Archive for திசெம்பர், 2014

எய்ட்ஸ் பாதிக்கப்பட்ட நடிகையின் சோகக்கதை, பெண்மை பாதிக்கப் பட்ட குரூரம் – சினிமாவின் சீரழிவுகள்!

திசெம்பர்6, 2014

எய்ட்ஸ் பாதிக்கப்பட்ட நடிகையின் சோகக்கதை, பெண்மை பாதிக்கப் பட்ட குரூரம் – சினிமாவின் சீரழிவுகள்!

நூர் நிஷா நடிகை விவகாரம்

நூர் நிஷா நடிகை விவகாரம்

நூர் நிஷா என்ற நடிகையைப் பற்றி இப்பொழுது வந்துள்ள செய்திகள் (2014): நாகப்பட்டினம் மாவட்டம், நாகூர் தர்கா அருகே ஈ, எறும்புகள் மொய்க்க சுமார் ஆறு நாட்கள் ஒரு பெண் அனாதையாகக் கிடந்தார். அடையாளம் தெரிந்த சிலருக்கு மட்டும் அந்தப் பெண் ஒரு முன்னாள் தமிழ் சினிமா நடிகை என்பது தெரிய வந்தது. எய்ட்ஸ் நோய் அவரது இளமையை உருக்குலைத்துவிட்ட நிலையில், கேட்க ஆளின்றிக் கிடந்த அந்தப் பெண், சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் சினிமாக்களில் கதாநாயகியாக வலம் வந்த நடிகை நிஷா என்ற நூர் நிஷா என்கின்ற நூருன்னிசா[1]. ‘கல்யாண அகதிகள்’ (1986), ‘டிக்..டிக்..டிக்..’ (1981), ஐயர் தி கிரேட் (1990),  ‘ராகவேந்திரா’, ‘இளமை இதோ இதோ’, ‘முயலுக்கு மூணுகால்,’ ‘மானாமதுரை மல்லி’, ‘எனக்காகக் காத்திரு’ போன்ற சில படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். “ஐயர் தி கிரேட்” படத்தின் தயாரிப்பாளரான ஆர். மோஹன் [ R.Mohan] இவரை விபச்சாரத்தில் ஈடுபடுத்தினார். பிறகு, சினிமாத் தொழிலை விட்டு விலகிய இவர் காணாமல் போய்விட்டார்[2] என்று விகிபீடியா கூறுகிறது. ஆனால், யார் இந்த ஆர். மோஹன் என்பது பற்றிய விவரங்கள் இணைதளங்களில் தேடித்தேடிப் பார்த்தாலும் கிடைக்கவில்லை.

ல்யாண அகதிகள் நிஷா.- பாலசந்தர்

ல்யாண அகதிகள் நிஷா.- பாலசந்தர்

 நாகூரில் குடும்பத்தாரால் நிர்கதியாக விடப்பட்ட நூர் நிஷா: நிஷாவின் பிறந்த ஊரே நாகூர்தான் என்பது இன்னொரு அதிர்ச்சிச் செய்தி[3] என்கிறது தமிழ்முரசு என்ற இணைதளம். அதில் என்ன அதிர்ச்சி இருக்கிறது என்று அவர்களுக்குத் தான் தெரிந்திருக்க வேண்டும். அவரது அப்பா, பெரியப்பா, அத்தை என ஓர் உறவினர் பட்டாளமே அந்த ஊரில் வசதியுடன் வாழ்ந்து வருவது, அதைவிட அதிர்ச்சியான செய்தி. மேலும் ‘ஐயர் தி கிரேட்’ என்ற படத்தை தயாரித்தார். “ஐயர் தி கிரேட்” படத்தின் தயாரிப்பாளரான ஆர். மோஹன் [ R.Mohan] இவரை விபச்சாரத்தில் ஈடுபடுத்தினார் என்று இன்னொரு தளம் கூருகின்றது. பின்னர், முஸ்லீம் முன்னேற்ற கழகத்தில் இணைந்ததாக தகவல் வந்தது[4]. அதாவது 1990க்குப் பிறகு இவரது வாழ்க்கையில் பலவிசயங்கள் நடந்துள்ளன என்றாகிறது. தெருவில் கிடந்த இவரை முஸ்லீம் முன்னேற்ற கழகத்தினர் தாம்பரத்தில் உள்ள மருத்துவமனையில் சேர்ப்பித்தனர். அப்பொழுதுதான், அவருக்கு எய்ட்ஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது[5]. பிறகு முமுக அவரை ஏன் விட்டுவிட்டனர் அல்லது தாம்பரத்திலிருந்து, இவர் எப்படி நாகூருக்குச் சென்றார் போன்ற விசயங்களும் மர்மமாக உள்ளன.

aids affected actress

aids affected actress

சமூக வலைத்தளங்களில் பரவிய செய்திகள்: இவரைப் பற்றிய செய்திகள் சில தினங்களுக்கு முன்னர் சமூக வலைத்தளங்களில் பரவின. நாகை மாவட்டத்தை சேர்ந்த சில உள்ளூர் செய்திகளிலும் இந்த சோகக் கதை ஒளிபரப்பாகியது. மற்ற மொழி நாளிதழ்களிலும் வெளியாகின[6]. இந்நிலையில், இந்த செய்தி பற்றி அறிந்த தேசிய மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினரான நீதிபதி முருகேசன் இந்த பிரச்சனையை தேசிய மனித உரிமை ஆணையத்தின் ‘சுவோ மோட்டோ’வாக (தாமாக முன்வந்து தீர்த்து வைக்க நினைக்கும் பிரச்சனை) கையில் எடுத்துள்ளார்[7]. ‘அந்த நடிகைக்கு தேவையான சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை என்னென்ன? என்று நான்கு வாரத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்’ என்று நாகை மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். ‘போக்கிடம் இல்லாத, யாருடைய உதவியும் கிடைக்காத ஒரு பெண் போதிய கவனிப்பின்றி பொது வீதியில் உயிருக்கு மோசமான நிலையில் கிடக்கிறார். அவருக்கு உதவி செய்ய யாருமே இல்லை என்ற தகவல் அவருடைய வாழ்வுரிமையை மீறுவதாகவும், வேதனை அளிப்பதாகவும் உள்ளது’ என நீதிபதி முருகேசன் குறிப்பிட்டுள்ளார்[8].

Nisha Malayalam news

Nisha Malayalam news

வளைத்தளங்களில் பரவல்காக கிடைக்கும் விசயங்கள்: கீழ்குறிப்பிட்டுள்ள விசயங்கள் அப்படியே ஒன்றிற்க்கும் மேற்பட்ட வலைதளங்களில் காணப்படுகின்றன. “அப்பா பேர் அப்துல் ஜப்பார். அவரது முதல் மனைவி பேபிக்குப் பிறந்த பெண்தான் நான். குழந்தையாக நான் இருந்த போது அப்பாகிட்டே கோவிச்சுக்கிட்டு அம்மா என்னைத் தூக்கிட்டு சென்னைக்கு வந்திட்டாங்க. என்னை வளர்த்து, சினிமாவில் நடிக்க வச்சாங்க. பல படங்களில் ஹீரோயினா நடித்தேன். அம்மா இறந்த பிறகு அந்த துக்கத்தில் சரியாகச் சாப்பிடாமல் மெலிந்து விட்டேன். நடிக்கிறதையும் விட்டுட்டேன். பேங்கில் சேமிச்சு வைச்ச பணமெல்லாம் கரைஞ்சு போச்சி. நிறைய பேர் சான்ஸ் தரேன்னு எமாத்தினாங்க, எனக்கு சென்னையில் உறவுன்னு சொல்லிக்கொள்ள ஒருத்தரும் இல்லை. அனாதையாக இருந்த எனக்கு உதவி செய்யவும் ஆளில்லை. நடிகர் சங்கத் தலைவராக இருந்த விஜயகாந்திடம் ஒருமுறை உதவி கேட்டுப் போனேன். ‘உனக்கு சினிமாவில் சான்ஸ் கிடைக்கலேன்னா, டி.வி.யில் நடிக்க வேண்டியது தானே’ன்னு சொல்லி, என்னை வெறும் கையோட திருப்பியனுப்பி விட்டார். நடிகர் சுமன், சந்திரசேகர், நடிகை ராதிகா எல்லோருமே என் மேல் ரொம்பப் பாசமா இருப்பாங்க. நான் இப்படி படுத்த படுக்கையாகக் கிடப்பது அவங்களுக்குத் தெரியுமோ என்னவோ!” என்றார் கண்ணீருடன்[9].

கல்யாண அகதிகள் நிஷா

கல்யாண அகதிகள் நிஷா

தந்தை மற்ற உறவினர்கள் ஏற்றுக் கொள்ளதது ஏன்?: ‘உங்கள் அப்பா மற்றும் உறவுகள் உங்களை ஏன் ஏற்க மறுக்கிறார்கள்?’ என்று கேட்டோம். அதைக் கேட்டதும் சற்று கோபப்பட்ட நிஷா, ”நான் வசதியாக இருந்த காலத்தில் என்னிடம் நிறைய வாங்கிக்கொண்ட அவர்கள், இப்போது என்னைக் கண்டு கொள்ள மாட்டேன் என்கிறார்கள். சொந்த ஊரில், பெற்ற தந்தையின் கண்முன்னே ரோட்டில் ஈ, எறும்பு மொய்க்க அனாதையாகக் கிடந்த நிலைமை என்னைத் தவிர, வேறு யாருக்கும் வராது’ என்றவர் குரல் உடைந்து போய் அழத் தொடங்கினார். அதன் பிறகு, ”சார் தப்பா நினைக்காதீங்க. கையில் சுத்தமாக காசே இல்லை. ஒரு முட்டை புரோட்டா சாப்பிடணும் போல ஆசையாக இருக்கு! ஒண்னு வாங்கிக் கொடுத்துட்டுப் போங்களேன், ப்ளீஸ்!” என்று கெஞ்சினார். எதோ உள்ளுக்குள் உடைந்து போனது. நடிகை நிஷா தன்னை எய்ட்ஸ் நோய் தாக்கியிருக்கிறது என்பது கூடத் தெரியாமல் இன்னும் இருக்கிறார் என்ற தகவல் நம்மை உலுக்கியது.

நூர் நிஷா டிக் டிக் டிக்

நூர் நிஷா டிக் டிக் டிக்

தந்தையின் வாதமும், போலித்தனமும்: நிஷாவின் தந்தை அப்துல் ஜப்பாரை சந்தித்து பேசியபோது, நிஷா எனக்குப் பிறந்தவள்தான். அவளோட அம்மா பேபியை நான் லவ் பண்ணினேன். சின்ன சண்டைல குழந்தையைத் தூக்கிக்கிட்டு ராவோட ராவா பேபி சென்னைக்கு ஓடிப் போயிட்டா. சென்னையில் பேபிக்கு பலபேரோட தவறான தொடர்பிருந்தது. நிஷாவை சினிமாவில் நடிக்க வைத்ததால் பணம் வர ஆரம்பித்தது. தேடிப் போன என்னை விரட்டி விட்டுட்டா. பிறகு நிஷாவும் நடிகை ஆகி எங்களை மறந்துட்டா, இப்ப நோய் வந்து, சொந்தம் கொண்டாட வந்தா அவளை யார் ஏற்பார்? நானே என் தங்கச்சி வீட்டில் ஓசிச் சாப்பாடு சாப்பிடறேன். இதில் அவளையும் வச்சி எப்படிக் காப்பாத்த முடியும்? என்றார். சென்னையில் பல பேர் அவளை ஆண்டு அனுபவிச்சிட்டு, இப்போ அவங்க பாட்டுக்கு இங்கே விட்டுட்டுப் போயிட்டாங்க. இதுல நாங்க எதுவும் செய்ய முடியாது’ என்றார். அவ தைரியமான பொண்னு. ஃபிலிம் நியூஸ் ஆனந்தன், “ஒருமுறை இன்கம்டாக்ஸ் ஆபீஸர்னு சொல்லி போலி ரெய்டுக்கு வந்து பிளாக்மெயில் செய்ய முயன்ற ஒரு படத் தயாரிப்பாளரை, அவளே போலீசுக்கு போன் பண்ணிப் பிடித்துக்கொடுத்தாள்”, அப்படிப்பட்டவளுக்கா இப்படி ஒரு நிலைமை என்றார்[10].

நூர் நிஷா 2007ல் இறந்தார்

நூர் நிஷா 2007ல் இறந்தார்

2007ல் இறந்தது இந்த நடிகையா, பிறகு ஏன் இப்பொழுது செய்தி வருகின்றது?: இச்செய்தி சென்ற வருடம் 2013 ஜூலையிலேயே வந்திருக்கிறது[11], பிறகு ஒன்றரை வருடம் கழித்து இப்பொழுது ஏன் செய்திகள் வருகின்றன என்று தெரியவில்லை. நூர் நிஸா [Noor Nisha] என்ற இந்த நடிகை தமிழ் மற்றும் மலையாளப்படங்களில் நடித்த பிரபலமான நடிகைகளில் ஒருவர். ஆக ஒன்றரை வருட காலமாக அவர் நோயினால் பாதிக்கப் பட்டு, போராடி வந்திருக்கிறார் என்று தெரிகிறது. பிறகு, “அவ்வளவுதான்” என்ற நிலையில், அதுவரை கவனித்து வந்தவர்கள் அல்லது வீட்டில் வைத்து கொண்டிருந்தவர்கள் விட்டுவிட்டிருக்க வேண்டும். 2007லேயே இந்த நடிகை இறந்து விட்டார் என்றும் சில செய்திகள் கூறுகின்றன. அந்நடிகை இறந்து விட்டாரா அல்லது உயிரோடுள்ளாரா என்பது பிரச்சினை அல்ல, ஆனால், அவள் எப்படி ஆண்களால் சீரழிக்கப்பட்டிருக்கிறாள் என்பது தான் கவலைக்குரியது. பெண்மையினை மதிக்க தவறி வரும் இந்தியர்கலின் நிலைக் கண்டும் கலக்கமாகத்தான் இருக்கிறது. நாளுக்கு நாள் பென்கள் மீதான குற்றங்கள், கொடூரங்கள், குரூரங்கள், நடப்பதைப் பார்க்கும்போது, இடைக்காலத்தைய நிலையைத்தான் காட்டுகிறது. இந்தியர்கள் இந்தியர்களே ஆண்டு கொண்டிருக்கும் போது, இத்தகைய பாலியல் குற்றங்கள் நடப்பது சரியில்லை.

© வேதபிரகாஷ்

06-12-2014


 

[1] http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=133564

[2] She was used by R.Mohan, producer of Iyer the Great, into prostitution. After she left the industry unnoticed. http://en.wikipedia.org/wiki/Nisha_Noor

[3] http://www.tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=66909

[4] http://tamil.webdunia.com/article/regional-tamil-news/former-tamil-heroine-helpless-and-unattended-for-aids-victims-lying-114120400002_1.html

[5]  http://www.qatarliving.com/forum/qatar-living-lounge/posts/pathetic-situation-human-being

[6] http://www.sakshi.com/news/national/old-tamil-actress-nisha-affected-by-aids-disease-192076

[7] http://tamil.chennaionline.com/cinema/news/newsitem.aspx?NEWSID=8c476c01-ab19-4ac0-817f-dc9903a72add&CATEGORYNAME=TFILM

[8] நக்கீரன், , எறும்புகள் மொய்க்க  தெருவில் கிடக்கிறார் எய்ட்ஸ் பாதித்த பிரபல தமிழ் நடிகை!, புதன்கிழமை, 3, டிசம்பர் 2014 (22:36 IST)

[9] http://namathu.blogspot.in/2013/07/blog-post_8397.html

[10] http://namathu.blogspot.in/2013/07/blog-post_8397.html

[11] http://www.kollywoodtoday.net/tag/old-tamil-actress-nisha-affected-by-aids-disease/

ஆண்-பெண் உறவுகளின் சீரழிவு: தாம்பத்திய எல்லைக்களைத் தாண்ட வைக்கும் பண ஆசை, உடலுறவுகளை மீறும் கொலைகள் (2)

திசெம்பர்6, 2014

ஆண்-பெண் உறவுகளின் சீரழிவு: தாம்பத்திய எல்லைக்களைத் தாண்ட வைக்கும் பண ஆசை, உடலுறவுகளை மீறும் கொலைகள் (2)

இதன் முதல் பகுதியை இங்குப் படிக்கவும்[1].

Accomplice and complaintant - Murder Shruti

Accomplice and complaintant – Murder Shruti

சிறைலிருக்கும் சந்திரலேகா ஜாமீன் மனு தாக்கல் செய்தது (டிசம்பர் 2014): சென்னை மதுரவாயலில் வசிந்து வந்தவர் ரொனால்டு பீட்டர் பிரின்சோ. பாளையங்கோட்டையை சேர்ந்த சினிமா தயாரிப்பாளரான இவர், கடந்த ஜனவரி 2014 மாதம் காணாமல் போனார். இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார், வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு சென்னை மதுரவாயல் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த போலீசார், ரொனால்டு பீட்டர் பிரின்சோ கொலை செய்யப்பட்டதை கண்டு பிடித்தனர்[2]. அவருடன் மனைவியாக வாழ்ந்து வந்த நடிகை சுருதி என்ற சந்தர்லேகா, உமாசந்திரன், ஜான் பிரின்சன் உட்பட பலர் சேர்ந்து கடந்த ஜனவரி 18–ந்தேதி 2014 இந்த கொலையை பரப்பாடி-இலங்குளம் பிரதான தெரு, மதுரவயல் வீட்டில் [Parappaadi-Ilankulam Main Road in Maduravoyal on January 18.2014] செய்துள்ளதாக வழக்குப்பதிவு செய்தனர்[3]. இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட சுருதி என்ற சந்தர்லேகாவை பல இடங்களில் போலீசார் தேடியும் கைது செய்ய முடிய வில்லை. கடந்த செப்டம்பர் மாதம் சுருதியை போலீசார் கைது செய்தனர்[4]. இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க கோரி சென்னை ஐகோர்ட்டில், சுருதி மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது[5]:

Shruti Chandralekha arrested in Bangalore

Shruti Chandralekha arrested in Bangalore

இளம்பெண்களை வைத்து ஆபாசப் படங்களை தயாரித்தார்கள்: “ரொனால்டு பீட்டர் பிரின்சோவுடன், திருமணம் செய்யாமல் மனைவியாக வாழ்ந்து வந்தேன். அவரை கொலை செய்த வழக்கில் 5–வது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட ஹானஸ்ட்ராஜ் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த வழக்கில் என் மீது போலீசார் குற்றம் சுமத்தியுள்ளனர். கொலை செய்யப்பட்ட ரொனால்டு பீட்டர் பிரின்சோ, உமா சந்திரன், ஜான்பிரிண்ஷன், ஹானஸ்ட்ராஜ் ஆகியோர்ஆன்லைன்தொழிலில் என்னை மேலாளராக பணி செய்ய கட்டாயப்படுத்தினார்கள். இளம்பெண்களை வைத்து ஆபாசப் படங்களை தயாரித்தார்கள்[6]. அப்போது, என்னையும் ஆபாசப்படங்களில் நடிக்கவேண்டும் என்றும் பலருடன் ஒரே நேரத்தில் உறவு கொள்ள வேண்டும் என்றும் வற்புறுத்தினார்கள்[7]. இதற்கு நான் சம்மதிக்காததால், அவர்கள் எனக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். இந்த நிலையில், ரொனால்டு பீட்டர் பிரின்சோவிடம் இருந்து ஆன்லைன் தொழிலை அபகரிக்க, அவரை உமாசந்திரன், ஜான் பிரிண்சன் மற்றும் பலர் கொலை செய்த எனக்கு தெரியவந்தது. ஆனால், என்னையும் இந்த வழக்கில் போலீசார் கைது செய்துள்ளனர். நான் ஒரு அப்பாவி. இந்த கொலை வழக்கில் என்னையும் குற்றவாளியாக சேர்த்துள்ளனர். எனவே, எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும்”, இவ்வாறு அதில் கூறியிருந்தார்[8].

Shruti Chandralekha arrested in Bangalore for murder

Shruti Chandralekha arrested in Bangalore for murder

செப்டம்பரில் கைது செய்தாலும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை: இந்த மனு நீதிபதி பி.என்.பிரகாஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் பி.ஆறுமுகம் ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: “மனுதாரர் கடந்த செப்டம்பர் 5–ந்தேதி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை வழக்கை விசாரிக்கும் மதுரவாயல் போலீசார், இதுவரை வழக்கின் குற்றப் பத்திரிகையை கோர்ட்டில் தாக்கல் செய்யவில்லை. எனவே, மனுதாரருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்குகிறேன். அவர் தினமும் காலை 10 மணிக்கும், மாலை 6.30 மணிக்கும் மதுரவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டர் முன்பு ஆஜராகி 4 வாரத்துக்கு கையெழுத்திட வேண்டும். மனுதாரர் தலைமறைவாகக்கூடாது. சாட்சிகளையும் கலைக்கக் கூடாது”, இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்[9]. 05-09-2014 கைது செய்தும், டிசம்பர் 2014 வரை மூன்று மாதங்களாக ஏன் குற்றப்பத்திரிக்கைத் தாக்கல் செய்யப்படவில்லை என்று தெரியவில்லை.  கைப்பற்றியுள்ள படங்களைப் பார்த்து மயங்கிவிட்டனரா அல்லது மேலும் ஆதாரங்களைத் தேடிக் கொண்டிருக்கிறார்களா என்று தெரியவில்லை.

நடிகை கைது, நடிகர் கொலை வழக்கு தினகரன் போட்டோ

நடிகை கைது, நடிகர் கொலை வழக்கு தினகரன் போட்டோ

ஆபாசப்படங்கள் எடுப்பது, உடலுறவு காட்சிகள் காட்டுவது: ஸ்ருதி சந்திரலேகா, “இளம்பெண்களை வைத்து ஆபாசப் படங்களை தயாரித்தார்கள்[10]. அப்போது, என்னையும் ஆபாசப்படங்களில் நடிக்கவேண்டும் என்றும் பலருடன் ஒரே நேரத்தில் உறவு கொள்ள வேண்டும் என்றும் வற்புறுத்தினார்கள்[11] என்று சொல்லியிருப்பது மிகவும் அபாயகரமான விசயமாகும்[12]. ஏற்கெனவே திரைப்படங்கள் கேடுகெட்ட பாதையில் சென்று கொண்டிருக்கின்றன. நிர்வாணக் காட்சிகள், உடலுறவு காட்சிகள் முதலியவற்றை கொஞ்சம்-கொஞ்சமாக காட்ட ஆரம்பித்துள்ளார்கள். நடிகைகளும் அதற்கு ஒத்துழைக்க ஆரம்பித்துள்னர் என்பது, அத்தகைய காட்சிகள் வந்துகொண்டிருப்பதிலிருந்தே உறுதியாகிறது. சென்சார் / தணிக்கைத்துறை இருந்தாலும், ஒருபக்கம் நவீனம், முன்னேற்றம், நிதர்சனம் என்ற வாதங்களில் ஏற்றுக் கொள்ளப்படுகிறது, எதிர்த்துப் பேசினால் தலிபான்கள் என்றும் முத்திரைக் குத்த ஆரம்பித்து விட்டனர். இந்திய சமூகத்தை சீரழிக்க இதுவும் முக்கியமான வெடுகுண்டு போன்ற தீங்கிழைக்கும் விவகாரம் ஆகும். இதில் ஆணின் வக்கிரம் மட்டுமல்லாது, ஒரு நிலையில் பெண்ணின் வக்கிரமும் சேர்ந்து சீரழிவு பாதைக்கு எடுத்துச் செல்லும் முறையில் ஏதுவாகும். போதைமருந்து போல சாப்பிடுபவர்கள், விற்பவர்கள், விநியோகிப்பவர்கள் எல்லோருரையும் இது கெடுத்துவிடும். பெண்கள் மட்டும் அப்பெண்களின் குடும்பங்கள், உறவினர்கள் அனைவரையும் பாதித்து விடும். மேன்மேலும் பாலியல் குற்றங்கள் செய்யவும் தூண்டுகோலாக இருக்கும். இத்தகைய முக்கியமான மற்றும் அபாயகரமான பிரச்சினைப் பற்றியும் பெண்ணிய வீராங்கனைகள் விவாதிப்பது கிடையாது[13]. இந்தியாவில் இத்தகைய குற்றவாளிகளை விட்டு வைக்கக் கூடாது..  

© வேதபிரகாஷ்

06-12-2014

[1] https://womanissues.wordpress.com/2014/12/06/factors-spoiling-the-husband-wife-relationships-lust-for-money-porn-etc/

[2] மாலைமலர், சினிமா தயாரிப்பாளர் கொலையில் சிக்கிய நடிகை ஐகோர்ட்டில் மனு: நிபந்தனை ஜாமீனில் விடுவிக்க உத்தரவு, பதிவு செய்த நாள் : வெள்ளிக்கிழமை, டிசம்பர் 05, 4:05 PM IST

[3] http://www.newindianexpress.com/cities/chennai/Killer-Actress-Arrested-in-Bangalore/2014/09/06/article2417287.ece

[4] http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/Actress-Shruti-arrested-for-murder/articleshow/41855222.cms

[5] http://www.maalaimalar.com/2014/12/05160548/cinema-director-murder-actress.html

[6] http://www.dinamalar.com/news_detail.asp?id=1131303&Print=1

[7] தினமலர், ஆபாச படத்தில் நடிக்க வற்புறுத்தினர்: கொலை வழக்கில் நடிகை அதிர்ச்சி மனு, பக்கம்.2, சென்னை பதிப்பு, 06-12-2014.

[8] தினகரன், நடிகரை கொலை செய்த வழக்கு: நடிகைக்கு ஜாமீன், சனிக்கிழமை, 06-12-2014, 00.42.43

[9] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=121277

[10] http://www.dinamalar.com/news_detail.asp?id=1131303&Print=1

[11] தினமலர், ஆபாச படத்தில் நடிக்க வற்புறுத்தினர்: கொலை வழக்கில் நடிகை அதிர்ச்சி மனு, பக்கம்.2, சென்னை பதிப்பு, 06-12-2014.

[12] http://www.indiatvnews.com/entertainment/bollywood/tamil-actress-shruthi-chandralekha-kills-husband-who-forced-her-to-act-in-porn-films-view-pics–16885.html

[13] விபச்சாரிகள் உரிமைகள், அவர்களுக்கு தொழில் செய்ய இடம் ஒதுக்க வேண்டும் என்று சென்ன்னையிலேயே, ஒரு மாநாடு நடந்தபோது,சில வீராங்கனைகள் கலந்துகொண்டு, அவர்களுக்கு ஆதரவாகப் பேசியுள்ளனர்.

ஆண்-பெண் உறவுகளின் சீரழிவு: தாம்பத்திய எல்லைக்களைத் தாண்ட வைக்கும் பண ஆசை, உடலுறவுகளை மீறும் கொலைகள் (1)

திசெம்பர்6, 2014

ஆண்-பெண் உறவுகளின் சீரழிவு: தாம்பத்திய எல்லைக்களைத் தாண்ட வைக்கும் பண ஆசை, உடலுறவுகளை மீறும் கொலைகள் (1)

சுருதி சந்திரலேகா கொலையாளி

சுருதி சந்திரலேகா கொலையாளி

இன்றைய சமூக நிகழ்வுகள் பலவழிகளில், மிகவும் பாதிக்கத்தக்க முறைகளில் சீரழிந்து வருகிறது. ஒழுங்குமுறையின்மை என்பது “ஒழுங்காக இருத்தல் எப்படி” என்று போதிக்கும் அதிநவீன வித்துவான்களிடன் காணப்படுகிறது. துறைவல்லுனர்களிடம் ஒழுக்கம் பார்க்காதே என்றும் போதிக்கப்படுகிறது. பிஎச்டி வாங்குவதற்கு ஆண்களாக இருந்தால் பணம் கொடு, பெண்களாக இருந்தால் படுக்கையில் படு என்ற நிலைகளும் ஏற்றுக் கொள்ளும் வகையில் சில இடங்களில் உள்ளது. படிப்புத்துறையிலேயே இப்படியென்றால், சினிமாத்துறையில் கேட்கவேண்டுமா? இதனால், எல்லாவற்றையும் மீறும் ஆண்கள்-பெண்கள் குற்றங்கள் செய்வதிலும் மறத்துப்போன வகையினராக மாறிவருகின்றனர். கீழ்காணும் விசயங்களும் மிகவும் கவலைக்கு உரியவையாக இருக்கின்றன. ஜாக்கிரதையோடு அலசவேண்டியதாக உள்ளது.

சுருதி மற்றும் ரொனால்டு பீட்டர் கொலைவழக்கு

சுருதி மற்றும் ரொனால்டு பீட்டர் கொலைவழக்கு

பணத்திற்காக குடும்பத்தை மறந்த படித்தவன்: சென்னையில் பாலில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்யப்பட்டு பாளையங்கோட்டையில் புதைக்கப்பட்ட நடிகரின் உடல் 12-05-2014 (திங்கள்கிழமை) அன்று பிரேத பரிசோதனைக்காக தோண்டியெடுக்கப் பட்டது. முக்கிய குற்றவாளியான நடிகை சுருதி சந்திரலேகா உள்ளிட்டோரை பிடிக்க தனிப்படை சென்னை விரைந்தது[1]. திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி வட்டம் பரப்பாடி இளங்குளம் பகுதியைச் சேர்ந்த சூசைமரியான் மகன் ரெனால்டு பீட்டர் பிரின்ஸ் (S Ronald Peter Prinzo, 36). டிப்ளமோ மெக்கானிக்கல் என்ஜினியரிங் மற்றும் கம்ப்யூட்டர் சான்றிதழ் படிப்பு படித்தவர். இவரது மனைவி சோனா. இவர்களுக்கு ஐபெல், ஆஸ்பெல் ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர்[2]. [குடும்பத்தைக் கொண்ட இவன், அதிலும் படிப்புத்துறை தொழிலை விட்டு மாறும் போதே மாறிவிடுகிறான்].

சுருதி சந்திரலேகா கொலையாளி

சுருதி சந்திரலேகா கொலையாளி

குறுக்குவழி பணம், பணப்பெருக்கும் திட்டம், சினிமாவில் முதலீடு: திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வந்த பீட்டர் பிரின்ஸ், தொழிலில் நஷ்டம் ஏற்படவே கம்ப்யூட்டர் சென்டர்களை வேறுநபர்களிடம் கொடுத்துவிட்டு சென்னை சென்றார். மதுரவாயலில் வீடு எடுத்து தங்கிய அவர், ஆன்லைன் மூலம் அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருட்கள் மொத்த வியாபாரத்தில் ஈடுபட்டார். அவருடன் திருநெல்வேலியை சேர்ந்த நண்பர்கள் உமா சந்திரன், ஜான் பிரின்ஸ் ஆகியோரும் இத்தொழிலில் ஈடுபட்டு வந்தனர். ஆன்லைன் வர்த்தகத்தில் அதிகளவில் வருமானம் வந்ததால் திரைப்படங்களுக்கு பீட்டர் பிரின்ஸ் பைனான்ஸ் செய்தார். பின்னர் ‘கொக்கிரகுளம்- நெல்லை மாவட்டம்’, ‘காகிதபுரம்’ ஆகிய திரைப்படங்களிலும் அவர் நடித்தார். அத்திரைப்படங்கள் வெளிவரவில்லை[3]. [குடும்பத்தை மறந்து, படித்த படிப்பையும் மறந்து, குறுக்குவழி வியாபாரத்தில் தீடீரென்று பணம் சம்பாதித்தால் பணம் பெருக்கும் திட்டங்களில் ஈடுபட்டது ஆச்சரியம் இல்லை. அது சினிமாவாக இருந்தது, எறும்புகளுக்கு சர்க்கரை கோடவுனில் இடம் கொடுத்தது போலாகியது]. மனைவி சோனா ஏன் கண்டுகொள்ளவில்லை என்று தெரியவில்லை.

Shruti Chandralekha arrested in Bangalore for murder

Shruti Chandralekha arrested in Bangalore for murder

சினிமா முதலீடு, நடிகைகளின் தொடர்பு: இவர் பைனான்ஸ் செய்த திரைப்படங்களில் நடித்த நடிகை சுருதி சந்திரலேகாவுடன் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் அது கள்ளக்காதலாக உருவெடுத்தது[4]. இருவரும் மதுரவாயல் வீட்டில் குடித்தனம் நடத்தி வந்தனர். கன்னட நடிகையான இவருக்கு ஏற்கெனவே திருமணம் ஆகியிருக்கிறது என்று கன்னட நாளிதழ்கள் கூறுகின்றன. அதாவது மணமான ஆண் மனைவிக்கும், மனைவி கவனுக்கும் துரோகம் செய்கிறார்கள். சினிமா உலகத்தில் இதெல்லாம் சகஜம் என்று சொல்லி விடுவார்கள்[5]. இந்நிலையில், பீட்டர் பிரின்ஸை காணவில்லை என்று நடிகை சுருதி சந்திரலேகா கடந்த ஜனவரி 18-ம் தேதி மதுரவாயல் போலீஸில் புகார் செய்தார். இதுபற்றி அறிந்த பீட்டர் பிரின்ஸின் சகோதரர் ஜஸ்டின் சென்னை சென்று விசாரித்தார். அவருக்கு சரியான விவரங்கள் கிடைக்கவில்லை. இதனால் கடந்த 12.4.2014-ம் தேதி பாளையங்கோட்டை போலீஸில் பீட்டர் பிரின்ஸை காணவில்லை என்று புகார் கொடுத்தார். போலீஸார் வழக்கு பதிந்து பீட்டர் பிரின்ஸை தேடிவந்தனர். [திருமணமாகி, குழந்தைகள் பெற்றவனுக்கு காதல், கத்தரிக்காய் எல்லாம் வெங்காயம் தான். ஆகவே கள்ளக்காதல் எல்லாம் வேடமே. பணம் இருப்பதால், படுத்திருக்கிறாள் – பிஎச்டி கிடைக்கும் என்பது போல. ஒரு பெண்ணுக்கு, ஒரு ஆண் தன்னிடம் மயங்கிக் கிடக்கும் வரைத்தான் அவள் படுப்பாள், ஆனால், அவன் எப்பொழுது அடுத்தவளிடன் செல்கிறான் எனும்போது, எப்பொழுதுமே உடலுறவு கொண்ட ஆணின் மீது அதிகமான கோபம் ஏற்படுகின்றது].

நடிகை கைது, நடிகர் கொலை வழக்கு தினகரன் போட்டோ

நடிகை கைது, நடிகர் கொலை வழக்கு தினகரன் போட்டோ

பெண்ணின் வஞ்சமும், கொலையும்: இந்நிலையில் பீட்டர் பிரின்ஸ் 4 மாதங்களுக்கு முன்னரே கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து சென்னை, பாளையங்கோட்டை போலீஸார் விசாரணையை துரிதப்படுத்தினர். அப்போது பல்வேறு விவரங்கள் தெரியவந்தன. இதுதொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: ஆன்லைன் வர்த்தகத்தில் நஷ்டம் ஏற்பட்டபோது, தனக்குரிய இழப்பீட்டுத் தொகையை அளிக்குமாறு உமா சந்திரன், பீட்டர் பிரின்ஸிடம் கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அதன்பின் பெங்களூரு சென்ற பீட்டர் பிரின்ஸ் சட்டவிரோத தொழில்களில் ஈடுபட்டு பணம் சம்பாதித்திருக்கிறார். அப்பணத்தை திரைப்படங்களில் முதலீடு செய்திருக்கிறார். இந்நிலையில் பீட்டர் பிரின்ஸ் வேறு பெண்களுடன் தொடர்பு வைத்திருந்ததால், அவர் மீது சந்திரலேகாவுக்கு வெறுப்பு ஏற்பட்டது[6] [அந்நேரத்தில் உண்மைகல் மறைக்கப் பட்டன]. இதை அறிந்து பீட்டர் பிரின்ஸின் தொழில் கூட்டாளியான உமா சந்திரன் சந்திரலேகாவை சந்தித்தார். அப்போதுதான் பீட்டர் பிரின்ஸைக் கொலை செய்து அவரிடம் இருக்கும் சொத்துகளை அபகரிக்க அவர்கள் திட்டமிட்டதாகக் கூறப்பட்டது. இதற்காக திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சிலரின் உதவியையும் அவர்கள் நாடியிருப்பது தெரியவந்தது. [பாம்பின் கால் பாம்பறியும்].

தினகரன் போட்டோ

தினகரன் போட்டோ

திட்டமிட்டுக் கொன்று, ஆயிரம் கிமீ தூரம் பிணத்தைக் கொண்டு வந்து புதைத்தது: கடந்த ஜனவரி 18-ம் தேதி பீட்டர் பிரின்ஸ் தனது வீட்டில் இருந்தபோது ஜான் பிரின்ஸ் உள்ளிட்ட நண்பர்கள் அங்கு வந்துள்ளனர்[7].  பீட்டர் பிரின்சோவின் கள்ளக்காதலி சந்திரலேகா அனைவருக்கும் பால் பரிமாறியிருக்கிறார்[8]. அப்போது பீட்டர் பிரின்ஸுக்கு மட்டும் டம்ளரில் விஷம் கலந்து பால் கொடுக்கப்பட்டுள்ளது. அதை குடித்த பீட்டர் பிரின்ஸ் மயங்கி விழுந்துள்ளார். அவரை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். பின்னர் பீட்டர் பிரின்ஸிடம் இருந்த ரூ.75 லட்சம் ரொக்கம், கழுத்தில் அணிந்திருந்த 14 சவரன் நகை, கையில் அணிந்திருந்த வைர மோதிரம் ஆகியவற்றை பறித்துக் கொண்டனர். “ஜான் பிரின்ஸ் கொடுத்த யோசனைப்படி” உடலை காரில் சென்னையிலிருந்து பாளையங்கோட்டை எடுத்து வந்து நள்ளிரவில் ஆசீர்வாதம் நகரில் உள்ள ஓர் இடத்தில் 10 அடி ஆழத்துக்கு குழிதோண்டி புதைத்துள்ளனர். யாரும் சந்தேகப்படாமல் இருக்க வேண்டும் என்று நடிகை சந்திரலேகா போலீஸில் புகார் கொடுத்தது விசாரணையில் தெரியவந்திருக்கிறது”. [ஊடகக்காரர்கள் குழப்பியுள்ளனர்].

umachandrans-accomplices-showing-the-spot-where-they-buried-ronald-peter-prinzo

umachandrans-accomplices-showing-the-spot-where-they-buried-ronald-peter-prinzo

கூலிக்குக் கொலைசெய்யும் பாதகர்கள் மாட்டிக்கொண்டனர்: இது தொடர்பாக பாளையங்கோட்டை போலீஸார் உமா சந்திரனின் கூட்டாளிகள் ஆனஸ்ட்ராஜ் (26), சாந்தி நகரை சேர்ந்த காந்திமதி நாதன் (32), ரபீக் உஸ்மான் (34) ஆகியோரை பிடித்துள்ளனர். அவர்கள் பீட்டர் பிரின்ஸ் கொலை செய்து புதைக்கப்பட்ட இடத்தை 10-05-2014 அன்று (சனிக்கிழமை) அடையாளம் காட்டினர். இதையடுத்து உடலைத் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய போலீஸார் திட்டமிட்டுள்ளனர். அப்பொழுபோது உடல் புதைக்கப்பட்ட இடத்தில் போலீஸார் நிறுத்தப்பட்டனர். அதாவது, உள்ளூரில் ஏதாவது நடக்கும் போல. [தாம்பத்திய உறவுகளை மீறி இவ்வாறு தகாது உறவுகள் ஏற்படும் போது கொலைகள் செய்வது, அதற்கு கூலிப்படையினரை அமர்த்துவது முதலியனவும் சாதாரணமாகி விட்டது. நாளுக்கு நாள் நாளிதழ்களில் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன].

பெங்களூரில் பதுங்கல்[9]; உமாசந்திரனும், சந்திரலேகாவும் பெங்களூருக்கு தப்பிச் சென்று இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது[10]. அதன் அடிப்படையில் தனிப்படை போலீசார் பெங்களூர் விரைந்தனர். விரைவில் துணை நடிகை சுருதி சந்திரலோகவும், உமா சந்திரனும் சிக்குவார்கள் என தெரிகிறது. அதன் பிறகு பீட்டர் பிரின்சோ கொலையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது[11]. [தமிழகத்தில் குற்றம் செய்பவர்கள் பெங்களுருக்கு உடனே சென்று வரும் மர்மம் விசித்திரமாக உள்ளது. அப்படியென்றால், பெங்களூரில் அவ்வாறு மறைந்து கொள்ள இடங்கள் உள்ளனவா, யார் கொடுக்கிறார்கள்?]. 12-05-2014 (திங்கள்கிழமை) காலை பீட்டர் பிரின்ஸின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது[12]. டி.என்.ஏ சோதனைக்குப் பிறகு உடல் உறவினர்களுக்கு ஒப்படைக்கப் பட்டது[13]. உமா சந்திரன், நடிகை சந்திரலேகா ஆகியோரை போலீஸார் தேடி வந்தனர். இவர்களைப் பிடிக்க தனிப்படை சென்னை விரைந்தது. இவர்கள் பிடிபட்டால் இந்த கொலை வழக்கில் பல்வேறு விவரங்கள் தெரியவரும் என்று போலீஸார் தெரிவித்தனர். இந்த வழக்கை பாளையங் கோட்டை காவல்துறை உதவி ஆணையர் மாதவன் தலைமையிலான போலீஸார் விசாரிக்கின்றனர். செப்டம்பர் 5 அன்று சந்திரலேகா மற்றும் கூட்டாளிகள் பெங்களூரில் ஒரு பைனான்சியர் வீட்டில் பதங்கியிருந்தபோது கைது செய்யப்பட்டனர்[14]. இதெல்லாம் முந்தைய கதை. இப்பொழுது, 05-12-2014 அன்று இக்கதை மறுபடியும் ஊடகங்களில் வந்துள்ளது.

© வேதபிரகாஷ்

06-12-2014

[1]http://www.tamilnewsbbc.com/2014/05/12/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4.html

[2] பிபிசி-தமிழ்,  நடிகர் கொலை : சுருதி சந்திரலேகாவை பிடிக்க தனிப்படை, பதிவு செய்த நாள்: 12 May 2014 1:59 pm, By : Kumaran

[3] http://www.maalaimalar.com/2014/05/12024918/Film-financier-murder-Special.html

[4] தினமணி, நெல்லை புதுமுக நடிகர் கொலை, By dn, திருநெல்வேலி, First Published : 11 May 2014 02:34 AM IST

[5] திருமணம் இல்லாமல் சேர்ந்து வாழும் இலக்கணத்தை உலகநாயகனே முன்மாதிரியாக செய்து வருவதால், மற்றவர்களைப் பற்றி ஒன்றும் சொல்வதிற்கில்லை.

[6] After suffering heavy losses in his business ventures, Prinzo decided to make porn movies and relentlessly pressured Shruthi to act in them. She said Prinzo wanted her to take part in group sex for the porn films but she refused. It is said that this forced the actress to plot his murder.

http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/Actress-Shruti-arrested-for-murder/articleshow/41855222.cms

[7] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=91694

[8] இங்கு மட்டும் “கள்ளக்காதலி சந்திரலேகா” என்று ஊடகம் குறிப்பிடுவது எப்படி என்று தெரியவில்லை. ஊடக தார்மீகம், ஒழுங்கு முதலியவற்றை யாரும் ஒன்றும் செய்யமுடியாது போலும்.

[9] http://www.dailythanthi.com/2014-05-14-Cinema-Financier-murder-Actress-Shruti-Chandralekha

[10]http://www.dinamani.com/tamilnadu/2014/05/11/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88/article2218232.ece

[11] தினத்தந்தி, சினிமா பைனான்சியர் கொலையில் தேடப்படும் நடிகை சுருதி சந்திரலேகா பெங்களூரில் பதுங்கல் போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்கள், பதிவு செய்த நாள் : May 14 | 08:45 am

[12] http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article6003832.ece

[13]http://www.dinamani.com/tamilnadu/2014/05/13/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B/article2221821.ece

[14] http://www.ibtimes.co.in/actress-shruthi-chandralekha-arrested-murdering-her-husband-608452