Archive for ஜூன் 3rd, 2016

குழந்தை போர்வையில் பிடோபைல், செக்ஸ்-டூரிஸம், குழந்தை-போர்னோகிராபி, முதலியவை மறைக்கப்படுவது!

ஜூன்3, 2016

குழந்தை போர்வையில் பிடோபைல், செக்ஸ்-டூரிஸம், குழந்தை-போர்னோகிராபி, முதலியவை மறைக்கப்படுவது!

குழந்தைக் கற்பழிப்பாளிகளை விட்டு வைக்கக் கூடாது

மே மாதம் 25ம் தேதி – குழந்தைகளுக்கான சர்வதேச தினம்: இக்காலத்தில் எல்லாவற்றிற்கும் “சர்வ தேச தினம்மென்று கொண்டாடுவது வழக்கமாகி விட்டது. இதனால், விழிப்புணர்வு உண்டாகிறதோ இல்லையோ, பல அமைப்புகள், நிறுவனங்கள், என்.ஜி.ஓக்கள், வியாபாரக் கம்பெனிகளுக்க்கு நல்ல வாய்ப்பாக தங்களது வியாபாரத்தைப் பெருக்கிக் கொள்கின்றன. விளம்பரம், அச்சடிப்பு, பிரச்சாரம் போன்ற வேலைகளில் ஈடுபடுத்திக் கொண்டு கோடிகளை அள்லுகின்றன. ஆகவே, காணாமல் போகும் குழந்தைகளுக்கான சர்வதேச தினம் ஆண்டுதோறும் மே 25-ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், காணாமல் போகும் குழந்தைகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயற்சிக்கும் வகையிலும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து மத்திய அரசு பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது என்பது ஒன்றும் புதிய விசயமாக இல்லை. இந்நாளில் சர்வதேச அளவில் பல நாடுகள் குழந்தை கடத்தல் அச்சுறுத்தல் பற்றி பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

IT_Act_does_not_cover_Chold_porn

குழந்தை என்றால் யார்?: சமீபத்தில் குழந்தை என்ற வார்த்தை உபயோகப்படுத்துவதில், பல நல்லது-கெட்டது விசயங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. நிர்பயா கற்பழிப்பில் குற்றவாளிகளில் ஒருவன் 18 வயதை விட கீழானவன். அதாவது, 18 வயது முடிந்தவர்களை பெரியவர் என்றும் 18 வயதிற்கு கீழுள்ளவரை சிறுவர்-சிறுமி, குழந்தை என்றும் சட்டரீதியில் குறிப்பிடப்படுகிறது. இதனால், 17 வயதுள்ள இளம்பெண் கூட குழந்தை என்று தான் குறிப்பிடப்படுகிறது. இதனால், பற்பல குற்றங்களில் அவர்கள் அவ்வாறே குறிப்பிடப்பட்டு, பல கொடுமையானம் குரூரமான பாலியல் குற்றங்கள், வன்புணர்ச்சிகள் மறைக்கப்படுகின்றன. பிடோபைல், செக்ஸ்-டூரிஸம் போன்ற நவீன செக்ஸ்-குற்றங்களில் பெரும்பாலும் கிருத்துவர்கள் மற்றும் அயல்நாட்டினர், அவர்களும் கிருத்துவர்களாகவே இருப்பதால், மதரீதியில் இக்குற்றங்கள் மறைக்கப்படுகின்றன. நீதிமன்றத்திற்கு வெளியிலும் சமரசம் செய்து கொண்டு, உண்மைகள் மறைக்கப்படுகின்றன, குற்றங்கள் மாற்றப்படுகின்றன. கோவா, கேரளா, தில்லி போன்ற இடங்களில் குழந்தை-விபச்சாரம் அதிகமாக இருக்கின்றது. இதில் அயல்நாட்டவர்கள் ஈடுபடுகின்றனர். இதனுடன், குழந்தை-போர்னோகிராபியும் சேர்ந்துள்ளது. அதிகமாக பணம் கிடைக்கிறது என்பதனால், இந்திய கூட்டாளிகள், கொஞ்சமும் ஈரமில்லாமல், அத்தகைய பாதக செயல்களில் ஈடுபட்டுள்ளார்கள்.

Abhayakendras-closed-down-Christian-sex-scam

Abhayakendras-closed-down-Christian-sex-scam

சைல்டு-லைன் மரியசூசையும், இந்து-சுவாமிநாதனும்: இந்தியாவில் மொத்த மக்கள் தொகையில் 40 சதவீதம் குழந்தைகளாக உள்ளனர். இதில் 8 நிமிடத்துக்கு ஒரு குழந்தை காணாமல் போகிறது. ஆண்டுக்கு சராசரியாக ஒரு லட்சம் குழந்தைகள் காணாமல் போகின்றனர். இதில் பெண் குழந்தைகள் 55 சதவீதமும், ஆண் குழந்தைகள் 45 சதவீதமும் காணாமல் போகிறார்கள்[1]. இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட சைல்டு லைன் இயக்குநர் மரியசூசை கூறும்போது, “குழந்தை கடத்தல், படிக்க விருப்பமின்மை உள்ளிட்ட பிரச்சினைகளால் வீட்டைவிட்டு வெளியேறுதல் ஆகிய காரணங்களால் குழந்தைகள் காணாமல் போகின்றனர். அவ்வாறு காணாமல் போகும் குழந்தைகள் சில நேரங்களில் கொல்லப்படுகிறார்கள். மேலும் சில நேரங்களில் கடத்தல் தொழில், பாலியல், கொத்தடிமைகள், பிச்சை எடுத்தல் போன்றவற்றுக்கு பயன்படுத்தப்படுகிறார்கள். எனவே, காணாமல்போகும் குழந்தைகள் பற்றிய விழிப்புணர்வு பொதுமக்களுக்கு இருக்கவேண்டும். சைல்டுலைன் பற்றியும் பொது மக்கள் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். ஆதரவு மற்றும் பாதுகாப்பு தேவைப்படும் குழந்தைகளுக்காக மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சேவை அமைப்பு இது. அதன் தேசிய அளவிலான 24 மணிநேர அவசர இலவச தொலைபேசி எண்- 1098. காணாமல் போன குழந்தைகளை விரைவாகவும் பத்திரமாகவும் மீட்கும் பணியில் சைல்டுலைன் அமைப்பு ஈடுபட்டுள்ளது. குழந்தைகளுக்கு அதிக மன உளைச்சலை ஏற்படுத்தாமல், அவர்களுக்கு தேவையான பாதுகாப்பை பெற்றோர்கள் கொடுக்க வேண்டும்,” என்றார் அவர்[2].

child-prostitute-poster

குற்றம் செய்து மரத்துப் போனவர்கள், திரும்ப குற்றம் செய்கிறார்கள்

கன்னியாகுமரியும், குழந்தை கடத்தலும், பிடோபைகளும், செய்தி மறைப்புகளும்: கன்னியாகுமரியில் இருந்து கொண்டு, கிருத்துவராக இருந்து, மேலும் இந்த காரியத்தில் ஈடுபட்டுள்ள இவர் “பாலியல்” என்று குறிப்பிட்டாலும், பிடோபைல், அனாதை ஆசிரமங்கள், குறிப்பாக கிருத்துவ நிறுவனங்கள் அதிகமாக ஈடுப்பட்டிருப்பதைப் பற்றி குறிப்பிடாமல் மறைத்திருப்பது நன்றாகவே தெரிகிறது. என்.சுவாமிநாதன் என்பவர் மரியசூசையிடம் பேட்டி கண்டபோது, அல்லது விவரங்களைக் கேட்டறிந்தபோது, அந்த விசயங்களை எல்லாம் கேட்டிருக்க வேண்டும். இல்லையென்றால், இதெல்லாம் ஏதோ செய்கின்ற வேலைக்கு செய்கிறோம் என்ற ரீதியில் தான் இருக்கும், வெளியாகும் செய்திகளும் அப்படியே இருக்கும்.

Child sold, child-prostitution etcமே மாதம் 25ம் தேதி – குழந்தைகளுக்கான சர்வதேச தினம் என்றால் அதே மாதத்தில் குழந்தை கடத்தல்: தண்டையார்பேட்டை, கொண்டித்தோப்பு அருகே வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை ஆட்டோவில் கடத்திய பெண்ணை பொதுமக்கள் மடக்கி பிடித்து, போலீசில் ஒப்படைத்தனர். பிடிபட்ட பெண் கடத்தல் கும்பலை சேர்ந்தவரா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்[3]. பட்டப்பகலில் நடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது சென்னையில் கடந்த 6 மாதங்களில் 10க்கும் மேற்பட்ட குழந்தைகள் மாயமாகி உள்ளனர். இதில், யானைக்கவுனி பகுதி மற்றும் பாரிமுனை ராஜா அண்ணாமலை மன்றம் அருகே நடைபாதையில் தூங்கிய 2 குழந்தைகளும் அடங்கும். இதுதொடர்பாக, பல சமூக ஆர்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தனர். அதில், ‘சென்னையில் குழந்தைகள் கடத்தப்படுவது தொடர்கதையாக உள்ளது. எனவே, இதுபோன்ற சம்பவங்களை தடுக்கவும், கடத்தப்பட்ட குழந்தைகளை மீட்கவும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என தெரிவித்து இருந்தனர். ஆனால், இதுவரை கடத்தப்பட்ட குழந்தைகள் மீட்கப்படவில்லை. இதுதொடர்பாக, யாரையும் போலீசார் கைது செய்யவும் இல்லை. தற்போது கூட ஆட்டோவில் குழந்தையை கடத்திய பெண்ணை பொதுமக்கள்தான் மடக்கி பிடித்துள்ளனர். எனவே, பிடிபட்ட பெண்ணிடம் தீவிர விசாரணை நடத்தி, இதன் பின்னணியில் உள்ளவர்களை கைது செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்[4].

Child prostitution a curse to society

© வேதபிரகாஷ்

03-06-2016

[1] தமிழ்.இந்து, இந்தியாவில் ஆண்டுக்கு 1 லட்சம் குழந்தைகள் மாயம், என்.சுவாமிநாதன், Published: May 25, 2016 15:46 ISTUpdated: May 25, 2016 16:00 IST

[2]http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-1-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/article8645218.ece

[3] தினகரன், வீட்டு வாசலில் விளையாடிய குழந்தையை ஆட்டோவில் கடத்திய பெண் சிக்கினார் கடத்தல் கும்பலை சேர்ந்தவரா போலீசார் தீவிர விசாரணை, பதிவு செய்த நேரம்:2016-05-21 11:54:39.

[4] http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=575243&cat=504

குழந்தைகள் கடத்தல் பற்றி, புகார் மற்றும் வழக்கு தொடுத்ததால், நீதிமன்றம் எழுப்பியுள்ள கேள்விகள்!

ஜூன்3, 2016

குழந்தைகள் கடத்தல் பற்றி, புகார் மற்றும் வழக்கு தொடுத்ததால், நீதிமன்றம் எழுப்பியுள்ள கேள்விகள்!

Chennai Children kidnapped - disappearedஇந்தியாவைப் பொறுத்த வரையில், ஏன் தமிழகத்தைப் பொறுத்த வரையிலும், குழந்தைகள் கடத்தல் என்பது புதிய விசயமே இல்லை. கடந்த காலங்களில் “குழந்தை கடத்தல்” ஒரு திட்டமிட்ட வியாபாரமாகி விட்டது. என்.ஜி.ஓக்கள் இதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. சினிமா மற்ற ஊடகங்களில் இதைப் பற்றி தாராளமாகவே விவரிக்கப்பட்டாலும், பல உண்மைகளை மறைத்தே வேலை செய்து வருகிறார்கள். பெரும்பாலும், கடத்தப் பட்ட குழந்தைகள் பிச்சை எடுப்பதற்கு உபயோகப் படுத்தப் படுகிறார்கள் என்றே கருத்தை உருவாக்க முயல்கிறார்கள். விடப்பட்ட பெண்குழந்தையை காப்பாற்றி வளர்ப்பது போன்ற நிலையிலும் சில நிறுவனங்கள் ஈடுபட்டு, பிறகு கடத்தல், தத்து, அயல்நாட்டவர்களுக்கு விற்பனை போன்ன்ற வேலைகளில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் கடத்தப்பட்ட குழந்தைகள் எத்தனை? என்றும், அதில் எத்தனை குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளன? என்றும் தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது வேடிக்கையாக இருக்கிறது எனலாம்.

Parthiban filed petition - untraceable kids - India 2011-14குழந்தை கடத்தல் விசயமாக போலீஸாருக்கு புகார் செய்தது, ஆள்கொணர்வு மனு தாக்கல் செய்தது: கடந்த பல ஆண்டுகளாக இவ்வியாபாரம் நடந்து கொண்டிருக்கும் போது, சென்னையில் சாலையோரத்தில் பெற்றோருடன் தூங்கிக்கொண்டிருக்கும் பல குழந்தைகள் கடத்தப்படுவதாகவும், அந்த குழந்தைகளை மீட்க போலீசார் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், சென்னை போலீஸ் கமிஷனரிடம் தயா பவுண்டேஷன், நடிகர் பார்த்திபன், எக்ஸ்னோரா அமைப்பை சேர்ந்த எம்.பி.நிர்மல் ஆகியோர் கடந்த ஏப்ரல் மாதம் புகார் செய்தனர் என்பது, அதை விட வேடிக்கையான விசயமாக இருக்கிறது. அவர்கள் செய்த நல்ல காரியத்தை விமர்சிக்கவில்லை, ஆனால், இத்தனை ஆண்டுகள் சும்மாயிருந்து விட்டு, இப்பொழுது திடீரென்று, இந்த உணர்வு எப்படி ஏற்பட்டது என்று தெரியவில்லை. இந்த நிலையில், சென்னை ஐகோர்ட்டில் எக்ஸ்னோரா அமைப்பை சேர்ந்த எம்.பி.நிர்மல், ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார்[1] என்று செய்திகள் வந்துள்ளன.

untraceable kids - India 2011-14கடந்த மூன்று ஆண்டுகளுக்கான குழந்தை கடத்தல் புள்ளி விவரங்கள் கொடுக்கப்பட்டது: இதனிடையே, கடந்த 3 ஆண்டுகளில் இதுவரை 1000க்கும் மேற்பட்ட குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பில் புள்ளி விவரம் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் 2013க்கு முன்னால் என்ன நடந்தது, அதைப் பற்றி மனுதாரர்கள் ஏன் கவலைப்படவில்லை என்ற கேள்விகளும் எழுகின்றன.

  • 2014 ஆம் ஆண்டில் மொத்தமாக 441 குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளதாகவும், அதில் சென்னையில் மட்டும் 114 குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • 2015 ஆம் ஆண்டில் 656 குழந்தைகள் கடத்தப்பட்ட நிலையில், அதில் 305 பேர் பெண் குழந்தைகள் என்றும், சென்னையில் மட்டும் மொத்தமாக 149 குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
  • இதேபோன்று 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை 271 குழந்தைகள் காணாமல் போயுள்ளதாகவும், அதில் பெண் குழந்தைகள் 126 பேர் என்றும், சென்னையில் மட்டும் மொத்தம் 58 குழந்தைகள் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது[2].

missing children 2011-14- India Todayகாணாமல் போன குழந்தைகளை ஆஜர்படுத்த வேண்டும்: அந்த மனுவில், ‘சென்னை எஸ்பிளனேடு பகுதியில் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் பெற்றோருடன் தூங்கிக்கொண்டிருந்த 8 மாத குழந்தை விமல் / ராகேஷ் கடத்தப்பட்டான்[3]. சில நாட்களுக்கு பின்னர் பெற்றோருடன் தூங்கிக்கொண்டிருந்த மற்றொரு 9 மாத குழந்தை சரண்யா கடத்தப்பட்டாள். இந்த குழந்தைகளின் பெற்றோர்கள் வசதியில்லாதவர்கள். அவர்களால் குழந்தைகளை தேடி கண்டுபிடிப்பது மிகவும் கஷ்டமானது. போலீசாரும் கடத்தப்பட்ட குழந்தைகளை கண்டுபிடித்து மீட்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இந்த இரு குழந்தைகளை மீட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசாருக்கு உத்தரவிடவேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது[4]. “கடந்த ஆண்டு பிப்ரவரி 23 ஆம் தேதி வால்டெக்ஸ் சாலையில் 8 மாத ஆண் குழந்தையும், அதற்கு அடுத்த மாதம் 29 ஆம் தேதி அதே பகுதியில் சரண்யா என்ற பெண் குழந்தையும் காணாமல் போனதாக குறிப்பிட்டிருந்தார்”, என்று நியூஸ்.7.டிவி குறிப்பிடுகின்றது[5]. வழக்கபோல, ஊடகங்களின் மாறுபட்ட அறிவிப்பு-செய்திகளும் இப்படி உள்ளன.

Three-year-old Chikash missing at the Chennai Central reunited with his parents on 22-05-2015- Indian Expressபோலீஸார் கேட்ட கால அவகாசம்: இந்த வழக்கு கடந்த ஏப்ரல் மாதம் விசாரணைக்கு வந்தபோது, கடத்தப்பட்ட குழந்தைகளை ஜூன் 2–ந் தேதி ஆஜர்படுத்த வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் மற்றும் எஸ்பிளனேடு போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது[6]. சென்னையிலேயே “பிடோபைல்”, அனாதை இல்லங்கள், முதலிய விவகாரங்களில் ஏகப்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளன. அனைத்துலக குழந்தைக் கற்பழிப்பாளிகளே இங்கு கைதாகியுள்ளனர். வில் ஹியூம் போன்றவர்கள் கைதாகி, தண்டனை பெற்று சிறையிலும் இருக்கின்றனர். “குழந்தை காணவில்ல”, “குழந்தை திருட்டு”, போன்ற செய்திகளும் ஆயிரக்கணக்கில் வந்துள்ளன. எனவே, இவ்விகாரங்கள் புதியது போல அறிவிப்பது, அணுகுவது, புகார் கொடுப்பது, வழக்குப் போடுவது முதலியவை திடீரென்று ஏன் வருகின்றன என்று புரியவில்லை. இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, வி.பாரதிதாசன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கடத்தப்பட்ட குழந்தைகளை மீட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்த கால அவகாசம் வேண்டும் என்று போலீஸ் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், ‘குழந்தைகள் கடத்தல் என்பது சமுதாயத்தில் மிகப்பெரிய பிரச்சினை. இதை எளிதான விஷயமாக எடுத்துக் கொள்ள முடியாது’ என்று கருத்து தெரிவித்தனர்[7]. “குழந்தைகள் கடத்தல்” என்பது சமுதாயத்தில் மிகப்பெரிய பிரச்சினை எனும்போது, நீதிபதிகள் அதை அறியவில்லை என்றாகாது.

CCTV -woman kidnapping Sridhar from Central - The Hinduஎத்தனை வழக்குகள் என்று நீதிமன்ற கேள்விகள் கேட்டது?: பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது[8]: “இந்த வழக்கில் 3–வது எதிர்மனுதாரராக தமிழக உள்துறை செயலரை தாமாக முன்வந்து சேர்க்கின்றோம்.

  • தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் எத்தனை குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளன?
  • குழந்தை கடத்தல் தொடர்பாக எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன?
  • அந்த வழக்குகளில் எத்தனை குழந்தைகள் மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன?
  • எத்தனை வழக்குகளில் குழந்தைகள் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை?
  • எத்தனை வழக்குகள் புலன் விசாரணையில் உள்ளன?

இந்த கேள்விகளுக்கு எல்லாம் தமிழக உள்துறை செயலர் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்யவேண்டும்[9]. விசாரணையை வருகிற ஜூன் 16–ந் தேதிக்கு தள்ளிவைக்கிறோம்[10]. நீதிமன்றம் இவ்விசயத்தில் மிகவும் கவலையோடு இருக்கிறது”, இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்[11].

© வேதபிரகாஷ்

03-06-2016

[1] தினத்தந்தி, கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் கடத்தப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை எத்தனை? தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி, மாற்றம் செய்த நாள்: வெள்ளி, ஜூன் 03,2016, 3:30 AM IST, பதிவு செய்த நாள்: வெள்ளி, ஜூன் 03,2016, 2:37 AM IST

[2] http://ns7.tv/ta/children-go-missing-supreme-court-orders-report.html

[3] தினத்தந்தி விமல் என்றும், மாலைமலர் ராகேஷ் என்றும் குறிப்பிடுகின்றன.

[4] http://www.dailythanthi.com/News/State/2016/06/03023744/In-the-last-5-years-in-the-state–Abducted-childrenNumber.vpf

[5] நியூஸ்.7.டிவி, காணாமல் போகும் குழந்தைகள்அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு, June 02, 2016

[6] மாலைமலர், கடந்த 5 ஆண்டுகளில் கடத்தப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை எத்தனை?: பதிலளிக்க அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு, பதிவு: ஜூன் 02, 2016 13:11

[7] http://www.dinakaran.com/Latest_Detail.asp?Nid=221317

[8] http://www.maalaimalar.com/News/District/2016/06/02131129/1016077/last-5-years-number-of-children-abducted-High-Court.vpf

[9] தினமணி, 5 ஆண்டுகளில் காணாமல் போன குழந்தைகள் பற்றிய விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும்: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு, By  சென்னை, First Published : 03 June 2016 01:41 AM IST.

[10] http://www.dinamani.com/tamilnadu/2016/06/03/5-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8/article3463590.ece

[11] தினகரன், குழந்தைகள் கடத்தல் வழக்கு: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ், பதிவு செய்த நேரம்: 2016-06-02 12:33:49.