வினுபிரியா தற்கொலை: பேஸ் புக்-வாட்ஸ்-அப் குற்றங்கள் பெருகி வருவதும், இளம்பெண்கள் பலிகடா ஆகும் நிலையும்!


வினுபிரியா தற்கொலை: பேஸ் புக்-வாட்ஸ்-அப் குற்றங்கள் பெருகி வருவதும், இளம்பெண்கள் பலிகடா ஆகும் நிலையும்!

whatsup-facebook - crimes16-06-2016 அன்று மார்பிங் செய்யப்பட்ட படம் பேஸ்புக்கில் பரவியது: சேலம் மாவட்டம் இளம்பிள்ளையை அடுத்த இடங்கணா சாலை ஸ்ரீபுவன கணபதி கோவில் தெருவை சேர்ந்தவர் அண்ணாதுரை (46). விசைத்தறி தொழில் செய்து வருகிறார். இவரது மகள் வினுபிரியா (வயது 21). பி.எஸ்.சி. படித்துள்ள இவர் இளம்பிள்ளையில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். அரசு வேலை எதிர்பார்த்திருந்தார். இவருக்கு திருமணம் செய்ய பெற்றோர் மாப்பிள்ளை பார்த்து வந்தனர். கடந்த ஜூன்,16ம் தேதி, பேஸ்புக்கில், வினுபிரியாவின் மார்பிங் செய்யப்பட்ட ஆபாச புகைப்படம் பரவியது. இந்த நிலையில் கடந்த ஜூன் 21-ந் தேதி அண்ணாதுரையின் நெருங்கிய உறவினர் ஒருவருக்கு வினுப்பிரியா மைதிலி என்ற பேஸ்புக் ஐ.டி.யில் இருந்து நட்பு வட்டத்தில் இணைய கேட்டு ஒரு மெசேஜ் வந்தது. அது வினுப்பிரியாவின் ஐ.டி. என்று நினைத்த உறவினர் அதனை ஏற்றுக்கொண்டு அந்த ஐ.டி.யை திறந்து பார்த்தார். அப்போது மார்பிங் செய்யப்பட்ட வினு பிரியாவின் ஆபாச படங்கள் அதில் இருந்தது. அதிர்ச்சி அடைந்த உறவினர் இதுகுறித்து அண்ணாதுரையிடம் கூறினார். இதை தொடர்ந்து அண்ணாதுரை மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் புகார் கொடுத்தார். இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க எஸ்.பி. உத்தரவிட்டதை தொடர்ந்து மகுடஞ்சாவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் விசாரணை நடத்தி வந்தார்.

Vinupriya photos - lamenting parents21-06-2016 அன்றில் வாட்ஸ்அப்பில் பரவியது: வினுப்பிரியாவின் முகநூல் பக்கத்தில் உள்ள படத்தை வெட்டி ஒட்டி ஆபாசமாக சித்தரிக்கப்பட்டுள்ளது தொடர்பாக மகுடஞ்சாவடி காவல் நிலையம் மற்றும் சங்ககிரி டிஎஸ்பி அலுவலகத்தில் வினுப்பிரியா புகார் தெரிவித்துள்ளார்[1]. புகார் கொடுத்து ஒரு வாரம் கடந்தும் போலீசார் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்[2]. மர்ம நபர் மீண்டும் 26-06-2016 ஞாயிறு அன்று வினுப்பிரியா படத்தை வெட்டி ஒட்டி மற்றொரு ஆபாசப் படத்தை பதிவேற்றி உள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது[3]. ஆனால், நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், மமுடைந்து, அடுத்த நாள் 27-06-2016 அன்று வினுபிரியா தற்கொலை செய்து கொண்டாள். கடந்த வாரம் புகார் கொடுத்த போதே போலீசார் நடவடிக்கை எடுத்திருந்தால் ஒரு உயிரை இழந்திருக்க தேவையில்லை என்று வினுப்பிரியாவின் பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்[4]. காவல்துறையினரின் தாமதத்தினால் தான் இந்த தற்கொலை ஏற்பட்டுள்ளது என்று அவர்கள் போராட்டம் நடத்தினர்[5]. பெண்ணின் தந்தை அண்ணாதுரை, இந்த புகார் தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்த, தன்னிடம் இரண்டு ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போனை லஞ்சமாக பெற்றதாக குற்றம் சாட்டியுள்ளார்[6].

whatsup-facebook - crimes-vinupriyaமொபைல்வாங்கியது யார்?[7]: சேலம் மாநகர சைபர் க்ரைம் போலீசில், வினுபிரியாவின் தந்தை அண்ணாதுரை தலைமையில் புகார் அளிக்க சென்றனர். அப்போது, குற்றவாளிகளை கண்டறிய, புதிய மொபைல் போன் வாங்கித் தரும் படி, சைபர் க்ரைம் ஏட்டு சுரேஷ், கேட்டுள்ளார். அதை வாங்கிக் கொடுத்த போதும், பேஸ்புக்கில் வினுப்பிரியா மார்பிங் படம் பரவுவது தடுக்கப்பட வில்லை. வினுபிரியா தற்கொலை செய்து கொண்டதை அடுத்து, பெற்றோர் அளித்த பகீர் குற்றச்சாட்டு குறித்து, 27-06-2016 அன்று முன்தினம் மாலையில் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில், சைபர் க்ரைம் ஏட்டு சுரேஷ், புதிய மொபைலை லஞ்சமாக பெற்றது தெரிய வந்துள்ளது. இதனால், அவர் விரைவில் சஸ்பெண்ட் செய்யப்படுவார் என உயரதிகாரிகள் தெரிவித்தனர். சோகத்தில், துக்கத்தில், சாவில் கூட இவ்வாறு லஞ்சம் கேட்பது தமிழகத்தில் தான் இருக்கும் போலிருக்கிறது. மனிதத்தன்மை கொஞ்சம் கூட இல்லாத இதைப் போன்றவர்கள் எப்படித்தான் தாயாரானோர்களோ அல்லது தயார் செய்தார்களோ தெரியவில்லை.

Vinupriyas dead body27-06-2016 திங்கள் கிழமை தற்கொலை: இதற்கிடையே வினுபிரியாவின் உறவினர்கள் அந்த பேஸ்-புக் ஐ.டி.யை முடக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். அதற்கு போலீசார் பேஸ்-புக் சர்வர் வெளிநாட்டில் உள்ளதால் உடனடியாக முடக்க முடியாது. குறைந்தபட்சம் 20 நாட்களாவது ஆகும் என்றும் தெரிவித்தனர். இந்த நிலையில் கடந்த ஜூன் 26-ந் தேதி மாலை அந்த ஐ.டி.யில் வினுப்பிரியாவின் படத்தை போட்டு தொடர்புக்கு என்று அண்ணாதுரையின் செல்போன் நம்பரும் பதிவு செய்யப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் வெறுத்துபோன அண்ணாதுரை சங்ககிரி டி.எஸ்.பி.யிடம் புகார் தெரிவிப்பதற்காக 27-06-2016 அன்று மனைவி மஞ்சுவுடன் வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார்[8]. அப்போது வினுப்பிரியா மற்றும் அவரது பாட்டி கந்தம்மாள் ஆகியோர் வீட்டில் இருந்தனர். மதியம் வீட்டின் இரு பக்க கதவுகளும் மூடப்பட்டிருந்ததால் அதிர்ச்சி அடைந்த கந்தம்மாள் அக்கம் பக்கத்தினரிடம் கூறினார்[9]. அவர்கள் வந்து கதவை உடைத்து பார்த்த போது வினுப்பிரியா தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்[10].

Vinupriyas suicide note- clear copyவினுபிரியாவின் தற்கொலை கடிதம்: தகவல் அறிந்து பதறியடித்த படி வீட்டுக்கு வந்த கணவன்-மனைவி இருவரும் மகளின் சடலத்தை கண்டு கதறி துடித்ததால் அந்த பகுதியே சோகத்தில் மூழ்கியது. இதற்கிடையே அங்கு விரைந்து சென்ற மகுடஞ்சாவடி போலீசார் வினுபிரியாவின் உடலை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அங்கு சோதனை செய்த போது போலீசாரிடம் வினுப்பிரியாக எழுதிய கடிதம் சிக்கியது. அதில், “முதலில் என்னை மன்னித்து விடுங்கள், என் வாழ்க்கை முடிந்த பின் வாழ்ந்து என்ன செய்யப்போகிறேன். எனக்கு வாழ பிடிக்கவில்லை. அம்மா, அப்பாவே என்னை நம்பாத போது நான் உயிரோடு இருந்து என்ன பிரயோஜனம், அவர்களே என்னை பற்றி கேவலமாக பேசுகிறார்கள். சத்தியமாக சொல்கிறேன், என் போட்டோவை நான் யாருக்கும் அனுப்பவில்லை. எந்த தப்பும் நான் செய்யவில்லை என்னை நம்புங்கள், மீண்டும் ஒரு முறை சாரி, சாரி”, இவ்வாறு அதில் எழுதப்பட்டிருந்தது. இது குறித்து மகுடஞ்சாவடி போலீசாரும், சைபர் கிரைம் போலீசாரும் தொடர்ந்து நடத்திய விசாரணையில், அண்ணாதுரை தனது ஸ்மார்ட் போன் வாட்ஸ் அப்பில் மகள் வினுப்பிரியாவின் படத்தை புரொபைல் படமாக வைத்துள்ளார். அந்த படத்தை தான் மர்ம நபர்கள் காப்பி செய்து மார்பிங் கில் ஆபாசமாக வெளியிட்டதும் தெரிய வந்தது.

Crying Vinupriyas parentsமுகம்மது சித்திக் பெண் கேட்டு வந்தது (ஜூன் இரண்டாவது வாரம்): வினுபிரியா, மேட்டூர் அருகே, காவேரி நகரைச் சேர்ந்த முகம்மது சித்திக், 21, என்பவரை காதலித்து வந்ததாகக் கூறப்பட்டது. கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு வினுபிரியாவை மேட்டூர் காவேரி நகரை சேர்ந்த முகமது சித்திக் (21) என்ற வாலிபர் பெண் கேட்டு வந்தார். அவர் வேறு மதம் என்பதால் பெண் கொடுக்க அண்ணாதுரை மறுத்தார். கடந்த ஜூன் 14-ந் தேதியும் அண்ணாதுரையிடம் போனில் தொடர்பு கொண்டு அந்த வாலிபர் பெண் கேட்டுள்ளார். இதையடுத்து வாட்ஸ்-அப்பில் ஆபாச படங்கள் பரவியதால் அவரைபிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அவரிடம் போலீசார் விசாரித்ததில், ‘நான், அது போன்ற தவறான செயலில் ஈடுபடவில்லை’ என, மறுத்துள்ளார்[11]. விசாரணையில் அவருக்கும் இதற்கும் தொடர்பு இல்லை என்று தெரிய வந்ததால் அவரிடம் எழுதி வாங்கி விட்டு அனுப்பி வைத்து விட்டனர் என்று செய்திகள் குறிப்பிட்டாலும், திடீரென்று அவ்வாறு ஒரு “முகமது சித்திக்”, ஒரு இந்து குடும்பத்தின் வீட்டில், நுழைந்து எப்படி பெண் கேட்க முடியும் என்பதை விவரிக்கவில்லை. அதென்னா, யார் வேண்டுமாலாலும், யார் வீட்டில் நுழைந்து பெண் கேட்க முடியுமா? இதே போல, ஒரு குப்புசாமி-ராமசாமி, முகமது சித்திக்கின் வீட்டில் நுழைந்து பெண் கேட்க முடியுமா? இது ஒரு புதிராகத்தான் உள்ளது. வினுபிரியாவின் காதலன் என கூறப்படும், மேட்டூரை சேர்ந்த முகம்மது சித்திக், இளம்பிள்ளையை சேர்ந்த, இரு தோழிகள் போலீசார் கண்காணிப்பு வளையத்துக்குள் வந்துள்ளனர்[12].

© வேதபிரகாஷ்

29-06-2016

[1] தமிழ்.ஒன்.இந்தியா, ஃபேஸ்புக்கில் ஆபாசமாக மார்பிங் செய்து போட்டோவை ஏற்றிய விஷமிகள்அவமானத்தில் இளம்பெண் தற்கொலை, By: Mayura Akilan, Updated: Tuesday, June 28, 2016, 11:28 [IST].

[2] தினகரன், மூக வலைதளத்தில் தன்னை ஆபாசமாக சித்தரித்து மர்ம நபர் படம் வெளியிட்டதால் இளம்பெண் தற்கொலை, Date: 2016-06-27@ 14:24:19

[3] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=227172

[4] http://tamil.oneindia.com/news/tamilnadu/young-girl-kills-self-over-facebook-harassment-256932.html

[5] http://tamil.webdunia.com/article/regional-tamil-news/young-girl-sucide-facebook-pornography-portrayed-photo-116062700032_1.html

[6] http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=168238

[7] தினமலர், வினுபிரியா தற்கொலை: கண்காணிப்பு வளையத்தில் மூவர் : அலைபேசி வாங்கிய ஏட்டு சஸ்பெண்ட்?, பதிவுசெய்த நாள், ஜூன்.29.2016, 00:16.

[8] தினகரன், வாட்ஸ்அப் புரொபைல் போட்டோவை திருடி மார்பிங் பேஸ்புக்கில் ஆபாசபடம் வெளியானது பள்ளி ஆசிரியை தூக்கிட்டு தற்கொலை, Date: 2016-06-28@ 00:10:52

[9] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=227249

[10] தமிழ்.வெப்துனியா, ஆபாசமாக சித்தரித்து பேஸ்புக்கில் புகைப்படம் : இளம்பெண் தற்கொலை, திங்கள், 27 ஜூன் 2016 (16:34 IST)

[11] http://www.dinamalar.com/news_detail.asp?id=1552386

[12] http://www.dinamalar.com/news_detail.asp?id=1553212

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , ,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: