள் பட்டை மீது ஏறி இரண்டு கால்களால் கனகவல் லியை நீரில் அமுக்கிக் கொண் டிருந்தான்.

  அப்போது கனகவல் லியை காப்பாற்ற வந்த வர்கள் அவரை விட்டு விடும்படி கெஞ்சினர். அதற்குள் அந்தக் கொள் ளையன் கனகவல்லியை நீரில் மூழ்கச்செய்து கொலை செய்துவிட்டான்.

  கிணற்றுக்குள் விழுந் ததால் கொள்ளையனும் காயமடைந்து இருந்தான்.

  உடனே அங்கிருந்த வர்கள் கிணற்றில் கயிற் றில் தொங்கியபடி இருந்த கொள்ளையனை கிணற்றில் இருந்து வெளியே எடுத்தனர்.

  அப்போது கொள்ளை யன் அங்கிருந்தவர்களை தாக்கி தப்பி ஓட முயற்சி செய்தான். உடனே மேலும் பலர் கும்பலாக சேர்ந்து கொள்ளையனை மடக்கிப் பிடித்தனர்.

  கொள்ளையன் உடல் முழுவதும் எண்ணெய் தடவி இருந்ததால் அவ னைப் பிடித்து கட்டி வைப்பதில் சிரமம் ஏற் பட்டது. இருந்தபோதி லும் பலர் சேர்ந்து அவனைப் பிடித்துக் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் இதுபற்றி சேலையூர் காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர்.

  கிணற்றில் குதித்த போது காயமடைந்த கொள்ளையனை சேலையூர் காவல் துறை யினர் விசாரித்தபோது தன்னுடைய பெயர் சத்ய ராஜ் என்றும் மதுராந்த கத்தை சேர்ந்தவன் என் றும் கூறினான்.

  படுகாயத்துடன் உயி ருக்குப் போராடிய கொள்ளையனை பள் ளிக்கரணையில் உள்ள தனியார் மருத்துவம னைக்கு காவல்துறை யி னர் கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பல னின்றி கொள்ளையனும் இறந்தான்.

  இதுபற்றி காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

 3. K. Venkatraman Says:

  As expected, within few days, the whole affair would be forgotten, but how the soft targets are identified and attacked?

  Why such angle is not probed by the investigative agencies and the police?

 4. M. Dhandayuthapani. Says:

  When croes of monety have been pumped by Karunanidhi, it is ironical that this man should have chosen to go in his own way, instead of joining with others!

 5. குறிப்பிட்ட பகுதியில் வயதான பெண்மணிகள் கொலை செய்யப் படுவது ஏன்? « பெண்களின் நிலை Says:

  […] [1] https://womanissues.wordpress.com/2010/07/26/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E… […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: