தமிழகத்தில் மறுபடியும் குழந்தை விற்பனை, கடத்தல், தத்தெடுப்பு, ஏற்றுமதி முதலியன! [1]
தமிழகத்தில் குழந்தை விற்பனை, கடத்தல், தத்தெடுப்பு, ஏற்றுமதி முதலியன!: தமிழகத்தில் குழந்தை திருட்டு, கடத்தல், தத்தெடுப்பு போன்ற விவகாரங்கள் புதியவை அல்ல. தொட்டில் திட்டம் செயல்படுத்தியதிலேயே, அத்தகையவை நிகழ்ந்துள்ளன. கிருத்துவ மிஷினரிகளைப் பற்றி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அனாதை இல்லங்களில் குழந்தைகளை வைத்து பற்பல விதங்களில் வியாபாரம் செய்து வருவது, கிருத்துவர்களுக்கு கைவந்த கலை. முகமதியர்களும் செய்து வருகின்றனர். ஆனால், மதரஸாக்களில் அவை அமுக்கப் படுகின்றன. அனாதை குழந்தைகள் வளர்ந்ததும், அவை, அடிமைகள் போலத்தான் நடத்தப் படுகிறார்கள். பிடோபைல்களாக வரும் அயல்நாட்டினருக்கு, விருந்தாக்கப் படுகின்றனர். “செக்ஸ் டூரிஸம்” போன்ற நிலைகளிலும் உபயோகப் படுத்தப் படுகின்றனர். எம்.என்.சி கம்பெனிகள் வந்த பிறகு, அக்கம்பெனிகளின் டைரக்டர்கள், இஞ்சினியர்கள், கன்செல்டென்டுகள் என்று வரும் நபர்களைத் திருப்தி படுத்தவும், இளம் பெண்கள் தேவைப் படுகின்றனர். பிறகு, தத்தெடுப்புப் போர்வையில், குழந்தைகள் ஏற்றுமதி செய்யப் படுகின்றன. வெளிநாடுகளில் அவை வளர்க்கப் படும் போது, அவர்களது தேவைக்களுக்கு ஏற்றப்படி வளர்க்கப் படுகிறார்கள்.
1989லிருந்து குழந்தை விற்பனை செய்த செவிலி: 30 வருடங்களாக பிறந்த குழந்தையை விற்பனை செய்து வருவதாக பெண் செவிலியர் ஒருவர் அமுதவள்ளி (50) பேசும் ஆடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது. இதுதொடர்பாக சம்பந்தபட்ட அந்த செவிலியரை கைது செய்து போலீசார் விசாரணை செய்தனர். அமுதவள்ளி பள்ளிப்பாளையம், பரமத்தி வேலூர், திருச்ச்செங்கோடு, ராசிபுரம், சேலம் போன்ற அரசு மருத்துவமனைகளில் வேலை செய்துள்ளாள். செவிலியிரின் ‘வாட்ஸ்-அப் ஆடியோ’ வைரலானதை தொடரந்து, சுகாரதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், அந்தப் பெண் கூறுவது குறித்து புகார் அளிக்க சுகாதார மற்றும் கிராமப்புற நலத்துறை துறையின் இயக்குனருக்கு உத்தரவிட்டார்.
ஆடியோவில் வெளியான விவரங்கள்: இதுகுறித்து வெளியாகியுள்ள அந்த ஆடியோவில்[1],
- குழந்தை இல்லாத ஒருவர் அந்த செவிலியரிடம் பேசுகிறார். செவிலியராக பணியாற்றிய தான், 10 ஆண்டுகளுக்கு முன்பு விருப்ப ஓய்வு பெற்றுள்ளதாகவும், 30 வருடமாக ஆண்டவன் புண்ணியத்தில் எந்த பிரச்சனையும் இல்லாமல் பிறந்த குழந்தைகளை விற்பனை செய்து வருவதாகவும் கூறுகிறார்[2].
- பிறந்த பெண் குழந்தைகள் ரூ.2.75 லட்சத்திற்கு விற்பனை செய்வதாகவும், குழந்தைகள் நிறமாகவும், அழகாகவும் இருக்கும்பட்சத்தில் ரூ.3 லட்சம் வரை விற்பனை செய்வதாக கூறுகிறார்[3].
- கருப்பாக்க இருந்தால் 3, அமுல் பேபி கணக்கில் அழகாக இருந்தால் 4 அதுக்கு மேல்…….[4]
- இதேபோல், புதிதாக பிறந்த ஆண்குந்தைகளுக்கு 3 லட்சத்திற்கு விற்பனை செய்வதாகவும், அழகாக இருந்தால், 3.75 முதல் 4 லட்சம் வரை விற்பனை செய்து வருவதாகவும் கூறுகிறார்.
- மேலும், அந்த பெண் ரூ.70 ஆயிரத்தில் பிறப்புச் சான்றிதழ் தயார் செய்து தருவதாகவும் கூறுகிறார்.
- தாராளமாக வெளிநாட்டிற்கும் எடுத்துச் செல்லலாம்.
இதற்கு பின்னணியில் பெரும் கும்பல் உள்ளதாக போலீசார் சந்தேகப்பட்டு வருகின்றனர்.
ஆடியோவில் பேசும் அந்த பெண் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் பணியாற்றியுள்ளார். இவர் மருத்துவமனை ஊழியர்களுடன் சேர்ந்து கொண்டு புதிதாக பிறக்கும் குழந்தைகளை விற்பனை செய்து வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. விசாரணையில், பள்ளிபாளையம், சேலம், பரமத்திவேலூர், ராசிபுரம் பகுதிகளில் நர்சாக பணியாற்றிய அமுதவள்ளி 2012-ம் ஆண்டு விருப்ப ஓய்வு பெற்றதும், அதன் பிறகு வறுமையில் வாடும் குடும்ப பெண்களிடம் இருந்து குழந்தைகளை வாங்கி, குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது. ராசிபுரத்தில் குழந்தை விற்பனை தொடர்பாக ஈரோடு தனியார் மருத்துவமனையை சேர்ந்த செவிலியர் பர்வினிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது[5]. குழந்தைகளை விற்று வந்த ராசிபுரத்தைச் சேர்ந்த செவிலியர் அமுதா தகவலை அடுத்து பர்வினிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்[6].
புரோக்கர் பர்வீன், ஹசீனா, நிஷா, அருள்சாமி என்று புரோக்கர் பட்டியல் நீள்கிறது: கொல்லிமலையை சேர்ந்த ஆம்புலன்ஸ் டிரைவர் ஒருவரிடம் இருந்து 2 பெண் குழந்தைகளை வாங்கி, அந்த குழந்தைகளின் பெற்றோருக்கு தலா ரூ.1½ லட்சம், ரூ.2 லட்சம் கொடுத்ததும், அந்த குழந்தைகளை ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையத்தை சேர்ந்த பெண் ஒருவரிடம் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு லட்சக்கணக்கில் பேரம் பேசி விற்பனை செய்ததும் விசாரணையில் தெரியவந்தது[7]. சேலம் அன்னதானப்பட்டியை சேர்ந்த உறவினர் ஒருவரிடம் இருந்து குழந்தையை வாங்கி, ஓமலூரில் பதிவு செய்து மேட்டூரை சேர்ந்த ஒருவரிடம் விற்றுள்ளார். இதையடுத்து அமுதவள்ளி, ரவிச்சந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்[8]. இவர்களுக்கு உடந்தையாக செயல்பட்ட கொல்லிமலை அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆம்புலன்ஸ் டிரைவர் முருகேசன், ஈரோட்டை சேர்ந்த புரோக்கர் பர்வீன், ஹசீனா, நிஷா, லீலா, செல்வி அருள்சாமி ஆகிய 5 பேரும் கைது செய்யப்பட்டனர். முகமதிய பெண்கள் இதில் ஏன் ஈடுபட வேண்டும் அல்லது ஈடுபடுத்தப் படவேண்டும் என்பது திகைப்படைய செய்கிறது.
நாமக்கலில் குழந்தை விற்பனை மோசடி: குழந்தைகள் விற்பனை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், கொல்லிமலையில் 50 குழந்தைகள் மாயமாகியுள்ளது தெரியவந்துள்ளது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் குழந்தைகள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார், ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த பெற்றோர்களிடம் குழந்தைகளை வாங்கி தமிழகம் முழுவதும் விற்பனை செய்து வந்தது தெரிகிறது. ஏழைகளாக இருந்தாலும், குழந்தைகளை விற்கும் அளவில் இருக்க மாட்டார்கள் என்பது உண்மை. ஆகவே, அதற்கும் மேலாக, ஆசைக் கட்டித் தான் இந்த வியாபாரம் நடந்துள்ளது என்றாகிறது. வெளிநாட்டு தத்தெடுப்பு எனும்போது, லட்சக்கணக்கில் காசு கிடைக்கிறது. ஆனால், குழந்தையை அடியோடு மறந்து விட வேண்டியது தான். முதல், ஒன்று-இரண்டு ஆண்டுகளுக்கு புகைப்படம் காட்டுவார்கள், பரிசுகள் அனுப்பி வைப்பார்கள். பிறகு ஆள்-அட்ரெஸ் தெரியாமல் மறைந்து விடுவர்.
© வேதபிரகாஷ்
05-05-2019
[1] என்டிடிவி.தமிழ், ‘30 வருடங்களாக பிறந்த குழந்தையை விற்று வருகிறேன்’.. செவிலியரின் அதிர்ச்சி ஆடியோ!, Press Trust of India | Updated: April 27, 2019 08:52 IST
[2] https://www.ndtv.com/tamil/selling-newborns-for-30-years-audio-of-woman-goes-viral-tamil-nadu-cops-probe-2028840
[3] India Today, Dark or Amul baby? Horrifying audio of woman selling newborns surfaces in Tamil Nadu, Web Desk, Chennai, April 25, 2019UPDATED: April 25, 2019 21:49 IST.
[4] https://www.indiatoday.in/crime/story/namakkal-rasipuram-shocking-audio-nurse-sells-babies-tamil-nadu-1510082-2019-04-25
[5] தினகரன், குழந்தை விற்பனை தொடர்பாக ஈரோடு செவிலியரிடம் விசாரணை, 2019-04-26@ 07:51:40
[6] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=490806
[7] தினத்தந்தி, குழந்தைகளை லட்சக்கணக்கில் பேரம் பேசி விற்ற நர்சு ‘வாட்ஸ்–அப் ஆடியோ’ வெளியானதால் சிக்கினார், பதிவு: ஏப்ரல் 26, 2019 04:15 AM
[8] https://www.dailythanthi.com/News/State/2019/04/26012640/Nurse-who-sold-billions-of-dollars-for-children.vpf
குறிச்சொற்கள்: அமுதவள்ளி, அமுதவள்ளி பள்ளிப்பாளையம், ஈரோடு, கடத்தல், குழந்தை கடத்தல், குழந்தை தத்தெடுப்பு, குழந்தை திருட்டு, குழந்தை விற்பனை, கொல்லிமலை, செவிலி, சேலம், தத்தெடுப்பு, திருச்செங்கோடு, பரமத்தி வேலூர், பரமத்தி வேலூர், பள்ளிப்பாளையம், பிறப்புச் சான்றிதழ், பெரியாரியம், பெரியாரிஸம், பெரியார், ரவிச்சந்திரன், ராசிபுரம்
7:56 முப இல் ஜூன்24, 2019 |
[…] [2] https://www.ndtv.com/tamil/selling-newborns-for-30-years-audio-of-woman-goes-viral-tamil-nadu-cops-probe-2028840 […]
8:06 முப இல் ஜூன்24, 2019 |
[…] [2] https://www.ndtv.com/tamil/selling-newborns-for-30-years-audio-of-woman-goes-viral-tamil-nadu-cops-probe-2028840 […]