எறும்புகள் மொய்க்க, பெண் சிசு ரோட்டில் வீசப்பட்ட பரிதாபம்! இன்ப திராவிட நாட்டில் அவலம்!!


எறும்புகள் மொய்க்க, பெண் சிசு ரோட்டில் வீசப்பட்ட பரிதாபம்! இன்ப திராவிட நாட்டில் அவலம்!!

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=50161

கூட்ரோடில் கிடந்த குழந்தை: மேலூர் : பிறந்து ஒருவாரமே ஆன பெண் குழந்தை, மதுரை – மேலூர் நான்கு வழிச்சாலை ஓரத்தில் வீசப்பட்டது. ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட அந்தக்குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. நான்கு வழிச்சாலையில் மேலூருக்கு திரும்பும் இடத்தில் உள்ள வாழை தோட்டத்தில் கிணறு தோண்டியபோது எடுக்கப்பட்ட கற்கள் குவிக்கப்பட்டுள்ளன. நேற்று அதிகாலை அதற்குள் இருந்து பச்சிளம் குழந்தையின் அழுகுரல் கேட்டது. அருகில் இருந்தவர்கள் சென்று பார்த்தனர். இரு புறமும் பாறாங்கற்கள் வைக்கப் பட்டு, அதன் நடுவில் குழந்தை பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. அதை அகற்றி பார்த்த போது, எறும்புகள் மொய்த்த நிலையில் காயங்களுடன், ஒல்லியான பெண் சிசு இருந்தது. அரசின் “108′ இலவச ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சுரேஷ், விமல், சரவணன் மேலூர் அரசு ஆஸ்பத்திரியில் குழந்தையை சேர்த்தனர்.

சிகிச்சையளித்த டாக்டர்கள் கூறியதாவது: இக்குழந்தை பிறந்து ஒரு வாரமே ஆகி உள்ளது. மேற்புறமாக கல் அழுத்தி உள்ளதால் முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. வலது கால் உடைந்துள்ளதாக தெரிகிறது. முதலுதவி சிகிச்சைக்கு பின், மதுரை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக குழந்தை அனுப்பப் பட்டுள்ளது, என்றனர்.

மனிதாபிமானமற்ற பெற்றோர் யார்?: நான்கு வழிச்சாலையில் வழியாக பயணம் செய்த யாரோ தான் இப்படி குழந்தையை போட்டு விட்டு சென்றிருக்க வேண்டும். குழந்தையின் கை மற்றும் காலில் கண்மை இடப்பட்டு உள்ளது. ஆசையுடன் கொஞ்சிய பச்சிளம் குழந்தையை இப்படி வீசியதற்கு பதில் அரசு தொட்டிலில் சேர்த்து இருக்கலாமே.

ஏன் வேண்டும் இந்த இன்ப திராவிடம்? இது முரசொலி மாறன் “திராவிட நாடு” கேட்டு எழுதிய புத்தகம்! திராவிட நாடு கிடைக்கவிட்டாலும், திராவிட நாட்டில் என்ன கிடைக்குமோ, அது கிடைத்துக் கொண்டிருக்கிறது. என்ன நடக்குமோ நடந்து கொண்டிருக்கிறது. இந்த திராவிட நாட்டை யாரும் காப்பாற்ற முடியாது! “ஆண்டவனால்” என்றும் சொல்லமுடியாது, ஏனெனில் “ஆண்டவனிடம்” நம்பிக்கையில்லை, இந்த “ஆள்பவர்களிடமும்” மக்களுக்கு நம்பிக்கை இல்லை! வாழ்க திராவிடம், இன்ப திராவிடம்!!

குறிச்சொற்கள்: , , , , , ,

9 பதில்கள் to “எறும்புகள் மொய்க்க, பெண் சிசு ரோட்டில் வீசப்பட்ட பரிதாபம்! இன்ப திராவிட நாட்டில் அவலம்!!”

 1. ramasamy nayakkan Says:

  kadumaiyaana vilaivaasi uyarvaal kashappadum oru keezh jathi thaay thaan indha kudumaiyai seythu irukka vendum.

  • vedaprakash Says:

   “கடுமையான விலைவாசி உயர்வால் கஷ்டப்படும் ஒரு கீழ் ஜாதித் தாய் தான் இந்த கொடுமையை செய்து இருக்க வேண்டும்”, என்று உங்களது கருத்தைப் பதிவு செய்திருக்கிறீர்கள்.

   தாயில் ஜாதி பார்க்கவேண்டிய அவசியம் தேவையில்லை, ஏனெனில், எந்த தாய்க்கும், குழந்தை, குழந்தைதான்.

   மற்ற (சொல்லக்கூடாத / முடியாத) காரணங்கள் இருக்கக்கூடும்.

   விலைவாசிக்கும், அச்செயலுக்கும் சம்பந்தம் இல்லை. ஏழைத்தாய்களும் தங்கள் குழந்தைகளை வளர்க்கத்தான் செய்கிறார்கள்.

 2. M.S.M. Rizan Says:

  May be she is mentally sick person

  M.S.M. Rizan
  Colombo

 3. ஜெகதீஸ்வரன் Says:

  நாடு எங்கோ போய்க்கொண்டிருக்கிறது,

  – ஜெகதீஸ்வரன்.
  http://sagotharan.wordpress.com/

 4. M.S.M. Rizan Says:

  Naadu Engayum pohamal irrukka viyahukolla nattu makkal than paathukaka vendum.

  Rizan
  Colombo
  Sri Lanka

 5. M. Dhandayuthapani. Says:

  What happened to the “cradle scheme” stareted by Jayalalita?

  Perhaps, Karunanidhi does not continue it or, he may start in his own scheme with his wives or daughters?

 6. Rajan Gurukkal Says:

  Loooking the whole issue with other happenings, the vulgarity of women, degradation of women, disrespect for womanhood and other factors have only brought this type of pitiable condition in TN.

  On idiot box, you can see only filthiness that abuses womanhood and no decent or straight forward lady questions about such prostitution carried on in the programs though jokes, dramas, serials, cinemas and dialogues.

  Unfortunately, the dedraded cinema fellows, third rated actors, but awarded with PadmaShri and all, are coming the deemed / doomed Universities and give lectures to the present generation. Ironically, they are also given hon,doctorates degrading its value.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: