சூரியநெல்லி பெண் கற்பழிப்பு வழக்கு, தொடரும் சட்ட முரண்பாடுகள், அரசியன் பின்னணிகள்!


சூரியநெல்லி பெண் கற்பழிப்பு வழக்கு, தொடரும் சட்ட முரண்பாடுகள், அரசியன் பின்னணிகள்!

அரசியல்வாதிகளும் செக்ஸ் தொடர்புகள், தொல்லைகள், தீர்ப்புகள்: இந்திய அரசியல்வாதிகல் செக்ஸ் குற்றங்களில் ஈடுபடுவது ஒன்றும் புதியதல்ல[1]. அப்பொழுதெல்லாம், ஒருவேளை பெரிய இடத்து விவகாரம் என்று ஊடகங்கள் அமுக்கிவிட்டனவா என்பதெல்லாம் தெரியவில்லை. இப்பொழுதே ஊடகங்களில் அதிகமாகவே வந்துக் கொண்டிருக்கின்றன. என். டி. திவாரியின் லீலைகள் வெளிவந்தன[2]. அபிஷேக் சிங்வி என்ற காங்கிரஸ் சட்டவல்லுனரின் செக்ஸ் விளையாட்டு வீடியோவாக வெளியிடப்பட்டது[3]. கேரளாவிலும் அரசியல் செக்ஸ் விவகாரங்கள் அதிகமாகவே இருந்து வந்துள்ளன. அவற்றில் ஐஸ்கிரிம் பார்லர் செக்ஸ்[4], சூரியநெல்லி கற்பழிப்பு, அபயா கொலை வழக்கு என்பவை அதிகமாக பேசப்படுகின்றன. பலமுறை காங்கிரஸ்காரர்கள் தங்களுக்குள்ளேயே இவற்றைப் பற்றி ஒருவர்மீது ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டிருப்பர்[5]. நீதிமன்ற தீர்ப்புகளும் மாற்றிக் கொண்டே இருக்கின்றன.

கேரளாவில் காங்கிரஸ்-கம்ய்யூனிஸ்ட் வாத-விவாதங்கள்: சூரியநெல்லி மாணவி பாலியல் பலாத்கார வழக்கு கேரள அரசியலில் நெடுங்காலமாகவே பிரச்சினையாக, சர்ச்சையாக இருந்து வருகிறது. காங்கிரஸ்-கம்யூனிஸ்ட் வாதங்கள்-விவாதங்கள் இந்த விஷயத்தில் பலமுறை ஆபாசத்தின் எல்லைகளைக் கடந்துள்ளன. இருப்பினும், கற்பழிக்கப்பட்ட அப்பெண்ணிற்கு நியாயம் கிடைக்கும் என்பதைவிட ஊடக-தொந்தரவு, மீடியா-அவதூறு, அரசியல்-தாக்குதல் என பலவற்றிற்கும் அப்பெண் அகப்பட்டிருக்கிறாள். கேரளா காங்கிரஸ் எம்.பி. கே. சுதாகரன் விபச்சார வழக்கு, கற்பழிப்பு வழக்கு இரண்டும் வேறானது[6], அவற்றை அவ்விதமாகத்தான் விசாரிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்[7]. அரசியல்வாதிகளிடம் அத்தகைய வாதங்கள் நடந்தாலும், ராஜ்யசபா துணைத் தலைவர், பி.ஜே.குரியனையும் சேர்க்க உத்தரவிட வேண்டும்’ எனக் கோரி, அந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண், தாக்கல் செய்த மனுவை, தொடுபுழா செஷன்ஸ் கோர்ட், 29-06-2013 அன்று தள்ளுபடி செய்தது[8] வியப்பாக இருந்ந்தது. கடந்த மார்ச்சில் இவ்வழக்கில் சம்பந்தபட்ட 31பேருக்கு பெயில் வழங்கப்பட்டது[9].

தரமராஜனும், குரியனும், சாட்சியமும்: கடந்த, 1996ல், கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், சூரியநெல்லி கிராமத்தைச் சேர்ந்த, 17 வயது மாணவி கடத்தப்பட்டு, பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, பலரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில், காங்கிரஸ் மூத்த தலைவரும், ராஜ்யசபாவின் தற்போதைய துணை தலைவருமான, பி.ஜே.குரியனுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. ஆனாலும், மாணவி பலாத்கார வழக்கில், அவர் சேர்க்கப்படவில்லை. இந்நிலையில், இந்த பலாத்கார வழக்கில், முக்கிய குற்றவாளி என, அறிவிக்கப்பட்டு, சமீபத்தில், சுப்ரீம் கோர்ட்டால் தண்டனை விதிக்கப்பட்ட, தர்மராஜன் என்பவர், சமீபத்தில், மீடியாக்களுக்கு அளித்த பேட்டியின் போது, “சூரியநெல்லி மாணவி பலாத்கார வழக்கில், பி.ஜே.குரியனுக்கும் தொடர்பு உண்டு. குமுளி விருந்தினர் இல்லத்தில், மாணவி தங்கியிருந்த போது, அங்கு, குரியனை காரில் அழைத்துச் சென்று விட்டேன்’ என, தெரிவித்தார். அதையடுத்து குரியனிடம் மறு விசாரணை செய்ய வேண்டும் என பொது நலன் வழக்குகள் பதியப்பட்டன[10].

மாறிய தர்மராஜன், மாறிய சாட்சியங்கள்: ஆனாலும், பின்னர், இந்தத் தகவலை, தர்மராஜன் மறுத்தார். “நான் ஒரு போதும், குரியனை பார்த்ததில்லை. மீடியாக்களுக்கு பேட்டி அளித்த போது, போதையில் இருந்தேன்’ என்று கூறினார். இதற்கிடையில், “தர்மராஜன் தெரிவித்த புகாரின் அடிப்படையில், சூரியநெல்லி மாணவி பலாத்கார வழக்கில், பி.ஜே.குரியனையும், ஒரு குற்றவாளியாக சேர்க்க வேண்டும்’ எனக்கோரி, அந்த சம்பவத்தில், பாதிக்கப்பட்ட பெண், தொடுபுழா செஷன்ஸ் கோர்ட்டில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். இந்த மனு, நேற்று விசாரணைக்கு வந்த போது, “அது விசாரணைக்கு உகந்தது அல்ல’ எனக் கூறி, செஷன்ஸ் நீதிபதி, ஆப்ரகாம் மேத்யூ தள்ளுபடி செய்தார். பிறகு மறுபடியும் மேல் முறையீடு என்ற சடங்கு ஆரம்பிக்குமா, இன்னொரு 20 வருடங்கள் சென்றுவிடுமா? அப்பெண்ணின் கதியென்ன? குற்றம் செய்தவர்கள் இப்படியேத் தப்பித்துக் கொண்டு காலங்கடத்திவிடுவார்களா, காலம் சென்றுவிடுமா? பிறகு வழக்குகள் செத்துவிடுமா?

வேதபிரகாஷ்

© 29-06-2-13


[7] Congress MP from Kerala K. Sudhakaran has kicked up a political storm by allegedly making a defamatory statement against the victim of Suryanelli rape case . Hitting out at Sudhakaran, Kerala opposition leader V.S. Achuthanandan said: “Sudhakaran’s statement is not befitting of a member of Parliament.
If Sudhakaran had a girl child would he have dared to make a statement like that?”
The case that created a storm in Kerala in 1996, returned to limelight recently following a Supreme Court verdict setting aside a Kerala High Court verdict discharging 35 of the 36 accused in the case.
Though the victim, who was then 16-year-old, had repeatedly alleged that Rajya Sabha deputy chairman P.J. Kurien was one of the many who gangraped her over a period of 40 days, the SC has discharged him.
Meanwhile, Sudhakaran stood by his statement saying rape cases and prostitution cases should be treated differently. Read more at: http://indiatoday.intoday.in/story/suryanelli-victim-congress-mp-k-sudhakaran-doubts-character/1/250642.html

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , ,

ஒரு பதில் to “சூரியநெல்லி பெண் கற்பழிப்பு வழக்கு, தொடரும் சட்ட முரண்பாடுகள், அரசியன் பின்னணிகள்!”

  1. ஐந்து மும்பை நடிகைகள் சொகுசு விபச்சாரம் – கையும், களவுமாக கைது! | பெண்களின் நிலை Says:

    […] [8] https://womanissues.wordpress.com/2013/06/30/suryanelli-gang-rape-case-justice-delayed-continuously-d… […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: