மூன்று திருமணம் செய்த சார்லஸ், நான்காவதாக, மாலாவுக்கு வலைவீசியதும், மாலாவின் தகாத காதலும்-காமமும், கொலையில் முடிந்த சோகமும்!


மூன்று திருமணம் செய்த சார்லஸ், நான்காவதாக, மாலாவுக்கு வலைவீசியதும், மாலாவின் தகாத காதலும்-காமமும், கொலையில் முடிந்த சோகமும்!

Nellai Mala - different photos

எம்.எஸ்.சி., படிக்கும் மாலா என்ற 22 வயது யுவதி: நெல்லை அருகே தங்கையை வெட்டிக்கொலை செய்த தீயணைப்பு படை வீரரை போலீசார் தேடிவருகின்றனர். திருநெல்வேலி, மூன்றடைப்பை அருகேயுள்ள மேலமூன்றடைப்பைச் சேர்ந்தவர் சிதம்பரம் என்ற கணேசன் (50). அரசு பஸ் கண்டக்டர் / கூலித்தொழிலாளி என்கிறது மாலைமலர்[1]. இவருக்கு இரண்டு மகன்கள் கிருஷ்ணராஜா (25), செல்வம் என்கின்ற செல்வக்குமார் (23), மற்றும் ஒரு மகள் மாலா (22) உள்ளனர். மூத்த மகன் கிருஷ்ணராஜ், சென்னையில், வண்ணாரப்பேட்டை தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்பு துறையில் வீரராக பணியாற்றிவருகிறார். இவரது மகள் மாலா, நெல்லையில் பாளையங்கோட்டையில் கேடிசி நகர் அருகில் உள்ள பெண்கள் கல்லூரியில் எம்.எஸ்.சி., முதலாம்[2] / இரண்டாம் ஆண்டு பயின்று வந்தார். கூலி தொழிலாளியோ-கண்டக்டரோ, கஷ்டப்பட்டுத்தான் பெண்ணை கல்லூரியில் சேர்த்திருப்பார், செலவுக்கு பணம் எல்லாம் கொடுத்திருப்பார். ஆனால், படித்து, வேலைக்குப் போய் வாழ்வில் உயரும் வேலையில், பாழாய்போன, தகாத காதலில் மகள் சிக்கிக் கொண்டாள்.

Nellai Mala - Juice shop love

படிக்க செல்லும் பெண் ஜூஸ் குடிப்பது, காதலில் ஈடுபடுவது முதலியன: இவர் தினமும் பஸ்சில், நெல்லை புதிய பஸ் ஸ்டாண்ட் சென்று அங்கிருந்து கல்லூரிக்கு சென்றுவந்தார். செல்லும் முன்னர் புதிய பஸ் ஸ்டாண்டில் பழஜூஸ் கடையில் ஜூஸ் குடிக்கும் வழக்கம் இருந்தது. வீட்டில் படிப்பு அல்லது மற்ற தேவைக்கு என்று பணம் கொடுத்தால், மாணவிகள் இவ்வாறு செலவழிக்கின்றனர். இங்கு ஜூஸ் குடிக்கப் பயன்படுகிறது, சரி, ஆனால், அதனுடன் மற்ற பொல்லாப்புகள் எல்லாம் வருகின்றனவே! பஸ் ஏறும் போது, திரும்பி வரும் போது சார்லஸ் பேச்சுக் கொடுத்துள்ளான். இதனால், வேலைபார்த்த சார்லஸ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. பழக்கம் காதலாக மாறியது, அடிக்கடி போனிலும் பேசி காதலை வளர்த்து வந்தனர்[3]. ஜூஸ் போட்டுத் தரும் பெண்களிடம் பேச்சுக் கொடுத்து பேசும் பழக்கம் உள்ளவன் சார்லஸ். அதில் எம்.எஸ்.சி., படிக்கும் மாலா மயங்க வேண்டிய அவசியம் என்ன? உலக-நாட்டு விவரங்கள் எதுவும் அறியாத அப்பாவியா அவள்? இக்காலத்தில் பள்ளி-கல்லூரி பெண்கள் தெருவோரம் கடைகளில் டீ-காபி குடிப்பது, சிறிய ரெஸ்டாரென்டுகள்-ஓட்டல்களில் ஐஸ்கிரீம்-ஜூஸ் சாப்பிடுவது போன்றவை சகஜமான காட்சிகளாக இருக்கின்றன. இதனைப் பார்த்து இளைஞர்களும் வட்டமிட்டு அங்கு வருகின்றனர். அதுபோல சார்லஸ் விரித்த வலையில் இவள் மாட்டிக் கொண்டாள் போலும்.

Charles going for fourth, after three wives

மூன்று முறை திருமணம் செய்த சார்லஸ், நான்காவதாக கல்லூரி மாணவிக்கு வலை வீசியது ஏன்?: இங்கு, இவ்விவகாரத்தில் சார்லஸ் யார் என்று பார்ப்போம்! சார்லஸ் மருதகுளத்தை அடுத்துள்ள ஆழ்வாநேரியை சேசர்ந்தவர். ஏற்கனவே திருமணமானவர். இரண்டு மனைவிகளை பிரிந்து மூன்றாவது மனைவியுடன் வாழ்பவர்[4]. குழந்தைகளும் உள்ளன, என்றெல்லாம் ஊடகங்கள் கூறினாலும், முதல் இரண்டு மனைவியர்களுடன் எப்படி வாழ்ந்தான், ஏன் பிரிந்தான், முறைப்படி விவாகரத்தானதா போன்ற விவரங்கள் கொடுக்கவில்லை. பிறகு மூன்று மனைவிகள் கூட இருந்து விட்டு, நான்காவதாக, இன்னொரு பெண்ணைத் தேடி போகும் அவசியம் என்ன? குறிப்பாக கல்லூரி மாணவிக்கு வலைவீசி, மயக்கி, கூட ஓடி வரும் அளவுக்கு அவன் என்னத்தான் வித்தை செய்தான் என்று தெரியவில்லை. படிக்கும் பெண்ணிற்கு இதுகூட புரியாதா என்பது விசித்திரமாக இருக்கிறது. இந்த விவரம் தெரியவந்ததும், மாலாவை பெற்றோர் கண்டித்ததால் அவர் கல்லூரிக்குச் செல்லவில்லை. இதனால் மாலா வீட்டில் இருந்தாலும் சார்லசுடன் போனில் பேசி வந்ததாகவும், ரகசியமாக சந்தித்ததாகவும் கூறப்படுகிறது[5].

How girls are tarapped by modern youth

ஓடிப்போனவர்களைப் பற்றி இரு குடும்பத்தினரும் புகார்இரண்டு மாதங்களாகக் காணவில்லை: இதனிடையே, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் – ஏப்ரல், 2015 மேலப்பாளையத்தில் உள்ள பாட்டிவீட்டுக்கு செல்வதாக கூறிச் சென்ற மாலா, அங்கு செல்லாமல் தலைமறைவாகிவிட்டார். அதே நேரத்தில் சார்லஸைஸயும் காணவில்லையாம். இருவரும் திட்டமிட்டு சென்று விட்டனர் என்று தெரிகிறது. இதுகுறித்து, மாலாவின் பெற்றோர் / பாட்டி போலீசில் புகார் அளித்தனர். சார்லசின் குடும்பத்தினரும் மூன்றடைப்பு போலீசில் புகார் அளித்தனர்[6]. சார்லஸின் மூன்றாம் மனைவிக்கு, இவ்விவகாரங்கள் தெரியுமா, ஏன் கண்டிக்கவில்லை போன்ற விவரங்களையும் ஊடகங்கள் கொடுக்கவில்லை. போலீசார் இருவரையும் தேடி அலைந்தனர்[7]. புகாரின்பேரில், மேலப்பாளையம் போலீசார் விசாரித்ததில் கோவையில் இருந்தது தெரிய வந்தது. இருவரையும் மீட்டு, ஸ்டேஷனுக்கு கூட்டி வந்து, இரு குடும்பதத்தினரையும் வரவழைத்து, அறிவுரை கூறி. பின்னர் மாலாவை பெற்றோருடன் அனுப்பிவைத்துள்ளனர்[8]. இரு குடும்பத்தினரும் புகார் கொடுத்துள்ளது, போலீஸ் நிலையத்திற்கு வந்தது, சென்றது முதலியவை, அவர்களது நடவடிக்கை பெற்றோர், உற்றோர், மற்ற்றோர்களுக்குத் தெரிந்துள்ளது என்றாகிறது. சார்லஸின் மூன்றாம் மனைவிக்கும் தெரிந்திருக்கிறது. மேலும், இரண்டு மாதங்களாக சார்லஸ்-மாலா காணவில்லை என்றாகிறது.

police_van_இந்து படம்

பிரித்து வைக்கப்பட்ட பின்னர், சார்லஸுக்கு எப்படி திருமணம் நடந்தது?:  இவ்விசயத்தில் மாலைமலர்[9], சில விவரங்களைக் கொடுத்துள்ளது: “பின்னர் காதல் ஜோடியின் உறவினர்கள் இருவரையும் மீட்டு பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இன்னும் ஒரு சில ஆண்டுகள் கழித்து காதல் ஜோடிக்கு திருமணம் செய்து வைக்கலாம் என அவர்கள் முடிவு செய்தனர். இதையடுத்து காதலர்கள் இருவரும் பிரித்து வைக்கப்பட்டு அவரவரின் வீடுகளுக்கு சென்றுவிட்டனர் பின்னர் சில மாதத்தில் மாலாவின் காதலனுக்கு அவரது பெற்றோர் வேறொரு பெண்ணை திருமணம் செய்து வைத்தனர். தற்போது அந்த வாலிபருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் மாலாவால் தனது முன்னாள் காதலனை மறக்க முடியாமல் தவித்து வந்துள்ளார்.”. அப்படியென்றால், சார்லஸுக்கு எப்படி திருமணம் நடந்தது, ஏற்கெனவே மூன்றாவது மனைவியுடன் வாழ்கிறான் என்று குறிப்பிட்ட நிலையில், இத்திருமணம் எப்படி நடந்தது, “தற்போது அந்த வாலிபருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது” என்றால், திருமணம் 2015லேயே நடந்திருக்க வேண்டுமே? புகார் கொடுத்தது-பிடித்து வந்தது எல்லாம் ஏப்ரல், 2016ல் நடந்தது என்றால், இவ்விவரம் முரண்படுகிறது. ஒன்று இது முன்னமே, ஒரு வருடத்திற்கு முன்பு நடந்திருக்க வேண்டும். அப்படியென்றால், இப்பொழுதைய மூன்றாவது மனைவிதான், அந்த மனைவி எனலாம். அதனால், ஒரு குழந்தை பிற்ந்திருக்கலாம். ஆனால், முன்னரோ, இரண்டு மனைவிகளை பிரிந்து மூன்றாவது மனைவியுடன் வாழ்பவர், குழந்தைகளும் உள்ளன[10], என்றதால், அக்குழந்தைகள் முந்தைய மனைவியர் மூலம் பிறந்திருக்கலாம். எப்படியிருந்தாலும், இத்தகைய புருசனை, இவள் எப்படித்தான் தேர்ந்தெடுத்து விரும்பினால் என்பது புதிராக உள்ளது.

© வேதபிரகாஷ்

28-06-2016

[1] http://www.maalaimalar.com/News/State/2016/06/27151650/1021751/Fireman-killed-sister-for-contact-with-married-boyfriend.vpf

[2] http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=94758

[3] தினத்தந்தி, சென்னை தீயணைப்பு வீரரின் வெறிச்செயல் திருமணமான வாலிபரை காதலித்த கல்லூரி மாணவி வெட்டிக்கொலை அண்ணனுக்கு வலைவீச்சு, பதிவு செய்த நாள்: செவ்வாய், ஜூன் 28,2016, 1:15 AM IST: மாற்றம் செய்த நாள்: செவ்வாய், ஜூன் 28,2016, 1:15 AM IST.

[4] தினமலர், திருமணமானவருடன் ஓடிய தங்கையை வெட்டிக்கொலைசெய்த தீயணைப்பு வீரர், பதிவு செய்த நாள்: ஜூன்.27, 2016: 23:43.

[5] http://www.dailythanthi.com/News/Districts/Thirunelveli/2016/06/28011532/Married-young-men-loved-Cut-the-murder-of-college.vpf

[6] தமிழ்.முரசு, நெல்லை அருகே பயங்கரம் கல்லூரி மாணவி வெட்டிக்கொலை : அண்ணன் வெறிச்செயல். பதிவு செய்த நாள்: ஜூன்.27, 2016.

[7] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=227254

[8] http://www.dinamalar.com/news_detail.asp?id=1552409

[9]

[10] தினமலர், திருமணமானவருடன் ஓடிய தங்கையை வெட்டிக்கொலைசெய்த தீயணைப்பு வீரர், பதிவு செய்த நாள்: ஜூன்.27, 2016: 23:43.

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , ,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: