அக்னி சேத்திரத்தில் நடந்த பெண் எரிக்கொலை: ஆண்டவனுக்கு பொறுக்குமா?


அக்னி சேத்திரத்தில் நடந்த பெண் எரிக்கொலை: ஆண்டவனுக்கு பொறுக்குமா?

 

கணவனை இழந்த மனைவியின் கள்ள உறவு: கணவனை இழந்த பெண்கள் ஒன்று கட்டுப்பாட்டோடு இருக்க வேண்டும். இலை நாகரிகத்தின் பாதையைப் பின்பற்றுவதானால், மறுபடியும் திருமணம் செய்து கொண்டு வாழ வேண்டும். இரண்டும் இல்லாத நிலையில் இருந்த பெண்ணின் முடிவுதான் இது. ஆசைக்கு இணங்க மறுத்த பெண்ணை ஒருவர் உயிரோடு தீவைத்து எரித்துக் கொன்ற கொடூர சம்பவம் திருவண்ணாமலை அருகே நடந்துள்ளதாம். திரிவண்ணாமலை கார்த்திகை தீபம், கிரிவலம் என்று அமர்க்ல்களப்பட்டுக் கொண்டிருக்கும் வேலையில் இப்படியொரு காமதீபம் எரியூட்டல்!

வளர்ந்த பிள்ளைகள் இருக்கும் போது, எதற்கு காமம்? திருவண்ணாமலை அருகே நாராயணமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் அஞ்சலை. 45 வயதான இவரது கணவர் 15 ஆண்டுக்கு முன்பே இறந்து விட்டார்.  அஞ்சலைக்கு ஒரு மகன் விஜயகுமார் (25), ஒரு மகள் ரேவதி (22) உள்ளனர்[1]. ரேவதிக்கு 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. விஜயகுமாருக்கு திருமணமாகவில்லை.அஞ்சலைக்கும், காசி என்பவருக்கும் இடையே தொடர்பு இருந்து வந்துள்ளது. இருவரும் கணவன் மனைவி போல் வாழ்ந்து வந்துள்ளனர். இங்கு தானே பிரச்சினை! தனது மகளின் 3 பவுன் நகையை காசி எடுத்து விற்று விட்டதை அறிந்தார் அஞ்சலை. சரசமாட வரும்போது, உருவிவிட்டார் போலும்!! இதனால் காசி மீது கடும் கோபம் கொண்டார். இது தொடர்பாக அஞ்சலத்திற்கும், காசிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது[2].

கள்ள உறவு என்று இருக்கும் போது, மகன் சபரி மலைக்குச் சென்றால் என்ன, எந்த மலைக்குச் சென்றல் என்ன? மகன் இந்த நிலையில் அஞ்சலையின் மகன் விஜயக்குமார் சபரிமலைக்கு போயுள்ளார். இந்த நேரம் பார்த்து வீட்டுக்கு வந்த காசி, அஞ்சலையை தன் ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால் மகன் சபரிமலைக்குப் போயிருக்கும் நேரத்தில் இது கூடாது என்று அஞ்சலை மறுத்துள்ளார்.  தனது மகன் சபரிமலைக்கு சென்று வந்தபிறகு உல்லாசமாக இருக்கலாம் என்று கூறி மறுத்துள்ளார். இதனால் அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது[3].  கள்ள உறவுக்கென்ன நியாயம், தர்மம், சாத்திரம்? இதெல்லாம் பார்க்காத நிலையில் தானே, உறவு இருந்துள்ளது?

கள்ள உறவு கொண்ட ஆணின் சீற்றம் எரித்து விட்டது: காமத்தீ கொண்ட காமுகனுக்கு என்ன சாத்திரம்? இதனால் கோபமடைந்த காசி வீட்டில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து அஞ்சலை மீது ஊற்றி தீவைத்து விட்டார். தீக்காயம் பட்டு துடித்த அஞ்சலையை அக்கம் பக்கத்தில் இருந்தோர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தன்னை காசிதான் தீவைத்துக் கொளுத்தியதாக வாக்குமூலம் அளித்தார் அஞ்சலை. இதையடுத்து கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்த போலீஸார் காசியைக் கைது செய்தனர்[4]. இந்த நிலையில் அஞ்சலை இறந்து விட்டதால் அவரது வாக்குமூலத்தை மரண வாக்குமூலமாக மாற்றி காசி மீதான வழக்கையும் கொலை வழக்காக போலீசார் பதிவுசெய்தனர்.

நவீன மனுக்கள், மனுவாதிகள், இதற்கு என்ன சொல்லப்போகிறார்கள்? நாளிதழ்களில், இப்படி திருமணத்தைக் கடந்த உடலுறவு, திரைப்படங்களில், தி-சீரியல்களில் நியாயப்படுத்தப்படுகிறது. கதை, கட்டுரை, கவிதை, இணைதளம் என்றால் கேட்கவே வேண்டாம். ஆணுக்கும், பெண்ணுக்கும் முழு சுதந்திரம். நாய்களையும் விஞ்சி தெருக்களில் கூட உடலுறவு கொள்ளலாம். அப்படி எடுக்கப்படும் திரைப்படங்கள், எழுதப்படும் கதை, கட்டுரை, கவிதை இத்யாதிகளுக்கு சாகித்ய அகடமி, பத்மஸ்ரீ, கலைமாமணி விருதுகள் கூட கொடுக்கலாம். ஆனால், கணவன்-மனைவி எப்படி ஒழுங்காக இருக்க  வேண்டும் என்ரு சொல்வாரார்களா? நவீன மனுக்கள் இதற்கு என்ன சாத்திரம் உருவாக்கப் போகிறார்கள்?

வேதபிரகாஷ்

09-12-2011


[1] நக்கீரன், உல்லாசத்திற்குமறுப்பு: உயிருடன்தீவைக்கப்பட்டபெண்பரிதாபமாகஉயிரிழப்பு, http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=66740

[4] தினமணி, திருவண்ணாமலை: இணங்க மறுத்த பெண்ணை எரித்துக் கொன்றவர் கைது, First Published : 09 Dec 2011 02:49:34 PM IST; Last Updated : 09 Dec 2011 03:07:42 PM IST, http://dinamani.com/edition/story.aspx?Title=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88:+%E0%AE%87%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88+%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81&artid=519545&SectionID=164&MainSectionID=164&SEO=&SectionName=Latest


குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

2 பதில்கள் to “அக்னி சேத்திரத்தில் நடந்த பெண் எரிக்கொலை: ஆண்டவனுக்கு பொறுக்குமா?”

 1. vedaprakash Says:

  சென்னை பெண் உயிரோடு எரித்து கொலை: கள்ளக்காதலன் பரபரப்பு வாக்குமூலம் Chennai செவ்வாய்க்கிழமை, நவம்பர் 08, 1:50 PM IST
  http://www.maalaimalar.com/2011/11/08135052/Chennai-girl-burned-murder.html

  சேத்துபட்டு, நவ.8, 2011 –

  திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூரைச் சேர்ந்தவர் மணி. இவரது மகன் செல்வம் (வயது 25). இவர் சென்னை கே.கே.நகரில் தங்கி மேஸ்திரி வேலை செய்து வந்தார். அப்போது சென்னை குறிஞ்சி நகரைச் சேர்ந்த கங்கா (35) என்பவர் அங்கு வேலை பார்த்துள்ளார். அப்போது இருவரும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது.

  நாளுக்குநாள் கங்காவின் தொல்லை அதிகமானதால் அவரை கொலை செய்ய செல்வம் முடிவு செய்துள்ளார். அதைத் தொடர்ந்து நேற்று மோட்டார் சைக்கிளில் சென்னையில் இருந்து பெரணமல்லூருக்கு அழைத்து வந்துள்ளார். பெரணமல்லூர் அருகே உள்ள ஆவணியாபுரம் அடுத்த காட்டு பகுதியில் செல்வம், கங்காவுடன் உல்லாசமாக இருந்துள்ளார். பின்னர் அருகில் இருந்த கல்லால் கங்காவின் தலையில் தாக்கியுள்ளார். இதில் அவர் படுகாயம் அடைந்தார்.

  இதையடுத்து செல்வம், கங்காவின் உடலில் தீவைத்துள்ளார். இதனால் அலறி துடித்த கங்கா கூச்சல் போட்டுள்ளார். அப்போது அந்த வழியாக சென்ற சிலர் சத்தம் கேட்டு ஓடி வந்து செல்வத்தை பிடித்தனர். பின்னர் கங்காவை சிகிச்சைக்காக ஆரணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக ஆரணி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு கங்கா சிகிச்சை பலனின்றி இறந்தார்.

  பொதுமக்கள், செல்வத்தை பிடித்து பெரணமல்லூர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். செல்வம் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

  எனக்கும் சென்னையை சேர்ந்த கங்காவுக்கும் 3 மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்தோம். நாளடைவில் கங்கா அவருடனே இருக்க வற்புறுத்தினார். என்னை வேறு திருமணம் செய்யகூடாது என கூறி வந்தார்.

  ஒரு கட்டத்தில் அவளை விட்டு வரமுடியாத சூழ்நிலையை உருவாக்கினாள். இதனால் கங்காவை கொலை செய்ய திட்டமிட்டேன். சென்னையில் இருந்து ஆசை வார்த்தை கூறி பெரணமல்லூர் அழைத்து வந்தேன். அங்குள்ள காட்டு பகுதியில் அவளுடன் உல்லாசமாக இருந்தேன். அவள் அசந்த நேரத்தில் பாறாங்கல்லை எடுத்து தலையில் அடித்தேன். கங்காவால் எழுந்திருக்க முடியவில்லை. அங்கிருந்த பள்ளத்தில் அவளை தூக்கி போட்டேன். பின்னர் பனைஓலை, இலை சருகுகளை போட்டு தீ வைத்தேன். வலியால் கங்கா கூச்சல் போட்டார். சத்தம் கேட்டு பொதுமக்கள் ஓடிவந்து என்னை பிடித்து விட்டனர்.

  இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

 2. ஆபாசப் படம் எடுத்த நண்பன் – மாட்டிக் கொண்ட மாணவி – செல்போன், லேப்டாப் படிப்பிற்கா, ஆபாசத்திற்க Says:

  […] [1] https://womanissues.wordpress.com/2011/12/10/widow-burnt-to-death-as-she-refused-sex-with-parmour/ […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: