ஆண்-பெண் உறவுகளின் சீரழிவு: தாம்பத்திய எல்லைக்களைத் தாண்ட வைக்கும் பண ஆசை, உடலுறவுகளை மீறும் கொலைகள் (2)
இதன் முதல் பகுதியை இங்குப் படிக்கவும்[1].
சிறைலிருக்கும் சந்திரலேகா ஜாமீன் மனு தாக்கல் செய்தது (டிசம்பர் 2014): சென்னை மதுரவாயலில் வசிந்து வந்தவர் ரொனால்டு பீட்டர் பிரின்சோ. பாளையங்கோட்டையை சேர்ந்த சினிமா தயாரிப்பாளரான இவர், கடந்த ஜனவரி 2014 மாதம் காணாமல் போனார். இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார், வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு சென்னை மதுரவாயல் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த போலீசார், ரொனால்டு பீட்டர் பிரின்சோ கொலை செய்யப்பட்டதை கண்டு பிடித்தனர்[2]. அவருடன் மனைவியாக வாழ்ந்து வந்த நடிகை சுருதி என்ற சந்தர்லேகா, உமாசந்திரன், ஜான் பிரின்சன் உட்பட பலர் சேர்ந்து கடந்த ஜனவரி 18–ந்தேதி 2014 இந்த கொலையை பரப்பாடி-இலங்குளம் பிரதான தெரு, மதுரவயல் வீட்டில் [Parappaadi-Ilankulam Main Road in Maduravoyal on January 18.2014] செய்துள்ளதாக வழக்குப்பதிவு செய்தனர்[3]. இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட சுருதி என்ற சந்தர்லேகாவை பல இடங்களில் போலீசார் தேடியும் கைது செய்ய முடிய வில்லை. கடந்த செப்டம்பர் மாதம் சுருதியை போலீசார் கைது செய்தனர்[4]. இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க கோரி சென்னை ஐகோர்ட்டில், சுருதி மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது[5]:
இளம்பெண்களை வைத்து ஆபாசப் படங்களை தயாரித்தார்கள்: “ரொனால்டு பீட்டர் பிரின்சோவுடன், திருமணம் செய்யாமல் மனைவியாக வாழ்ந்து வந்தேன். அவரை கொலை செய்த வழக்கில் 5–வது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட ஹானஸ்ட்ராஜ் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த வழக்கில் என் மீது போலீசார் குற்றம் சுமத்தியுள்ளனர். கொலை செய்யப்பட்ட ரொனால்டு பீட்டர் பிரின்சோ, உமா சந்திரன், ஜான்பிரிண்ஷன், ஹானஸ்ட்ராஜ் ஆகியோர் ‘ஆன்லைன்’ தொழிலில் என்னை மேலாளராக பணி செய்ய கட்டாயப்படுத்தினார்கள். இளம்பெண்களை வைத்து ஆபாசப் படங்களை தயாரித்தார்கள்[6]. அப்போது, என்னையும் ஆபாசப்படங்களில் நடிக்கவேண்டும் என்றும் பலருடன் ஒரே நேரத்தில் உறவு கொள்ள வேண்டும் என்றும் வற்புறுத்தினார்கள்[7]. இதற்கு நான் சம்மதிக்காததால், அவர்கள் எனக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். இந்த நிலையில், ரொனால்டு பீட்டர் பிரின்சோவிடம் இருந்து ஆன்லைன் தொழிலை அபகரிக்க, அவரை உமாசந்திரன், ஜான் பிரிண்சன் மற்றும் பலர் கொலை செய்த எனக்கு தெரியவந்தது. ஆனால், என்னையும் இந்த வழக்கில் போலீசார் கைது செய்துள்ளனர். நான் ஒரு அப்பாவி. இந்த கொலை வழக்கில் என்னையும் குற்றவாளியாக சேர்த்துள்ளனர். எனவே, எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும்”, இவ்வாறு அதில் கூறியிருந்தார்[8].
செப்டம்பரில் கைது செய்தாலும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை: இந்த மனு நீதிபதி பி.என்.பிரகாஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் பி.ஆறுமுகம் ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: “மனுதாரர் கடந்த செப்டம்பர் 5–ந்தேதி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை வழக்கை விசாரிக்கும் மதுரவாயல் போலீசார், இதுவரை வழக்கின் குற்றப் பத்திரிகையை கோர்ட்டில் தாக்கல் செய்யவில்லை. எனவே, மனுதாரருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்குகிறேன். அவர் தினமும் காலை 10 மணிக்கும், மாலை 6.30 மணிக்கும் மதுரவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டர் முன்பு ஆஜராகி 4 வாரத்துக்கு கையெழுத்திட வேண்டும். மனுதாரர் தலைமறைவாகக்கூடாது. சாட்சிகளையும் கலைக்கக் கூடாது”, இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்[9]. 05-09-2014 கைது செய்தும், டிசம்பர் 2014 வரை மூன்று மாதங்களாக ஏன் குற்றப்பத்திரிக்கைத் தாக்கல் செய்யப்படவில்லை என்று தெரியவில்லை. கைப்பற்றியுள்ள படங்களைப் பார்த்து மயங்கிவிட்டனரா அல்லது மேலும் ஆதாரங்களைத் தேடிக் கொண்டிருக்கிறார்களா என்று தெரியவில்லை.
ஆபாசப்படங்கள் எடுப்பது, உடலுறவு காட்சிகள் காட்டுவது: ஸ்ருதி சந்திரலேகா, “இளம்பெண்களை வைத்து ஆபாசப் படங்களை தயாரித்தார்கள்[10]. அப்போது, என்னையும் ஆபாசப்படங்களில் நடிக்கவேண்டும் என்றும் பலருடன் ஒரே நேரத்தில் உறவு கொள்ள வேண்டும் என்றும் வற்புறுத்தினார்கள்[11] என்று சொல்லியிருப்பது மிகவும் அபாயகரமான விசயமாகும்[12]. ஏற்கெனவே திரைப்படங்கள் கேடுகெட்ட பாதையில் சென்று கொண்டிருக்கின்றன. நிர்வாணக் காட்சிகள், உடலுறவு காட்சிகள் முதலியவற்றை கொஞ்சம்-கொஞ்சமாக காட்ட ஆரம்பித்துள்ளார்கள். நடிகைகளும் அதற்கு ஒத்துழைக்க ஆரம்பித்துள்னர் என்பது, அத்தகைய காட்சிகள் வந்துகொண்டிருப்பதிலிருந்தே உறுதியாகிறது. சென்சார் / தணிக்கைத்துறை இருந்தாலும், ஒருபக்கம் நவீனம், முன்னேற்றம், நிதர்சனம் என்ற வாதங்களில் ஏற்றுக் கொள்ளப்படுகிறது, எதிர்த்துப் பேசினால் தலிபான்கள் என்றும் முத்திரைக் குத்த ஆரம்பித்து விட்டனர். இந்திய சமூகத்தை சீரழிக்க இதுவும் முக்கியமான வெடுகுண்டு போன்ற தீங்கிழைக்கும் விவகாரம் ஆகும். இதில் ஆணின் வக்கிரம் மட்டுமல்லாது, ஒரு நிலையில் பெண்ணின் வக்கிரமும் சேர்ந்து சீரழிவு பாதைக்கு எடுத்துச் செல்லும் முறையில் ஏதுவாகும். போதைமருந்து போல சாப்பிடுபவர்கள், விற்பவர்கள், விநியோகிப்பவர்கள் எல்லோருரையும் இது கெடுத்துவிடும். பெண்கள் மட்டும் அப்பெண்களின் குடும்பங்கள், உறவினர்கள் அனைவரையும் பாதித்து விடும். மேன்மேலும் பாலியல் குற்றங்கள் செய்யவும் தூண்டுகோலாக இருக்கும். இத்தகைய முக்கியமான மற்றும் அபாயகரமான பிரச்சினைப் பற்றியும் பெண்ணிய வீராங்கனைகள் விவாதிப்பது கிடையாது[13]. இந்தியாவில் இத்தகைய குற்றவாளிகளை விட்டு வைக்கக் கூடாது..
© வேதபிரகாஷ்
06-12-2014
[1] https://womanissues.wordpress.com/2014/12/06/factors-spoiling-the-husband-wife-relationships-lust-for-money-porn-etc/
[2] மாலைமலர், சினிமா தயாரிப்பாளர் கொலையில் சிக்கிய நடிகை ஐகோர்ட்டில் மனு: நிபந்தனை ஜாமீனில் விடுவிக்க உத்தரவு, பதிவு செய்த நாள் : வெள்ளிக்கிழமை, டிசம்பர் 05, 4:05 PM IST
[3] http://www.newindianexpress.com/cities/chennai/Killer-Actress-Arrested-in-Bangalore/2014/09/06/article2417287.ece
[4] http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/Actress-Shruti-arrested-for-murder/articleshow/41855222.cms
[5] http://www.maalaimalar.com/2014/12/05160548/cinema-director-murder-actress.html
[6] http://www.dinamalar.com/news_detail.asp?id=1131303&Print=1
[7] தினமலர், ஆபாச படத்தில் நடிக்க வற்புறுத்தினர்: கொலை வழக்கில் நடிகை அதிர்ச்சி மனு, பக்கம்.2, சென்னை பதிப்பு, 06-12-2014.
[8] தினகரன், நடிகரை கொலை செய்த வழக்கு: நடிகைக்கு ஜாமீன், சனிக்கிழமை, 06-12-2014, 00.42.43
[9] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=121277
[10] http://www.dinamalar.com/news_detail.asp?id=1131303&Print=1
[11] தினமலர், ஆபாச படத்தில் நடிக்க வற்புறுத்தினர்: கொலை வழக்கில் நடிகை அதிர்ச்சி மனு, பக்கம்.2, சென்னை பதிப்பு, 06-12-2014.
[12] http://www.indiatvnews.com/entertainment/bollywood/tamil-actress-shruthi-chandralekha-kills-husband-who-forced-her-to-act-in-porn-films-view-pics–16885.html
[13] விபச்சாரிகள் உரிமைகள், அவர்களுக்கு தொழில் செய்ய இடம் ஒதுக்க வேண்டும் என்று சென்ன்னையிலேயே, ஒரு மாநாடு நடந்தபோது,சில வீராங்கனைகள் கலந்துகொண்டு, அவர்களுக்கு ஆதரவாகப் பேசியுள்ளனர்.