பாலியல் வன்முறைகளில் ஈடுபடும் தமிழர்கள் – மாணவிகளை பலாத்காரம் செய்யும் ஆசிரியர்கள் – சீரழிவற்கு என்னகாரணம்?


பாலியல் வன்முறைகளில் ஈடுபடும் தமிழர்கள் – மாணவிகளை பலாத்காரம் செய்யும் ஆசிரியர்கள்  –  சீரழிவற்கு என்னகாரணம்?

 மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு: மதுரை அருகே அரசு ஆசிரியர்கள் 2 பேர் கைது, பள்ளிமாணவிபாலியல்பலாத்காரம்கட்டிடமேஸ்திரிகைது! இப்படி தமிழகத்தில் ஏன் நடக்கிறது. வேலியே பயிரை மேயும் அலங்கோலம் என்ன, இதற்குக் காரணம் என்ன? எதையெதையோ பேசும், அலசும், அறிவுஜீவிகள் ஏன் இதைப்பற்றிக் கவலைப் படுவதில்லை? கிருத்துவ / கிறிஸ்தவ பாதிரிகள், பிஷப்புகள், பாஸ்டர்களுக்கு இணையாக, இவர்களும் இறங்கி விட்டார்களா? இல்லை, நாளைக்கு அவர்களைப் போலவே, ஏதாவது ஒரு முகமூடிக்குள் மறைந்து தப்பித்து விடுவார்களா? 

மதுரைப் பள்ளி மாணவிகளுக்குபாலியல்தொந்தரவுபுகார்: மதுரை அருகேயுள்ள குலமங்கலத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு அப்பகுதியை சுற்றியுள்ள பல மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்தநிலையில் சில மாணவிகளிடம் ஒரு சில ஆசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக புகார் எழுந்தது. இதுபற்றி பாதிப்புக்குள்ளான மாணவிகளின் பெற்றோர்கள் கூடல்புதூர் போலீசில் பாலியல் பலாத்காரம் குறித்து புகார் தெரிவித்தனர், இந்த புகாரில் பள்ளியில் பணியாற்றி வரும் சில ஆசிரியர்கள் மாணவிகளை தனியாக அழைத்து சென்று பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுப்பதாகவும், செல்போனில் ஆபாசமாக படம் எடுத்ததாகவும் குறிப்பிட்டு இருந்தனர். இதை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில் போலீசார் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர்.

ஆசிரியர்களே கைது: மதுரையை கண்ணகி எரித்தாள், ஆனால், அதே ஊரில் இருக்கும் கயவர்கள் கற்பை சூரையாடுகிறார்கள். தமிழ் கலாச்சாரத்தை இவர்கள் எப்படி, இப்படி சீரழிக்கிறார்கள்? இதைத்தொடர்ந்து ஆங்கில பாட ஆசிரியர் ஹெரான்ஸ் / டெரன்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ் பாட ஆசிரியர் விஜயகுமார் ஆகிய 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்[1]. பாதிப்புக்குள்ளான மாணவிகளின் பெற்றோர்கள் அப்பகுதியில் உள்ள இந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் பொன்னுத்தாயிடம் தெரிவித்தனர். மாணவிகளின் பெற்றோர்கள் சார்பில் பொன்னுத்தாயி போலீசில் புகார் அளித்திருந்தார்[2],

முகத்தைக் காட்ட தங்கும் சீரழிப்பாளர்கள் ஏன் கற்பழிப்பாளட்களாகிறார்கள்?:  போலீசார் நேற்று மதியம் மதுரை ஜேஎம் 4 கோர்ட்டில் மாஜிஸ்திரேட் ராஜலிங்கம் முன்பு ஆஜர்படுத்தினர். அப்போது ஆசிரியர்கள் இருவரின் முகத்தையும் துணியில் மறைத்து வந்தனர். கோர்ட் வளாகத்தில் நின்றிருந்தபோது அங்கு வந்த சில வக்கீல்கள் ஆசிரியர்களின் முகத்தை காட்டுமாறு துணிகளை உருவியுள்ளனர். அருகே நின்ற ஆசிரியர்களின் உறவினர்கள், உடன் பணியாற்றும் ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் இரு தரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. இரு தரப்பினரும் தாக்கி கொண்டனர்[3]. அதனால் கோர்ட் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அதன்பிறகு ஆசிரியர்கள் இருவரையும் போலீசார் பாதுகாப்புடன் அழைத்து சென்று மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

பள்ளிமாணவிபாலியல்பலாத்காரம்கட்டிடமேஸ்திரிகைது!: தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டியை அடுத்த, பொம்மிடி கந்தகவுண்டம்பட்டியை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகள் திவ்யா (வயது-17). (அப்பா, மகள் இருவர் பெயரும் மாற்றப்பட்டுள்ளது). திவ்யா, பொம்மிடி மல்லாபுரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ப்ளஸ்-1 படித்து வருகிறார். அதே ஊரை சேர்ந்தவர் கட்டிட மேஸ்திரி சின்னசாமி, வயது-32. இவருக்கு திருமணமாகி, இரண்டு குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்று விட்டு, வீடு திரும்பி கொண்டிருந்த திவ்யாவை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவர்த்தைகள் கூறிய சின்னசாமி, திவ்யாவை கட்டாயப்படுத்தி மோட்டார் சைக்கிளில் தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்[4]. இது குறித்து மாணவி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் பொம்மிடி போலீஸில் புகார் செய்தனர். புகாரை பதிவு செய்த போலீஸார் விசாரித்து, மேஸ்திரி சின்னசாமியை கைது செய்தனர். திவ்யாவை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பவேண்டும் என்று நீதிமன்றத்தில் மனு செய்துள்ளனர் பொம்மிடி போலீசார்.

சினிமாக்களில் மாணவிகள் காதலில் ஈடுபடுவது போல காட்டுகிறார்கள்: தமிழ் சினிமாக்களில், மாணவ-மாணவிகளே காதலில் ஈடுபடுவது, ஆபாசமான வசனனங்களை பேசுவது, இரட்டை அர்தத்தத்தில் ஜோக்குகளை வெடிப்பது, டூயட் பாதுவது என காட்சிகளை அமைத்து வருகிறார்கள். மாணவிகளும் அவ்வாறே தினசரி வாழ்க்கையில் அத்தகைய கொச்சை பாஷையைப் பேசிவருவது, அசிங்கமாகவும், அதே நேரத்தில் வருத்தமாகவும் இருக்கிறது. மாணவிகளா இப்படி பேசுகிறாறர்கள் என்று ஆச்சரியமாக இருக்கிறது. பெரியவர்கள் கேட்கும் போது, பார்க்கும் போது, ஐயோ, இவர்களது பெற்றோர்கள் பார்த்தால் என்ன நினைப்பார்கள் என்று மனங்களில் சிந்தனை எழுகிறது. ஆனால், மாணவிகள், மாணவ்ர்களைத் தொட்டுக் கொண்டும், அடித்துக் கொண்டு, விளையாடி கலாட்டா செய்து கொண்டும், பழகியும்  வருகிறார்கள். இவற்றை மற்றவர்களும் பொது இடங்களில் பார்த்து வருகிறார்கள். பிறகு, இதற்கு யார் பொறுப்பு?

வேதபிரகாஷ்

09-03-2013


குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , ,

6 பதில்கள் to “பாலியல் வன்முறைகளில் ஈடுபடும் தமிழர்கள் – மாணவிகளை பலாத்காரம் செய்யும் ஆசிரியர்கள் – சீரழிவற்கு என்னகாரணம்?”

  1. செல்வம் Says:

    நித்தியானந்தா தான் இதற்கு தீர்வு சொல்லனும்

    • vedaprakash Says:

      பொறுப்புள்ளவர்கள், பெற்றோர்கள் மற்றவர்கள் இதனை தமாஸாக எடுத்துக் கொள்ளக் கூடாது.

      அதனால்தான்,முன்பு தருமபுரி ஆதீனம் பெண்கள் உடைக் கட்டுப்பாடு பற்றி பேசிய போது, தமிழ் ஊடகங்களே கேலி செய்து நிகழ்சியை ஒலி-ஒளிப்பரப்பின.

      இதனால், மதிப்பும், மரியாதையும் குறைந்து போகிறது என்பதனை கவனிக்கவேண்டும்.

  2. செக்ஸ் வைத்துக் கொள்ள சரியான வயது 16 தான் இருப்பினும் 18 என்று முடிவு செய்யப்பட்டது – சொல்வது ஷிண Says:

    […] [9] https://womanissues.wordpress.com/2013/03/09/what-is-the-root-cause-for-the-degradation-of-womanhood/ […]

  3. கள்ளக்காதல், கொலை, கைது – சீரழும் இல்லற வாழ்க்கை, சோரம் போகும் பெண்மை, துன்பத்தில் குடும்பங்கள் Says:

    […] [5] https://womanissues.wordpress.com/2013/03/09/what-is-the-root-cause-for-the-degradation-of-womanhood/ […]

  4. ஐந்து மும்பை நடிகைகள் சொகுசு விபச்சாரம் – கையும், களவுமாக கைது! | பெண்களின் நிலை Says:

    […] [14] https://womanissues.wordpress.com/2013/03/09/what-is-the-root-cause-for-the-degradation-of-womanhood/ […]

  5. சினிமாவின் நிர்வாணம், மேற்கத்தைய கலாச்சாரத்தின் தாக்கம், திசைமாறிய இந்திய நாகரிகம் – முடிவு இ Says:

    […] [9] https://womanissues.wordpress.com/2013/03/09/what-is-the-root-cause-for-the-degradation-of-womanhood/ […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: