Archive for the ‘எதிர்மறை-அறிவுரை’ Category

ஓடிப்போய் திருமணம் செய்தாலும் பதிவு அவசியம்: மகளிர் ஆணைய தலைவி பேச்சு

ஒக்ரோபர்21, 2009
ஓடிப்போய் திருமணம் செய்தாலும் பதிவு அவசியம்: மகளிர் ஆணைய தலைவி பேச்சு
அக்டோபர் 21,2009,00:00  IST
http://www.dinamalar.com/General_detail.asp?news_id=18081
மகளிர் ஆணை தலைவி பேசியது வியப்பாகத்தான் உள்ளது. ஓடிப்பொவது  சரியா-தப்பா அல்லது அவரது மகளே அவ்வாறு செய்தால் என்ன செய்திருப்பார் என்றெல்லாம் கலைப் படாமல், ஏற்கெனவே சொல்கிறா மாதிரி “எதிர்மறை-அறிவுரை” கூறியுள்ளார்.

சமூகத்தில் உள்ள நோய் என்ன என ஆராய்ந்து அதனை தீர்க்க வெண்டும், அத்தகஒய நோயின் வேர்கலை களைய வேண்டுமே அல்லாமல், இத்தகைய “அறிவுரைகள்” கூறுவது எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என்றதை, ஏன் இந்த புறுப்பான அதிகாரிகள் நினைத்துப் பார்ப்பதில்லை என தெரியவில்லை.

திருமணத்திற்கு காய்கறி வாங்கும்போது கூட, நல்லதாக பார்த்து தானே வாங்குகிறோம் என்று அருமையாக எடுத்துக் காட்டியவர், ஏன் இப்படி?

General India news in detail

//
//

கள்ளக்குறிச்சி: “ஓடிப்போய் திருமணம் செய்தாலும்; பதிவு செய்வது அவசியமானது’ என மகளிர் ஆணைய மாநிலத் தலைவர் டாக்டர் ராமாத்தாள் பேசினார்.விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி ஏ.கே.டி. நினைவு பொறியியல் கல்லூரியில் நடந்த விழாவில் தமிழ்நாடு மகளிர் ஆணைய மாநிலத் தலைவர் டாக்டர் ராமாத்தாள், முகாமினை துவக்கி வைத்து பேசியதாவது:

பதிவு திருமணம் வாழ்க்கையில் மிக முக்கியம். பதிவு செய்யாத திருமணங்களினால் பல பிரச்னை எழுகிறது. 70, 80 வயதில் கூட திருமணத்தை பதிவு செய்ய சட்டத்தில் வழியுண்டு. கணவன் இறந்தாலும் சொத்தில் உரிமை கொண்டாட பதிவு திருமணம் அவசியம்.வெளிநாட்டு மாப்பிள்ளை பார்க்கும்போது, அவர் அங்கீகரிக்கப்பட்ட நல்ல நிறுவனத்தில் வேலை செய்கிறாரா… டூரிஸ்ட் விசா எடுத்து, தினக் கூலி வேலை பார்க்கிறாரா… என விசாரித்து, அறிந்து திருமணம் செய்து வைக்க வேண்டும்.திருமணத்திற்கு முன் இருவரையும் பேச வைத்தால், புரிந்துணர்தல் ஏற்படும்.

திருமணம் செய்து கொண்டு ஓடினாலும், ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டாலும், பதிவு செய்வது மிக முக்கியம். சென்னையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 26 பேர்
விவாகரத்து கோரி மனு செய்துள்ளனர். அதில், மூன்று பேர் கர்ப்பமாக இருப்பது பெரும் வேதனை. விவாகரத்திற்கு காரணம் கேட்டால், மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்கின்றனர்.திருமணத்திற்கு காய்கறி வாங்கும்போது கூட, நல்லதாக பார்த்து தானே வாங்குகிறோம். குறிப்பாக, திருமணத் திற்கு முன் இருவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்வது மிக மிக முக்கியம்.இவ்வாறு டாக்டர் ராமாத்தாள் பேசினார்.