இந்தியாவில் விவாகரத்து அதிகமாவதேன் – குழந்தைகள் தவிப்பது, குடும்பங்கள் உடைவது, சமூகம் சீரழிவது அதிர்ச்சியடைவதாக உள்ளது!


இந்தியாவில் விவாகரத்து அதிகமாவதேன் – குழந்தைகள் தவிப்பது, குடும்பங்கள் உடைவது, சமூகம் சீரழிவது அதிர்ச்சியடைவதாக உள்ளது!

Grounds for divorce in Indian laws

விவாகரத்து பெறும் முன்பு மறுதிருமணம் செய்ய முடியுமா? [1]: இந்திய குடும்பவியல் நடைமுறைச் சட்டத்தின் படி நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தொடர குறைந்த பட்சம் திருமணம் ஆகி ஒரு வருட காலம் ஆகி இருக்க வேண்டும். தற்போதைய குடும்பவியல் நடைமுறை சட்டத் திருத்தத்தின்படி கணவர் மற்றும் மனைவி ஆகிய இருவரின் சம்மதத்தின் பேரில் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்தால் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்த ஒரு சில தினங்கள் கழித்து நீதிமன்றத்தில் மறுதிருமணம் பற்றி மனு தாக்கல் செய்து விட்டு விவாகரத்து கிடைக்கும் முன் வேறு ஒருவரை மறுதிருமணம் செய்து கொள்ளலாம் என்று சட்டத்தில் கூறப்படுகிறது[2]. இதனால், மறுமணங்கள் அதிகரிக்கின்றன. ஆனால், அதற்கேற்றப்படி, அத்தகைய மறுமணங்களும் பிளவுபடுகின்றன. மனோதத்துவரீதியில், மறுமணம் செய்து கொள்ளும் தம்பதியர் அதிககாலம் சேர்ந்து வாழ்வதில்லை. மனத்திற்குள், இவள் – இவன் ஏற்கெனவே திருமணம் ஆனவள் – ஆனவன், இன்னொருவனுடன் – இன்னொருத்தியுடன் உடலுறவு கொண்டவள் – கொண்டவன் என்ற எண்ணம் உருத்திக் கொண்டே இருக்கும். குழந்தைகள் இருந்தால், பிரசினை சீக்கிரம் வரும். மறுமணம் ஆகிய பிறகு குழந்தைகள் பிறந்தால், அப்பிரச்சினைகள் இன்னும் வளரும்.

Divorce rate Madurai figuresவிவாகரத்திற்கு காரணம் குடும்ப வாழ்க்கை முறை சிதைந்தது தான்[3]: குடும்பநல கோர்ட்டுகளில் இப்போது விவாகரத்து வழக்குகள் நிரம்பி வழிகின்றன. ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான விவாகரத்து வழக்குகள் கோர்ட்டுகளில் பதிவானபடி உள்ளன. இது சம்மந்தமாக சுப்ரீம் கோர்ட்டு பல வழிகாட்டுதல்களை தெரிவித்து உள்ளது. தம்பதிகளிடம் ஆலோசனை கூறி விவாகரத்துக்களை தவிர்க்கும்படி கோர்ட்டு கூறி இருக்கிறது. ஆனாலும் விவாகரத்து வழக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது. இதற்கு முக்கியமான காரணம் குடும்ப வாழ்க்கை முறை சிதைந்தது தான் என்று ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு கூறி இருக்கிறது. தனிக்குடித்தனம், மன அழுத்தங்கள், காலதாமதமான திருமணம், நிதி பிரச்சினை போன்றவையும் விவாகரத்து வழக்கு வருவதற்கு முக்கிய காரணங்களாக உள்ளன. இங்கும், “குடும்ப வாழ்க்கை முறை சிதைந்தது” என்பதை ஆராய வேண்டும். முதலில் “குடும்பம்” மற்றும் “குடும்ப வாழ்க்கை முறை” என்பது என்ன என்பதனை ஒரு வரையறைக்குள் விவரிக்கப் பட்டால் தான் நிலைமை தெளிவாகும். இந்தியாவைப் பொறுத்த வரையில், பாரம்பரிய குடும்பமுறை போற்றப்படுகிறது. பொதுவாக, மாறி வரும் இக்காலத்திலும் கணவன்-மனைவி மட்டுமல்லாது, அவர்களது பெற்றோர் என்ற நிலையுள்ளது. இது கூட்டுக்குடும்பம் அக்காவிட்டாலும், பேரன்-பேத்திகளைப் பார்த்துக் கொள்ளும் நிர்பந்தங்களில் இருக்கின்றது. மணமகள் ஒப்புக்கொண்டு, பொறுத்துக் கொண்டு, அனுசரித்துக் கொண்டு இருக்கும் வரை நீடிக்கிறது. இல்லை, அதுவே விவாக ரத்திற்கான ஒரு காரணாமாக அமையும் நிலையும் ஏற்படுகிறது.

No of divorced in India 2011 census படித்த தம்பதிகள் மத்தியில் விவாகரத்து அதிகரிப்பு: சுப்ரீம் கோர்ட்டு கவலை[4]: இந்த நிலையில் டெல்லியில் விவாகரத்து வழக்கு ஒன்றை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் சப்ரே, அசோக்பூஷண் ஆகியோர் விசாரித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது: “நாட்டில் விவாகரத்து வழக்குகள் அதிகமாகி வருவது கவலை அளிக்கிறது. அதுவும் படித்தவர்கள் மத்தியில் தான் அதிக பிரச்சினை வருகிறது. சின்ன பிரச்சினைகளுக்கும் படித்தவர்கள் ஏன் அடித்துக் கொள்கிறார்கள். உங்களுடைய பிரச்சினைகளை நீங்கள் உட்கார்ந்து பேச வேண்டும். விவாகரத்து வழக்குகளை கொண்டு வரும் வக்கீல்கள் சம்மந்தப்பட்ட தம்பதிகளை ஒன்று சேர்ப்பதற்காக முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் அந்த தம்பதிகள் ஒன்று சேர்ந்து வாழ்ந்தால் நாங்கள் மகிழ்ச்சி அடைவோம். இது சம்மந்தமாக முறையான விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும்”, இவ்வாறு அவர்கள் கூறினார்கள். படித்தவர்கள் என்பதை விட, படித்து வேலையில் உள்ள தம்பதியினர், அதிலும், ஐடி போன்ற கம்பெனிகளில் அதிகமான சம்பளத்தைப் பெற்று, வசதியாக வாழ்ந்து, ஜாலியாக வேழ்க்கையினை அனுபவித்து வரும் ஆண்-பெண்களிடம் தான் இப்போக்கு அதிகமாக இருக்கிறது.

Divorce - affected childrenடி.வி. சீரியல்களால் தமிழகத்தில் விவாகரத்து வழக்குகள் அதிகரித்துள்ளது (2009)[5]: டி.வி. சீரியல்களால் தமிழகத்தில் விவாகரத்து வழக்குகள் அதிகரித்துள்ளதாக மாநில சமூக நலத் துறை ஆணையர் என்.பி.நிர்மலா தெரிவித்தார். குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழ்நாடு சமூக நலத் துறை சார்பில் சென்னையில் பயிலரங்கு நடைபெற்றது.   அதில் அவர் பேசியதாவது: “தொலைக்காட்சியில் நாள் முழுவதும் ஒளிபரப்பப்படும் தொடர்களில், சிறியப் பிரச்னைகள் ஊதிப் பெரிதாக காட்டப்படுகின்றன. இதன் காரணமாக, சிறியப் பிரச்னைகளும் பெரிதாக்கப்பட்டு, தற்போது விவாகரத்து கோரப்படுகிறது.   மொத்தம் 2,376 வழக்குகள்: குடும்ப வன்முறைச் சட்டம் 28.10.06-ம் தேதி அமல்படுத்தப்பட்டது. இந்த சட்டத்தின் கீழ் தமிழகத்தில் இதுவரை 2,376 வழக்குகள் சமூக நலத் துறையின் விசாரணைக்கு வந்துள்ளன. இதில் 139 வழக்குகளில் இருதரப்பினருக்கும் சமரசம் செய்யப்பட்டுள்ளது. 920 வழக்குகள் தீர்க்கப்பட்டுள்ளன”, என்றார் அவர்.   இவர் 2009ல் இப்படி சொன்னாலும், 2016ல் நிலைமை ஒன்றும் மாறிவிடவில்லை, மோசமாகத்தான் போயுள்ளது. விவாகம் பற்றிய நல்லதையே போதிக்கும் முறையில் டிவி, சினிமா மற்ற ஊடகங்கள் இல்லை. திருமணத்திற்கு புறம்பான செக்ஸ் போன்றவற்றைத்தான் ஊக்குவிக்கும் வகையில் விவரங்களைக் கொடுத்து வருகிறார்கள்.

Times of India illustration -misuse of Section 498A of the Indian Penal Code by womenபெண்கள் இதைக் கேடயமாகப் பயன்படுத்த வேண்டும். ஆயுதமாகப் பயன்படுத்தக் கூடாது (2009) – உயர் நீதிமன்ற நீதிபதி கே.என்.பாஷா: “குடும்ப வன்முறை சட்டம் நமது சமூகத்துக்கு மிகவும் தேவையான சட்டம். நமது நாட்டில் திருமணமான பெண்கள் 40 சதவீதம் பேர் கணவர்களால் துன்புறுத்தப்படுகின்றனர்.   மனைவி, தாய், சகோதரி அனைவரும் குடும்பப் பிரச்னைகளால் வன்முறைக்கு ஆளாகின்றனர். குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளிக்கவும், அவர்களைப் பாதுகாக்கவும் இந்த சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.   இந்த சட்டத்தின்படி, தண்டனை முக்கியமல்ல. நிவாரணம்தான் முக்கியம்.   பெண்கள் இதைக் கேடயமாகப் பயன்படுத்த வேண்டும். ஆயுதமாகப் பயன்படுத்தக் கூடாது”, என்றார் நீதிபதி கே.என்.பாஷா[6].   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு சமூக நல வாரியத் தலைவர் சல்மா, பெண் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் சாந்தகுமாரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். சட்டத்தை துஷ்பிரயோகம் செய்வது, ஒரு பெண் பலரை மணப்பதும், ஒரு ஆண் பல பெண்களை திருமணம் செய்து கொள்வதிலிருந்தே தெரிகிறது.

Times of India illustration 498-Aகற்ப்பைப் பற்றி மோசமான, கீழ்த்தரமான எண்ணத்தை உருவாக்கி வைத்துள்ளது:  சமீபகாலத்தில், நடிக-நடிகர்கள், சமூகப் பிரச்சினைகளைப் பற்றி, தங்களது, அதிகப்பிரசிங்கத்தனமான கருத்துகள், ஆலோசனைகள் முதலியவற்றை ஊடகங்களின் மூலம் சொல்லி வருவதால், அவை, எளிதில் மக்களுக்குச் சென்றடைகிறது. மேலும், இப்பொழுதைய ஊடக விளம்பரங்கள், சினிமாக்கள் பெண்களை கேவலமாகச் சித்த்ரிக்கின்றன. சென்ட்-டூத் பேஸ்ட்டிற்காகவே படுக்க வந்து விடுவாள் போன்று சித்தரிக்கப்படுகிறது. இது குடும்பத்தோடு பார்த்து ரசிக்கப்படுகிறது. பொதாகுறைக்கு, ஒரு தாயே, மகன் “டேடிங் / பொரோபசலுக்கு” செல்லும் போது, அத்தகைய சென்டை பரிந்துரைக்கிறாள். பலதார கமல்ஹஸன் குடும்ப உறவுகளைப் பற்றி பேசுவது மோசமாக உள்ளது. போதாகுறைக்கு “சேர்ந்து வாழும்” முறை ஆதரித்து பரப்பி வருவது, விபச்சாரத்தை ஆதரிப்பது போல உள்ளது. அதேபோல, முன்னர் குஷ்பு கற்ப்பைப் பற்றி சொன்னதும் படுகேவலமானது. அதாவது, எந்த ஒழுக்கத்தையும் கடைப்பிடிக்காமல் இருக்கும் இவர்கள், தாம்பத்தியம், குடும்பம், குடும்ப வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை முறை முதலியவற்றைப் பற்றி பேசுவதற்கு அருகதை உள்ளதா என்று யோசிக்க வேண்டியுள்ளது.

© வேதபிரகாஷ்

23-06-2016

[1] தமிழ்.வெப்துனியா, விவாகரத்து பெறும் முன்பு மறுதிருமணம் செய்ய முடியுமா?

ஞாயிறு, 19 ஜூன் 2016 (07:30 IST)

[2] http://tamil.webdunia.com/article/regional-tamil-news/can-you-remarriage-116061900003_1.html

[3] மாலைமலர், படித்த தம்பதிகள் மத்தியில் விவாகரத்து அதிகரிப்பு: சுப்ரீம் கோர்ட்டு கவலை, பதிவு: மே 21, 2016 10:16.

[4] http://www.maalaimalar.com/News/TopNews/2016/05/21101620/1013213/increasing-divorce-cases-SC-says-couples-must-sort.vpf

[5] தினமணி, டி.வி. சீரியல்களால் விவாகரத்து அதிகரிப்பு, By First Published : 12 July 2009 03:36 AM IST.

[6] http://www.dinamani.com/edition_chennai/chennai/article1048604.ece

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , ,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: