சேர்ந்து வாழும் தன்மை – நடிக-நடிகைகளின் திருமணங்கள், முறிவுகள், புகார்கள், முதலியன – பைசூல்-பர்வீன் விவகாரத்தைத் தொடர்ந்து சுஜிபாலா-ரவிகுமார் சமாசாரம்!


சேர்ந்து வாழும் தன்மை – நடிக-நடிகைகளின் திருமணங்கள், முறிவுகள், புகார்கள், முதலியன – பைசூல்-பர்வீன் விவகாரத்தைத் தொடர்ந்து சுஜிபாலா-ரவிகுமார் சமாசாரம்!

தி இந்து செய்தி - சுஜிபாலா-ரவிக்குமார்

தி இந்து செய்தி – சுஜிபாலா-ரவிக்குமார்

பைசூல்-பர்வீன்  விவகாரத்தைத்  தொடர்ந்து சுஜிபாலா-ரவிகுமார் சமாசாரம்: சுஜிபாலாவுக்கும் எனக்கும் திருமணம் ஆனது உண்மை. அதற்கு ஆதாரமான புகைப்படங்கள் என்னிடம் உள்ளன.  அதை எந்த நேரத்திலும் வெளியிடத் தயாராக இருக்கிறேன் என்று இயக்குநர் பி.ரவிக்குமார் தெரிவித்துள்ளார்[1].  பைசூல்-பர்வீன் பிரச்சினை மாதிரியே இதுவும் உருவாகி விட்டது போலும். கடந்த வியாழக்கிழமை 03-04-2014 அன்று நடிகை சுஜிபாலா இயக்குநர் பி.ரவிக்குமார் மீது வடபழனி காவல்நிலையத்தில் புகார்மனு அளித்தார்.  ‘ரவிக்குமாருக்கும் தனக்கும் திருமணம் ஆகவில்லை.  அவர் தான் என்போனை ஒட்டுக் கேட்கிறார்.  நடனப்பள்ளியில் இருந்தபோது என்னை அடித்தார். கொலைமிரட்டலும் விடுத்தார்’  என்று மனுவில் தெரிவித்திருந்தார், என்றும், பலவிதமான செய்திகள் வெளிவந்தன. இப்பொழுது,  இவ்வாறு செய்தி வெளி வந்துள்ளது.

 

சுஜிபாலா-ரவிக்குமார் விவகாரம்

சுஜிபாலா-ரவிக்குமார் விவகாரம்

ரவிகுமாரின் இப்பொழுதைய விளக்கம் – திருமணம் செய்து கொண்டது உண்மை[2]: இந்த புகார் குறித்து,  சனிக்கிழமை இயக்குநர் பி.ரவிக்குமார் கூறியதாவது:  “எனக்கும் சுஜிபாலாவுக்கும்  2012-ல் திருமணம் ஆனது உண்மை.  எங்கள் திருமணம் நடந்ததற்கு ஆதாரமாக நிறைய புகைப்படங்கள் என்னிடம் உள்ளன.  ஆனால்,  திருமணம் நடக்கவில்லை என்று சொல்லுமாறு அந்தப் புகைப்படத்தில் உள்ளவர்களிடம் அவர் கூறிவருவதாகக் கேள்விப்பட்டேன். சுஜிபாலா முன்பு தற்கொலை செய்துகொண்டது போல் நடித்தவர்.  அவருக்கு நான் நாகர்கோயிலில் ஒரு வீடு வாங்கிக் கொடுத்ததும் உண்மை. அதையும் நான் நிரூபிக்கத் தயாராக இருக்கிறேன்.  என் மனைவி மீது கொண்ட அன்பால் இதையெல்லாம் செய்தேன்.  அவர் தற்போது தேவையில்லாதநபர்களுடன் தொடர்பில் இருப்பதாகத் தெரிந்து அதைத்தட்டிக் கேட்டேன். அதற்குத்தான் அடித்தேன்,  மிரட்டினேன் என்று புகார் கொடுத்து வருகிறார். கடந்த 2012 வரைக்கும் எப்படி இருந்தார் என்பது அவருக்கே தெரியும்.  இப்போது ஏன்மாறி விட்டார் என்று தெரியவில்லை. எதையும் நான் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன்.  இப்போதும் சுஜிபாலாவை என் மனைவியாகத் தான் நினைத்திருக்கிறேன்”, இவ்வாறு ரவிக்குமார் கூறினார். 

 

சுஜிபாலா-ரவிக்குமார் விவகாரம்

சுஜிபாலா-ரவிக்குமார் விவகாரம்

ரவிக்குமார், சுஜிபாலா எனது மனைவி என்று அறிவித்ததும், சுஜி மறுத்ததும்:  வடபழனி காவல்நிலையத்தில் ரவிக்குமார் மீது முகத்தில் ஆசிட் வீசி கொலை செய்துவிடுவதாக, சுஜிபாலா புகார் அளித்தார்.  ஏற்கனவே திருமணம் ஆன ரவிக்குமார் தன்னை திருமணம் செய்ய மிரட்டுவதாக புகார் தெரிவித்துள்ளார்[3]. சந்திரமுகி,  கோரிபாளையம் உள்பட ஏராளமான படங்களில் நடித்தவர் நடிகை சுஜிபாலா.  உண்மை என்ற படத்தில் நடித்துவரும் போது, அந்த படத்தின் டைரக்டர் பி.ரவிக்குமாருக்கும்,  நடிகை சுஜிபாலாவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. பின்னர் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டு,  நிச்சயதார்த்தம் முறிந்து போனதாக அறிவித்து விட்டனர்.  இந்தநிலையில்,  சமீபத்தில்,  டைரக்டர் பி.ரவிக்குமார்,  சுஜிபாலா எனது மனைவி என்று பகிரங்கமாக பேட்டி கொடுத்தார். அவரது இந்த பேட்டி தமிழ் படஉலகில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.  ரவிக்குமார் பேட்டிக்கு பதிலடி கொடுத்து, சுஜிபாலாவும் பேட்டி கொடுத்தார். அந்த பேட்டியில்,  டைரக்டர் பி.ரவிக்குமாரை தான் மணக்கவில்லை என்றும்,  அவர் தனக்கு கொலைமிரட்டல் விடுத்து வருவதாகவும்,  படவுலகை விட்டு தன்னை விரட்ட பார்க்கிறார் என்றும் சுஜிபாலா தெரிவித்து இருந்தார்.

 

சுஜிபாலா-ரவிக்குமார் விவகாரம்

சுஜிபாலா-ரவிக்குமார் விவகாரம்

நடிக-நடிகைகளின்புகார்களும், போலீசாரும்: தற்போது நான் மீண்டும் சினிமாவில் நடிக்க வந்தது, அவருக்கு பிடிக்கவில்லை. என்னை மிரட்டுகிறார். எனது பெற்றோரை கொலை செய்து விடுவதாக சொல்கிறார்.  எனது முகத்தில் அமிலத்தை வீசி கொன்று விடுவேன் என்கிறார்.  அவரால் எனது பெற்றோர் உயிருக்கும்,  எனது உயிருக்கும் ஆபத்து உள்ளது. எனவே அவர் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,  எங்களுக்கு உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்றும் புகார் கொடுத்துள்ளேன். உரிய நடவடிக்கை எடுப்பதாக,  உதவி போலீஸ் கமிஷனர் தெரிவித்துள்ளார்.  புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறை,  இயக்குனர் ரவிகுமார் பற்றி தீவிரமாக விசாரித்து வருகிறது.  “டைரக்டர் ரவிகுமார் மீது நடிகை சுஜிபாலா கொடுத்த புகார் பற்றி தீவிரமாக விசாரித்து வருகிறோம்.  இயக்குனர் ரவிகுமாரை அழைத்து விசாரிக்க இருக்கிறோம்.  இதற்கு மேல் இதுபற்றி இப்போது எதுவும் கூற இயலாது” என்று வடபழனி உதவி ஆணையர் சுப்பாராமன் கூறியுள்ளார்[4].

 

சுஜிபாலா-ரவிக்குமார் விவகாரம்

சுஜிபாலா-ரவிக்குமார் விவகாரம்

ரவிக்குமாரின் முந்தைய விளக்கம்[5]: உண்மை படநடிகர்  மற்றும் டைரக்டர் பி. ரவிக்குமார்   தினத்தந்தி நிருபரிடம் கூறியதாவது: “நானும், சுஜிபாலாவும் கணவன்-மனைவியாக வாழ்ந்தது உண்மை[6].  உண்மை படத்தை தொடங்கிய போதே எங்கள் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது.  அதன் பிறகு தான் அவரை நான் பெண் கேட்டேன்.  நிச்சயதார்த்தம் நடந்தது.  சுஜிபாலா தற்கொலைக்கு முயன்றதால் நாங்கள் பிரிய வேண்டியதாகி விட்டது.  மறுபடியும்,  உண்மை படத்தின் படப்பிடிப்பை சிலமாதங்களுக்கு பின் தொடங்கிய போது நாங்கள் இரண்டு பேரும் நெருங்கி பழகினோம். சுஜிபாலா என் மீது அன்பாக இருந்தார்.  எனக்கு அவர் தங்கசங்கிலி பரிசளித்தார். நாங்கள் இருவரும் கணவன்-மனைவியாக வாழ்ந்தோம்.  எங்களை சுஜிபாலாவின் தாயார் பிரித்து விட்டார்.  நான் ராயப்பேட்டையில் உள்ள நடனப்பள்ளிக்கு போனது உண்மை.  பேஸ்புக்கில் சுஜிபாலா இன்னொரு ஆணுடன் கட்டிப் பிடித்தப்படி இருந்ததை சுட்டிக்காட்டி, அவரிடம் நியாயம் கேட்டேன்.  எங்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.  நான் யாருடன் வேண்டுமானாலும் தொடர்பு வைத்திருப்பேன் அதை கேட்க நீங்கள் யார்?  என்று சுஜிபாலா கேட்டார்.  அந்த ஆத்திரத்தில் அவரை நான் அறைந்து விட்டேன். ஆனால் கொலை மிரட்டல் விடுக்கவில்லை. இவ்வாறு டைரக்டர் ரவிக்குமார் கூறினார்[7].

 

சுஜிபாலா-ரவிக்குமார் விவகாரம்

சுஜிபாலா-ரவிக்குமார் விவகாரம்

சுஜிபாலா-ரவிகுமார்  மற்றும் பைசூல்-பர்வீன் சமாசாரம், விவகாரங்கள்: நவம்பர்  2013ல் பைசூல்-பர்வீன் சமாசாரம்,  இதே போன்று தான் இருந்தது. முதலில் பரஸ்பர புகார் கொடுக்கப் பட்டது.  இதனை  “பர்வீன் ராதாவானது, பைசூல் ஷ்யாம் ஆனது – சினிமாவுக்கா, காதலுக்கா, பாலியலுக்கா, மதம் ரீதியில் நியாயப் படுத்துவதற்கா – ஒருஅலசல்!” என்ற பதிவில் விளக்கியுள்ளேன்[8].  பிறகு போதை மருந்து கடத்தல் என்றெல்லாம் இன்னொருவர் புகார் கொடுத்தார்[9]. பிறகு பைசூலின் சகோதரி பர்வீன் மீது புகார் கொடுத்தார்[10].  விசயம் பெரியதாகி விட்டது[11].  தீடீரென்று பர்வீன் தான் பைசூல் மீது கொடுத்த புகாரை வாபஸ் வாங்கிக் கொண்டார்[12].  இவர்களது புகார்களினால்,  போலீஸார் தான் குழப்பமடைந்து விட்டார்கள் என்று பிறகு செய்தி வந்தது[13]. எது எப்படியாகிலும், ஊடகங்களுக்கு மெல்ல விசயம் கிடைத்தது.  படித்தவர்கள் அதிலுள்ள பிரச்சினைகளை கவனித்தார்களா இல்லையா என்று தெரியவில்லை.  ஆக ஐந்து மாதங்களுக்குப் பிறகு மறுபடியும், இதே போன்ற விவகாரம் ஆரம்ப நிலையில் வந்துள்ளது.  இனி எப்படி செல்லும் என்று பார்க்கலாம். நுகர்வோர் காலத்தில், இது தேவையா, இல்லையா என்பதை சமூகம் தான் தீர்மானிக்க வேண்டும்.

 

© வேதபிரகாஷ்

07-04-2014

 

 

 

[1]திஇந்து, சுஜிபாலாவுக்குஎதிரானஆதாரங்கள்: இயக்குநர்பி.ரவிக்குமார்விளக்கம், 06-04-2014.

[2]http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/article5877408.ece

[3] http://www.dinakaran.com/Latest_Detail.asp?Nid=86236

[4] http://tamil.oneindia.in/movies/news/sujibala-files-death-threat-complaint-against-director-197343.html

[5]http://www.newindianews.com/view.php?20oOlndbcS40634e34MQ3022YmD3ddcfDmI30eM6AKae4U04A4cb3lOm23

[6] தினத்தந்தி, நானும், சுஜிபாலாவும்கணவன்மனைவியாகவாழ்ந்ய்ஜோம், கொலைமிரட்டல் விடுக்கவில்லை – டைரக்டர்ரவிக்குமார், 05-04-2014.

[7] http://www.dailythanthi.com/2014-04-04-Issued-death-threats—Director-Ravi-Kumar

[8] http://islamindia.wordpress.com/2013/11/23/why-parveen-becomes-radha-faisul-shyam-for-sex-or-business-of-convenience/

[9] http://islamindia.wordpress.com/2013/12/03/now-complaint-on-faizul-includes-ketamine-smuggling-also/

[10] http://islamindia.wordpress.com/2013/12/07/akbar-basha-complains-faizal-for-alleged-druug-trafficking/

[11] http://islamindia.wordpress.com/2013/12/13/complaints-against-parveen-faizul-by-mariyam-and-akbar-basha-the-background/

[12] http://islamindia.wordpress.com/2013/12/20/actress-withdrew-complaints-against-faizul-the-rape-accused-or-sex-exploiter/

[13] http://islamindia.wordpress.com/2014/01/08/radha-faizul-sex-scandal-drug-trafficking-confusion-continues/

குறிச்சொற்கள்: ,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: