கல்லூரி மாணவி, பாலியல் பலாத்காரம் செய்த அக்காள் புருஷன், கொலையில் முடிந்த நிலை – அடைக்கலத்திற்கு வந்த பெண்ணின் சோகக் கதை.


கல்லூரி மாணவி, பாலியல் பலாத்காரம் செய்த அக்காள் புருஷன், கொலையில் முடிந்த நிலை – அடைக்கலத்திற்கு வந்த பெண்ணின் சோகக் கதை.

 

மாத்யூ பினுராஜ் கொலை செய்யப் பட்ட காமுகன்

மாத்யூ பினுராஜ் கொலை செய்யப் பட்ட காமுகன்

சப்இன்ஸ்பெக்டரின் மகன் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டது: கற்பழிக்க முயன்ற, அக்காவின் கணவரை, கழுத்தை அறுத்து கல்லூரி மாணவி, கொலை செய்த சம்பவம், மாதவரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்று வழக்கம் போல ஊடகங்கள் செய்தியைக் கொடுத்துள்ளது. மாதவரம் பால்பண்ணை, டெலிபோன் காலனி, 1வது தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர், சோபன்ராஜ். ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர். இவருடைய மகன் மேத்யூ பினுராஜ், 32 [Mathew Binuraj]. அண்ணா நகரில், ரியல் எஸ்டேட் தொழிலும், பழைய கார்களை வாங்கி, விற்கும் தொழிலும் செய்து வந்தார். அவரது மனைவி, ஹேமா, 26, மாதவரத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் / கார்புரேசன் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலைபார்த்து வருகிறார்[1]. கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு, ஒன்பது ஆண்டுகளுக்கு முன் திருமணமானது. எட்டு வயதில் மெர்லின் ஜோசப் [Merlin Joseph] ஒரு மகன் உள்ளான்[2].

 

மாத்யூ பினுராஜ் கொலை செய்யப் பட்ட காமுகன் மாதவரம்

மாத்யூ பினுராஜ் கொலை செய்யப் பட்ட காமுகன் மாதவரம்

அனாதையான பெண்களின் நிலை: போலீஸ் விசாரணையில் கைதான கல்லூரி மாணவி குறித்து உருக்கமான தகவல்கள் கிடைத்து உள்ளன[3]. அது வருமாறு:- ஹரிபிரியாவின் தந்தை கோபால். தாயார் பாக்கியலட்சுமி. உடன் பிறந்தவர்கள் ஹேமா, சுகன்யா. ஹரிபிரியா கடைசி மகள். முதல் 2 மகள்களுக்கு திருமணம் நடந்த நிலையில் தாயார் பாக்கியலட்சுமி கடந்த 1997-ல் இறந்து விட்டார். 2006-ல் தந்தை கோபாலும் இறந்து விட்டார். இதனால் ஹரிபிரியா அனாதை ஆனார். மூத்த மகளான ஹேமா, தனது தங்கை ஹரிபிரியாவை தனது வீட்டிலேயே தங்க வைத்து கடந்த 7 வருடங்களாக மகள்போல் பாவித்து வளர்த்து வந்தார். தனது வீட்டுக்கு வந்த நாள் முதல் மைத்துனி ஹரிபிரியா மீது மேத்யூக்கு தவறான மோகம் ஏற்பட்டது. கடந்த 4 ஆண்டுகளாக அவருக்கு பாலியல் ரீதியான தொந்தரவு கொடுத்து வந்தார். அதாவது, ஏழ்மை மற்றும் அடுத்தவர் தயவில் அண்டிக் கிடக்கவேண்டிய நிலையைத்தான் காமக்கயவர்கள் உபயோகித்துக் கொள்ளப் பார்க்கிறர்கள் என்று தெரிகிறது. மேலும், ஒரு பக்கம் சோபன் ராஜ், மாத்யூ பினுராஜ் என்றிருக்கிறது, இன்னொரு பக்கம் கோபால், பாக்கியலட்சுமி, ஹேமா, ஹரிபிரியா என்றெல்லாம் உள்ளது. ஹேமா- மாத்யூ பினுராஜ் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர் என்றும் உள்ளது. பிறகு, இப்படி தொடர்ந்து 7 ஆண்டுகளாக தொந்தரவு செய்து வரும் நிலை, ஹரிபிரியா பொறுத்து வந்த நிலை முதலியவை வேறு காரணங்கள் உள்ளனவா என்றும் நினைக்கத் தோன்றுகிறது. சோபன்ராஜின் நிலை இதில் சூன்யமாக இருப்பதும் சந்தேகமாக இருக்கிறது.

 

மாத்யூ பினுராஜ் கொலைசெய்யப்பட்ட காமுகன்

மாத்யூ பினுராஜ் கொலைசெய்யப்பட்ட காமுகன்

கணவன்மனைவிதகராறு – உள்நோக்கம் கொண்ட கணவன்: இதுபற்றி ஹரிபிரியா தனது அக்காவிடம் கூறி அழுதார். அவர் கணவரை கண்டித்தார். இதனால் ஹேமாவுக்கும், மேத்யூவுக்கும் தகராறு ஏற்பட்டது. தன்னால் தனது அக்காவின் வாழ்க்கை பாதிக்கக்கூடாது என்று கருதிய ஹரிபிரியா, தான் விடுதியில் தங்கி கல்லூரிக்கு சென்று படிப்பதாக அக்காவிடம் கூறினார். ஆனால் அதற்கு ஹேமா மறுத்து விட்டார். இதை அறிந்த மேத்யூ, “நீ விடுதி சென்று படித்தால் உனது அக்காவை நான் விவாகரத்து செய்து விடுவேன். கொலையும் செய்து விடுவேன்” என்று ஹரிபிரியாவை மிரட்டியதாக தெரிகிறது. இதனால் பயந்து போன அவர், அக்காள் கணவரின் பாலியல் தொந்தரவுகளை தாங்கிக்கொண்டு வீட்டில் தங்கி கல்லூரி சென்று வந்தார். இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் அவர் சரியாக படிக்க முடியாமலும் தவித்து வந்து உள்ளார். மாத்யூ பினுராஜ் திட்டமிட்டே, செய்து வந்தது தெரிகிறது, மனைவியை இவ்வாறு பிளாக்மெயில் செய்து, அவளை அடையலாம் என்று காத்துக் கிடந்ததும் தெரிகிறது.

தடுத்த தாயார், மனைவி – ஆனால் பலமுறைமுயற்சி செய்த காமக்கொடூரன்[4]: ஹேமாவின், தாயார், லில்லி மற்றும் தங்கை சுபா, 23, (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஆகியோரும், பினுராஜின் வீட்டில் உடன் தங்கி இருந்தனர். சுபா, பெரம்பூரில் உள்ள தனியார் கல்லூரியில், பி.காம்., இறுதியாண்டு படித்து வருகிறார். தன் வீட்டில் தங்கி இருக்கும் சுபாவை, தன் வலையில் வீழ்த்த, பினுராஜ் பலமுறை முயன்று உள்ளார்[5].  மேத்யூ, சுபாவிவிற்கு கடந்த 7ஆண்டுகளாக அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்தாக கூறப்படுகிறது[6]. தடுத்தும் பலனில்லை, இந்த நிலையில், 01-02-2014 அன்று, நள்ளிரவு 2:00 மணிக்கு, மது போதையில், வீடு திரும்பிய பினுராஜ், சுபாவை அடையும் முயற்சியில் ஈடுபட்டார். அப்போது, அவரது மனைவி மற்றும் மாமியார் ஆகியோர், அவரது வெறிச்செயலை தடுத்தனர். ஆனால், அவர்களை அடித்து, வீட்டிற்கு வெளியில் தள்ளி, கதவை உள்பக்கம் தாழிட்டார். போதையின் உச்சத்தில் தனது மனைவி ஹேமாவின் வாயில் வலுக்கட்டாயமாக மதுவை  ஊற்றி மயக்கமடைய செய்துள்ளார்[7]. அதன்பின், சமையலறையில் பதுங்கி இருந்த சுபாவை கற்பழிக்க முயன்றார்[8].

 

கற்பழிக்கமுயன்றஅக்காகணவரைகழுத்தறுத்துகொன்றகல்லூரிமாணவி[9]: அக்கா கணவரிடம் இருந்து, தன்னை காப்பாற்றி கொள்ள துணிந்த சுபா, அந்த அறையில் இருந்த பெரிய கத்தியால், பினுராஜின் தலையில் பலமாக அடித்தார். அதில், பினுராஜ் மயங்கி விழுந்தார். ஆத்திரம் தணியாத சுபா, பினுராஜின் கழுத்தை அறுத்து கொலை செய்தார். தகவல் அறிந்த, மாதவரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, பினுராஜின் உடலை மீட்டனர். கொலை தொடர்பாக, சுபாவை கைது செய்தனர். கற்பழிக்க முயன்ற அக்கா கணவரை, கொழுந்தியாள் கொன்ற சம்பவம், மாதவரம் பால்பண்ணை பகுதியில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் இந்திய தண்டனை சட்டம் 302–வது சட்டப்பிரிவின் கீழ்  சுபா / ஹரிப்ரியா / ரேகா[10] மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் விசாரணை நடத்திய போலீஸார் ஹரிப்பிரியாவிடம் எழுதி வாங்கிக்கொண்டு மனிதாபிமான அடிப்படையில் விடுவித்தனர்.

 

தற்காப்பிற்காக நடந்த கொலை: இது குறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில் இந்திய தண்டனை சட்டம் 100–வது பிரிவின் கீழ் ஆறு விதமான தற்காப்பு சம்பவங்களில் எதிராளியிடம் இருந்து தற்காத்துக் கொள்ள, பாதிக்கப்படும் நபர் ஆயுதத்தை எடுத்தால் தப்பில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பலாத்கார முயற்சியின் போது, பெண் ஒருவர் தன்னை தற்காத்துக்கொள்ள, என்ன வேண்டுமானாலும், செய்யலாம் என்பதே அதன் அர்த்தமாகும். எனவே 02-02-2014 அன்று காலை வரையிலும் மாணவி ஹரிப்ரியாவை நாங்கள் சிறைக்கு அனுப்பவில்லை. தற்போது அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தாலும், சாதாரண சட்டப்பிரிவின் கீழ் அதனை மாற்றலாமா? என்பது பற்றியும் ஆலோசித்து வருகிறோம் என்றார்[11]. போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் மேற்பார்வையில் வடசென்னை இணை கமிஷனர் ஸ்ரீதர், மாதவரம் துணை கமிஷனர் விமலா, உதவி கமிஷனர் சங்கரலிங்கம், இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தொடர்ந்து ஆலோசித்து வருகிறார்கள்[12]. அருகில் உள்ளவர்கள் மாத்யூ எப்பொழுதும் குடித்து வருவது வழக்கம் மற்றும் நண்பர்களும் அவ்வாறே கலாட்டா செய்து வருகின்றனர் என்று அறிவித்தனர்.

 

ஆதரவு கூறும் மற்றவர்கள்: கல்வியில் ஆர்வம் சந்தர்ப்பவசத்தால் கொலை வழக்கில் சிக்கிய சுபா, கல்வியில் ஆர்வமுள்ள மாணவி. தேர்வுகளில், அவர் 88 சதவீதம் மதிப்பெண்களை பெற்றுள்ளார். தன் அக்கா கணவரின் தொல்லை குறித்து, தனது கல்லூரி தோழிகளிடம் கூறி, பலமுறை அழுதிருக்கிறார். அப்போது அவர்கள், படிப்பை முடித்து, நல்ல வேலையில் சேர்ந்து விட்டால், சுயமாக வாழலாம் என்று அவருக்கு ஆறுதல் கூறியுள்ளனர். அதே போன்று மாணவி சுபாவிற்கு ஆதரவாக, மாதவரம் சுற்றுவட்டாரப் பகுதி அனைத்திந்திய மாதர் சங்கத்தினரும் குரல் கொடுத்துள்ளனர்[13]. என்னதான் இருந்தாலும், தாய்-தந்தையர் இல்லாத நிலையில் இளம்பெண்கள் இவ்வாறு அவதிபடும் நிலையில் தான் இருக்கிறார்கள் என்பது வருத்தப்பட வேண்டிய விசயமாக இருக்கிறது. ஒருபக்கம் அடைக்கலம் தருகிறோம் என்பது, மறுபக்கம் காமத்துடன் நடக்க முயல்வது என்பது குறிப்பிட்ட ஆண்களின் வேலையாக இருக்கிறது. இவர்கள் மாறாவிட்டால், மாற்ரத்தான் வேண்டியுள்ளது.

 

வேதபிரகாஷ்

© 03-02-2014

 

 


[3] தினத்தந்தி, பலாத்காரம்செய்யமுயன்றதால்ஆத்திரம்அக்காள்கணவரைகழுத்தைஅறுத்துகொன்றகல்லூரிமாணவிகைது, பிப்ரவரி 1, 2014.

[6] தினமணி, பலாத்காரமுயற்சியில்அக்காள்கணவர்கொலை: கைதானகல்லூரிமாணவியைவிடுவித்தபோலீஸார், பிப்ரவரி 1, 2014

[9] தினமலர், கற்பழிக்கமுயன்றஅக்காகணவரைகழுத்தறுத்துகொன்றகல்லூரிமாணவி, பிப்ரவரி 1, 2014

[11] தினமணி, பலாத்காரமுயற்சியில்அக்காள்கணவர்கொலை: கைதானகல்லூரிமாணவியைவிடுவித்தபோலீஸார், பிப்ரவரி 1, 2014

Advertisements

குறிச்சொற்கள்: , , , , ,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: