Archive for the ‘அரை நிர்வாண கோலம்’ Category

“கேரளா லுங்கி கார்ல்ஸ்”, மற்றும் “டிரஸ் கோட்” : உடைக்கட்டுப்பாடு – வேண்டுமா, வேண்டாமா வாத-விவாதங்கள்!

ஜூன்8, 2016

கேரளா லுங்கி கார்ல்ஸ்”, மற்றும் டிரஸ் கோட்” : உடைக்கட்டுப்பாடு – வேண்டுமா, வேண்டாமா வாத-விவாதங்கள்!

female fan group from USA posed in Lungis -maheash

தங்களது தாய், சகோதரி, மனைவி, மகள் முதலியோர் எப்படி ஆடை அணிய வேண்டும், அணியக் கூடாது என்று பரிந்துரை முயற்சிகளில் ஈடுபடவில்லை: பிரபல நடிகைகள் முதல், பெண்ணியவாதிகள் வரை அப்படித்தான் நடந்து கொண்டனர். சிலர் கடவுளர்களே அப்படித்தானே உடையுத்திக் கொண்டுள்ளதாக சித்தரிக்கப் பட்டுள்ளன, நிர்வாணமாகக் கூட சிலைகள், விக்கிரங்கள் உள்ளனவே, அவற்றிற்கெல்லாம் உடை கட்டுப்பாடு ஒன்றுமில்லையா என்பது போன்ற கேள்விகள் எழுப்பி எழுதித்தள்ளினர். நல்லவேளை அவர்கள் தங்களது தாய், சகோதரி, மனைவி, மகள் முதலியோர் எப்படி ஆடை அணிய வேண்டும், அணியக் கூடாது என்று பரிந்துரை முயற்சிகளில் ஈடுபடவில்லை. ஒருவேளை அவர்களும் இதெல்லாம் எங்களது உரிமை என்று பேன்ட், லெக்கிங்ஸ், ஸ்லீவ்லெஸ், டி – ஷர்ட், மினி ஸ்கர்ட் மற்றும் டாப்ஸ் போன்ற உடைகளுடன் தெருவில் இறங்கியிருந்தால் என்ன செய்திருப்பார்கள் என்று தெரியவில்லை. முற்றும் துறந்த நடிகைகள் போன்றோ, முனி-ரிஷிக்கள் போன்றோ, சாதாரண மக்கள் இல்லை. நடிகையர், நாகரிக பெண்மணியர் குற்ப்பிட்ட இடங்களில் அவ்வாறு அரைகுறை ஆடைகள் அணிந்து உலா வரலாம், மற்ற இடங்களில் வந்தால் என்னாகும் என்பது அவர்களுக்கே தெரிந்தது தான். நடிகையர்கள் வாழ்க்கையை சாதாரண பெண்ணோடு ஒப்பிட முடியாது. இருப்பினும், இவர்கள் எல்லோரும் போதிக்க வந்து விடுவதே வேடிக்கையாக இருக்கிறது.

Kim Kardashian shows off her bump in a clinging black dress as she leaves lunch at La Scala in Beverly Hills

நட்சத்திர ஹோட்டல்கள், கிளப்புகளில் பின்பற்றப்படும்டிரஸ் கோட்: இந்திய ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் இந்த “டிரஸ் கோட்” பற்றி எழுதப்படாத விதிமுறைகள் தாம் பின்ப்பற்றப்படுகின்றன[1]. இதெல்லாம் ஹோட்டலுக்கு ஹோடல், ரெஸ்டேரென்டுக்கு ரெஸ்டாரென்ட், சாப்பிடும் இடம், உணவு முதலியவற்றிற்கு ஏற்றபடி மாறும் என்று கூறியும் “இதுதான் ஏற்புடைய உடை” என்று குறிப்பிட்டு சொல்லாமல் தப்பித்துக் கொள்கிறார்கள். பொதுவாக நவீன, மேற்கத்தைய உடைகளை அணிந்து கொண்டு வந்தால் ஒன்றும் கேட்பதில்லை. கோட்-சூட் போட்டுக் கொண்டு வரும் “பிசனஸ் கிளாஸ்” வகையும் உண்டு, அரைகுறை ஆடைகளுடன் வரும் நவநாகரிக வகைகளும் உண்டு[2]. பெண்கள் உடல் பாகங்கள், மார்பங்கள் தெரியும் படி எல்லாம் ஆடை அணிந்து கொண்டு வருகிறார்கள். அத்தகைய முறைகேடுகளை மேனாட்டு ஊடகங்களே எடுத்துக் காட்டியுள்ளன. அதாவது, அங்கேயே அத்தகைய கட்டுப்பாட்டு சிந்தனை இருக்கும் போது, இந்தியாவில் வேறு மாதிரி சிந்திப்பது சரியா-தவறா என்று அவர்களே புரிந்து கொள்ளலாம். ஆனால், வேடிக்கையென்னவென்றால், வேட்டிக் கட்டிக் கொண்டு சென்றாலோ, ஷூ போடாமல் சென்றாலோ உள்ளே அனுமதி கிடையாது.

female lawyers

நீதி மன்றங்களில் உடை கட்டுப்பாடு: உச்சநீதி மன்றம், உயர்நீதி மன்ற, மாஜிஸ்ட்ரேட் கோர்ட், டிரைபூனல் போன்ற நீதிமன்றங்களுக்கு நீதிபதிகள், வழக்கறிஞர்கள் கருப்பு கௌன் அணிந்து கொண்டு செல்கிறார்கள், வருகிறார்கள். ஆண் வழக்கறிஞர்கள்[3] மற்றும் பெண் வழக்கறிஞர்கள்[4] இப்படித்தான் உடையணிந்து வர வேண்டும் என்று “பார் கவுன்சில்” விதிமுறைகளில் சொல்லப்பட்டுள்ளன[5]. ஆங்கிலேயர் காலம் வரை நீதிபதி தலையில் கூட விக் எல்லாம் வைத்திருந்தால், பிறகு விட்டு விட்டார்கள். ஏன் வேறு நிறத்தில் இருக்கக் கூடாது அல்லது அது இல்லாமல் ஏன் நீதிமன்றத்தில் நுழையக் கூடாது என்று யாரும் கேட்பதில்லை.  ஆங்கிலேயர் காலத்தில் ஆரம்பித்த இந்த உடைமுறையை மாற்ற வேண்டும் என்று அவ்வப்போது, வழக்கறிஞர்களே கேட்டுப் பார்த்தாலும்[6], இதுவரை ஒன்றும் நடக்கவில்லை. 1685ல் இங்கிலாந்து அரசன் சார்லஸ் II இறந்தபோது, துக்கம் அனுஷ்டிக்க இத்தகைய உடை உபயோகித்ததாகவும், அதனையே வழக்கறிஞர்கள் பின்பற்றுவதாகவும் கூறப்படுகிறது[7]. எது எப்படியாகிலும் கருப்பு துக்கத்துடன் சம்பந்தப்பட்டது என்பது தெரிந்த விசயம்.

Kim Kardashian going to 5 star hotel for lunch

ஆபாசப்படங்கள், விளம்பரங்களின் நிலை என்ன? பெண்களின் மீது ஏன் அதிகமான குற்றங்கள் நடக்கின்றன என்று, அரசு வெளியிட்டிருந்த அறிக்கையின்[8] மீதான கட்டுரையை நான் ஏற்கெனெவே பதிவு செய்துள்ளேன்[9]. பெண்களை வைத்துக் கொண்டு சினிமா, கொச்சையான விளம்பரங்கள், ஆபாசப் படங்கள், புளூ பிளிம்கள் / ஊதா சினிமாக்கள், நடனங்கள், விபச்சாரம்,  என பல நிகழ்ச்சிகள், செயல்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. இவையெல்லாம் கூடாது, பெண்களை கேவலப்படுத்துவது, அசிங்கப்படுத்துவது, செக்ஸ்-பொருள்களாக மதிக்கிறது என்றால், அவற்றை ஏன் பெரிய கம்பெனிகளே ஊக்குவிக்கிறது? கோடிக்கணக்கில் பணத்தை செலவிட்டு, பதிலுக்கு பொருட்களை விற்று பணத்தை அள்ளுகிறது? அதில் பெண்களின் பங்கு இல்லாமல், ஒன்றும் நடக்காது. அத்தகைய விஷயங்களில் பெண்கள் ஈடுபடுகிறர்கள் எனும்போது, அதற்கு என்ன காரணம் என்று பெண்கள் கூற வேண்டும். ஆண்கள் தாம் காரணம் என்று கூறி தப்பித்துக் கொள்ள முடியாது. இல்லை வறுமை என்று பொருளாதார காரணத்தைச் சொல்ல முடியாது, ஏனென்றால், இன்று பணத்திற்காக மட்டுமல்லாது புகழிற்காக பணக்காரப் பெண்களே அத்தகைய விஷயங்களில் ஈடுபடுகிறார்கள். சும்மா இருக்கும் எந்த ஆணும் எந்த பெண்ணிடமும் சென்று செக்ஸ் வைத்துக் கொள் என்று கூறிக் கொண்டு செல்ல மாட்டான். பெண்ணும் அப்படியே ஒப்புக் கொள்ள மாட்டாள். ஆகவே மனோதத்துவ ரீதியில் ஆராய்ந்தால், அதன்படி விளக்கம் கொடுக்க வேண்டும், தீர்வு காண வேண்டும். குற்றவியல் என்று பார்க்கும் போது, மனோதத்துவ ரீதியில் எல்லா காரணங்களும் எடுத்துக் கொள்ளப் படும். பிறகு தான், முக்கியமான காரணம் எது என்று ஆராயப் படும். காலக்கட்டங்களில், குறிப்பிட்ட காரணி தான் காரணம் என்றால், அதனை அவர்கள் எடுத்துக் காட்டுவார்கள். அத்தகைய நிதர்சனத்தை, யதார்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். குற்றங்கள் ஏற்படாத முறையில் ஆடை அணிவது எப்படி என்பதனை பெண்கள் தான் வரையறுக்க வேண்டும். அவர்களே கூறிவிட்டால் பிரச்சினை இருக்காது.

actress-shriya-sivaji-function-09_720_southdreamz

முலைகளை / மார்பகங்களை, இடுப்பை, பெண்குறியைக் காட்டக் கூடாது என்று யாராவது சட்டத்தையா கொண்டு வர முடியும்?[10]: சமூகத்தில் ஏற்கெனவே ஏற்புடைது என்பதை வைத்துதான் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. ஒருசிலர், நூறு-ஆயிரம் பேர் மற்றவர்களை விட மாறுபடுகின்றனர் என்பதற்காக இருக்கின்ற சட்ட-திட்டங்களை மாற்றி, அதுதான் எல்லோருக்கும் பொறுந்து என்று திணிக்க முடியாது. “நாகரிகம்” என்றால் என்ன, “நாகரிகமாக உடை அணிவது என்றல் என்ன”  என்றெல்லாம் சொல்லிக் கொடுக்கவா வேண்டும்? இல்லை, முலைகளை / மார்பகங்களை, இடுப்பை, பெண்குறியைக் காட்டக் கூடாது என்று யாராவது சட்டத்தையா கொண்டு வர முடியும்? அப்படியும் எடுத்து வந்தால், எந்த அளவிற்கு காட்டலாம், காட்டக் கூடாது எனெல்லாம் வரையறுத்துக் கொண்டிருக்க முடியுமா? பிறகு, அதற்கும் நியாயம் கற்பித்து பேச ஆரம்பித்து விடுவார்கள். “நிர்வாணம்” என்றால் என்ன என்று பேசவந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. இன்று பொதுவாக, ஷாப்பிங் மால், பார்லர், நட்சத்திர ஹோட்டல்கள், ஏன் கல்லூரிகள்-பள்ளிகள் முதலிய இடங்களில் பெண்கள் எப்படி ஆடையுடுத்திக் கொண்டு வருகிறார்கள் என்பது தெரிந்த விசயமே.

© வேதபிரகாஷ்

08-06-2016

[1] DNA India, Fitting into a 5 star, Saadia Dhailey, Sat. 1 June 2013, 11.00 am IST.

[2] http://www.dnaindia.com/lifestyle/report-fitting-into-a-5-star-1842279

[3] Advocates appearing in the Supreme Court, high court, subordinate courts, tribunals or authorities must wear the dress prescribed, which must be sober and dignified. Male advocates must wear a black buttoned-up coat, chapkan, achkan or a black sherwani, and white bands with advocate’s gown or a black open-breasted coat, white shirt, white collar, stiff or soft, and white bands with advocate’s gown. In either case long trousers (white, black striped or grey) or dhoti must be worn.

http://www.lawyersclubindia.com/forum/DRESS-CODE-FOR-AN-ADVOCATE-1271.asp

[4] Women advocates must wear black and full or half sleeve jackets or blouses, a white collar, stiff or soft, with white bands with advocate’s gown. They may wear saris or long skirts (white, or black or any mellow or subdued colour without any print or design) or flare, or Punjabi dress (churidar kurta or salwar kurta, with or without dupatta), white or black.

http://www.lawyersclubindia.com/forum/DRESS-CODE-FOR-AN-ADVOCATE-1271.asp

[5] http://www.barcouncilofindia.org/about/professional-standards/rules-on-professional-standards/

[6]Black clothes absorb more heat causing immense inconvenience to advocates in the state, the petitioner said. The present dress code blindly follows the British colonial heritage, despite six decades of independence. The difficulties during the rainy season are equally tough. Even in Britain, the dress is not accepted in all courts, since 2008. http://www.newindianexpress.com/nation/article1494022.ece

[7] England when robes adopted in 1685 were the symbolic of mourning for King Charles II.

[8] http://ncrb.nic.in/; http://ncrb.nic.in/; http://ncrb.nic.in/CII2010/cii-2010/Table%20Contents.htm;

http://ncrb.nic.in/CII2010/cii-2010/table6.htm

[9] வேதபிரகாஷ், குழந்தைகள் / சிறுவர்சிறுமியர் இளம்பெண்கள் முதலியோர்கள் மீதான குற்றங்கள் – 2010: புள்ளி விவரங்கள், விளக்கம், விவாதம்,http://atrocitiesonindians.wordpress.com/2011/10/31/crimes-against-children-girls-women-2010/

[10] https://liberalizationprivatizationglobalization.wordpress.com/2012/01/06/dress-code-crime-women-rape-correlation/

“கேரளா லுங்கி கார்ல்ஸ்”, மற்றும் “டிரஸ் கோட்” என்று உசுப்பி விடும் சமூக வலைதளங்கள்!

ஜூன்8, 2016

கேரளா லுங்கி கார்ல்ஸ்”, மற்றும் டிரஸ் கோட்என்று உசுப்பி விடும் சமூக வலைதளங்கள்!

Srimanthudu-Lungi-Effect on USA Ladies

கேரளா லுங்கி கார்ல்ஸ்”, மற்றும் டிரஸ் கோட்: ஜூன் 5, 2016 அன்றிலிருந்து இணைதளங்களில் சுற்றிக் கொண்டிருக்கும் “கேரளா லுங்கி கார்ல்ஸ்” படம் பொய் தெரிய வந்துள்ளது[1]. கடந்த 2015-ல் வெளிவந்த மகேஷ் பாபு படம் ஒன்றில் லுங்கி அணிந்து அவர் வருவது போல காட்சி அமைக்கப்பட்டிருக்கும், இதைக்கொண்டாடும் வகையில் மகேஷ் பாபுவின் அமெரிக்க ரசிகைகள் லுங்கி அணிந்து கொண்டாடியதாக அப்போது வெளிவந்த புகைப்படம் காட்டப்படுகிறது[2] என்றும் எடுத்துக் காட்டியது. இவ்விசயம் ஆந்திராவில் தெரிந்ததாகவே இருக்கிறது[3]. வெப்துனியா, “ஜீன்ஸ் தற்போது பெண்கள், அதிலும் கல்லூரி மாணவிகளுக்கு தவிற்க முடியாத ஒரு ஆடையாக மாறிவிட்டது. இதற்கு கல்லூரி நிர்வாகம் தடை விதித்ததால் மாணவிகள் லுங்கி கட்டிக்கொண்டு வந்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்”, என்று செய்தியாக போட்டிருப்பது வேடிக்கையாக இருக்கிறது[4]. “தாங்கள் லுங்கி கட்டிக்கொண்டு வந்து, அந்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவேற்றியுள்ளனர். இந்த புகைப்படத்தை மாணவர்களும் அதிகமாக பரப்பி விட்டு அதனை தற்போது வைரலாக்கி உள்ளனர்”, என்று சரக்கை சேர்த்துள்ளது[5]. ஆனால், இது உண்மையான செய்தியாக இருக்க முடியாது, ஏனெனில், அவர்கள் ஒரு நடனத்திற்கு பயிற்சி மேற்கொண்டிருக்கலாம்என்று “சக்ஷி போஸ்ட்” எடுத்துக் காட்டுகிறது[6].

St Theresa 1

புகைப்படம் வதந்தியைப் பரப்பும் வகையில் விஷமிகளால் பரப்பட்டது: இதையெடுத்து, தினமலரும் இப்படி சொல்கிறது[7] – இப்படி ஆரம்பித்து, “அதைத் தொடர்ந்து, சமூகவலைதளத்தில், மக்கள் கொந்தளித்து தங்களுடைய எதிர்ப்புகளை பதிவு செய்யத் துவங்கினர். ஆனால், இது உண்மை இல்லை என்று ஒருவர் பதிவு செய்தார். லுங்கியுடன் மாணவியர் இருக்கும் படம் உண்மை தான். ஆனால் செய்தி தான் தவறு. தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு, ஸ்ரீமந்துடு என்ற படத்தில் லுங்கியுடன் நடித்தார். அதைப்பார்த்து, கடந்த ஆண்டு, ஆகஸ்ட் மாதம், அவரைப் போலவே, அமெரிக்காவில் உள்ள இந்திய மாணவியரும், லுங்கி அணிந்தபடி வெளியிட்டது தான் இந்த படம் என்று அந்த நபர் கூறியுள்ளார்.ஆனால், அதுவும் உண்மையில்லை என்று”, இப்படி முடித்துள்ளது[8]! புதிய தலைமுறை[9], “ஜீன்ஸ் தடைக்கு எதிராக கேரள கல்லூரி மாணவிகள் போராடுவதாக வெளிவந்துள்ள புகைப்படமாக, அந்தப் புகைப்படமே காட்டப்படுகிறது. மேலும், கேரள மாநிலம் தழுவிய அளவில் கல்லூரிகளில் ஜீன்ஸ் அணியத் தடை விதிக்கப்படவில்லை என்றும் தெரியவந்துள்ளது. ஆகவே, இந்த புகைப்படம் வதந்தியைப் பரப்பும் வகையில் விஷமிகளால் பரப்பட்டது என்றே கூறப்படுகிறது,” இவ்வாறு உண்மை நிலையினை எடுத்துக் காட்டியது[10].

St Theresa 2

ஶ்ரீமந்துடுவை தொடர்ந்த பிரேமம்: நிவின் பாலி [Nivin Pauly] என்பவர் எடுத்த “பிரேமம்” என்ற படத்தில் வந்த “நவீன் பாலி” போன்று லுங்கி கட்டிக் கொண்டு, போட்டோ எடுத்து சமூகவலைதளங்களில் பரப்பி வருவது கேரளாவில் வாடிக்கையாக உள்ளது. அதாவது, வேட்டி-லுங்கி கட்டுவது கூட நடிகர்கள் கட்டுவதால் பிரபலமடைகிறது போலும். இதனால், சென்ற வருடம், செயின்ட் தெரசா கல்லூரி மாணவிகள் ஓணம் விழாவின் போது லுங்கி கட்டிக் கொண்டு கல்லூரி விழாவில் பங்கு கொள்ள சென்றனர்[11]. இதனை “பிரேமம்-மேனியா” என்று குறிப்பிட்டு, அந்த புகைப்படங்களை பேஸ்புக்கில் பரப்பினர். ஆக இந்த வருடமும், அத்தகைய ஒரு போட்டோவைப் போட்டு, பேஸ்புக்கில் பரப்ப ஆரம்பித்துள்ளனர்.  ஷாருக் கானின் லுங்லி டேன்ஸையும் மக்கள் ஞாபகத்தில் வைத்திருப்பர். இதெல்லாம் லுங்கிகள் விற்பனைக்கு மறைமுக ஆதரவு மற்றும் விளம்பரமா என்று கூட யோசிக்க வேண்டியுள்ளது.

Nivin Pauly Facebook

வைரல், வைரலாக்கும் முறை என்றால் என்ன?: வைரஸ் என்பது ஒரு கிருமி, அதில் கெட்டது அதிகம், நல்லது குறைவு. பொதுவாக கிருகிகளால் வியாதி வருகிறது. அதுமட்டுமல்லாது, கிருமிகள் வேகமாக பரவு தன்மையினைக் கொண்டுள்ளன. அதனால், வைரஸ் போன்று மிகவேகமாக பரவுகிறது என்பதை “வைரல்” என்ற ஆங்கில பிரயோகத்தில் எழுத்தாளர்கள் உபயோகப்படுத்துகின்றனர். இதுவும் ஒரு கெட்டது, பொயானது, மக்களின் கவனத்தை தவறான திசைக்குத் திருப்புவது என்பதனால் ஒருவேளை, ஊடகக்காரர்களே “இந்த புகைப்படத்தை பரப்பி விட்டு அதனை தற்போது வைரலாக்கி உள்ளனர்”, என்று குறிப்பிட்டார்கள் போலும். நல்லதை விட, கெட்டது சுலபமாக மக்களைப் பிடித்துக் கொண்டு விடும் என்பதனையும் இது மெய்ப்பித்து விட்டது.

Lungi Keralas traditional dress

பொய் சொல்லி பேஸ் புக்கில் பிரபலம் அடைய தேவையில்லை: சமூக வலைதளங்களில் இப்படி தமாஷாகவும், விமத்தனமாவும், பல பொய்களை உண்மைகளைப் போன்று பரப்பி வருகின்றனர். ஏதாவது ஒரு படத்தைப் பார்த்து விட்டால் போதும், அது உண்மையா பொய்யா என்றெல்லாம் யோசிப்பதேயில்லை, உடனே ஷேர் செய்து பாப்பி விடுகிறார்கள். ஒரே ஆள் நிறைய ஐடிக்கள வைத்துக் கொண்டும் இந்த பரப்பு-பிரச்சார வேலைகள் செய்து கொண்டிருக்கிறார். சில நேரங்களில் கலவரம் ஏற்படக் கூடிய வகையில், படங்கள், வீடியோக்கள் பரப்பியதையும் நினைவில் கொள்ளலாம். பொதுவாக, சித்தாந்த ரீதியில் செயல்படுபவர்கள், இதைப் போன்று செய்து வருகிறார்கள். “போட்டோ-ஷாப்” என்றதை உபயோகப்படுத்தி, புகைப்படங்களை மாற்றி, உலவ விடுகின்றனர். அவை பார்ப்பதற்கு தத்ரூபமாக, உண்மை படம் போன்றே இருக்கும், ஆனால், கொஞ்சம் யோசித்துப் பார்த்தாலே, அவ்வாறு இருக்க முடியாது என்று எவரும் தீர்மானித்துக் கொள்ளலாம்.

Deepika and Sunny in lungi dress

உடைக் கட்டுப்பாடும், சமூகமும், தெய்வீகமும்: கற்பழிப்புகள் அதிகமாகிக் கொண்டிருக்கும் நிலையில் தான், பெண்கள் நாகரிகம் என்ற பெயரில் கண்டபடி ஆடைகள் உடுத்திக் கொண்டு வெளியில், பொது இடங்களில் வலம் வரக்கூடாது என்று வலியுருத்தப்பட்டது. ஆண்-பெண் கவர்ச்சி, ஈர்ப்பு மற்றும் இணைப்பு முதலியவை இயற்கையானவை என்றாலும், சமூகத்தில் அவற்றை கட்டுப் படுத்தி சடங்குகள் போன்றவற்றை வைத்து அங்கீகாரம் கொடுதுள்ளனர். அவற்றை எந்த சமூகமும், மதமும், சித்தாந்தமும் எதிர்ப்புத் தெர்விப்பதில்லை. ஆனால், அந்த கருத்தைக் கூட நவீன பெண்ணியத்துவ வீராங்கனைகள் உரிமை என்ற பெயரில் கடுமையாக சாடி எதிர்த்தனர். அக்கருத்தை வெளியிட்டவர்கள் இடைக்காலத்தவர், பிற்போக்குவாதிகள், பெண்களை அடிமைப்படுத்துகிறவர்கள், மனுவாதிகள் என்றெல்லாம் திட்டித் தீர்த்தனர். வரிந்து கொண்டு பேட்டிகள், வாத-விவாதங்கள், கட்டுரைகள் என்றெல்லாம் வெளிவந்தன. ஆனால், கற்பு, கற்பின் தன்மை, கற்பழிப்பக்கப்பட்ட பெண்கள், கற்பழித்த கொடூரர்கள் இவர்களைப் பற்றி குறைவாகவே பேட்டிகள், வாத-விவாதங்கள், கட்டுரைகள் என்றெல்லாம் வெளிவந்தன. இவர்களது ஆணவ, ஆக்ரோஷ, தீவிரவாத கருத்துரிமைகள், அவர்களது கருத்துரிமைகள் அடக்கப்பட்டு விட்டன.

© வேதபிரகாஷ்

08-06-2016

[1] http://www.ibtimes.co.in/reports-claiming-kerala-college-girls-wore-lungi-protest-against-jeans-ban-are-fake-681724

[2] http://www.telugupeople.com/news/article_00098921_Pic_TalkUSA_girls_Lungi_tribute_to_Srimanthudu.asp

[3] http://www.chitramala.in/maheshs-lungi-effect-on-usa-ladies-196731.html

[4] வெப்துனியா, லுங்கி கட்டிக்கொண்டு கல்லூரிக்கு வந்த மாணவிகள்: ஜீன்ஸ்க்கு தடை விதித்ததால் நூதன எதிர்ப்பு!, செவ்வாய், 7 ஜூன் 2016 (14:45 IST)

[5] http://www.tamil.webdunia.com/article/national-india-news-intamil/a-college-in-kerala-recently-banned-jeans-so-girls-wearing-lungi-116060700032_1.html

[6] Sakshipost, Picture of Kerala college girls clad in ‘lungi’ goes viral, Tuesday, 07 JUNE 2016 09:50.

[7] தினமலர்,  கேரள லுங்கி கேர்ள்ஸ்பாடாய்படுத்தும் சமூகதளம், பதிவு செய்த நாள் : ஜூன் 07,2016,22:20 IST.

[8] http://www.dinamalar.com/news_detail.asp?id=1537727

[9] புதியதலைமுறை, ஜீன்ஸ் தடைக்கு எதிராக லுங்கி அணிந்து போராட்டம்: இணையத்தைக் கலக்கும் மாணவிகள் புகைப்படம், பதிவு செய்த நாள் : June 07, 2016 – 10:08 AM, மாற்றம் செய்த நாள் : June 07, 2016 – 10:12 AM

[10] http://tv.puthiyathalaimurai.com/detailpage/news/india/7/29764/girls-from-kerala-college-protesting-against-a-ban-on-jeans-is-fake

[11] But, questions are also being raised over whether the news was true. It could be that the girls were preparing for a dance performance or could be aping Mahesh Babu’s Srimanthudu act. It may be recalled that, during the last year’s Onam festivities, girls from St Teresa’s College, Ernakulam went to campus clad in ‘lungis’. The girls were dressed like ‘Premam’ Nivin Pauly.

http://www.sakshipost.com/index.php/news/national/82599-picture-of-kerala-college-girls-clad-in-lungi-goes-viral.html

திருமணத்துக்கு முன் செக்ஸ் வைத்துக் கொள்வதில் தவறில்லை என்று சொன்ன செக்ஸ் எக்ஸ்ப்ர்ட் இப்பொழுது சொல்வது – 18 வயதில் இருந்தே அனைத்தும் துவங்க வேண்டும்!

மார்ச்20, 2013

திருமணத்துக்கு முன் செக்ஸ் வைத்துக் கொள்வதில் தவறில்லை என்று சொன்ன செக்ஸ் எக்ஸ்ப்ர்ட் இப்பொழுது சொல்வது – 18 வயதில் இருந்தே அனைத்தும் துவங்க வேண்டும்!

A girl participated in the anti-rape campaign Chennai - The Hindu photo

சென்னையில் கற்பழிப்பு எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்ட ஒரு பெண்மணி – “இது கற்பழிப்பிற்காக அல்ல” என்பதனை மார்பிலும் வயிற்றிலும் பார்த்து படிக்க வேண்டுமாறு இருக்கமான டி-சர்ட் அணிந்து வந்ததாக “தி ஹிந்து” படத்தை வெளியிட்டுள்ளது.

  • இப்படி அம்மணிகள் தமிழகத்தில் உலா வரலாமா?
  • அடலேறும் மடலேறுகள் என்ன செய்வார்கள்?
  • இல்லை, அன்று “கண்ணில் ஆடும் மாங்கனி, கையில் ஆடுமோ” என்று தமிழ் கவிஞர் பாடியதை போல பாடி காட்டுவரோ,
  • பாடி கேட்பரோ,
  • இல்லை பறித்தே விடுவரோ?

செக்ஸ்-எக்ஸ்பர்ட் குஷ்பு சொல்வது: செக்ஸில் திறமைசாலியாகி பண்டிதையாகி வரும் குஷ்பு, பல நேரங்களில் பலவிதமான வெளிப்படையான, பரந்த, விசாலமான, ஆழ்ந்த கருத்துகளைச் சொல்லிவருகிறார். ஏனெனில், அவருக்கு அவ்வாறு கூற உரிமை உண்டு, கருத்து சுதந்திரம் உண்ரடு! பெண்ணியத்தின் மறு அவதாரமாக, இந்த பெண்மணி பல கருத்துக்களை சொல்லி வருகிறார்.

  • திருமணத்திற்கு முன்பாக செக்ஸ் வைத்துக் கொள்ளலாம் என்றேல்லாம் கூறியிருக்கிறார்.
  • இப்பொழுது, செக்ஸுக்கான வயதை 18ல் இருந்து 16க குறைப்பதால் கற்பழிப்பு குற்றங்கள் குறையும் என்று எப்படி நினைக்க முடியும்.
  • அது தவறானது. அது கற்பழிப்பு குற்றங்கள் குறைக்க வழி வகை செய்யாது. இந்தியாவில் வயது வித்தியாசம் இன்றி கற்பழிப்பு சம்பவங்கள் நடக்கின்றன. நாட்டில் எங்கோ உள்ள ஒரு மூலையில் 45 வயது பெண் கூட கற்பழிக்கப்படுகிறாள்[1].
  • வயதை கூட்டுவதாலோ, குறைப்பதாலோ எந்த வித்தியாசமும் ஏற்படாது.
  • ஒருவருக்கு வாக்களிக்கும் வயது 18க உள்ளது.
  • அதனால் அந்த வயதில் இருந்தே அனைத்தும் துவங்க வேண்டும் என்றார்[2].

இதுதான் அந்த அம்மாவின் “லாஜிக்”. ஓட்டுப்போடும் வயது வந்தால், எல்லாமே வந்து விடுமா?

Girls at Chennai pub

சென்னை பப்பில் பெண்கள் – என்று வெளியிடப்பட்டுள்ள புகைப்படம்.

இனி கற்பு பற்றி என் மனதுக்கு பட்டதை சுதந்திரமாக பேச முடியும்: 2010ல் தீர்ப்பு வந்த உடனே, “இனி கற்பு பற்றி என் மனதுக்கு பட்டதை சுதந்திரமாக பேசுவேன்”, என்று நடிகை குஷ்பு கூறியுள்ளார்[3]. கடந்த 2005ம் ஆண்டு நடிகை குஷ்பு வார இதழ் (இந்தியா டுடே செப்டம்பர் 2005) ஒன்றிற்கு அளித்த பேட்டியில், திருமணத்துக்கு முன் செக்ஸ் வைத்துக் கொள்வதில் தவறில்லை. அப்படி வைத்துக் கொள்ளும்போது கர்ப்பமாகாமலும், பால்வினை நோய்கள் பரவி விடாமலும் பெண் தன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டும், என்று குறிப்பிட்டிருந்தார்[4]. குஷ்புவின் இந்த பேட்டி தமிழ் கலாச்சாரத்திற்கு விரோதமானது என எதிர்ப்பு கிளம்பியது. ஆனால், தமிழ் நடிகைகள் அரை நிர்வாணமாக நடிப்பதைப் பற்றி யாரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. ஸ்ரேயாவே, மேடையில் கருணாநிதிக்கு முன்பாக, அரை நிர்வாண ஆடையில் வந்ததில்லாமல், கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து, பெண்மையைத் தூக்கிப் பிடித்தார்.

Ethiral college girls - Film promotion fest

எதிராஜ் கல்லூரியில் வியாபார விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண்மணிகள்.

பொத்துக் கொண்டு வந்த தமிழர்கள் வழக்குப் போட்டார்கள்[5]: தமிழகம் முழுவதும் குஷ்புவுக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டன. அவற்றை ரத்து செய்யக்கோரி குஷ்பு தரப்பு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு சுப்ரீம்கோர்ட்டில் நடந்து வருகிறது. சமீபத்தில் இவ்வழக்கு விசாரணை முடிவில் கருத்து தெரிவித்த சுப்ரீம் கோர்ட், குஷ்பு பேசியதில் தவறே இல்லை. மேஜர் ஆன ஆணும் பெண்ணும் விருப்பம் இருந்தால் செக்ஸ் வைத்துக் கொள்ளலாம், என்று கூறியிருந்தது.

Even in the societal mainstream, there are a significant number of people who see nothing wrong in engaging in premarital sex. Notions of social morality are inherently subjective and the criminal law cannot be used as a means to unduly interfere with the domain of personal autonomy. Morality and Criminality are not co-extensive[6].

சுப்ரீம் கோர்ட்டின் இந்த கருத்துக்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில் நீதிபதிகளின் இந்த கருத்து பற்றி நடிகை குஷ்பு பேட்டியளித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், இனி கற்பு பற்றி என் மனதுக்கு பட்டதை சுதந்திரமாக பேச முடியும் என நினைக்கிறேன். நமது நாட்டில் பேச்சு சுதந்திரம் இன்னும் வலுவாக இருப்பதாகவே கருதுகிறேன். மேலும் நான் இந்த அளவுக்கு போராட காரணமே, எனது மகள்களுக்கு நான் மனஉறுதி கொண்டவள், அதற்காக நீங்கள் பெருமைப்பட வேண்டும் என்பதை காட்டுவதற்காகத்தான், என்று கூறியுள்ளார்.

According to me, sex is not only concerned with the body; but also concerned with the conscious. I could not understand matters such as changing boyfriends every week. When a girl is committed to her boyfriend, she can tell her parents and go out with him. When their daughter is having a serious relationship, the parents should allow the same. Our society should come out of the thinking that at the time of the marriage, the girls should be with virginity. None of the educated men, will expect that the girl whom they are marrying should be with virginity. But when having sexual relationship the girls should protect themselves from conceiving and getting venereal diseases[7].

மேஜர் ஆன ஆணும் பெண்ணும் விருப்பம் இருந்தால் செக்ஸ் வைத்துக் கொள்ளலாம்: குஷ்பு வழக்கில் பாலகிருஷ்ணன் (தீபக் வர்மா மற்றும் பி.எஸ். சௌஹான்) இப்படி தீர்ப்பு வழங்கினார்[8]. இப்படி சுப்ரீம் கோர்ட் கருத்து தெரிவித்தபோது, ஆண்-பெண் எப்பொழுது மேஜர் ஆவர்கள், மேஜர் ஆகும் வயது என்ன என்று யாரும் விவாதிக்கவில்லை. ஆனால், இப்பொழுது, தில்லி-ரேப்பிற்குப் பிறகு, விவாதம் வந்திருக்கிறது. இருப்பினும் இதைப்பற்றி பேச்சில்லை. தீர்ப்பில் மின்னணு ஊடகத்தைக் கண்டித்தனரேயன்றி[9], நடிகைகள் ஆபாசமாக நடிப்பதைப் பற்றி ஒன்றும் கூறவில்லை.

Chennai college girls

இவர்களும் சென்னை கல்லூரி மாணவிகள் தாம் – பேற்றோர்கள் மனம்!

18 வயதில் இருந்தே அனைத்தும் துவங்க வேண்டும்: குஷ்பு இப்படி சொன்னால், அனைத்தும் எப்படி 18 வயதிலிருந்து துவங்கும், பல பெண்களுக்கு, சிறுமிகளுக்கு, 7 முதல் 13 வரையில் கூட வயது வந்து விடுகிறதே? அதற்கென்ன செய்வது? முன்பு கூட, திருமண வயது குறித்து விவாதம் வந்தது. 25, 20 என்றெல்லாம் சொல்லி பிறகு 18ஆக குறைக்கப்பட்டது. பிறகு “வயது வந்தவர்களுக்கு மட்டும்” என்று சினிமாக்கள் ஏன் எடுக்க வேண்டும்?

  • வசனங்களில், ஜோக்குகளில் அத்தகைய கட்டுப்பாடு இல்லையே?
  • பப்புகளில் பள்ளி-கல்லூரி மாணவிகள் உள்ளனரே?
  • மதுக்கடைகளில் அவர்களும் இருக்கின்றனரே?
  • பேருந்துகளில், மாணவர்களுக்குப் போட்டியாக, கலாட்டா செய்து கொண்டு போகிறார்களே?
  • சைட் அடிப்பதைப் பற்றி வெளிப்படையாக மாணவிகள் பட்டி மன்றம் என்ற போர்வையில் டிவிசெனல்களில் வந்து கத்துகிறார்களே?

The Leather Bar, Nungambakkam High Road, Chennai

சென்னை நுங்கம்பாக்கத்தில் ஒரு பப்பில் எடுக்கப்பட்ட புகைப்படமாம்.

இந்திய விரோதிகளின் சதிகள்: அந்நிய சரக்கு (ஊசி முதல் எல்லாம் அடங்கும்) விற்கவேண்டும் என்பதற்காக, இந்திய சமூக நிறுவனங்கள் எப்படி மாற்றப்படுகின்றன, இந்திய நலன்களுக்கு எதிராக உபயோகப்படுத்தப் படுகின்றன என்பதை கவனிக்கலாம். அரசியல் முதல் சினிமா வரை, குடி முதல் கூத்தாடி வரை, குத்தாட்டம் முதல் கூத்தாட்டம் வரை இப்படி அனைத்திலும் மேனாட்டு சீரழிவுகளை அறிமுகப்படுத்திக் கொண்டு, வாழும் வாழ்க்கையினை இந்தியர்கள் என்றுதான் ஒதுக்குவார்களோ?
© வேதபிரகாஷ்

20-03-2013


[4] Subsequently, `Dhina Thanthi’, a Tamil daily carried a news item on 24.9.2005 which first quoted the appellant’s statement published in `India Today’ and then opined that, “…it had created a sensation all over the State of Tamil Nadu. This news item also reported a conversation between the appellant and a correspondent from `Dhina Thanthi’, wherein the appellant had purportedly defended her views in the following manner (rough translation reproduced below): "The persons who are protesting against my interview, are talking about which culture? Is there anyone who does not know about sex in Tamil Nadu? Is there anyone who does not know about AIDS? How many men and women do not have sex before marriage? Why are people saying that after the marriage the husband and wife should be honest and faithful to each other? One should have confidence in the other, only to avoid the mistakes from being committed. If the husband, without the knowledge of the wife, or the wife, without the knowledge of the husband, have sex with other persons, if a disease is caused through that, the same will affect both the persons. It will also affect the children. Only because of this, they are saying like that”. குஷ்பு (வாதி)– கன்னியம்மாள் மற்றும் இன்னொருவர் (பிரதிவாதி) – http://indiankanoon.org/doc/1327342/

[9] It is, therefore, not only desirable but imperative that electronic and news media should also play positive role in presenting to general public as to what actually transpires during the course of the hearing and it should not be published in such a manner so as to get unnecessary publicity for its own paper or news channel. Such a tendency, which is indeed growing fast, should be stopped. We are saying so as without knowing the reference in context of which the questions were put forth by us, were completely ignored and the same were misquoted which raised unnecessary hue and cry.

அரை நிர்வாண கோலத்தில் பெண் கைதி தகராறு!

ஜூலை6, 2010

அரை நிர்வாண கோலத்தில் பெண் கைதி தகராறு!

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=33023

திருட்டு வழக்கில் சிறையில் அடைக்கப் பட்டப் பெண்: சேலம் : சேலம் பெண்கள் கிளை சிறை அதிகாரிகள் நிர்வாணப்படுத்தி “ப்ளு பிலிம் ‘ எடுப்பதாகக் கூறி, அரை நிர்வாணமாக ரோட்டில் நின்று தகராறில் ஈடுபட்ட பெண் கைதியால், பரபரப்பு ஏற்பட்டது. சேலம், பெரியகொல்லப்பட்டியை சேர்ந்தவர் சாந்தி. இவரது மகள் மைதிலி(25). இவரது கணவர் சரவணன். மைதிலி மீது, அரூர், ராசிபுரம், சேலம் உள்ளிட்ட இடங்களில், திருட்டு வழக்கு உள்ளது. ஆறுக்கும் மேற்பட்ட திருட்டு வழக்கில் சிக்கிய மைதிலியை, போலீசார் கைது செய்து, அஸ்தம்பட்டியில் உள்ள பெண்கள் கிளை சிறையில் அடைத்தனர். பெண்கள் கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மைதிலியை, அவரது தாய் சாந்தி அடிக்கடி பார்த்து செல்வது வழக்கம்.

தாய்-மகள் போதைப் பொருட்கள் விற்பதாக போலீஸ் சொல்கிறது: சில வாரங்களுக்கு முன் சாந்தி, பெண்கள் கிளை சிறைக்கு வந்து மகள் மைதிலியை சந்தித்தார். சிறைக்குள் பெரிய பொட்டலம் விழுந்தது. “பாரா’ சென்ற காவலர்கள் பொட்டலத்தை பிரித்து பார்த்து போது, அதில் “ஹான்ஸ், பான்பராக், புகையிலை’ உள்ளிட்ட போதை வஸ்துகள் இருந்தன. கிளை சிறைக்கு வெளியே சுற்று சுவருக்கு பின்னால் இருந்து, சாந்தி போதை வஸ்து பொட்டலம் போட்டதை போலீசார் கண்டு பிடித்தனர். சிறைக்குள் உள்ள மகள் மைதிலி மூலமாக போதை பொருட்களை விற்பனை செய்ய, சாந்தி சுற்றுச் சுவருக்கு வெளியே இருந்து பொட்டலம் வீசியது போலீஸார் விசாரணையில் தெரியவந்தது. சிறைக்குள் விதி முறை மீறி போதை வஸ்து பொட்டலம் வீசிய சாந்தியை, போலீஸார் கைது செய்து கிளை சிறையில் அடைத்தனர். வழக்கு சம்பந்தமாக மைதிலியை ராசிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த, நாமக்கல் போலீஸார் சேலம் பெண்கள் சிறைக்கு வந்தனர். சிறையில் இருந்து வெளியே அழைத்து வரப்பட்ட மைதிலி, வேனில் ஏறாமல், சேலையை அவிழ்த்து வீசினார். அரை குறை உடையுடன், கூச்சலிடத் துவங்கினார். போலீசார், மைதிலியின் அரை நிர்வாண கோலத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

சேலம்-சிறையில்-பெண்-கைதி-தகராறு

சேலம்-சிறையில்-பெண்-கைதி-தகராறு

போலீஸ் மீது குற்றம் சொல்லுதல்: சிறை காவலர்கள் மைதிலியை உள்ளே அழைத்து செல்ல அனுமதி மறுத்தனர். “சிறையில் இருந்து கைதியை வெளியே அழைத்து சென்றால், நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி விட்டு அழைத்து வந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்க முடியும்’ என, தெரிவித்து விட்டு சிறை கதவை மூடி விட்டனர். இதனால், அரை நிர்வாண கோலத்துடன் மைதிலி ரோட்டில் நின்று, கிளை சிறை அதிகாரிகள் மீது சரமாரியாக புகார் தெரிவித்தார். “சிறைக்குள் பெண் கைதிகளை சித்ரவதை செய்கின்றனர். பார்வையாளர்களிடம் லஞ்சமாக பணம் வாங்குகின்றனர். கேள்வி கேட்கும் கைதிகள் மீது பொய் வழக்கு போடுகின்றனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, மைதிலி சிறை முன்பு நின்று கூச்சலிட்டபடி இருந்தார்.

Salem-woman-in-jail

Salem-woman-in-jail

பெண் கைதி குற்றம் சொல்வது உண்மையா-பொய்யா? பெண் கைதி மேலாடை இல்லாமல், ரோட்டில் நின்று பேராட்டத்தில் ஈடுபட்டதை கண்டு பொதுமக்கள் கூட்டம் கூடியது. “”என் மீதும், என் தாய் மீதும் வேண்டுமென்றே பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆடையை களைந்து, போட்டோ, வீடியோ எடுத்து சிறை அதிகாரிகள் சோதனை செய்கின்றனர். ஏன் என்று கேட்டால், “ப்ளூ பிலிம்’ எடுத்து வெளியிடுவதாக மிரட்டுகின்றனர். கைதிகளை பார்க்க வருபவர்களிடம் 300, 400 ரூபாய் லஞ்சமாக பணம் கேட்கின்றனர். நாங்களே சிறைக்குள் அடைபட்டு கிடக்கிறோம். எப்படி, சிறை அதிகாரிகளுக்கு லஞ்சமாக பணம் கொடுக்க முடியும்? சித்ரவதை செய்யும் சிறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பொய் வழக்கு போடும் சிறை அதிகாரிகள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றார். அஸ்தம்பட்டி போலீசார் சிறை அதிகாரிகளிடம் பேசி, அரை நிர்வாண கோலத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண் கைதி மைதிலியை சிறைக்குள் அழைத்து சென்றனர்.

சமீப காலத்தில், சிறைகளில் கிடைக்கும் பொருட்களைப் பற்றிய செய்திகளைப் படித்தால் திகைப்பாக இருக்கிறது. பொதுவாக போலீஸாருக்குத் தெரியாமல், சிறைக்குள் எந்த பொருளும் சென்றுவிட முடியாது. அந்நிலையில், இவ்வாறு செல்ஃபோன், சிகெரெட், பீடி, பான்பராக், போதை பொருட்கள் முதலியன விற்க்கப்படுகின்றன என்றால், போலீஸரின் ஒத்துழைப்பும் அதிலலிருக்கிரது எனத்தெரிகிறது. மேலும் இங்கு, இந்த பெண் கைதி குற்றாஞ்சாட்டுவது திகைப்பாக இருக்கிறது. முதலில், ஆடையை களைந்து, போட்டோ, வீடியோ எடுத்து சிறை அதிகாரிகள் சோதனை செய்கின்றனர் என்று குற்றஞ்சாட்டி, பிறகு, ஏன் என்று கேட்டால், “ப்ளூ பிலிம்’ எடுத்து வெளியிடுவதாக மிரட்டுகின்றனர், என்று குற்றாஞ்சாட்டுவது சாதாரண விஷயமாகத் தெரியவில்லை.

prison-inmate-on-accusing-police

prison-inmate-on-accusing-police