Archive for the ‘கருணாகரன்’ Category

இனி இதுபோல யாரையும் ஏமாற்றி திருமணம் செய்ய மாட்டேன் – மோசடி பெண் உறுதி – ஆறு கணவன்மார்கள் புகார் செய்யவில்லை – அதனால் விடுதலை!

ஜூன்15, 2016

இனி இதுபோல யாரையும் ஏமாற்றி திருமணம் செய்ய மாட்டேன் – மோசடி பெண் உறுதி – ஆறு கணவன்மார்கள் புகார் செய்யவில்லை – அதனால் விடுதலை!

Selvakumar marrying Mariammal - Pavithra

இனி இதுபோல யாரையும் ஏமாற்றி திருமணம் செய்ய மாட்டேன் – மோசடி பெண் உறுதி: பிரச்சினை பெரியதாவது உணர்ந்த பவித்ரா விசயத்தை கமுக்கமாக முடித்துக் கொள்ள முயன்றாள். மற்ற ஆறு கணவர்கள் வெளிப்படையாக வராமல் இருப்பதும் நோக்கத்தக்கது. ஒரு வேளை, போலீசாரும் அத்தகைய ஐடியாவைக் கொடுத்திருக்கலாம். அதனால், பவித்ரா உடனடியாக 15 பவுன் நகையை செல்வகுமாரிடம் கொடுத்தார். இதையடுத்து, செல்வகுமார் நகையை வாங்கி கொண்டு பவித்ரா மீது கொடுத்த புகாரை திரும்ப பெற்று கொண்டு சென்றுவிட்டார். அத்துடன் அக்டோபர் 2015 முதல் மே 2016 வரை நடந்த தாம்பத்திய உறவு முடிந்து விட்டது போலும்! முறையான விவாக ரத்துப் பற்றி கூட கவலைப்படவில்லை என்றால், முறாஇயா அத்திருமணம் பதிவு செய்யப்பட்டதா, இல்லையா என்ற கேள்வியும் எழுகின்றது. பவித்ராவின் மற்ற கணவர்கள் பற்றிய விவரம் தெரியவில்லை. அவர்கள் யாரும் புகார் அளிக்காததால் பவித்ராவிடமும், முதல் கணவர் கர்ணனிடமும் போலீசார் எழுதி வாங்கி கொண்டனர். ஆனால், முறையாக விவாகரத்து நடந்ததா, செய்த திருமணங்கள் செல்லுமா, இது குற்றமாகுமா என்றெல்லாம் போலீசார் ஆராய்ச்சி செய்யவில்லை என்பது பெரிய வேடிக்கைதான். பின்னர், போலீஸ் விசாரணைக்கு அழைத்தால் தான் எப்போது வேண்டுமானாலும் வரத் தயார் என்றும், இனி இதுபோல யாரையும் ஏமாற்றி திருமணம் செய்ய மாட்டேன் என்றும் உறுதி மொழி அளித்த பின் பவித்ரா என்ற மாரியம்மாள் விடுவிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்[1].

Selvakumar marrying Mariammal - Pavithra-seveth marriageஆறு கணவர்கள் புகார் கொடுக்கவில்லை – அதனால் வழக்கில்லை, பெண் விடுதலை: “இனி இதுபோல யாரையும் ஏமாற்றி திருமணம் செய்ய மாட்டேன்” என்பதும் ஆச்சரியம் தான். அதாவது, இதுவரை செய்தது மோசடி, போலி திருமணம், சட்டத்திற்குப் புறம்பானது என்று தெரிகிறாது. பிறகு போலீசார் எப்படி விடுவிக்கலாம். கல்யாண ராணியிடம் ஏமாந்த விஷயத்தில் புகார் தர அவரது மாஜி கணவர்கள் யாரும் முன் வராத காரணத்தால் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்படவில்லை[2]. அதாவது, அவர்கள் திருமணம் செய்து கொண்டதே சந்தேகத்தில் உள்ளது. மேலும் அவர்கள் தங்களது விவரங்கள் வெளியே வர விரும்பவில்லை என்றும் தெரியவில்லை. அப்படியே விவகாரங்களை அமுக்கவே அவர்கள் முயல்கிறாற்கள், தீர்மானமாக இருக்கிறாற்கள் என்று தெரிகிறது. செல்வகுமாரிடம் வாங்கிய நகைகளைத் திரும்ப கொடுத்தது போல, அவர்களிடம் ஏன் நகைகளைத் திரும்ப கொடுக்கவில்லை என்பதும் கேள்விக்குறியாக உள்ளது. இந்த திருமண மோசடிக்கு தாராபுரம், உடுமலை, பழனி, திருப்பூர் பகுதிகளைச் சேர்ந்த திருமண புரோக்கர்கள் 9 பேர் உதவி செய்துள்ளனர்[3]. இவர்களது விவரம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர், என்று செய்தி முடிகிறது[4]. குற்றம் செய்த பெண்ணையே விடுவித்த பிறகு, கல்யாண தரகர்களை என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை.

Selvakumar marrying Mariammal - with many witnessesபோலித் திருமணமா, குறுகிய கால தாம்பத்தியமா, விபச்சாரமா: ஒரு பெண் ஏழு பேரைத் திருமணம் செய்து கொண்டு உறவு வைத்துக் கொள்கிறாள் என்றால், சட்டப்படி அவள் ஆறுமுறை விவாகரத்து செய்து கொண்டு, ஏழாவது திருமணத்திற்கு தயாராகி இருந்திருக்க வேண்டும். இந்த உறவுகளை என்னென்பது, ஏதென்பது. கற்பைத் துச்சமாக மதித்து ஏழு கணவர்களுடன் முதலிறவு நடத்தியுள்ளாள் என்றால், அவளை மனைவி என்பதா, தருமப் பத்தினி என்பதா, திராவிட வழக்கில் துணைவி என்பதா என்று புரியவில்லை. மனம்-உடல் இரண்டுமே ஒத்துப் போனால் தான் ஒரு பெண் அவ்வாறு செய்ய முடியும். ஓரளவிற்கு விபச்சாரி போன்ற மனநிலையை அடைந்திருக்க வேண்டும். கணவன், இவற்றிற்கெல்லாம் ஒப்புக்கொள்கிறான் என்றால், அவனும் ஒரு புரோக்கராகி விட்டான் என்றே ஆகிறது! பிறகு இவர்கள் மற்றவர்களின் திருமண பந்தத்தைப் பற்றி என்ன கவலைப் பட போகிறார்கள்? ஆகவே, பணம், நகை கிடைக்கும் என்றாலும், இப்பெண் தனது உடலை வைத்து வியாபாரத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளாள் என்று தெரிகிறது. மனைவியாக இருந்து, சல்லாபித்து, நம்பிக்கையைப் பெற்ற பிறகு தான், எந்த பெண்ணும் கணவனிடமிருந்து, நகை, பணம் முதலியவற்றைப் பெறா முடியும். அந்நிலையின் கணவனது தாய்-தந்தையர், குடும்பத்திற்கும் விவரங்கள் தெரிய வரும்.

Selvakumar marrying Mariammal - with many witnesses-TVஒழுக்கமற்ற, குடும்பங்களை, சமுதாயத்தை சீரழிக்கும் குற்றம்: தாராபுரம், உடுமலை, பழனி, திருப்பூர் பகுதிகளில் அப்படியொன்றும் மக்களை ஏமாற்றிவிட முடியாது. எனவே, இதில் சம்பந்தப்பட்ட கணவர்களுக்கும் சபலம் இருந்ததா, அவ்வாறு ஜாலியாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில், புரோக்கர்கள் மூலம் ஒப்புக் கொண்டு நடந்து கொண்டனரா, அல்லது புரோக்கர்கள் மூலம் ஏமாற்றப்பட்டனரா என்று விசாரிக்க வேண்டும். குறிப்பிட்ட காலத்தில் ஏழு ஆண்களுடன் திருமணம், முதலிறவு, குறுகிய காலத்தில் தொடர்ந்த உறவு என்றேல்லாம் இருப்பது, எந்தவிதத்திலும் ஏற்புடையதல்ல. அப்பெண் துணிந்து விட்டதாலும், முதல் கணவனே அவ்வாறு ஒப்புக் கொண்டு செய்வதாலும், இது மிகவும் அசிங்கமாகி விட்டிருக்கிறது. மோசடி செய்து சம்பாதிக்க இது ஒரு வழியாக்க முடியாது. பணம் உள்ளவர்கள், மோகத்திற்குக் கூட உபயோகித்துக் கொண்டிருக்கலாம். ஆனால், அதுவும் ஒழுக்கமாகாது. குடும்பங்களை சீரழிக்கும், பிளவுகளை ஏற்படுத்தும், உடைக்கும்,  என்ற நிலைகளும் உள்ளன. அதனால் தான், ஆறு பேர் அமைதியாக இருக்கிறார்கள் போலும். இது சமுதாயத்தை சீரழிக்கும் வேலை என்பதால் குற்றமாகத்தான் கருத வேண்டும்.

போலி மோசடி திருமணங்கள்பெண்மைப் பிரச்சினைகள் பெண்கள் ஏன் முறையாக அணுகுவதில்லை: பெண்ணியத்தவர், பெண்ணிய சித்தாந்திகள், பெண்ணிய வீராங்கனைகள், “தமிழச்சி” என்று சொல்லி மார்தட்டிக் கொண்டு உலாவரும் நவநகரிக பெண்டிர் முதலியோர் இத்தகைய சமூக சீரழிவுகளை ஏன் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. திராவிடத்துவவாதிகள் இப்படி தமிழ் பெண்கள் பாழாகின்றனரே, சோரம் போகின்றனரே என்று வருத்தப் படுவதாக அறியப்படவில்லை. இந்துத்துவவாதிகள் கூட இத்தகைய, முக்கியமான பிரச்சினைகளை எடுத்துக் கொள்வதில்லை. ஊடகங்களோ, “கல்யாண ராணி” என்று தலைப்புப் போட்டு, செய்திகள் வெளியிட்டு, விட்டுவிடுன்றன. ஆனால், பாதிக்கப் பட்ட பெண்மை மற்ற பெண்களையும் பாதிக்காதா, சமூகத்தை தாக்காதா, இதனால் ஏற்படும் விளைவுகளை யார் சந்திப்பது என்று யோசிக்க வேண்டும். பெண்மை பற்றி நடத்தும் சஞ்சிகைகளும், சமையல், புடவை, அலங்காரம், கோலப்போட்டி போன்றவற்றைத் தவிர இத்தகைய பிரச்சினைகளை வாதிப்பது, விவாதிப்பது, அலசுவது இல்லை.

போலி திருமணங்கள்© வேதபிரகாஷ்

15-06-2016

 

[1] தினகரன், புகார் கொடுக்க யாரும் முன்வராததால் 7 பேரை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண ராணி விடுவிப்பு, Date: 2016-06-15@ 00:57:42

[2] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=224157

[3] தமிழ்முரசு, 8வது திருமணத்துக்கு ரெடி 7 பேரை மணந்த கல்யாண ராணிகைது, 06/14/2016 2:20:23 PM

[4] http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=94067

 

Advertisements