Archive for ஜூலை, 2014

கேரளாவில் நடந்துவரும் விபரீத பாலியல் வன்மங்கள், செக்ஸ்-குற்றங்கள், மறைக்கப்படும் செயல்பாடுகள்

ஜூலை31, 2014

கேரளாவில் நடந்துவரும் விபரீத பாலியல் வன்மங்கள், செக்ஸ்-குற்றங்கள், மறைக்கப்படும் செயல்பாடுகள்

Christian priest involved in rape Josephu, Kerala

Christian priest involved in rape Josephu, Kerala

கடவுளது நாட்டில் செக்ஸ்-வக்கிரங்கள்: கேரளாவை கடவுளது சொந்த நாடு (God’s own country) என்றெல்லாம் பெருமையாக சொல்லிக் கொள்வார்கள். படிப்பறிவில் அதிகமான விழுக்காடு உள்ள மாநிலமும் கேரளா தான் என்ற சிறப்பைப் பெற்றுள்ளது. ஆனால், விபரீதமான செக்ஸ் குற்றங்களில் ஈடுபட்டு வருவதும் கேரளக்காரர்கள் தாம் என்று நோக்கு போது திகைப்படச் செய்ய வைக்கிறது. குறிப்பாக கிருத்துவ போதகர்கள், பாஸ்டர்கள் முதலியோர் தொடர்ந்து அத்தகைய கற்பழிப்புகளில் ஈடுபட்டு வருவது அதிர்ச்சியாக உள்ளது. தில்லி, மும்பை மற்றும் பெங்களூரு கற்பழிப்பு விசயமாக தினம் தினம் செய்தி வந்துக் கொண்டிருக்கின்றன. தெருக்களில் வந்து மக்கள் போராடுவதாக ஊடகங்களில் காட்டிக் கொண்டிருக்கின்றார்கள், ஆனால், கேரளாவில் எப்படி அமைதியாக இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

கேரளா கிருத்துவ பாலியல் ஜூலை 2014

கேரளா கிருத்துவ பாலியல் ஜூலை 2014

கற்பழிப்பது டீ குடிப்பது போன்றா?[1]: மகன் தாயைக் கற்பழித்தான்[2]; தந்தை மகளைக் கற்பழித்தான்[3], அண்ணன் தங்கையைக் கற்பழித்தான் என்றெல்லாம் கற்பனைக்கே எட்டாத அளவில் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. நாங்கள் படித்தவர்கள், எல்லாம் தெரிந்தவர்கள், கம்யூனிஸ சித்தாந்தங்களில் ஊறித் திளைத்தவர்கள், செக்யுலரிஸப் பழங்கள் என்று பொதுவாக கேரளாக்காரர்கள் மார் தட்டி பேசுவர்கள். உரிமைகள் எனும் போது, ஆகாசத்திற்கும், பூமிக்கும் கூட குதிப்பார்கள். ஆனால், இப்பொழுது இத்தகைய கற்பழிப்புகள் பற்றி மூச்சுக்கூட விடாமல் இருப்பது ஆச்சரியம் தான். கிருத்துவர்கள் தொடர்ந்து சம்பந்தப் பட்டிருப்பதால், கேரள ஊடகங்கள் அவர்கள் கைகளில் இருப்பதால் உண்மைகள் அமுக்கப் படுகின்றன போலும். அபயா வழக்கையே அமுக்கிவிட பார்த்தவர்களுக்கு, இதெல்லாம் சாதாரணமான விசயமாக இருக்கலாம். ஆனால், எப்படி அத்தகைய வக்கிர மனங்களைக் கொண்டு தயாராகி இக்ருக்கிறர்கள் என்பது தான் முக்கியமான கேள்வி. பைபிள் மற்றும் குரான் முதலியவற்றில் அத்தகைய செக்ஸ்-வக்கிரங்கள் அனுமதிக்கப் படுகின்றன என்றால், எப்படி அவற்றை இந்நாட்டில் ஏற்றுக் கொள்ள முடியும்?

ஜோமோன் கற்பழிப்பாளி தினமலர் போட்டோ

ஜோமோன் கற்பழிப்பாளி தினமலர் போட்டோ

கம்ப்யூட்டர் சொல்லித் தருகிறேன் என்று தொட்டுப் பழகிய பாதிரி: கேரள மாநிலம் இடுக்கியில் உள்ள கிறிஸ்தவ ஆலயம் ஒன்றில் ஜோமோன் (வயது 28) என்பவர் பாதிரியாராக பணியாற்றி வருகிறார். வழக்கம் போல ஆலயம் சார்பில் இலவச கம்ப்யூட்டர் பயிற்சி நிறுவனமும் நடத்தப்பட்டு வருகிறது. அங்கு ஏழை பெண்கள் இலவசமாக கம்ப்யூட்டர் பயிற்சி பெற்று வந்தனர். அப்பகுதியை சேர்ந்த 10–ம் வகுப்பு மாணவி ஒருவரும் அங்கு கம்ப்யூட்டர் பயிற்சி பெற்று வந்துள்ளார். ஜோமோன் பாதிரிக்கு அப்பெண்ணின் மீது கண் விழுந்தது. கம்ப்யூட்டர் சொல்லித் தருகிறேன் என்று நெருக்கமாக கைகளைப் பிடித்து சொல்லிக் கொடுத்திருக்கிறார். அந்த மாணவியிடம் பாதிரியார் இவ்விதமாக நெருக்கமாக பழகி உதவி செய்து வந்துள்ளார்[4]. பின்னர் சிறுமியை ஆசைவார்த்தைகளை கூறி, தனியாகக் கூட்டிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்[5]. அவளுக்கே தெரியாமல் அக்காட்சிகளை செல்போனில் பதிவு செய்தும் இருக்கிறார். நாளடைவில் அந்த பாதிரியாரின் தொந்தரவு அதிகமானது.

Pope with laptop

Pope with laptop

புருனோகிராபி பாதிரி மாட்டிக் கொண்டார்: செல்போனில் படம் பிடித்த காட்சிகளைக் காட்டி, இன்டர்நெட்டில் வெளியிட்டு விடுவதாக கூறி மாணவியை மிரட்டி மறுபடி-மறுபடிபாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். இத்தகைய செயல்பாடுகள், ஏற்கெனவே மாட்டிக் கொண்ட கிருத்துவ பாதிரிகளிடம் காணப்பட்டுள்ளன. இதனால், அம்மாணவி மனம்-உடல் ரீதியில் அதிகமாக பாதிக்கப்பட்டாள். வேறு வழியின்றி இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவி போலீசில் புகார் அழித்துள்ளார். மாணவி இடுக்கி போலீஸ் சூப்பிரண்டிடம் தனக்கு நேர்ந்த கொடுமைகள் எடுத்துக்கூறி கதறி அழுதார். மாணவியின் தாயார் புகார் கொடுத்தார் என்றும் உள்ளது[6]. அவரது உத்தரவின் பேரில் தனிப்பிரிவு போலீசார் இதுபற்றி விசாரணை நடத்தினர்.  மாணவிக்கு நடத்திய மருத்துவ பரிசோதனையில், அவர் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியானது. மாணவி வாக்குமூலத்தின்படி, போலீசார், அந்த பாதிரியாரை கைது செய்தனர்[7]. அவரது செல்போனை பறிமுதல் செய்து சோதனை செய்த போது அதில் அந்த மாணவி மட்டுமல்லாமல் வேறு பல பெண்களின் ஆபாச படங்களும் பதிவு செய்யப்பட்டு இருந்தது தெரிய வந்தது. மேலும் அந்த பாதிரியாரின் கம்ப்யூட்டரிலும் ஏராளமான ஆபாச படங்களும் பதிவு செய்யப்பட்டு வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது[8]. இதனால் பாதிரியார் ஜோமோன் மேலும் பல பெண்களின் வாழ்க்கையும் சீரழித்து இருப்பது தெரிய வந்தது[9]. தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.  பாதிரியாருக்கு பெண்கள் அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அவருக்கு எதிராக போராட்டங்களிலும் இறங்கி உள்ளனர். இப்படி தமிழ் ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன.

ஹணி, பாலக்காடு, மனநலம் பெண் மே 2014

ஹணி, பாலக்காடு, மனநலம் பெண் மே 2014

மே 2014, பாலக்காடு[10]: கேரளவில் இத்தகைய கற்பழிப்புகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. உதாரணத்திற்கு இது கொடுக்கப்படுகிறது. பிரார்த்தனைக்கு வந்த, மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை, பலாத்காரம் செய்ய முயன்ற, மதபோதகர் கைது செய்யப்பட்டார். கேரள மாநிலம், பாலக்காடு பறளி அருகே உள்ள, தியான மையத்தின் மதபோதகர் ஹணி, 35. இவர், திருச்சூர் மாவட்டம், மண்ணுத்தியைச் சேர்ந்தவர். கடந்த, பிப்., 3ம் தேதி, இவரிடம் பிரார்த்தனைக்கு வந்த, மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணை, பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். வெளியே சொன்னால், கொன்று விடுவதாகவும் மிரட்டியுள்ளார். இந்நிலையில், கடந்த வாரம், சமூக ஆர்வலர்களின் உதவியால், பாதிக்கப்பட்ட பெண், பாலக்காடு போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் அடிப் படையில், நேற்று, மதபோதகர் ஹணியை, போலீசார் கைது செய்தனர்[11].

church sex pedophile etc caricature

church sex pedophile etc caricature

விபரீத பாலியல் வன்மங்கள், செக்ஸ்-குற்றங்கள், மறைக்கப்படும் செயல்பாடுகள்: கிருத்துவத்திற்கும் செக்ஸ்-வன்மங்களுக்கு தொடர்பு உண்டா என்று பல பதிவுகளில் அலசப்பட்டுள்ளது[12]. அவற்றின் ஆராய்ச்சி தொகுப்பாக கீழ்காணும் விவரங்கள் கொடுக்கப் படுகின்றன:

 1. அனாதை ஆசிரமம் / சிறார் இல்லம் / பெண்கள் பாதுகாப்பு இல்லம் முதலியவற்றை நடத்துதல்.
 2. சிறுமிகள், இளம் பெண்கள், விதவைகள் முதலியோரை அவற்றில் சேர்த்துக் கொல்ளுதல்.
 3. அவர்களுக்கு தையல், கம்ப்யூட்டர், சொல்லிக் கொடுக்கிறேன் என்று நெருக்கம் ஏற்படுத்திக் கொள்ளுதல்.
 4. கிருத்துவ பாதிரி, பாஸ்டர், சாமி, ஐயர் போன்ற நிலையை உபயோகப் படுத்திக் கொண்டு மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ளுதல் – அதாவது பெண்களிடம் செக்ஸ் ரீதியில் ஏதாவது பேசி, நடந்து கொண்டு தப்பித்துக் கொள்ளுதல். பாதிரி / பாஸ்டர் தானே என்று அமைதியாக இருத்தல்.
 5. காமத்தைத் தீர்த்துக் கொள்ள உடன்பட தோதுவாக ஆசைகாட்டுதல், பணம்-உடைகள் கொடுப்பது, படிப்பதற்கு உதவி செய்வது, வேலை வாங்கிக் கொடுப்பது, போன்றவை செய்து அனுமதிக்க வைக்கும் அளவிற்கு தயார் செய்தல்.
 6. சமயம் பார்த்து, தனியாக அழைத்துச் சென்று காமத்தைப் பூர்த்தி செய்து கொள்ளல்.
 7. அப்பொழுதே செல்போன் மூலம் படங்கள் / வீடியோக்களை எடுத்து வைத்துக் கொள்வது.
 8. அடுத்த முறை அல்லது கொஞ்ச நாட்கள் கழித்து போட்டு காண்பித்து இச்சையைத் தூண்டுவது அல்லது மறுத்தால் மிரட்டிப் பார்ப்பது.
 9. அதை வைத்து மேன்மேலும் இச்சைக்கு உடன் பட வைத்தல்.
 10. ஒருவேளை தாய், தந்தை அல்லது மற்றவர்களுக்கு தெரிய வந்தாலோ அல்லது பெண்ணே எதிராக மாறினாலோ, மற்ரவர்களுக்குக் காட்டுவிடுவேன், இன்டெர்நெட்டில் போடுவேன் என்று மிரட்ட ஆரம்பித்தல்.
 11. அடங்கி போனால், அமுக்கி விடுவது, அமைதியாக இருப்பது, வைப்பது என்ற ரீதியில் சமரசம் செய்து கொள்ளுதல். பணம், பொருட்கள், உதவி செய்வது. கல்யாணம் செய்து கொள்கிறேன் என்றும் வாக்குக் கொடுத்தல், ஆனால், பிறகு கழட்டி விட்டு விடுதல்.
 12. இங்குதான், பிரச்சினை வெளிவரும் நிலை ஏற்படுகிறது.
Church, sex, pon, crimes

Church, sex, pon, crimes

இந்தியாவில் உள்ள கிருத்துவர்கள் இப்பிரச்சினையை தகுந்த முறையில் அணுகி, ஒழுக்கத்தை செயல்படுத்தி மாற்றிக் கொள்ள வேண்டும். மேன்மேலும் இத்தகைய வக்கிரங்கள் தொடர்ந்தால், அது பெரிய பிரச்சினையை உருவாக்கும். இஸ்லாமிய ஜிஹாதி தீவிரவாதத்திற்கும், கிருத்துவ சமூக சீர்ப்பழிப்பு காரியங்களுக்கும்வித்தியாசம் இல்லை. முன்னது உடனடியாக அழிவை, சாவை ஏற்படுத்துகிறது என்றால், பின்னது மெதுவாக, புற்றுநோய் போல தாக்கி அழித்து வருகிறது. இரண்டுமே அழிக்கப்பட வேண்டிவை தான்.

sex computer porn nuns

sex computer porn nuns

© வேதபிரகாஷ்

31-07-2014

[1] கம்யூனிஸ சித்தாந்தத்தில் கற்பழிப்பது என்பது டீ குடிப்பது போல என்று மேனிபெஸ்டோவில் சொல்லப்பட்டிருக்கிறது என்று ஒப்புக் கொள்கிறார்கள். இதைப் பற்ரிய எனது பதிவை பார்க்கவும்.

[2] http://indianexpress.com/article/india/crime/25-year-old-kerala-youth-held-for-raping-mother/

[3] http://m.ibnlive.com/news/kerala-13yearold-raped-by-father-brother-uncle/307489-8.html

[4] http://tamilnewsbbc.com/2014/07/28/10-%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4.html

[5] பிபிசி தமிழ் செய்தி, 10-ம் வகுப்பு மாணவியை கற்பழித்த பாதிரியார் கைது, பதிவு செய்த நாள்: 28 Jul 2014 3:29 pm; By : Narmadha Devi

[6] தினமலர், கிறிஸ்தவ மத போதகர் கைது, 29-07-2014

[7] http://www.dinamalar.com/news_detail.asp?id=1032845

[8] மாலை மலர், இடுக்கி அருகே 10-ம் வகுப்பு மாணவியை கற்பழித்த பாதிரியார் கைது, பதிவு செய்த நாள் : திங்கட்கிழமை, ஜூலை 28, 10:33 AM IST

[9] http://www.maalaimalar.com/2014/07/28103336/The-priest-who-raped-10th-grad.html

[10] தினமலர், பெண் பலாத்காரம்; மதபோதகர் கைது, மே.5, 2014.

[11] http://webmil.dinamalar.in/news_detail.asp?id=968573

[12] www.christianityindia.wordpress.com

காமக்கொடூரன், பெண்மை சீரப்பாழி, வக்கிர செக்ஸ்காரன் – இலக்கு பெண்கள், தாம்பத்திய உறவுகள், குடும்பப் பிளவுகள், சமூதாய குளறுபடிகள்!

ஜூலை30, 2014

காமக்கொடூரன், பெண்மை சீரப்பாழி, வக்கிர செக்ஸ்காரன் – இலக்கு பெண்கள், தாம்பத்திய உறவுகள், குடும்பப் பிளவுகள், சமூதாய குளறுபடிகள்!

பலதார திருமணம் - கோவை பெயின்டர் ஜூலை 2014

பலதார திருமணம் – கோவை பெயின்டர் ஜூலை 2014

செக்ஸ் குற்றங்கள் பெருகுவது ஏன்?: மேனாட்டு ஆண்-பெண் சுதந்திரங்கள் இந்திய தாம்பத்தியத்தை கெடுத்து, சீரழித்து விபச்சாரமாக்கி வருகிறது. பெண்ணிய வீராங்கனைகள் ஆண்களின் வக்கிய செக்ஸ் மனமங்களை ஊக்குவிக்கும் போக்கைக் கண்டிக்கவில்லை, கட்டுப்படுத்தவில்லை, மாறாக, பலவிதங்களில் ஊக்குவித்து வருகிறார்கள். ஃபேஷன் ஷோக்கள், பப்-கலாச்சாரங்கள், இரவு ஹோட்டல் விருந்துகள், எம்.என்.சி கம்பெனிகளின் கேளிக்கைகள், சினிமா நடிகைகளின் ஆட்டங்கள் – கொண்டாட்டங்கள், துணைநடிகைகளின் சல்லாபங்கள், புரொனோகிராபி, என்று அவை விரிந்து வருகின்றன. இதனால், சாதாரண மக்களும் அதற்கு அடிமையாகிறார்கள். ஆயிரங்கள் கொடுத்துதான் அனுபவிக்க வேண்டும் என்பதில்லை, பத்து-நூறு கொடுத்து மனத்தால் அனுபவிக்கும் வக்கிர ஆண்கள் நிஜத்தில் அடைய திட்டம் போட்டே செயல்படுகினர். ஒருவேளை ஆணின் வக்கிரம், சம-உரிமைகள் என்ற நிலையில் பெண்களுக்கு வந்து விட்டதோ என்னமோ? அதனால், மறைமுகமாக அவர்களும் ஒத்துப் போகின்றனர் அல்லது நாஜுக்காக சம்மதித்து விடுகின்றனர். இதனால், முடிவில் சீரழிவது பெண்மை, பெண்ணைச் சார்ந்த குடும்பம், சமூகம் தான். நாகரிகம் என்ற பெயரில் பலர் தப்பித்து கொண்டு விடலாம், தொடர்ந்து ஈடுபட்டும் வரலாம், ஆனால், குறிப்பிட்ட மானஸ்த வர்க்கங்கள், தங்களது மேன்மையை, சீர்மையை, அந்தஸ்தத்தைக் காப்பாற்றிக் கொள்ளா வேண்டியுள்ளது. அந்நிலையில் இத்தகைய செக்ஸ்-குற்றங்கள் மறைக்கப்படலாம், மறக்கப்படலாம் ஆனால், மறுக்க முடியாது.

sex crime reasoning

sex crime reasoning

செக்ஸ் வக்கிரனிடத்தில் மாட்டிக் கொண்ட மனைவி: கோவை, ம.ந.க., வீதியை சேர்ந்தவர் சக்திவேல், 37; பெயிண்டர். இவரது மனைவி மகேஸ்வரி, 25. இவர் 27-07-2014 அன்று கோவை மாநகர அனைத்து மகளிர் மேற்கு போலீசில், தனது கணவர் குறித்து புகார் அளித்தார். அந்த புகார் மனுவில், ‘கடந்த 2013ம் ஆண்டு செப்., மாதம் எனக்கும், சக்திவேல் என்பவருக்கும் பேரூர் கோவிலில் திருமணம் நடந்தது. திருமணத்தின் போது எனது பெற்றோர் சீர்வரிசையாக 7 பவுன் தங்க நகை கொடுத்தனர். சக்திவேல் பெயின்டர் தொழில் செய்து வருகிறார். திருமணமான, சில மாதங்களில் சக்திவேலின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது. அதிகளவு பாலியல் தொந்தரவு கொடுத்து, சித்ரவதை செய்தார். வீடியோ ஆபாச படங்களை காண்பித்து அதில் உள்ளது போல் என்னை தினமும் பாலியல் வைத்து கொள்ள வற்புறுத்துவார். அதுபோலவே என்னையும் செய்யுமாறு வற்புறுத்துவார். இதனால், எங்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு, இது குறித்து மகளிர் போலீசில் புகார் அளித்தேன். போலீசார் எங்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். ஆனால் தொடர்ந்து சக்தி வேலுவின் பாலியல் தொல்லை எல்லை மீறியது. இதனால் நான் அவரை பிரிந்து சில நாட்களுக்கு முன் எனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டேன்.

Coimbatore sex crime

Coimbatore sex crime

புகார் கொடுத்ததால் மாட்டிக் கொண்ட காமக்கொடூரன்: இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன், தனலட்சுமி என்ற பெண்ணை எனக்கு தெரியாமல் கணவர் திருமணம் செய்துள்ளார். நாங்கள் வசித்து வந்த வீட்டுக்கு அந்த பெண்ணை அழைத்து வந்து குடும்பம் நடத்தியது வீட்டு உரிமையாளர் மூலம் எனக்கு தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த நான் என் கணவரிடம் சென்று நியாயம் கேட்டேன். அதற்கு அவர் என்னை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தார். ,’ என, குறிப்பிடப்பட்டிருந்தது[1]. ருசிக் கண்ட பூனை பல இடங்களுக்குச் சென்றுள்ளது, பிறகு, சூடான பாலில் வாயை வைத்தபோது, சுட்டுக் கொண்டது போலும்! இப்பெண் புகார் கொடுக்கவில்லை என்றால், அவன் மாட்டிடிக் கொண்டிருக்க மாட்டான்.

Coimbatore campaigning against crime against children

Coimbatore campaigning against crime against children

பெயின்டர் ஐந்து பெண்டாட்டிகளை வைத்துக் கொள்ள முடியுமா?: இந்த மனுவின் மீது உரிய நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் உத்தரவிட்டார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மாணிக்கம், சப்–இன்ஸ்பெக்டர் யோகாம் பாள் (பால்?) தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி சக்திவேலை கைது செய்தனர். விசாரணையில் சக்திவேல் “கல்யாண மன்னன்” எனத் தெரியவந்தது. ஊடகங்கள் இப்படி பட்டம் கொடுத்து விமர்சிப்பதே அருவருப்பாக இருக்கிறது. பலதார மணங்களை ஏமாற்ரி செய்பவர்களை இத்தகைய வர்ணனைகள் போற்ருவது போலிருக்கிறது. மகேஸ்வரியை திருமணம் செய்வதற்கு முன்பே 3 பெண்களை திருமணம் அவர் செய்ததும், அவரது பாலியல் தொல்லை தாங்காமல் அந்த பெண்கள் விட்டால் போதும் என ஓட்டம் பிடித்ததும் தெரிய வந்தது[2]. ஆபாச வீடியோக்களைக் காண்பித்தான் எனும்போது, அத்தகையவை கிடைக்கின்றன என்றாகிறது. அவற்றை விற்பவர்களும் இத்தகைய குற்றங்களைத் தூண்டும் கயவர்களாகின்றனர். போலீஸார் அவர்களையும் கைது செய்ய வேண்டும், தணிடிக்க வேண்டும். அதில் நடித்தவர்களோ அல்லது இருப்பவர்களோ இந்நாட்டுப் பெண்கள் என்றால் என்பது வருத்தப்பட வேண்டிய விசயம் மட்டுமல்லாது சீரழிவின் எல்லைகள் எங்கோ செல்கின்றன எனலாம்.

seducing cinemas

seducing cinemas

காமுகனின் வாக்குமூலத்தில் வெளிப்பட்ட செக்ஸ்வக்கிரம்: சக்திவேல் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது[3]:– நான் கடந்த 2002–ம் ஆண்டு கவிதா என்ற பெண்ணை முதன்முதலாக திருமணம் செய்து கொண்டேன். எனக்கு பாலியல் உறவில் ஆர்வம் அதிகம். எனவே என் விருப்பப்படி தினமும் பாலியல் உறவு வைத்துக் கொள்ள கவிதாவை வற்புறுத்தினேன். சில வருடங்கள் என்னுடன் வாழ்ந்த கவிதா எனது தொல்லை தாங்காமல் என்னை பிரிந்து சென்றுவிட்டார். அதன் பின்னர் காமாட்சி என்ற பெண்ணை திருமணம் செய்தேன். அவரும் தொந்தரவை பொறுக்க முடியாமல் என்னை பிரிந்து சென்றுவிட்டார். மூன்றாவதாக கஜலட்சுமி என்ற பெண்ணை திருமணம் செய்தேன். அவரும் கோபித்துக் கொண்டு பிரிந்து சென்றுவிட்டார். இந்த நிலையில் மகேஸ்வரியை திருமணம் செய்தேன். அவருடன் செல்போனில் செக்ஸ் படங்களை காண்பித்து அதில் வருவது போல் என்னுடன் உடலுறுவு வைத்துக் கொள்ளும்படி வற்புறுத்தினேன்.[4] இது குறித்து அவர் போலீசில் புகார் செய்தார். இதனால் அவரை துன்புறுத்த ஆரம்பித்தேன். அவர் தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

ஏமாற்றப் பட்ட பெண் திருமணமான வருடம்
1 கவிதா 2002
2 காமாட்சி 2005 (?)
3 கஜலட்சுமி 2010 (?)
4 மகேஸ்வரி 2013
5 பெயர் குறிப்பிடவில்லை 2014

தினமும் உடலுறவு போதை பழக்கமாக இருந்தது: தினமும் உடலுறவு கொள்வது எனக்கு ஒரு போதை பழக்கமாக இருந்தது. இதன் காரணமாக மீண்டும் தனலட்சுமியை 5–வதாக திருமணம் செய்து கொண்டேன். இதனால் மகேஸ்வரி போலீசில் புகார் கொடுத்துவிட்டார். எந்த மனைவியையும் முறைப்படி விவாகரத்து செய்யவில்லை[5]. என்னுடைய முந்தைய திரு மணங்களை மறைத்து மறுமணம் செய்தேன். இவ்வாறு அவர் கூறினார். சட்டத்தின் மீறல்களை அறிந்தே இவன் திருமணம் செய்திருக்கிறான். ஒருத்திக்குப் பிறகு இன்னொருத்தி என்று திருமணம் செய்து கொண்டு காரியத்தில் இறங்கிய போது, மனைவியர் ஏன் புகாரளிக்கவில்லை என்று தெரியவில்லை. தாங்க முடியாமல் ஓடிவிட்டார்கள் என்று அவ்வளவு எளிதாக சொல்லி தப்பித்துவிட முடியுமா என்று தெரியவில்லை.

முத்தக் கலாச்சாரம் அரங்கத்தில்

முத்தக் கலாச்சாரம் அரங்கத்தில்

சட்ட மீறல்களை அறிந்து செய்த குற்றம்: போலீஸ் விசாரணையில், மகேஸ்வரி, தனலட்சுமி மட்டுமின்றி, கடந்த 2002ம் ஆண்டு கோவையை சேர்ந்த கவிதா, இதற்குபின் காமாட்சி, கஜலட்சுமி, மகேஸ்வரி (2013) ஆகிய மூன்று பெண்களை சக்திவேல் திருமணம் செய்து, வீட்டை விட்டு விரட்டியது கண்டுபிடிக்கப்பட்டது. மோசடியாக ஐந்து பெண்களை திருமணம் செய்தது தெரியவந்தது[6]. அதிகளவு பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்ததால், பெண்கள் இவரை விட்டு சென்றதாக கூறப்படுகிறது. சக்திவேல் மீது திருமணங்களை மறைத்து பெண்களை ஏமாற்றியது, [Sections 494 (Marrying again during lifetime of husband or wife)], பெண்ணை குற்றம் செய்வதற்காக பலாத்காரமாக எடுத்துச் சென்றது [498 (enticing or taking away or detaining with criminal intent a married woman)], கொலை மிரட்டல் [506 (ii)(threat to cause death)] உள்ளிட்ட இந்திய குற்றவியல் சட்டப் பிரிவுகளின் கீழ், வழக்கு பதிவு செய்த போலீசார்[7], அவரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்[8]. 12 வருட காலமாக இத்தகைய செக்ஸ்-வக்கிரத்தில் ஈடுபட்டுள்ளான்.

 The Leather Bar, Nungambakkam High Road, Chennai

கோயம்புத்தூர் மற்றும் சுற்றுப்புற ஊர்களில் செக்ஸ் குற்றங்கள் பெருகுவதேன்?: கோயம்புத்தூர் தொழில் நகரமாக உள்ளதால், பலதரப்பட்ட இந்தியர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள், தங்கவும் செய்கிறார்கள். கடினமாக உழைப்பவர்கள், இக்காலத்தில் குடிப்பது போன்ற காரியங்களில் ஈடுபட்டு வருவது சகஜமான விசயங்களாக இருக்கின்றன. மாதுவைத் தேடிப் போகும் ஆட்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். மது சட்டப் படி அரசே விற்று வரும் நிலையில், மாது-தேடல் அல்லது விபச்சாரம் சட்டவிரோதமாக இருக்கிறது. மேலும், தமிழகத்தில் 60 வருடங்களாக நாத்திக-திராவிட சித்தந்த ஆட்சி நடந்து வருவதாலும், கம்யூனிஸ சித்தாந்த தாக்குதல்களினாலும், கிருத்துவ-முஸ்லிம் செக்ஸ் காரியங்களினாலும், இந்து சமூகமும் அதிக அளவில் பாதிக்கப் பட்டுள்ளது. தார்மீக உணர்வுகள் மதிக்கப்படாமல் இருக்கும் நிலையில், மேனாட்டு கலாச்சாரம் மற்றும் அதனை ஊக்குவிக்கும் வியாபாரங்கள் பெருகும் போது, அனுபவிக்க மக்கள் இருக்கத்தான் செய்வார்கள். கேரளாவிலிருந்து செக்ஸ்-சிடி/விசிடிகள் புழக்கத்திற்கு வருவதும் உள்ளது. அங்கு மாட்டிக் கொள்ளும் குற்றவாளிகள் இங்கு வந்து மறைந்து கொள்கிறார்கள், தலைமறைவாக வாழ்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு வேண்டியவை கிடைத்து வருகின்றன. இதை அறியும் உள்ளூர் சபலங்கள் அவற்றைத் தேடிப் போவதில் ஆச்சரியமில்லை.

© வேதபிரகாஷ்

30-07-2014

[1] தினமலர், ஐந்து பெண்களை ஏமாற்றி திருமணம்: மோசடிபெயிண்டர்கைது, கோவை, 30-07-2014

[2] http://www.dailythanthi.com/News/Districts/2014/07/29134048/Man-arrested-over-the-marriage.vpf

[3] தினத்தந்தி, 4–வது மனைவிக்கு தெரியாமல் 5–வது திருமணம் செய்த பெயிண்டர் கைது, மாற்றம் செய்த நாள்: செவ்வாய், ஜூலை 29,2014, 1:40 PM IST; பதிவு செய்த நாள்: செவ்வாய், ஜூலை 29,2014, 1:40 PM IST

[4] A painter who lured many women into marriage in the last 12 years,allegedly sexually tortured them and forced them to perform lewd acts was arrested here today, police said.  http://www.business-standard.com/article/pti-stories/much-married-painter-in-the-dock-after-4th-wife-s-complaint-114072901226_1.html

[5] தினகரன், 5 பெண்களை ஏமாற்றி திருமணம்பெயின்டர் கைது,

[6] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=102832

[7] http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/man-held-for-marrying-five-women/article6262050.ece

[8] http://www.dinamalar.com/news_detail.asp?id=1034034

மூதாட்டிகளையும் கொன்று தாலி-நகைப் பறிக்கும் மனிதர்கள் மனிதர்களே அல்ல, அவர்கள் தீவிரவாதிகளை விட மோசமானவர்கள்!

ஜூலை28, 2014

மூதாட்டிகளையும் கொன்று தாலி-நகைப் பறிக்கும் மனிதர்கள் மனிதர்களே அல்ல, அவர்கள் தீவிரவாதிகளை விட மோசமானவர்கள்!

பெண்கள் இலக்கு

பெண்கள் இலக்கு

கடந்த 60 ஆண்டுகளில் தமிழகத்தில் பெண்களின் கழுத்துகளினின்று தாலிகள் அறுப்பது, காலையில் கோலம் போடும் போது நகைகள் பறிப்பது, தனியாகச் சென்றுகொண்டிருக்கும் போது கழுத்திலிருக்கும் தாலி-நகைகளைப் பறிப்பது, தனியாக இருக்கும் பெண்கள் குறிப்பாக மூதாட்டிகளிடம் இருந்தும் நகைகள் பறிப்பது முதலியன, இப்பொழுது கொலை செய்யும் அளவிற்குச் சென்றுள்ளது. மாதத்திற்கு இரண்டு-மூன்று என்று நடந்து கொண்டிருக்கின்றன. உதாரணத்திற்கு சில கொடுக்கப் படுகின்றன.

Mangalsutra snatching - illustrative picture

Mangalsutra snatching – illustrative picture

ஜூலை.26, 2014 – திம்மாபுரி, கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே திம்மாபுரியில் உயர்நிலைப் பள்ளி அருகே தங்கள் விவசாய நிலத்தில் தனியாக வசித்து வருபவர்கள் எல்லப்பன், உண்ணாமுலை (65) தம்பதி. இவர்களுக்கு 2 மகன்கள்  உள்ளனர். இவர்கள் திருமணமாகி குடும்பத்துடன் அப்பகுதியிலேயே  தனித்தனியாக வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு மகன்கள்  வீட்டிற்கு வந்து பெற்றோருக்கு உணவு கொடுத்து விட்டு சென்றனர்.  உணவை சாப்பிட்டு விட்டு கணவன்-மனைவி இருவரும் வீட்டிற்குள்  தூங்கினர். இந்நிலையில், நேற்று காலை வீட்டின் வெளியே உள்ள  கழிப்பறை அருகே வயல் பகுதியில் கால்கள் வெட்டப்பட்டும், காதுகள்  அறுக்கப்பட்ட நிலையி லும் உண்ணாமலை படுகொலை செய்யப்பட்டு  கிடந்தார்[1]. 27-07-2014 அன்று (ஞாயிறு) அதிகாலை அவர்களின் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள், மூதாட்டி உண்ணாமுலையை தனியாகத் தூக்கிச் சென்று, அவரது கழுத்தில் கிடந்த நகைகளை எடுத்துக் கொண்டு, காதினை அறுத்து கம்மல் உள்ளிட்டவற்றை எடுத்துக்கொண்டுள்ளனர். பின்னர் கால்களில் அவர் அணிந்திருந்த வெள்ளிக்காப்பை கழற்ற இயலாததால், அவரது கால்களை துண்டித்து அவற்றையும் எடுத்துச் சென்றுள்ளனர். ஒருசவரன் தங்க நகை மற்றும், 200 கிராம் வெள்ளிக்காக[2]  மூதாட்டி கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்த போலீஸார் விரைந்து சென்று சடலத்தைக் கைப்பற்றி விசாரித்தனர். இது குறித்து காவேரிப்பட்டினம் எஸ்பி கண்ணம்மாள் நேரில் விசாரணை மேற்கொண்டார்[3].

Chain snatching illustrative pictures

Chain snatching illustrative pictures

மே.4, 2014 – தென்னகரம் கிராமம், கிளியனூர், புதுச்சேரி[4]: புதுவையை அடுத்த கிளியனூர் அருகே தென்னகரம் கிராமத்தில் உள்ள அணைக்கட்டு அருகே நேற்று மாலை 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி பிணம் கிடந்தது. உடல் முழுவதும் அழுகிய நிலையில் இருந்தது. தேர்குணம் கிராமத்துக்கு வரும்போது லட்சுமியை யாராவது கடத்தி வந்து நகைக்காக அவரை கொலை செய்து பிணத்தை அணைக்கட்டில் வீசி சென்று இருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மே.20, 2014 – பாம்பாம்பட்டி, பழனி: பழனி அருகே உள்ள பாப்பம்பட்டியைச் சேர்ந்தவர் மருது மனைவி வள்ளியம்மாள்(65). வீட்டில் தனியாக இருந்த வள்ளியம்மாளை கொலை செய்து விட்டு, அவரிடம் இருந்து 4 சவரன் நகையை மர்ம நபர்கள் பறித்துச் சென்றுள்ளனர். இது குறித்து பழனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்[5].

ஜூன்.16, 2014 – ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி மாவட்டம்[6]: தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்தவர் கோமதி (62). இவரது கணவர் ஓய்வு பெற்ற தபால் ஊழியர். கோயிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பினார். வீட்டில் மனைவி கோமதி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்துள்ளார். அவரது கழுத்தில் இருந்த 21 பவுன் நகைகள் காணவில்லை. போலீசில் புகார் கூறினார். போலீசார் விசாரித்து வருகின்றன. நகைக்காக கோமதி கொலை செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஜூலை.1, 2014 – திருவல்லிக்கேணி, சென்னை[7]: திருவல்லிக்கேணி ஜாம் பஜார் தேவராஜ் முதலித் தெருவைச் சேர்ந்தவர் கனி முகம்மது மனைவி மகருன்னிஷா. கடந்த 24-ம் தேதி மகருன்னிஷா, படுக்கை அறையில் கை,கால்கள் கட்டப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். ஜாம் பஜார் போலீஸார் விசாரணை நடத்தினர்.  இந்த வீட்டின் அருகே இருந்த கடைகளில் பொருத்தப்பட கேமிராக்களில் பதிவான காட்சிகளை போலீஸார் பறிமுதல் செய்து, விசாரித்தனர். விசாரணையில் அதேப் பகுதியைச் சேர்ந்த கனியின் உறவினர் நூர் முகம்மது மகன் சபி முகம்மது (29), அவரது கூட்டாளி ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்த அப்துல் ஹமீது பாலி (27) ஆகிய இருவரும்தான் சேர்ந்து மகருன்னிஷாவை கொலை செய்து, நகை பணத்தை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் தலைமறைவாக இருந்த இருவரையும் திங்கள்கிழமை கைது செய்தனர். அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணம், நகை பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட சபி, இங்கிலாந்து பட்ட மேற்படிப்பு படித்திருப்பதும், சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் மகருன்னிஷாவை கொலை செய்து நகை, பணத்தை கொள்ளையடித்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பெண்களுக்கு மதிப்பு, மரியாதை கொடுக்கும் தன்மை எங்கு போய் விட்டது?: கடந்த 60 ஆண்டுகளாக நடந்து வரும் திராவிட கட்சிகளின் ஆட்சியால், கடவுள் நம்பிக்கை போய், நீதி-நேர்மை போன்ற உணர்வுகள் அழிந்து கொலை-கொள்ளை குற்றங்களை செய்வது சாதாரணமாகி விட்டது. அவற்றை ஊக்குவிக்கும் வகையில் சினிமா மற்றும் ஊடகங்களும் ஆதரித்து வருகின்றன. எதிர்மறையாக காட்டி வரும் நிகழ்ச்சிகளால், இளைஞர்கள் சீரழிந்து கொண்டிருக்கிறார்கள். பெண்மையினை மதிக்கும் போக்கே போய் விட்டது. சிறுமிகள், மாணவியர், இளம்பெண்கள், இவர்களை பார்க்கும் தோரணையே செக்ஸ் ரீதியிலாக அமைய சினிமாக்களும், மோசமான வசனங்களும், ஆபாசமான காட்சிகளும் தான் காரணமாக அமைந்து வருகின்றன. போதா குறைக்கு அத்தகைய ஆபாசங்களுக்கு, வேசித்தனங்களுக்கு, பரத்தைப் பழக்கங்களுக்கு  பரிசு-பாராட்டு போன்ற நிகழ்ச்சிகளும் நடந்து வருகின்றன. நாகரிகம் பெயரில் அசிங்கம்-ஆபாசம்-நிர்வாணம் முதலியவைத்தான் அரங்கேறி வருகின்றன. இதனால், பெண்மை-தாய்மை மதிக்க இக்கால இளைஞர்கள் மறந்து வருகின்றனர். இவையெல்லாம் சேர்ந்திருக்கும் நிலையில், எளிதாக பணம் கிடைக்கும் என்ற நோக்கத்தில், பெண்களின் கழுத்துகளினின்று தாலி பறிப்பது, நகைகள் பிடுங்குவது என்றேல்லாம் திட்டம் போட்டு நடந்து கொண்டிருக்கும் வேளையில், கொலை செய்து பறிக்கும் நிலைக்கு வந்துள்ளது. அதிலும் மூக்கு, காது, கை, கால்,  அறுத்து நகைகளை எடுக்கும் அளவிற்கு அக்குரூரம் சென்றடைந்துள்ளது.

இந்நிலை மாற: சமூகத்தில் பலவிதங்களில் இக்குற்றங்கள் விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தி வருகின்றன. தார்மீக, ஆன்மீக, நன்னெறி ஒழுக்க ரீதிகளில் மட்டுமல்லாது, பாரம்பரிய மூலங்களை அழிக்கும் முறைகளில் இக்குற்றங்கள் நடந்து வருகின்றன. எனவே, இவற்றை ஒழிக்க வேண்டுமானால், கீழ்கண்டவை கருத்தில் கொள்ளவேண்டியுள்ளது:

 1. திராவிடக் கட்சிகளின் அரைவேக்காட்டு, போலி நாத்திகம் ஒழிக்கப்பட வேண்டும். ஆத்திகம், நன்னெறிகள் போற்றப்படவேண்டும்.

 1. பள்ளி-கல்லூரிகளில் நன்னெறி போதனைகள் வகுப்புகள் அறிமுகப் படுத்த வேண்டும்.

 1. முற்போக்கு, இடதுசாரிகள், கம்யூனிஸ போர்வையில் சுற்றிக் கொண்டிருக்கும் தேசவிரோதிகள், கொள்ளைக்காரர்கள் முதலியவர்கள் அடக்கப்பட வேண்டும்.

 1. அத்தகைய சித்தாந்தங்களைப் பரப்பும் எழுத்தாளர்கள், சினிமாக்காரர்கள், ஊடகக்காரர்கள் அடையாளம் காணப் பட்டு தனிமைப் படுத்தப் படவேண்டும்.

 1. அவர்களை எக்காரணத்திற்கும் பரிசு-பட்டம் போன்றவற்றிற்கு பரிந்துரைக்கப்படக் கூடாது, ஆதரிக்கப்படக் கூடாது.

 1. போலீஸ்-தாலி அறுப்பு, திருட்டு நகை விற்பனை கூட்டங்களை ஒடுக்க வேண்டும். இவற்றிற்குள்ள சம்பந்தங்களை வெளிப்படுத்த வேண்டும்.

 1. பெண்கள், மூதாட்டிகள் தனியாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும். கண்டவர்களை (வேலை செய்பவர்களையும் சேர்த்து) வீடுகளில் அனுமதிக்கக் கூடாது.

 1. தனியாக இருக்கும் பெண்களுக்கு பாதுகாப்புக் கொடுக்க வேண்டும். தாம்பத்திய முறைகளை மதிக்க வேண்டும்.

 1. பெற்றோர், பெரியவர், முதியோ முதலியவர்கள் மதிக்கப் பட வேண்டும்.

 1. இக்குற்றங்களை செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுத்து, அவர்களின் முகங்களை சமூகத்தில் உள்ளவர்களுக்கு காட்டப்பட வேண்டும்.

© வேதபிரகாஷ்

28-07-2014

[1] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=102637

[2] http://www.puthiyathalaimurai.tv/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-158917.html

[3] http://www.nakkheeran.in/Users/frmnews.aspx?N=125986

[4] http://cinema.maalaimalar.com/2014/05/08155646/Woman-killed-police-enquiry-in.html

[5] http://www.dinamalar.com/news_detail.asp?id=980434

[6] http://www.dinamalar.com/news_detail.asp?id=1000667

[7] http://www.dinamani.com/edition_chennai/chennai/2014/07/01/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81/article2309085.ece

சுனந்தா மர்ம மரணத்தில் தொடரும் மர்மங்கள் – பலதார திருமணம், சாவில் முடிந்தது ஏன் – இஸ்லாமிய தீவிரவாதிகளால் துரத்தியடிக்கப் பட்ட ஒரு இந்து பெண்ணின் சோகமான கதை (6)

ஜூலை4, 2014

சுனந்தா மர்ம மரணத்தில் தொடரும் மர்மங்கள் – பலதார திருமணம், சாவில் முடிந்தது ஏன்  – இஸ்லாமிய தீவிரவாதிகளால் துரத்தியடிக்கப் பட்ட ஒரு இந்து பெண்ணின் சோகமான கதை (6)

The twitter affairs breaking marriage sasi-tarar-sunanda

The twitter affairs breaking marriage sasi-tarar-sunanda

பாதிக்கப் பட ஒரு இந்து பெண்ணின் நிலை அலசப் படுகிறது: சசிதரூர் – சுனந்தா மூன்றாவது திருமண பந்தத்தில்,  ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்து பெற்ற முஸ்லிம் பெண் மெஹர் தரார் எப்படி தலையிட்டார் என்பது முன்னர் விளக்கப் பட்டது[1]. சுனந்தா-மெஹர் டுவிட்டர் உரையாடல் அவர்களுக்கு இடையே இருந்த கசப்பை வெளிப் படுத்தி காட்டியுள்ளது[2]. வரம்பிற்கு மீறி மெஹர் தலையிட்டுள்ளது, சசி அதனை ஊக்குவித்தது, இதனை சுனந்தா கண்டித்த பிறகு, சசி மெஹரை நிறுத்திக் கொள் என்றது, ஆனால், தொடர்ந்து இ-மெயில், போனில் பேசிக் கொண்டிருந்தது,  இதனால் துபாயில் சுனந்தா வெளிப்படையாகத் தட்டிக் கேட்டது முதலியனவும் விளக்கப்பட்டன[3].  காஷ்மீரத்தில் வாழ்ந்து வந்த சுனந்தா மற்றும் அவரது குடும்பம் ஜிஹாதி தீவிரவாதத்தால் சிதறுண்டது.  பயங்கரவாதத்தினால் பிளவுண்டது. குடும்பத்தினர் பிரிய, இவர் துபாய்-கனடா-துபாய் என்று அலைய வேண்டியதாயிற்று.  இப்படி இரண்டு கணவர்கள் இறந்த பிறகு, மூன்றாவதாக சசி தரூரை திருமணம் செய்து கொண்ட பிறகு,  ஆரம்பித்தது தான் அந்த பாகிஸ்தானிய பெண்மணி, முஸ்லிம் மெஹர் தராரின் தலையீடு[4]. ஏகப் பட்ட மருந்துகள் உட்கொண்டதால்,  அக்கலவையே விஷமாகி இருக்கக்கூடும் என்றும் சொல்லப் பட்டது[5]. இந்நிலையில்  ஐந்து மாதங்களுக்குப் பிறகு,  அச்சர்ச்சை மறுபடியும் வெளிப்பட்டுள்ளது.

Why paki-woman eye on Indians

Why paki-woman eye on Indians

சுனந்தா புஷ்கரின் மர்மமான மரணம்:சுனந்தா புஷ்கர் மரணம் தொடர்பாக தேவைப் பட்டால், அவரது கணவரும்,  முன்னாள் மத்திய அமைச்சருமான சசி தரூர் மற்றும் அவரது உடலை சோதித்த டாக்டரிடம் விசாரணை நடத்துவோம் என டில்லி போலீசார் கூறியுள்ளனர்.பாகிஸ்தானை சேர்ந்த பத்திரிகையாளர் மெஹர் தராருக்கும், சசி தரூருக்கும்,  கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளதாகவும், மெர்தரார், சசிதரூரை, தன்னிடமிருந்து பிரிக்க முயற்சிப்பதாகவும், சுனந்தா,  “டுவிட்டரில்’ பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தார். இந்த விவகாரத்தால்,  சசிதரூர் சுனந்தா இடையில் கருத்து வேறுபாடும், மோதலும் ஏற்பட்டுள்ளதாக, தகவல் வெளியானது.  இதனால் ஏற்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள் சுனந்தா புஷ்கர், கடந்த ஜனவரி மாதம் 17ம் தேதி டில்லியில் உள்ள லீலா ஓட்டலில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.  அவரது உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்கு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு [All India Institute of Medical Sciences (AIIMS)] அனுப்பி வைத்திருந்தனர். அவரது உடலை 3 பேர் கொண்ட மருத்துவர் குழுவினர் பரிசோதனை நடத்தினர்.   டாக்டர் சுதிர் குப்தாவின் தலைமையில் பிரேத பரிசோதனை நடத்தப் பட்டது. அப்போது, சுனந்தாவின் இரு கைகளிலும்  12-க்கும் மேற்பட்ட இடங்களில் காயம் ஏற்பட்டதற்கான அடையாளங்கள் இருந்தது தெரிய வந்தது.  மேலும் அவரது கன்னத்தில் கீறல்களும் காணப்பட்டன. இதே போல், அவரது இடது உள்ளங்கையில் ஆழமாக பற்கள் பதிந்ததற்கான அடையாளங்களும் இருந்தன. எனினும்,  இவை மரணம் நேரிடக் காரணமாக அமையவில்லை என்றும் பிரேத பரிசோதனையில் கூறப்பட்டது[6]. இந்த சோதனையில், அதிகளவு மருந்தை உட்கொண்டதால் தான் சுனந்தா மரணமடைந்ததாக தெரிவிக்கப் பட்டது.

shashi_tharoortwitter0220141501(1)மரணம் இயற்கையா, மருந்துகளினால் தூண்டப் பட்டதா?: ஜனவரியிலேயே கொஞ்சம்-கொஞ்சமாக அவருக்கு நச்சுதன்மை கொண்ட மருந்து கொடுக்கப் பட்டு வந்துள்ளது என்று தெரிய வந்தது[7]. இதனால் தான்,  உள்ளுறுப்புப் பகுதிகள் சோதனைக்கு எடுத்து வைக்கப் பட்டது.  புஷ்கர் தங்கியிருந்த அறையில் மன அழுத்தத்திற்கான மாத்திரை கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து சுனந்தாவின் குடல் உறுப்புகள் ஆய்வக சோதனைக்காக அனுப்பி வைக்கப் பட்டது. அதில் அளவுக்கு மீறி மாத்திரைகள் தின்றதால் அது விஷமாக மாறியிருப்பது கண்டறியப் பட்டது.  இதிலும் தெளிவான முடிவுகள் கிடைக்காததால் இது பற்றி போலீசார் வழக்கு எதையும் பதிவு செய்யவில்லை.  மேலும் சுனந்தாவின் சகோதரர், மகன்,  சசி தரூர் மற்றும் அவரது ஊழியர்கள் ஆகியோர் அளித்த வாக்குமூலங்களை மாஜிஸ்திரேட்டு பதிவு செய்த போது,  இவர்களில் யாரும் சுனந்தாவின் மரணத்தில் எந்த தவறான நிகழ்வுகளும் ஏற்படவில்லை என்று தெரிவித்தனர்.  இதையடுத்து மனச்சோர்வுக்கான மாத்திரைகளை அதிக அளவில் தின்றதால் சுனந்தாவுக்கு இயற்கையாகவே மரணம் நேர்ந்தது என்று பிரேத பரிசோதனை அறிக்கை வெளியிடப் பட்டது.  இந்த சம்பவம் தொடர்பாக, சசி தரூரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்யப் பட்டது.

Christa Giles, Tharoor’s second wife

Christa Giles, Tharoor’s second wife

டாக்டர் சுதிர் குப்தாவினால் உண்டாகியுள்ள சர்ச்சை: இந்நிலையில் நேற்று,  சுனந்தா உடலை பிரேத பரிசோதனை செய்த டாக்டர் குப்தா, சுனந்தாவுக்கு ஏற்பட்ட மன அழுத்தமே அவரது மரணத்திற்கு காரணம் எனவும், சிலர்,  இந்த மரணத்தை இயற்கையாக காட்ட வேண்டும் என விரும்பினர்[8] எனவும் என்னை புதிய அரசு பதவியேற்கும் 3 நாட்களுக்கு முன்னர் என்னை விலகி செல்ல முயற்சி நடந்தது என கூறியிருந்தார்[9]. அந்த புகாரில்,  ‘சுனந்தா இயற்கையாக மரணமடைந்தார் என்று அறிவிக்க வேண்டும் என அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் 2 மந்திரிகள் எனக்கு நெருக்கடி கொடுத்தனர். மேலும்,  நாங்கள் கூறும் படி திட்டமிட்ட பிரேத பரிசோதனை அறிக்கையை தயாரிக்கும் படியும் என்னை அவர்கள் வற்புறுத்தினார்கள். அதற்கு நான் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தேன்’  என்று சுதிர் குப்தா குறிப்பிட்டு உள்ளதாக தெரிகிறது.  இதனையடுத்து இந்த விவகாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. டாக்டர் சுதிர் குப்தா கருத்துக்கு எய்ம்ஸ் நிர்வாகம் மறுப்பு தெரிவித்தது[10]. குப்தாவுக்கு யாரும் நெருக்கடி தரவில்லை எனவும்,  நெருக்கடி தந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என கூறியிருந்தது. குப்தா தனது பதவி உயர்வுக்காக மத்திய நிர்வாக ஆணையம் முன்னால் [Central Administrative Tribunal (CAT)] ஒரு வழக்குத் தொடுத்திருக்கிறார்.  அது நிலுவையில் உள்ளது. இப்பொழுது அதனையும் இணைத்து இப்புகாரைக் கொடுத்துள்ளார்[11].  அது முடியும் வரை எங்களால் கருத்துத் தெரிவிக்க முடியாது என்றும் எய்ம்ஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

Tilothama - first wife of Sasi

Tilothama – first wife of Sasi

அரசியல் தலையீடு உள்ளதா?:  முந்தைய அனமைச்சர் குலாம் நபி ஆஜாதும் எந்தவித அழுதத்தையும் ஏற்படுத்த வில்லை என்று கூறி மறுத்துள்ளார்[12].  ஆகவே, எய்ம்ஸ் அல்லது டாக்டர் குப்தா யார் பொய் சொல்கிறார்கள் என்ற பிரச்சினையும் எழுந்துள்ளது[13] ஏனெனில் இது இயற்கையான மரணமா அல்லது சதியுள்ளதா என்ற சந்தேகம் ஆரம்பத்திலிருந்து இருந்து வந்துள்ளது. நன்றாக இருந்த சுனந்தா இறந்ததை அந்த பாகிஸ்தான் காதலியே நம்பவில்லை. நிச்சயமாக தற்கொலை செய்து கொள்ள மாட்டாள்,  ஏனெனில், சுனந்தா அந்த அளவிற்கு கோழையான பெண் இல்லை என்று அவளது குடும்பத்தார் உறுதியாக சொன்னார்கள். இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த,  முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூர், இந்த விவகாரத்தில் விரைவாகவும் தெளிவாகவும் விசாரணை நடத்தி,  பிரச்னைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் எனவும், தெளிவான முடிவுக்கு வந்தால் தான் சர்ச்சைகளுக்கு முடிவு கிடைக்கும்.  எனவும் கூறியிருந்தார்[14]. சுனந்தா புஷ்கர் மரணம் குறித்து டில்லி போலீசாரும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் விளக்கமளித்தனர்.இந்நிலையில்,  சுனந்தா புஷ்கர் மரணம் குறித்து டில்லி போலீஸ் கமிஷனர் பஸ்சி கூறுகையில்,  சுனந்தா விவகாரம் குறித்து எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை இப்போது கூற முடியாது. தற்போது விசாரணை நடந்து வருகிறது என்பதை உங்களுக்கு தெரியப் படுத்தி கொள்கிறேன்.  இந்த விவகாரத்தில் தேவைப்படும் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப் பட்டு வருகிறது. தேவைப் பட்டால்,  முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர், மற்றும் டாக்டர் சுதிர் குப்தாவிடம் விசாரணை நடத்துவோம்.  ஆதாரங்கள் மற்றும் சட்டப்படி விசாரணை நடைபெறும்.  சுனந்தா மரணம் தொடர்பாக டில்லி போலீஸ் இன்ஸ்பெக்டர் அதுல் சூத் தலைமையில் சிறப்புபடை அமைக்கப் பட்டுள்ளது[15].

Sasi-Sunanda-third-marriage-with-each other

Sasi-Sunanda-third-marriage-with-each other

விரைவாக விசாரியுங்கள் என்று கேட்கும் சசி தரூர்[16]:  மனைவி சுனந்தாவின் மரணம் எனக்கு மிகப் பெரிய இழப்பாகும். இது தொடர்பான விசாரணையை விரைவாகவும்,  வெளிப்படையானதாகவும் முடிக்குமாறு புலன்விசாரணை நடத்தும் அதிகாரிகளை நான், ஆரம்பம் முதலே கேட்டுக் கொண்டு வந்திருக்கிறேன்.  இதே கருத்தைத் தான் சுனந்தாவின் குடும்பத்தினரும் கொண்டுள்ளனர். மேலும், நாங்கள் அனைவரும் இப்பிரச்சினையில்,  விசாரணை அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பையும் அளித்து வருகிறோம்.  எனவே, இந்த விஷயத்தில் காலத்தை கடத்தாமல் விசாரணையை நடத்தி முடித்து தெளிவான மற்றும் நிச்சயமானதொரு முடிவை வெகுவிரைவில் போலீசார் கொண்டு வரவேண்டும் என்று மீண்டும் கேட்டுக் கொள்கிறேன். அப்போது தான் இதில்,  நிலவும் அனைத்து வித ஊகங்களுக்கும் முற்றுப் புள்ளிவைக்ப்படும்[17], என்று சசிதரூர் தனது அறிக்கையில் கூறியுள்ளார். ஆனால், அவர் தனது பிளாக் பெர்ரி மொபைலில் உள்ள மெசேஜிகளையெல்லாம் அழித்து விட்டார் என்று செய்தி வந்துள்ளது[18].  நளினி சிங் என்ற பத்திரிக்கையாளர் ஜனவரி 17ந்தேதி காலையின் போனில் தொடர்பு கொண்ட போது கத்தினார்,  அழுதார் என்று குறிப்பிடுகின்றார்[19].

© வேதபிரகாஷ்

03-07-2014

[1] https://womanissues.wordpress.com/2014/01/18/sunanda-pushkar-sasi-tarur-polygamy-ended-with-death-the-story-of-a-hindu-woman-who-was-driven-away-by-the-islamic-terrorists/

[2] https://womanissues.wordpress.com/2014/01/18/sunanda-pushkar-mysterious-death-and-tragedy-of-a-hindu-woman/

[3] https://womanissues.wordpress.com/2014/01/19/twitter-brawl-between-ladies-ended-in-suicide-or-compelled-suicide/

[4] https://womanissues.wordpress.com/2014/01/20/mehr-tarar-explanation-about-denial-points-to-love-jihad/

[5] https://womanissues.wordpress.com/2014/01/23/unsolved-riddles-in-death-of-sunanda-pushkar/

[6] http://www.dailythanthi.com/News/India/2014/07/03023104/Former-Federal-MinisterShashi-Tharoor-and-wife-Sunanda.vpf

[7] http://www.hindustantimes.com/india-news/sunanda-case-police-also-looking-at-slow-poisoning/article1-1175792.aspx

[8]தினத்தந்தி,  முன்னாள்மத்தியமந்திரிசசிதரூர்மனைவிசுனந்தாமரணத்தில்புதியதிருப்பம்இயற்கைமரணம்என்றுஅறிவிக்கநெருக்கடிகொடுத்ததாகடாக்டர்குற்றச்சாட்டு, சென்னைப்பதிப்பு,03-07-2014.

[9]தினமலர், சுனந்தாமரணம்: தேவைப்பட்டால்சசிதரூரிடம்விசாரணை: டில்லிபோலீஸ்கமிஷனர், சென்னைப்பதிப்பு,03-07-2014.

[10]http://tamil.thehindu.com/india/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/article6170356.ece?homepage=true

[11] http://timesofindia.indiatimes.com/city/delhi/AIIMS-says-forensic-head-faced-no-pressure/articleshow/37667255.cms

[12] http://www.dnaindia.com/india/report-sunanda-pushkar-death-now-aiims-denies-that-upa-minister-ghulam-nabi-azad-exerted-pressure-to-alter-autopsy-report-1999055

[13] http://www.hindustantimes.com/india-news/plot-thickens-the-unanswered-questions-in-the-death-of-sunanda-pushkar/article1-1235840.aspx

[14] http://www.puthiyathalaimurai.tv/sunanda-pushkar-death-case-there-was-no-pressure-on-dr-sudhir-gupta-says-aiims-153328.html

[15] http://www.dinamalar.com/news_detail.asp?id=1012357

[16] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=99153

[17] http://www.dailythanthi.com/News/India/2014/07/03023104/Former-Federal-MinisterShashi-Tharoor-and-wife-Sunanda.vpf

[18] http://zeenews.india.com/news/nation/shashi-tharoor-deleted-bbms-to-mehr-tarar-sunanda-pushkar-wanted-to-retrieve-them_944725.html

[19]‘Shashi Tharoor deleted BBMs to Mehr Tarar, Sunanda Pushkar wanted to retrieve them’
The phone messages are very relevant. Deleting them and asking the doctor to change postmortem report followed by hurried cremation definitely is suspicious.