மலாலா பிரித்தானியப் பள்ளிக்குச் செல்வது என்ன பிரமாதமான விஷயமா?


மலாலா பிரித்தானியப் பள்ளிக்குச் செல்வது என்ன பிரமாதமான விஷயமா?  மலாலா பிரித்தானியப்பள்ளிக்குச் செல்வது என்ன பிரமாதமான விஷயமா?: மலாலா மறுபடியும் பள்ளிக்க்குச் செல்ல ஆரம்பித்து விட்டாள், என்று ஆங்கிலேய ஊடகங்கள் ஓலமிட[1], அதனை இந்திய ஆங்கில ஊடகங்களே வடிக்கட்டி அமுக்கி வாசித்துள்ள போது, தமிழ் ஊடலங்கள் ஏதோ இந்த செய்தியையும் போடலாமே என்று போட்டிருக்கிறார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் “இன்டிபென்டென்ட்” என்ற ஆங்கிலேய நாளிதழில் வந்ததை அப்படியே “தி ஹிந்து” போட்டிருக்கிறது. ஆமாம், வழக்கம் போல ஏகப்பட்ட விஷயங்களை மறைத்திருக்கிறார்கள்.

மலாலா பிரிட்டன் பள்ளியில் சேர்ப்பு

தினமலர்  – ‎5 மணிநேரம் முன்பு‎
       

லண்டன்: தலிபான்களால் சுடப்பட்ட, பாகிஸ்தான் சிறுமி மலாலா, பிரிட்டனில் உள்ள பள்ளியில், தன் படிப்பை தொடர்கிறாள். பெண்கள் கல்வி உரிமை குறித்து இணையதளத்தில் எழுதியதால், …

மீண்டும் பள்ளிக்கு செல்லத் துவங்கினாள் தாலிபான்களால் …தினகரன்

பள்ளி சென்ற சிறுமி மலாலா

 தலிபான்கள் மட்டுமல்ல,  ஆங்கிலேயர்களும் பெண்களை பள்ளிக்கு அனுப்பாமல்தான் தடுத்திருக்கிறார்கள்: இதுதான் உண்மை. பெண்களை அடக்கி வைத்திருப்பதில், இஸ்லாம் மட்டுமல்ல கிருத்துவமும் பெருத்த பங்கு வகித்துள்ளது. ஆனால், இந்தியாவில் பள்ளிகள் மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வந்துள்ளது. அவற்றிலும் பெண்களும் படித்துள்ளார்கள். பள்ளிகள் மட்டுமல்ல, பல்கலைக்கழகங்களும் இருந்து வந்துள்ளன. தர்மபால் என்பவர், மிகவும் அற்புதமாக விவரங்களை “அழகான மரம்” என்ற தலைப்பில், இந்திய கல்வி பற்றி புத்தகத்தை எழுதியுள்ளார். ஆனால், இவர்கள் தாம், இந்தியர்களை குறைகூறி வருகிறார்கள். விஷயம் தெரியாத, சரித்திரம் அறியாத இக்கால மேனாட்டு அடிவருடிகளும், அப்பொய்யை உண்மையாக பேசி-எழுதி வருகின்றனர்.

 தலிபான்களால் ஏன் பெண்கள் படிப்புத் தடுக்கப் பட்டது?: தலிபான்களால் சுடப்பட்ட, பாகிஸ்தான் சிறுமி மலாலா, பிரிட்டனில் உள்ள பள்ளியில், தன் படிப்பை தொடர்கிறாள். மிகவும் அருமை, ஆனால், மற்ற சிறுமிகளின் கதி என்ன? அவர்களை யார் படிக்க வைப்பார்கள்? ஆப்கானிஸ்தானில் மட்டுமல்லாது, மற்ற இஸ்லாமிய நாடுகளில் ஏன் சிறுமிகள் இவ்வாறான நிலையில் இருக்க வேண்டும். “இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்றால், வட இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் ஏன்”, என்று பகுத்தறிவுவாதிகள் கேள்விகள் கேட்பது உண்டு. இஸ்லாம் பெண்களுக்கு மற்ர எல்லா மதங்களையும் விட மிக அதிகமாக சுதந்திரம், உரிமை எல்லாமே கொடுக்கிறது என்றால், ஏன் இப்படியான நிலை உருவாக்க வேண்டும்? பெண்கள் கல்வி உரிமை குறித்து இணையதளத்தில் எழுதியதால், கடந்த ஆண்டு, தலிபான்களால் சுடப்பட்ட, பாகிஸ்தான் பள்ளி மாணவி, மலாலா யூசுப், 15, சிகிச்சைக்காக, பிரிட்டனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள். அங்கு, தலை மற்றும் முகத்தில் ஏற்பட்ட காயங்களுக்காக, அவருக்கு சிசிச்சையளிக்கப்பட்டது. உடல் நலம் தேறிய மலாலா, கடந்த மாதம் “டிஸ்சார்ஜ்’ ஆனாள். தற்போது, பிரிட்டனின், பர்மிங்ஹாம் நகரில் உள்ள “எட்க்பாஸ்டன்’ பெண்கள் உயர்நிலைப்பள்ளியில்[2]‘, சேர்க்கப்பட்டுள்ளாள்[3].

 மலாலா பெருமையாகச் சொல்லிக் கொண்டது[4]: “நான் மறுபடியும் பள்ளிக்கு செல்லவேண்டும் என்ற கனவு பூர்த்தியானது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன். உலகிலுள்ள எல்லா சிறுமிகளும் இந்த அடிப்படை சந்தர்ப்பத்தை அடைய வேண்டும் என்று விரும்புகிறேன். மக்களின் நம்பிக்கையால், நான் இப்பொழுது நடக்க முடிகிறது – என்னால் இப்பொழுது ஓடவும் முடியும். பாகிஸ்தானில் உள்ள தோழிகளை பிரிந்தாலும், பிரிட்டனில் புதிய தோழிகள் கிடைப்பர் என நம்புகிறேன்,” என, அவர் தெரிவித்துள்ளாள். பிரிட்டனில் புதிய தோழிகள் கிடைக்கலாம், ஆனால், பாகிஸ்தானில் வாடும் தோழிகளையும் அவள் நினைவில் வைத்திருப்பாள் என்று நம்பலாம். பிரிட்டன் பள்ளியில், மலாலா கல்வியை தொடர்வது குறித்து, முன்னாள் பிரதமரும், ஐ.நா., கல்வி பிரிவின் தூதருமான, கார்டன் பிரவுன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்[5].

 இங்கிலாந்தில் பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்ட கதையே வேறுவிதமாக இருக்கிறது: 1876ல் துவங்கப்பட்ட இப்பள்ளிதான் பிர்மிங்ஹாமில் உள்ள பெண்களுக்கான பள்ளியாம்[6]. அப்படியென்றால், அதற்கு முன்பாக ஏன் சிறுமிகளுக்கு / பெண்களுக்கு தனியான பள்ளி இல்லை என்ற கேள்வி எழுகிறதே? ஆமாம், ஜூலை 1757ல் பள்ளி இயக்கம் ஆரம்பித்தபோது, சேரிகளில் இருந்த பைன்கள் தாம் படிக்க வந்தார்களாம். அதுவும் “ஞாயிற்றுக் கிழமைப் பள்ளி” என்பதில் பைபிள் தான் பாடப்புத்தகமாம். 19ம் நூற்றாண்டிற்கு முன்பு மிகக்குறைந்த பள்ளிக்கூடங்களே இங்கிலாந்தில் இருந்தனவாம். அதுவும் பெரும்பாலும் கிருத்துவமத போதனைப் பள்லிகளாக இருந்தனவாம். 1814ம் வருடம் தாம் அத்தகைய முறை குறைக்கப்பட்டது. 1931ல் கூட 12,50,000 பிள்ளைகள் “ஞாயிற்றுக் கிழமைப் பள்ளி”களில் படித்து வந்தனர். இவர்கள் ஜனத்தொகையில் 25% ஆகும், அதாவது 75% பிரித்தானியர்கள் படிப்பறிவு இல்லாதவர்களாக இருந்தனர்! 1820ல் தான் சாமுவேல் ஒயில்ட்ஸ்பின் என்பவர் சிறார்பள்ளியை முதலில் ஆரம்பித்தார். இதுதான் ஆங்கில பள்ளியின் முன்னோடி என்றும் சொல்லப்படுகிறது. 1833ல் பாராளுமன்றத்தில் நிதியுதிக்கீடு செய்யப்பட்டு, 1837ல் பொதுப்படிப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டது. 1848ல் முதல் “குவீன்ஸ் காலேஜ்” என்ற பெண்கள் கல்லூரி லண்டனில் ஆரம்பிக்கப்பட்டது.

© வேதபிரகாஷ்

21-03-2013


[3] The 15-year-old began her first day at Edgbaston High School in Birmingham yesterday –  the city’s oldest independent school for girls – where she will study the full curriculum before selecting her GCSE options next year.

[6] Founded in 1876, Edgbaston High School is Birmingham’s oldest independent school for girls.

http://www.edgbastonhigh.co.uk/about-ehs

 

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

6 பதில்கள் to “மலாலா பிரித்தானியப் பள்ளிக்குச் செல்வது என்ன பிரமாதமான விஷயமா?”

  1. vedaprakash Says:

    பாகிஸ்தான் சிறுமி மலாலா பிரிட்டன் பள்ளியில் சேர்ப்பு
    பதிவு செய்த நாள் : மார்ச் 20,2013,23:07 IST
    மாற்றம் செய்த நாள் : மார்ச் 21,2013,00:42 IST
    http://www.dinamalar.com/news_detail.asp?id=671501

    லண்டன்: தலிபான்களால் சுடப்பட்ட, பாகிஸ்தான் சிறுமி மலாலா, பிரிட்டனில் உள்ள பள்ளியில், தன் படிப்பை தொடர்கிறாள். பெண்கள் கல்வி உரிமை குறித்து இணையதளத்தில் எழுதியதால், கடந்த ஆண்டு, தலிபான்களால் சுடப்பட்ட, பாகிஸ்தான் பள்ளி மாணவி, மலாலா யூசுப், 15, சிகிச்சைக்காக, பிரிட்டனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள். அங்கு, தலை மற்றும் முகத்தில் ஏற்பட்ட காயங்களுக்காக, அவருக்கு சிசிச்சையளிக்கப்பட்டது. உடல் நலம் தேறிய மலாலா,கடந்த மாதம் “டிஸ்சார்ஜ்’ ஆனாள். தற்போது, பிரிட்டனின், பர்மிங்ஹாம் நகரில் உள்ள “எட்க்பாஸ்டன்’ பெண்கள் உயர்நிலைப்பள்ளியில்’, சேர்க்கப்பட்டுள்ளாள். “”பாகிஸ்தானில் உள்ள தோழிகளை பிரிந்தாலும், பிரிட்டனில் புதிய தோழிகள் கிடைப்பர் என நம்புகிறேன், ” என, அவர் தெரிவித்துள்ளாள்.
    பிரிட்டன் பள்ளியில், மலாலா கல்வியை தொடர்வது குறித்து, முன்னாள் பிரதமரும், ஐ.நா., கல்வி பிரிவின் தூதருமான, கார்டன் பிரவுன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

  2. vedaprakash Says:

    பள்ளி சென்ற சிறுமி மலாலா
    .Wednesday, 20 March, 2013 12:39 PM
    http://www.maalaisudar.com/newsindex.php?id=40905%20&%20section=23
    .
    லண்டன், மார்ச் 20:பாகிஸ்தானில் பெண்கள் கல்விக்காகவும், பெண் உரிமைக்காகவும் குரல் கொடுத்து வந்த மலாலா என்ற 14 வயது சிறுமியை, கடந்த ஆண்டு தலிபான் தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர்.
    .
    தலையில் படுகாயமடைந்த அந்த சிறுமி லண்டன் மருத்துவமனையில் பல மாதங்களாக சிகிச்சைப் பெற்று உடல் நலம் தேறினார். தற்போது, லண்டனில் தங்கியிருக்கும் அவர் நேற்று முதன் முதலாக பர்மிங்காமில் உள்ள எட்ஜ் பாஸ்டன் பள்ளிக்கூடத்திற்கு சென்றார்.இது குறித்து அந்த சிறுமி கூறுகையில், இன்று எனக்கு மிகவும் அதிசயமான நாள். நான் மீண்டும் பள்ளிக்கூடம் செல்ல வேண்டும் என்ற கனவு நிறைவேறியிருக்கிறது என்றார்.

  3. vedaprakash Says:

    மீண்டும் பள்ளிக்கு செல்லத் துவங்கினாள் தாலிபான்களால் சுடப்பட்ட மலாலா
    15:06:08Wednesday2013-03-20

    இங்கிலாந்து: தீவிரவாதிகளால் சுடப்பட்டு மருத்துவமனையில் இருந்த மலாலா இன்று மீண்டும் பள்ளிக்கு செல்லத் துவங்கினார். பாகிஸ்தானில் உள்ள அனைத்துப் பெண்களும் கல்வி அறிவு பெற வேண்டும் மற்றும் பெண்களின் உரிமைக்காக குரல் கொடுத்து வந்த , 15 வயதான மலாலா யூசபாய் என்ற பாகிஸ்தான் சிறுமி கடந்த அக்டோபர் மாதம் பேருந்து நிறுத்தத்தில் தாலிபான் தீவிரவாதிகளால் சுடப்பட்டார். இந்த துப்பாக்கிச் சூட்டில் மலாலாவின் தலையில் மூளைப்பகுதியின் அருகில் குண்டடிபட்டது. உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மலாலா பின்னர் மேல் சிகிச்சைக்காக இங்கிலாந்து அனுப்பி வைக்கப்பட்டார்.

    இங்கிலாந்தின் பர்மிங்காமில் உள்ள ராணி எலிசபெத் மருத்துவமனையில் மலாலாவுக்கு மண்டை ஓடு மற்றும் காது பகுதிகளில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் உடல் நலம் தெரிய மலாலா ஜனவரி மாதம் இறுதியில் மருத்துவமையில் இருந்து வீடு திரும்பினார்.

    இன்று பர்மிங்காமில் உள்ள பெண்கள் எட்ஜ்பாஸ்டன் உயர்நிலை பள்ளியில் தமது பாடங்களை மீண்டும் படிக்கத் துவங்கி உள்ளாள்.

    . இதுகுறித்து மலாலா கூறிகையில், தான் மிகவும் மகிச்சியாக உணருவதாகவும், தமது ஆசையான மீண்டும் பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்ற கனவு நிறைவேறி விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், தனது பாகிஸ்தானில் உள்ள பள்ளித் தோழர்களை பிரிந்ததை நினைத்து வருத்தப்படுவதாகவும், இருப்பினும் இங்கு தமக்கு புதிய நபர்கள் மற்றும் ஆசிரியர்கள் கிடைத்ததை எண்ணி மகிழ்வதாகவும் அவர் தெரிவித்தார்.

  4. மலாலாவின் பிரதமர் ஆசை, தலிபானின் மிரட்டல், மேற்கத்தைய நாடுகளின் பிரச்சாரம், இவையெல்லாம் எதற்க Says:

    […] [1] https://womanissues.wordpress.com/2013/03/21/malala-going-to-school-is-it-a-big-thing/ […]

  5. மலாலாவின் பிரதமர் ஆசை, தலிபானின் மிரட்டல், மேற்கத்தைய நாடுகளின் பிரச்சாரம், இவையெல்லாம் எதற்க Says:

    […] [1] https://womanissues.wordpress.com/2013/03/21/malala-going-to-school-is-it-a-big-thing/ […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: