விவாகரத்து அதிகமாவதேன் – குழந்தைகள் தவிப்பது, குடும்பங்கள் உடைவது, சமூகம் சீரழிவது அதிர்ச்சியடைவதாக உள்ளது (கேரளாவின் கதை)!
வருடத்திற்கு 50,000ற்கும் மேலாக விவாக ரத்து இந்தியாவில் நடக்கின்றன: அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிபர கணக்கின்படி, இந்தியாவில் 12க்கும் மேற்பட்ட மாநிலங்களில் விவாகரத்துகள் அதிகம் நடக்கிறது[1]. 2014 ம் ஆண்டின் கணக்கின் படி மிக அதிகபட்சமாக கேரளாவில் ஒரு மணிநேரத்திற்கு 5 விவகாரத்துகளும், நாள் ஒன்றிற்கு 130 விவாகரத்துகளும் வழங்கப்படுகின்றன[2]. மக்கட் தொகை அதிகமாக உள்ள இந்தியாவில் இத்தகைய புள்ளி விவரங்களை வைத்து விவரங்களைக் கொடுப்பது, அவற்றை செய்திகளாகப் போடுவது, அவற்றை வைத்து விளக்கம் கொடுப்பது போன்றவற்றில் ஓரளவிற்கே உண்மை நிலையை அறிய முடியும். குற்றங்கள், கொலைகள், விபத்துக்கள் ஆகியவற்றிற்கு எடுக்கப்படுவதை போல் நாடு முழுவதும் நடக்கும் விவகாரத்துக்கள் தொடர்பான புள்ளிவிபரங்கள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை என்று 2015ம் ஆண்டு மார்ச் மாதம் பாராளுமன்றத்தில் கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த மத்திய அரசு தெரிவித்துள்ளது. இருப்பினும் கோர்ட்டுகளில் நிலுவையில் உள்ள விவகாரத்து வழக்குகளின் அடிப்படையில் பட்டியல் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 10 ல் 6 ஆண்கள் தங்களின் மனைவியை அடிக்கும் வழக்கம் கொண்டவர்கள் என 2014ம் ஆண்டு நவம்பர் மாதம் ஐநா வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கேரளாவில் விவாக ரத்து அதிகம் ஏன்?: இதில் மற்ற மாநிலங்களை விட கேரளாவில் 2014ம் ஆண்டு மட்டும் 47,525 விவகாரத்து வழக்குகள் கையாளப்பட்டுள்ளது[3]. கேரளாவில் படித்த மக்கள் அதிகமாக இருக்கின்றனர். மக்கட்தொகை வைத்துப் பார்க்கும் போது, இந்து (55%), கிறிஸ்தவ (18%) மற்றும் முஸ்லிம்கள் (27%) கணிசமாக இருக்கின்றனர். இதில் முஸ்லிம்களைத் தவிர மற்ற மதத்தினர் திருமணம் என்பது ஒரு நிரந்தர பந்தம், உடையக் கூடாதது என்று தான் நம்புகின்றன. இருப்பினும், இவ்வாறு கேரளாவில் அதிகமாவது ஆராய்ச்சிக்குரியதே ஆகும். விவகாரத்துகள் அதிகம் நடக்கும் மாநிலங்களில் கேரளா முதலிடத்திலும், மகாராஷ்டிரா 2வது இடத்திலும், கர்நாடகா 3வது இடத்திலும், மத்திய பிரதேசம் 4வது இடத்திலும், அரியானா 5வது இடத்திலும் உள்ளன. விவகாரத்துகளுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், கணவரால் துன்புறுத்தப்படுவதே அதிக விவாகரத்து வழங்கப்படுவதற்கான காரணமாக உள்ளது[4]. கேரளாவைப் பொறுத்தவரையில், இது ஒன்றும் புதிய விசயமல்ல. கடந்தாண்டுகளின் புள்ளிவிவரங்களும் ஏறுமுகமாகவே இருக்கின்றன.
மாவட்டம் | இந்து | முஸ்லிம் | கிருத்துவர் |
Kasaragod | 7,05,234 | 4,13,063 | 84,891 |
Kannur | 14,80,748 | 6,65,648 | 2,61,090 |
Kozhikode | 16,69,161 | 10,78,759 | 1,27,468 |
Wayanad | 3,92,141 | 2,09,758 | 1,75,495 |
Malappuram | 10,57,418 | 24,84,576 | 1,75,495 |
Palakkad | 18,02,766 | 7,03,596 | 1,09,249 |
Thrissur | 17,61,842 | 4,88,697 | 7,20,152 |
Ernakulam | 14,44,994 | 4,51,764 | 12,04,471 |
Idukki | 5,66,744 | 81,222 | 4,80,108 |
Kottayam | 9,63,497 | 1,16,686 | 8,71,371 |
Alappuzha | 14,57,188 | 2,08,042 | 4,41,643 |
Pathanamthitta | 6,94,560 | 56,457 | 4,81,602 |
Kollam | 16,85,044 | 4,74,071 | 4,23,745 |
Thiruvananthapuram | 22,02,112 | 4,31,512 | 5,95,563 |
கேரளாவில் விவாகரத்து அதிகம் என்பது 2009-2011 புள்ளிவிவரங்களும் தெரிவிக்கின்றன[5]: கேரளாவில் 2010ல் மட்டும் பல குடும்ப நல கோர்ட்டுகளில் தாக்கல் செய்யப்பட்டுள்ள விவாகரத்து தொடர்பான வழக்குகள் எண்ணிக்கை மட்டும், 10,926 ஆக அதிகரித்துள்ளது. மாநிலத்தில் விவாகரத்து கோருவோர் எண்ணிக்கை, ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. மாநிலத்தில் 1984ம் ஆண்டு சட்டப்படி, குடும்ப நல கோர்ட்டுகள் அமைக்கப்பட்டன. இவ்வாறு திருவனந்தபுரம், கொல்லம், கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய மாவட்டங்களில், தலா இரண்டு வீதம், இக்கோர்ட்டுகள் செயல்படுகின்றன. இதில் திருவனந்தபுரம் மாவட்டத்தில், மிக அதிக எண்ணிக்கையில் விவாகரத்து வழக்குகளும், வயநாடு மாவட்டத்தில் குறைந்தளவு வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு புள்ளி விவரங்களைக் கொடுத்து விட்டு காரணங்கள் கூறாமல் அல்லது பொதுவாக கூறுவதால் பிரச்சினையைத் தீர்க்க முடியாது.
கேராளாவில் அயல்நாடுகளில் வாழும் நிலை, தனியாக இருக்கும் நிலை – விவாகரத்தில் முடிகிறது: கேரளாவைப் பொறுத்த வரையில், ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலருமே அயல்நாடுகளில் சென்று வேலை செய்கின்றனர். இதனால், திருமணம் ஆன நிலையில், ஒருவேளை, ஆண் அல்லது பெண் வேலையில்லாமல் இருக்கும்போது, அல்லது குடும்பத்தை, சொத்தை, மற்ற விசயங்களுக்காக கேரளாவிலேயே இருக்க வேண்டியுள்ளது. ஒரு வருடத்திற்கு அல்லது அதற்கும் மேலான காலத்தில் வந்து செல்லும் கணவன் அல்லது மனைவி என்றிருக்கும் போது, தனியாக இருக்கும் மனைவி அல்லது கண்ணவன், தாம்பத்தையத்தை மீறிய உறவுகளில் சிக்குகிறார்கள் அல்லது ஈடுபடுகிறார்கள். அதேபோல, அயல்நாடுகளில் வேலை செய்யும் கணவன் அல்லது மனைவி நிலைப் பற்றியும் ஒன்றும் சொல்லமுடியாது. அவர்களும் அதேபோல மற்றவர்களுடன் உறவு வைத்துக் கொள்ளலாம். இந்நிலையில் தான், அத்தகைய தாம்பத்தைய உறவுகள் மீறிய விவகாரங்கள் தெரிய வரும் போது விவாகரத்தில் முடிகிறது. முஸ்லிம்களைப் பொறுத்த வரையில் எந்த பிரச்சினையும் இல்லை, ஏனென்றால், அவர்களது மதம் பலதார மணமுறையை சட்டப்படி ஆக்கியுள்ளது. ஆனால், மற்ற மதத்தவர்களிடையே, இது சட்டமீறாலாகி, விவாகரத்தில் முடிந்து, குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன.
கேரள மாவட்டங்கள் ரீதியான விவாகரத்துகள் மூலம் அறியப்படுவன: கண்ணூர் பகுதியைச் சேர்ந்த வக்கீல் தாம்ஸ்ட்டின் கே. அகஸ்டின் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெற்ற விவரங்களின் அடிப்படையில் இத்தகவல்கள் வெளியாகி உள்ளது. இதன்படி, மாநிலத்தில் விவாகரத்து கோருபவர்களின் எண்ணிக்கை, தலைநகர் திருவனந்தபுரத்தில், கடந்தாண்டு மட்டும் 1,747 ஆக இருந்தது. குறைந்தளவாக வயநாடு மாவட்டத்தில், 198 வழக்குகள் மட்டுமே பதிவாகி இருந்தன. இது தவிர, எர்ணாகுளம், திருச்சூர் மாவட்ட குடும்ப நல கோர்ட்டுகளில், 10 ஆண்டுகளில், அதிர்ச்சி தரும் அளவுக்கு, இவ்வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எர்ணாகுளம் மாவட்ட குடும்ப நல கோர்ட்டில், 1999ம் ஆண்டு விவாகரத்து வழக்குகளாக, 196 வழக்குகளும், அதுவே 2010ம் ஆண்டு, 1,100 வழக்குகளாக அதிகரித்து விட்டது.அதேபோல், திருச்சூர் மாவட்ட குடும்ப நல கோர்ட்டில், 1999ம் ஆண்டு, 335 வழக்குகளாக இருந்த நிலை மாறி, 2010ம் ஆண்டு மட்டும், 1,059 ஆக அதிகரித்துள்ளது. கண்ணூர் மாவட்டத்தில், 1999ம் ஆண்டு, 663 ஆக இருந்த வழக்குகள், 2010ம் ஆண்டு 716 ஆக மட்டுமே அதிகரித்துள்ளது[6]. இவ்வாறு மாவட்ட – நகர ரீதியில் உள்ள விவாகரத்துகள் ஏன் என்றா காரணங்கள் சொல்லப்படவில்லை.
© வேதபிரகாஷ்
23-06-2016
[1] தினமலர், அதிகரிக்கும் விவாகரத்துகள் : கேரளா முதலிடம், ஜூன்.20,2016, 15:24.
[2] http://www.dinamalar.com/news_detail.asp?id=1548539
[3] தினத்தந்தி, கேரளாவில் ஒரு மணி நேரத்திற்கு 5 விவாகரத்து நடக்கிறது அதிர்ச்சி தகவல், பதிவு செய்த நாள்: புதன், ஜூன் 22,2016, 2:51 PM IST; மாற்றம் செய்த நாள்: புதன், ஜூன் 22,2016, 2:51 PM IST.
[4] http://www.dailythanthi.com/News/India/2016/06/22145133/Kerala-has-a-really-high-divorce-rate-5-cases-adjudged.vpf
[5] தினமலர், கேரளாவில் விவாகரத்து அதிகரிப்பு:ஒரே ஆண்டில் 10,926 வழக்குகள், மே.7, 2011: 00.24.
[6] http://www.dinamalar.com/news_detail.asp?id=237017&Print=1
குறிச்சொற்கள்: அடிப்பது, கணவன்-மனைவி உறவு முறை, கற்பு, கலாச்சாரம், குடிப்பது, கொடுமை, தலாக், திருமண முறிவு, பாரம்பரியம், மனைவி, முறிவு, ரத்து, வரதட்சிணை, விவாகரத்து
மறுமொழியொன்றை இடுங்கள்