ஜேம்ஸ் வசந்தன், கமல் ஹஸன் வழியில் செல்கிறாரா அல்லது கிருத்துவத்தில் பலதார மணம், சேர்ந்து வாழ்தல் முதலியவை அனுமதிக்கப் படுகின்றனவா?


ஜேம்ஸ் வசந்தன், கமல் ஹஸன் வழியில் செல்கிறாரா அல்லது கிருத்துவத்தில் பலதார மணம், சேர்ந்து வாழ்தல் முதலியவை அனுமதிக்கப் படுகின்றனவா?

ஜேம்ஸ் வசந்தின் மனைவி சுகந்தி புகார் கொடுத்தார்

ஜேம்ஸ் வசந்தின் மனைவி சுகந்தி புகார் கொடுத்தார்

இன்னொருவர்  மனைவியுடன்  குடும்பம்  நடத்துவதாக  அவரது  மனைவி  பரபரப்பு  புகார்: கல்லூரி பேராசிரியராக இருந்து தொலைக்காட்சி தொகுப்பாளராகி சுப்பிரமணிபுரம் படத்தின் மூலம் இசை அமைப்பாளர் ஆனவர் ஜேம்ஸ் வசந்தன், என்று ஊடகங்கள் விவரிக்கின்றன. அத்தகைய மெத்தப் படித்தவர், இல்லறத்தை அறுப்பது ஏனென்று தெரியவில்லை. அவர் மீது அவரது மனைவி இன்னொருவர் மனைவியுடன் குடும்பம் நடத்துவதாக அவரது மனைவி பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார்[1].  அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இது தொடர்பாக அவர் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார்[2]. பசங்க, நாணையம், சுப்ரமணியபுரம், ஈசன் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்தவரும், தொலைகாட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் பணிபாற்றுபவர் ஜேம்ஸ்வசந்தன். ஒரு இசைப்பள்ளியையும் வைத்து நடத்துகிறார்[3]. இவரது மனைவி சுகந்தி இன்று அடையாறு மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது: “நான் சென்னை கொட்டிவாக்கத்தில் வசிக்கிறேன்[4].  எனக்கும் திரைப்பட இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனுக்கும் கடந்த 1991-ல் திருச்சியிலுள்ள கிறிஸ்துவ ஆலயத்தில் கிறிஸ்துவ முறைப்படி திருமணம் நடந்தது. 23 வருடங்கள் ஆகிவிட்டது. எங்களுக்கு  22 வயதில் ஷில்பா என்ற மகளும், 17 வயதில் சச்சின் என்ற மகனும் உள்ளனர். ஆனால், எனது கணவன் ஜேம்ஸ் வசந்தனுக்கு அதிக பெண்களுடன் தவறான தொடர்பு இருந்ததால் எங்களுக்குள் அடிக்கடி கருத்துவேறுபாடு ஏற்பட்டு வந்தது.”

ஜேம்ஸ் வசந்தின் மனைவி புகார் கொடுத்தார்.ஆகஸ்ட் 2013

ஜேம்ஸ் வசந்தின் மனைவி புகார் கொடுத்தார்.ஆகஸ்ட் 2013

கிறிஸ்தவ  அமைப்பிற்காக  நிகழ்ச்சி   தயாரிக்க   தொழிலதிபரின்  மனைவிக்கும்  என்  கணவருக்கும்  நட்பு  ஏற்பட்டது: சுகந்தி தொடர்கிறார்,  “என் கணவர் சைதாப்பேட்டையில் உள்ள ஒரு கிறிஸ்தவ அமைப்பிற்காக நிகழ்ச்சி தயாரிக்க பிரபல தொழில் அதிபருக்கு சொந்தமான பொழுதுபோக்கு பூங்காவில் படப்பிடிப்பு நடத்தச் சென்றார். அப்போது தொழிலதிபரின் மனைவிக்கும் என் கணவருக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது.

Hema-James-Vasanthan1

Hema-James-Vasanthan1

இதை அறிந்த அந்த தொழில் அதிபர் மனைவியையும், குழந்தையையும் விரட்டி விட்டுவிட்டார். அவரை அழைத்துக் கொண்டு வந்து இவர்கள் நம் வீட்டிலேயே தங்கட்டும், எல்லோரும் சேர்ந்து குடும்பம் நடத்தலாம் என்றார். நான் அதற்கு சம்மதிக்க வில்லை. இதனால் அவருக்கு தனியாக வீடு எடுத்துக் கொடுத்து குடியமர்த்தினார். எனது குழந்தைகளையும் அழைத்துச் சென்று விட்டார். இதுகுறித்து நான் போலீசில் புகார் செய்ததும் குழந்தையை ஒப்படைத்து விட்டார்.

சச்சின் ஜேம்ஸ், தேஜஸ் ஜேம்ஸ் மற்றும் ஹேமா ஜேம்ஸ்

சச்சின் ஜேம்ஸ், தேஜஸ் ஜேம்ஸ் மற்றும் ஹேமா ஜேம்ஸ்

இப்போது அந்த பெண்ணை அவர் திருமணம் செய்து கொண்டதாக எனக்கு தகவல் கிடைத்திருக்கிறது[5]. வி.ஜி.பி. பிரசாத் தாஸின் முன்னாள் மனைவி ஹேமலதாவுடன் தவறான தொடர்பு வைத்திருந்த அவர் தற்போது தனது மனைவி என்று வெளிப்படையாக சொல்லி வருகிறார். உண்மையான மனைவி நான் உயிரோடு இருக்கும்போது என்னிடம் விவாகரத்தும் வாங்காத நிலையில் வேறொரு பெண்ணை மனைவி என்று எனது கணவன் ஜேம்ஸ் வசந்தன் சொல்லிவருவது எனக்கு கடுமையான மன உளைச்சலை உண்டாக்குகிறது[6]. இதனால் அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்”, என்று அந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளார்[7]. இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்[8].

VGP studios VGP Prasad Das

VGP studios VGP Prasad Das

2013ல் பெண்ணுடன் நிலதகராறில் ஈடுபட்டது: நில விற்பனை விவகாரத்தில் தன் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது என்றும் இதுகுறித்து தலைமை செயலாளரிடம் புகார் செய்யப் போவதாகவும் இசையமைப்பார் ஜேம்ஸ் வசந்தன் தெரிவித்தார். இவர் மீது ராதா வேணு பிரசாத் (வயது 65) என்பவர் நீலாங்கரை போலீசில் புகார் கொடுத்தார். அதனடிப்படையில், கொலை மிரட்டல், பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் ஜேம்ஸ் வசந்தன் கடந்த 4-ந் தேதி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஜாமீனில் வெளியில் வந்த ஜேம்ஸ்வசந்தன், தன் மனைவி ஹேமா மற்றும் சின்னத்திரை கலைஞர்களுடன் நேற்று கூட்டாக நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது ஜேம்ஸ் வசந்தன் கூறியதாவது: “எங்களுக்கு பாலவாக்கத்தில் சொந்தமாக ஒரு கிரவுண்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தை ராதா வேணுபிரசாத் விலைக்கு கேட்டார். நாங்கள் அவருக்கு விற்பனை செய்ய மறுத்து விட்டோம். அந்த நிலத்தில் 2011-ம் ஆண்டு வீடு கட்டத் தொடங்கினோம். இதனால், எங்கள் மீது ராதா வேணுபிரசாத்துக்கு பகை உணர்வு ஏற்பட்டது. அதன் பின்னர் ஒவ்வொரு நாளும் அவர் எங்களுக்கு மன ரீதியாக பல தொந்தரவுகளை கொடுக்கத் தொடங்கினார். வீடுகட்ட திட்ட அனுமதி பெற விடாமல் தடுத்தார். எனினும் நாங்கள் கடுமையாக போராடி திட்ட அனுமதி பெற்று வீட்டை கட்டி முடித்தோம். தற்போது, அங்கு வசித்து வருகிறோம். இந்த நிலையில், மனதில் பகையுடன் இருக்கும் ராதா வேணுபிரசாத், தன் செல்வாக்கை பயன்படுத்தி, ஒரு அசிங்கமான புகாரை கொடுத்து, என்னை கைது செய்ய வைத்துள்ளார். என் மீது கெட்ட நோக்கத்துடன், பொய்யான கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எதற்காக கைது செய்யப்பட்டுள்ளேன் என்பதை கூட தெரிவிக்காமல், போலீசார் என்னை கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். இந்த சம்பவம் அனைத்தையும் சுதந்திரமான அமைப்பை கொண்டு விசாரணை நடத்தி, உண்மை நிலவரத்தை கண்டறிந்து, தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து, எனக்கு நீதி வழங்க வேண்டும் என்று தலைமை செயலாளரை நேரில் சந்தித்து மனு கொடுக்க உள்ளேன்,” என்றார்[9].

பெண்ணிடம் தகராறு 2013

பெண்ணிடம் தகராறு 2013

ஜேம்ஸ்  வசந்தன்  என்னை  ஆபாசமாக  திட்டினார். அவர்  மீது  வழக்கு  பதிவு  செய்ய  வேண்டும்’’-   பெண்ணீன்  புகார் (2013): இதுதொடர்பாக இருவருக்கும் பல முறை வாய்த்தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், ராதா பிரசாத் நீலாங்கரை போலீசில் புகார் அளித்தார். அதில் “ஜேம்ஸ் வசந்தன் என்னை ஆபாசமாக திட்டினார். அவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்’’ என்று கூறி இருந்தார்[10]. இதுகுறித்து போலீசார் மிரட்டல் மற்றும் பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். வீட்டில் இருந்த ஜேம்ஸ் வசந்தனை கைது செய்தனர். பின்னர், ஆலந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்த இருந்தனர். இதையறிந்த பத்திரிகை நிருபர்கள் ஏராளமானோர் அங்கு வந்திருந்தனர். ஜேம்ஸ் வசந்தனை போலீசார் கோர்ட்டுக்கு அழைத்து வந்தபோது, அங்கிருந்த நிருபர்கள், உங்களை எதற்காக கைது செய்தனர் என கேட்டனர். அதற்கு அவர் பதிலளிக்கும்போது, போலீசார் எதிர்ப்பு தெரிவித்தனர்.

சர்ச்சைகளில் சிக்கியிருக்கும் ஜேம்ஸ் வசந்தன்

சர்ச்சைகளில் சிக்கியிருக்கும் ஜேம்ஸ் வசந்தன்

பதிலுக்கு ஜேம்ஸ் வசந்தன் கொடுத்த விளக்கம் (ஆகஸ்ட்.2013): அதற்கு ஜேம்ஸ் வசந்தன், ‘‘பத்திரிகையாளர்களிடம் பேசுவதற்கு எனக்கு உரிமை உள்ளது. இதை நீங்கள் தடுக்கக்கூடாது. அப்படி தடுத்தால், என்னை பேச விடாமல் தடுக்கும் உங்களை பற்றி அனைவரிடமும் கூறுவேன்’’ என்றார். இதனால், சிறிது சலசலப்பு ஏற்பட்டது. பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: “நான் பாலவாக்கம் பீச் ரோட்டில் 2 வீடுகளை கட்டினேன். அந்த வீட்டை கட்டும்போது அதன் பின்புறம் உள்ள ராதா பிரசாத் என்ற பெண் என்னிடம் தகராறு செய்து, பல்வேறு தொல்லைகள் கொடுத்தார். நான் சிஎம்டிஏ அனுமதி பெற்று முறையாக வீடு கட்டியுள்ளேன். ஆனால், அவர்கள் முறையில்லாமல் கட்டியுள்ளனர். எனது மீது உள்ள காழ்ப்புணர்ச்சியில் பல்வேறு புகார்களை என்மீது அவர் கொடுத்துவருகிறார். இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது. கடந்த 2ம் தேதி (02-08-2013) என் மகனை பள்ளியில் விட்டுவிட்டு காரில் வரும்போது, ராதா பிரசாத் அவரது காரை என் கார் மீது மோதுவதுபோல் வந்து சென்றார். ஆனால், இதுபற்றி நான் போலீசில் புகார் கூறவில்லை. இந்நிலையில் உதவி கமிஷனர் தலைமையில் சுமார் 50க்கு மேற்பட்ட போலீசார் என் வீட்டுக்கு வந்து என்னை கைது செய்வதாக கூறினர். நான் எதற்கு என்னை கைது செய்கிறீர்கள் என கேட்டேன். அதற்கு என்னை வலுக்கட்டாயமாக இழுத்தனர். நான் எந்த தவறும் செய்யவில்லை”, என்று விளக்கம் அளித்தார்[11].

ஜேம்ஸ் வசந்தன் அகடமி ஆப் மியூசிக்

ஜேம்ஸ் வசந்தன் அகடமி ஆப் மியூசிக்

பரஸ்பர குற்றாச்சாட்டு எடுபடவில்லை: மேலும் 65 வயது மூதாட்டிக்கு தான் எவ்வாறு பாலியல் தொந்தரவு கொடுக்க முடியும். தன் மீது நிலப் பிரச்சனை காரணமாக வேண்டும் என்றே பொய் வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் சிறையில் அடைத்தனர் என்றும், இதற்கு பின்னணியில் பெரிய மலையாளி அதிகார ஊடுருவல் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். காவல்துறை முன்னிலையில் தன்னை தமிழ் நாய் என்று ராதாதேவிபிரசாத் இழிவு படுத்தியதாகவும், இது குறித்து புகார் அளித்தும் காவல்துறை அப்புகாரை ஏற்கவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார். ஜேம்ஸ் வசந்தனுடன், அவரது மனைவியும் (ஹேமா) செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டார். காவல் துறையால் தாங்கள் எப்படி நடத்தப்பட்டோம் என்றும் அவர் கூறினார்[12].

 

ஜேம்ஸ் வசந்தின் மனைவி ஹேமா-ஹேமலதா-சுகந்தி

ஜேம்ஸ் வசந்தின் மனைவி ஹேமா-ஹேமலதா-சுகந்தி

ஜேம்ஸ் வசந்தனுக்கு எத்தனை மனைவிகள்?: மேலேயுள்ள விவரங்களிலிருந்து, ஜேம்ஸ் வசந்தனின் மனைவியின் பெயர் ஹேமா, ஹேமலதா, சுகந்தி என்று பலவிதமாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. எனவே ஒரு ஆண் எப்படி அவ்வாறு பல பெண்களுடன் இருக்கிறான் என்பதனைத் தட்டிக் கேட்கப்படுவதில்லை என்பது வியப்பாக உள்ளது. கிருத்துவத்தில் நடக்கும் திருமணங்கள் சர்ச்சுகளில் பதிவு செய்யப் பட்டு நடக்கும் என்கிறர்கள். பிறகு, எப்படி சுகந்தி என்ற மனைவி இருக்கும் போது ஹேமா மனைவியாக முடியும்? விஜிபி பிரசாத் தாஸ் ஹேமாவை விவாக ரத்து செய்திருந்தால், பிறகு ஜேம்ஸ் வசந்தன் சர்ச்சில் முறைப்படி திருமணம் செய்து கொண்டிருக்க வேண்டும். இல்லை அவர் கமல் ஹஸன் பாணியில் சேர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறாரா? மேலும் மனைவியுடன் பேட்டி கொடுக்கிறார் என்று புகைப்படங்களையும் வெளியிடுகிறார்கள். இது கமல் ஹஸன் பல நடிகைகளுடன் வாழ்ந்தது, குழந்தைகளைப் பெற்றுக் கொண்டது போலவே உள்ளது. ஒன்று கிருத்துவ ஒழுக்கத்திற்குக் கட்டுப்பட வேண்டும், இல்லை தமிழ் கலாச்சாரத்திற்கு கட்டுப்பட வேண்டும், இரண்டும் இல்லையென்றால், இவர்கள் எதனைப் பின்பற்றுகிறார்கள் என்பதை தெரிவிக்க வேண்டும்.

VGP family

VGP family

பெண்ணியவாதிகள், வீராங்கனைகள், சமூக சேவகிகள், கம்யூனிஸவாதிகள் முதலியோரும் இதனைக் கண்டு கொள்வதில்லை: மற்ற சமயங்களில் குடியே முழுகி விட்டது போல அலறுவார்கள், ஆர்பாட்டம் செய்வார்கள், ஆனால், இப்பொழுதோ இப்படி பேட்டிகள் கொடுத்துக் கொண்டிருந்தாலும், போட்டொ பிடித்துப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். மேலும் கேவலம் என்னவென்றால், இவர்களால் தான் சமூகம் உருப்படப்போகிறது, தமிழுக்கு சேவை செய்கிறார்கள், கலைக்கு பாடுபடுகிறார்கள் என்றெல்லாம் போற்றப்படுவது. இல்லறத்தை ஒழுங்காகப் பேணிக்க்காக்கத் தெரியாதவர்களை எப்படி அவ்வாறு மதிக்கலாம் என்று கூட தமிழ்ம்ண்டைகளுக்குப் புரிவதில்லை. திருவள்ளுவருக்கு உயிரைவிடும் தியாகிகளும் இதனை வேசித்தனம் என்று சொல்வதில்லை. மாறாக பதவி, பட்டங்கள் எல்லாம் கொடுத்து கௌரவிக்கப் படுகிறார்கள். பல்கலைக்கழகங்களில் “டாக்டர்” பட்டம் வேறு!

வேதபிரகாஷ்

© 08-02-2014


[2] தினமணி, இசையமைப்பாளர்ஜேம்ஸ்வசந்தன்மீதுமனைவிபரபரப்புபுகார், பிப்ரவரி.8, 2014.

[3] இந்த இசைப் பள்ளியை பற்றி மேலும் தகவல்கள் அறிய jvamchennai@gmail.com என்ற மின்னஞ்சல் மற்றும் 99400-44433, 98410-49022 என்ற கைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். அத்துடன் ஜேம்ஸ் வசந்தன் அகடமி ஆப் மியூசிக்-ன் பிரத்யேக இணையதளமான www.jvacademy.com என்ற முகவரியிலும் இதன் தகவல்களை அறிந்துகொள்ளலாம். http://tamil.chennaionline.com/cinema/news/newsitem.aspx?NEWSID=d6549a56-c43e-4449-adee-cd0e3bc241c3&CATEGORYNAME=TFILM

[4] நக்கீரன், பிரபலஇசையமைப்பாளர்மீதுஅவரதுமனைவிபோலீசில்பரபரப்புபுகார், பிப்ரவரி.8, 2014.

[5] சென்ற வருடம் வெளிப்படையாக பேட்டி கொடுத்தபோது ஏன் அமைதியாக இருந்தார் என்று தஎரியவில்லை.

[10] தினகரன், ஆபாசமாக திட்டியதாக பெண் புகார் இசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கைது, ஆகஸ்ட்.2, 2013.

குறிச்சொற்கள்: , , , , , , ,

பின்னூட்டமொன்றை இடுக