சுனந்தா புஷ்கர்-சசிதரூர் – பலதார திருமணம், சாவில் முடிந்தது ஏன் – இஸ்லாமிய தீவிரவாதிகளல் துரத்தியடிக்கப் பட்ட ஒரு இந்து பெண்ணின் சோகமான கதை (1)


சுனந்தா புஷ்கர்-சசிதரூர் – பலதார திருமணம், சாவில் முடிந்தது ஏன் – இஸ்லாமிய தீவிரவாதிகளல் துரத்தியடிக்கப் பட்ட ஒரு இந்து பெண்ணின் சோகமான கதை (1)

Tarar-sasi-sunanda twitting break

Tarar-sasi-sunanda twitting break

மர்மமான முறையில் இறந்து கிடந்த சுனந்தா புஷ்கர்: டெல்லியில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலான லீலாவில் மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் (வயது 52) லீலா பேலஸ் ஹோட்டல், அறை எண் 345ல் மர்மமான முறையில் வெள்ளிக்கிழமை இரவு இறந்து கிடந்தார்[1].  இரவு 8.30 மணியளவில் அவர் படுத்தநிலைல் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது[2]. சம்பவ இடத்துக்கு விரைந்த தில்லி போலீஸார் அவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்த விசாரணை தீவரமாக நடைபெற்றுவருகிறது. உடம்பின் மீது எந்த வித காயங்கள் எதுவும் காணப்படவில்லை என்றாலும் திடீர் மரணம் காரணமாக சந்தேகங்கள் எழுந்துள்ளன. சுனந்தா புஷ்கர் இறந்து கிடந்த தகவலை தில்லி போலீஸாருக்கு அமைச்சர் சசி தரூரே தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்ததாகவும், முதல்கட்ட விசாரணையில் இது தற்கொலையாக இருக்கலாம் எனக் கருதப்படுவதாகவும் தில்லி போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன[3]. ஓட்டலில் தங்கியிருந்தபோது அவருக்கு வந்த தொலைபேசி அழைப்புகளை காவல்துறை ஆய்வு செய்துவருகிறது. மேலும் ஓட்டல் ஊழியர்களிடமும் விசாரணை நடந்துவருகிறது. ஓட்டலின் ரகசிய காமிராவையும் ஆய்வு செய்ய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

Sunanda Sasi

Sunanda Sasi

இறப்பைப் பற்றி போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது: இது குறித்து பேசிய சசிதருரின் செயலாளர் அபினவ் குமார், 17-01-2014 அன்று காலையிலேயே சுனந்தாவின் உடல்நிலை திடீரென பாதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். இவர்தான் சரோஜினிநகர் போலீஸ் ஸ்டேஷனுக்கு போன் செய்து விவரத்தைத் தெர்வித்துள்ளார்[4]. இன்று காலை (18-01-2014) அவருக்கு பிரேத பரிசோதனை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது[5].  சசி தரூர் கேரளாவை சேர்ந்தவர், திருவனந்தபுரத்தில் இருந்து காங்கிரஸ் சார்பில் எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டவர். 2009 தேர்தலில் சிபிஐ கட்சிக்காரரைத் தோற்கடித்து வெற்றிப் பெற்றவர், அமைச்சரானவர். முதலில் வெளியுறவுத்துறை அமைச்சகம் கொடுக்கப் பட்டது. ஆனால், ஐபிஎல் சர்ச்சை-விவகாரத்தினால் பதவி பறிக்கப் பட்டது. அப்பொழுது தான், இவரை சுனந்தாவுடன் இணைத்துப் பேசப் பட்டது[6]. ஆகஸ்ட் 2010ல் சுனந்தாவை திருமணம் செய்து கொண்டார். திருமணமாகியப் பிறகு, சுனந்தாவின் தந்தை மற்றும் மகன் பாட்டியாலாவில் வசித்து வருகின்றனர். தாயார் இரண்டடு வருடங்களுக்கு முன்னர் இறந்து விட்டார்[7]. இந்த சர்ச்சைக் குறித்து கேரள காங்கிரஸ்காரர்கள் இன்னும் கருத்தை வெளியிடவில்லை.

Meher Tarar the Paki-journalist or lover of Sasi

Meher Tarar the Paki-journalist or lover of Sasi

பாகிஸ்தான் பெண்ணுடன் தொடர்பு: சசி தரூருக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் மெஹர் தரர் (Mehr Tarar) ஒருவருடன் தொடர்பு இருப்பதாக சுனந்தா புஷ்கர், டுவிட்டர் இணையதளத்தில் சில தினங்களுக்கு முன்பு புதன்கிழமை கருத்து வெளியிட்ட நிலையில் நிகழ்ந்துள்ள இந்த மரணம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது[8]. இந்தச் சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 1990ல் காஷ்மீரில் பொமை என்ற இடத்தில் இருந்த தங்களது வீட்டை இஸ்லாமிய தீவிரவாதிகளால் கொளுத்தப்பட்டது. இதனால், அவர்கள் குடும்பம் வெளியேறியது. சஞ்சய் ரைனா என்பவரை சுனந்தா திருமணம் செஉது கொண்டாலும், இரண்டே வருடங்களில் விவாக ரத்து ஏற்பட்டது. பிறகு சுஜித் மேனன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பிறந்த மகன் தான் சிவ், இப்பொழுது தாதாவோடு பாட்டியாலாவில் இருக்கிறார்.

சசி தரூரின் பெண்கள் தொடர்புகளால் உறவு பாதிக்கப் பட்டது: ஏற்கெனவே இரு முறை திருமணமாகி விவாகரத்து பெற்ற மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் சசி தரூர் கடந்த 2012இல் சுனந்தா புஷ்கரை மணந்தார். சுனந்தாவும் இரு முறை திருமணம் செய்து விவாகரத்து பெற்றவர் ஆவார். இந்நிலையில், தன் கணவர் சசி தரூருக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த மெஹர் தரார் என்ற 45 வயதுள்ள பெண் பத்திரிகையாளருடன் தொடர்பு இருப்பதாக சுனந்தா, டுவிட்டர் இணையதளத்தில் புதன்கிழமை ஒரு பதிவை வெளியிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த சசி தரூர், தன்னுடைய ட்விட்டர் கணக்கை யாரோ கைப்பற்றி விட்டதாக கூறி, நிலைமையை சமாளிக்க முயன்றார். ஆனால், அதற்குள், தன் கணவரை, மெஹர் தரார் பறிக்க நினைப்பதாக, சுனந்தா பேட்டியளித்து, சசி தரூருக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தினார். “மெஹர் ஒரு ஐ.எஸ்.ஐ., உளவாளி. அவரால் தன் கணவர் உயிருக்கு “ஆபத்து ஏற்படக்கூடும். அவர், மற்றொரு பெண்ணின் கணவரை கைப்பற்ற முயற்சிக்கிறார்’ என்றெல்லாம், சுனந்தா புகார் கூறியிருந்தார். இதற்கு மெஹர் மறுப்பு தெரிவித்திருந்த நிலையில், விவகாரம் குறித்து ஒரு சில நிருபர்களிடம் பேசிய சுனந்தா, தான் சசி தரூரை விவாக ரத்து செய்யப் போவதாகவும் கூறியிருந்தார்.இது தொடர்பாக, கணவன், மனைவிக்குள் பிரச்னை ஏற்பட்டது. இதை மறுத்து சசி தரூர், “தானும் தனது மனைவி சுனந்தாவும் மகிழ்ச்சிகரமான தம்பதியாக வாழ்ந்து வருகிறோம். சுனந்தாவுக்கு கடந்த வாரம் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிசிச்சை பெற்றார். அவர் தற்போது ஓய்வெடுத்து வருகிறார்’ என்று டுவிட்டரில் கருத்து தெரிவித்திருந்தார்.

சர்ச்சைகளின்நாயகன்சசிதரூர்[9]: இந்தியாவில் “ட்விட்டர்’ சமூக வலைதளத்தை பயன்படுத்துபவர்களில் முன்னணியில் இருப்பவர் சசி தரூர். ஏதாவது ஒரு விஷயத்தை பற்றி, ட்விட்டரில் செய்தி வெளியிட்டுக் கொண்டே இருப்பவர் என்பதால், அவரை ஏராளமான பேர் பின்தொடர்கின்றனர். 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர், அவரை பின்தொடர்வதாக, ட்விட்டர் விவரம் தெரிவிக்கிறது.விமானத்தில், குறைந்த கட்டண வகுப்பு பயணத்தை, “கால்நடை வகுப்பு’ என்று கூறியதாலும், தேசிய கீதம் பாடும்போது அமெரிக்க நடைமுறைப்படி, நெஞ்சு மீது கை வைத்து உறுதி கூறும்படி தெரிவித்ததாலும், சர்ச்சையில் சிக்கினார். ஐ.பி.எல்., கிரிக்கெட் அணி தொடர்பாக, அப்போதைய ஐ.பி.எல்., தலைவர் லலித் மோடியுடன் மோதல், குஜராத் முதல்வர் நரேந்திர மோடியுடன் மோதல் என, அடுத்தடுத்து பல்வேறு பிரச்னைகளில் சிக்கியவர் சசி தரூர்.
தற்போது மனைவி தற்கொலை செய்து கொண்டுள்ளதால், சசி தரூரின் அரசியல் வாழ்வுக்கு பெரும் நெருக்கடி ஏற்படும் நிலை உருவாகியுள்ளது

.

பதவிபறிபோககாரணமானசுனந்தா![10]: சசி தரூர், ஐ.நா., சபையில் உதவி பொதுச்செயலாளராக பதவி வகித்தவர். இந்தியா சார்பில், ஐ.நா., பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட அவர், அதில் தோல்வியுற்றதால் தாயகம் திரும்பினார். காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த அவர், மத்திய அமைச்சராகவும் பொறுப்பேற்றார்.இந்நிலையில், அவருக்கும், பெண் தொழிலதிபரான சுனந்தாவுக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்து கொண்டனர். மணமான சில மாதங்களிலேயே, கேரளாவுக்கான ஐ.பி.எல்., கிரிக்கெட் அணியில், சுனந்தாவுக்கு பங்கு வாங்கிய சர்ச்சை வெடித்தது.முறைகேடான வழியில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை வாங்கியதாக, சுனந்தா மீதும், அதற்கு உதவியாக இருந்ததாக சசி தரூர் மீதும் புகார் கிளம்பியது. இதையடுத்து, சசி தரூரை, ராஜினாமா செய்யும்படி, காங்கிரஸ் மேலிடம் உத்தரவிட்டது. பதவி இழந்த சசி தரூர், தொடர்ந்து அரசியலில் நீடித்தார். சில மாதங்களுக்கு முன் விஸ்தரிக்கப்பட்ட மத்திய அமைச்சரவையில், அவருக்கு மீண்டும் இடம் அளிக்கப்பட்டது. முந்தைய திருமணங்கள் மூலம் சசி தரூருக்கு இரு மகன்கள் உள்ளனர். முதல் திருமணத்தின் மூலம் சுனந்தாவுக்கு, ஷிவ் மேனன் என்ற மகன் இருக்கிறார்.

பாக்., பெண்நிருபர்அதிர்ச்சி: சாவதற்கு முன் ட்விட்டரில் செய்தி அனுப்பியுள்ள சுனந்தா, “எது நடக்கவேண்டுமோ, அது நடந்தே தீரும். அதை சிரித்துக்கொண்டே ஏற்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.” என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை ஏன் தலைப்பு செய்தியாக வேண்டும்’ என்று கேள்வி எழுப்பியுள்ள சுனந்தா, பாகிஸ்தான் பெண் நிருபர் மெஹர், பொய் சொல்வதாகவும் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். சுனந்தா மரணத்திற்கு பிரதமர் மன்மோகன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரச்னைக்கு காரணமான பாக்., பெண் நிருபர் மெஹர், தான் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளதாக, தெரிவித்துள்ளார்[11].

வேதபிரகாஷ்

© 16-01-2014


[1] மாலைமலர், சசிதரூர்மனைவிசுனந்தாமரணம்: ஓட்டல்ஊழியர்களிடம்விசாரணைதீவிரம், பதிவு செய்த நாள் : சனிக்கிழமை, ஜனவரி 18, 3:36 AM IST

[7] Sunanda’s parents own a house in Jammu. On Friday, a servant said Sunanda’s father was living with his son in Patiala after Sunanda’s mother died nearly two years back.

http://indianexpress.com/article/india/india-others/shashi-tharoors-wife-sunanda-pushkar-found-dead-in-a-delhi-hotel-room/

[8] தினமணி, சசிதரூரின்மனைவிசுனந்தாமர்மச்சாவு, By dn, புதுதில்லி, First Published : 18 January 2014 12:54 AM IST

[10] தினமலர், மத்தியஅமைச்சர்சசிதரூர்மனைவிடில்லிஓட்டலில்தற்கொலை?, சனிக்கிழமை, 18-01-2014

[11] The woman Mrs Tharoor had accused of having an affair with her husband also reacted with shock at the news. She wrote on Twitter: “What the hell. Sunanda. Oh my God.” And then added: “I just woke up and read this. I’m absolutely shocked. This is too awful for words. So tragic. I don’t know what to say. Rest in Peace, Sunanda.”

http://www.telegraph.co.uk/news/worldnews/asia/india/10580265/Indian-ministers-wife-found-dead-after-exposing-alleged-affair-on-Twitter.html

குறிச்சொற்கள்: , , , , , , , , , ,

5 பதில்கள் to “சுனந்தா புஷ்கர்-சசிதரூர் – பலதார திருமணம், சாவில் முடிந்தது ஏன் – இஸ்லாமிய தீவிரவாதிகளல் துரத்தியடிக்கப் பட்ட ஒரு இந்து பெண்ணின் சோகமான கதை (1)”

  1. nedunchezhian velayutham Says:

    thanks for the informative news

  2. சுனந்தா மர்ம மரணத்தில் தொடரும் மர்மங்கள் – பலதார திருமணம், சாவில் முடிந்தது ஏன் – இஸ்லாமிய தீ Says:

    […] [4] https://womanissues.wordpress.com/2014/01/18/sunanda-pushkar-sasi-tarur-polygamy-ended-with-death-the… […]

  3. திவாரி திருமணம், திக் விஜய் கூடாத உறவு, சிங்வி செக்ஸ், கேரள காங்கிரசாரின் செக்ஸ் லீலைகள் – இப்ப Says:

    […] [14] https://womanissues.wordpress.com/2014/01/18/sunanda-pushkar-sasi-tarur-polygamy-ended-with-death-the… […]

  4. சுனந்தா மர்ம மரணத்தில் தொடரும் மர்மங்கள் – பலதார திருமணம், சாவில் முடிந்தது ஏன் – இஸ்லாமிய தீவ Says:

    […] [1] https://womanissues.wordpress.com/2014/01/18/sunanda-pushkar-sasi-tarur-polygamy-ended-with-death-the… […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: