கேரள சிறுமியர்-சிறுமிகள் கடத்தல் ஒரு மனிதத்தன்மையற்ற வியாபாரமே – அவர்கள் வாங்கி விற்கப்படுவது, அனாதை இல்லங்களில் வைக்கப்படுவது பணத்தைப் பெறுவதற்காகவே, சேவை போர்வையில் நடக்கும் வியாபாரம் (2)


கேரள சிறுமியர்-சிறுமிகள் கடத்தல் ஒரு மனிதத்தன்மையற்ற வியாபாரமே – அவர்கள் வாங்கி விற்கப்படுவது, அனாதை இல்லங்களில் வைக்கப்படுவது பணத்தைப் பெறுவதற்காகவே, சேவை போர்வையில் நடக்கும் வியாபாரம் (2)

Forced marriage from orphanage

Forced marriage from orphanage

வளைகுடா நாடுகளிலிருந்து தானமாக வரும் கோடிக்கணக்கான பணம்: முஸ்லிம் அனாதை இல்லங்கள் ஆயிரக்கணக்கில் நடத்தப் பட்டு வருகின்றன. இவற்றை நடத்துவதற்கு வளைகுடா நாடுகளிலிருந்து தானம் என்ற பெயரில் பணம் வசூலிக்கப் படுகிறது.  சுமார் 1,400 அனாதை இல்லங்களுக்கு கோடி கணக்கில் பணம் வசூலிக்கப் படுகிறது. இப்பணத்தை வசூலிக்கு ஏஜென்டுகள் 40% எடுத்துக் கொண்டு மீதம் 60%-த்தை கொடுத்து விடுகின்றனர்[1]. இப்படியாக இது ஒரு திட்டமிட்ட செயலாகவே நடந்து வருகிறது. ஆசிரியர் வேலைக்கு சுமார் ரூ.25-30 லட்சங்கள் தானமாகக் கிடைக்கிறது[2]. ஆக தானம் என்று இருந்தாலும், பணம் முக்கியமான விசயமாக இருக்கிறது என்று தெரிகிறது. சேவை என்ற போர்வையில், ஏழ்மையை பயன்படுத்திக் கொண்டு, இவ்வில்லங்கள் நடத்தப் படுகின்றன என்றாகிறது. எனவே மற்ற ஊழகளைப் போல இது ஒரு பெரிய சமூக ஊழல் என்றே சொல்லலாம். ஆனால் 40% எடுத்துக் கொள்ளும் ஏஜென்டுகள் யார், அவர்கள் அப்பணத்தை எதற்கு உபயோகப்  படுத்துகிறார்கள், என்ற விவரங்கள் சொல்லப்படவில்லை. வளைகுடா நாடுகளிலிருந்து தானமாக பணம் வருகிறது என்றால், அவ்வப்போது, ஷேக்குகள் வந்து, முஸ்லிம் அனாதை இல்லங்களில் உள்ள சிறுமிகளை-இளம்பெண்களை “அரேபிய கல்யாணம்” செய்து கொண்டு, அனுபவித்து விட்டு சென்று விடுகிறனர்[3]. எனவே அந்த தானத்திற்கும், இந்த காமத்திற்கும் சம்பந்தம் உண்டா என்றும் கவனிக்க வேண்டியுள்ளது.

Kerala orphanage nikah  with Sheik Aug.2013

Kerala orphanage nikah with Sheik Aug.2013

விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவரத்தொடங்கின[4]: அந்நிய பணம் மற்றும் அரசு நிதியுதவிப் பணம் என்று இரண்டுவகைகளில் பெறப்படும் பணத்தை இவ்வாறு போலித்தனமான “அனாதை இல்லங்கள்” என்ற பெயரில் வியாபாரம் நடத்துவது தான் வெளிப்படையாகத் தெரிகிறது.

  1. கேரளாவில் கோழிக்கோடு, மலப்புரம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் 200க்கும் மேற்பட்ட அனாதை இல்லங்கள் இயங்கி வருகின்றன. இதில் 99 சதவீதம் முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ அமைப்புகளால் நடத்தப்படுகின்றன. இவற்றுக்கு கேரள அரசும் லட்சக்கணக்கில் மானியம் தருகிறது.
  2. அரசின் மானியத்தை வாங்கி பீகார், ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்காளம் உட்பட பல மாநிலங்களிலிருந்து ரூ1000 முதல் ரூ3000 வரை பணம் கொடுத்து குழந்தைகளை கேரளாவுக்கு ஏஜன்ட்கள் கொண்டு வருகின்றனர்.
  3. இப்படி சலுகையை தவறாக பயன்படுத்தி குழந்தைகள் கடத்தல் நடக்க ஆரம்பித்துள்ளது. அதன் விபரீதம் தான் இந்த 450 குழந்தைகள்.
  4. ஜார்கண்ட் மாநிலத்திலிருந்து தான் அதிக அளவில் 257 குழந்தைகள் கொண்டு வரப்பட்டனர். இவர்கள் அனைவரும் இம்மாநிலத்திலுள்ள கோடா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
  5. கேரளாவுக்கு குழந்தைகளை அழைத்து வந்த பின்னர் அவர்களது பெயர் மற்றும் முகவரியை மாற்றி விடுவார்கள். அவர்கள் அனைவரும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என கூறி அரசை ஏமாற்றி நிதியுதவி பெற இந்த ஏற்பாடு.
  6. கடந்த வருடம் கோழிக்கோட்டிலுள்ள ஒரு அனாதை இல்லம் இதுபோல ஏமாற்றி அரசிடமிருந்து ரூ35 லட்சம் நிதியுதவி பெற்றுள்ளது.
  7. கடந்த வருடம் மட்டும் கேரளாவிலுள்ள சில அனாதை இல்லங்களுக்கு வெளிநாடுகளிலிருந்து ரூ.19 கோடி வரை உதவி கிடைத்துள்ளது.
Kerala orphanage sex May.2014

Kerala orphanage sex May.2014

சேவைக்காக அனாதை இல்லங்களா அல்லது தேவைக்கு, பணத்திற்கா?: முஸ்லிம் பள்ளிகள் / மதரஸாக்கள் நிரம்பி இருக்க வேண்டும் என்பதற்காகவே, இவர்கள் இப்படி அழைத்து வரப்படுகின்றன[5], அனாதை இல்லங்களில் அனாதைகள் இல்லை என்பதற்காகவே அழைத்து வரப் படுகிறார்கள் என்றும் விளக்கம் அளிக்கின்றனர்[6]. இதனை விசாரித்த கேரளா போலீஸாரே விசயம் இவ்வளவுதான், இதில் பாலியல் தொல்லை முதலிய விவகாரங்கள் எல்லாம் இல்லை என்று நீதிமன்றத்திற்கு அறிக்கைக் கொடுத்துள்ளனர். இருப்பினும் மற்ற விவகாரங்கள் இதில் அத்தகைய விசயமும் உள்ளது என்றுதான் காட்டுகிறது என்று சமூக இயக்கங்கள் கூறுகின்றன. கேரளா ஏற்கெனவே செக்ஸ்-ரூரிஸத்தின் / பாலியல் சுற்றுலா இடமாக உள்ளது. ஆந்திரா மற்றும் கேரளாவில் அதிகமாகிக் கொண்டிருக்கிறது என்றும் சோதனைகள், விசாரணைகள், கைதுகள் முதலியவை எடுத்துக் காட்டுகின்றன[7]. சமீபத்தைய அறிக்கை கேரளாவைச் சுட்டிக் காட்டுகிறது[8]. இதனால் தான் சிபிஐ விசாரணை வேண்டும் என்றும் கோரிக்கை எழுப்பப் பட்டுள்ளது.

church sex pedophile etc caricature

church sex pedophile etc caricature

பெற்றோர்களுக்கு கூட தெரியாமல் கொண்டு வந்தது வெட்கக்கேடான சம்பவம்[9]:  எர்ணாகுளத்தைச் சேர்ந்த ‘தம்பு‘ என்ற சமூக நல அமைப்பு சார்பில் கேரள உயர்நீதிமன்றத்தில் பொது நலன் வழக்கு தொடரப்பட்டது. இதை தலைமை நீதிபதி மஞ்சுளா செல்லூர் தலைமையிலான டிவிஷன் பெஞ்ச் விசாரித்தது. 5 வயது கூட ஆகாத குழந்தைகளை அவர்களது பெற்றோர்களுக்கு கூட தெரியாமல் எப்படி இங்கு கொண்டு வந்தார்கள்?   பெற்றோர்கள் உயிரோடு இருக்கும் போது அவர்கள் எப்படி அனாதைகள் ஆவார்கள்? கேரளாவில் இது போன்ற சம்பவம் நடப்பது வெட்கக்கேடானது  என்று டிவிஷன் பெஞ்ச் கூறியது.   கடத்திக் கொண்டு வருபவர்கள் பெற்றோர்களிடம் சொல்லிவிட்டா, கடத்தி வருவார்கள்? ஆனால், பிறகு எல்லோரும் அமைதியாகி விட்டதுதான் வினோதமான விசயம்!

Coimbatore campaigning against crime against children

Coimbatore campaigning against crime against children

மத்திய அரசுக்கு விவரங்கள் தர மறுப்பு, மறைப்பு[10]:  மத்திய குழந்தைகள் நலத்துறை பல முறை கேட்டும் இந்த குழந்தைகள் பற்றிய  எந்த தகவலையும் அளிக்க கேரளா மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.  இதன் பின்னணியில் பல மர்மங்கள் இருப்பதாக கேரள பா.ஜ தலைவர்கள் கூறுகின்றனர்.  இது குறித்து கேரள மாநில பா.ஜ. தலைவர் முரளீதரன் கூறியது: “குழந்தைகளை கடத்தலின் பின்னணியில் மர்மங்கள் இருப்பதாக சந்தேகிக்கிறோம். அவர்களை தீவிரவாத குழுக்களுக்கு அனுப்பி வைக்கவும், பெண் குழந்தைகளை விபசாரத்தில் ஈடுபடுத்தவும், உடல் உறுப்புகளுக்காக கடத்தவும் வாய்ப்புள்ளது”, என்று கூறினார். குழந்தைகள் கடத்தப்பட்ட விவகாரத்தில் கேரள உயர்நீதிமன்றமும் தலையிட்டிருப்பதால் விரைவில் மேலும் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளிச்சத்துக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், கேரளாவில் அரசியல்வாதிகளின் ஆதிக்கத்தில் எல்லாமே இருப்பதாலும், இஸ்லாமிய-கிருத்துவர்கள் அதிக அளவில் வலுவுள்ளவர்களாக, அதிகாரம் கொண்டவர்களாக இருப்பதால், இவ்விசயங்களில் மற்றவர்கள் ஒன்றும் செய்ய முடியாத நிலையில் இருக்கிறார்கள். இக்குழந்தைகள் எங்கோ ஏலத்திலேயோ, விலை கொடுத்து வாங்கப் பட்டு, கொண்டுவரப்பட்டு, இங்கு “அனாதை”களாக்கப் பட்டுள்ளார்கள்! ஏனெனில் அவர்களுக்கு பெற்றோர்கள் உள்ளனர்[11].

குற்றம் செய்து மரத்துப் போனவர்கள், திரும்ப குற்றம் செய்கிறார்கள்

குற்றம் செய்து மரத்துப் போனவர்கள், திரும்ப குற்றம் செய்கிறார்கள்

அனாதை ஆஸ்ரமங்களில் செக்ஸ்குற்றங்கள் நடந்துள்ளது மற்றும் சம்பந்தப் பட்டுள்ளவிவகாரங்கள்: கேரளாவில் செக்ஸ் சம்பந்தப்பட்ட குற்றங்கள் அதிகமாகவே உள்ளன. கேரளாவில் அனாதை இல்லங்களில் பலவிதமான அநியாயங்கள் நடைப் பெற்று வருகின்றன. பாலியல் ரீதியிலான வன்மங்கள் அதிகமாகவே ஏற்பட்டுள்ளன. இதனால், பல இல்லங்கள் அரசாங்கத்தால் நடவடிக்கை எடுக்கப் பட்டு மூடப்பட்டுள்ளன[12]. சுமார் 2,200 அனாதை இல்லங்கள் பதிவு செய்யப் பட்டு செயல்பட்டு வருகின்றன. அயல்நாட்டு பணம் தாராளமாக வருவதால், இது வியாபாரம் போலவே நடத்தப் பட்டு வருகின்றது[13]. ஆகஸ்ட் 28, 2013 அன்று ஒரு 17 வயது சிறுமி ஜஸிம் முஹம்மது அப்துல் கரீம் [UAE national Jasim Mohammed Abdul Kareem ] என்றவனுக்கு ஜூன் 13ம, 2013ல் திருமணம் செய்து வைக்கப் பட்டு, இரண்டு மாதங்களுக்குப் பிறகு தலாக் செய்யப்பட்டாள். இதனால் வழக்குப் பதிவு செய்யப் பட்டது[14]. இப்பெண் தான் பாதிக்கப் பட்ட விசயத்தை அப்பொழுதைய முதல் மந்திரி ஒமன் சாண்டி மற்றும் உள்துரை அமைச்சர் திருவாஞ்சூர் ராதாகிருஷ்ணனிடம் புகாராக கொடுத்துள்ளாள். இ. அஹமது என்ற மத்திய வெளித்துறை அமைச்சரிடத்திலும் புகார் கொடுத்தாள். ஆனால், என்னவாயிற்று என்று தெரியவில்லை. “அரபி கல்யாணம்” எனப்படுகின்ற இந்த சமூக இழிவைத் தடுக்க சட்டம் எடுத்து வரவேண்டும் என்றும் பெண்ணிய போராளிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்[15].

© வேதபிரகாஷ்

02-08-2014

[1] Orphanage sources said there are agents in Gulf to collect donations for the charity homes in Kerala. The agents would take 40 per cent of the gross collection as their commission and the rest would be delivered to the concerned institutes.

http://indianexpress.com/article/india/india-others/children-from-bengal-bihar-being-trafficked-to-keep-kerala-charity-homes-running-police-to-hc/

[2] http://indianexpress.com/article/india/india-others/children-from-bengal-bihar-being-trafficked-to-keep-kerala-charity-homes-running-police-to-hc/2/

[3] http://www.mangalorean.com/news.php?newstype=broadcast&broadcastid=419388

[4] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=95560

[5] The Crime Branch today informed the High Court that the main purpose children were brought from other states toKerala was to overcome shortage of orphans and destitutechildren in the orphanage at Mukkam at Kozhikode.  The case pertains to the recent trafficking of 588 children from Jharkhand, Bihar and West Bengal to the state. In the statement filed by R Sudhakaran Pillai, CB-CID, Deputy Superintendent of Police, it was also pointed out that the main reason behind transportation of children to the state was to prevent the ‘division fall’ due to shortage of students in the school run by orphanage. Police also said shortage of inmates in the orphanage had adversely affected collection of funds as contributions are government grants aids, from local sources and outside.

[6] http://www.business-standard.com/article/pti-stories/children-brought-to-offset-shortage-of-orphans-in-orphanage-114073101708_1.html

[7] http://www.deccanchronicle.com/140726/nation-current-affairs/article/kerala-andhra-pradesh-dock-over-sex-tourism

[8] http://www.humanrights.asia/news/ahrc-news/AHRC-ANM-031-2014

[9] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=95560

[10] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=95560

[11] http://www.openthemagazine.com/article/nation/auctioned-elsewhere-orphaned-in-kerala

[12] http://www.pangeatoday.com/orphanages-accused-of-child-trafficking/

[13] A generous inflow of funds from abroad led to the burgeoning of orphanages in the state – of which there are currently 2,200 registered. Kerala’s private orphanages have incited much controversy due to allegations of being involved in misdeeds from sexual abuse to child marriage. Last year 2013, the state government ordered closure of 60 orphanages in the state.

[14] The girl had also sent her complaint to Chief Minister Oommen Chandy, Kerala Home Minister Thiruvanchoor Radhakrishnan, Union Minister of State for Home Mullappally Ramachandran and Union Minister of State for External Affairs E Ahamed, on Wednesday. The girl filed a complaint before the Child Welfare Committee, alleging that the orphanage authorities forced her to marry the UAE national who deserted her after spending 17 days with her. http://asianetindia.com/92029/

[15] Women activists, political leaders and NGOs in Kerala, who expressed outrage over the girl’s plight, demanded a legislation to check the social menace of ‘Arabi Kalyanam’ (Arab wedding), in which minor Muslim girls are forced into marriage with Arab nationals.

குறிச்சொற்கள்: , , , , ,

3 பதில்கள் to “கேரள சிறுமியர்-சிறுமிகள் கடத்தல் ஒரு மனிதத்தன்மையற்ற வியாபாரமே – அவர்கள் வாங்கி விற்கப்படுவது, அனாதை இல்லங்களில் வைக்கப்படுவது பணத்தைப் பெறுவதற்காகவே, சேவை போர்வையில் நடக்கும் வியாபாரம் (2)”

  1. X.M. Ammukuttan Says:

    As minorities have their own rights, they cannot be checked, verified and audited whatever they do.

    Therfore, ideologized religions will not care for human rights violation etc.

    When the foreign tourists, religous delegates and other theological pursuors come, thy expect only either good women or teenages girsls.

  2. சூளைமேடு முஸ்லிம் பிடோபைலுக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை – செய்தி சுருக்கமாகத்தான் வெளிவந்துள்ளத Says:

    […] [8] https://womanissues.wordpress.com/2014/08/03/kerala-orphanage-trafficking-sexual-abuse-and-other-iss… […]

  3. சூளைமேடு முஸ்லிம் பிடோபைலுக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை – செய்தி சுருக்கமாகத்தான் வெளிவந்துள்ளத Says:

    […] [8] https://womanissues.wordpress.com/2014/08/03/kerala-orphanage-trafficking-sexual-abuse-and-other-iss… […]

பின்னூட்டமொன்றை இடுக