காலில்விழுந்து “இதுவும் ஒருவ கைசிகிச்சை தான்’ என்று சொன்ன கயவன்


காலில்விழுந்து இதுவும்ஒருவகைசிகிச்சைதான்என்று சொன்ன கயவன்

ஊடகங்களின் செய்திகள்: மதுரை பைபாஸ் ரோடு சொக்கலிங்கநகரில், தன்னிடம் சிகிச்சை பெற்ற பிளஸ் 2 மாணவியை கற்பழித்த டாக்டர் சங்கரநாராயணன்,55, கைது செய்யப்பட்டார். “சபலத்தில் செய்துவிட்டேன்’ என போலீசிடம் தெரிவித்தார். தினமலர் இப்படி செய்தி வெளியிட்ட நிலையில், மற்ற செய்தி இணைதளங்கள், “தனியார் மருத்துவ மனையில் +2 மாணவிக்கு மயக்க ஊசி போட்டு கற்பழிக்க முயன்ற டாக்டர்” என்று வெளியிட்டுள்ளன[1]. அதாவது, அவர் முயன்றார் என்றுள்ளது. அதுமட்டுமல்லாது, “……..தனியாக இருந்த தேவியை டாக்டர் சங்கரநாராயணன் கற்பழிக்க முயன்றார் என்று கூறப்படுகிறது.” என்று தொடர்ந்து செய்தி வெளியிட்டுள்ளது. ஒன்று சரிபார்த்து செய்திகளை வெளியிட வேண்டும் அல்லது சும்மாயிருக்க வேண்டும் அதாவது, அரைகுறைகயாக வெளியிடக் கூடாது. இல்லையென்றால், ஊடகங்கள் சிலருக்கு ஜால்ரா போடுகின்றன அல்லது கைக்கூலிகளாக வேலை செய்கின்றன என்றுதான் தோன்றும், தெரியவரும். ஆங்கில ஊடகங்களில், “Doctor arrested for raping 16-year-old girl[2]”,  “Doctor held for raping 16-year-old girl in Madurai[3]”, “Madurai doctor held for molesting girl[4]” என்று வந்துளன.

சில்மிஷத்தில்ஈடுபட்ட பொறுப்புள்ள டாக்டர்: மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியைச் சேர்ந்த ஒரு மாணவி, பிளஸ் 2 படிக்கிறார். (இவர் செக்கானூரணி கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் படிப்பதாக முதலில் தெரிவித்தனர். ஆனால் அவர் தனியார் பள்ளியில் படித்து வருகிறார்). ஜூலை 27ல், காய்ச்சல் ஏற்பட்டதை தொடர்ந்து, சகோதரியுடன், சொக்கலிங்கநகரில் உள்ள டாக்டர் சங்கரநாராயணனின் கே.கே. மருத்துவமனைக்கு வந்தார். பரிசோதித்ததில் “டைபாய்டு’ இருப்பது தெரிந்தது. தொடர்ந்து “குளுகோஸ்’ ஏற்ற வேண்டும் என்றுக்கூறி, மாடி அறையில் டாக்டர் சிகிச்சை அளித்தார். நேற்று முன் தினம் மாலை 4.30 மணிக்கு, மாணவியின் உறவினர்கள் இல்லாத சமயத்தில், அவரது அறைக்கு டாக்டர் வந்தார். “வயிற்றில் புண் உள்ளதா என பார்க்க வேண்டும்’ என “சில்மிஷத்தில்’ ஈடுபட்டு, வலுக்கட்டாயமாக கற்பழித்தார். “இதை வெளியே சொல்ல வேண்டாம்’ எனவும் மாணவியை மிரட்டினார். கதறி அழுத மாணவி, நர்ஸ் ஒருவருக்கு தகவல் தெரிவித்தார்.

காலில் விழுந்து இதுவும் ஒருவகை சிகிச்சை தான்என்று சொன்ன கயவன்: இதையறிந்த டாக்டர், மாணவியிடம் “இதுவும் ஒரு வகை சிகிச்சைதான்’ என சமாதானப்படுத்தி, “வேறு யாரிடமும் சொல்ல வேண்டாம்’ என காலில் விழுந்தார்[5]. இரவு 7 மணிக்கு, தகவல் அறிந்த உறவினர்கள், டாக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களது காலிலும் விழுந்து டாக்டர் மன்னிப்பு கேட்டார். இதை ஏற்காத அவர்கள், போலீசிற்கு தகவல் கொடுத்தனர். இதனால் பயந்த டாக்டர், மருத்துவமனையையொட்டி உள்ள தனது வீட்டில் பதுங்கிக் கொண்டார். அவரது குடும்பம் சென்னையில் இருந்தது, டாக்டருக்கு வசதியாக இருந்தது. அவர் தப்பிச் செல்லாமல் இருக்க, மருத்துவமனையைச் சுற்றி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மருத்துவமனைக்கு வந்து துணை கமிஷனர் திருநாவுக்கரசு விசாரித்தார். பின், உதவிகமிஷனர் கணேசன் தலைமையில் போலீசார், ஒவ்வொரு கதவாக “உடைத்து’ வீட்டினுள் சென்றபோது டாக்டர் சிக்கவில்லை. ஸ்டோர் ரூம் அறையில் உடைத்த போது, பதுங்கியிருந்தார். “சபலத்தில் செய்துவிட்டேன்’ என்று போலீசிடம் கெஞ்சினார். கற்பழிப்பு, மிரட்டல், அடைத்து வைத்தல் ஆகிய பிரிவுகளின்கீழ் அவரை போலீசார் கைது செய்தனர். டாக்டரின் உள்ளாடை மற்றும் மாணவிக்கு சிகிச்சை அளித்த மருந்து, ஊசியை பறிமுதல் செய்தனர்.

கற்ப்பைக் காத்துக் கொள்ள கடுமையாகப் போராடிய மாணவி: போலீசார் கூறுகையில், “”மாணவி தன்னை காப்பாற்றிக் கொள்ள கடுமையாக போராடியுள்ளார். ஆனால், அதையும் மீறி டாக்டர் வலுக்கட்டாயமாக கற்பழித்ததாக, மாணவி தெரிவித்தார். ஊசி மருந்தில், ஏதேனும் மயக்க மருந்து கலந்து கொடுத்தாரா எனவும், வேறு யாரிடமும் இதுபோல் “சில்மிஷத்தில்’ ஈடுபட்டாரா எனவும் விசாரிக்கிறோம்,” என்றனர். நேற்று காலை அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். கோர்ட் அனுமதி பெற்று, டாக்டருக்கும், மாணவிக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தப்படவுள்ளது. பின், பெற்றோரிடம் மாணவி ஒப்படைக்கப்படுவார்.

வகுப்புகேட்டடாக்டர்: கைதான டாக்டர் சங்கரநாராயணனை, ஆக.,14 வரை “ரிமாண்ட்’ செய்து, ஜே.எம். கோர்ட் 5 ன் மாஜிஸ்திரேட் (பொறுப்பு) மாரீஸ்வரி உத்தரவிட்டார். நேற்று மாலை அரசு மருத்துவமனையில் டாக்டருக்கும், மாணவிக்கும் மருத்துவ பரிசோதனை நடந்தது. பின், மதுரை சிறையில் டாக்டர் அடைக்கப்பட்டார். முன்னதாக, வருமான வரி செலுத்தும் தனக்கு, சிறையில் “ஏ’ வகுப்பு ஒதுக்க வேண்டும் என டாக்டர் மனு செய்தார். ஆனால், இதை கோர்ட் ஏற்க மறுத்துவிட்டது. இவ்வாறு விவஸ்தையில்லாமல், சொகுசைக் கேட்டுப் பெறத்துடிக்கும் சட்டமீறல் பேர்வழிகளை கரடுமையாகத் தண்டிக்க வேண்டும்.

மின்திருட்டில் சிக்கியவர்: கடந்த 2004ல், இவரது மருத்துவமனையை, மின்திருட்டு தடுப்புப்பிரிவு இன்ஸ்பெக்டர் கொண்டல்ராஜ் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்ததில், ரூ.2 லட்சத்திற்கு மின்சாரத்தை திருடியது தெரியவந்தது. தான் கைது செய்யப்படலாம் என பயந்த டாக்டர், உடனடியாக அத்தொகையை செலுத்தி தன்னை காப்பாற்றிக் கொண்டார். அதாவது பணத்தால் எதையும் சரிசெய்து கொள்ளலாம் என்ற எண்னம் உள்ளது. மேலும் அவ்வாறே, வருமானவரிக்கு தப்பிக்கும் வழியில் நிறைய சம்பாதித்துள்ளார் என்றும் தெரிகிறது.

“சபலத்தில் செய்துவிட்டேன்’ என போலீசிடம் தெரிவித்தார்: அப்படியென்றால், தாய், சகோதரி, மகள் என்று யாரை வேண்டுமானாலும், இத்தகைய வக்கிரக் காமக் கொடூர வன்புத்தியாளர்கள் செய்யக்கூடும், ஆகவே அத்தகைய மனப்பாங்கையே அனுமதிக்கலாகாது. மறுபடியும் பெண்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று தான் சொல்லவேண்டியுள்ளது. டாக்டர்கள் இக்காலத்தில், தம் மீது எந்த பிரச்சினையும் வரக்கூடாது என்று பலவழிகளில் ஜாக்கிரதையாக இருக்கிறார்கள். மருந்து-மாத்திரைகளைக்  கொடுத்து தங்களது நோயாளிகளை பரிசோதித்து வருகிறார்கள் என்பதும் உண்மை. பின்விளைவுகளை அறிந்து கொண்டு, அவற்றை மருந்து உற்பத்தியாளர்களுக்குத் திரிவிக்க, பல லட்சங்களைப் பெறுகிறார்கள். அவ்வாறு இருக்கும் போது, குறிப்பாக பெண்கள் இத்தகைய கயவர்களிடம் சிக்கிக் கொள்ளமல் ஜாக்கிரதையாகத் தான் இருக்க வேண்டும். பெண் எனும் போது, கூட ஒருவரை அனுமதித்தாக வேண்டும். மருத்துவம் என்ற போர்வையில் இத்தகைய கற்பழிப்புகளை நியாயப்படுத்தவோ, சபலம் என்று தப்பித்துக் கொள்ளவோ விடக்கூடாது.

வேதபிரகாஷ்

01-08-2012


குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , ,

3 பதில்கள் to “காலில்விழுந்து “இதுவும் ஒருவ கைசிகிச்சை தான்’ என்று சொன்ன கயவன்”

 1. Vedam Vedaprakash Says:

  மூளைச்சலவை செய்து நர்சுகளுடன் உல்லாசமாக இருப்போம் :
  கைதான டாக்டர் ஸ்ரீஜித் வாக்குமூலம்
  http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=79404

  சென்னை திருமங்கலம் அம்பத்தூர் ரோட்டில், எமரால்டு அடுக்குமாடி குடியிருப்பில், `கேரள ஆயுர்வேத ஹெல்த் சென்டர்’ என்ற பெயரில் பிரபல ஆஸ்பத்திரி உள்ளது. இந்த ஆஸ்பத்திரி கடந்த 10 ஆண்டுகளாக செயல்படுகிறது. இங்கு கால்வலி, மூட்டு வலி மற்றும் பல்வேறு வகை நோய்களுக்கு ஆயுர்வேத முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

  இந்த ஆஸ்பத்திரிக்கு நோயாளிகள் அதிக அளவில் வந்தனர். குறிப்பாக பெண்கள் மத்தியில் இந்த ஆஸ்பத்திரி பிரபலம் ஆனது. முக்கிய பிரமுகர்களின் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் இந்த ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு வந்தனர்.

  இந்த ஆஸ்பத்திரியை டாக்டர் ஸ்ரீஜித் (வயது 33) என்பவர் நடத்தி வந்தார். இவரது தந்தை ராதாகிருஷ்ணன் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி ஆவார். கடந்த 40 ஆண்டுகளாக இவர்களது குடும்பம் சென்னையில்தான் வசிக்கிறது. கேரளாவில் திருச்சூர் இவர்களது பூர்வீகம் ஆகும்.

  டாக்டர் ஸ்ரீஜித் ஆயுர்வேத டாக்டர் பட்டப்படிப்பை முறையாக படித்துள்ளார். நல்ல வசதி படைத்த இவர், தற்போது சென்னை கொரட்டூர், பத்மாவதி நகர், 2-வது தெருவில் சொந்த வீட்டில் வசிக்கிறார். இதே போல மேலும் 4 சொந்த வீடுகள் இவருக்கு உள்ளன.

  இவருக்கு திருமணமாகிவிட்டது. இவரது மனைவி பெயர் சந்தியா. 5 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

  சந்தியா தற்போது 2-வதாக கர்ப்பமாக உள்ளார். இவ்வளவு பிரபலமான டாக்டர் ஸ்ரீஜித் தற்போது கற்பழிப்பு வழக்கில் சிக்கி உள்ளார்.

  இவரது ஆஸ்பத்திரிக்கு நர்ஸ் பயிற்சிக்கு வந்த, கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம், தொடுபுழா என்ற ஊரைச் சேர்ந்த, ஜமாலினா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணை, டாக்டர் ஸ்ரீஜித், தனது நண்பரான இன்னொரு டாக்டர் அஜில்குமாருடன் சேர்ந்து கற்பழித்ததாக இவர் மீது பரபரப்பான புகார் கூறப்பட்டு உள்ளது.

  இவர்மீதும், டாக்டர் அஜில்குமார் மீதும் ஜெ.ஜெ.நகர் போலீசார் கற்பழிப்பு மற்றும் கொலை மிரட்டல் உள்பட 4 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். போலீசார் தேடுவதை அறிந்து இவர்கள் இருவரும் தலைமறைவாகி விட்டனர். கோர்ட்டில் முன்ஜாமீன் கேட்டனர். முன்ஜாமீன் கிடைக்கவில்லை.

  இவர்களை கைது செய்ய கமிஷனர் திரிபாதி உத்தரவிட்டார். கூடுதல் கமிஷனர் தாமரைக்கண்ணன், இணை கமிஷனர் சங்கர், துணை கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா, உதவி கமிஷனர் கலிதீர்த்தான் ஆகியோர் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர்கள் சேகர்பாபு, விஜயகுமார், பாலசுப்பிரமணி ஆகியோர் தலைமையில் 3 தனிப்படைகள் களத்தில் இறக்கப்பட்டனர்.

  தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் இரவில் இரு டாக்டர்கள் இருவரையும் கைது செய்து விட்டதாக தகவல்கள் வெளியானது. ஆனால் போலீசார் அதை உறுதி செய்யவில்லை. நேற்று காலையில் டாக்டர் ஸ்ரீஜித்தை மட்டும் கைது செய்ததாக, போலீசார் அறிவித்தனர். அவரிடம் ரகசிய இடத்தில் விசாரணை நடத்தப்பட்டது.

  போலீஸ் விசாரணையில் டாக்டர் ஸ்ரீஜித் கற்பழிப்பு குற்றத்தை ஒப்புக்கொண்டு பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளதாக தெரிய வந்தது. அவரது வாக்கு மூலம் விவரம் :

  ’’நானும், டாக்டர் அஜில்குமாரும் நெருங்கிய நண்பர்கள். அவர் திருச்சியில் என்னைப்போல ஆயுர்வேத ஆஸ்பத்திரி நடத்தி வருகிறார். அவர் ஆஸ்பத்திரியில் பயிற்சிக்கு வரும் நர்சுகளை எனது ஆஸ்பத்திரிக்கு அழைத்து வருவார்.

  கேரளாவில் ஏழை குடும்பத்தைச் சேர்ந்த நர்சுகள் வேலை பயிற்சிக்கு வந்தால், நல்ல சம்பளத்தில் வேலை வாங்கித்தருவதாக ஆசை வார்த்தை கூறி, அவர்களுடன் நாங்கள் இருவரும் உல்லாசமாக இருப்பது வழக்கம். அந்த பெண்களை மூளைச்சலவை செய்து மிகவும் எச்சரிக்கையுடன் பாதுகாப்பான முறையில் நாங்கள் நடந்து கொண்டதால் இதுவரை எந்த பிரச்சினையும் வந்தது இல்லை.

  ஜமீலாவை பொறுத்தவரை, அவரும் எங்கள் ஆசைக்கு சம்மதிப்பார் என்று நினைத்தோம். ” திருச்சியில் ஏற்கனவே ஜாடை, மாடையாக பேசிவிட்டேன். அவர் நமது ஆசைக்கு இணங்கிவிடுவார்” என்று, டாக்டர் அஜில்குமார் போனில் தெரிவித்தார். நானும் அந்தப் பெண்ணை அழைத்து வர சம்மதம் தெரிவித்தேன்

  ஆனால், நாங்கள் எதிர்பார்த்தபடி, ஜமாலினா எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. ஜெ.ஜெ.நகர், கிருஷ்ணாநகரில் உள்ள எனக்கு சொந்தமான விருந்தினர் இல்லத்தில்தான் இப்படி அழைத்து வரும் பெண்களை தங்க வைப்போம்.

  நான் வீட்டில் இருந்து வருவதற்கு முன்பே, 3 முறை டாக்டர் அஜில்குமார், ஜமாலினாவை பலவந்தமாக கெடுத்து விட்டதாக சொன்னார். ஜமாலினா களைப்பாக இருந்ததால், நான் அழைத்தபோது அவர் அடம் பிடித்தார். அவரது வாயில் துணி வைத்து திணித்து, கத்தியை காட்டி மிரட்டி, எனது ஆசைக்கு இணங்கவும் அவரை பணிய வைத்தோம்.

  அதன்பிறகு ஜமாலினா மயக்க நிலைக்கு போய்விட்டதால், அவரை சமாதானப்படுத்தி, நர்சுகள் தங்கும் விடுதியில் கொண்டு போய் விட்டு தங்க வைத்தோம். விசயத்தை வெளியில் சொன்னால் உயிரோடு, ஊர் திரும்ப முடியாது என்று அவரை மிரட்டினோம். எதிர்பாராத வகையில் முதல் முறையாக இந்த பிரச்சினையில் மாட்டிக்கொண்டேன்.’’

  வாக்குமூலத்தை அடுத்து, டாக்டர் ஸ்ரீஜித்தை நேற்று மாலை 5.30 மணி அளவில் போலீசார் அம்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். மாஜிஸ்திரேட்டு வெளியில் சென்றிருந்ததால், ஸ்ரீஜித்தை போலீசார் மீண்டும் போலீஸ் ஜீப்பில் ஏற்றி வெளியே கொண்டு சென்றனர்.

  சைதாப்பேட்டையில் உள்ள மாஜிஸ்திரேட்டு வீட்டில், அவரது முன்னிலையில் ஆஜர்படுத்தி, நீதிமன்ற காவலில் ஸ்ரீஜித்தை புழல் மத்திய ஜெயிலில் அடைப்போம் என்று போலீசார் தெரிவித்தனர். முன்னதாக ஸ்ரீஜித்துக்கு அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

  அவருக்கு ஆண்மை பரிசோதனை செய்யப்படும் என்றும், அவர் மேலும் எத்தனை பெண்களை இது போல கெடுத்துள்ளார் என்பது குறித்து விசாரிக்கப்படும் என்றும், இதற்காக அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிப்போம் என்றும் போலீசார் மேலும் தெரிவித்தனர்.

 2. V. Narayanan Says:

  இப்படிப் பட்ட டாக்டர்களைச் சுட்டுத் தள்ள வேண்டும்.

  அவனுக்கு ஒரு பெண், சகோதரி இருந்தால், மற்ற டாக்டர் அப்படி செய்தால், இவன் என்ன செய்வான்?

  • vedaprakash Says:

   உங்களது உணர்ச்சிப்பூர்வமான வெளிப்பாட்டை அறிந் து கொள்கிறேன்.

   நிச்சயமாகக் கடுமையான தண்டனைக் கொடுக்கப்பட வேண்டும்.

   முதலில் ஈப்ப்பட்டி டாக்டர்கள் எப்படி ஆகிறார்கள் என்பதனையும் பார்க்க வேண்டும்.

   கடந்த 40 ஆண்டுகளில் தமிழகத்தில் காசு இருப்பவன், எம்.பி.பி.எஸ் சீட் வான்கிக் கொண்டு படிக்க ஆரம்பிக்கிறான். அவனுக்கு பாஸ் மார்க் இருந்தாலே போதுமானது.

   மருத்துவப் படிப்பிற்கான விருப்பம், நாட்டம், அக்கறை எதுவும் தேவையில்லை.

   15-20 வருடங்கள் எடுத்துக் கொண்டு பாஸ் செய்கிறார்கள். இல்லை, கோட்டுப் போட்டுக் கொண்டு அப்பன் அல்லது உறவினர்கள் வைத்துள்ள கிளினிக்குகளில் டாக்டர் போல இருந்து, நடைமுறையில் சிலவற்றைக் கற்றுக் கொள்கிறார்கள். பிறகு “டாக்டர்கள்” ஆகிறாறர்கள்.

   அவர்களுக்கு எந்தவிட நியாயம், தர்மம், போன்ற உணர்வுகள் இருப்பதில்லை, காசு சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் தான் இருக்கும்.

   ஆகவே, மற்ற விஷ்ச்யங்களில் சபலம் என்பது நியாயப்படுத்தப்படும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: