கள்ளக்காதலில் கொலைகள் அதிகமாம்: குஷ்புவிற்கும், மற்றவர்களுக்கும் நன்றி சொல்லவேண்டும் தமிழர்கள்!


கள்ளக்காதலில் கொலைகள் அதிகமாம்: குஷ்புவிற்கும், மற்றவர்களுக்கும் நன்றி சொல்லவேண்டும் தமிழர்கள்!

எட்டு மாதத்தில் 224 பேர் கொலை: கள்ளக்காதலில் தீர்த்துக்கட்டியது அதிகம்[1]: “தமிழக மேற்கு மண்டலத்தில் கடந்த எட்டு மாதங்களில் 224 கொலைகள் நிகழ்ந்துள்ளன. இவற்றில், பெரும்பாலான கொலை சம்பவங்கள், சொத்து தகராறு மற்றும் கள்ளக்காதல் உள்ளிட்ட பாலியல் தொடர்பு காரணமாக நிகழ்ந்துள்ளன,” என்று, ஐ.ஜி., சிவனாண்டி தெரிவித்தார்.

அவர், கோவையில் நேற்று அளித்த பேட்டி: கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை உள்ளடக்கிய தமிழக மேற்கு மண்டலத்தில் குற்றத்தடுப்பு மற்றும் விபத்து தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன்விளைவாக நடப்பு ஆண்டில் திருட்டு, வழிப்பறி, கொள்ளை உள்ளிட்ட குற்றங்களும், சாலை விபத்துகளும் குறைந்துள்ளன. பெருங்குற்றங்கள் தொடர்பாக கடந்த 2007ம் ஆண்டில் 3,523 வழக்குகளும், 2008ல் 4,428 வழக்குளும், 2009ம் ஆண்டில் 3,750 வழக்குகளும் பதிவாகின. நடப்பு ஆண்டில் இதுவரை 2,220 வழக்குகள் பதிவாகியுள்ளன. பெரும்பாலான வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, களவுச் சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன. மேற்கு மண்டலத்தில் பதிவாகும் மொத்த குற்ற வழக்குகளில் 30 சதவீதம், திருப்பூர் மாவட்டத்தில் மட்டுமே பதிவாகின்றன. அங்கு குற்றத்தடுப்பு நடவடிக்கையை வேகப்படுத்தப்பட்டுள்ளது.  திருப்பூருக்குள் நுழையும் மிக முக்கிய சாலைகளில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் வாகன சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் காரணமாக, சமீபகாலமாக பெருங்குற்றங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. பிற மாவட்டங்களிலுள்ள கிரிமினல்களும் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளனர். கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை பதிவான குற்ற வழக்குகளில் 70 சதவீதம் கண்டுபிடிக்கப்பட்டு, குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆறு கோடி ரூபாய் மதிப்பிலான களவுச் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன. அதே போன்று, சாலை விபத்து தடுப்பு நடவடிக்கையும் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

சாலை விபத்துகள்: கடந்த 2007ம் ஆண்டில் 13 ஆயிரத்து 250 சாலை விபத்துகளும், 2008ல் 14 ஆயிரத்து 400 விபத்துகளும், 2009ல் 14 ஆயிரத்து 500 விபத்துகளும், நடப்பு ஆண்டில் இதுவரை 8,589 விபத்துகளும் நிகழ்ந்துள்ளன. நடப்பு ஆண்டில் நடந்த சாலை விபத்துகளில் இதுவரை 2019 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்துகளை தடுக்க சரக்கு வாகன டிரைவர்கள், அரசு மற்றும் தனியார் பஸ் டிரைவர்களை மாவட்டம் வாரியாக அழைத்து ஆலோசனை நடத்தவுள்ளோம். வாகனங்களை பாதுகாப்பான முறையில் இயக்க போதிய அறிவுரைகள், டிரைவர்களுக்கு வழங்கப்படும்.

224 பேர் கொலை: மேற்கு மண்டலத்தில் கடந்த 2007ம் ஆண்டில் 331 கொலைகளும், 2008ல் 335 கொலைகளும், 2009ல் 333 கொலைகளும் நடந்துள்ளன. நடப்பு ஆண்டில் இதுவரை 224 கொலைகளும் நிகழ்ந்துள்ளன. இவற்றில், பெரும்பாலான கொலை சம்பவங்கள், சொத்து தகராறு காரணமாக நிகழ்ந்துள்ளன. அடுத்ததாக காதல், கள்ளக்காதல் உள்ளிட்ட பாலியல் தொடர்பாகவும், கொள்ளையடிக்கும் நோக்கத்துடனும், வாய்த்தகராறு காரணமாகவும் நிகழ்ந்துள்ளன. இவற்றில் பெரும்பாலான வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுவிட்டனர். விசாரணை நிலுவையிலுள்ள மற்ற வழக்குகளிலும் குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது”,  இவ்வாறு, ஐ.ஜி., சிவனாண்டி தெரிவித்தார்.

மத நல்லிணக்க முயற்சி : ஐ.ஜி., சிவனாண்டி கூறியதாவது: “விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு மேற்கு மண்டலத்தில் 3,600 சிலைகளை வைத்து பிரதிஷ்டை நடத்த பல்வேறு அமைப்புகள் அனுமதி கோரியுள்ளன. கோவையில் 815, நீலகிரியில் 460, திருப்பூரில் 810 சிலைகள் முறையே வைத்து வழிபட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் விசர்ஜன ஊர்வலத்தின் போது பாதுகாப்பு பணியில் 10 ஆயிரம் போலீசார் ஈடுபடுவர். இவ்விழாவின் போது அமைதி நிலவ மாற்று மதத்தினரின் ஒத்துழைப்பு கோரப் பட்டுள்ளது. சமீபத்தில், ஒசூரில் நடந்த மத நல்லிணக்க ஆலோசனை கூட்டத்தில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ பிரமுகர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். விநாயகர் சதுர்த்தி விசர்ஜன ஊர்வலத்தின் போது, மாற்று மத தலைவர்கள், பிரமுகர்கள் வழியில் நின்று வாழ்த்து தெரிவித்து நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் முயற்சி மேற்காள்ளப்பட்டுள்ளது”, இவ்வாறு, சிவனாண்டி தெரிவித்தார்.


[1] தினமலர், எட்டு மாதத்தில் 224 பேர் கொலை: கள்ளக்காதலில் தீர்த்துக்கட்டியது அதிகம், பதிவு செய்த நாள் : செப்டம்பர் 08,2010,23:30 ; மாற்றம் செய்த நாள் : செப்டம்பர் 09,2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=80643

Advertisements

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , ,

9 பதில்கள் to “கள்ளக்காதலில் கொலைகள் அதிகமாம்: குஷ்புவிற்கும், மற்றவர்களுக்கும் நன்றி சொல்லவேண்டும் தமிழர்கள்!”

 1. Rajan Gurukkal Says:

  He has given figures only for the west Tamilnadu.

  Then what about the figures of other parts of TN?

  That the murders for sex increases proves the degraded state of TN, mainly due to the third rated cine film field.

  During the 5 – 10 years, the TN cine field could ghave produced more prostitutes than good actresses and that is why the Tamil actresses have been so furious about Buwaneshwari.

  Of course, Kushbhoo has come to testify just like ISO 909999 for cine field and particularly testify about the chastity.

  Ironically, she comes for AIDS, breast feeding and so many things.

  Really, the TN should get such type of women nowadays!

  • vedaprakash Says:

   Yesterday, on one TV channel, this characterless woman and some youth were shamelessly discussing about kissing in the public.

   This lady was asking whether the kissing in the public would be on the lips, cheeks, or………………….and so on!

   So such type of woman / lady is projected as role model in the media.

   How, then the society would survive escaping from these social terrorists?

 2. K. Venkatraman Says:

  When the whole TN has been thriving only on cinema, what else the people would do?

  The poor people drink, enjoy vulgar movies and look for women during nights.

  The psyche works with others also in the same way, but with the variance.

  Therefore, ultimatley, Khusbhoo formular works and Kanimozhi’s egalitarianism clicks, with the increase of consumption of liquor, brothels and crimes.

 3. Anjali Says:

  There is lot of pornographic contents from tamil nadu released in internet…. tamil nadu government doesnot ban or moved any steps to ban the pornogrpahic contents.. most of the pornography are because of mobile phones … second problem is culture demorality shows in movies and worst case in even in serials too…
  third cases are infotech companies providing direst western culture among its workers.. who are engaged in demoral activitities… in future these kinda murders may increase…..

  • vedaprakash Says:

   உங்களது கருத்துப் பதிவிற்கு நன்றி:

   1. There is lot of pornographic contents from tamil nadu released in internet….
   இணைதளத்தில் தமிழகத்திலிருந்து அதிக அளவில் பாலியல் விவரங்கள் தரவிரக்கப்பட்டுள்ளன.

   2. tamil nadu government doesnot ban or moved any steps to ban the pornogrpahic contents..
   தமிழக அரசு அதை தடை செய்யவோ அல்லது எடுத்து விடவோ, எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.

   3. most of the pornography are because of mobile phones …
   அத்தகைய பாலியல் விவரணங்கள் பரவுவதற்கு, கைப்பேசிகளே காரணம்….

   4. second problem is culture demorality shows in movies and worst case in even in serials too…
   இரண்டாவது பெரிய பிரச்சினையாவது, கலாச்சாரச் சீரழிவு – அது சினிமாக்களிலும் சின்னத்திரைகளிலும் காட்டப்படுகிறது.

   5. third cases are infotech companies providing direst western culture among its workers.. who are engaged in demoral activitities…
   முன்றாவதான சீரழிவு ஐ.டி.கம்பெனிகள் மூலம் அதாவது, அவை தம்முடைய மேனாட்டு கலாச்சாரத்தை தமது ஊழியர்களிடம் திணிக்கும் போது ஏற்படுகிறது. அவ்வூழியர்களும் பிறகு கலாச்சார சீரப்பழிப்பாளர்களாகிறார்கள்.

   6. in future these kinda murders may increase…..
   வருங்காலத்திலும், இத்தகைய கொலைகள் அதிகமாகக் கூடும்………

   அருமை, இவ்விவரங்களை வைத்துக் கொண்டு, ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையே எழுதிவிடலாம்.

   மற்ற விஷயங்களிலும், உங்காளது கருத்துகள் வரவேற்க்கப்படுகின்றன.

  • vedaprakash Says:

   I appreciate your concern, please continue.

 4. அருண்முல்லை Says:

  குஷ்புவின் தத்துவம் நீலநரியின் கதையைத்தான் நினைவூட்டுகிறது.
  அவர்பணியாற்றும் துறைக்குத்தான் அதுபொருந்தும்.

 5. anjali Says:

  Thanks for the comments on my comments here. Thiru Veda Ayyah. I am planning to write more on it, but could not able to spent time on to research an write more. My friends have been asking me to write for their sites, but not yet planned for it. Might be in coming months i ll decided. any how. we should ban these pornography in India…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: